சில பிரபல பதிவர்கள்
➦➠ by:
வலைச்சரப் பதிவுகள்
வலைச்சரம் இரண்டாம் நாள் 2-12-2014 செவ்வாய்க்கிழமை
எனக்கு தற்பெருமை அடித்துக்கொள்ளப் பிடிக்காது. அதனால் என் தளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருந்தாலும் என் போட்டோ இருக்கட்டுமே என்று போட்டிருக்கிறேன்.
இன்று என் மனதைக் கவர்ந்த சில பிரபல பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்கள்தான்
ஏற்கெனவே பிரபலமானவர்களாயிற்றே, அவர்களுக்கு அறிமுகம் எதற்கு என்று சிலர் நினைக்கலாம்.
பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டிய காலம் இது.
பிரபல பதிவர்களாயிற்றே என்று அவர்களை யாரும் கண்டு கொள்ளாமல்
விட்டால் அவர்களுக்கு உற்சாகம் குறைந்து விடும். பிறகு நஷ்டம் நமக்குத்தான்.
ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே" என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.
ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே" என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.
1. திருமதி இராஜராஜேஸ்வரி
அவர்கள்.
தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும்
மறக்கலாம். ஆனால் இவர்களின் பதிவு தவறாது.
தளத்தின் பெயர் : மணிராஜ்”
லிங்க்: http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_30.html
இவருடைய தளத்தின் அடையாளம்
இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இவர் பதிவுகள் முழுவதும் ஆன்மீகப் பதிவுகளே. அநேகமாக இவர்
தொடாத ஆன்மீக விஷயங்களும் எழுதாத கோவில்களும் இருக்காது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் பல முழுமையான
விவரங்களும் நிறைய புகைப் படங்களும் இருக்கும். இந்தப் பதிவுகளைத் தயார் பண்ண ஒரு ஆபீசே நடத்துகிறார்
என்று நம்புகிறேன்.
இது வரை ஆயிரத்தி ஐந்நூறு பதிவுகள் போட்டிருக்கிறார். இந்த அளவு
பதிவுகள் போட்டவர்களை நான் பார்க்கவில்லை.
இன்னொரு விஷயம். இவர் பதிவுகளிலிருந்து ஒரு துரும்பைக்கூட
யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அவ்வளவு டைட் செக்யூரிடி.
வாழ்க இவர் தொண்டு.
2. திரு ஜோதிஜி அவர்கள்
ராமநாதபுரத்திலிருந்து திருப்பூருக்கு வந்தவர். திருப்பூரின்
பின்னலாடைத் தொழிலை முழுமையாக அறிந்தவர். நல்ல சிந்தனாவாதி.
இவருடைய தளம்:
இவருடைய மேலாண்மைத் தத்துவங்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றவை.
திருப்பூரின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி பதிவுகளில் எழுதி வருகிறார். இவருடைய எழுத்தார்வம்
மெச்சத்தகுந்தது.
பல புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார். அதில் “டாலர் நகரம்”
என்ற புத்தகம் மிகவும் அருமையானது. இவருடைய பதிவுகளை தொழில் நடத்தும் ஒவ்வொரும் தவறாது
படிக்கவேண்டும்.
3. திரு
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

தளத்தின் பெயர்: அவருடைய பெயரே
மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமானவர். இவர் பிரபலமாகக் காரணம் இவரது அசாத்திய உழைப்பு.
ஒரு சமயத்தில் இவருடைய பின்னூட்டங்கள் இல்லாத தமிழ்ப் பதிவுகளே இல்லை என்ற நிலை இருந்தது. வேலைப் பளு காரணமாக இதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்.
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
இவருடைய படம் கிடைக்காததினால் அவருடைய பிளாக்கிலிருந்து ஒரு இனிப்பான படத்தைப் போட்டிருக்கிறேன். இந்த இனிப்பைப் போலவே அவரும் இனிமையானவரே.
தளத்தின் பெயர்: “எங்கள் Blog”
லிங்க்: http://engalblog.blogspot.in/
இவர் ஒரு குழுவாக இந்தத் தளத்தை நடத்தினாலும் இவரே அதிகம்
பொறுப்புகளைச் சுமக்கிறார் என்று நினைக்கிறேன்.
தன் போட்டோ எதையும் தளத்தில் போடவில்லை. வாழ்க்கைக்கு பயனுள்ள
செய்திகளைப் பிரசுரிக்கிறார்.
5.
திரு ரமணி அவர்கள்

லிங்க்: http://yaathoramani.blogspot.in/
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற தலைப்பில் சமூகப் பிரச்சினைகளை
அலசி வருகிறார். பயனுள்ள பதிவுகள். கட்டாயம் படிக்கவேண்டியவை.
6.
திரு வே.நடனசபாபதி அவர்கள்

நினைத்துப்பார்க்கிறேன்
என்ற பிளாக்கை நடத்திக்கொண்டு வருகிறார்.
லிங்க்: http://puthur-vns.blogspot.com/
விவசாயப்படிப்பு
படித்துவிட்டு பேங்கில் சேர்ந்து பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தன்னுடைய தளத்தில் பேங்கிங்க் சம்பந்தப்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.
இவருக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட சொந்தம் இருக்கிறது. இவருடைய மூத்த சகோதரரும் நானும் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள்.
அவர் ஒரு ஸ்லைடு புரொஜக்டர் வைத்திருந்தார். அதில் ஒரு ரிப்பேர். நான் அதை சரி செய்து கொடுத்தேன். அது இப்போது அவர்கள் குடும்பத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. (நான்
ஒரு சகல கலா வல்லவன் என்பதை எப்படி நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறேன், பாருங்கள்)
7.
திரு தமிழ் இளங்கோ அவர்கள்

"எனது எண்ணங்கள்" என்ற தளத்தில் தனது கருத்துகளைப் பதிகிறார்.
லிங்க்: http://tthamizhelango.blogspot.com/
இவரது பதிவுகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இவரது பதிவுகளில் வரும் போட்டோக்கள் தனித்தன்மை வாய்ந்தவை.
8.
திரு வெங்கட்நாகராஜ் அவர்கள்
பதிவுலகத்தின் இளம் தாரகை இவர் என்று சொன்னால் மிகையாகாது. தன் பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் எழுதாத சப்ஜெக்ட்டே இல்லை. டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்.
லிங்க்:http://venkatnagaraj.blogspot.com/
இவர்தான் நான் முதல்முதலில் நேரில் சந்தித்த பதிவர். நான்
என் குடும்பத்துடன் “சார்தாம்” யாத்திரை போவதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைப்
படித்து இவர் என்னுடன் தொடர்பு கொண்டு என் பயண நேரங்களைத் தெரிந்து கொண்டு பழைய டில்லி
ரயில் நிலையத்தில் சந்தித்தார். அதன் பிறகு பல முறை சந்தித்திருக்கிறோம்.
இவருடைய துணைவியார் பிறந்து வளர்ந்த ஊர் கோவை என்பதால் கொஞ்சம்
ஒட்டுதல் அதிகம். தன் துணைவியார் பெயரிலும் தன் மகள் பெயரிலும் பதிவுகள் ஆரம்பித்து
அவர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு எனது பாராட்டுகள்.
9.
திரு என். கணேசன் அவர்கள்
தளத்தின் பெயர்: என்.கணேசன்
லிங்க்: http://enganeshan.blogspot.in/
தன்னுடைய பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர்
ஒரு பேங்க் ஆபீசர். பேங்க்குக்காரர்களுக்கு கணக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு
இவரைப் பற்றித் தெரிந்தால் ஆச்சரியப்படுவார்கள்.
நல்ல கதாசிரியர். தன் பதிவுகளில் தொடர் பதிவுகளாக பல க்ரைம்
நாவல்களை எழுதி வருகிறார். அவை பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை விறுவிறுப்புக்கு
இணையானவை.
சமீபத்தில் அத்தகைய தொடர் ஒன்றை நிறைவு செய்து அதை புத்தகமாகவும்
வெளியிட்டிருக்கிறார். பரம(ன்) ரகசியம் என்று அதற்குப் பெயர். அந்த தொடர் பிளாக்கில் வெளிவரும்போது
(வியாழன் மாலை 6 மணிக்கு வெளி வரும்) காத்திருந்து அதைப் படித்தேன். மேலும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்
ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.
ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.
இவர் தற்போது கோவையில் வசிக்கிறார் என்பது எனக்குப் பெருமை.
10.
திரு பகவான்ஜி அவர்கள்

அவர்களின் தளம்.


தமிழர்களின் நகைச்சுவை உணர்வுகளுக்கு
தீனி போடுவதென்பது எளிமையான காரியம் அன்று. அதில் திரு பகவான்ஜி வெற்றி பெற்றுள்ளார்
என்பதை அவர் தளத்தின் தமிழ்மணம் ரேங்க் காட்டுகிறது.
எனக்கு இவர் அறிமுகமில்லாவிடினும் இவர் பதிவுகளின் ரசிகர்களில்
நானும் ஒருவன். ஆபாசமில்லாமல் நகைச்சுவையைத் தருவது கடினமான செயல். அதை இவர் அனாயாசமாக
செய்து கொண்டு வருகிறார். பாராட்டுகள்.
தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.
தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.
11.
திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

வலைச்சர ஆசிரியர் குழுவில் சேவை செய்யும் இவர் அமைதியாகப்
பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் வல்லுநர். வலைச்சரத்தில்
இவர் பங்கு பாராட்டிற்குரியது.
இவரின் தளம்

லிங்க்: http://www.tamilvaasi.com/
இவரின் தளம்

லிங்க்: http://www.tamilvaasi.com/
இவரை எனக்கு இப்போதுதான் அறிமுகம்.
|
|
நல்லதொரு அறிமுகங்கள்..!வாழ்த்துகள் ஐயா..1
ReplyDeleteநன்றி, தங்கமணி.
Deleteநான் பிரபல பதிவர்களில் ஒருவனா? எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வரிசையில் எனக்கு இடமளித்த தங்களுக்கு நன்றி. ஊக்கம் தந்த வலைப் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete( த.ம. –> மீண்டும் வருவேன் )
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, உங்களுடைய பதிவுகளின் தரம் அப்படி உங்களை பிரபலப்படுத்துது.
Deleteநான் தொடரும்.....எனது நணபர்கள்
ReplyDeleteதிரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திரு. தி, தமிழ் இளங்கோ அவர்கள்
திரு. ரமணி ஐயா அவர்கள்
திரு வே.நடனசபாபதி அவர்கள்
திரு வெங்கட்நாகராஜ் அவர்கள்
திரு பகவான்ஜி அவர்கள்
திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
மற்றும் அனைத்து இன்றைய பதிவர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகளும், தங்களுக்கு நன்றிகளும் ஐயா.
த.ம.1
நேற்று மூத்த பதிவர்கள். இன்று பிரபல பதிவர்கள். தங்களது அறிமுகங்களைக் கண்டோம். இதில் புதியவர்களையும் காணமுடிந்தது. தாங்கள் அறிமுகப்படுத்தும் பாணி மிகவும் அருமை.
ReplyDeleteநன்றி, டாக்டர்
Deleteதங்களை அறிமுகம் இல்லை. இருந்தாலும் என்னுடைய தளங்களுக்கு வருகை தறுவதற்கு நன்றி. தங்கள் தளத்தை இன்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றாக வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
Deleteஅன்புக்கு நன்றி. எனது மற்றொரு வலைத்தளம் www.ponnibuddha.blogspot.com
Deleteபிரபல பதிவர்களில் எனக்கும் ஒரு இடம் - மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா...
ReplyDeleteஉங்களை பழைய தில்லி ரயில் நிலையத்தில் சந்தித்தது இன்னமும் நினைவில் பசுமையாக......
வாரம் முழுவதும் சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்ய வாழ்த்துகள்.
நன்றி, நாகராஜ்
Delete//தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் இவர்களின் பதிவு தவறாது.//
ReplyDeleteமலர்ந்த தாமரையுடன் ஆரம்பமே அசத்தல் :)))))
//இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.//
ஐயோ பாவம் ... நீங்கள் ! :)
//இன்னொரு விஷயம். இவர் பதிவுகளிலிருந்து ஒரு துரும்பைக்கூட யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அவ்வளவு டைட் செக்யூரிடி.//
இவ்வளவு டைட் செக்யூரிடி சம்பந்தப்பட்டவர்களுக்கே எரிச்சலை ஏற்படத்தக்கூடும்.
அசத்தலான அறிமுகங்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
எப்படி தமிழ் பின்னூட்டம்? ஊருக்குத் திரும்பி விட்டீர்களா?
Delete//பழனி. கந்தசாமி has left a new comment on the post "சில பிரபல பதிவர்கள்":
Deleteஎப்படி தமிழ் பின்னூட்டம்? ஊருக்குத் திரும்பி விட்டீர்களா? //
இல்லை. இன்னும் ஊருக்குத் திரும்பவில்லை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதுபோல இங்கு தமிழில் கஷ்டப்பட்டு டைப் அடித்து வருகிறேன்.
அதுவும் ஒருசில முக்கியமான பதிவுகளுக்கு மட்டுமே :)))))
பிரபல பதிவர்கள் என அறிமுகம் செய்யப்பட்ட அனைவரும் - அன்பிற்குரியவர்கள்..
ReplyDeleteபதிவுகளுக்கென அயராது உழைப்பபவர்கள்.. அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
நன்றி, துரை செல்வராஜு
Deleteஇன்றைய தொகுப்பில் அனைவரும் பிரபல பதிவர்கள்தான்.
ReplyDeleteஅனேகமாக அனைவருமே நானும் தொடரும் பதிவர்கள்தான்
என்பதில் மகிழ்ச்சி!
உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்
Delete//தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து //
ReplyDeleteதினத்தந்தி ஞாயிறு குடும்ப மலர் என்று நினைக்கிறேன், சரியா?
சரியாப் பிடிச்சுட்டீங்க, நிஜாமுத்தீன்.
Deleteபெயருக்குப் பின்னால் அவர்கள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. அது சேர்க்காததால் மரியாதைக் குறைவு என்று எனக்குத் தோன்றவில்லை.
ReplyDeleteராஜராஜேஸ்வரி அம்மாவின் புகைப்படம் சமீபத்தில் தேனம்மை லக்ஷ்மன் பகிர்ந்திருந்ததாய் நினைவு.
என்னைப்பற்றியும், எங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நெகிழ வைத்தன. நன்றி ஸார். திறமையான பெரிய பதிவர்களுடன் என்னையும் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீராம் அவர்கள் என்று சொல்லாமல் ஸ்ரீராம் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கலாம். :)))
பின்னூட்டங்களுக்கு பதில் எழுதும்போது இந்த மரியாதை விகுதி அவ்வளவாகத் தேவையில்லாமலிருக்கலாம். ஏனென்றால் அதைப் படிப்பவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள்.
Deleteஆனால் ஒரு பதிவரை அறிமுகப் படுத்தும்போது, அதிகம் பேர் படிப்பார்க்ள. அவர் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் இந்த விகுதியைச் சேர்ப்பதுதான் நாகரிகம் என்று நான் கருதுவதால் அப்படிக் குறிப்பிடுகிறேன். நீங்கள் அது தேவையில்லை என்று பரந்த மனப்பான்மையில் நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் இந்த அறிமுகத்தைப் படிக்கும்போது, என்ன, இப்படி மொட்டையாகக் குறிப்பிட்டிருக்கிறாரே என்கிற வருத்தம் வரக்கூடுமல்லவா?
அதனால்தான் அந்த விகுதி.
ப்ளாக்கில் வந்து தகவல் சொன்ன ஜம்புலிங்கம் ஸாருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
ReplyDeleteபார்த்தீர்களா, நீங்களே ஜம்புலிங்கம் அவர்களை "ஜம்புலிங்கம் சார்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நேரில் பார்க்கும்போது தனிமையில் நெருங்கிய நண்பர்கள் வாடா, போடா என்று பேசிக்கொள்ளலாம். ஆனால் போது இடங்களில் அல்லது எழுத்தில் அந்த அன்னியோன்யம் விரசமாக இருக்கும் அல்லவா? இது என் அனுபவத்தில் கண்ட உண்மை இது. டாக்டர் ஜம்லிங்கம் அவர்களை இந்த வலைச்சரப் பதிவு ஒன்றில் அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்.
Deleteஅய்யா அவர்களுக்கு, இந்த பதிவை எனது BLOGGER DASH BOARD இலிருந்து பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்மணத்திலிருந்து பார்க்கும் போது கறுப்பு மற்றும் சாம்பல் வண்ணத் திரைகள்தான் வருகின்றன. ஒன்றுமே இல்லை. தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் இல்லை. கவனிக்கவும்.
ReplyDeleteஅன்புள்ள தமிழ் இளங்கோ, இந்த வலைச்சரம் தளத்தின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நினைப்பது போல் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது. இதனுடைய செட்டிங்க்ஸ் கன்ட்ரோல் வலைச்சர ஆசிரியர் குழுவிடம்தான் இருக்கிறது. அது நியாயமும் கூட. ஏனெனில் வாரம் ஒரு ஆசிரியர் வரும்போது செட்டிங்க்ஸை மாற்றினால் தளம் உருக்குலைந்து போகுமல்லவா?
Deleteஎன்னால் முடிந்த அளவு அல்லது எனக்குத் தெரிந்த அளவு காம்ப்ரமைஸ் செய்து பதிவுகள் இடுகிறேன். If the mountain doesn't come to Mohammed, then Mohammed has to go to the mountain. செருப்பு காலுக்கு சிறியதாக இருந்தால், அவசியமாக இருந்தால் காலை வெட்டவேண்டியதுதான்!.
// If the mountain doesn't come to Mohammed, then Mohammed has to go to the mountain. செருப்பு காலுக்கு சிறியதாக இருந்தால், அவசியமாக இருந்தால் காலை வெட்டவேண்டியதுதான்!.//
Deleteபாவம் அந்தக்கால். :)))))
ஒருக்கால் .....
கால் .....
கால் பாகம்
வெட்டப்படுமோ?
வணக்கம்
ReplyDeleteஐயா.
இன்று அறிமுகம் செய்த பதிவர்கள் அனைவரும் நன்கு அறிந்தவர்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி, ரூபன்.
Deleteஎன் பரம(ன்) ரகசியம் நாவலை இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டதற்கு நன்றி ஐயா.
ReplyDeleteநான் தற்போது யோகிகளைப் பற்றி ”மகாசக்தி மனிதர்கள்” என்கிற தலைப்பில் தினத்தந்தியில் எழுதி வருவது வெள்ளிக்கிழமைகளில் வரும் வெள்ளிமலரின் ஆன்மிகப்பக்கத்தில். (ஒரு நண்பர் ஞாயிற்றுக்கிழமைகளிலா என்று சந்தேகம் எழுப்பியதால் இதைக் குறிப்பிடுகிறேன்)
தகவலுக்கு நன்றி!
Deleteநான் ஒரு மர்ம நாவல்களின் பரம ரசிகன். என் பள்ளிப்பருவ நாட்களில் ஒரு நாவலை மாலையில் எடுத்தால் நடு ஜாமம் ஆனாலும் அதைப் படித்து முடிக்காமல் தூங்கமாட்டேன். உங்கள் பரம(ன்) ரகசியம் தொடரைப் படிக்கும்போது அதே விறுவிறுப்பை உணர்ந்தேன்.
Deleteஅனுபவித்து இரசனையாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteசுவாரஸ்யமான வேக நடை.
பலே!
நன்றி, நிஜாமுத்தீன்.
Deleteவணக்கம் ஐயா
ReplyDeleteதங்களின் அழகான அறிமுகங்கள் பல நம் நட்பு வட்டங்கள். இணைய இணையற்ற இவர்களின் நட்பு வழங்கியிருக்கிறது. தங்களின் எழுத்துகளில் இவர்கள் ஜொலிக்கிறார்கள். தங்கள் ஆசிரியர் பணி சிறக்க என் அன்பு வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி, பாண்டியன்.
Deleteபூக்கூடைக்குள் அற்புதமான மலர்கள் ஒவ்வொன்றும்....விளம்பரம் அருமை ஐயா.
ReplyDeleteநன்றி, உமையாள் காயத்திரி.
Deleteஎன்னையும் பிரபல பதிவர்கள் வரிசையில் சேர்த்ததற்கு மிக்க நன்றி !
ReplyDeleteசென்ற வருடம் சென்னை பதிவர் சந்திப்பின் போது,திரு .கேபிள் சங்கர் ,அய்யா இராமானுஜம் ,ஆகியோருடன் நீங்களும் நானும் பேசிக்கொண்டு இருந்தோமே ,நினைவுக்கு வருகிறதா அய்யா ?
வாழ்த்திய அன்பு உள்ளங்கள் சகோ . கில்லர்ஜி,துறை செல்வராஜுஅய்யா ,ரூபன் ஜி ஆகியோருக்கும் நன்றி !
த ம (இதுக்கு போடாம வேறெதுக்கு போடப் போறேன் ?சீக்கிரம் தமிழ்மணத்தில் இணையுங்கள் )
தமிழ்மணத்தின் நெம்பர் ஒன் பதிவர் இப்படிக் கூறலாமா? நியாயமா, இது நியாயமா?
Deleteஎன் ஞாபக சக்திக்கு அவ்வளவு வலிமை இல்லை பகவான்ஜி.
தமிழ் மணத்தின் ஓட்டுப் பட்டை குளறுபடி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தளத்தின் பெயர் .com ல் முடிந்தால் மட்டுமே அதில் ஓட்டுப் போடமுடியும். அதற்கு தளத்தின் டெம்ப்ளேட்டில் ஒரு திருத்தம் செய்யவேண்டும். வலைத்தள ஆசிரியர் குழு ஏன் இந்தத் திருத்தத்தைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வலைச்சரத்தில் பதிவு போட்டவுடன் மறக்காமல் Submit to Tamilmanam பட்டனை அழுத்தி விடுகிறேன். ஆனால் அந்த ஓட்டுப் பட்டை கல்லுளி மங்கன் மாதிரி அப்படியே நிற்கிறது.
தமிழ்மணம் ஓட்டு வலைச்சரத்தில் போடுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடம் கேட்கிறேன்.
வாழ்க இவர் தொண்டு//
ReplyDeleteThank you Sir..
வருகைக்கு நன்றி, திருமதி இராஜராஜேஸ்வரி.
Deleteபிரபாலமானவர்கள் பட்டியலில்
ReplyDeleteஎன்னையும் இணைத்து பதிவிட்டிருப்பது
மிக்க மகிழ்வளிக்கிறது
வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி எனப்
பெயர் பெறல் நிச்சயம் ஒரு பாக்கியமே
மிக்க நன்றி
நீங்கள் நிச்சயம் பிரபல பதிவர்தான். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் என்னை வசிஷ்டர் லெவலுக்கு கொண்டு போனதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteமிக்க மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteபிரபலப் பதிவர்கள் மிகுந்த தன்னடக்கம் உள்ளவர்கள் போலிருக்கே ,என்னை மாதிரி த ம வாக்கு போட்டிருந்தால் ,இந்நேரம் இந்த பதிவு தமிழ் மணத்தில்..வாசகர் பரிந்துரையில் வந்திருக்குமே :)
ReplyDelete
ReplyDeleteஅய்யா! என்னையும் ‘பிரபல பதிவர்’ என்று அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! ஆனால் எனக்கு எந்த தகுதி உண்டா எனத் தெரியவில்லை. என் அண்ணனுக்கு நீங்கள் பழுது நீக்கி கொடுத்த அந்த Slide Projector இன்னும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நீங்கள் ஒரு சகல கலா வல்லவர் /வல்லுனர் என்பதை சொல்லித்தெரியவேண்டுமா என்ன?
நன்றி, நடனசபாபதி.
Deleteஉங்கள் பதிவுகளை பலரும் படித்து பின்னூட்டம் போடுகிறார்களே, அதுதான் பிரபலத்தின் அளவுகோல்.
இன்றைய பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே அற்புதம் ஐயா. எல்லோருமே நான் விரும்பி வாசிக்கும் பதிவர்கள்... சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரையும் ஒரே இடத்தில் சந்தித்த திருப்தி ஐயா... உங்களுடைய அசாத்திய உழைப்பு ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அனைவருக்கும்... மனமார்ந்த அன்பு நன்றிகள் ஐயா...
ReplyDeleteத.ம.4
அவர்களே என்று பேரோடு இணைத்து சொல்லும்போது அங்கே அந்நியோன்யம் மறைந்து அந்நியம் தெரியும்... ஆதலால் அவர்களே வேண்டாம் தான் ஐயா...
ReplyDeleteதற்போது மிக மிக சில பதிவுகளே பகிர்ந்து வரும் என்னை இந்த குழுவுடன் இணைச்சுட்டிங்களே ஐயா????
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
த.ம.6 - தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான அறிமுகம் வாழ்த்துக்கள்
ReplyDelete/இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.//
ReplyDeleteதேனம்மை அவர்கள் நேர்காணல் அழைப்பு (சாட்டர்டே ஜாலி கார்னர்) பதிவில் திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களை கண்டேன்.
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் விரும்பி படிக்கும் பதிவர்கள்.
அறிமுகப் படுத்திய பிரபல பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
ReplyDeleteஅருமையோ அருமை !! எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சி !
ReplyDelete