கல்வி மலர்
➦➠ by:
ஆசியா உமர்.
இன்றைய நாளில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் அன்பு வணக்கம்.
கல்விக்கு வானமே எல்லை.இம் மலரில் இப்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான இடுகைகளை அறிமுகப் படுத்தலாம் என்று நினைத்த பொழுது, எங்கு பார்த்தாலும் பள்ளி இறுதி படிப்பு முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம் என்றும், பெற்றோர்கள் பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம் என்றும் ஆலோசித்து வருவதைக் காண்கிறோம்.
படிப்பை தேர்வு செய்வதற்கு முன்னால் எந்த படிப்பில், எந்த துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். பிடித்தமான துறையில் சேரும் பொழுது பலன் பெரியதாக இருக்கும். முடிவான இலக்கு தெரிந்தால் மாணவ மாணவிகள் அவர்கள் குறிக்கோளை எளிதாக அடைந்து விடுவார்கள்.
பள்ளி இறுதிப்படிப்பு, பட்டப் படிப்பு முடித்த பின்பு, அவர்கள் கிட்டதட்ட புது வாழ்க்கைக்கு தயாராகிறார்கள். ஏகப்பட்ட வாய்ப்புக்கள் கண் முன்னாடி தெரிந்தாலும், மேற் படிப்பு படிக்க எங்கு சேர்வது, எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எல்லோருக்குமே ஏற்படுவது சகஜம். எனவே பலருக்கும் பயனாகும் வகையில் கல்லூரி படிப்பைப் பற்றியே பகிரலாமே என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே நம் பதிவர்கள் உபயோகமாக பகிர்ந்த சில பகிர்வுகளைப் பார்க்கலாம்.
படிப்பை தேர்வு செய்வதற்கு முன்னால் எந்த படிப்பில், எந்த துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். பிடித்தமான துறையில் சேரும் பொழுது பலன் பெரியதாக இருக்கும். முடிவான இலக்கு தெரிந்தால் மாணவ மாணவிகள் அவர்கள் குறிக்கோளை எளிதாக அடைந்து விடுவார்கள்.
நிறைய பேருக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வழிகாட்ட ஆட்கள் இருக்காது.
மேற்கண்ட படிப்புகளுக்கு தகுதிகளாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பும், 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டுமாம்.
அட நம்ம அட்ராசக்கை கூட ஐ.ஏ.எஸ். என்பது எவராலும் எட்ட முடியாத சிகரம் எல்லாம் இல்லை. முயற்சி செய்தால் அனைவராலும் அடையக் கூடிய பணி தான் என்கிறார்.
வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்பும் பெற்றோர் என்னென்ன அறிந்திருக்க வேண்டும் என்று மாயூரன் மகேந்திரன் சொல்வதைக் கேளுங்கள்.
கழுகு குழுமத்தில், மகேஸ்வரி பகிர்ந்த, அதிகமான மக்கள் ஆசைப்படும் பொறியியல் படிப்பில் சேர என்ன செய்ய வேண்டும், எந்தக் கல்லூரியில், எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது,வேலை வாய்ப்புகள் பற்றி அறிய பகுதி-1, பகுதி-2 போய்ப் பாருங்கள்.
கழுகு குழுமத்தில், மகேஸ்வரி பகிர்ந்த, அதிகமான மக்கள் ஆசைப்படும் பொறியியல் படிப்பில் சேர என்ன செய்ய வேண்டும், எந்தக் கல்லூரியில், எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது,வேலை வாய்ப்புகள் பற்றி அறிய பகுதி-1, பகுதி-2 போய்ப் பாருங்கள்.
+2 முடித்த பின்பு இஞ்சினியரிங் தொடங்கி பி.பி.ஏ வரை டாப் 10 படிப்புகள் என்னவென்று அறிய சத்திய மார்க்கம் செல்லவும்.
உயிரியல் பாடப் பிரிவு எடுத்தவர்கள் மருத்துவம், பி.டி.எஸ். தவிர வேறு என்ன படிக்கலாம் என்று ஃபைஜுர் ரஹ்மான் சொல்வதைக் கேளுங்கள்.
இஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்களுக்கு, பகுதிநேர உள்நாடு,வெளிநாடு கல்வி வாய்ப்பு பற்றி கூறுகிறார் தினக்ஸ்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத மாணவர்கள் கூடுதலாகச் சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாம்.
விபரம் அறிய கல்விச்சாலைக்குச் செல்லவும்.
விபரம் அறிய கல்விச்சாலைக்குச் செல்லவும்.
+ 2 முடித்த பின்பு அடுத்து என்ன படிக்கலாம் என்று கூட்டப்புளி
ஐந்து - நியுட்ரீசியன் டயட்டீசியன் துறைகளில் வாய்ப்புக்கள் என்று பல பாகங்களாகப் பயன் தரும் வகையில் பகிர்ந்திருக்கிறார்.
ஜப்பானில் படிக்க கல்வி உதவித்தொகை மற்றும் பாடப்பிரிவுகள் பற்றி அதிரை போஸ்ட் ப்ளாக்ஸ்பாட்டில் விபரம் பகிரப்பட்டுள்ளது.
ஜப்பானில் படிக்க கல்வி உதவித்தொகை மற்றும் பாடப்பிரிவுகள் பற்றி அதிரை போஸ்ட் ப்ளாக்ஸ்பாட்டில் விபரம் பகிரப்பட்டுள்ளது.
இந்தப் பகிர்வுகள் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் நண்பர்கள், உறவினர்கள், +2 விற்கு பின்பு என்ன படிக்கலாம், படிக்க வைக்கலாம் என்று ஆலோசனைக் கேட்டால் வலைச்சரத்தின் இந்த லிங்கைப் பகிருங்கள்.
மீண்டும் அசத்தலான அறிமுகங்களோடு நாளைச் சந்திக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
|
|
அனைத்தும் பயன் தரும் தளங்கள்... 7 தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
கல்வி மலர்கள் அளித்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...
good useful introductions
ReplyDeleteபயனுள்ள தளங்களை
ReplyDeleteஅருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ரொம்ப அருமை தோழி!!!நல்ல தகவல் ....
ReplyDeleteஅன்பின் ஆசியா உமர் - பொறுப்பேற்பதற்கு முன்னர் பயந்தீர்கள் - இப்பொழுது தூள் கிளப்புகிறீர்கள் - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பகிர்வுதோழி.அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பகிர்வும் கூட.வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை செவ்வன தொட்ரந்திட வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிகவும் பயன்படக்கூடிய இணையத்தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் ஆசியா.
அன்பின் ஆசியா உமர் - மகேஸ்வரியின் பதிவுகளில் பகுதி 2 - சுட்டி சரியாகக் கொடுக்கவில்ல்லை.
ReplyDeletehttp://www.kazhuku.com/2011/04/2-ii.html - சுட்டியினைச் சரி செய்யவும்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மதிப்பிற்குறிய சீனா ஐயா,
ReplyDeleteபகிர்வுகளைப் சரி பார்த்து கருத்தில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
பகுதி -1 ,பகுதி - 2 இப்பொழுது சரி செய்து விட்டேன்.
தனபாலன் சார்,எந்த ப்ளாக் சென்றாலும் உங்கள் கருத்து இல்லாமல் இல்லை.பாராட்டிற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஅருள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteரமணி சார் வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,த.ம.ஓட்டிற்கு மிக்க நன்றி.
ReplyDeleteதம்பி குமார் கருத்திற்கும் தொடர் வருகைக்கும் மகிழ்ச்சி.
ReplyDeleteகவிதா ரியா,வாங்க மிக்க மகிழ்ச்சி,நன்றி.
ReplyDeleteதோழி ஸாதிகா, தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றி,கருத்திற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆசியா.
ReplyDeleteசரியான நேரத்த்தில் மிகசரியான பயனுள்ள தளங்களை அறிமுக படுத்தி இருக்கீங்கள்.
இது கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள பகிர்வாக இருக்கும்..
http://www.chennaiplazaik.com/2013/06/hijab-models-chennai-plaza.html
ப்ரியசகி தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றி,மகிழ்ச்சி தோழி.
ReplyDeleteஜலீலா வாங்க, விடுமுறையில் இருக்கும் பொழுது எனக்காக இங்கு வந்து கருத்திட்டது மிக்க மகிழ்ச்சி தோழி.பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஅன்பின் ஆசியா உமர் - ஆதி கேசனின் பெயர் ஆதி கேசவன் எனப் பதிவாகி இருக்கிறது. இயன்றால் சரி செய்யவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா, சரி செய்து விட்டேன்.வரும் நாட்கள் பகிர்வில் கவனமாக செயல்படுகிறேன்.
ReplyDeleteஅன்பின் ஆசியா உமர் - அருமையான அறிமுகங்கள் - இன்றைய தேவைக்குத் தகுந்த தகவல்கள் - அத்தனையையும் தேடிப் பிடித்து படித்து பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் ஆசியா உமர் - அறிமுகப் படுத்தப்பட்ட 20 பதிவுகளையும் சுட்டியினைச் சுடி - சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழிகளும் இட்டு வந்தேன் . சில மறுமொழிகள் மட்டுறுத்தக்லுக்காகக் காத்திருக்கின்றன - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்கள் அறிமுகங்கள் சிறப்பு!
ReplyDeleteபயந்தரும் பதிவர்களும் அவர்தளங்களும்...
அவர்கள் அனைவருக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள் ஆசியா!
பயனுள்ள அறிமுகங்கள். கல்விச்சாலைகள் குறித்து நல்லதொரு இடுகைகள். சென்று பார்க்கிறேன். நன்றி தொடருங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteஇளமதி வாங்க, வாழ்த்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஸ்டார்ஜன் மிக்க நன்றி.
அமைதிச்சாரல் மிக்க நன்றி.
சரியான நேரத்தில் கல்வி மலர் வெளியிட்டுள்ளீர்கள். பயனுள்ள அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeletegood one
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி,.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..
நன்றி.
வணக்கம்
ReplyDeleteஆசியா உமர்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,அறிமுகமான வலைப்பூக்கள் அனைத்தும் மிக பயனுடையவை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாரட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி,
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஆசியா உமர்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,அறிமுகமான வலைப்பூக்கள் அனைத்தும் மிக பயனுடையவை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி,
-அன்புடன்-
-ரூபன்-
பயனுள்ள அறிமுகங்கள்,எனக்கு தெரிந்தவரை கல்வி,பட்டப்படிப்பு தொடர்பான பதிவுகள் பெரிதாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.நீங்களோ எடுத்த எடுப்பிலேயே ஏராளமான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.தொடருங்கள்
ReplyDeleteஎனது வலைத்தலத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே .
ReplyDeleteஅனைவருக்கும் பயன்தரும் தளங்களை குறிபிட்டமைக்கு நன்றி ஆசியா.
ReplyDeleteகல்விமலர் அருமை.
வே.நடனசபாபதி சார் மிக்க நன்றி.
ReplyDeleteஎல்.கே.வாழ்த்திற்கு வாங்க,மிக்க நன்றி.
தினக்ஸ் மிக்க நன்றி.
ரூபன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதினேஷ் மிக்க நன்றி.
நாகூர் சேத்தன் மிக்க நன்றி.
கோமதியக்கா,வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா ஓமர்.
ReplyDeleteவலைச்சரத்தில் முத்துக்கள் கோத்த முத்துச்சரமாக ஒளிர வாழ்த்துக்கள். நம்மலையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.
தங்கள் வலைப்பூவில் பிரசவித்தற்க்கு மிக்க நன்றி..!
ReplyDeletewww.alifboys.blogspot.com
ராஜகிரி ஹாஜாமைதீன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமுஹம்மது அஸ்லம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நன்றி
ReplyDelete