07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 22, 2015

அந்த 7 நாட்கள் (நன்றி! நன்றி! நன்றி! )
இணைய வானத்தின் இலக்கியப் பூ
இணையற்ற பதிவர்களின் வலைப் பூ
வலைச்சரம் தந்ததய்யா வாய்ப்பு(பூ)
சிந்தட்டும் சிறப்பு என்னும் சிரிப்பு!

புதுவை வேலு

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலுவின்
அன்பு வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்!

அன்பின் சீனா அய்யா அவர்களும், தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும்,
16/03/2015 முதல் 22/03/2015 வரை வலைச்சரத்தின் ஆசிரியராக  பொறுப்பேற்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த அரிய வாய்ப்பான தமிழ் அமுத கலசத்தை, என்னிடம் தந்தார்கள். நானும் என்னால் இயன்ற வரையில் அந்த கலசத்தில் உள்ள அமுதத்தை!
பல்வேறு திறமிக்க பதிவாளர்களுக்கும்,  படைப்பாளர்களுக்கும் பகிர்ந்தளித்தேன். அதில் சில திறமையான பதிவாளர்களை என்னாள் சரியாக இனம் காண முடியாமல் கூட போய் இருக்கலாம்.
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல ஒளி வீசும் பதிவாளர்கள் ஏராளம். அவர்களிடம் நான் கற்ற விடயங்கள் அதிகம். ஆறுமுகன் அருளாலே 6 நாட்கள் கடந்து விட்டேன். இன்று ஏழாவதுநாள்.  இந்த இனிய நாளில் இன்னும் சில சிறப்பு பதிவாளர்களை அறிமுகம் செய்து விட்டு விடைபெறுகின்றேன்.நண்பர்களே!  முதல் நாள் அறிமுகபதிவின் போது என்னை பற்றி விடுபட்ட ஒரு செய்தி உங்களது மேலான பார்வைக்கு, அறியத் தருகிறேன்.
ACLI ( Association conitunuum des langues Indienne )
அமைப்பின் பொருளாளர்  பொறுப்பில் இருந்து கொண்டு பிரான்சு நாட்டில், வாழும் இடத்தில்,(ACLI)
இந்த அமைப்பின் மூலம் இங்குள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கின்றோம்.
ஆண்டு ஒன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைத் தேர்வுக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுத் தருகிறோம்..


 நண்பர்களே!

இந்த 7 நாட்களில் நான் கற்ற விடயங்கள் ஏராளம்.
பெற்ற அனுபவங்கள் யாவும் தனியாகவே பதிவாக போடும் 
அளவில் உள்ளது.


ஏழாவது நாளின் எழுச்சி மிகு பதிவாளர்கள் இவர்கள்:

கவிஞா் கி. பாரதிதாசன்
தமிழர் திருநாள் (கவிதை)
இவரை பற்றி சொல்ல வேண்டுமாயின் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.
காந்தக் குரல் பெற்ற கவிஞர். புதுவையின் புகழ் மணி.


தென்றல் சசிகலா

சிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று சொல்லும் இவர்,சிந்தித்த போது உருவான பதிவு இது!


சித்ரா சுந்தர்
மலரும் வத்தல் நினைவுகள் !அனுவின் தமிழ் துளிகள்
சூரியனும் நாங்களும்

சோளப்பணியாரம்
நள பாகத்தை நலமுடன் பதிவாக்கித் தருவதில் இவருக்கு இணை இவரே!
பதிவுகளில் பல்சுவை மணக்கும். இவர் ஒரு சமையல் சங்கீத சரிதா.

அந்த 7 நாட்களும் என்னுடன் பயணித்த அனைத்து அன்பு நல் உள்ளங்களுக்கும்
மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைக் கூறி பிரியா விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையை காண வாருங்கள்) 
 


 
 

48 comments:

 1. சிறப்பான செய்தியை தந்து, அருமையாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் திண்டுக்கல் தன்பாலன் அவர்களே!
   வணக்கம்!
   முதலாவதாக வந்து முதல் கருத்து வழங்கியது
   முத்தமிழ் என்னும் பாலில் பழம் விழுந்தது போன்று இனித்தது!
   தங்களின் முதலுதவிக்கு இதயத்தின் இனிய நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. அன்பின் யாதவன் நம்பி

   வலைச்சரத்தில் பதிவுகள் இடும் போது அவைகள் தமிழ் மணத்தில் இணைக்கப் பட வேண்டும். நினைவில் கொள்க. பதிவுகள் இடும் போது தவறாமல் தமிழ் மணத்தில் இணைத்து விடவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   Delete
 2. பிரான்சு நாட்டில், வாழும் இடத்தில்,(ACLI) என்ற அமைப்பின் மூலம் இங்குள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கின்றோம்!..

  கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..

  தமிழ்ப் பணியைத் தம்பணியாய் கொண்ட
  குழலின்னிசை யாதவன் நம்பி - நலம்
  யாவும் பெற்று - யாழும் இசையும் போல
  யாண்டுகள் பலநூறு புகழ் கொண்டு வாழ்கவே!..

  அன்பின் நல்வாழ்த்துக்களுடன்,
  துரை செல்வராஜூ..

  ReplyDelete
  Replies

  1. தமிழ்ப் பணியைத் தம்பணியாய் கொண்ட
   குழலின்னிசை யாதவன் நம்பி - நலம்
   யாவும் பெற்று - யாழும் இசையும் போல
   யாண்டுகள் பலநூறு புகழ் கொண்டு வாழ்கவே!..

   அருளாளர் அய்யாவின் அருள் மழையில் நனைந்தேன்!
   வாழ்த்து இசை நிச்சயம் " குழலின்னிசைக்கு" பெருமை சேர்க்கும்!
   "செய்வன திருந்தச் செய்" என்பார்கள் தமிழ்ப் பணி செய்வோமே!
   செய்வோமே! என்று கொட்டே முரசு! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 3. விடுபட்ட செய்தியதுவும் வியப்பினை படிப்பவர் மனதில் உண்டாக்கும் செய்தி. தமிழ்ப்பணியை தன்னார்வத்துடன் செய்து வரும் தங்களுக்கு என் வணக்கத்தையும்
  எழுச்சி மிகு அறிமுகங்களில் தென்றலின் அறிமுகம் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. வருக! சகோதரி!
   தாங்கள் எனது பதிவிற்கு வருவது இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன்!
   தங்களது வருகையையும்,
   வாக்கினையையும் பெற்றுத் தந்தது இந்த வலைச்சரம் ஆசிரியர் பணி என்று எண்ணும்போது "தென்றல்" தேனிசை தந்தது போல் இருந்தது.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 4. மிகச் சிறப்பாக வலைச்சர ஆசிரியப் பணியை மேற்கொண்டு, இனிய தமிழில் எல்லோரையும் மகிழ்வித்து, செம்மையான வலைச்சரம் கோர்த்ததற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஐயா!

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. செம்மையான வலைச்சரம் கோர்ப்பதற்க்கு செம்மொழியாம் தமிழே முழு நாதம் ஆசானே! வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி அய்யா!
   ஆசானே குழலின்னிசையை மறந்து விடாதீர்கள் வாருங்கள் எனது வலைப் பூ பக்கம்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 5. ஏழாவது நாளின் எழுச்சி மிகு பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு செய்யும் தங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஏழாவது நாளின் எழுச்சி மிகு பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்ல வந்த "வை" யகத்து "கோ"மேதகமே வருக!
   தங்களது வருகையும், வாழ்த்தும், மனதிற்கு மகிழ்வை ஊட்டியது.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 6. அன்புள்ள அய்யா,

  அந்த ஏழு நாட்களும்... ஏழு ஸ்வரங்களுக்குள் ... எத்தனை எத்தனையோ வலைப்பதிவர்களின் இராகங்களை மீட்டித் தங்களின் பணிகளுக்கிடையேயும் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பைப் பொறுப்புடன் ஏற்று திறம்படச் செய்தது மிகுந்த பாராட்டுக்குரியது.

  அய்யா பாரதிதாசன், சகோதரி .தென்றல் சசி கலா உள்ளிட்ட சிலரின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறீர்கள்.

  வலைச்சரம்... வாடா அன்புமலர்ச்சரம் தொடுத்து ஆரமாக்கித் தங்களை ஆராதித்து மகிழ்கிறது.

