07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தேன் மதுரத் தமிழ் கிரேஸ். Show all posts
Showing posts with label தேன் மதுரத் தமிழ் கிரேஸ். Show all posts

Saturday, March 7, 2015

மகளிர் தின வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன்

வணக்கம் நண்பர்களே!

உலக மகளிர் தின வரலாறு தொடர்ச்சி..
முதல் உலகப்போர் துவங்கும் முன்னர் அமைதியை வலியுறுத்தி,ரஷ்ய மகளிர் பெப்ரவரி 1913, கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அவர்களின் முதல் உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடினர். அதன் பின்னர் ஏற்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின் உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து அதுவே கடைபிடிக்கப் படுகிறது. 1914இல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் போருக்கு எதிராகப் பெண்கள் ஊர்வலம் நடத்தி, பெண்கள் ஒற்றுமையைக் காட்டினர்.
1917இல் இரண்டு மில்லியனிற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் போரில் உயிர் துறந்திருந்தனர். அந்த ஆண்டு பெப்ரவரித் திங்கள் கடைசி ஞாயிறன்று பெண்கள் 'பிரட் and பீஸ்' (bread and peace) என்ற போராட்டத்தைத் துவக்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் ஜார் அரசு நீக்கப்பட்டு, பதவிக்கு வந்த தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பெண்களின் மன உறுதிக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு! பெண்கள் இணைந்து போராடினால் எந்த அரசையும் நிலை குலையச் செய்ய முடியும்.  பெண்களின் போராட்டம் துவங்கியது அப்பொழுது ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ஜூலியன் காலெண்டரில் பெப்ரவரி 23ஆம் நாள், அது தற்போதைய கிரகோரியன் காலெண்டரில் மார்ச் 8.
சோசியலிஸ்ட் இயக்கத்தால் துவங்கப்பட்ட உலக மகளிர் தினம் பின்னர் உலகளாவிய கவனம் பெற்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையும் வருடாந்திர மாநாடுகள் நடத்தி உலக மகளிரின் உரிமைகளையும் சமூக, அரசியல் பொருளாதாரப் பங்கேற்பையும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபை 1975 ஆம் ஆண்டை உலக மகளிர் ஆண்டாக அறிவித்தது. மகளிர் இயக்கங்களும் அரசுகளும் மகளிர் தினத்தன்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடியும் வாழ்வின் அனைத்துத் தரப்பிலும் கிடைக்கவேண்டிய சமஉரிமைகள் கிடைப்பதற்கான விழிப்புணர்வை நினைவுபடுத்தியும் வருகின்றன.
இந்த நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், அர்மேனியா, பெலாரஸ், கம்போடியா, கியூபா, கசகிஸ்தான், ஜியார்ஜியா, லாவ்ஸ், மங்கோலியா, எரித்ரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உகாண்டா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியெட்னாம், சாம்பியா போன்ற நாடுகளில் மகளிர் தினம் அரசு விடுமுறையாகவும், நேபால், சீனா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெண்களுக்கான அரசு விடுமுறையாகவும் அனுசரிக்கபப்டுகிறது. ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மரியாதை செய்யும் விதமாகப் பரிசுகள் கொடுத்தும் கொண்டாடுகின்றனர். இதைப் படிக்கும் ஆண்கள் ஏதாவது சிறு பரிசை உங்கள் வீட்டுப் பெண்களுக்குக் கொடுங்கள் :)))
சமூக வலைத்தளங்களில் கீழே உள்ள hashtags பயன்படுத்தி நம் ஆதரவைக் காட்டுவோம்.
#MakeItHappen
- #womensday
- #IWD2015
- #internationalwomensday


இப்பொழுது இன்றைய அறிமுகங்கள்.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்ற வலைத்தளத்தில், "வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்து பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரி அமைப்பை 2000 ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். " - 

பாரதி பயிலகம் வலைப்பூ என்ற தளத்தில் கட்டுரைகள் மற்றும் கலை இலக்கியத் திரையில் முத்திரை பதித்தோரின் வரலாற்றுச் சுருக்கம் என்ற தலைப்பிற்கு ஏற்ப பதிவுகள் இருப்பதைக் காணலாம்,
தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி பல பதிவுகள், அதில் ஒன்று இது.

பலராமன் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில், ஊரே திரண்டு சிறைச்சாலையை உடைத்தால்.."மக்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்."
வித்தியாசமான ஆனால் இன்றைய யதார்த்த பார்வையில், முதியவர் பதிவு. இன்றைய இளைஞர் சமுதாயம் தாய் மொழி பற்றி என்ன நினைக்கிறது என்ற பதிவு. பெண்ணைப் பெற்றவன் நெடுங்கதை.

ஓலைக் கொழுக்கட்டை சாப்பிட நாகேந்திர பாரதி அவர்களின் தளத்திற்கு வாருங்கள். பிரம்பு வாத்தியார் இப்போதைய சிறுவர் தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

சொக்கலிங்கம் கருப்பையா அவர்களின் தமிழ் வான் என்ற தளத்தில் நாலடியார் பாடல்களை அருமையாய் விலக்கிப் பதிவு செய்து வருகிறார்.
நாளும் ஒரு நாலடியார் - பாடல் 37
நாளும் ஒரு நாலடியார் - பாடல் 29
கடந்த இரு மாதங்களாகத்தான் வலைதளத்தில் எழுதுகிறார், அவரை வாழ்த்தி ஊக்குவிப்போம்.
jobstamilan என்ற வலைத்தளத்தில் இருந்து சில பயனுள்ள பதிவுகள்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்காக, இப்பதிவு.

இத்துடன் எனது வலைச்சரப் பணி இந்த வாரம் நிறைவடைகிறது. மீண்டும் எப்பொழுதேனும் உங்களைச் சந்திக்கிறேன். 

உலக மகளிர் தின வாழ்த்துகள்!

நன்றியுடன்,
கிரேஸ் பிரதிபா 
மேலும் வாசிக்க...

Friday, March 6, 2015

நடத்திக்காட்டு

வணக்கம் நண்பர்களே!


உலக மகளிர் தினத்தின் இந்த வருட மையக்கருத்து 'நடத்திக்காட்டு ' (Make it happen)! தேவையானவை எவையோ, நடத்திக் காட்டுவோம்!

உலக மகளிர் தின வரலாறு, எனக்குத் தெரிந்ததை இங்கே பகிர்கிறேன்.
1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல்  வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். தங்கள் உரிமைகளுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஒரே நாளில் இதைக் கொண்டாட வேண்டும் எனபதே அவர் நோக்கம். பதினேழு நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் நூறு பெண்கள் கிளாராவின் கருத்தை ஆதரித்து ஒருமனதாக  'உலக மகளிர் தினம்' கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்களில், பின்லாந்து பார்லிமெண்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த முதல் மூன்று பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து 1911 மார்ச் 19ஆம் தேதியன்று 'உலக மகளிர் தினம்'  முதன்முதலாக ஆஸ்ட்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. வாக்குரிமை, பணியுரிமை, பொதுப்பணித் துறைகளில் இடம், பாலியல் பாரபட்சத்தை நிறுத்த என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு வாரம் கழிந்து மார்ச் 25ஆம் தேதி நியூயார்க்கில் 'ட்ரைஆங்கிள்' தீ விபத்து என்று அறியப்படும்  ட்ரைஆங்கிள் ஷர்ட்வைஸ்ட் தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீவிபத்து (Triangle Shirtwaist Factory fire) 140 பெண்களைப்  பலிகொண்டது. இதன் பின்னர், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் சட்டம் இயற்றுதல் என்று அடுத்த வருடங்களில் தீர்மானங்கள் முன்வைக்கப் பட்டன.
உலக மகளிர் தின வரலாறு பற்றி நாளையும் பார்ப்போம்!


இப்பொழுது சில வலைத்தள அறிமுகங்கள்.

'அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும் ' என்று சொல்லும் சகோதரர் ஞானப்பிரகாசத்தின் அகச்சிவப்புத் தமிழ் வலைத்தளம்.
""ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதேனும் ஒரு துறையில் இயல்பாகவே ஆர்வமும் திறமையும் இருக்கும். அது என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்தத் துறைக்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தால் எந்த விதச் சிரமமும் இல்லாமல் எளிமையாக அந்தத் துறையில் உச்சம் தொடலாம்." என்று சொல்லும் பதிவு 'இலட்சக்கணக்கில் வருமானம் இனி வெறும் கனவு தானா?'
ஏறுதழுவல் மேற்கத்தியப் பண்பாடா?

உண்மையானவன் என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரர் சொக்கன் சுப்ரமணியம் அவர்களின் வலைத்தளத்தில் இருந்து சில பதிவுகள்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஐ, ஐய் ??!! இந்தப் பதிவைப் பாருங்கள். இந்த அனுபவம் எனக்குமுண்டு. :)
“என்னது, தந்தி இறந்து விட்டதா?” என்னடி ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. யாராவது சும்மா விளையாடுறாங்களா?” என்று அவளிடம் தந்தியை கொடுத்தான்.....தந்தி இறந்துவிட்டது

ஜெயபால் அவர்களின் பொதிகைப்புயல் வலைத்தளத்தில் கனவா காவியமா
"புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே " என்று நம்பிக்கைத் தருகிறது.

"யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்." என்று சொல்லும் நமது வலைத்தளம்.
பிபிசி ஆவணப்படம் பற்றிய பதிவு.
பேச்சுரிமைக்கு எதிராகச் செயல்படும் இந்தியா.. என்ற பதிவு.

அமிழ்தினும் ஆற்ற இனிதே என்ற தொடர்கதை சுப்பிரமணிய தமிழகழ்வன் என்ற தளத்தில்.
மழலை நினைவுகள் மலரட்டுமே - 9

நாளை வேறு சில தளங்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது,
கிரேஸ் பிரதிபா

மேலும் வாசிக்க...

Thursday, March 5, 2015

சீரிய வழி செய்வோம்

வணக்கம் நண்பர்களே!

"பெண்கள் விழித்துக் கொண்டால் 
   பெருமலையும் நகருமாம் 
 விழித்தோர் இணைந்தும் விட்டால் 
   இழி பதர்கள்  எம்மாத்திரம்?
விழித்துக் கொண்டோம்,
இணைந்தும் விடுவோம் 
சீரிய வழி செய்வோம் 
கூரிய அறிவுடையோர்  நாம்!"

இன்றைய வலைத்தள அறிமுகங்கள்,

"11 ஆம் வகுப்பு படிக்கும் (16 வயது) நான் என்னால் முடிந்ததை, தெரிந்ததை இத்தளம் மூலம் உங்களுக்கு தெரிவித்து வந்தேன். அதில் மிக்க மகிழ்ச்சியும் அடைந்தேன்.  இப்பொழுது நான் இத்தளத்தில் 49 பதிவுகளை கடந்து 50 பதிவை வெற்றிகரமாக இப்பதிவின் மூலம் பதிவிடுகிறேன்..." என்று தன் நவின் வலை - தொழில்நுட்பம் என்ற தளத்தில் சொல்லியிருக்கும் நவின் அவர்களுக்கு வாழ்த்துகள்! மேலும் பல பயனுள்ள பதிவுகள் தர வேண்டும் என்று வாழ்த்துவோம். 
டி.என்.ஏ. ஸ்டோரேஜ் பற்றிய இவர் பதிவு, பதினாறு வயதில் அருமையான தகவல்களை அறிந்துகொள்வதுடன், மற்றவருக்கும் பயன்பட, குறிப்பாகத் தமிழில் எழுதும் இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
பென்டிரைவில் உள்ள கோப்புகளைப் பார்க்கலாமென்றால் பூமி சுற்றுவது போல் சுற்றிக் கொண்டேயிருக்கிறதா? இந்தப் பதிவைப் பாருங்கள், பென்டிரைவ் வேகத்தை அதிகப்படுத்த..

தொழில்நுட்பம் என்ற தளத்தில் இருந்து டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெரும் பயன்கள், அடிப்படை என்றாலும் சிலருக்கு உதவலாம்.
'வேலி இல்லா வானிலே விரையும் ராக்கெட் ஓட்டுவான்', யார் என்று பார்க்க சொடுக்குங்கள் இங்கே, கோலி குண்டு ஆடலாம். பிளாக்கர் டிப்ஸ், இலவச மென்பொருள், சிறுவர் பாடல்கள் என்று பல்வகைப் பதிவுகள் இத்தளத்தில் உள்ளன.

இந்தியாவில் வாகன ஓட்டுனர் உரிமம் எப்படி வாங்கினீர்கள், நினைவில் இருக்கிறதா? இவருக்கு இருக்கிறதாம், சொல்லத்தான் முடியவில்லையாம், சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு. அது எப்டி சொல்ல முடியும்? நம் நாட்டு 'சிறந்த' ரகசியம் ஆயுற்றே!!!  
""நான் இந்த வருட பரீட்சை மட்டும் அல்லாமல் அதன் கூடவே  CA வும் செய்கிறேன்", 
என்று சொல்ல ..அவர் முகம் மாறி ... 
எங்கே அவள் "?
என்று சத்தம் போட்டு கொண்டே மறைந்தார். " சிரித்து சிரித்து வயிறு வலிதான் வந்தது!! :)
"சி.ஏ. படிப்பின் இப்படியொரு அர்த்தம் எனக்குத் தெரியாமப் போச்சே, ஐ! காணும் பொங்கல் காணாமல் போகுமா?
"இப்படி காலையில் எழுந்து பிள்ளைகளை பரமாரிப்பது, பின் சமையல் அறை வேலை, பின்னர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, பின் அலுவலகம், மாலை,  பிள்ளைகளின் வீட்டு பாடங்கள் பிள்ளைகளின் இதர நடவடிக்கைகள், வீட்டை சுத்தம் படுத்துதல், வங்கி கணக்கு, வரவு செலவு என்று எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகின்றோம்." எனக்கு வர கோவத்துக்கு.. நியாயமான கோவம் தான்! பல அருமையான பதிவுகள், 'விசுawesomeமிண்துணிக்கைகள்' என்ற சகோதரர் விசு அவர்களின் தளத்தில். தளத்தின் பெயரே வித்தியாசமாய்!! இவர் இப்பொழுது தன் தளத்தை .com என்று மாற்றிவிட்டார். தொடர இந்த இணைப்பைப் பார்க்கவும்.

மாலதி என்ற தன் தளத்தில் எழுதிவரும் மாலதி அவர்கள் மாத்தியோசித்தது எதை? கைபேசியின் தீமைகள் படித்து கவனமாக இருந்துகொள்ளுங்கள். வெளுத்ததெல்லாம் பால் இல்லை என்பதைப் போல 'இனிப்பதெல்லாம் தேனல்ல' என்று சொல்லும் இவரின் கவிதை சில பெண்களுக்கு கண்திறக்கும் சாட்டையடி!

மழைச்சாரல் என்ற தளத்தில் பிரியா அவர்களின் இப்பதிவு மனதை உலுக்கியது..வாழ்வெனும் சுருக்கம். இதை இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் கேட்க வேண்டுமோ நம் திருநாட்டில், இந்தியா பெண்களுக்கான தேசமா? பெண்களின் வலி இவர் பதிவில் தெரிகிறது. என்னைக் கவர்ந்த மற்றொரு கவிதை, நடந்தேறா முயற்சி.

வேறு சில தளங்களுடன் நாளை உங்களைச் சந்திக்கிறேன், அதுவரை விடைபெறுவது,
--கிரேஸ் பிரதிபா 
மேலும் வாசிக்க...

Wednesday, March 4, 2015

என்னைக் கடந்து செல்பவனே

வணக்கம் நண்பர்களே!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைப் பாட நூல்களில் படித்தும், பின் பெருமையாகவும்  சொல்லிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே அப்படி இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால்...பார்த்துட்டீங்களா? இப்போ இங்க வாங்க.. உண்மையில் அப்படி இல்லைதானே? அறியாதவரைப் பார்த்தால் சிரிப்பதோ, ஹாய் சொல்லுவதோ நம் ஊரில் இல்லை. ஆனால் கணியன் பூங்குன்றனார் நம்மூர்! 
"யாதும் ஊரே அறிந்தவர் கேளிர்" என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால் அறியாதவரிடம், பேசப் பழக பயம். யார் நல்லவர், யார் கெட்டவர் என்று தெரியாது. இப்படித்தான் நானும் வலைத்தளம் ஆரம்பித்து அதைப் பரப்புவதற்கு யோசித்தேன்..பின்னர் மெதுவாக வெளியே வர வர, எத்தனை நல்ல நட்புகள்! உலகமெங்கும்!! வெளியே வந்து பேசினால் தானே அறியாதவர் அறிந்தவராக முடியும்? 

ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன் என்பவர் ஒரு கவிதையில் இது போல் சொல்லியிருப்பார், 
"யாரோ, என்னைக் கடந்து செல்பவனே,
என்னோடு பேச நீ விழைந்தால்
ஏன் பேசக் கூடாது?
நானும் ஏன் பேசக் கூடாது?" இது அவர் கவிதையிலிருந்து என்னைக் கவர்ந்து என் நினைவில் பதிந்த  ஓரிரு வரிகளின் தமிழாக்கம். 
அன்னியர் இருவர் சந்தித்தால், பேசினால் தானே அறிந்தவர் ஆக முடியும்? அப்படிப் பேசுவதைத் தான் கவிஞர் விரும்பியிருக்கிறார். கணியன் பூங்குன்றனாரும் இதைத் தான் பல ஆண்டுகள் முன்னரே சொல்லியிருக்கிறார். விட்மன் கவிதை படித்தபொழுது நான் இப்படித்தான் இரண்டையும் இணைத்துப் பார்த்தேன்.

பயம், சந்தேகம் இவற்றைக் கடந்து கவனத்துடனும் ஒரு அடி எடுத்து வைத்தால் நட்புச் சிறகு விரிக்கும். இதை வலைத்தளத்தில் நான் பார்க்கிறேன்.
சரி, இன்று நான் இங்கு அறிமுகப்படுத்தப் போகும் தளங்களைப் பார்க்கலாம்.

'இங்கே எழுத்தாக நான்' என்று தன் சுயவிவரத்தில் சொல்லியிருக்கும் மிருணா கண்டிப்பாகத் தெரிகிறார் அவர் எழுத்துகளில். ஒரு சில இங்குப் பகிர்கிறேன்,  சைக்கிள் என்ற அவர் தளம் சென்று மற்றதைப் பாருங்கள்.

"அவளது ஓட்டத்தின் ஏற்ற இறக்கங்களில்
தானும் சறுக்கு விளையாடிக் கொள்ளும்
மெலிந்த போன இடுப்புக் குழந்தை." காட்சி கண்முன் வந்து மனதைப் பிசைகிறது. இன்றும் இந்நிலை இருக்கும்பொழுது வளர்ந்துவிட்டோம் என்று சொல்வது விந்தையான விசயம். முழுக்காட்சியையும் காண இங்கே சொடுக்குங்கள், பேசும் பொற்சித்திரமே.



"வறண்டு போன ஆறுகளின் செம்பழுப்புத்  தோல் தடங்கள்" என்ன ஒரு சொற்கோவை, ஈரக்காற்று கவிதையில். சொற்களும் கருத்தும் இனிதே உறவாடும் இவர் கவிதைகளின் ஊற்று எங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது இப்பதிவில் சொர்ணம் அம்மா நீ.

அமிர்தா அவர்களின் தளம் நந்தவனம். வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவப் பகிர்தல் என்று சொல்லும் அவரின் தளத்தில் சமூகம் சார்ந்த விசயங்கள் நிறைய இருக்கின்றன. அமிர்தா அவர்களின் தளத்தில் இருந்து சில பதிவுகள்,

எப்பாடு பட்டாவது பிள்ளைகளைக் கரையேற்ற தாய் படும் பாடும், சமூகத்தின் வெட்டிப்பேச்சும், மேரியம்மா பதிவில். 

2012ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல்  - நாவல் ஒரு அலசல்.
சிறந்த ஒரு ஆசிரியர், சொர்ணவல்லி மிஸ்.

அனிதா என்ற தளத்தில் எழுதிவருகிறார் அனிதா சிவா அவர்கள்.அவரின் சில பதிவுகள், 
 தெருவில் விடப்பட்ட தாய்  
வேலைக்குச் செல்லும் பெண்கள்.
இவர் அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன், இனி எழுத வாழ்த்துவோம்.

செந்தமிழ் அவர்களின் தளம் அறிவை விசாலமாக்கு. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அறிவுத் தோட்டம் - இது விவசாயினுடைய கதை என்ற பதிவு, அவர் ஒரு இயற்கை விவசாயி என்று சொல்கிறது. அவரின் இந்த முயற்சிக்கு  நல்வாழ்த்துக்களைச் சொல்வதோடு  மேலும் நிறைய எழுதவும்  வாழ்த்துவோம். அவரின் கனவோ காத்திருக்கு அருமையான ஒரு தாலாட்டு.

செந்தழல் சேது அவர்களின் தளம் அரும்பிதழ், கவிதைகள், கதைகள், சமூகம் பற்றிய பதிவுகள் இவர் தளத்தில் காணலாம்.
"என் பார்வையில் 
எத்தனை 
ஏக்கங்களென்று 
கணித மேதையாலும் 
கணித்து 
விட முடியாது " வாழும் வறுமை கவிதையிலிருந்து.
மகத்தான பால்யம் கவிதை.

மீண்டும் நாளை சந்திக்கும் வரை விடை பெறுவது,
--------------கிரேஸ் பிரதிபா 




மேலும் வாசிக்க...

Tuesday, March 3, 2015

வணக்கம், வணக்கம் ..நட்புகளே நலமா?


வலைச்சர வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!


வலைச்சர ஆசிரியர் பணியில் மூன்றாவது முறை, வாய்ப்பளித்த சீனா ஐயா மற்றும் பிரகாஷ் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்!






சில வருடங்களுக்கு முன், கொடைக்கானலில். மழை பெய்த ஒரு காலை. அந்தச்  சிறுமிக்கு மூன்று வயது. பள்ளிக்குச் செல்லும் முதல் நாள், வெள்ளைச் சீருடை,  சூ அணிந்து தயாராகி விட்டாள். பள்ளி வாசல் சென்ற பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. அழுது ஓடி விட முயன்றவளைத் தந்தை தூக்கிச் செல்கிறார்.  உதைத்து அழுததில் தந்தையின் உடையில் 'சேற்றால் காலனி பெயிண்டிங்'!! தந்தையிடம் இருந்து சிறுமியை வாங்கிய கத்தோலிக்கச் சகோதரியின் வெள்ளை உடுப்பிலும் சேற்றால் வரைபடம். இப்படி முதல் நாளிலேயே அழகாக வரைந்துத் தன் திறமையைக் காட்டிய அந்தச் சிறுமி, இரு வருடங்கள் கழித்துத் தன் தங்கையிடம் சொல்கிறாள், "பள்ளி நல்லாயிருக்கும், அக்கா இருக்கேன்ல, அழக் கூடாது!".

இன்னும் சில வருடங்கள் கழித்து வேலைக்குச் செல்லும் முதல் நாள். கல்லூரிப் படிப்பு முடிவதற்குள், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிலேயே ப்ராஜெக்ட் செய்யச்  செல்கிறாள். ஒரே நடுக்கம்..அலுவலகத்தில் நுழைந்து உள்ளே நடுங்கிக் கொண்டு வெளியே தீர்க்கமான பார்வையுடன் நிற்கிறாள். பின்னே, பாரதி பாடல் படிச்சுருக்காளே!உள்ளே அழைத்துச் சென்ற HR ப்ராஜெக்ட் லீடரை அறிமுகம் செய்து விட்டுச் செல்ல, அனைத்து  டீம் மெம்பெர்களிடமும் கை குலுக்கி நல்ல பிள்ளை போல அமைதியாக உட்காருகிறாள். இப்படித் தட்டுத் தடுமாறிப் பழகி இருவருடங்களில் டீம் லீடராக மாற, அவளிடம் புதிதாகச் சேர்ந்த நால்வரை அழைத்து வருகிறாள் அதே HR!

சில வருடங்கள் கழித்து, வலைத்தளம் ஆரம்பித்து எழுதி நண்பர்களின் கருத்துகளைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருந்தபொழுது திடீரென்று வலைச்சரத்தில் அறிமுகம்! பல புதிய வருகையாளர்கள், ஒரே மகிழ்ச்சி!! மேலும் எழுதி, நண்பர்கள் பல அமைந்து நூலையும் வெளியிட்ட அவள் வேறு சிலரை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்த மூன்றாம் முறையாக வருகிறாள்.

அந்தச் சிறுமி யாரென்று தெரிந்து விட்டதா? :)

இப்போ அவள்  தளத்துக்குச் செல்வோம், தேன் மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதி வருகிறாள்.

பல நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலும் புதிதாக இருப்பவர்களுக்க்காகச் சில பதிவுகளைப் பகிர்கிறேன்.

கவிதைகள்
நட்பு
அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க 
வந்ததே உனைக் கண்டதும் 

சமூகப் பதிவுகள்
பெண்ணின் இதயம் என்பதால் 
இங்கேயுமா கள்ளநோட்டு?
தன்னடக்கமில்லா இச்சையே 

இலக்கியப் பதிவுகள்,
மழை சூழ் மலை 
கருங்கண் தாக்கலை
சங்க இலக்கிய அறிமுகம்
கதிர் கொண்டு வலை செல்லும் களவன்
முல்லைப்பாட்டு மன்னனின் மனம் 

கதைகள்
ஆத்திசூடி கதைகள், ஏற்பது இகழ்ச்சி
இரண்டு கைகள் தட்டினால் தான் 

கைவினை
காகித உருளைப் பூக்கள் 
குரு தட்சிணை -அன்றும் இன்றும் 

கவிதைத்தொகுப்பு  'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
நூலைப் பற்றி தினமணியில்.

சொந்தக் கதை போதும் என்று நினைக்கிறேன். நாளை வேறு சில வலைப்பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை நன்றி கூறி விடைபெறுவது,
- கிரேஸ் பிரதிபா 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது