எழுத்துகளின் பயணம் !
எழுத்துகளின் பயணம் !
கனத்த புருவஉயர்த்தல்களோடு
கவிதை எழுத்துகளின்
அனுமதி வாங்கினேன்..
வலைச்சரம் வருகவென்று!
என்
கழுத்திலேறி அமர்ந்தது,
என்னெழுத்துகள் !
என்
கழுத்திலேறி அமர்ந்தது,
என்னெழுத்துகள் !
அதீத அக்கறையுடன்
எழுத்துகளை அலங்கரித்தேன்..
செல்லச் சிணுங்கல்களாய்
அவை அங்குமிங்குமோட,
எனக்கு
குழந்தையைத் துரத்தும்
அம்மாவாய் அடிக்கடி
மூச்சிரைத்தது !
வெள்ளிக் கிண்ணத்தில்
தமிழ்த்தேனை வடித்தெடுத்துப்
பருகவாவென அழைத்தேன்.
தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் நின்றன,
தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் எழுந்தன
தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் பறந்தன.
தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் பேசின.
கவிதைக்காய் ஒன்றிணைந்தன.
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
எழுத்துகளை அழைத்துக்கொண்டு
எங்கு செல்லலாமென
எத்தனித்த கால்கள்
சட்டென நின்றன.
மேடையொன்றின் மேன்மையில்
மலர்ந்துபோய் இலயித்தன.
எழுத்துகளோடு நானும்
விரைந்த வினாடிகள்
வியப்புக்குரியவை!
பறந்த மங்கள்யானின்
சரித்திரச் சாதனையை
பெருமையுறப் பகன்ற
மின்தமிழ் மேடை கண்டேன்.
சாதனை எப்பொழுதும்
சரித்திரம் எப்பொழுதும்
சாய்ந்திருப்பது எம்மிந்தியாவுடன்றோ?
மங்கள்யானும் மனிதமும்
மலர வேண்டுமென்பதன்றோ நம்மாசை?
எழுத்துகள் மகிழ்ந்தன.
மறம்பாடியது
ஆனால்,
எந்தமதத்தைப்பற்றியும்
புறம்பாடவில்லை!
ஆதலால்
தயங்காமல்சொல்வோம்
திருக்குறளே தேசியநூல்!
எக்காளமிடும் ஆனந்தக்கூக்குரல்
என்னருகே ஒலித்தது.
எழுத்துகளுடன் அங்கே
ஐக்கியமானேன்!
தஞ்சாவூரானின் வெற்றிப்பேரிகை
இலக்குவன் திருவள்ளுவனாரால்
இசைக்கப்பட்டது!
இலக்கியம் பாடப்பட்ட
இலயத்தின் இளமை!
இலக்கியம் பேசப்பட்ட
இன்குரலின் தொன்மை !
இலக்கியம் இளைப்பாறும்
இன்நிழல் நோக்கி..
எழுத்தாய்ச் சென்றேன்.
இலக்கின்இயம் பற்றிய
எம்மெழுத்துகளின் கரம்
கவிதையாய் நீண்டது!
வானின்று உலகம்
வழங்கிவரும் வான்மழையை,
வள்ளுவர் வாய்மொழித்தேனை,
வானுலகம் உயர்த்த
வானுருவம் தேக்கிய
உரத்த சிந்தனை!
உயிர்ப்பில் மனமுயிர்த்தது.
தினமும் படித்தால்
தினமுண்டோ கலகம்?
திசைகளில் ஒளி!
புத்தகம் படிக்க
புதுநூலகம் செல்லப் பணித்தன
எம்பேரெழுத்துகள்.
நூலகம் தேடி அலைந்தோம்.
முகவரி கேட்ட அனைவரும்
உதடுமுகம்சுளித்து ஒதுங்கினர்.
புத்தக வாசனை வேண்டுமென்று
அடம்பிடித்தன என்னெழுத்துகள்!
அலைந்தேன்!
எங்கேனும் நூலகம் இருக்குமா?
சோர்ந்து வீழ்ந்தநிலையில்
தமிழ்க்குருவி வந்தது.
தன்னுடன் வாவென்றது.
தலையாட்டினேன்.
இணையமின்நூலகங்கள்
முகவரிப்பட்டியலை அள்ளிக்கொடுத்தது,
புத்தகவாசனை புத்துலகம்திறக்கும்!
நூலகம் சென்றோம்.
எழுத்துகள் புதிதாய்ப் பிறந்தன.
பண்பாட்டுத் தளங்களில்
பயணிக்கும் நம்தடங்கள்
குறைந்துபோன கவலைப்புள்ளிகளில்
என்னெழுத்துகளின் பயணம்
கனமாய்த் தொடர்ந்தது.
தனுஷை உச்சரிக்கும்
மாணவ உதடுகளில்
என்
தேசப்பிதா அண்ணலையும்
உச்சரிக்கக் கேட்டபோது
முகவரி தொலைந்துபோன
முகக்கோணலில் கோணலானது
கரும்பலகைக் கருப்புகள் !
கனவுகளில் வாழும்
எம்மக்களைத்
தேற்றின .
குணசீலனின் தடங்கள்!
இன்னா செய்தார்க்கும்
இனியவே செய்திடுவர்.
அண்ணல் காந்தியின்
அடிச்சுவட்டைப் பற்றும்
அழகுப் பாதங்கள்
நடைபயிலும்
அற்புதத்தோட்டம் சொன்னது!
எந்தப்பக்கம் சாய்வோமென்று
என்னெழுத்துகள் குரலெழுப்ப,
தமிழின் இதயம் தேடினேன்.
கிடைத்தது?
இலக்கண அடங்கலின்
தேவைபற்றிச் சொல்லிச்சென்ற
இனிமைமகிழ்வில் இளைப்பாறின
என்னெழுத்துகள்.
இன்னும் பயணிக்க எனக்கு ஆசையெனினும்
இளைப்பாறலின் தேவைக்காக!
என்னெழுத்துகள் என்கைபிடித்து அழுத்தின,
நாளையும் வருவோமென்ற
நிச்சய நொடிகளில்
என்னெழுத்துகளுக்கு
இரவுவணக்கம் சொன்னேன்.
அது
வலைச்சரம் முழுதும்
கேட்டது.
உங்களுக்கும் தானே?
இனிய இரண்டாவதுவாழ்த்துகளுடன்.
சி.குருநாதசுந்தரம்.
|
|
தமிழ்த் தேன்..
ReplyDeleteசுவைத்தேன்!..
நலம் வாழ்க!..
வியந்தேன் ,
Deleteமலர்ந்தேன்!
நன்றி ஐயா!
கவித்தேன்
ReplyDeleteநானும் சுவைத்தேன்
காரணம்
இனித்தன...
வாழ்த்துகள் நண்பரே....
நன்றி நண்பரே!
Deleteதமிழ் மண இணைப்போடு தமிழ் மணம் வாக்கும் ஒன்று
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
மிக்க நன்றி நண்பா, உங்கள் வாக்கு பொன்னானது.
Delete//உங்கள் வாக்கு பொன்னானது//
Deleteநண்பே, அரசியல்வாதிகள் பேச்சு போல இருக்கிறதே....
கவிதை நடையில் அறிமுகங்கள் அசத்தல்...
ReplyDeleteஅசத்தலை வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.
Deleteகவி நடையில்
ReplyDeleteபுவி சுற்றும் வலைத்தளங்க்ளை எம்
செவிக்கு எடுத்துரைத்த இக்
கவிக்கு வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
என்னைக் கவியெனக் கூறிய
Deleteஅன்பில் நெகிழ்கிறேன் ஐயா!
மிக்க நன்றி.
அறிமுகம் எழுத்தாளர்கள் தேன்சுவைமிக்ககவிதை அருமை.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteகவிதை நடையில் அறிமுகங்கள் - வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. உலகில் வித்தியாசமாகச் செய்பவர்களே மற்றவர்களிடமிருந்து தனித்துவமிக்கவர்களாய் வலம் வருகிறார்கள் என்ற மேதகு கலாம் கூற்று எனக்கு மிகவும் பிடிக்கும். ஐயா. மிக்க நன்றி.
Deleteஅட!!!! பாட்டாவே பாடிடிங்களா!!!!! சூப்பர் சார் !!! கலக்குங்க:)
ReplyDeleteமிக்க நன்றியம்மா.
Deleteஅறிமுகங்கள் வித்தியாசமாக...! அசத்தல்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லாம் தங்களின் வழிகாட்டல்கள் தான் ஐயா. ஆயினும் தொழில்நுட்பத்தில் இன்னும் தங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டுமய்யா. பிறிதொரு பயிலரங்கம் வேண்டுமெனும் அவா இவ்வாண்டு நிறைவேறுமென நினக்கிறேன். மிக்க நன்றி.
Delete
ReplyDeleteஅறிமுகத்தையும்
அருந்தமிழில்
அருளினீரே!
நறுந்தேனாய்
இனித்தது அய்யா
நன்றியுடன்?
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றி ஐயா. தங்களின் நற்பின்னூட்டம் மிக்க மகிழ்வைத் தந்தது.
Deleteஇரண்டாம் நாள் வலைச்சரத்தில்
ReplyDeleteஇனிமையான தேனின் சுவையில்
இனிய கவிதை நடையில்
இன்முகங்கள் அறிமுகம்
இத்தகைய அற்புதம்
இங்கேயே காண்கிறேன்
அன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும், இனிய தேன் சுவையில் வலைச்சரத்தை தொகுத்த ஆசிரியருக்கும்..
த ம 4
மிக்க நன்றி. தங்களின் ஊக்கம் என் எழுத்துகளுக்கு நல்லுரம். நன்றி.
Deleteகவிதை நடை எங்களை அதிகம் ஈர்த்தது. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா, தங்களின் பின்னூட்டம் என் நல்லூக்கம்.
Deleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தொழர்.
Delete// வெள்ளிக் கிண்ணத்தில்
ReplyDeleteதமிழ்த்தேனை வடித்தெடுத்துப்
பருகவாவென அழைத்தேன். //
அருமையான கவிதை வரிகள் அண்ணா !!! நான் பெரும்பாலும் தற்கால கவிதைகளை அவ்வளவாக படிக்கமாட்டேன் . ஆனால் தங்களுடைய கவிதை என்னை முழுமையாக ஆட்கொண்டது !!