  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. "வலைச்சரம்" வாடா அன்பு மலர்ச்சரம் தொடுத்து, ஆரமாக்கித் தருவதற்கு,
   தங்களின் பதிவு என்னும் வாசமிகு மலரும் ஒரு காரணம் என்பதை நான் அறிவேன் அய்யா!
   வாழ்த்துக்கும், வருகைக்கும் வளமான் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 7. உங்கள் அறிமுக உரை அருமை. உங்கள் தமிழ்பணி வாழ்க வளர்க!
  சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியை செய்தீர்கள். வாழ்த்துக்கள்.
  இன்று இடம்பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியை செய்வதற்கு
   சகோதரியே! தங்களின் பதிவும், தந்த பின்னூட்டமே காரணமாகும்.
   வாழ்த்திற்கும்,
   வாக்கிற்கும் இனிய நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 8. ஒரு வாரம் இனிய அறிமுகங்கள் . நன்றி யாதவன் நம்பி

  ReplyDelete
  Replies
  1. இனிய அறிமுகங்களோடு என்னையும் இணைத்து வாழ்த்து இசை இசைக்க வந்த
   T.N.M அவர்களே!
   மூங்கில் காற்று பட்டு குழல் இன்னிசை இசைக்கட்டும்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 9. வேலு அவர்களே, தற்போது பிரான்ஸ் தேசத்திலா இருக்கிறீர்கள்? ITயில் இப்படி நடக்கிறதென முதலில் எனக்குக் காட்டிக் கொடுத்ததே பிரான்ஸ் தேசத்திலிருக்கும் Jouve (publishing company) கம்பெனிதான். இந்திய கிளையில் இலாபம் குறைந்தவுடன் வெகுவாக ஆட்குறைப்பு செய்தனர். அது எல்லா இடத்திலும் நடப்பதென்பது தெரியும். அதன் தொடர்ச்சியாக Jouve India (ஊதியம் 4.8 Lakhs PA - பணியிலிருந்த காலம் ஒரு வருடம்) விலிருந்து மேலிடத்திற்கு தகவல் அனுப்ப, ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பம் எங்களது அலுவகத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது (இதற்கெனவே பிரதயேகமாக பணியமர்த்தப்பட்டு பிரான்ஸ்சிலிருந்து ஒரு இளைஞர் இரண்டு மாத பயணமாக இந்தியா வந்திருந்தார்). பின்னர் நான் அங்கிருந்து வெளியேறி அடுத்தடுத்து வேலைக்கு சேர்ந்த GSR (6 Lakhs PA ஒரே மாதத்தில் காறி உமிழ்ந்துவிட்டு வெளியேறினேன்), Photon (7 Lakhs PA நாக்கை பிடுங்குவது போன்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு 15 நாட்களிலேயே வெளியேறினேன்) இரண்டு கம்பெனிகளிலும் இந்த ஒட்டுக் கேட்பு நடைமுறை ஏற்கனவே பின்பற்றப் படுவது மிக எளிதாகத் தெரிந்து கொண்டேன். இதில் அதிகம் மூக்கு வியர்த்தது Photon கம்பெனிக்குத்தான். பணியில் தொடர்வதும், வெளியேறுவதும் என் விருப்பம். ஆனால் வெளியேறிய அன்றிரவு (சென்னை-காரைக்கால் PRTC பேருந்தில் என் பின்னிருக்கையில் தூது சொல்ல ஏன் ஒரு காவலரை அனுப்பினார்கள் என்பதுதான் இன்றுவரை எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது). நடந்த உண்மைகள் பல மீடியா சேனல்களுக்குத் தெரியும் என்று சொன்னால் என்னை முழு பைத்தியக்காரன் என்று நீங்கள் முடிவிற்கு வரலாம். இவற்றையெல்லாம் ஆதாரப் பூர்வமாக என்னால் நிரூபிக்க இயலாது. எனினும் இப்பதிவைப் படிப்பவர்களுங்கு தெரிந்தவர்கள் மேற்சொன்ன கம்பெனிகளில் உயர் பதவியிலிருத்தால் விசாரித்துப் பார்க்கட்டும். இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் சாமானிய பொதுமக்களுக்கு தெரியாமல் பல அட்டூழியங்கள் மௌனமாக நடக்கிறது. அவையெல்லாம் வெளிவருவதில்லை. உண்மைகள் தூங்கலாம், ஆனால் ஒருபோதும் இறவாது. மீண்டும் வலைச்சரம் மூலம் விழிப்புணர்வு தர பாக்கியம் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பர் ராஜ்குமார் ரவி,
   தங்களது பின்னூட்டமானது பார்ப்பவர்களின் பார்வை தரும் விழிகளின் புருவத்தை உயர்த்தி பார்த்து படிக்கத் தோணும் என்பதில் மாற்றுக் கருத்து என்பது மருந்துக்கும் இல்லை
   மிக அற்புதமான ஒரு அனுபவ தெளிவுரை.வலைச்சரத்தின் வாயிலாக தங்களது பதிவை சிறந்த பதிவாக தேர்வு செய்தமைக்காக மனம் மகிழ்கின்றேன்!
   வாழ்த்துகள்!
   "உண்மைகள் தூங்கலாம், ஆனால் ஒருபோதும் இறவாது"
   ஆம் ஒருபோதும் இறவாத உயிருள்ள வார்த்தை!
   சிரஞ்சீவியாய் சிறக்கட்டும்!
   குழலின்னிசையை தொடருங்கள் நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 10. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
  சிறப்பான வாரமாக சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே...
  தமிழ் மணம் நவரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான வாரமாக சிறப்பிக்க உதவும் கரம் தந்து உதவிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
   வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 11. மேலும் ஒரு தகவல். இயல்பான உரையாடல்களை (அலைபேசி அழைப்பில் இல்லாதபோதும்) ஒட்டுக் கேட்க பயன்படுத்தப்பட்ட என் செல்போனில் இணைய இணைப்பெல்லாம் கிடையாது. 500 ரூபாய்க்கு மலிவாக வாங்கிய MTS CDMA போன்தான். அலுவலகத்தில் சைலண்ட் மோடில் என் பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கும். இதிலிருந்து அறியப்படுவது, நீங்கள் எந்த மொபைல் வைத்திருந்தாலும் ஒட்டுக் கேட்க இயலும். நமது மொபைலில் உள்ள ஸ்பீக்கரைவிட மைக் சக்தி வாய்ந்தது. மொத்த உண்மைகளும் வெளியேறினால் மக்கள் லேண்ட் லைன் போனிற்கே திரும்பி விடுவார்களோ எனும் பயத்தினால்தான் அரசாங்கங்களும் வெளியிடத் தயங்குகின்றது போலும். தொழில்நுட்பம் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. இன்று ஒரு தகவல் இது
   மிகவும் ஆச்சரியத் தகவல் இது
   "ஓட்டுக்கு லஞ்சம்"
   "ஒட்டுக்கு செல்போன் மஞ்சம்"
   அப்படித்தானே நண்பரே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 12. பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு வலைப்பூ எழுத்தாளர்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து, அவர்களை ஊக்கபடுத்தி, பாராட்டி, வேறுபாடு இல்லாமல் (அனுபவ, நடைமுறை, புதிய எழுத்தாளர்கள்) அறிமுகம் படுத்திய புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்தும் சமயத்தில் அருமையாக கையாண்டவிதம் சிறப்பு.
  குழல் ஊதுவோம் கொண்டாடுவோம்.

  sattia vingadassaamy

  ReplyDelete
  Replies
  1. பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு வலைப்பூ எழுத்தாளர்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து, அவர்களை ஊக்கபடுத்தி, பாராட்டி, வேறுபாடு இல்லாமல் (அனுபவ, நடைமுறை, புதிய எழுத்தாளர்கள்) அறிமுகம் படுத்துவதற்கு,
   நண்பர் சத்தியா அவர்களே
   தங்களை போன்றோர் தரும் நெறிபடுத்தும் பின்னுட்டக கருத்துக்களே ஆகும்!
   வருகைக்கும் தரமான பின்னுட்டக் கருத்து இட்டமைக்கு இனிய நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 13. வணக்கம்
  ஐயா

  ஒரு வாரம் சிறப்பாக பணியைசெய்தி முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்
  இன்றைய அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies

  1. வாருங்கள் கவிஞர் ரூபன் அய்யா அவர்களே!
   இந்த ஒரு வாரம் முழுவதும் என்னுடன் இருந்து முழு ஆதரவு தந்து,
   பதிவாளார்களுக்கு தேர்வு தேர்மையை அறிவுறித்தி நட்பு பணி செய்து உள்ளீர்கள்!
   மிக்க நன்றி நண்பரே! தொடருங்கள்!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 14. ACLI ( Association conitunuum des langues Indienne ) அமைப்பின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கொண்டு பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும் செயலுக்கு எனது பாராட்டுகள்.
  https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
  என்ற இணைப்பைச் சொடுக்கித் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா!
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
   தங்களது கருத்தினை செவியுற்றேன்!
   அவசியம் அதன்படியே செய்கின்றேன் அய்யா!
   வருக! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. எண்ணங்களை எழுத்தாக வடித்து வரும்
   யாழ்பாவாணரே! வருக! வணக்கம்!
   பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 15. அறிமுகப் பதிவை சிற்பாகவேச் செய்தீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. நலம் பயக்கும் புலவர் மொழி
   புலம் புகும் பூப்பெய்தி!
   புலவர்வர் அய்யா வாழ்த்து பின்னூட்டம்
   மகிழ்வு என்னும் தேரோட்டம்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 16. யாதவன் நம்பி,

  வலைச்சரத்தில் என் வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.

  ஒரு வார காலத்தை வெற்றிகரமாக முடித்திட்ட உங்களுக்கும், இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பொழுதெல்லாம் பேச வைக்கும், பொழுது போக்கு பக்கங்களின் ஏடுகளை புரட்டிய
   கையோடு, வலைச்சரம் வந்து, நன்றி பாராட்டி சென்ற சகோதரி சித்ரா சுந்தர்
   அவர்களுக்கு நன்றி!
   குழலின்னிசை பக்கமும் இனி வாருங்கள் சகோதரி!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. இந்த ஒரு வார காலமும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருந்து, சிறப்பான பணியாற்றி, பல நல்ல பதிவாளர்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகளும் நன்றியும்.

  தங்களின் எழுத்துபணி மேன்மேலும் சிறப்படையும்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 19. வாருங்கள் சாமானியரே!
  தாங்கள் தந்த வலைப் பூ பரிசே!
  இதற்குரிய காரணம்!
  வாழ்த்தின் வருகை வசந்தம்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 20. ஆசிாியா் பணியை வெற்றிகரமாக முடித்திட்ட தங்களுக்கும் இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருங்கள் சகோதரி! ராஜாவின் ரோஜா அவர்களே!
   வருக! வருக!
   "குழலின்னிசை"யையும் தாண்டி,
   வலைச்சரம் வாசல் வந்து,
   வாழ்த்து இசை இசைத்தமைக்கு
   வாய் மொழிவேன்
   வளர் நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 21. பிரான்சில் தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதற்குப் பாராட்டுக்கள். வலைச்சர ஆசிரியர் செவ்வனே செய்து முடித்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி
   தாங்கள் விட்டு விட்டு சென்ற வலைச்சரம் பணியை, உங்களை பின்பற்றி ஏதோ என்னால் இயன்ற வரையில் செய்து முடித்து விட்டேன் சகோதரி
   இங்கு தமிழ் வகுப்பு மிகவும் நல்ல முறையில் செல்கிறது. அடுத்து பெண் பிள்ளைகளுக்கு ஆடற் கலையாம் "பரதம்" கற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.ஆனால்? இடம் மற்றும் நேரம் பிரச்சனையால் அது இடர் பட்டு நிற்கின்றது
   விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம். ஏனெனில் நம்பிக்கைதானே வாழ்க்கை!
   வருகைக்கும், வளமான கருத்து தந்தமைக்கும் நன்றி சகோதரி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 22. இனிதே பணி முடித்தீர்கள். இன்றைய அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து வலையில் சந்திப்போம்.

  ReplyDelete
 23. நன்றி நண்பரே!
  தொடருங்கள் குழலின்னிசையை
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 24. இறுதியில் வந்து இணைந்தமைக்கு வருந்துகிறேன். இனிய சேவையை ஆற்றிய தங்களை மனமார வாழ்த்துகிறேன்.அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தம+ 12 பயணம் தோடரட்டும்.

  ReplyDelete
 25. வருகைக்கும், வசந்தம் தரும் வாக்கிற்கும்
  இனிய நன்றி!
  சகோதரி இனியா வுக்கு.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 26. Why no updates in valaicharam. I am following and reading this blog for years. it gave me lots of good articles to read from various writers.. Thank you.

  .:: MyFriend ::.

  ReplyDelete
 27. அன்பின் யாதவன் நம்பி - புதுவை வேலு

  அருமையான அறிமுகங்கள்

  தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்.

  தங்களீன் பதிவு நன்று. பாராட்டுகள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது