07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 6, 2015

நடத்திக்காட்டு

வணக்கம் நண்பர்களே!


உலக மகளிர் தினத்தின் இந்த வருட மையக்கருத்து 'நடத்திக்காட்டு ' (Make it happen)! தேவையானவை எவையோ, நடத்திக் காட்டுவோம்!

உலக மகளிர் தின வரலாறு, எனக்குத் தெரிந்ததை இங்கே பகிர்கிறேன்.
1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல்  வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். தங்கள் உரிமைகளுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஒரே நாளில் இதைக் கொண்டாட வேண்டும் எனபதே அவர் நோக்கம். பதினேழு நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் நூறு பெண்கள் கிளாராவின் கருத்தை ஆதரித்து ஒருமனதாக  'உலக மகளிர் தினம்' கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்களில், பின்லாந்து பார்லிமெண்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த முதல் மூன்று பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து 1911 மார்ச் 19ஆம் தேதியன்று 'உலக மகளிர் தினம்'  முதன்முதலாக ஆஸ்ட்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. வாக்குரிமை, பணியுரிமை, பொதுப்பணித் துறைகளில் இடம், பாலியல் பாரபட்சத்தை நிறுத்த என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு வாரம் கழிந்து மார்ச் 25ஆம் தேதி நியூயார்க்கில் 'ட்ரைஆங்கிள்' தீ விபத்து என்று அறியப்படும்  ட்ரைஆங்கிள் ஷர்ட்வைஸ்ட் தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீவிபத்து (Triangle Shirtwaist Factory fire) 140 பெண்களைப்  பலிகொண்டது. இதன் பின்னர், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் சட்டம் இயற்றுதல் என்று அடுத்த வருடங்களில் தீர்மானங்கள் முன்வைக்கப் பட்டன.
உலக மகளிர் தின வரலாறு பற்றி நாளையும் பார்ப்போம்!


இப்பொழுது சில வலைத்தள அறிமுகங்கள்.

'அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும் ' என்று சொல்லும் சகோதரர் ஞானப்பிரகாசத்தின் அகச்சிவப்புத் தமிழ் வலைத்தளம்.
""ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதேனும் ஒரு துறையில் இயல்பாகவே ஆர்வமும் திறமையும் இருக்கும். அது என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்தத் துறைக்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தால் எந்த விதச் சிரமமும் இல்லாமல் எளிமையாக அந்தத் துறையில் உச்சம் தொடலாம்." என்று சொல்லும் பதிவு 'இலட்சக்கணக்கில் வருமானம் இனி வெறும் கனவு தானா?'
ஏறுதழுவல் மேற்கத்தியப் பண்பாடா?

உண்மையானவன் என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரர் சொக்கன் சுப்ரமணியம் அவர்களின் வலைத்தளத்தில் இருந்து சில பதிவுகள்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஐ, ஐய் ??!! இந்தப் பதிவைப் பாருங்கள். இந்த அனுபவம் எனக்குமுண்டு. :)
“என்னது, தந்தி இறந்து விட்டதா?” என்னடி ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. யாராவது சும்மா விளையாடுறாங்களா?” என்று அவளிடம் தந்தியை கொடுத்தான்.....தந்தி இறந்துவிட்டது

ஜெயபால் அவர்களின் பொதிகைப்புயல் வலைத்தளத்தில் கனவா காவியமா
"புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே " என்று நம்பிக்கைத் தருகிறது.

"யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்." என்று சொல்லும் நமது வலைத்தளம்.
பிபிசி ஆவணப்படம் பற்றிய பதிவு.
பேச்சுரிமைக்கு எதிராகச் செயல்படும் இந்தியா.. என்ற பதிவு.

அமிழ்தினும் ஆற்ற இனிதே என்ற தொடர்கதை சுப்பிரமணிய தமிழகழ்வன் என்ற தளத்தில்.
மழலை நினைவுகள் மலரட்டுமே - 9

நாளை வேறு சில தளங்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது,
கிரேஸ் பிரதிபா

45 comments:

  1. ஷ்ஷ்..அப்ப்பா...லேட் ஆயுடுச்சோ?

    ReplyDelete
  2. நல்ல தகவலுடன் இன்றைய அறிமுகங்களையும் தந்தமைக்கு பாராட்டுகள் சகோ நண்பர் உண்மையானவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மகளிர் தின வாழ்த்துகளுடன்
    தம 1

    ReplyDelete
  4. மகளிர் தின வரலாற்றை பகிர்ந்துக்கொண்டாமைக்கும் நன்றியும் மகளிர் தின வாழ்த்துக்களும்.

    என்னுடைய சிறுகதையான தந்தியையும் தமிழ் பாடம் நாடகத்தையும் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ. தகவலை வந்து சொன்ன நண்பர் கில்லர்ஜிக்கும் என்னுடைய நன்றிகள்.
    இன்றைக்கு அறிமுகம் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ..நன்றி.

      வலைச்சர அறிமுகம் பற்றி நானும் சொல்லியிருந்தேனே, வரலியா? :)

      Delete
  5. அருமையான அறிமுகங்கள் கிரேஸ்! தந்தியை படித்தேன் ...மிகவும் ரசித்தேன் . இந்த அறிமுகங்களை படித்தவுடன், அடேங்கப்பா ... இன்னும் எழுத எவ்வளவோ விஷயங்கள் இருகின்றதே என்று தோன்றியது. புது புது முகங்கள் .. புது புது பதிவுகள் .. வலைசரத்தை இன்னும் ஓர் படி மேலே தூக்கி வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ, எவ்வளவு நல்ல விசயங்கள் இருக்கின்றன...நேரம் தான் வேண்டும் :)
      மகிழ்ச்சியுடன் நன்றி..

      Delete
  6. புதிய தளங்களை அறிமுகம் செய்துள்ளது - இன்றைய தொகுப்பு!.. அருமை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  7. உங்கள் அறிமுகங்கள் அருமை..!

    ReplyDelete
  8. 2 புதிய தளங்கள் அறிமுகத்திற்கு நன்றி....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஓ மகிழ்ச்சி அண்ணா, நன்றி.
      ஏதாவது தளத்தில் நீங்கள் இல்லையென்றால் அதை அறிமுகப்படுத்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி :))

      Delete
  9. மகளிர்தினம் பற்றிய சிறப்பானபதிவு... ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மகளிர்தின செய்திகளுக்கு நன்றி.
    உலக மகளிர் தினத்தின் இந்த வருட மையக்கருத்து 'நடத்திக்காட்டு ' (Make it happen)! தேவையானவை எவையோ, நடத்திக் காட்டுவோம்!//
    தேவையானவை எவையோ நடத்திக் காட்டுவோம், அருமை.

    புதிய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மகளிர் தினம் பற்றி நல்லதொரு தகவல் கிரேஸ்.. சூப்பர்

    ReplyDelete
  12. உலக மகளிர் தினத்தின் இந்த வருட மையக்கருத்து 'நடத்திக்காட்டு ' (Make it happen)! தேவையானவை எவையோ, நடத்திக் காட்டுவோம்! என்ற சொற்றொடர் மன உறுதியைத் தெளிவுபடுத்தியது. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா, மன உறுதி இப்பொழுது மிகவும் தேவையாக இருக்கிறதே.
      மிக்க நன்றி ஐயா..

      Delete
  13. அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள். அறிமுகங்களுக்கும்.

    ReplyDelete
  14. அன்புள்ள சகோதரி,

    உலக மகளிர் தின வரலாறு பற்றி விரிவாக கூறியதைப் பார்த்து அறிந்தேன்.

    பல பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
    த.ம.5

    ReplyDelete
  15. நடத்திக்காட்டுவோம் அருமைய்யா, பிள்ளரெம்ப களச்சுப்போச்சே.........வழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க மாலதி.. :)))
      நடத்திக்காட்டுவோம்!! நன்றி.

      Delete
  16. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நேச வணக்கம்!

    என் வலைப்பூவை 'வலைச்சர'த்தில் அறிமுப்படுத்தியதற்கு மிகவும் நன்றி! குறிப்பாக, 'ஏறு தழுவல்' பற்றிய கட்டுரையை எடுத்துக்காட்டியதற்கு மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ, மகிழ்ச்சி. நன்றி!

      Delete
  17. மீண்டும் தாமத வருகை மா.
    எனினும் உலக மகளிர் தினம் பற்றிய வரலாற்றுக் குறிப்புடன் புதிய தள அறிமுகங்கள் அருமை. நன்றி. தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. அது பரவாயில்லை அண்ணா :))
      நன்றி அண்ணா

      Delete
  18. சாரி கிரேஸ் லேட் ஆய்டுத்து:(( நம்ம ஞானபிரகாசன் சகாவை அறிமுகப்படுத்திருகீங்க :))) ரொம்ப மகிழ்ச்சி!! மகளிர் தின முழு வரலாறையும் தெரிஞ்சக்க ஆவலா இருக்கேன் டியர்:)

    ReplyDelete
    Replies
    1. ஓ பரவாயில்லை மைதிலி..நான் பதிவு போடவே லேட் ஆயுடுச்சு..அதைத்தான் குறிப்பிட்டுருந்தேன் :)
      நன்றி டியர்..

      Delete
  19. வாழ்த்துக்கள் தொடர்க

    ReplyDelete
  20. உலக மகளிர் தினம் குறித்த வரலாற்றைப் பதிவு செய்து அத்துடன் சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்த தங்களுக்குப் பாராட்டுக்கள்! மகளிர் தின வாழ்த்துக்கள்! நடத்திக்காட்டுவோம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலையரசி. ஆமாம் நடத்திக்காட்டுவோம்!!

      Delete
  21. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நல்ல தகவல் சகோதரி! இரு நண்பர்கள் அறிமுகங்களில்....உண்மையானவன் நண்பர் சொக்கன் அவர்களும், அகம் சிவப்பு நண்பர் இபு ஞானப்பிரகாசம் அவர்களும் .புதியவர்களை அறிந்து கொண்டோம்....மிக்க நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது