ஃபேஸ்புக்… தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!
➦➠ by:
கூடல் பாலா
முகநூலின் தாக்கம் பதிவுலகத்தில் நன்றாகவே தெரிகிறது. முகநூல் 20-20 கிரிக்கெட் போன்றது. பதிவுலகம் டெஸ்ட் மேட்ச் போன்றது.
ஒரு எழுத்தாளனின் முழுத் திறமை பிளாக் எழுதுவதை வைத்துத்தான் கணிக்கமுடியும் என்பது எனது கணிப்பு. எப்படியாயினும் இன்று முகநூலும் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
முகநூலில் தவிர்க்கவேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை புரியாத புதிர் தளம் புரியும் வகையில் விளக்குகிறது.
அடுத்ததாக படைப்பாளி சமூக விழிப்புணர்வு வலைத்தளம் . சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை கட்டுரைகள் மூலமாகவும் கார்ட்டூன் மூலமாகவும் எடுத்துரைக்கிறார் தளத்தின் ஆசிரியர் பாலாஜி. இவர் தளத்தில் வந்துள்ள காலணியும் , காந்தி தேசமும் என்ற இடுகை என்னை கவர்ந்தது.
அடுத்ததாக நான் அறிமுகப் படுத்துவது கருப்பு ரோஜாக்கள். பல்வேறு பயனுள்ள இடுகைகளைக் கொண்டுள்ள இத்தளத்தில் சமீபத்திய இடுகையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்ற இடுகை பயனுள்ளதாக உள்ளது.
அடுத்ததாக அன்புடன் ஆனந்தி. ஒரு சிறந்த தமிழ் வலைப்பூ. எண்ணித்துணிக கருமம் என்னும் கருத்தை தூது போகாதே என்ற தனது அனுபவ பதிவின் மூலமாக எடுத்துரைக்கிறார்.
அடுத்தபடியாக வாய் விட்டு சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஏற்ற பதிவுகளை இடும் ஜோக்காளி தளம். தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
அடுத்ததாக தமிழ் அறிவு கதைகள் என்ற ஒரு அருமையான தளம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற அறிவைப் புகட்டும் கதைகளின் கருவூலம்.
அடுத்ததாக வரலாற்று சுவடுகள் தளம் . நமக்கு தெரியாத பல புதுப்புது விஷயங்களை நமக்கு திரட்டித் தருகிறது. தளத்தில் இடம்பெற்றுள்ள உலகின் முதல் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது தெரியுமா என்ற பதிவு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ள வைக்கிறது....
மீண்டும் நாளை புதிய அறிமுகங்களுடன் சந்திப்போம் ....
|
|
பயனுள்ள தளங்கள்
ReplyDeleteசில அறியாதவைகள் கூட
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
இரண்டைத் தவிர மற்றவை அறியாத தளங்கள் ...அறிமுகத்திற்கு நன்றி கூடல் பாலா அவர்களே!
ReplyDeleteஅறபுத அறிமுகங்கள்.
ReplyDeleteஃபேஸ்புக்கே தவிர்க்க வேண்டிய ஒன்றாகும் :)
ReplyDeleteஇரு தளங்கள் புதியவை... அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எழுதுற நானே சிந்திப்பதில்லை ,என் பதிவுகள் சிந்திக்க வைக்கிறது எனச்சொல்லி என்னை சிந்திக்கவைத்த கூடல் பாலா அவர்களே ,ஜோக்காளியை வலைச்சரத்தில் தொடுத்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅய்யா சீனா &இனியநண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி !
நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete. ♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
மிகவும் பயனுளள்ள அறிமுகம்
ReplyDeleteசில தளங்கள் எனக்குப் புதியவை.... வாசிக்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
வலைச்சரத்திற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தளங்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவரலாற்றுப்பதிவுகள் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள் அனைவரையும் தொடர ஆரம்பிக்கிறேன்... வரலாற்றுப் பதிவுகள் இப்போதெல்லாம் பதிவு போடுவதில்லையோ?
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கூடல் பாலா அவர்களே
ReplyDelete