07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 31, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 2

அன்புத்தோழமைகளுக்கு மனம்கனிந்த வணக்கம்_/\_வலைச்சரத்தில் மூன்றாவது நாளான இன்று  நான் கண்டுரசித்த வலைப்பூத் தோட்டத்தில் பூத்திருக்கும் மற்றும்சில மலர்களை இங்கேஅறிமுகப்படுத்துகிறேன்.  எனது வேண்டுகோளை ஏற்று இன்றும் விசு சார் வந்திருக்கார்.. வாங்க அவர் யாரை எப்படி அறிமுகப்படுத்தறார் பார்ப்போம்..:)



காயத்ரி : காலை வணக்கம் விசு சார்...

விசு       : காலை வணக்கம்மா...என்னம்மா விசயம்..?

காயத்ரி : இன்னிக்கும் வலைச்சரத்துக்கு உங்கள அழைக்கத்தான் சார் வந்தேன்..இன்னிக்கு மூன்றாவது நாள்.. 2வது நாள் அறிமுகம்.

விசு       : இன்னிக்குமா..?? !! நேற்றைய மயக்கமே தெளியளியேம்மா..அதுசரி எடுத்ததுமே குழப்பறியே..! மூன்றாவது நாள் ஆனா 2வது நாள்னு...என்னதாம்மா சொல்ல வர...?

காயத்ரி : இன்று வலைச்சரத்தில் எனக்கான 3வது நாள்.  ஆனா, பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் 2வது நாள். :)

விசு       : ஆண்டவா...விசுவுக்கு வந்த சோதனையப்பார்த்தியா..?

காயத்ரி : நீங்கதான் எல்லாரோட திறமையையும் சோதிப்பீங்க..உங்களப் போய் சோதிக்கமுடியுமா..? சரி வாங்க சார் அறிமுகப்படுத்தலாம்..ஏற்கனவே நேரம் ஆச்சு...வாசகர்கள் பொறுமையிழந்திடப்போறாங்க 2வது நாள்ளயே..

விசு       : ம்ம் சரிம்மா நடக்கறது நடக்கட்டும்..நீ இன்றைய பதிவர்களைப் பற்றி சொல்லு. முதல்ல யாரை அறிமுகப்படுத்தனும்..?

காயத்ரி : நம்ம கவிஞர்.தினேஷ்குமார்: சகோவைத்தான் சார்.  

விசு       : அப்படியாம்மா..நான் அறிமுகப்படுத்தும்போதே என் தலை சுத்தாது இல்ல..?

காயத்ரி : அப்படியெல்லாம் ஆகாது சார்..நீங்க சித்தர் பாடல்கள் எல்லாம் படிச்சு இருக்கீங்களா..?

விசு       : என்னம்மா சாதாரணமா கேட்கற..கேட்கும்போதே உள்ள என்னமோ இருக்கும்போல இருக்கே..உன்ன நம்பி வந்திருக்க கூடாதோன்னு நினைக்க வச்சிடுவ போல இருக்கேம்மா..

காயத்ரி : அட ஒரு சிக்கலும் இல்ல சார்..  உங்களுக்குப் புரியறமாதிரி சொல்லனும்னா, உங்க வசனங்கள் மாதிரிதான் கேட்டவுடனே ஒரு நிமிடம் பூமிலத்தான் இருக்கமான்னு நினைக்கவச்சு, திரும்ப திரும்ப யோசிக்க வச்சு விடை தெரிஞ்சு, தெளியறமாதிரி நம்ம தினேஷ் குமார் சகோவோட பதிவுகள் உள் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.  படிச்சு தெளிஞ்சிட்டா சுத்தல், பொறாம, கோபம் எதுவும் வராம வாழ்க்கையின் தத்துவம் அறிஞ்சுக்கிறமாதிரி இருக்கும். வேணா அவரோட தளத்தில உள்ள மற்ற பதிவுகளைப்பார்த்துட்டு வாங்க...உங்களுக்கேத் தெரியும்.

விசு       : இரும்மா படிச்சுட்டு வரேன்..

மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்களையும், சோதனைகளைகளையும் தனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டும்  கவிஞர்.தினேஷ்குமார்  கலியுகம் தளத்தில்  எங்கும் நிறைந்தவன் எங்கும்.......!  கவிதை மழை மற்றும் விவேகம். போன்று சுயம் அறிதல் பற்றிய பதிவுகளும் உண்டு.  மர்மக்கவிஞர்னு பட்டமே கொடுக்கும் அளவு சித்தரின் எழுத்துக்கள் போன்று அவரின் எழுத்துக்களை  ஆழ்ந்து படித்திடின் நம்மையறிய நமக்கு வழிகாட்டியாகவும் அமைந்திடும்.   கவிதை மட்டுமல்ல சமையலும் செய்வேன் என்கிறார் தினேஷ்.  
இதில் இவர் சமைத்தது கோவைக்காய் பொரியலா...??!! கவிதைப்பொரியலா...?? !! சாப்பிட்டு பார்ப்போம் வாங்க.  

காயத்ரி : என்ன சார் நான் சொன்னமாதிரிதான இருக்கு. இதுக்குப்போயி இப்படி யோசிச்சீங்களே..

விசு       : உண்மைதாம்மா., மிகவும் அற்புதமா இருக்கு.  இருந்தாலும், எங்கியோ இருக்கிறமாதிரித்தான் இருக்கு.  விடு கொஞ்சம் சமாளிச்சிடுவேன்.  கவிதையினால் விருந்து படைத்திருக்கும்  கவிஞர்.தினேஷ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

காயத்ரி : அடுத்து நம்ம தோழி எழில் அவரோட பதிவுகள் பாருங்க சார்.

எழில் அவர்களின் நிகழ்காலம் தளத்தில் சூழல் காப்போம்மாதம் ஒரு புத்தகம்  மற்றும் துளித்துளியாய் கவிதைகள் என கதம்பமாய் பகிர்ந்துள்ள இவர் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை மனிதம் இருக்கிறதா...? என்ற பதிவில்  நம்மைச்சுற்றி நடக்கும் கெட்ட விசயங்களைப் பற்றி மட்டும் பேசி பேசி மனிதம் மரணித்துவிட்டதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துவோர் மத்தியில்மனிதத்தை மனிதத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் பகிர்ந்திருக்கிறார்.  
// எங்கப்பாவா இருந்தா வாங்கியாற மாட்டமா போங்கய்யா என்றவாறு மூட்டையை இறக்கி வைத்துச் சென்றாள்... அவளும் நாலு வீட்டில் வேலை செய்துதான் சம்பாதிக்கிறாள் ... தனக்குத் தேவையானதை தியாகம் செய்ய மனம் வருகிறதே ...இந்த மனங்களை என்ன சொல்ல....// 
தனக்குக் கிடைக்கும் அரிசியையும் தானம் செய்யும் பணிப்பெண்ணின் உன்னத மனம் மணம் வீசுகிறது இவரது பதிவில்.  

விசு    : மனிதம் இருக்கிறதா..? என்ன அருமையான தலைப்பும்மா..இன்றைக்கு எல்லார்கிட்டயும் இருக்கவேண்டிய ஒன்னு இருக்கா இல்லியான்னு கேட்கவேண்டிய நிலைக்கு ஆளாயிட்டமோ..!!
இருத்தலும், இல்லாததும்
இருக்கு
இல்லை என்ற வார்த்தையில் இல்லை..
இருப்பதும், இல்லாததும்
இருப்பதை 
இருப்பதாக உணர்வதிலும்
இல்லாததை 
இல்லாததாக உணர்(த்து)வதிலும் உள்ளது..
இருத்தலும்
இல்லாதிருத்தலும்
இருத்தலாகவும் 
இல்லாததாகவும் 
இருந்துகொண்டேயிருக்கிறது மனதளவில்..!!
தோழி எழில் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

காயத்ரி : அட சார்... !! ஆமா சார்...நீங்க இங்கதான் இருக்கீங்க என்பதில் யாருக்கும் இருக்கீங்களா இல்லியானு சந்தேகம் வந்திடக்கூடாதுன்னு இந்த இருத்தல் இல்லாதிருத்தல் பதிவா..?

விசு      : நம்ம தினேசோட பதிவுகள்..எழிலோட மனிதம் இருக்கா என்ற கேள்வி எல்லாம் சேர்ந்து என்ன இப்படி போட வச்சிடுச்சும்மா.. சரி நான் கிளம்பட்டுமா..?

காயத்ரி : என்ன சார்  நேற்றுதான் ஒருத்தர மட்டும் அறிமுகப்படுத்திட்டு போயிட்டீங்க..இன்னிக்காச்சும் எல்லாரையும் அறிமுகப்படுத்திட்டு போகலாமே..?

விசு      : இல்லம்மா..வயசாயிட்டே வருதுல்ல..இதுக்கு மேல என்னால நிக்கமுடியலம்மா..அடுத்து நீ யாரை அறிமுகப்படுத்துவியோன்னு திக் திக்னு இருக்கு..

காயத்ரி : சரி சார்....  இதுவரை பொறுமையா இருந்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.

விசு        : ரொம்ப நன்றிம்மா...இன்று அறிமுகமாகும் அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள தெரிவிச்சுக்கறேன்..

காயத்ரி   : நன்றி சார்...பிரபலங்கள்னா அப்படி இப்படித்தாங்க இருக்கும். மற்றவர்களை நானே வழக்கம்போல அறிமுகப்படுத்தறேன்.. வாங்க மற்ற பதிவர்களையும் பார்ப்போம்.

அப்பாவி தங்கமணி தளத்தில் நகைச்சுவைசிறுகதைகவிதைதொடர்கதை என அசத்திக்கொண்டிருக்கும் தோழியின் மௌன ராகம்.. சிறுகதை பலவீடுகளில் இயல்பாக நடந்துவருவதை அற்புதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
//தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்குஅதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது//  நம்மோடு இருக்கும் சக மனிதத்தின் உணர்வுகளை மதித்து மனதிற்கு இதமளிக்கும் இன்சொல்லை பேசாமல் தவிர்த்துவிட்டு,  இறந்தபின்  உணர்ந்து என்ன பிரயோசனம்...இறப்பதற்கு முன் உணர்வுகளை மதிக்க கற்போம்.  தோழிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.  தங்களது தொடர்ந்த பதிவினால் அனைவருக்கும் ஏற்படும் அறிவுப்பசிக்கு அமுது படையுங்கள்.
****
சு.சங்கர் கணேஷ் அவர்களின் http://sankarganeshs.blogspot.in/ வலைப்பூவில் தன் கவித்திறனால் கவிதை மழை பொழியும் இவர் கவிதையோடு மட்டும் இல்லை பகவத் கீதையும் பாகம் பாகமாய் பகிர்ந்திருக்கிறார். செட்டிநாட்டு உணவுப்பழக்கங்களை கவிதையாய் வடித்து  படிப்பவர்களை செட்டிநாடு செல்லமாட்டோமா என ஒரு நொடி சிந்திக்கவைக்கிறார் தன்னுடைய 
பதிவில்...
//அரிசி சோறு தனியாக வெண்மையிலே
அரைச்ச புளிமிளகாய் புளியோதரை வேணுமா
அரிஞ்ச தேங்காய்பூவோடு தேங்காய்சாதம் வேணுமா
அள்ள அள்ளதூண்டும் பிரியாணி வேணுமா

இளங்குழம்பு வேணுமா பருப்புருண்டை குழம்பா
இஞ்சி மிளகாய் சேர்த்த புளிகுழம்பா
இளஞ்சூட்டில் வறுப்பட்ட கார கத்திரிக்காயா
இலையின் ஓரம்வைக்க வாழைக்காய் வறுவலா//
இத்தனையும் வேணுமான்னா கேட்டா வேண்டாம்னா சொல்லுவோம்..வாங்க போய் செட்டிநாட்டு சாப்பாடு சாப்பிட்டு வருவோம்.. உணவுகளையும்உணர்வுகளையும் அற்புதமாய்ப் பகிரும் சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அறிமுகமாகும் நண்பர்களுக்குஅனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது