பல்சுவை மலர்
➦➠ by:
ஆசியா உமர்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
வலைச்சரத்தின் ஒரு வார ஆசிரியப்பணியில் இறுதி நாளான இன்று பல சுவையான பகிர்வுகளைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கதம்ப மலர், அறுசுவை மலர் என்ற தலைப்புகளில் பார்க்கலாம்.
கோலங்கள் சாருஸ்ரீ பகிர்ந்த தினமும், அவருக்கு படித்ததில் பிடித்ததாம். நமக்கும் நிச்சயம் பிடிக்கும். வாசித்து பாருங்க.
ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் வலையுலகில் அற்புதமான பணி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!
சுமஜ்லாவின் மவுஸ் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய - இந்த பகிர்வைப் பாருங்கள்.காப்பி பேஸ்ட் செய்ய முடியாமல் தடுத்து விடலாம்.
நம் வலைப்பூவை இழந்து விட்டால் - அறிவுக் களஞ்சியத்தின் பகிர்வு. உபயோகமான பகிர்வு.
மாய உலகம் ராஜேஸ் நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த இளம் வலைப்பதிவர். அவர் நமக்காக பயன் தரும் வகையில் தொகுத்த பிளாக், கணினி, மென் பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள். என்ற பகிர்வு. வலையுலக தொழிநுட்பத்தில் பிரச்சனை என்றால் இந்த தொகுப்பில் உள்ள வலைப்பூக்களில் நுழைந்து பாருங்க.
பொன்மலர் பக்கத்தில் இறப்பிற்கு பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற
– இந்த பகிர்வையும் பாருங்கள்.
ரஜின் அப்துல் ரஹ்மானின் இல்லத்தரசி யார் அவள்?வாசித்து பாருங்க.
உணவு உலகம் சங்கரலிங்கம் சாரின் விழிப்புணர்வு
பகிர்வு
இறைச்சி தரும் இன்னல்கள் , தேவையான பகிர்வு.உணவு கலப்படம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு விழிப்புணர்வாக பகிர்ந்து வருகிறார்.
சகோ.எல்.கே.எஸ்.மீரானின் அதிர்ச்சி அலைகள், எனக்கு பிடித்த பகிர்வுகளில் ஒன்று.
சகோ.எல்.கே.எஸ்.மீரானின் அதிர்ச்சி அலைகள், எனக்கு பிடித்த பகிர்வுகளில் ஒன்று.
உங்களுக்காகவின் பகிர்வு செல்போன் டிப்ஸ்.
புதுகை தென்றலின் இல்லதரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் .பயனுள்ள பகிர்வு.
இங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்.
விவசாயம் ஒரு ஆழமான பார்வை – ஈரோட்டைச் சேர்ந்த சதீஸின் பகிர்வு கழுகில்.
தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை - பகிர்வு தொழிற்களத்தில்.
துளசி மேம் உங்க தளத்தில் எதை அறிமுகப்படுத்த. நான் !
! ! இத்தனை வருஷமாக ஆயிரக்கணக்கில் பகிர்ந்திருக்கீங்க, இனி மேல் வருஷதிற்கு மூணு பகிர்வை பார்த்ததும் ரோசாரோசா!.. ரோசாரோசா!... ரோசா ! பாடத் தோன்றியது.அழகோ அழகு.
துளசிதளம் போல் யாரும் இந்த அளவு பயணக்குறிப்புகள் கொடுத்திருக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். வாசிக்கவும் பார்வையிடவும் நிறைய பகிர்வுகள் குவிந்து கிடக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுவேன்.
துளசிதளம் போல் யாரும் இந்த அளவு பயணக்குறிப்புகள் கொடுத்திருக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். வாசிக்கவும் பார்வையிடவும் நிறைய பகிர்வுகள் குவிந்து கிடக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுவேன்.
இதயம் பேசுகிறது இலாவின் சிட்டப்பூஊஊ சுவாரசியமான பகிர்வு.
ஏஞ்சலினின் தோட்டத்துப் பூவும், காகிதப்பூவும் , மிக அருமை. இவர் தளத்தில் க்வில்லிங், வாழ்த்து அட்டைகள் உண்டாக்குவது பற்றிய பகிர்வுகள் ஏராளம். அனைத்தும் அருமையான பகிர்வுகள் தான்.
இத்தனை பகிர்ந்த பின்பு விருந்தில்லாமல் எப்படி, அறுசுவை மலர் உங்களுக்காக..!
மனோ அக்காவின் மலாய் குலோப் ஜாமுன் , தனித்துவம் மிக்க இந்தக் குறிப்பை செய்து பாருங்க, நிச்சயம் அசத்தலாக இருக்கும், பக்குவமாக செய்ய வேண்டிய குறிப்பு.
அசத்தலான பகிர்வு, அதன் கலரும் செய்முறையும் எல்லோரையும் செய்யத் தூண்டும், இஸ்லாமிய இல்லக் குறிப்பு. ஜலீலாவின் சமையல் குறிப்புகளில் ருசி அருமையாக இருக்கும். செய்து பாருங்க.
முர்தபா வாவ் ! மிக அசத்தலான குறிப்பு.
தேனக்காவின் செட்டிநாடு ஸ்பெஷல் கவுனரிசி ,நாங்க எங்க ஊரிலும் இந்த கவுனரிசி செய்யும் பழக்கம் உண்டு, இன்னொரு பகிர்வு வெண்டைக்காய் மண்டி, செட்டிநாடு குறிப்புக்களுக்கு அக்காவோட ப்ளாக் போய்ப் பாருங்க.அசந்துடுவீங்க.
கீதா சாம்பசிவத்தின் பட்டூரா செய்து பாருங்க, உப்பலாகவே இருக்குமாம்.
அன்னை மீராவில் - நவரத்ன குருமா.அருமையான பகிர்வு.
தேனக்காவின் செட்டிநாடு ஸ்பெஷல் கவுனரிசி ,நாங்க எங்க ஊரிலும் இந்த கவுனரிசி செய்யும் பழக்கம் உண்டு, இன்னொரு பகிர்வு வெண்டைக்காய் மண்டி, செட்டிநாடு குறிப்புக்களுக்கு அக்காவோட ப்ளாக் போய்ப் பாருங்க.அசந்துடுவீங்க.
கீதா சாம்பசிவத்தின் பட்டூரா செய்து பாருங்க, உப்பலாகவே இருக்குமாம்.
அன்னை மீராவில் - நவரத்ன குருமா.அருமையான பகிர்வு.
மேனகா சத்யாவின் ஜாங்கிரி செய்து பாருங்க, சூப்பராக செய்து காட்டியிருக்காங்க.இவங்க ப்ளாக்கில் குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கு,நாம் தேடும் அத்தனை ரெசிப்பியும் இருக்கும்.
மற்றும் செட்டிநாடு மட்டன் பிரியாணி பார்க்கவே செய்யத் தூண்டும்.
கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!
கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!
மகியின் வெஜ் பேஸ்ட்ரி வீல் , இந்த குறிப்பை பார்த்து அசந்தே போயிட்டேன் நான்.
ஃபாயிஜா இந்த பிரியாணியை அவங்க ஊர் ஸ்பெஷல்ன்னு சொல்றாங்க. கையும் வாயும் மணக்கும்.
மற்றும் கிரில் பிரியர்களுக்காக தந்தூரி சிக்கன், சூப்பர்.
பாசமலரின் காளிப்ளவர் முட்டைப் பொரியல், எத்தனை இலகுவான சத்தான பொரியல்.
வாங்க சமைக்கலாமில் சூப் வகைகள் , மிக அசத்தலான பகிர்வு, சூப் யாருக்குத்தான் பிடிக்காது.
பாசமலரின் காளிப்ளவர் முட்டைப் பொரியல், எத்தனை இலகுவான சத்தான பொரியல்.
வாங்க சமைக்கலாமில் சூப் வகைகள் , மிக அசத்தலான பகிர்வு, சூப் யாருக்குத்தான் பிடிக்காது.
மீன் குழம்பு - மனோகரி மன்றத்தில்,பகிர்ந்திருக்காங்க, சூப்பராக இருக்கும்.
விஜிஸ் வெஜ் கிச்சனில் மைசூர் ரசம் & கேரள மிளகூட்டல் விஜியின் கைமணமே தனி தான்.
விஜிஸ் வெஜ் கிச்சனில் மைசூர் ரசம்
கோவை2தில்லியின் கருவேப்பிலைக் குழம்பு & சூப்பர் கஷாயம், மாமியார் கிட்ட இருந்து கத்துக்கிட்டாங்களாம்.நல்ல பகிர்வு.
ராதாஸ் கிச்சன் – கிரீன் குழம்பு, வித்தியாசமாக செய்து அசத்தியிருக்காங்க.
மின்மினியின் கோதுமைமாவுப் பணியாரம், அட, இதைச் செய்து பாருங்க அத்தனை ருசி.
மின்மினியின் கோதுமைமாவுப் பணியாரம், அட, இதைச் செய்து பாருங்க அத்தனை ருசி.
அன்னுவின் ஒரு ரெசிப்பி – பல காம்பினேஷன், ஆரோக்கியமாகவும் ஈசியாகவும் செய்யக் கூடிய குறிப்புக்கள்.
பயணிக்கும் பாதை அஸ்மாவின் மரவள்ளிக்கிழங்கு அடை, மரவள்ளிக்கிழங்கில் இத்தனை ருசியாக ஒரு பதார்த்தம்! சூப்பர்.
தெய்வ சுகந்தியின் ஃப்ரூட் சாலட் வாவ் ! அசத்திட்டாங்க..
அநன்யாவின் பன்னீர் சோடா சாப்பிடுங்க, கொண்டாடுங்க !
இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.
நன்றி நவில்கிறேன், விடை பெறுகிறேன்...!
எனக்கு இந்த வாய்ப்பளித்த, வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா மற்றும் குழுவினருக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வாழ்த்தி, பாராட்டி, கருத்தும், தொடர்ந்து ஊக்கமும் அளித்த சக பதிவுலக அன்பு நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
வலைச்சரத்திற்கு வந்த பின்பு பல நல்ல அறிமுகங்கள் கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமே !
நான் இந்தப் பணிக்காக அமரும் பொழுதெல்லாம், என் கணவர், தெம்பாக வேலை செய் என்று முதுகில் தட்டிக் கொடுத்து அப்ப அப்ப டீ, காஃபி போட்டுத் தந்து ஊக்கம் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கு மிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.
நன்றி நவில்கிறேன், விடை பெறுகிறேன்...!
எனக்கு இந்த வாய்ப்பளித்த, வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா மற்றும் குழுவினருக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வாழ்த்தி, பாராட்டி, கருத்தும், தொடர்ந்து ஊக்கமும் அளித்த சக பதிவுலக அன்பு நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
வலைச்சரத்திற்கு வந்த பின்பு பல நல்ல அறிமுகங்கள் கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமே !
நான் இந்தப் பணிக்காக அமரும் பொழுதெல்லாம், என் கணவர், தெம்பாக வேலை செய் என்று முதுகில் தட்டிக் கொடுத்து அப்ப அப்ப டீ, காஃபி போட்டுத் தந்து ஊக்கம் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கு மிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
|
|
பல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி... சிறப்புக்கு உதவிய உங்களவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteசிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்... வாழ்த்துகள், நன்றி...
ReplyDeleteநிறைவு நாளில் ஏராளமான பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். ஒரு வார காலம் உங்கள் பணியை செவ்வனே ஆற்றி இருகிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபோன்ஸாய் மரங்கள் பற்றிய இராஜராஜேஸ்வரியின் விளக்கமான பகிர்வு.
ReplyDeleteநான் மிகவும் ரசித்த பகிர்வ/
எமது பதிவை சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு இனிய ந்ன்றிகள்...
பல்சுவைப்பதிவுகள்
ReplyDeleteபார்த்து ரசிக்கவைத்தன..
பகிர்வுகளுக்குப்
பாராட்டுக்கள்...!
பல்சுவை விருந்து!
ReplyDeleteசிறப்பாகச் சென்ற வாரத்தில் ஒவ்வொரு அறிமுகத்துக்கும் நீங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பு அபாரமானது. மனமார்ந்த பாராட்டுகள் ஆசியா.
பன்னீர் ஜோடா பதிவு காலாவதி ஆயிட்டாலும் நீங்க அறிமுகப்படுத்தினது ரொம்ப பெருமையா இருக்கு! நன்றி அக்கா!
ReplyDeleteபசிய கிண்டி விடுறீங்கள.
ReplyDeleteதனபாலன் சார், முதலில் வந்து முத்தான கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..நான் பகிர்ந்த அனைத்துப் பதிவர்களையும் சென்று பாரவையிட்டு தகவலையும் தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
ReplyDeleteஇரவின் புன்னகை,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteடி.என்.முரளிதரன் வருகைக்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி மேம் தொடர் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.உங்கள் வலைப்பூவில் சுறுசுறுப்பான பகிர்வுகள் பல காலம் தொடரட்டும்.
ReplyDeleteசங்கரலிங்கம் சார் வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி,மகிழ்ச்சி.
ReplyDeleteராமலஷ்மி,இன்னும் நிறைய பகிர நினைத்திருந்தேன், புகைப்படம்,பயணம்,இவை எல்லாம் விட்டுப் போனது,இன்னும் கொஞ்சம் திட்டமிடல் சரியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் வருகிறது.வந்து பார்வையிட்டு கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி,நன்றி.
ReplyDeleteஅநன்யா வாங்க,முதலில் வருகைக்கு மகிழ்ச்சி.ஒரு உண்மையை சொல்லட்டுமா? இன்னும் இந்த பன்னீர் சோடாவை சுவைத்ததில்லை,ஊர் வந்த பின்பு முதல் வேலை அது தான்.ஹி.ஹி..கருத்திற்கு நன்றி.
ReplyDeleteஇராஜமுகுந்தன் வருகைக்கு நன்றி,பசியைக் கிளப்பிவிடக் கூடாது என்று தான் படங்களைப் பகிரவில்லை.
ReplyDeleteநிறைய புது பதிவுகள் - உதவும்.
ReplyDeleteநன்றி.
வலைசர அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஆசியா. ஆசிரிய பணிக்கு அறிமுகங்களுக்கு உங்களின் அயராத உழைப்பு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்..! நன்றி ஆசியா.
ReplyDeleteதொழிற்களத்தின் தம்பி செழியனின் பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்,,,,
ReplyDeleteராதா ராணி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteதொழிற்களம் உடன் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.
good introductions
ReplyDeleteஉங்கள் வாரத்தில் இரண்டாவது முறையாக எனது தளம் அறிமுகம், டபுள் சந்தோசம் கிடைத்துவிட்டது. நன்றிகள் தோழி.
ReplyDeleteபல தளங்களின் லிங்குகளை இப்படி எடுத்து பகிர்வது மிக சிரமமான வேலை, அதை அருமையாக செய்துள்ளீர்கள்...உங்களின் உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
வலைசரம் ஆசிரியர் சீனா ஐயா அவர்கள், பதிவர்களுக்கு மிக சிறந்த ஊக்கத்தை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறார். என் நன்றிகள் ஐயா.
இங்கே இடம் பெற்ற அத்தனை தள உரிமையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.
மீண்டும் நன்றி தோழிஆசியா.
வணக்கம்
ReplyDeleteதிருமதி ,ஆசியா உமர்
ஒரு வார காலமும் சிறப்பாக பல சிரமங்களுக்கு மத்தியில் பலவகைப்பட்ட வலைப்பூக்களை வலைச்சரத்தில் விருந்தளித்துள்ளிர்கள் அதற்கு முதற் முதலில் நன்றி கூறுகிறேன்
இன்று பல் சுவை மலர் என்ற தலைப்பில் பதியப்பட்டுள்ள படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா... பல்சுவை மலரும் அற்புதம் ஆசியா!
ReplyDeleteஅனைத்துப் பதிவர்களும் வலைத்தளத்தளங்களுமே சிறப்பு!
அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
நல்லபடியாக உங்கள் வலைச்சர ஆசிரியப் பணியை நிறைவு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி!
அயராத உங்கள் உழைப்பு மிகவும் பெறுமதியானதே.
இங்கு என்னையும் நீங்கள்செய்த அறிமுகத்தாலும் இன்னும் நானும் பல புதிய வலைப்பதிவர்களை அறிந்தும் இணைந்துகொண்டேன்.
அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஆசியா!
உங்களின் சிறந்த பணிக்கு என் இதயபூர்வமான இனிய நல்வாழ்த்துக்கள்! நன்றிகள்!
அத்தனையும் சிறப்பான அறிமுகங்கள்..
ReplyDeleteசெவ்வனே செய்தீர்கள் ஆசியா. வாழ்த்துகள்.
ஆசியா,
ReplyDeleteஉங்கள கடின உழைப்புக்கு பாராட்டுக்கள். பல்சுவை விருந்து அமர்க்களம்.
உங்கள் கணவரின் அன்பான ஊக்கமும் டீ, காபி உபசாரமும் நன்றாக உற்சாகம் தந்து இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அடடா அதுக்குள் ஒரு கிழமையாகிவிட்டதோ?.. மிகவும் சிறப்பான ஆசியராக இருந்து... மொத்தத்தில் முக்கால்வாசி வலையுல நண்பர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீங்கள் என நினைக்கிறேன்ன்.. வாழ்த்துக்கள் ஆசியா.
ReplyDeleteஅருள் கருத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteகௌசல்யா கருத்திற்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.
ரூபன்,தங்களை இங்கு வந்து தான் தெரியும், என்றாலும் தொடர்ந்து வந்து கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்தியது மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஇளமதி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஅமைதிச்சாரல் உங்கள் போட்டோகிராபி எல்லாம் பகிர முடியாமல் போய்விட்டதேன்னு இருக்கு.கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.
அக்கா என் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!!! வலைச்சரத்தில் உங்கள் பதிவுகள் சூப்பர்....
ReplyDeleteகோமதிக்கா வாங்க,தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நன்றி.
ReplyDeleteஅதிரா அய்யோடா, வலையுலகம் ஒரு கடல்.அதில் சிறிது தூரம் கரையிலேயே நீந்திப் பார்த்தேன் அவ்வளவே!வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
சுஹைனா நலமா?வாங்க,வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி,நன்றி.
ReplyDeleteஅழகான தலைப்புக்களில் மிக பயனுள்ள தொகுப்புக்கள் அத்தனையும்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
www.nizampakkam.blogspot.com
பல்சுவைப்பகுதி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிரமம் பாராது நிறைந்த பல அறிமுகங்களையும் பகிர்ந்து சிறப்பான வாரமாகத் தந்தீர்கள்.
உங்கள் பணி மிகவும் சிறப்பானது பாராட்டுகள் ஆசியா.
மேலும் சிறக்க வாழ்த்துகள்.
அடடா..தோழி.நான் அறிந்திறாத பல தளங்களை உங்கள் அறினுகங்களில் பார்க்கிறேன்.கண்டிப்பாக ஒவ்வொன்றையும் பார்த்தே ஆகவேண்டும்.
ReplyDeleteவலைச்சரபணியினை மிகசிறப்பாக செய்து முடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.ஒவ்வொரு பதிவுகளிலும் உங்கள் திறமையும்,நுணுக்கமும்,உழைப்பும் நன்றாகவே தெரிகிறது.வாழ்த்துக்கள் தோழி.சின்ன சந்தேகம்.//கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!// இதில் கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்.?
பல்சுவை மலரில் அட்டகாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க ஆசியா. அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த ஒருவாரகாலம் மிகவும் சிறப்பாக பல்சுவையான வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி திறம்பட பணியாற்றியமைக்கும்,அவ்வலைப்பூக்களில் என் வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியமைக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கி றேன்.
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பான வாரமாக இருந்தது. நேரமின்மையால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை....
ReplyDeleteஇன்று என்னையும், அனுபவ மலரில் என் கணவரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
நிஜாமுத்தீன் கருத்திற்கு நன்றி சகோ.
ReplyDeleteமாதேவி வாங்க,கருத்திற்கு மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
ஸாதிகா பாராட்டிற்கு மகிழ்ச்சி.இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.கூகிளீள் சமையற் குறிப்பு தேடலில் கிடைத்தது.மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete'அறுசுவை மலரி'ல் என்னுடைய சமையல் குறிப்பு இணைப்பினையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஆசியாக்கா :)
ReplyDeleteப்ரியசகி வாங்க,கருத்திற்கும் தொடர் வருகைக்கும் நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்க நன்றி கோவை2தில்லி,கருத்திற்கு மகிழ்ச்சி.
மிக்க நன்றி ஆசியா ..அனைத்து வலை தளங்களும் அறிமுகங்களும் மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதகவல் அறிய தந்தற்கு மிக்க நன்றி சகோதரர் தனபாலன்
ReplyDeleteஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.//
ReplyDeletehttp://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
மிக்க நன்றி cherub crafts.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
ReplyDeleteAsiya cherub crafts நான் தான் ..ஏஞ்சலின் :)
ReplyDeleteஅறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிக்கா!! மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...இன்றுதான் உங்கள் அனைத்து பதிவர்களின் அறிமுகத்தையும் மொத்தமாக பார்த்தேன்...
ReplyDeleteஅப்பப்பா, எவ்வளவு பதிவர்கள் இதிலேயே உங்கள் சிறப்பான பணியும் அயராத உழைப்பும் தெரிகிறது.நிறைய தளங்கள் தெரியாதவை அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி அக்கா!!
நிஜமாவே இப்படியொரு துணை கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கீங்க,என்றும் நிலைக்க வாழ்த்துக்களும்,மகிழ்ச்சியும்...
தனபாலன் சகோ தெரியபடுத்திய தங்களுக்கும் மிக்க நன்றி!!
மேனகா வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஇங்கே வலைச்சரத்தில் என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தி வைத்ததற்கு மகிழ்ச்சி & நன்றிங்க. ஊக்கப்படுத்தி மேற்கொண்ட பணியை சிறப்பாக செய்ய உதவிய உங்களவருக்கும் வாழ்த்துகள். பகிரப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.நன்றி!
ReplyDeleteThanks for introducing me Asiya Akka, wishes to all those who got introduced.
ReplyDeleteWell done as a valaicharam aasiriyar for a week! :)
ஒருவார காலத்தில் மிக அதிகமான பதிவுகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் புக்மார்க் செய்து கொண்டுள்ளேன். நிதானமாகப் படிக்கிறேன். அப்போது உங்கள் நினைவும் வரும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆசியா!
கணவர் டீ போட்டுக் கொடுத்தாரா.. ஹாஹா கொடுத்துவச்ச புள்ள போ..
ReplyDeleteஹ்ம்ம் எங்கே இதெல்லாம் இங்கே நடக்கப் போகுது.. ஏதோ ப்லாக் எழுதுறதே ஒரு ரகசிய வேலை மாதிரி, நேரம் பார்த்து மூடு பார்த்து ( அப்ப நமக்கு மூடு அவுட்டாகாம இருந்து ..!! ) செய்ய வேண்டி இருக்கு.. :)
நன்றி ஆசியா ஒரே வாரத்தில் 3 முறை எனக்கு வலைச்சரத்தில் இடம் கொடுத்தமைக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் சக தோழமைகளுக்கு,
நன்றி தனபாலன் சார் & சீனா சார். :)
பல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...என்னுடைய பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா....
ReplyDeleteபல்சுவைமலர்களில் உள்ள அனைத்து அறிமுகங்களும் பிரமாதம்.
ReplyDeleteஎத்தனை சுட்டிகள் அனைத்தையும் அருமையான பதிவர்கள்,
இதில் என்னை இங்கு இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஆசியா.
வாழ்த்துக்கள் ஆசியா..
வாழ்த்துக்கள் ஆசியா. நல்ல பல தளங்களை அறிமுகம் செய்திருக்கிங்க. அதிலும் என்னோட வலைபூவும் வந்திருப்பதை நினைத்து மிக சந்தோஷம் நன்றி ஆசியா. நேரமின்மையால் கொஞ்சம் தாமதாமாக வந்திருக்கிறேன். பசங்களுக்கு வெக்கேஷன் இங்கு. ரொம்ப ரொம்ப நன்றி ஆசியா. உங்க ஆசிரியை பணி நல்ல சிற்ப்பா செய்து அசத்திடிங்க.
ReplyDelete