07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 28, 2013

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி அம்பாளடியாள் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                            : 0008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                             : 0073
அறிமுகப் படுத்திய பதிவுகள்                                : 0087
பெற்ற மறுமொழிகள்                                                 : 0331
இவரது பதிவுகளைப் பார்வை இட்டவர்கள்  : 1215

இவர் முத்துகளின் அணிவகுப்பு என்ற பொதுத் தலைப்பில் பல்சுவை விருந்து, சமையல் கலை, புதுக் கவிதை என்ற உப தலைப்புகளில் பதிவுகள் எழுதி உள்ளார். 

அறிமுகப் படுத்துவதிலும் புதுமையாக,  கவிஞர்களை அறிமுகப்படுத்தும் போது கவிதையினால்  அறிமுகப் படுத்தி இருக்கிறார்.  பல்சுவை விருந்தில் ஆண்களைத்  தனியாகவும் பெண்களைத் தனியாகவும் வெவ்வேறு பதிவுகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

சகோதரி அம்பாளடியாளை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் காயத்ரி வைத்ய நாதன்.  இவர் டில்லியில் வசிக்கிறார். தமிழ்க் குடில் என்னும் அறக் கட்டளையில் அறங்காவலராக இருக்கிறார்.  தூரிகைச் சிதறல் என்னும் தளத்தினில் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார். 

இவர் கவிதை,  சிதறல்கள், கட்டுரை, கதை, உரையாடல் என்றூ  பல்வேறு தலைப்புக்ளில்  213 பதிவுகள் எழுதி இருக்கிறார்.  சூரிய கதிர் என்கிற இதழில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 

காயத்ரி வைத்ய நாதனை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக !என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரக் குழுவினர் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் அம்பாளடியாள்

நல்வாழ்த்துகள் காயத்ரி வைத்ய நாதன் 

நட்புடன் சீனா

25 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. மிக்க நன்றி சீனா ஐயா .இன்றும் பல முக்கியமான பதிவர்களை அறிமுகம் செய்துவைக்க ஆக்கங்கள் தயார் நிலையில் இருந்த போது அதை வெளியிட ப்ளொக்கர் இடமளிக்க வில்லை .அப்போது தான் உணர்ந்து கொண்டேன் அந்த நொடியில் இருந்து எனது ஆசிரியை பணி முடிந்ததென்று .மன்னிக்க வேண்டும் உறவுகளே இறுதிநாளான இன்று உங்களில் பலரையும் அறிமுகம் செய்ய எண்ணியும் முடியாமல் போய் விட்டது .மிக்க நன்றி உறவுகளே அனைவரினது பொன்னான கருத்துக்களுக்கும் ஒத்துளைபிற்க்கும் .

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழி காயத்திரி தங்களின் வலைச்சர ஆசிரியைப் பணி
    சிறப்புற !

    ReplyDelete
  4. இருவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு
    (6ம் நாள்)//

    இந்தப்பதிவு ஏனோ வெளியிடப்படாமல், எங்கோ காணாமல்ப்போய் விட்டது. ;(

    அதற்குள் இப்படி அநியாய்மாகக் கடையை மூடி விட்டீர்களே?

    ReplyDelete
  6. வருத்தம் Ambal adiyal அவர்களே...

    பல முக்கியமான தளங்களில் கருத்துரை இடுவதில் சீனா ஐயா மும்மரமாக இருப்பதால், "நட்புடன் சீனா" ஐயாவை மீற முடியாது... வாழ்த்துக்கள் பல...

    காயத்ரி வைத்யநாதன் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வணக்கம் அன்பின் சீனா ஐயா.._/\_

    ஆசிரியர் பணி நிமித்தம் காரணமாக தன் மாணவனை சிறிது நேரம் வகுப்பைக் கவனித்துக் கொள்ளும்படி பணித்துச் செல்லும்பொழுது தம்மை ஆசிரியராக எண்ணிக்கொள்ளும் மாணவியாய் உணர்கிறேன்.

    இன்றுஎம்மையும் வலைச்சரத்தில் பொறுப்பாசிரியராக அழைத்தமைக்கு நன்றி.

    ஒவ்வொருவாரமும் வலைச்சரத்தைப் பார்வையிடும் பொழுதெல்லாம் தொகுத்து வழங்கும் ஆசிரியர்களைக் கண்டு பிரமிப்பாகவே இருக்கும் எமக்கு. ஐயா எம்மை அழைத்தபொழுது நமக்கு இதுபோல் எல்லாம் தொகுத்து வழங்கத்தெரியுமா என்றே தோன்றினாலும், அனைவரும் நம் அன்புத்தோழமைகள்தானே குறையிருப்பின் சுட்டிக்காட்டப் போகிறீர்கள் அதன் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலேயே சம்மதித்தேன்.

    தோழி அம்பாளடியாள் தங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி. தங்களின் ஒருவார தொகுப்பு மிகவும் அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  8. //பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு
    (6ம் நாள்)//

    இந்தப்பதிவு ஏனோ வெளியிடப்படாமல், எங்கோ காணாமல்ப்போய் விட்டது. ;(

    அதற்குள் இப்படி அநியாய்மாகக் கடையை மூடி விட்டீர்களே?

    என் செய்வது ஐயா அருமையான முத்துக்களைத் தொகுத்து வெளியிட எனக்கொரு
    இரண்டு நிமிடம் அவகாசம் கிடைக்காமல் போக நான் தொகுத்த அந்த முத்துகளை
    மீண்டும் மனதிற்குள்ளேயே புதைக்க நேர்ந்து விட்டது :(
    நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  9. ஆறாவது முத்தையும் எதிர்பாத்தேன்...
    வாழ்த்துக்கள் அம்மா... மீண்டும் ஒருமுறை வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்... கலக்கலான வாரமாக கொண்டு சென்றதற்கு நன்றி.

    அன்பின் காயத்ரி அக்காவுக்கு வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்று கலக்கலான வாரமாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வருத்தம் Ambal adiyal அவர்களே...

    பல முக்கியமான தளங்களில் கருத்துரை இடுவதில் சீனா ஐயா மும்மரமாக இருப்பதால், "நட்புடன் சீனா" ஐயாவை மீற முடியாது... வாழ்த்துக்கள் பல...

    காயத்ரி வைத்யநாதன் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    மிக்க நன்றி சகோதரரே .இருப்பினும் உங்கள் தளத்தைப் பற்றியும்
    இன்று வெகு சிறப்பான கருத்திட்டு வெளிவர இருந்த ஆக்கம்
    பிரசுரிக்க முடியாமல் போனதும் துரதிஸ்டம் தான் .

    ReplyDelete
  11. ஆறாவது முத்தையும் எதிர்பாத்தேன்...
    வாழ்த்துக்கள் அம்மா... மீண்டும் ஒருமுறை வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்... கலக்கலான வாரமாக கொண்டு சென்றதற்கு நன்றி.


    புரிந்துணர்வோடு இட்ட கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா .

    ReplyDelete
  12. Ambal adiyal said...

    //என் செய்வது ஐயா அருமையான முத்துக்களைத் தொகுத்து வெளியிட எனக்கொரு இரண்டு நிமிடம் அவகாசம் கிடைக்காமல் போக நான் தொகுத்த அந்த முத்துகளை மீண்டும் மனதிற்குள்ளேயே புதைக்க நேர்ந்து விட்டது :(

    நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .//

    அடடா, தலை’மை’ ஆசிரியர் திரு. சீனா ஐயா அவர்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொண்டு விட்டாரா? இரண்டு நிமிட தாமத்தைக்கூட கூட அவர் அனுமதிக்க வில்லையா? ;(((((

    வருத்தமாகத்தான் உள்ளது.

    எனக்கு இது விஷயம் தெரிவித்திருந்தால், நான் அவரிடம் பேசி ஸ்பெஷலாக அனுமதி வாங்கிக்கொடுத்திருப்பேன்.

    எனக்காக அவர் நிச்சயம் உங்களுக்கு உத்வியிருப்பார்.

    சரி .... போகட்டும். மீண்டும் வலைச்சர் ஆசிரியராக வாருங்கள்.
    அப்போது தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இந்த வார ஆசிரியர் அம்பாளடியாளுக்கு பாராட்டுகள்......

    வரும் வார ஆசிரியர் எங்கள் தில்லியைச் சேர்ந்தவரா..... இதுவரை படித்ததில்லை.... இனி தொடர்ந்து படிக்கிறேன்....

    வரும் வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  14. வாழ்த்திற்கு நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.._/\_

    ReplyDelete
  15. நன்றி சகோ.திண்டுக்கல் தனபாலன். தங்களின் தொடர்ந்த ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.._/\_

    ReplyDelete
  16. பரிசை சே.குமார். நன்றி தம்பி..

    கலக்கலான வாரமா...?
    கலக்கமான வாரமானு நீங்கள்தான் சொல்லனும்..:)

    ReplyDelete
  17. வாழ்த்திற்கு நன்றி தோழர் வெங்கட் நாகராஜ்..உங்க டெல்லிதான்..:)

    ReplyDelete
  18. சிறப்பாக பணியாற்றிய அம்பாளடியாளுக்கு நல் வாழ்த்துக்கள் !இனிதே இனி பதவி ஏற்கும் சகோதரிக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அடடா, தலை’மை’ ஆசிரியர் திரு. சீனா ஐயா அவர்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொண்டு விட்டாரா? இரண்டு நிமிட தாமத்தைக்கூட கூட அவர் அனுமதிக்க வில்லையா? ;(((((

    அய்யய்யோ அது அப்படி அல்ல பொருள் .ப்ளொகர் என் காலதாமதத்தினால் எழுதிய ஆக்கத்தைப் பிரசுரிக்கும் கடைசி நிமிடத்தில் மறுத்து விட்டது என்றே கருதினேன் .இருப்பினும் நீங்கள்
    தங்களின் நல் மனத்தைக் கண்டு உறைந்தே போனேன் .மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா .//

    மிக்க நன்றி தோழி காயத்திரி தங்களது இனிமையான வாழ்த்திற்கு .

    ReplyDelete
  20. சிறப்புடன் பணியாற்றிய அம்பாளடியாள் அவர்களுக்கும் , புதிதாகப் பொறுப்பு ஏற்கும் சகோதரிக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அம்பாள் அடியாள் உங்களின் வருத்தம் நியாயமானது.

    நீங்கள் தொகுத்து வைத்திருக்கும் அறிமுகங்களை உங்கள் தளத்தில் போட்டு இங்கு இணைப்பு பின்னூட்டத்தில் கொடுத்துவிடுங்கள்.

    நாங்கள் அங்கு வந்து படிக்கிறோம்.

    வலைச்சரத்தில் எழுதுவது பல விதங்களில் நம்மை மேம்படுத்தும் - முக்கியமாக நேர மேலாண்மை!

    சீனா ஐயாவிடமிருந்து நிறைய கற்க வேண்டும்.

    ReplyDelete
  22. அரும்பணியாற்றி விடைபெறும் தோழி அம்பாளடியாளுக்கும் வரும் வாரம் தொடரவிருக்கும் தோழி கவிக்காயத்திரிக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. எம்மை வாழ்த்தி வரவேற்கும் அனைத்து தோழமைகளுக்கும் அன்புகனிந்த நன்றிகள்..:)

    ReplyDelete
  24. சிறப்பித்த பதிவருக்கும் சிறப்பிக்க போகும் பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது