அனைவருக்கும் அன்பு வணக்கம்.
வலைச்சரத்தின் ஒரு வார ஆசிரியப்பணியில் இறுதி நாளான இன்று பல சுவையான பகிர்வுகளைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கதம்ப மலர், அறுசுவை மலர் என்ற தலைப்புகளில் பார்க்கலாம்.
கோலங்கள் சாருஸ்ரீ பகிர்ந்த தினமும், அவருக்கு படித்ததில் பிடித்ததாம். நமக்கும் நிச்சயம் பிடிக்கும். வாசித்து பாருங்க.
ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் வலையுலகில் அற்புதமான பணி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!
மாய உலகம் ராஜேஸ் நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த இளம் வலைப்பதிவர். அவர் நமக்காக பயன் தரும் வகையில் தொகுத்த பிளாக், கணினி, மென் பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள். என்ற பகிர்வு.
வலையுலக தொழிநுட்பத்தில் பிரச்சனை என்றால் இந்த தொகுப்பில் உள்ள வலைப்பூக்களில் நுழைந்து பாருங்க.
உணவு உலகம் சங்கரலிங்கம் சாரின் விழிப்புணர்வு
பகிர்வு
இறைச்சி தரும் இன்னல்கள், தேவையான பகிர்வு.உணவு கலப்படம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு விழிப்புணர்வாக பகிர்ந்து வருகிறார்.
சகோ.எல்.கே.எஸ்.மீரானின்
அதிர்ச்சி அலைகள், எனக்கு பிடித்த பகிர்வுகளில் ஒன்று.
இங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்.
துளசி மேம் உங்க தளத்தில் எதை அறிமுகப்படுத்த. நான் !
! ! இத்தனை வருஷமாக ஆயிரக்கணக்கில் பகிர்ந்திருக்கீங்க, இனி மேல் வருஷதிற்கு மூணு பகிர்வை பார்த்ததும் ரோசாரோசா!.. ரோசாரோசா!... ரோசா ! பாடத் தோன்றியது.அழகோ அழகு.
துளசிதளம் போல் யாரும் இந்த அளவு பயணக்குறிப்புகள்
கொடுத்திருக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். வாசிக்கவும் பார்வையிடவும் நிறைய பகிர்வுகள் குவிந்து கிடக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுவேன்.
இதயம் பேசுகிறது இலாவின் சிட்டப்பூஊஊ சுவாரசியமான பகிர்வு.
ஏஞ்சலினின் தோட்டத்துப் பூவும், காகிதப்பூவும், மிக அருமை. இவர் தளத்தில் க்வில்லிங், வாழ்த்து அட்டைகள் உண்டாக்குவது பற்றிய பகிர்வுகள் ஏராளம். அனைத்தும் அருமையான பகிர்வுகள் தான்.
இத்தனை பகிர்ந்த பின்பு விருந்தில்லாமல் எப்படி, அறுசுவை மலர் உங்களுக்காக..!
மனோ அக்காவின் மலாய் குலோப் ஜாமுன் , தனித்துவம் மிக்க இந்தக் குறிப்பை செய்து பாருங்க, நிச்சயம் அசத்தலாக இருக்கும், பக்குவமாக செய்ய வேண்டிய குறிப்பு.
சாம்பார் சாதம் – பார்க்கவே ருசிக்கத்தோணும். நாவில் நீர் ஊறும் பகிர்வு.
அசத்தலான பகிர்வு, அதன் கலரும் செய்முறையும் எல்லோரையும் செய்யத் தூண்டும், இஸ்லாமிய இல்லக் குறிப்பு. ஜலீலாவின் சமையல் குறிப்புகளில் ருசி அருமையாக இருக்கும். செய்து பாருங்க.
முர்தபா வாவ் ! மிக அசத்தலான குறிப்பு.
தேனக்காவின் செட்டிநாடு ஸ்பெஷல்
கவுனரிசி ,நாங்க எங்க ஊரிலும் இந்த கவுனரிசி செய்யும் பழக்கம் உண்டு, இன்னொரு பகிர்வு
வெண்டைக்காய் மண்டி, செட்டிநாடு குறிப்புக்களுக்கு அக்காவோட ப்ளாக் போய்ப் பாருங்க.அசந்துடுவீங்க.
கீதா சாம்பசிவத்தின் பட்டூரா செய்து பாருங்க, உப்பலாகவே இருக்குமாம்.
அன்னை மீராவில் - நவரத்ன குருமா.அருமையான பகிர்வு.
மேனகா சத்யாவின் ஜாங்கிரி செய்து பாருங்க, சூப்பராக செய்து காட்டியிருக்காங்க.இவங்க ப்ளாக்கில் குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கு,நாம் தேடும் அத்தனை ரெசிப்பியும் இருக்கும்.
மகியின் கலகலா எத்தனை நேர்த்தியான செய்முறை.
ஃபாயிஜா இந்த பிரியாணியை அவங்க ஊர் ஸ்பெஷல்ன்னு சொல்றாங்க. கையும் வாயும் மணக்கும்.
சித்ரா சுந்தரின் புரிட்டோ, ஆரோக்கியமான குறிப்பு.
பயணிக்கும் பாதை அஸ்மாவின் மரவள்ளிக்கிழங்கு அடை, மரவள்ளிக்கிழங்கில் இத்தனை ருசியாக ஒரு பதார்த்தம்! சூப்பர்.
அநன்யாவின் பன்னீர் சோடா சாப்பிடுங்க, கொண்டாடுங்க !
இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.
நன்றி நவில்கிறேன், விடை பெறுகிறேன்...!
எனக்கு இந்த வாய்ப்பளித்த, வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா மற்றும் குழுவினருக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வாழ்த்தி, பாராட்டி, கருத்தும், தொடர்ந்து ஊக்கமும் அளித்த சக பதிவுலக அன்பு நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
வலைச்சரத்திற்கு வந்த பின்பு பல நல்ல அறிமுகங்கள் கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமே !
நான் இந்தப் பணிக்காக அமரும் பொழுதெல்லாம், என் கணவர், தெம்பாக வேலை செய் என்று முதுகில் தட்டிக் கொடுத்து அப்ப அப்ப டீ, காஃபி போட்டுத் தந்து ஊக்கம் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கு மிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.