ஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா : தெவிட்டாத திங்கள் :
1 ஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா
வலையுலக நட்புகளுக்கு என்அன்பான வணக்கங்கள் பல !
யார் இது புதிதாக என்று நீங்கள் நினைக்ககூடும். நான் தான் காவியகவி Kaviyakavi
எனும் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருப்பவள், இனியா எனும் பெயரில். பலருக்கு என்னை தெரியாது தான். அதனால் என்ன இப்போ தெரிந்து கொள்ளுங்களேன்... சரியா இப்பொழுது கவனமாக கேளுங்கள் . அடடா கொஞ்சம் பொறுங்கள் நன்றி சொல்லிட்டு .....வருகிறேன்.
முதல்ல இதுவரை அழைத்து வந்த ஆண்டவனுக்கும், அடுத்தபடியாக என்னை ஊக்குவித்த அனைத்து அன்பான உயிரிலும் மேலான நட்புகளுக்கும் எனது உளங் கனிந்த நன்றிகள்! என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு இப் பணியை ஏற்கும்படி வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர நிருவாக குழுவுக்கும் என் உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீனா ஐயா அழைத்ததும் குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் ஆகி விடுமோ என்று பயம் தாங்க, என்றாலும் சரி பார்போம் என்று
இறங்கிட்டேங்க. நீங்க இருக்கீங்க எனும் தைரியம் தாங்க, நீங்க எல்லோரும் பெரியவங்க சிறியேன் செய்யும் சிறு பிழை எல்லாம் பொறுப்பீங்க என்ற நம்பிக்கையில் தாங்க. என்
நம்பிக்கையை உடைச்சிடாதீங்க கண்ணுகளா. எனக்கு தெரியும் நீங்க ரொம்ப நல்லவங்க, அதற்காக பெரிய பிழை என்று எல்லாம் சொல்லக்கூடாது சரியா . முழு ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.
ஈழத்துக் குயில்கள் எல்லாம்
இசைத்தால் கூடாதா
இரை தேடிப்பறப்பதும் பாவமா-அதன்
சிறகினை ஓடிப்பது லாபமா
சிறுஇதயங்கள் துடிப்பது நியாயமா- இது
இருளினில் கிடைத்த சாபமா
என்று கேட்டு கொண்டு வாழ்வதற்காக கனடா வந்தவர்கள் தான். எதோ வாழ்கிறோம் தாய் நாட்டின் தவிப்போடு. சிறு வயதில் இலக்கியம். தமிழ். சமயம். என்பவற்றை ஆர்வமாக கற்றுக்கொண்டு வந்தவள் தான். எந்த புத்தகத்தை எடுத்தாலும் வாசித்து முடிக்காமல் வைக்க மாட்டேன் ஆனால் திருமணத்தின் பின். மத்தியகிழக்கு நாடுகளில் கொஞ்சக் காலம் வசித்த போது தமிழ் வாசமே இல்லாமல் அதாவது தொடர்ந்து படிக்க வாய்ப்புகள், நேரம் ஏதும் இன்றி வாழ்ந்து வந்தேன். தாய் நாட்டிற்கு திரும்ப முடியாத காரணத்தால் கனடாவிற்கு விண்ணப்பம் செய்ய கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டோம்.
இரை தேடிப்பறப்பதும் பாவமா-அதன்
சிறகினை ஓடிப்பது லாபமா
சிறுஇதயங்கள் துடிப்பது நியாயமா- இது
இருளினில் கிடைத்த சாபமா
என்று கேட்டு கொண்டு வாழ்வதற்காக கனடா வந்தவர்கள் தான். எதோ வாழ்கிறோம் தாய் நாட்டின் தவிப்போடு. சிறு வயதில் இலக்கியம். தமிழ். சமயம். என்பவற்றை ஆர்வமாக கற்றுக்கொண்டு வந்தவள் தான். எந்த புத்தகத்தை எடுத்தாலும் வாசித்து முடிக்காமல் வைக்க மாட்டேன் ஆனால் திருமணத்தின் பின். மத்தியகிழக்கு நாடுகளில் கொஞ்சக் காலம் வசித்த போது தமிழ் வாசமே இல்லாமல் அதாவது தொடர்ந்து படிக்க வாய்ப்புகள், நேரம் ஏதும் இன்றி வாழ்ந்து வந்தேன். தாய் நாட்டிற்கு திரும்ப முடியாத காரணத்தால் கனடாவிற்கு விண்ணப்பம் செய்ய கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டோம்.
இங்கும் அவ்வப்போது வரும் சங்கடங்களை எல்லாம் ஆண்டவனை வேண்டி அவன் தயவோடு களைந்து விடுவேன். இப்படி தான் ஒரு நாள் சீரடி பாபாவிற்காக விரதம் இருந்தேன் 3 வாரம் மட்டுமே முடிந்த நிலையில் அடுத்த வியாழன் பிடிக்க முடியாத படி உடம்புக்கு முடியாமல் போயிற்று . அசையாமல் படுத்திருந்தேன். பக்கத்தில் யாரும் இல்லை. எதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது
சொற்கள் தொடர்ந்து வந்த வண்ணம் ..... எதேதோ என்ன செய்வது என்று தெரியாமல்..... சரி எழுதி பார்ப்போம் என பேனாவை எடுத்து எழுத தொடங்கினேன். அது தான் இது விபரீத ஆசைகள்
(இதற்கு சகோதரர் திரு முத்துநிலவன் அவர்கள் அளித்த கருத்து மிகவும் தென்பை தந்தன).
பின்னர் இது கவிதை தானா என்ன இது என்று ஒரே குழப்பம். இன்னமும் தான். என்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் கேட்பேன் அவர்கள் எள்ளி நகையாடினார்கள். எழுந்து ஓடினார்கள். நான் சோர்ந்து போனேன்.
இதை எப்படியோ அறிந்த. I.T.R வானொலி அறிவிப்பாளர் என் கவிதைகளை வாங்கி நேரலை நிகழ்சியில் வாசித்தார். பின்னர் என்னையே வந்து வாசிக்கும் படி விட்டு விட்டார். பின்னர் என்னை பேட்டியும் எடுத்தார் . அவர் தான் திரு S.M .இளங்கோ அவர்கள். I.T.R வானொலி உரிமையாளரும் பிறவிக் கலைஞனும் ஆகிய திரு. கோணேஷ்.
திருமதி. கோணேஷ் அவர்கள் வாழும் போதே கலைஞர்கள் கௌரவிக்கப் பட வேண்டும் என்னும் உயரிய நோக்கின்
பேரில் இவை செயல் படுத்த பட்டன. இவை எல்லாம் ஒன்பது வாரத்திற்குள் நடந்து முடிந்து விட்டன. பின்னர் இப்படி ப்ளாக் ல் எழுதும் படியும் யோசனையும் தந்தவரும் திரு இளங்கோ அவர்கள் தான். அதன் படி ஜனவரி 1ம் தகதி 2013ல் இருந்து ப்ளாக் ல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தரமான கவிதைகளை எல்லாம் வாசிக்கும் போது எனக்கு என் மேல் சந்தேகம் வரும். நான் செய்வது சரியா தமிழை கொச்சை படுத்துகிறேனோ என்று வேதனை
யாக இருக்கும். சோர்ந்து போகும் போதெல்லாம் என் வலை தள நட்புகள் தரும் கருத்துக்கள் ஊக்கம் தருவனவையாக அமையும். அது மட்டுமல்லாமல் பொங்கலை
முன்னிட்டு என் அன்பான ரூபன் , பாண்டியன் அவர்கள் நடத்திய
போட்டியில் 2 வது இடத்தை பெற்று பெரு மகிழ்ச்சி அடைந்தேன் இதனால் கொஞ்சம் தென்பு கூடியது அது தான்
இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
இதோ நான் எழுதிய சில பதிவுகள் :-
வலைச்சரத்தில் அறிமுகமானவை :-
சகோதரர் அ. பாண்டியன் அவர்களும்: தோழி #மைதிலி கஸ்தூரி ரெங்கன் னும் செய்த அறிமுகம்.
தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை
தோழிதேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் விரும்பிய கவிதை குழந்தையின் பாராட்டும் தாயின் தாலாட்டும்
சகோதரர் தளிர் சுரேஷ் அறிமுகம் செய்தது மகிழும்உள்ளம் நலம்காண உதவும்,
மாதவம் செய்திடல் வேண்டும்
துரை செல்வராஜூ அறிமுகப்டுத்தியது ஆத்தா மகமாயி
கருவாச்சிக் கலை அறிமுகப் படுத்தியது தன்னலம் இல்லா தாரகைகள்
கற்பூரமா தமிழ் காணாமல் போவதற்கு,
தமிழ் மொழி
என் அன்னையை எண்ணி எழுதியது இது அம்மா
என் கணவருக்கு பிடித்த கவிதை உயிரே உயிரே
வித்தியாசமான கண்ணோட்டத்தில் இவை இரவினில் வரும் நிலவே
காதலேகறுப்பா சிவப்பா
நிலையில்லாத வாழ்வில் ஏன் இந்த அகம்பாவம் என்பதற்காக எழுதியது ஆறடி மனிதன்
அன்பு மயமான உலகம் ஆனந்தமாக இருக்கும் என எண்ணியபோது அன்பென்ற நதி
கடலலையே கடலலையே
கண்களில் கனவிருக்கும் கவலையில் மூழ்கடிக்கும்
ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி
இயேசு வின் நாமம் பேசிடவே
நீ இல்லை என்றால்
ஆறுமுகன் ஆனைமுகன்
அழகான முருகன்
Yarlpavanan Kasirajalingam at யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் பகிர்ந்து கொண்டது இது தோகை மயிலுமே கோடை மழை கண்நகை சுவையோடு கலந்து செந்தில் கவுண்டமணியுடனான ஈயார் தேட்டை
சரிங்க என்னை பற்றிய அறிமுகம் விலாவாரியாக தந்துட்டேங்க. இனி உங்களோட டேர்ன் இப்போ சமத்தா நீங்க ஒவ்வொருவராக வந்து எனக்கு உங்களை அறிமுகப்படுத்திறீங்க சரியா. சரி நாளைக்கு அனைவருக்கும் வேலை அல்லவா, தூக்கம் என் கண்களை தழுவுகிறது........... எனவே வணக்கம் ...! நாம் மீண்டும் நாளை சந்திப்போம்.
|
|
அருமையான சுய அறிமுகம். தங்களின் மற்ற புதுமுகங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் சகோ ! முதல் வருகை ! மங்களமாக ஆரம்பித்து வைத்திருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் ஆதரவு நல்க வேண்டும் ok வா ம்..ம்..ம்
Deleteபார்க்கலாம். மிக்க நன்றி சகோ ...!
குருவி தலையில் பனங்காயை சுமந்து கொண்டே மிக அழகாக பதிவிட்டு இருக்கிறதே.. பாராட்டுக்கள்
ReplyDeleteஆமா ரொம்ப தலை வலிக்குது யாருகிட்டயும் கொடுக்கவும் முடியதில்ல.
Deleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ! பாட்டில் வச்சிட்டீங்க தானே ஒரு வாரத்திற்கு தொடக் கூடாது சரியா.
இனியா என் மனைவி உங்களை திட்டுறா காரணம் நீங்க சொன்னதை நான் அப்படியே கடைபிடிக்கிறேனாம் அதுதாங்க நீங்க பாட்டிலை தொடக்கூடாதுன்னிட்டீங்க அதனால அவளை பாட்டிலை எடுத்து அதில் உள்ளதை என் கிளாலில் ஊற்ற சொன்னேன் அது தப்பாங்க
Deleteவாருங்கள் சகோ ! முதல் வருகை ! மங்களமாக ஆரம்பித்து வைத்திருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் ஆதரவு நல்க வேண்டும் ok வா ம்..ம்..ம்
ReplyDeleteபார்க்கலாம். மிக்க நன்றி சகோ ...!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
சுயஅறிமுகம் அமர்கலமாக உள்ளது... இந்த வாரம் சிறப்பான அசத்தலாக அமைய வாழ்த்துகிறேன் அம்மா..
சென்று வருகிறேன் தங்களின் இணைப்பு வழி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! என்ன இப்படியா தாமதமா வாறது அண்ணாவும் தம்பியும் முன்னுக்கு நிப்பீங்க இப்ப என்ன. இனிமேல் இப்படி எல்லாம் லேட்டாக கூடாது சரியா.
Deleteமிக்க மகிழ்ச்சி ரூபன்.! வாழ்த்துக்கும் பெரிய நன்றி !
வணக்கம்
ReplyDeleteஅம்மா
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா வாக்கு நன்றி.... நன்றி !
Deleteவணக்கம் இனிய இனியா!
ReplyDeleteஇனியா கலக்கும் இனிதான வாரம்
கனிவாய் இருக்குமே காண்!
அசத்தலான சுய அறிமுகமுடன் களைகட்டியது
உங்கள் வலைச்சர ஆசிரியப் பணி!
சிறக்கட்டும் தொடர்ந்து! வாழ்த்துக்கள் தோழி!
வாங்க தோழி! குறளிலேயே வாழ்த்து தந்து விட்டீர்கள். இனி என்ன ஜமாய்க்க வேண்டியது தான். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி! என்னுடனேயே பயணித்து என்னை ஊக்கம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். busy என்பதால் வலைப்பக்கம் வரவில்லை அப்புறம் நிச்சயமாக வருவேன். இது எல்லோருக்கும் தான்.
Deleteஇனிய வணக்கம் இனிமையான கவிதைத் தலைப்பு சாபமா?? நானும் சிந்திக்கின்றேன் நாடுவிட்டு வந்த பின்!:))
ReplyDeleteநன்றாக சிந்தியுங்கள் சகோ தங்கக் கூண்டுக்குள் அடைபட்ட கிளி போல் தானே சகோ !
Deleteசுய அறிமுகம். சிறப்பு தொடரட்டும் பணி
ReplyDeleteதங்கள் வரவிலும் வாழ்த்திலும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி! தொடரட்டும் வருகை!
Deleteஇசைக்கட்டும் ஈழத்து குயில்கள் ...
ReplyDeletewww.malartharu.org
வாங்க சகோ! மட்டற்ற மகிழ்ச்சியே தங்கள் வருகையில். மிக்க நன்றி சகோ ! என்றும் தங்கள் உறுதுணையும் வழிநடத்தலும் தேவை சகோ சரி தானே.
Deleteதா.ம ஐந்து
ReplyDeleteஹா ஹா மிக்க நன்றி சகோ!
Deleteசுய அறிமுகம் அசத்தலாய் இருக்கு இனியா! வாழ்த்துக்கள்! என் சின்னப் பொண்ணுக்கு அவ அப்பா தமிழ் பேர் வைக்கல. அதனால, அவளை நான் இனியான்னுதான் செல்லமா தமிழ்ல கூப்பிடுவேன். உங்க பேரும் அதேங்குறதால, நீங்களும் என் மகளைப் போன்றவரே! .
ReplyDeleteவாங்க ராஜிம்மா தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. என்ன அங்கும் ஒரு இனியாவா நம்ம சொக்கன் சகோவுக்கும் ஒரு இனியா நாங்க மூணு பேர் இப்போ wow இனியாக் குட்டிக்கு எத்தனை வயது நான் கேட்டதாக சொல்லுங்கள். எல்லா சிறப்பும் பெற்று ஒளிர வாழ்த்துகிறேன்....! என்றும் சொல்லுங்கள். புரியும் வயது தானே. இல்லையா?
Deleteமிக்க நன்றிம்மா தொடர வேண்டுகிறேன்.
அன்பின் சகோதரி..
ReplyDeleteதன்னிலைப் படுத்திய சுய அறிமுகம் அருமை..
தங்களின் பணி சிறக்க அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..
வாருங்கள் சகோ மிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும்! தொடர வேண்டுகிறேன் ....!
Deleteதேமதுரத் தமிழில் கவிதை பாடி இசைத்திடும் ஈழத்துக் குயில் எங்கள் இனிய சகோதரி இனியா அவர்களே வருக வருக! சகோதரி மைதிலி அவர்கள் அழகுபடுத்திச் சென்ற வலைச் சரத்தை அழகு படுத்திட வந்து வந்த அன்றே அழகான அறிமுகப் பதிவு எழுதி அசத்தி இருக்கும் சகோதரிக்குத் தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteசகோதரி, தோழி மைதிலிக்கு எங்கள் நன்றி!
வாருங்கள் சகோ தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் சரியா சாக்குப் போக்கு எல்லாம் சொல்லக்கூடாது. அப்பா தானே களை கட்டும். வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteகனடா வாழ் ஈழத்துச் சகோதரியே!
ReplyDeleteநானும் யாழ் வாழ் ஈழவன்
ஈழவர் நிலை அறிந்த தோழி
தங்கள் தன் (சுய) அறிமுகம் நன்று
தம்பணி தொடர என் வாழ்த்து!
ஆம் சகோதரா தாங்கள் ஈழம் என்று நான் அறிவேனே. நீங்கள் தான் அறியவில்லை. அதனால் தான் அறிமுகத்தில் தெரியப் படுத்தினேன்.
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தொடருங்கள் சகோ!
சிறப்பான சுய அறிமுகம்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
ReplyDeleteவாருங்கள் சகோ! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteதொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் சரியா சகோ.
ReplyDeleteவணக்கம்!
தன்னிலை யாதெனத் தந்த தமிழ்மொழி
பொன்னிலை கொண்டு பொலிகிறது! - முன்னிலை
ஏற்றுள எங்கள் இனியா வலைச்சரத்தில்
ஈற்றுவரை வெல்க இசைத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே! தங்கள் ஆசியை என்றும் வேண்டி நிற்கிறேன். தங்கள் வருகையும் வாழ்த்தும் நிச்சயம் என்னுடன் கடைசி வரை நின்று காக்கும். என்று நம்புகிறேன். மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteஇனியாவைப்போல் இனிய intro!!
ReplyDeleteஅருமை தோழி!! பதிவு எப்போவரும்னு படபடப்பாய் பார்த்துக்கிட்டு இருந்தேன். நன்றாக வந்திருக்கிறது! வாரம் முழுமையும் இதே தெம்பில் கடத்திவிடுங்கள் செல்லம்:))
என் அம்முக்குட்டி என் அருகில் இருந்தாலே போதுமே ஜமாய்க்க மாட்டேன்.
Deleteஅதனால என் பக்கத்திலேயே வைத்திருக்கேன்ல.ஹா ஹா பொறுத்திருந்து பாரும்மா மிக்க நன்றிடா !
சகோதரி இனியா அவர்களுக்கு இனிய வரவேற்பு அறிமுகத்தை படித்ததும் எனக்கு தோன்றியது இதுதான் சகோதரி, திரு. சீனா ஐயா அவர்கள் குருவி தலையில் வைக்கவில்லை கவிக்குயிலின் தலையில்தான் வைத்திருக்கிறார்... வாழ்த்துக்கள் சகோதரி நாளை முதல் தொடர்ந்து சந்திப்போம்.
ReplyDeleteஅப்பிடியா சொல்லுறீங்க சகோ! அப்ப ஜமாய்ச்சிட வேண்டியது தான்.
Deleteநீங்க சொன்னா சரியா தான் இருக்கும். இப்போ தென்பு கொஞ்சம் கூடியிருக்கிறது. மிக்க நன்றி சகோ ! தொடருங்கள் ...
வலையுலகில் ரொம்பக் காலம் குப்பை கொட்டும் எனக்கெல்லாம் இன்னும் உருப்படியா நாலு நல்ல நட்புகள்கூட இல்லை. ஆனால் அதற்குள் உங்களுக்குத்தான் எத்தனை நட்பு!! நீங்க நெஜம்மாவே மிகவும் "இனிமையானவராக"த்தான் இருக்கணும்.. உங்கமேலே பொறாமையா இல்லை! உங்களைப் பார்க்கும்போது பெருமையாகத்தான் இருக்கு!
ReplyDeleteநல்ல ஆரம்பம்! தொடர்ந்து பாடுங்கள் ஈழத்து இசைக்குயிலே!
நாலு நல்ல நட்புகள்கூட// அப்போ மூணு இருக்கா? யாரு அந்த மூணு பேர்????
Deleteபோனில் பேசினால்தான் நேரில் பார்த்தால்தான் இன்பாக்ஸில் சாட் பண்ணினால்தான் நட்பு என்றால் எனக்கு ஒருத்தரும் இல்லைதான். என்னை பொருத்தவரை மற்றவர்கள் போடும் பதிவை படித்து பாராட்டியோ அல்லது உரிமையோடு கிண்டல் கேலி செய்தோ அவர்களை மகிழ்வித்தோ அல்லது அதனால் நான் மகிழ்ந்தோ இருப்பதுதான் நல்ல நட்பு என நினைக்கிறேன் அதைதான் நான் எதையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறேன்
Deleteவருண் கவிதை எழுதாத வரை நீங்களும் எனது நண்பர்தான்.. ஹீஹீ
Delete//கவிதை எழுதாத வரை நீங்களும் எனது நண்பர்தான்//
Deleteபாவம் சேகுவேரா :(( இன்னும் யார் யார் ,எது எதுக்கெல்லாம் இந்த டயலாக்கை ரீமேக் பண்ண போறாங்களோ???
நம்மை போல friends இருக்கும் போது வருண் அப்படி சொன்ன கொஞ்சம் டூ மச்சா தான் இருக்குல்ல?@ தமிழன்
மைதிலி: படையப்பா ரஜினி ஸ்டைல்ல சொல்லணும்னா (நீங்க பார்த்த மூனு ரஜினி படத்தில் இது இல்லையே :) )..
Deleteஎன்னுடைய ஐந்து முகங்கள்தான் பதிவுலகில் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியாத அந்த "ஆறாவது முகமும்" தெரிந்தவர்கள்தாம் அந்த மூவர்! :)))
ஒரு வழியா தப்பிச்சாச்சு! :)))
நான் ஒன்று, ok வா இப்போ நானும் வருணுக்கு ஒரு நட்பு தானே மிகுதி இருவரை கண்டு பிடியுங்கள் இப்போ. அதுவும் இல்லாமல் இனிமையானவர் என்று வேற சொல்லியிருக்கிறீர்கள் சப்போட் பண்ணாமல் விடுவேனா. பொறாமை என்று சொல்கிறீர்கள் என்று பயந்திட்டேனில்ல பெருமை தானே படுறீங்க ரொம்ப சந்தோஷம்பா. மிக்க நன்றி ! தொடருங்கள் ...
Deleteநன்றிங்க, இனியா! தங்கள் நட்பு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Deleteநட்புனா நிச்சயம் # 1 நீங்கதான்! :)
இனிமையான, ரத்தினச்சுருக்கமான ஒரு அறிமுகம்.
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.
வாங்க சகோ! எங்கே காணோம் என்று பார்த்தேன். வலப்பக்கம் வரமுடியலைப்பா பிஸில்ல அது தான். நிச்சயம் வருவேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteதொடருங்கள்.....
இனிமையான அறிமுகம்..
ReplyDeleteஇனிய பாராட்டுக்கள்.
மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் ....
Deletehai....
ReplyDeleteur intro post super... continue...
Thanks for ur encouragement and continued support.
Deleteஅறிமுகம் அருமை. வலைப்பூவில் தங்கள் ஆசிரியப்பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடர வேண்டுகிறேன்.
Deleteவணக்கம்,
ReplyDeleteஅருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்.
இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடர வேண்டுகிறேன்.
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteபிளந்து கட்டுங்கள்.
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடர வேண்டுகிறேன்.
Deleteநல்ல ஆரம்பம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடர வேண்டுகிறேன்.
Deleteஇனியாவின் பதிவுகள் முக் கனியாக சுவைக்க வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா! தங்களைப் போன்றோரின் ஆசி நிச்சயம் தேவை.
Deleteமிக்க நன்றி ஐயா! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
வணக்கம் இனியா ..!
ReplyDeleteநெறிமுறை உள்ளே நெகிழ்ந்து வலையில்
அறிமுகம் தந்தாய் அழகு !
வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி கவிஞரே ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.
Delete