07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 24, 2013

புதுக் கவிதை முத்துக்களின் அணிவகுப்பு இ (2 ம் நாள் )

உள்ளத்தைத் தூண்டில் போட்டு
உருகத்தான் செய்கின்றார்கள்
வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும்
வலைத்தள முத்துக்கள் இவைகள் ...!!

(1)
தெள்ளத் தெளிவாய் பொருளுரைத்துத்
தென்பாங்கு பாடும் கவிஞன் இவன்
அள்ளிக் கொடுக்கும் கவிதை வரிகளிலே
அற்புதமான தமிழ் சொற்களைக் காண்பீர் .....

வசந்த மண்டபம் (மகேந்திரன் )
http://ilavenirkaalam.blogspot.ch/
குண்டு மல்லித் தோட்டத்திலே 
குவிந்திர்க்கும் மல்லிகையே -உன் 
கூட்டாளி நானிருக்கேன் 
குவளைமலரே  கண்ணுறங்கு 
http://ilavenirkaalam.blogspot.ch/2012/08/blog-post_10.html

(2)
எதுகை மோனை தனைக்கொண்டு
இதமாய் கவிதை வடிப்பவர் தன்
மனதில் பட்ட கருத்ததனை உரைத்து
நன் மருந்தும் இங்கே சொல்கின்றார் !.....

தீதும் நன்றும் பிறர் தர வாரா (S.ரமணி )
http://yaathoramani.blogspot.ch/
பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

http://yaathoramani.blogspot.ch/2011/12/blog-post_27.html#comment-form

(3)
கவிதையோடு நற் கருத்தை என்றும்
கலந்து கொடுக்கும் அன்பர் இவர்
எளிமையான ஆக்கத் திறனால்
என்றும் மனத்தைக் கவர்கின்றார் !!

கவிதை வீதி (சௌந்தர் )
http://kavithaiveedhi.blogspot.com/
கண்ணீர் வடிக்கும் வேப்ப மரம் ! ஏன் இந்த அவலம் ?

சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும் 

ரசித்து வளர்ந்துமரம்...

மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!

http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_3.html

(4)
பார்ப்போர் உள்ளம் மகிழ்ந்திட நற்
பாக்கள் வடிக்கும் கவிஞர் இவர்
ஆக்கத் திறனைக் கண்டுடுவீர்
ஆஹா மனமது மகிழ்ந்திடவே .....

கவியாழி கண்ணதாசன் 
http://kaviyazhi.blogspot.ch/

எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள் 

செடியிலே வலை பின்னி சிங்கராமாய்!
செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்!
நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்!
நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்!

எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள்
எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை!
எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான
ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்!
http://kaviyazhi.blogspot.ch/2012/09/blog-post_29.html#.Ue71X404GSo

(5)
சொல்வதற்கு வார்த்தையின்றிச்
சொக்கி நிக்குது என் மனது ...........
தன்னகத்தே பல கவித் திறனைத்
தாங்கி நிற்கும் ஈழத்துக் கவிதாயினி இவள் !!.....

வானம் வெளித்த பின்னும் 
http://kuzhanthainila.blogspot.ch/
சேமித்த கணக்கினில் 
ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !

என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !
http://kuzhanthainila.blogspot.ch/2009/10/blog-post_22.html


(6)
புதிவர் எனினும் புனைந்திடும் கவியது
அழகுறப் புனைகிறார் அனைவரும் மகிழ்வுற
இளையநிலா வலம் வரும் வீதியில் 
எனதுளம் கவர்ந்த பதிவு இதோ .....!!

இளையநிலா (இளமதி )
http://ilayanila16.blogspot.ch/
நிழலாக நினைவுகளாக!...

               கண்மூடிக் காணுகின்றேன் கனவல்ல மனஓவியங்கள்
               விண்காண வளர்ந்திடுதே விரட்டியெனை மிரட்டிடுதே
               பண்பாடித் தமிழ்வளர்த்து பலகதைகள் நான்பயின்ற
               மண்வாடி நிற்கிறதே மனதை துயர்வருத்திடவே...

               சின்னவளாய் நானும் சிரித்திருந்த காலமதில்
               இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
               மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே
               என்னசொல்லி ஏதுபயன் இழந்தவைகள் மீண்டிடுமோ...
http://ilayanila16.blogspot.ch/2013/06/blog-post_27.html#comment-form

(7)
தென்றலுக்கே தூது விடும்
தித்திக்கும் கவியழகு
மன மன்றம் வந்து நின்றாடுதே
மகிழ்ச்சிதனைத் தந்திடவே ..!!

தென்றல்  (சசி கலா )
http://veesuthendral.blogspot.ch/
சூரிய சந்திரனாய்
உனை நினைத்து
தினம்தினம் எதிர்பார்த்தது
எத்தனை பெரிய பிசகு.

நீ குறிஞ்சி மலர் என்பதை
எப்போது உணரப்போகிறது மனம்
காத்து தவித்து கண்ணீர்விடுத்து
அங்காலயத்துப்போகும் மனதிடம்
எப்படி சொல்லிப் புரிய வைப்பேன்.

(8)
இரவின் புன்னகியில் மலர்ந்த அழகிய கவிதை வரிகள் இவைகள் !!......
இரவின் புன்னகை (சி .வெற்றிவேல் சாளையக்குறிச்சி )
இன்று எனக்கு தீபாவளி தானா?
காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...

வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...

கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...

(9)
கடலினில் சமுத்திரத்தைக் கலந்துவைத்த மன மகிழ்வு 
எனக்கிது பெருமையென்றே எடுத்துரைப்பேன் 
அரிய நற் சொற் கட்டு அகம் மகிழ வைத்ததிங்கே 
புதியவள் கவிதை வரியிதனைப் புகழ்ந்துரைக்க வார்த்தை இல்லை ...!!!!

சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...

சமுத்ரா 
இதோ-
இன்னொரு கவிதைப் புத்தகத்தை 
கிழித்துப் 
போட்டுவிட்டான் 
எமன்!
தமிழ் அன்னைக்கு இப்போது ஒரு
தலையாய பிரச்சினை
வாடகைக்கு வேறு வீடு தேடுவது!
வாலியின் நாக்கு தான் வீழ்ந்து விட்டதே!

(10)
வண்ணக் கவிதை வடித்தே மனதை 
வசப்படுத்திச் செல்கிறாள் இவள் 
எண்ணம் முழுதும் பூத்திருக்கும் 
இனிய கவிதையைப் பாருங்கள் ....!!!!

கீதமஞ்சரி

                                                    வெறுமையின் சில துளிகள் 
 
ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!
கால நேரம் இடம் கொடுத்தால் அடுத்த தொடரும் இன்றே தொடரும் என்று 
மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் அன்பு நெஞ்சங்களே .
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!!!!

55 comments:

  1. தாலாட்டும் கவிதைகளின் சொந்தக்காரர்கள் இவர்கள், கவிதையின் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. சிறந்த பதிவர்களுடன் என்னையும் இணைத்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. சிறப்பான வரிகளுடன் அறிமுகம் செய்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரி...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அத்தனை பேரும் முத்தான அறிமுகங்கள்.. நம் வாசிப்பில் இருப்பவர்கள்.. வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. சிறப்பான கவிஞர்கள். நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  6. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம்
    இன்றும் சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும்
    வலைத்தள முத்துக்கள் காட்சிப்படுத்தியதற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  9. அத்தனையும் நல்ல தளங்கள்... ஒன்றிரண்டு தவிர மற்றவை தொடர்ந்து வாசிக்கும் தளங்கள். அந்த ஒன்றிரண்டையும் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.....

    த.ம. 5

    ReplyDelete
  10. கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான கவிஞர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அக்கா.

    ReplyDelete

  11. அறிமுகப் படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. சிலர் நான் செல்லும் தளங்கள். சில புதியவை சென்று பார்க்கிறேன். நன்றிகள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  13. அட எனக்குத் தெரிந்த கவிஞர்கள் பலர்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அன்புத் தோழி!..

    முத்துகள் கடலில் மூழ்கி எடுத்து
    சொத்துகள் இவையெம் சொந்தம் என்று
    சத்தெனத் தக்கோர் சான்றோர் நடுவில்
    வித்தென விளித்தாய் எனையும் நன்றி!

    என்னுடன் இங்கு அறிமுகமான அருமையான கவிஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    தகவலைத் தவறாது இளையநிலாவில் வந்துரைத்த இனிய சகோதரர் தனபாலனுக்கும் அன்புடன் நன்றி!

    ReplyDelete
  15. எமை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் இங்கு வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்!!!

    ReplyDelete
  16. இன்றைய அறிமுகங்களில் பலரையும் படித்து வருகிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. வணக்கம் தோழி, அடியேனையும் இங்கு குறிப்பிட்டு, பாராட்டியமைக்கு மிக்க நன்றி... தொடர்ந்து சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பதற்கு பாராட்டுகள்... த ம:8

    ReplyDelete
  18. பெருங்கவிஞர்களோடு நானுமா...மகிழ்ச்சி தோழி.உங்கள் இந்தவாரப்பணி இன்னும் சிறப்போடு தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
  19. வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும் வலைத்தள முத்துக்களைக் கோர்த்து சரமாக்கிக் காட்சிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. சிறந்த கவிஞர்களின் சிறந்த தளங்கள்! அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  21. அறிமுகங்கள் யாவரும் நான் ரசிப்பவர்கள்.

    ReplyDelete
  22. நல்ல முத்துகளால் சரம் மின்னுகிறது.
    வாழ்த்துக்கள் தோழி.
    கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. முத்துக்களின் வரிசையில் தென்றலையும் கண்டு மகிழ்ந்தேன் தோழி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். சக நண்பர்களுக்கும் சகோதர உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
    அழகான கவிதை வரிகளில் அவரவரின் அறிமுகம் சிறப்பு தோழி.

    ReplyDelete
  24. கவிதை வரிகள் கொண்டு இங்கு நல்முத்துக்களின்
    சிறு துளிகளைப் பகிர்ந்த விதம் மனதைக் கவர்ந்தது.
    -அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

    ReplyDelete
  25. கவிதை முத்துக்களை அழகாய் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  26. கவிதையில் கரைதேர்ந்தோர் அறிமுகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடரட்டும் பணி.

    ReplyDelete
  27. குறிப்பிட்டதற்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  28. கவிதை முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  30. மிக்க நன்றி ரமணி ஐயா ...

    ReplyDelete
  31. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  32. மிக்க நன்றி சகோ ரிஷபன் தாங்களும் இதில் ஒருவரே .வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ .

    ReplyDelete
  33. மிக்க நன்றி சகோ .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  34. மிக்க நன்றி சகோ (கவியாழி )வருகைக்கு.

    ReplyDelete
  35. மிக்க நன்றி சகோ (ரூபன் )வருகைக்கு வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  36. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  37. மிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

    ReplyDelete
  38. மிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

    ReplyDelete
  39. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  40. மிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நல் கருத்திற்கும் .

    ReplyDelete
  41. மிக்க நன்றி அம்மா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  42. மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  43. மிக்க நன்றி தோழி இளமதி .

    ReplyDelete
  44. மிக்க நன்றி அம்மா . வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  45. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

    ReplyDelete
  46. மிக்க நன்றி தோழி ஹேமா வருகைக்கும் இனிய நல்
    வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  47. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  48. மிக்க நன்றி தோழி அருணா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  49. மிக்க நன்றி தோழி சசி கலா .

    ReplyDelete
  50. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் ..

    ReplyDelete
  51. மிக்க நன்றி தோழி அகிலா வருகைக்கும் பாராட்டிற்கும் ..

    ReplyDelete
  52. மிக்க நன்றி சகோ (தனி மரம் )வருகைக்கும் பாராட்டிற்கும் ..

    ReplyDelete
  53. மிக்க நன்றி தோழி மாதேவி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது