07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 26, 2013

நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்...

வணக்கத்துடன் வெற்றிவேல்,

நண்பர்கள் அனைவரையும் மூன்றாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. நேற்று நண்பர்கள் அனைவரும் பின்னூட்டத்தில் வாழ்த்தியது எனக்கு பெரும் ஊக்கமாய் இருக்கிறது. அண்ணன் பால கணேஷ் அவர்கள் சில பிழைகளை சுட்டிக்காட்டினார்,  அரசன் அவர்கள் எழுத்துப் பிழை இருப்பதை கூறினார். தெரிந்த பிழைகளை சரி செய்தி விட்டேன் என நம்புகிறேன். கணினியில் பார்த்துக்கொண்டே தட்டச்சு செய்வதனால் சில பிழைகளை கவனிக்க இயலாமல் போகிறது. அதற்க்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த குழந்தை ஏதேனும் சொற் பிழை செய்தால் பொறுத்தருளும்படி கேட்டுக்கொள்கிறேன்...

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
    பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் கரையும்போதும்
    ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்...

------எனக்கு பிடித்த பாடல் வரிகள்....

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு வருத்தம் இருந்தது. தமிழ் இலக்கணத்தில் இளங்கோவடிகள் கூறிய இலக்கணம் யாவும் அனைவராலும் மறக்கப்பட்டு விட்டது என்பதுதான், ஆனால் இந்த தமிழடிப் பொடியான் அய்யா கவிஞர் கி.பாரதிதாசனின் தளத்திற்கு சென்ற பின் எனக்கு அந்த கவலை தீர்ந்தது. எதுகை, மோனை, இயைபு என்று இளங்கோ கூறிய அனைத்து யாப்பையும் மிக அழகாக பயன்படுத்துபவர். அவரது சில பதிவுகளின் இணைப்பை கொடுத்துள்ளேன் படியுங்களேன். காதல் தேன் வடியும் காதல் ஆயிரம் பாமாலை, காதல் கவிதைகளின் தொகுப்பு

அடுத்து இவரின் பெயர் குமரன் அவர்கள், மதுரையைச் சார்ந்த இவர் தற்பொழுது அமெரிக்காவில் வசித்துக்கொண்டு இருக்கிறார். இவரின் தளத்தில் தமிழ், தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகள் ஏராளம். படித்து பயன் பெறவும். இவர் ராமனே ஒரு திராவிடன் தான் என்று புது குண்டை எடுத்து வீசுகிறார், படித்து பாருங்கள்.  தமிழிற்கு இல்லாத ஒரு தகுதி (படித்து நாம் அனைவரும் இதற்க்கு வெட்கப் பட வேண்டும்), பத்துப்பாட்டு மீட்கப்பட்ட கதை, உடுக்கை  இழந்தவன் கை (பாரி வள்ளலின் கதை) இதில் சுமார் 17 பதிவுகள் வள்ளல் பாரியைப் பற்றி எழுதியிருக்கிறார். அனைவரும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பல நூல்கள், பல சங்க இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதியுள்ளார். கண்டிப்பாக இவரது உழைப்பு இந்த பதிவில் தெரியும், அனைவரும் படித்து இன்பம் பெறுமாறு கேட்டுக்கொகிறேன்.... இவர் வள்ளுவன் எழுதிய இன்பத்துப்பால் பற்றி எழுதியுள்ளார் படியுங்கள், சொக்கிப்போவீர்கள் அவளது கடைக்கண் பார்வையில்.

இவரது பெயர் பிரபாகரன், இவரது தளம் பிரபாகரனின் தத்துபித்துவங்கள். அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் கடையேழு வள்ளல்களின் வரலாற்றை தேடும் ஓர் சிறந்த பணியை ஆரம்பித்துள்ளார். நமக்கு அனைவருக்கும் பாரி, அதியமான், ஓரி இன்னும் சிலரது வரலாறு மட்டுமே தெரியும் இவரின் ஆய்வுப் பணிக்கு நாம் நமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோமாக! இவர் முதலில் அதியமானின் வரலாறு பற்றி எழுதியுள்ளார். படித்து பாராட்டுங்கள்.

அடுத்து இவரின் பெயர் வவ்வால் (வேறு எந்த தகவல்களும் அறியப்பட இயலவில்லை.) இவர் எழுதிய வள்ளல் பாரி வேள் வரலாறு பற்றி படித்துப் பாருங்கள். பல அறியாத தகவல்களை வள்ளல் பாரி பற்றி அறிந்துகொள்ளலாம். 

இவரின் தளம் தமிழாசான் பதிவேடு. பெயர் அறிய இயலவில்லை. இவரது தளத்தின் வலது பக்கத்தைப் பாருங்கள் பல செய்திகளை சொல்லியிருப்பார். இவற்றின் தமிழ் பற்றிற்கு நாம் தலை வணங்க வேண்டும். மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு (காணொளி), புறநானூற்றில் தமிழர் வரலாறு, வடக்கிருத்தல், தமிழ் எழுத்துகள் பிறந்த கதை, தமிழ் அறிவியல் (காணொளி). 

தமிழ் இலக்கிய பாதையில் சிறு குறிப்புகள் என்ற தளத்தில் சில பதிவுகளை எழுதி பின் கடந்த மூன்று வருடங்களாக இவரை காண இயலவில்லை. இலக்கியம் சார்ந்த பல செய்திகளை கூறியுள்ளார். 

நான்காயிரம் அமுதத் திரட்டு என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். பதிவிட்டவர் பெயர் தமிழ் என்று வருகிறது. ஆனால் உண்மையான பெயர் அறியப்பட இயலவில்லை. இவர் தளத்தில் தமிழ் இலக்கிய (பக்திப் பாடல்கள்) பற்றி நிரம்பிக் கிடக்கிறது, படித்துப் பாருங்கள். இவரது பதிவுகள் அனைத்தும் மதம் சார்ந்ததல்ல தமிழ் சார்ந்தது என்று அவரே கூறியுள்ளார். 

இவரது பெயர் அருள் (கிரேஸ் என்பதைத்தான் அருள் என்று மாற்றி விட்டேன், மன்னிக்கவும்). தேன் மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறார். இவர் தளம் முழுதும் ஆத்திச்சூடி, ஐங்குறு நூறு, குறுந்தொகை என சங்க இலக்கியங்களை வாரி இறைத்துள்ளார் நெல் மணிகளாய். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பாடல்கள். 

இவரின் பெயர் T.V. ராதாகிருஷ்ணன். இவரது தளத்தின் பெயர் மகாபாரதம். ஒரு குழு செய்ய வேண்டிய வேலையை இவர் மட்டுமே தனியாளாக செய்துள்ளார் என்பதை நினைக்கும் போது மனம் பிரமிப்படைகிறது. இவர் மகாபாரதத்தை தனியாளாய் அழகுத் தமிழில் எளிய உரைநடையில் மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் பாராட்டப்பட வேண்டிய செயல். இவருக்கு நாம் நமது வாழ்த்துகளை பாராட்டுகளுடன் தெரிவித்துக்கொள்வோம்.

இவரது தளத்தின் பெயர் சங்கம் தமிழ் மன்னர்கள். பெயர் அறிய இயலவில்லை. இவர் சங்ககால வள்ளல்கள், பல தமிழ் மன்னர்கள் மற்றும் புலவர்களைப் பற்றி விரிவாக தமிழ் இலக்கியத்தின் துணை கொண்டு எழுதியுள்ளார். இவரும் பாராட்டப் பட வேண்டிய பதிவர். இவரது தளத்திலே ஆரம்பத்தில் அனைத்து பதிவுகளின் தலைப்புகளும் வந்துவிடுவதால் தனிப்பட்ட பதிவுகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

இவரது பெயர் அம்பாள் அடியாள். இயற்பெயர் தெரியவில்லை (ரூபிகா என்று இருக்கும் என மதிப்பிடுகிறேன்). இவர் பாக்கள் புனைவதில் வல்லவர். இவரது பாக்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்க இலக்கியம் சார்ந்த நடையிலே எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய தமிழா தமிழா நீ என் தமிழால் தமிழ் பேசிட வா. அழகான பாடல்.


அம்மா மடியில் இருந்திருந்தால்
அகதி வாழ்க்கை எமக்கெதற்கு ?.......
இம்மாநிலத்தில் அனைத்தும் உண்டு
இருந்தும் தமிழ் போல் வருமா சொல்லு ?...

என இவர் வரிகளை படிக்கும் போது இவர் ஏக்கம், தமிழ் பற்று நமக்கு புரியும். இவருக்கு நமது பாராட்டுகளையும், நம் அன்புக்கரத்தையும் நீட்டுவோமே!!!

இவரது பெயர் பலராமன். இவர் தளத்தின் பெயர் எறுழ் வலி (அர்த்தம் தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்). இவர்  தமிழ் இலக்கணம் பற்றி இரு பதிவுகளாய் கூறுகிறார். மேலும் இவர் எழுதியிருக்கும் தமிழ் விளையாடுவோம் எனும் விளையாட்டையும் சென்று விளையாண்டு பாருங்கள்.



இவரது பெயர் செழியன். இவர் தளத்தின் பெயர் செம்மொழி. இவர் எழுதிய தமிழ் மண் எடுப்போம் தமிழ் ஈழத்திலே என்ற கவிதையை படித்துப்பாருங்கள். சிறப்பாயிருக்கும்.

இவர் பெயர் ராஜேந்திரன், இவர் தளத்தின் பெயர் கிறுக்கல்கள்-௧௦௦. இவர் எழுதிய இப்படியும் ஓர் புத்தாண்டு என்ற பதிவைப் பாருங்கள். நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டியவற்றைப் பற்றி குறிப்பிடுகிறார்.

அடுத்து இவரின் பெயர் தமிழ் பிரியன். இவர் சில மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கிறார் என்பது இவர் இலக்கிய பதிவுகளை படித்தபோது அறிந்துகொண்டேன். இவர் பாரி நிஜ வள்ளலா? என்று கேட்டுள்ளார். கற்றவர்கள் பதில் கூறுங்கள். இவர் இலக்கியத்தில் இரண்டு என்ற பதிவையும் படித்துப் பாருங்கள்.

மறக்காமல் படித்து தங்கள் கருத்துகளை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்... நாளை சந்திப்போம். நேற்று நான் எழுதிய பொய்க்கும் நதிகள் என்ற கவிதையையும் அப்படியே படித்துவிட்டுச் செல்லுங்கள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

29 comments:

  1. சில பதிவர்கள் தெரிந்தவர்கள் சிலர் தெரியாதவர்கள்.... அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அறிமுகங்களை சந்தித்து விட்டு வருகிறேன்... தமிழ்மணம் இணைத்து விட்டேன்...

    ReplyDelete
  3. நான்கு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பல தளங்கள் எனக்குப் புதியவை வெற்றி.....

    அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. என்னுடைய பதிவான 'எறுழ்வலி'யை இங்கே அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    'எறுழ்வலி' என்றால் 'மிகுந்த வலிமையுடையவன்' என்று பொருள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பலராமன்...

      தங்கள் தளத்தின் பெயர் வித்தியாசமாகவும், சிறப்பானதாகவும் உள்ளது. தொடர்ந்து எழுத நல்வாழ்த்துகள்...

      Delete
  6. அன்பின் வெற்றிவேல் - நல்லதொரு தலைப்பினில் அறிமுகங்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அருமை! அருமை! உங்கள் இரண்டாம்நாள் அறிமுக பதிவர்கள் பட்டியல் மிகமிகச் சிறப்பு வெற்றிவேல்!

    அனைத்துப்பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இன்று அனைத்து தளங்களும் புதிய வலைத்தளங்கள் . அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. குமரன் அவர்களின் தளம் தவிர மற்றவை புதிய தளங்கள்.
    அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. நாடாதிருந்தேன் எங்கிருந்தோ எனை நாடி வந்திங்கே வாடா மலர் தந்து வாழ்த்துரைத்தாய் !!............
    வணங்குகின்றேன் வார்த்தைகளால் அலங்கரித்து நான் வடித்த
    கவிதைக்கோர் மகுடம் சூட்டிய நன் மனதே வாழ்க வாழ்க வலைத்தளம் உள்ளவரை இவ் வையகத்தில்
    நாம் உள்ளவரை நிலைத்திருக்கட்டும் நீங்காது இன்று போல் உனது நட்பும் எமக்கு நிலவைப் போல .மிக்க நன்றி சகோதரரே .அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  11. nice information:)

    Thanks:)

    i think naalyiram amutha tirattu
    author mr. rajendran(tamil)

    ReplyDelete
    Replies
    1. தவகல்களுக்கு மிக்க நன்றி...

      Delete
  12. அழகுத்தமிழ்ப் பதிவுகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பான பதிவுகளோடு பதிவர்களை சிறப்பித்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. தகுதியான அத்துணை உள்ளங்களுக்கும் எனது இனிமையான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நன்றி வெற்றிவேல்.

    ReplyDelete
  16. தள அறிமுகத்திற்கு நன்றி திரு.வெற்றிவேல். அட, என் பெயரும் மாற்றிவிட்டீர்களா? :)
    எனக்குத் தெரிவித்த திரு.தனபாலன் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்§

    ReplyDelete
  19. அப்பாடி.....எவ்ளோ பேரின் எழுத்தை வாசிக்கிறீங்க வெற்றி.வித்தியாசமான தலையங்கம்.தொடருங்கள் !

    ReplyDelete
  20. அறிமுகத்துக்கு நன்றி. நண்பர்கள் சிலர் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்கினோம். இடையில் சிறு தொய்வு. இந்த அறிமுகம் எங்களை ஊக்கப்படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... தங்கள் பணியை திறம்பட செய்ய வாழ்த்துகள்...

      Delete
  21. சிலர் மட்டுமே தெரிந்தவர்கள்,அறிமுகத்துக்கு நன்றி!

    ReplyDelete
  22. நம் நாலாயிரத் திவ்ய திரட்டினை இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி வெற்றி!

    என் முழு பெயர் இரா. தமிழரசன். முகவை மைந்தன், சத்ய நாராயணன் மற்றும் அடியேனின் கூட்டு முயற்சியில் உருவான தளமிது. நாங்கள் மூவரும் கல்லூரி நண்பர்கள்.

    உங்கள் அறிமுகம் மற்றும் அதை எங்களுக்கு அறிய வைத்த தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது எங்களுக்கு மேலும் தூண்டுகோலாய் அமைகிறது. தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தாங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. தங்கள் பெயர் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது