தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்
தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்
வாட்டம் அற்ற காய் கறிகள்
ஊட்டம் மிகுந்த உணவு வகைகள்
கூட்டம் அலைச்சல் செலவு இல்லை
நாட்டம் கொள்ள நலியும் தொல்லை-இதை
நோட்டம் விட்டால் கொள்ளும் நினைவில்
நாட்டம் கொள்ள நலியும் தொல்லை-இதை
நோட்டம் விட்டால் கொள்ளும் நினைவில்
இன்று
நாம் மணப்பாறை செல்கிறோம் அல்லவா பாண்டியன் திருமணத்திற்கு அங்கு போய்
இறங்கியதும் நாம் சிறிது தூரம் வயல் வெளிப்பக்கமாக பேசிக்கொண்டே நடந்து
கொண்டிருந்தோம் . ரூபன் அம்மா நாங்க இங்க வந்தது அவருக்கு தெரியாதில்ல. ஆமா அவருக்கு தெரியாது நீங்க யாரும் சொல்லிடாதீங்கப்பா அவர் என்னமோ உண்மையானவன்
தான் அதற்காக நாம சொன்னால் நாங்க கூட்டமா இங்க நிக்கிறத கேட்டா
வயித்தெரிச்சல் படுவாரில்ல, தானும் கலந்து கொள்ளவில்லை என்று இப்ப தானே
வந்து போனவர் அப்ப வரமுடியாதில்ல அதனால தான் சொல்றேன் சொல்லாதீங்க சரியா
.ரூபன் இன்னும் கொஞ்சபேரை பார்த்திருக்கலாம்.நாள் போதாதே. யாரை எல்லாம்
பார்க்கணும் அம்மா , Dr B Jambulingam, வை.கோபாலகிருஷ்ணன், வெங்கட் நாகராஜ்
உஷா அன்பரசு, cheena (சீனா)
ஐயா முக்கியமா, நேரடியாக அவ்வளவு பழக்கம் இல்லன்னாலும் இவர்களை
பின்னூட்டத்தில் சந்திப்பேனே .அதனால தான் பார்க்க விருந்தேன். இன்னும் பலர்
இருகிறார்களே .ம்...ம்...ம்.. இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தால்
போச்சு இல்லையா .
அதற்கிடையில் திடீரெனப் திரும்பி பர்த்தோம் வரம்பு வழியாக யாரோ ஓடி வருவது தெரிகிறது. பார்த்தால் பாண்டியன் ! புது மாப்பிள்ளை ஹீரோ ரேஞ்சில சும்மா இல்லீங்க. \\அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு என்றல்லவா பாடிக் கொண்டு ஓடி வருகிறார்.// அவரை நல்ல ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? இப்போ நல்ல பாடகரா காதல் மன்னன் ஆகவல்லவா பார்த்தோம். அம்முவும் மதுவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளுகிறார்கள். மைதிலி அதாங்க அம்மு என்னை ஒருமாதிரி பார்த்து சொண்டை நெளிக்கிறா தானும் பாட வேண்டும் என்று தான் வேறு என்ன . சரி இந்தப் பாடலை \\ நெஞ்சுக்குள்ள ஒன்ன முடிஞ்சிருக்கேன் // நீங்கள் இருவரும் போய் பாடுங்கள் என்று அனுப்பி விட்டு காமரா எடுங்க ரூபன் படம் எடுப்போம். பார்த்தால் ரூபனை காணவில்லை. எங்கே என்று பார்த்தால் ஒரு மரக் குத்தியின் மேல் அமர்ந்து கற்பனையில் மிதக்கிறார் நினைவலைகள் தொடரப் போலும். நான் '"என்ன ரூபன் " இந்த பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல ச்சா அந்தப் புள்ள இன்னா போட்டோ கீட்டோ பிடிக்கும் இல்ல.எப்பிடி எங்களுக்கு தோணாமப் போச்சு. இதற்கிடையில் அலாரம் அடிக்கிறது. என்ன இது நம்ம வீட்டு அலாரம் இங்கு அடிக்கிறது. எப்பிடி அட நம்ம வீடு அலாரம் தான். பார்த்தால் அம்மா அம்மா மகள் எழுப்புகிறார். என்ன இவ்வளவும் கனவா அடடா கொஞ்ச நேரம் விட்டிருந்தால் கல்யாணத்தையும் கண் குளிர கண்டிருக்கலாம் அனைத்து வலை யுறவுகளையும் கண்டிருக்கலாமே.ச்சா ....கடைசியில் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமோ ? இல்லங்க உங்களுக்கு தான் போரிங் அதனால......
சரிங்க எல்லாம் வெறும் கற்பனை தாங்க இது யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்தால் போதும். உண்மை தானுங்க உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசமுங்க. இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடை பெறும் நேரம் வந்துவிட்டது. அதனால எல்லோருக்கும் பணிவான வணக்கமுங்க !
சீனா
ஐயாவுக்கும் அனைத்து வலைச்சர (தமிழ் வாசி பிரகாசுக்கும்,
ராஜிஅவர்களுக்கும்) குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றியையும்
வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.
இப்போ
சமைக்கணும் வீட்டில் எதுவும் இல்லையே இதற்குத் தான் சொல்வது வீட்டுத்
தோட்டம் வைத்திருக்க வேண்டும் என்று இப்போ நான் தானே திண்டாடப் போகிறேன்.
அதனால் வீடுத் தோட்டம் வைக்க இவங்களை எல்லாம் ஐடியா கேட்கப் போகிறேன்.
உங்களுக்கும் தேவைப்படும் பாருங்கள் இதோ .....
இந்த இமா பொண்னும் நிறைய ஐடியா வச்சிருக்குங்க கைவசம் சமையல், தோட்டம் என்று எக்கச்சக்கமா, கேட்கலாம் தான் பார்ப்போம். அறுசுவையும் நானும் என் வீட்டுத் தோட்டத்தில்
வீட்டுத்தோட்டம்
1 திருமதி
சித்திரா சுந்தர் அவர்கள் தனது பொழுது போக்கு பக்கங்கள் என்னும்
வலைப்பூவில் பலவகைப்பட்ட பதிவுகள் உள்ளது அதிலும் வீட்டுத்தோட்டம பற்றி மிக
அருமையாக சொல்லியுள்ளார் வாருங்கள் சென்று வருவோம் சுழர்ச்சி முறையில் கொத்து மல்லி செடிவளர்ப்பது பற்றி சொல்லியுள்ளார் chitrasundars.blogspot. com
2.
குப்பை வண்டி தளத்தில் வீட்டுத்தோட்டம் செய்ய இடப்பிரச்சினை என்றால்
எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை இப் பதிவின் வழி சொல்லியுள்ளார்
பாருங்கள்.தொங்கும் தோட்டம் முறை http://kuppavandi.blogspot.com/2014/04/blog-post_727.html
3. இப்படிக்கு இளங்கோ என்னும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் செவ்வாழைஎப்படி வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் விதம் பற்றி சொல்லியுள்ளர் பாருங்கள் ippadikkuelango. com
4. மூன்றாம் கோணம் என்னும் வலைப்பூவில் இந்த இமா பொண்னும் நிறைய ஐடியா வச்சிருக்குங்க கைவசம் சமையல், தோட்டம் என்று எக்கச்சக்கமா, கேட்கலாம் தான் பார்ப்போம். அறுசுவையும் நானும் என் வீட்டுத் தோட்டத்தில்
வீட்டுத்தோட்டம்
1 திருமதி சித்திரா சுந்தர் அவர்கள் தனது பொழுது போக்கு பக்கங்கள் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட்ட பதிவுகள் உள்ளது அதிலும் வீட்டுத்தோட்டம பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் வாருங்கள் சென்று வருவோம் சுழர்ச்சி முறையில் கொத்து மல்லி செடிவளர்ப்பது பற்றி சொல்லியுள்ளார் chitrasundars.blogspot.
2. குப்பை வண்டி தளத்தில் வீட்டுத்தோட்டம் செய்ய இடப்பிரச்சினை என்றால் எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை இப் பதிவின் வழி சொல்லியுள்ளார் பாருங்கள்.தொங்கும் தோட்டம் முறை http://kuppavandi.blogspot.com/2014/04/blog-post_727.html
3. இப்படிக்கு இளங்கோ என்னும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் செவ்வாழைஎப்படி வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் விதம் பற்றி சொல்லியுள்ளர் பாருங்கள் ippadikkuelango.
வீட்டுத்தோட்டத்தில்-சிவா என்ற தலைப்பில் சொல்லியுள்ள விடயத்தை பாருங்கள். http://moonramkonam.com/en- veetu-thotaththil-1-siva/
5. இராகவன் நைஜிரியா என்னும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் வீட்டுத்தோட்ட படங்களை மிக அழகாக படம் பித்து காட்டியுள்ளார் வாருங்கள் பாரத்து இரசிக்கலாம , raghavannigeria. blogspot.com
7. வேளான் அரங்கம் என்னும் வலைப்பூவில் மிக அருமையாக நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளார் என்னவென்றால்/velanarangam.wordpress. com
8. வாங்க பறிக்கலாம் என்ற தலைப்பில் முத்துச்சரம் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் ராமலக்ஷ்மி அவர்கள் அடை மழையிலும் குடை மிளகாய் எல்லாம் போட்டிருக்கார் என்றால் பாருங்களேன். அழகிய படங்களை பகிர்ந்துள்ளார் வாருங்கள்
இரசிக்கலாம் tamilamudam.blogspot. com
விடை பெறும் நேரம் நெருங்கி விட்டது என்னுடன் பயணித்த அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவு நல்கி உற்சாகப் படுத்தியவர்கள் அனைவருக்கும். என் மனமார்ந்த நன்றிகள். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மேலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். வணக்கம் ! நன்றி ! நன்றி ! நன்றி !
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
ஒரு நாள் சிநேகம் செய்தலும் கூட பெரியவர்களுடைய சிநேகமனது பூமி பிளந்து போகும் படி மரத்தின் வேர் ஊன்றுவது போல் நிலைத்து நிற்கும்.
|
|
இன்றைய வலைத் தளங்களில் சிலரை அறிந்திருந்தாலும், பல புதியவை. பார்க்கின்றோம்! ஓ விடை பெறும் நேரம் வந்து விட்டதா அதற்குள்?! ஒரு வாரம் மிக அழகாக உரையாடலிலேயே அதுவும் ஏதோ நேரே பேசுவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி எம்மை எல்லாம் மகிழ்வித்து பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி எங்கலையும் உங்களுடன் பயணிக்க வைத்தது அருமை சகோதரி! இதோடு முடியவில்லையே! தங்கள் வலைத்தளத்தின் மூலம் இனியும் தொடர்வோமே நாங்கள் எல்லோரும்!
ReplyDeleteஅனைத்து வலைத்தள அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
எப்படி செய்யப் போகிறேனோ என்று யோசனையாக இருந்தது. ஒரு வாரம் எப்படி போனது என்று தெரியாமல் மகிழ்ச்சி கரமாகவே ஓடி விட்டது. தங்களனைவரதும் தொடர் வருகையும் ஆதரவும் தான் என்னை இயங்க வைத்தது. அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மீண்டும் தொடரும் என் வலைதள வேட்டை.தொடர்கிறேன் சகோ. நிறைய பதிவுகள் பார்கவில்லை என்று நினைக்கிறன். அடடா நிறைய ஓவர்டைம் செய்ய வேண்டி இருக்கும் போல் இருக்கிறதே. ஹா ஹா... மிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்திற்கும் ....!
Deleteஅடடா....நல்ல கலாய்ச்சல்ஸும் முடிஞ்சுடுச்சா......ரூபன் தம்பி பிழைச்சாரு....உங்க கூட பயணம் பண்ணி எல்லார் கலாய்ச்சல்ஸும் கண்டு காய்ச்சல் வந்து பேக் டு இருப்பிடம் டு டேக் ரெஸ்ட்...அதான் அவர் பதிவ காணமா.....இல்லன்னா காதல் கவிதையா எழுதியிருப்பாரே....
ReplyDeleteரூபன் தான் பதிவு போட்டு விட்டாரே. ரூபன் ரொம்ப ஸ்மார்ட் ஆக்கும் எந்த கலாய்ச்சலும் அவரை ஒண்னும் பண்ணாது. அசரவே மாட்டார். ஆனால் கலாய்ச்சவர்களுக்குத் தான் காய்ச்சல் போலும். அது தான் யாரையும் காணோம் சகோ. ஹா ஹா ......
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
எல்லாம் தொடரும் தளங்கள்தான் அறிமுகம்செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப நன்றி ரூபன்! என்னுடன் பயணித்தமைக்கும் தொடர்ந்து தந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி... நன்றி ..நன்றி !
Deleteவேளாண் அரங்கம் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteமேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள் !
Deleteரசிக்க வைக்கும் உரையாடலுடன் - ஒரு வாரம் போனதே தெரியவில்லை... அருமையாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
தம்பி ரூபன் அவர்களுக்கும் நன்றி...
தங்களின் தொடர ஆதரவினால் தான் என் பணியை மகிழ்வுடன் செவ்வனே செய்ய முடிந்தது சகோ. மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும். இனி தங்களனைவரதும் தளங்களை தொடர்வேன்.
Deleteபயணம் இனிதே முடிந்ததா?.
ReplyDeleteஉங்க ரசனைமூலமும், உங்களையும் நெறையவே தெரிந்து கொண்டோம். என்ன தெரிந்து கொண்டீர்கள், வருண்?னு கேக்குறிங்களா?
அதான் உங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும்னுதான்..
"என்ன கவனமாவா? நான் என்ன அரக்கியா?" னு சண்டைக்கு வர வேண்டாம். எனக்கு கொடூரமானவர்கள்னா பயம் இல்லை! உங்களை ரொம்ப அன்பா பாசமா இருக்கவங்களப் பார்த்தால் ஒரு பயம்..இதென்ன வியாதினு தெரியலை. :(
ரெஸ்ட் எடுத்துக்கோங்க, இனியா! மறுபடியும் உங்கள் தளத்தில் அல்லது மற்றவர்கள் தளத்தில் விரைவில் சந்திப்போம். :)))
ரெஸ்ட் ஆ எனக்கா இல்லப்பா நிறைய ஓவர் டைம் செய்யவேண்டி இருக்குப்பா நிறைய பதிவுகள் பார்க்காமல் இருக்கிறது. ஒவ்வொருவர் தளத்துக்கும் சென்று பார்வை இடவேண்டும் கருத்து இடவேண்டும். இனி தான் ரொம்ப busy. இந்த வாரம் மகிழ்வான வாரம். தங்கள் அனைவரதும் வருகையினாலும் தந்த ஆதரவினாலும் மனம் புளகாங்கிதம் அடைந்தது. இப்போ அழுகையா வருது தெரியுமா? எண்ட அம்முக்குட்டியும் பாதியில அம்போண்ணு விடுட்டு போய்ட்டா. பெயர் சூட்டு விழாவுக்கு போய்ட்டா வரட்டும் வரட்டும்.ம்...ம்... மிக்க நன்றி வருண்! தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும். ஆமா ஏங்க ஏங்க மதுரை தமிழன் போத்தல கையில திரும்ப எடுதிட்டாரோ ?ஆளை காணவே இல்லையே.
Deleteமதுரைத் தமிழன், ஈஸ்டன் டைம் ஸோன்ல இருக்காரு (உங்க நேரம்தான்?). இன்னேரம் தூங்கி இருப்பாரு. அவருடைய வலையுலக சஞ்சாராம் எனக்கு இன்னும் சரியாக பிடிபடவில்லை. அதாவது எப்போ வருவாரு? எப்போ பதிவிடுவாரு? எப்போ பின்னூட்டாங்களை பிறர் பார்க்க அனுமதிப்பார்? என்பது இன்னும் புரியவில்லை. அனேகமாக வீக் எண்ட்ல லாண்ட்ரி, சமையல்னு முழுநேர வேலையா இருக்கும்னு நெனைக்கிறேன். :) (இப்படி ஏதாவது எழுதினால்த்தான் அவரை வரவைக்க முடியும் :)) )
Deleteஆமால்ல ம்..ம்.. இங்க இப்ப 1.45 மிட் நைட் ok பாவம் தூங்கட்டும். பூரிக்கட்டை பட்டுவிட்டதோ தெரியலை. நாளை பார்ப்போம்.
Deleteநான் எப்போ எப்படி வருவேன் போவேன் என்பது நான் வீட்டில் அடிவாங்குவதை பொறுத்து இருக்கிறது. கடந்த 2 நாளாக ஏன் வரவில்லை என்பதை இங்கே வந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2014/07/2-two-days-and-two-nights-only.html
Deleteநல்ல தொகுப்பு. வாழ்த்துகள். என் புகைப்படப் பதிவையும் இணைத்திருப்பதற்கு நன்றி. எனது பெயரை சரியாகக் குறிப்பிடக் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteதங்கள் விருப்பம் நிறைவேற்றப் பட்டது.
Deleteமேலும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
ஒருவாரத்தை அழகாக ''கடத்தி'' விட்டீர்கள் நண்பர் ரூபன் அவர்களை பாடாய் ''படுத்தி'' எங்களையும் தங்களுடன் வழி ''நடத்தி'' வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்துக்கும்,பாடாய் படுத்துகிறேன் என்கிறீர்களா.ம்....,....ம்........ட்டூ பாடு.
Deleteதொடர்ந்து தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி !வலைசரவலைதளத்தை அழகூட்டியது தங்கள் அனைவரதும் வரவுகளும் கலாய் புகளுமே.நன்றி நன்றி !
Deleteஅருமையாக இந்த வாரம் உங்கள் பணி நிறைய புதிய தளங்கள் அறிமுகம் வாழ்த்துக்கள் இனியா மீண்டும் வலையில் சந்திப்போம்.
ReplyDeleteஅப்படியே ஆகட்டும் சகோ தொடர்ந்து தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ மீண்டும் வலையில் சந்திப்போம்.
Deleteஇன்றைய அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி !சகோ
Deleteஎத்தனை மகிழ்வாக இவ்வாரம் முழுவதும் நகர்ந்ததே தெரியவில்லை.
ReplyDeleteஉங்கள் பணி மிகச் சிறப்பு! எத்தனையோ தலைப்புகள்,
எத்தனை எத்தனையோ பதிவர்கள் என அறிமுகங்களும் அசத்தல்!
அத்தனையும் மிக அருமை! அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றியுடன் நல் வாழ்த்துக்களும் தோழி!
தொடரட்டும் உங்கள் வலைப்பூவில் மேலும் பதிவுகள்!....
அருமை தோழியே மிக்க நன்றி ! தொடர்ந்து தந்த தங்கள் அன்பு ம் ஆதரவுமே என் பணியை சிறப்பாக நடத்த வெகுவாக உதவியது, நன்றி ...நன்றி ....
Deleteஇனிமையாய் வலைச்சரத்தை நடத்தி மகிழ்வூட்டியதற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteதொடர்ந்து தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி தோழி !
Deleteதொடர்கிறேன் இனி இன்றிலிருந்து மிக்க மகிழ்ச்சி !
ஒரு வார இனிதான பயணத்தில் பல அருமையான வலைப்பூக்களை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! புதிய தளங்களுக்குச் சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteவாருங்கள் சுரேஷ் தங்கள் வருகையும் தொடர் ஆதரவும் வெகுவாக கவர்ந்தது மிக்கநன்றி ! தொடர்வோம் மேலும் ......
Deleteஒரு வாரம் போனது தெரியலை
ReplyDeleteபாதிப் பேரை அறியலை
அறிந்து வரப் போறேன்
அவசர கதியிலே...!!!
ஒருவாரகாலம் அழகா பேசிக் கூட்டிச் சென்றீர்கள் . நன்றி.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்னை தொடர்ந்து ஆதரவும் தந்து தாமும் மகிழ்ந்தது பேருவகை எனக்கு நன்றி தோழி வரவுக்கும் கருத்துக்கும். தொரட்டும் நட்பு.
Deleteஇந்த வாரத்தின் வலைச்சரத்தினை தொடுத்த விதம் வெகு சிறப்பு..
ReplyDeleteஇயல்பாக பேசிக்கொண்டு தென்னந்தோப்பில் நடந்ததைப் போன்ற உணர்வு..
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள். வாழ்க நலம்..
இனிய கருத்தும் வரவும் தந்து ஆதரவளித்தமை தான் எனக்கு சிறப்பு மிக்க நன்றி சகோதரா! தொடரட்டும் நம் நட்பு.
Deleteஅழகான கவிதைப் பேச்சு
ReplyDeleteஅறுஞ்சுவையும் இனிதே சேர்த்து
அன்புடன் கேளி (வேடிக்கை) விளையாடி
அசத்தலான அறிமுகங்கள் பல செய்து
அழைத்துச் சென்றாய் ஒருவாரகாலம்
நன்றி
சகோதரி
துளசிஶ்ரீனிவாஸ்.
கவிதையிலே தந்த இனிய கருத்து நெகிழ்த்தியது நெஞ்சை. தங்கள் மகிழ்வு எனக்கு பூரண திருப்தி அளித்தது. தங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ...!
Deleteஓர் ஏழலில் தொடர்ந்து எழுதி
ReplyDeleteபாண்டியன் ஊருக்குப் போய்
புது மாப்பிளையைப் பார்த்ததாய்
சொல்லி முடித்தது எல்லாம்
ஈற்றில் யாவும் கற்பனையாய்
ஒரு சிறுகதையாய் முடிந்ததே
தங்கள் அறிமுகநடை அழகு
அறிமுகங்கள் எல்லாம் நன்றே!
பாராட்டுகள்...
மிக்க நன்றி சகோ ! தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் வாரம் வெகு விரைவாக சென்று விட்டது மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ ! வாழ்த்துக்கள் .....!
Deleteஒரு வாரமாக வலைப்பக்கம் வர இயலாத சூழல்.....
ReplyDeleteஇந்த நாளில் என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. உங்களது மற்ற பதிவுகளையும் நேரம் எடுத்து படிக்க வேண்டும்!
சிறப்பாக பணியாற்றியமைக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteசிலவற்றை தவிர்க்க இயலாது தானே. அதனால் என்ன இப்போ தான் வந்து விட்டீர்களே சகோ.
எனது பதிவின் பகிர்வுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteமேலும் மேலும் சிறந்து விளங்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்......!
Delete