07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 12, 2014

நாந்தாங்கோ...... கில்லர்ஜி.

தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
செந்தூரப்பூவினும் மென்மையான என் இனிய வலைச்சர இதயங்களே..... வணக்கம், தங்களின் வருகைக்கு நல்வரவு, ஸுவாகத்தம், சுஸ்வாகத், ஸுவாகதம், மபுஹாய், ஆயிபோவன், மரஹபா, வெல்கம், அனைவருக்கும் அபுதாபி கில்லர்ஜியின் வந்தனங்கள்... என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியுமென நினைக்கிறேன். (எல்லோருக்கும் தெரிய நீ என்ன ? லாடு லபக்குதாசா) யாருயா ? தொடங்கும்போதே... நண்பர்களே... என்னையும் மதித்து வலைச்சர ஆசிரியராக பொறுப்பு அளித்த ஐயா திரு. அன்பின் சீனா அவர்களுக்கும், திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், எமது உள்ளப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனது ஐயன் ஞானி ஸ்ரீபூவு அவர்கள் ஆச்சி கல்லப்பிறாந்துடன் வழங்கிய ஆசியோடு இந்தவார வலைச்சர ஆசிரியர் பொருப்பை ஏற்று நடத்தப்போகிறேன் என்பதை தங்களுக்கு அறிவித்து கொல்கிறேன்.
முதல்நாள் சொந்த பதிவுகளை அறிமுப்படுத்துதல் மரபு என்று ஐயா சீனா அவர்கள் சொன்னதால் அறிமுகப்படுத்துகிறேன் எனக்கு உகாண்டா நாட்டு பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது.... //ஒரு குக்கர் களிக்கு ஒரு துளி பதம்// அப்படினு சொல்வாங்க... ஆகவே நான் மிகவும் நேசித்து எழுதிய இரண்டு பதிவுகளை மட்டும் தருகிறேன் கடைசி நாளில் ஒன்று தருகிறேன் அதற்க்கும் காரணம் இருக்கிறது இதில் நான் சொல்லி இருக்கும் விடயங்கள் அனைத்து மனிதனுக்கும் பொருந்தும் ஆகவே கிளிக் எனக்குள் ஒருவன் கவும் அடுத்து சமீபத்தில் வலைப்பதிவையே கலக்கியது நான் தொடங்கி வைத்தது இவ்வளது தூரம் வெற்றியடையும் என நினைக்கவில்லை சந்தோஷம்தானே எனது நண்பர்கள் பெரும்பாலும் படித்து விட்டார்கள் படிக்காதவர்கள் கிளிக் கனவில் வந்த காந்தி கலாமே...
 
 நல்லது நண்பர்களே... இனி எனது சொந்தக்கதை, சோகக்கதையை சொல்லி உங்களை சோகத்தில் ஆழ்த்தாமல் முடிந்தவரை நம்ம.... நாகர்கோவில் சுடலைமுத்து ஐயாமவன் கிருஷ்ணன் மாதிரி எதையாவது சொல்லி சிரிக்க வைத்து அப்படியே... லைட்டா.... சிந்திக்கிற மாதிரி செய்யலாம்னு நினைக்கிறேன் ய்யேன் முழிக்கிறீங்க ? யாருனு தெரியலையா ? அவருதாங்க... திரு. N.S.K. ஹி.. ஹி கொஞ்சம் ஓவரோ ?
சரி முதலில் கொஞ்சம் சிரித்துவிட்டு அப்புறமாக படிக்கப்போகலாமா ? கீழ்காணும் இது என்னோட ‘’முக்கி அடிச்சா’’ பதிவிற்காக நான் மிகவும் நேசித்து எழுதி வைத்திருப்பது அதில் இடம் பெறும் வசனங்களில் ஒன்று அதை காணொளியாக கொடுத்து இருக்கிறேன் எனது வேண்டுகோளுக்கு இணங்கி எமது இரண்டு நண்பர்கள் நடித்துக்கொடுத்தது ஒரு நிமிடம்கூட இல்லை இதை கேட்டு விட்டு கீழே போங்களேன்...
காணொளி.
(முக்கி அடிச்சா... பதிவு விரைவாக தங்களின் விருந்துக்கு வரும்)
ன்னாபா, எப்டிகீது சிச்சுகினியா ?
டண்டனக்கும், டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும் னக்கும், னக்கும்... டுடும்... டுடும்.... டும்....
வலைப்பூ நண்பர்களுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் ?
ராசாதிராச, ராணிமார்கள் உரச, ராஜகொலைத்திலகம் தேவகோட்டை திரு.கில்லர்ஜி அவர்கள் நாளை முதல் அபுதாபியிலிருந்து. வலைச்சத்திற்க்கு சரம் தொடுத்து, மாலை கோர்க்க வருகிறார்..... பறட், பறட், பறட்.
இன்னாபா, ஸ்பில்லிங் மிஷ்டேகினு நெனைச்சுகினியா ? மொளங்காலு அறிச்சிகினுபா அதான் குந்திகினு சொறிச்சேஞ்பா, அதான்பா ஸவ்ண்டு, சரிநைனா, நாளையிலேர்ந்து ஃபிகருகளை ப்ராக் பார்க்காம டெய்லி அட்டெண்ட் பண்ணுபா, நாளிக்கி நம்ம கடையை தொறக்கிறேம்பா, வந்து துண்ணுபுட்டு நம்ளே டீலாவுல விட்றாதேமே துட்டு போட்டுகினு போமே...
வர்ட்டா.... நானு ஆசிரியராயிட்டேன்... நானு ஆசிரியராயிட்டேன்... நானும் ஆசிரியராயிட்டேன்பா... ய்ஏய்ய்ய்ய் வர்ட்டா.... வர்ட்டா....  வர்ட்டா....
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
டேய். முண்டம் தண்டமா நிற்காம அடிடா.. இப்ப நம்ம நண்பர்களெல்லாம் வந்து உனக்கு காஃபி, டீ., ஹார்லிக்ஸ், போண்டா, வடையெல்லாம் வாங்கி தருவாங்க தின்னுட்டு தெம்பா அடி..... திங்ககிழமை நண்பர்களை அறிமுகப்படுத்தணுமே அந்த கோடரியை எடு... நான் போயி வலைப்பூவுல மேய்ஞ்சு யாரையாவது தூக்கிட்டு வர்றேன், நிறுத்திடாமல் அடி இப்ப, மட்டுமில்லை வலைச்சரம் வாழும் வரை அடி.
 
 
 
டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்...
 
 தற்போது எமது வலைப்பூ கில்லர்ஜியில் ஊர்க்கதை ‘’கிளிக்’’கலாமே...
 
வாழ்க ! தமிழ்.
 

* * * * * * * * * * * * * * * * * *

 

112 comments:

 1. வருக நண்பரே! வாழ்த்துகள்! பணி தொடரட்டும்! பாராட்டு குவியட்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !!! வலைச்சரத்தில் நான் கோர்த்த முதல் பூவுக்கு புலவர் ஐயாவிடமிருந்து வாழ்த்துகள் நான் என்னவொரு பாக்கியசாலி ? உண்மையிலேயே மிக மிக மகிழ்ச்சியடைகிறேன் ஐயா தங்களின் வாக்கு பலிக்கட்டும் நன்றியுடன்

   தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

   Delete
 2. வருக வருக கில்லர்ஜி, வாழ்த்துகள், சொம்மா ஜமாய் நைனா..............

  ReplyDelete
  Replies
  1. டெய்லி வா, மாமு சத்தாய்சுருவோம்...

   Delete
 3. ஆஹா!!! ஆரம்பமே களைகட்டுதே!!!!! அண்ணா மணவை ஜேம்ஸ் அண்ணாவுக்கு மட்டும் சொன்ன உங்க பேர் ரகசியத்தை என்கிட்டே சொல்லலையே:((

  ReplyDelete
  Replies
  1. வாங்க, களை கட்டியாத்தானே... அது கச்சேரி, ரகசியமா ? அதான் மதுரை மேடையிலே சொல்லிட்டேனே..

   Delete
  2. மீண்டும் ஒரு முறை சொன்னால் தான் அதை ரகசியம் என்று ஒத்துக்கொள்வேன்

   Delete
  3. வலைச்சர முடிவில் உங்களுக்காக.....சொல்றேன்

   Delete
 4. வருக வருக என வரவேற்கிறேன். வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருக, நண்பரே... நன்றி.

   Delete
 5. என்ன இப்படிப் போட்டு தாக்கிட்டீங்கள்!.. தாங்க முடியலையே சாமீ!..

  முதல் நாளிலேயே - இந்த மாட்டு மாட்டுனா - இன்னும் சொச்ச நாள் எப்படிப் போகப் போவுதோ!?...

  ஐயன் ஞானி ஸ்ரீபூவு அவங்க தான் காப்பாத்த வேணும்!?...

  ReplyDelete
  Replies
  1. என்ன ? நண்பரே... தாங்க முடியலையே சாமீ இதை நான் எப்படி ? எடுத்துக்கொள்வது... நன்றி.

   Delete
 6. ஐயன் ஞானி ஸ்ரீபூவு யாருங்க.?அவரைப் பத்தியும் சொல்லலாமில்ல. களை கட்டட்டும் ஆசிரியப் பணி.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா, ஐயனைப்பற்றி சொல்வேன்... தினமும்.

   Delete
 7. வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 8. முதல் பகிர்வே சூப்பர் நைனை!!!

  ReplyDelete
  Replies
  1. நல்லது கடைசி பதிவுவரை இப்படித்தான் நண்பா.

   Delete
 9. ஆரம்பமே அசத்தல். சிறப்பாக வலைச்சர ஆசிரிய பணியை செய்திட வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.

   Delete
 10. த ம நான்கு
  வாழ்த்துக்கள் ஜி

  ReplyDelete
 11. மீசைக்கார நண்பரே வருக வருக

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கண்டிப்பாக தினம் வருவீர்கள் நண்பரே...

   Delete
 12. #டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்...#
  வாரம் முழுவதும் முரசொலிக் குறையாமல் ஒலிக்க வாழ்த்துக்கள் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. பகவான் அருளிந்தால் கண்டிப்பாக ஒலிக்கும் பகவான்ஜி

   Delete
 13. #டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்...#
  வாரம் முழுவதும் முரசொலிக் குறையாமல் ஒலிக்க வாழ்த்துக்கள் !
  த ம 5

  ReplyDelete
 14. அண்ணா....
  ஆரம்பமே அமர்க்களம்...
  வீடியோ கலக்கிட்டீங்க...
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வீடியோவை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே... மற்றவர்கள் யாரும் அதைப்பற்றி சொல்லவில்லையே....

   Delete
 15. தொடருங்கள்
  தங்கள் பணி தொடர
  எனது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நல்லது நண்பரே தொடருங்கள்.

   Delete

 16. அன்பின் சீனா அவர்கள் நீங்கள் 15 ஆம் தேதி முதல் என்றல்லவா சொல்லி இருந்தார்? முன்னதாகவே வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள்! ஒரே அமர்க்களம்! வருக வருக என வரவேற்கிறேன்.
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. நமது வருகைகூட வித்தியாசமாக இருக்கவேண்டுமே நண்பரே,,,

   Delete
  2. உங்க முகத்துலேயே நீங்க வித்தியாசத்தை இல்ல வச்சிருக்கீங்க...

   Delete
  3. முகம் என்ன ப்ளாஷ்டிக்லயா ? செஞ்சுகருக்கு எல்லாருக்கும் போலதான் என்ன ஒன்னு கூடுதல் அழாகா இருக்கு. (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

   Delete
  4. கூடுதல் அழகு!!! ஓவரா இருக்கே!! அவ்வவ்வ்வ்வ்!

   Delete
  5. ஹலோ இதை நான் சொல்லவில்லை நண்பர் சொக்கன் தான் மின்னஞ்சல் அனுப்பி சொன்னாரு....

   Delete
 17. வலைச்சரத்தில் முரசொலிக்க களை கட்டி விட்டதே. ஆனால் திரு தமிழ் இளங்கோ சொல்வது போல் தான் நினைத்திருந்தேன்.
  முன்னதாகவே கலகலக்கிறது வலைச்சரம்.
  வாருங்கள் ...
  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வருகை தாருங்கள் அம்மா.

   Delete
 18. முரசு அறிவித்தத கேட்டேனுங்க...சாமி.... கண்டிப்பாக..ஆஜராகிவிடுவேன்.சாமி.... கில்லர் ஜி சத்தியாமா... சொல்றேன்சாமி.....

  ReplyDelete
  Replies
  1. சத்தியமா, நீங்க தினம் வருவீங்க, நண்பரே...

   Delete
 19. வாழ்த்துக்கள் சகோ. திறம்பட செய்து முடியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நண்பா,,,

   Delete
 20. வந்துட்டோம்பா....வந்துட்டோம்.

  தொடர்ந்து வந்திடுவோமில்லை....

  முரசு சத்தம் நல்ல கேக்குதுங்கோ...

  தம 9

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, தேவகோட்டைக்காரன் பதிவுக்கு வராமல் இருப்பீங்களா ?

   Delete
 21. எங்க ஊர்லருந்து ஆரம்பிச்சு மெட்ராஸ் பாஷைல கீசிருக்கே நைனா....காது கியிதுப்பா....இம்மாம் தகிரியம் உனிக்கி....சும்மானாலும் டொண்டனக்கா டொண்டனக்கானு கூவாம ஒயிங்கா நாலு நல்ல வாக்கு சொல்லிகினு போவியா....ஹக்கா...ஞானி ஸ்ரீ பூவு இர்க்கார்ல அதான் தப்பிச்ச நைனா.....டி ஆரு, வடிவேலு லாம் நல்லாத்தான் கீராய்ங்க....ஷோக்கா வந்துட்ட......ஷோக்கா கீதுப்பா.......இதே போல ஷோக்கா எய்தி கிளிச்சுருப்பா..ன்னா?!! ஹக்காங்க் நீ எய்திருவப்பா....எப்பவுமே ஷோக்காத்தான் எய்துர...சர்ரி வர்ரோம்......ந்னா....அது சரி ஓட்டு போடணும்ல...இங்கிட்டு எதுனாச்சும் வச்சுட்டுப் போ....ஹஹஹ்

  நண்பரே கலக்கல்தான் போங்க! சரி இனி வந்துர்ரோம்.....கோபப்படாதீங்க.....சரியா....

  வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! அட்டகாசமான அறிமுகம்!

  ReplyDelete
 22. அய்யோ, அய்யோ நான்கூட என்னை பயமுறுத்தி அழவச்சிடுவீங்களோனு பயந்திட்டேன்.... கெக்கே ...பிக்கே...கெக்கே ...பிக்கே...கெக்கே ...பிக்கே... பயந்துடாதீங்கோ சும்மாகாச்சுக்கும் சிச்சேன்.

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரரே!

  தமிழ்மண ஸ்வாசத்தினிடையே, முரசு சத்தம் காதில் விழ வந்து பார்த்தால்,ஒரு கலக்கல் பகிர்வுடன் தங்கள் அறிமுகம் கண்டு வியந்தேன். முன்னதாகவே அறிமுகபடுத்தி கொண்டு அனைவரையும் மகிழ்விக்கும் தங்கள் எழுத்தாற்றலுக்கு என் வாழ்த்துக்கள்! இனி அடுத்தடுத்து அட்டகாசமாய் அசத்துங்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு அகமகிழ்கிறேன் சகோதரியே..... தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயன்றவரை முயல்கிறேன் நன்றி.

   Delete
 24. வணக்கம்
  கில்லர்ஜீ( அண்ணா)

  ஆரம்பம் மத்தாப்பு வெடிப்போல ஒலிக்கிறது... இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.. தொடருங்கள் எப்போது எங்கள் ஆதரவு உங்களுக்கு...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க, ரூபன் உங்களோட ஆதரவு இருக்கும் பொழுது //எனக்கென்ன மனக்கவலை//

   Delete
 25. ஆரம்பமே இப்படி களை கட்டுதே ஜி... அசுத்துங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நாங்க, நண்பா இந்த எளியவனுக்கு தெரிஞ்ச களி உருண்டை.

   Delete
 26. ஆரம்பமே அட்டகாசம் ஜீ...

  எல்லோரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைப்பது தான் என் டார்கெட் என்ற முடிவோடு களத்தில் குதித்த நண்பர் ஜீ அவர்களுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்..

  உங்கள் பதிவுகள் எல்லாம் சென்று படிக்கிறேன் ஜீ.

  த.ம.11

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க குதிக்கிறோம் குதிக்கிறோம்னு சொல்றீகளே எத்தனை அடி உயரத்துல இருந்து குதிப்பாங்க ?

   Delete
 27. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே - இது பழமொழி. கில்லர்ஜி பகிர்வுகள் வரும் பின்னே முரசொலி வரும் முன்னே - இது புதுமொழி.......

  மீசைக்கார நண்பா கலக்குங்க

  ReplyDelete
  Replies
  1. அடடே நல்லாயிருக்கே பட்டம்மா பாட்டி பழமொழி மாதிரி... நன்றி

   Delete
 28. வாழ்த்துகள் நண்பரே!!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வாங்க, தோழமையே.... சாட்ல மட்டும் பாரட்டிகிட்டு இருந்தீங்க முதல் முறையாக.. இப்படி இது அதைவிட சந்தோஷம் தருதே... நன்றி.

   Delete
 29. அசத்தல் ஆரம்பம்
  தொடர்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பருப்பு இல்லாமல் சாம்பாரா ? கவிஞர் வராமல் வலைச்சரமா ?

   Delete
 30. கில்லர்ஜி
  உங்களுக்கு மக்கள் பதிவர் பட்டம்
  நிச்சயம் தரலாம்
  மக்கள் திலகம் போல
  பின்னூட்டங்களே அதற்குச் சாட்சி

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, கவிஞரின் வாயால் பட்டமா ? இதைப்பெற எமக்கு தகுதி எட்டுமா ?

   Delete
 31. வாழ்த்துக்கள். வரும்போதே படுஅமர்க்களமாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருக, வருக, தினம் வாழ்த்துகளை தருக, தருக....

   Delete
 32. எங்க ஊருக்கும் வந்து முரசு கொட்டி அறிவித்ததற்கு ரொம்ப நன்றிங்கோ...

  நாளைக்கு வர இயலாதுன்னு நினைக்கிறேன். கண்டிப்பாக திங்கட்கிழமையிலிருந்து ஆஜராகிவிடுவேன்.
  ஆரம்பமே ரொம்ப சூப்பரா கீதுபா..
  வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊருக்கு மட்டுமா ? உலகத்துக்கே முரசொலி கேட்குதாம்....

   Delete
 33. இரண்டு நாள் முன்னதாகவே வந்திருந்து வலைச்சர விருந்து படைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி! அறிமுக பதிவு கலக்கலோ கலக்கல் வாத்யாரே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க 'தளிர் 'சுரேஷ் நன்றி.

   Delete
 34. ஆஹா... வரவிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கான வேலைகள் இழுப்பதால் லேட்டாத்தான் கவனிக்கறேன் கில்லர்ஜி... இந்த வார ஆசிரியரான கையோட அமர்க்களமா முரசொலிச்சு வந்துட்டீங்க... வர்ற வாரத்தை ஆரவாரமாக் கொண்டு போங்க. நாள் தவறாம நான் வந்துடுவேனாக்கும்.....

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 35. அசத்தலான தன்னறிவிப்பு அசத்துங்க ஜி

  ReplyDelete
  Replies
  1. வாங்க, தினேஷ்குமார்....

   Delete
 36. இசையுடன் தொடங்கிய சரம்.. துரிதப்படுத்துகிறது அடுத்தடுத்த நாட்கள் பகிர்வைக்காண வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வாழ், வாங்க, வந்து வாழ்த் ''திட்டு'' போங்க...

   Delete
 37. ஆரம்பமே அசத்தலா இருக்கே,தூள் கெளப்புங்க சகோ,
  விரைவாக வேட்டயை அரம்பிங்க வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பிச்சாச்சு இனி சூறாவளி தான்...

   Delete
 38. ஓபனிங்கே...செம சூப்பர் சகோதரா ! இந்த வாரம் கைதட்டல் வாரம் !வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. இன்றைக்கு வாழ்த்துற வாயி என்றைக்கும் வாழ்த்தட்டும்.

   Delete
 39. நாந்தாங்க ஜம்புலிங்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. தங்களைப் பற்றிய அறிமுகம் வழக்கமான தங்கள் பாணியில் எங்களை அதிகம் ஈர்த்துவிட்டது. குறுகிய காலத்தில் எழுத்துலகில் சாதனையை உண்டாக்கி, தொடரும் தங்களை வருக, வருக என வரவேற்கிறேன். ஆசிரியப்பணியை மிகவும் சிறப்பாகச் செய்து சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்பவே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. முனைவரின் வருகைக்கு மனமார்ந்த நன்றி தாங்கள் என்னிடம் இப்படியெல்லாம் எதிர்பார்க்கும் போதுதான் நண்பரே,,, மனதிற்க்குள் சிறிய பயம் எட்டிப்பார்க்கிறது இருப்பினும் ஆமைபோல் நகராமல் முயல்போல் ஒட முயல்கிறேன்,,, முனைவர் தொடர்ந்தால் சந்தோஷமே,,,

   Delete
 40. வாழ்த்துகள்! பணி தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சமுத்ரா நன்றி.

   Delete
 41. ஸ்டார்ட் மீசிக்...... ஜூப்பரப்போய்ய்ய்ய்யி

  ReplyDelete
  Replies
  1. ஆல்ரெடி ஸ்டார்ட் டண்டனக்கும், டணக்கும்... னக்கும்...

   Delete
 42. கலக்கல் ஆரம்பம் சகோ..நேற்றே பார்த்துவிட்டேன், வெளியில் இருக்கும்பொழுது அலைபேசியில் பார்த்ததால், கருத்திடவில்லை..
  முரசுரைத்து ஆரம்பித்துவிட்டீர்கள், கலக்குங்கள்..தினம் பார்க்கிறேன்.
  வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருக, சகோ தினம் வரவேண்டும் என்பதற்காகத்தானே... முரசொலி.

   Delete
 43. நண்பரே,

  இந்த வார வலைச்சர பொறுப்பேற்ற உங்களை பெருமையுடன் வாழ்த்துகிறேன்.

  உங்கள் " பாணியில் " அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள். புகழ்ச்சிக்கா சொல்லவில்லை... உங்களின் பன்முகத்திறமை என்னை வியக்க வைக்கிறது.

  காணொளி அருமை ஜீ ! வசனம் தொடங்கி, சரியான " டைமிங்கில் " வரும் மிமிக்ரி, மிக அருமையான இசை தேர்வு என அனைத்தும் டாப் ! மிக விரைவில் ஒரு குறும்படம் எடுக்க வாழ்த்துக்கள்.

  " யாரங்கே.... ?!..... வலைப்பூ வேட்டைக்கு கோடாலியுடன் கிளம்பியிருக்கும் நண்பர் கில்லர்ஜியை வரவேற்பதற்க்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.... தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கிவிட வேண்டும் ஆமாம் ! "

  ஆரம்பிங்க ஜீ... ஏ...டண்டனக்க... அ....டணக்குனக்க....

  ம்ம்ம்..அது !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க, சாமானியன் சரியான தருணத்தை சரியாக பாராட்டிய தங்களைக்கண்டு நான் வியக்கிறேன் நண்பா... இதுதான் எனக்கு கிடைத்த வெற்றி காரணம் அந்த தருணத்திற்க்காக நான் எவ்வளவு சிரமம் எடுத்தேன் இப்பொழுது அது சிரமமாக தெரியவில்லை. நன்றி

   Delete
 44. இவ்வார வலைச்சர ஆசிரியர் இனிய நண்பர் கில்லர்ஜிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ‘’கலக்கல் மன்னன்’’ மலேசியாவை கலக்கிக்கொண்டிருக்கும் இந்த அவசர தருணத்திலும் இந்த எளியவனின் கொட்டாரம் காண வந்தமைக்கு நன்றி நேற்று தாங்கள் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தும் அருமை மலேசியாவை கலக்கியது யாரு ? பதிவு போடலாம் போலயே....

   Delete
 45. அன்புள்ள ஆசிரியரே!

  வணக்கம் அய்யா....வாங்கய்யா... வாத்தியாரய்யா... வரவேவேற்க வந்தோம் அய்யா...! தமிழ் வாழ... தமிழன் வாழ... தமிழனாய் வாழும் தாங்கள் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்’ என்பதைப்போல நல்ல பதம் (சொல்) பார்த்து கொடுத்து இருக்கிறீர்கள். சில நொடிக் காணொளியில் “நாங்கள்லாம்.... ரம்ஜான் அன்னைக்கே சர்ச்சில போயி சாமி கும்பிடறவேங்கடா....“ N.S.K. பாணியில சிரிக்க...சிந்சிக்க வைத்து... நாங்கள்லாம் மோசமானவங்கல்லயே... முக்கியமானவங்கன்னு சொல்லாம சொல்றீங்களே!

  ‘எ( உ)னக்குள் ஒருவன் ’ பார்த்தேன்...
  பிறக்கும் போதும் அழுகின்றான்...
  ‘இறக்கும் போதும் அழுகின்றான்...
  இருக்கும் போது கவலை இல்லாமல்
  சிரிக்க மறந்தாய் மானிடனே...!’
  -கவியரசரின் கவிதை வரிகளை நினைவூட்டின.

  கணவன்...மனைவி நீ பாதி... நான் பாதி... என்றால் புரிதலும் பாதி பாதியாகத்தான் இருக்குமோ? புரிதல் முழுமையாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?
  ‘ கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்...துடுப்புகூட பாரம் என்றே கரையைத்தேடும் ஓடங்கள்....’ கவிப்பேரரசின் வரிகள் நினைவுக்கு வந்தன...
  தங்களின் கனவில் காந்தி வருகிறார்... காந்தியவாதி(ட்டரவர்) ஆச்சே.... இந்த ஜிக்கு அந்த அண்ணல் ஜியின் வாழ்த்துகள் கிடைக்கட்டும்...!
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக மணவையாரே... தாமதமாக வந்தமைக்கு தங்களின் மீது எமக்கு கோபம் இருக்குமென்பதை உணர்ந்து எம்மை பாராட்டு மழையில் நனைத்து குளிரவைத்து விட்டீர்களே... அபுதாபியில் குளிர் வாட்டி எடுப்பது தெரிந்து எமக்கு சமயமறிந்து சங்கு ஊதி விட்டீர்கள் எம்மை காந்தியவாதியாக்கிய நீர் மிகப்பெரிய காரியவாதி 80 புரிந்து விட்டது அய்யா... இருப்பினும் நன்றி மறப்பது நன்றன்றே... ஆகவே மனமார்ந்த நன்றி மணவையாரே...

   Delete
 46. ஆரம்பமே கலக்கலா இருக்கு கில்லர்ஜி!

  மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே,,,,, தொடர்க....

   Delete
 47. ஆரம்பமே அசத்தல். அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நண்றி நண்பரே.... தொடந்து வாங்க....

   Delete
 48. பதிலும் சேர்த்து
  பின்னூட்டங்கள் நூறைத் தொட்டது
  மகிழ்வளிக்கிறது
  நூறாக நான் இருப்பதுவும்....

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷமாக இருக்கிறது கவிஞரே....தாங்கள் 100 ஆண்டு வாழ இறைவனை வேண்டி... 101 வது ஆளாக நான் இருக்கிறேன்.

   Delete
 49. வாழ்த்துக்கள்...! அம்மாடியோ இங்க மட்டும் கேட்டுச்சே ஆரம்பமே அசத்தல் தான் போங்கள். தொடர்ந்து வரமுடியுமோ தெரியலை முயற்சிக்கிறேன்.சகோ !

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க என்னோட வீட்டுப்பக்கம் வரவில்லையே... மாமியார் வீட்டுக்கு ஒருவாரம் விருந்தாளி வந்தேன் இங்கேயாவது வந்தீங்களே அதுவே சந்தோஷம்.

   Delete
 50. வருக வருக என வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோவிந்தராஜ் சாரின் வருகைக்கு நன்றி

   Delete
 51. ஆத்தாடி 106 கமெண்ட்ஸா...ஆமா வில்லன்னு நினச்சா ...உள்ளுக்குள்ள காமெடியனா இருக்காகளே...சகோ பட்டைய கிளப்புக....

  ReplyDelete
  Replies
  1. அப்பாவியை வில்லன் என்று சொல்லலாமா ? நியாயமா ? தர்மமா ?அடுக்குமா ? அடுத்து என்னமோவுல..... சரி நான் பிஸி அப்புறம் வர்றேன் நன்றி.

   Delete
 52. பட்டய கிளப்புறீங்களே..! நிமிடத்துக்கு நிமிடம் படிக்கப் படிக்க சும்மா அதிருதுல்ல......! தூள் கிளப்புங்க..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, இப்படித்தான் கடைசியில வருவதா ?

   Delete
 53. Replies
  1. அதகளமா ? அமர்க்களமா ?

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது