07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 1, 2014

வலைச்சரத்திற்கு ஒரு திருஷ்டி கழிப்பு


வலைச்சரப் பதிவுகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. திரு.சீனா ஐயா அவர்கள் இதை கனகச்சிதமாக உருவாக்கி எங்கும் தடையில்லாமல் ஆற்றின் நீரோட்டம் போல் ஓடுமாறு செய்திருக்கிறார்.

இப்படியே போய்க்கொண்டு இருந்தால் திருஷ்டி விழுந்து விடும் இல்லையா? அந்த திருஷ்டி விழாமலிருக்க என் ஆசிரியப் பொறுப்பு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

இன்று என்னுடைய அறிமுகப்பதிவு காலையிலேயே வந்திருக்கவேண்டும். அடுத்ததாக சில மணி நேரம் கழித்து என் முதல் பதிவு வந்திருக்கவேண்டும். இதுதான் வலைச்சரத்தின் வழிமுறை. ஆனால் நாம்தான் எப்போதும் எல்லோரும் போகும் வழியை விட்டு விலகி, தனி வழியில் போவதுதானே வழக்கம். ரஜனிகாந்த் ஏதோ ஒரு படத்தில் "என் வழியே தனி வழி" என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். நானும் அந்த வர்க்கம்தான்.

வலைச்சர ஆசிரியராக நியமித்தவருக்கு வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை இரவுக்குள் வலைச்சர ஆசிரியர் குழுவிடமிருந்து ஒரு அழைப்பு மின்னஞ்சலில் வரும். அதில் Accept Invitation என்று ஒரு சிவப்பு பின்னணியில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் இன்னொரு பக்கம் திறக்கும். அதிலும் இதே மாதிரி ஒரு பட்டன் இருக்கும். அதையும் அழுத்தினால் உடனே உங்கள் பிளாக் டேஷ்போர்டில் வலைச்சரப் பதிவு தெரியும்.

நாம் வழக்கமாக பதிவு போடுவது போலவேதான் வலைச்சர பதிவுகளையும் போட ஆரம்பித்து விடலாம். சிறு பிள்ளை விளையாட்டு போலத்தான். இந்த முன் வேலைகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடும்.

ஆனால் உங்களுடைய நல்ல காலத்தினால் எனக்கு வந்த மின்அஞ்சலில் இந்த பட்டன் வேலை செய்ய மறுத்து விட்டது. யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். என் சந்தேகம் எல்லாம் போனவாரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த திருமதி மஞ்சுபாஷிணி பேரில்தான். தனக்குப் பிறகு ஒரு பிரபல பதிவர் (நான்தான்)ஆசிரியராகப் பொறுப்பேற்று தான் பெற்ற புகழைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறாரே என்ற நல்ல எண்ணம்தான் அவரை இப்படிச் செய்ய தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

நான் திங்கட்கிழமை முழுவதும் சந்தோஷமாக இருந்தேன். ஆஹா, நம்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இனி ஜாலிதான் என்று இருந்தேன். அந்த எண்ணத்திற்கு "தமிழ்வாசி பிரகாஷ்" அவர்கள் ஆப்பு வைத்து விட்டார்கள். திங்கட்கிழமை மாலை என்னுடன் தொலை, இல்லை இல்லை தொல்லை பேசியில்  பேசியவர் இதோ மறுபடியும் அழைப்பு அனுப்புகிறேன் என்று சொல்லி இரண்டு நிமிடத்தில் மறு அழைப்பு அனுப்பிவிட்டார்.

அதில் உள்ள பட்டனைத்  தொட்ட உடனே வேலை செய்தது. அடுத்த நிமிடம் என்னுடைய டேஷ்போர்டில் வலைச்சரம் தெரிய ஆரம்பித்தது. இது உங்களுடைய துரதிர்ஷ்டமே. ஒரு வாரம் என்னுடைய அறிமுகப் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று உங்கள் தலையில் எழுதியிருந்தால் அது விட்டுப் போகுமா?

ஆகவே இப்படி ஒரு திருஷ்டி பரிகாரம் நடந்து, இந்த வார வலைச்சர பதிவுகள் லேட்டாக வருவதற்கு காரணமாகி விட்டது. என் அறிமுகப் பதிவை திங்கள் மாலை போட்டு விட்டேன். திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும். எப்படியும் ஏழு நாட்களுக்குப் போடவேண்டிய ஏழு பதிவுகளையும் உங்கள் தலையில் கட்டியே தீருவேன்.

அன்பர்கள் பொறுமை காக்கவேண்டும்.

34 comments:

 1. தொழில்நுட்பக் கோளாறு பற்றிக் கவலையில்லை. பொறுமை காக்கிறோம். பதிவைப் பொறுமையாக இடுங்கள்.

  ReplyDelete
 2. அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

  Dr. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் கூறியது போல பதிவினை பொறுமையாக வழங்குங்கள்..

  ஓட்டைப் பானையானாலும் கொழுக்கட்டை வேண்டும் என்பார்கள்..
  அதைப் போல தங்களது பதிவினுக்காக காத்திருக்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் கொழுக்கட்டையாவது ருசியாக இருக்கவேண்டும் அல்லவா?

   Delete
 3. அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான். செவ்வாய் மட்டும் இரண்டு பதிவுகள் வரும். பர்வாய் இல்லை.

  சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி, சீனா ஐயா.

   Delete
  2. "சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

   ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!

   Delete
  3. "சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

   இந்த வரிகள் முதலில் என் மனதில் சரியாகப் பதிவாகவில்லை. இந்த அழைப்பு உண்மையாகவா? இந்த வார வலைச்சரப் பதிவுகள் முடிவடைந்த பிறகும் உங்கள் எண்ணம் இதுவாகவே இருந்தால் உறுதி செய்யவும். நான் என்றும் உங்கள் அன்பிற்குக் கட்டுப்பட்டவன்.

   அன்புடன், பழனி.கந்தசாமி.

   Delete
  4. //தமிழன்பன்Tue Dec 02, 03:39:00 AM
   "சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

   ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!//

   தமிழன்பனின் பின்னூட்டத்திற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது.

   தமிழன்பன், என் மூளை நிஜமாகவே துருப்பிடித்துத்தான் போய்விட்டது. இப்படித்தான் செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான முடிவுகள் எடுத்து விடுகிறோம். இதற்கு திரு. சீனா என்ன செய்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

   Delete
  5. புரிந்துகொண்டமைக்கு நன்றி

   Delete
  6. தாமதமாகப் புரிந்து கொண்டேன் என்பதில் வருத்தப்படுகிறேன்.

   Delete
 4. லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுப்பீர்கள் ஐயா,

  ReplyDelete
  Replies
  1. அதை நீங்கள்தான் சொல்லவேண்டும் கில்லர்ஜி.

   Delete
 5. ஓஓஹோ தாமதத்திற்கு அதுதான் காரணமோ?

  ..............

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி, நிஜாமுதீன்.

   Delete
 6. IT IS NOT NECESSARY TO GIVE ONLY 7 POSTS IN 7 DAYS. YOU MAY GIVE EVEN 70 POSTS AT 10 POSTS PER DAY. ALL THE BEST, SIR. CONGRATULATIONS.

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்கிறேன், வைகோ.

   Delete
 7. நாட்கள் முன்னப் பின்ன இருந்தாலும் தாங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பதிவுகளை வெளியிடுங்கள் ஐயா... வாசிக்கக் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. ஆகட்டும், குமார். தங்கள் அன்பிற்கு நன்றி.

   Delete
 8. மாணவர்கள் முழு வருகை தந்திருந்தும், ஆசிரியரும் அவர் பணியை செய்ய வந்திருந்தும் பள்ளிக்கூடம் நடை பெறாததன் காரணத்தை சற்று தாமதமாக துவங்கியதன் காரணத்தை இதைவிட அழகுற திரைக் கதை செய்து யாரால் அய்யா வழங்க முடியும். வலைச்சரம் ஆசிரியர் தம் வகுப்பை துவங்கி விட்டார். பாடம் சூப்பர் ஹிட்! "பாடத்தின் பெயர் பட்டன் படுத்திய பாடு (சிகப்பு பட்டன்).
  நன்றி அய்யா!
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி புதுவை வேலு..
   "பட்டன் படுத்திய பாடு" அருமையான தலைப்பு. இது எனக்கு முன்பே தோன்றாமல் போயிற்றே. இருந்தாலும் இந்த தலைப்பை விடப் போவதில்லை. இந்த தலைப்பில் ஒரு பதிவு கூடிய சீக்கிரத்தில் போட்டு விடுகிறேன்.

   Delete
 9. உங்கள் பாணியே தனி தான் ஐயா...

  ReplyDelete
 10. நீங்கள் நகைச்சுவையாக எழுத வேண்டும் என்பதற்காகவே யாரோ ‘சூன்யம்’ வைத்திருக்கிறார்கள்.அவர்கள் வாழ்க!

  ReplyDelete
 11. தாமதமானால் என்ன? தரமான பதிவுகளை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்...!

  ReplyDelete
 12. திருஷ்டி தான் சரியாகிவிட்டதே... இனி கவலையில்லை. அசத்துங்கள் ஐயா.

  ReplyDelete
 13. இதெல்லாம் ச்சும்மா....
  இனிமே தான் மெயின் பிக்ச்சரே???!!!!!
  தொடருங்கள்.. ஐயா

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 15. வாழ்த்துகள் ஐயா.... தொடருங்கள்.

  ReplyDelete
 16. அன்பின் கந்த சாமி ஐயா

  நன்றாகச் செல்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 17. திருஷ்டி எல்லாம் ஒன்னும் இல்ல ஐயா.. இதெல்லாம் சகஜமப்பா :)

  இதுக்கு போய் டென்ஷன் ஆகலாமா ஐயா?

  இந்த மஞ்சு புள்ள பாவம்.. மஞ்சு புள்ளைய போய் சொல்லலாமா? :)

  சரி சரி இதுக்கெல்லாம் நேர்ல வந்து நிறைய போட்டோ எடுத்து போட்டுடறேன் இருங்க :)

  ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சீனா அண்ணா வாழ்க அடுத்த ஏழு நாட்களும் கூட நம்ம பழனி கந்தசாமி ஐயா தான் அசத்தப்போகிறாரா :) ஜாலி .... :)

  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள மஞ்சுவிற்கு,

   தேதிகளில் ஏதோ குளறுபடி இருக்கிறது. என்னுடைய பதிவைப் (http://swamysmusings.blogspot.com/2014/12/blog-post_5.html) பார்க்கவும்.

   நான் சீனாவின் பின்னூட்டத்தைப் பார்த்து அடுத்த மாதம்தானே என்று இருந்தேன். பிறகு பார்த்ததில்தான் சீனா தேதியில் குளறுபடி பண்ணியிருப்பதைக் கண்டேன்.

   எனக்கு இப்போது என்ன செய்வது, யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியவில்லை.

   நான் போட்ட பதிவை வலைச்சர ஆசிரியர் குழு பார்த்ததாகத் தெரியவில்லை.

   இந்த நிமிடத்தில் என்னுடைய புரிதல் நான் 8-1-2014 ல் இருந்து ஆசிரியராக ஒரு வாரம் இருக்கவேண்டும். தேதியை சரியாக கவனித்துக்கொள்ளுங்கள். 8-1-2014. நான் எங்கு போய் என் மண்டையை முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

   தவறுகள் நடக்கலாம். ஆனால் அதை யாராவது சுட்டிக்காட்டினால் திருத்தவேண்டாமோ?


   நான் இந்த வார ஆசிரியர் பணியாற்றியதில் அவசர கதியில்தான் பதிவுகளை இட்டேன். அதில் எனக்கு திருப்தி இல்லை. எனக்கு திட்டமிட அவகாசம் தேவை.

   அன்புள்ள,

   பழனி. கந்தசாமி.


   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது