வணக்கம், வணக்கம் ..நட்புகளே நலமா?
➦➠ by:
கிரேஸ்,
தேன் மதுரத் தமிழ் கிரேஸ்
வலைச்சர வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
வலைச்சர ஆசிரியர் பணியில் மூன்றாவது முறை, வாய்ப்பளித்த சீனா ஐயா மற்றும் பிரகாஷ் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்!
சில வருடங்களுக்கு முன், கொடைக்கானலில். மழை பெய்த ஒரு காலை. அந்தச் சிறுமிக்கு மூன்று வயது. பள்ளிக்குச் செல்லும் முதல் நாள், வெள்ளைச் சீருடை, சூ அணிந்து தயாராகி விட்டாள். பள்ளி வாசல் சென்ற பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. அழுது ஓடி விட முயன்றவளைத் தந்தை தூக்கிச் செல்கிறார். உதைத்து அழுததில் தந்தையின் உடையில் 'சேற்றால் காலனி பெயிண்டிங்'!! தந்தையிடம் இருந்து சிறுமியை வாங்கிய கத்தோலிக்கச் சகோதரியின் வெள்ளை உடுப்பிலும் சேற்றால் வரைபடம். இப்படி முதல் நாளிலேயே அழகாக வரைந்துத் தன் திறமையைக் காட்டிய அந்தச் சிறுமி, இரு வருடங்கள் கழித்துத் தன் தங்கையிடம் சொல்கிறாள், "பள்ளி நல்லாயிருக்கும், அக்கா இருக்கேன்ல, அழக் கூடாது!".
இன்னும் சில வருடங்கள் கழித்து வேலைக்குச் செல்லும் முதல் நாள். கல்லூரிப் படிப்பு முடிவதற்குள், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிலேயே ப்ராஜெக்ட் செய்யச் செல்கிறாள். ஒரே நடுக்கம்..அலுவலகத்தில் நுழைந்து உள்ளே நடுங்கிக் கொண்டு வெளியே தீர்க்கமான பார்வையுடன் நிற்கிறாள். பின்னே, பாரதி பாடல் படிச்சுருக்காளே!உள்ளே அழைத்துச் சென்ற HR ப்ராஜெக்ட் லீடரை அறிமுகம் செய்து விட்டுச் செல்ல, அனைத்து டீம் மெம்பெர்களிடமும் கை குலுக்கி நல்ல பிள்ளை போல அமைதியாக உட்காருகிறாள். இப்படித் தட்டுத் தடுமாறிப் பழகி இருவருடங்களில் டீம் லீடராக மாற, அவளிடம் புதிதாகச் சேர்ந்த நால்வரை அழைத்து வருகிறாள் அதே HR!
சில வருடங்கள் கழித்து, வலைத்தளம் ஆரம்பித்து எழுதி நண்பர்களின் கருத்துகளைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருந்தபொழுது திடீரென்று வலைச்சரத்தில் அறிமுகம்! பல புதிய வருகையாளர்கள், ஒரே மகிழ்ச்சி!! மேலும் எழுதி, நண்பர்கள் பல அமைந்து நூலையும் வெளியிட்ட அவள் வேறு சிலரை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்த மூன்றாம் முறையாக வருகிறாள்.
அந்தச் சிறுமி யாரென்று தெரிந்து விட்டதா? :)
இப்போ அவள் தளத்துக்குச் செல்வோம், தேன் மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதி வருகிறாள்.
பல நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலும் புதிதாக இருப்பவர்களுக்க்காகச் சில பதிவுகளைப் பகிர்கிறேன்.
கவிதைகள்
நட்பு
அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க
வந்ததே உனைக் கண்டதும்
சமூகப் பதிவுகள்
பெண்ணின் இதயம் என்பதால்
இங்கேயுமா கள்ளநோட்டு?
தன்னடக்கமில்லா இச்சையே
இலக்கியப் பதிவுகள்,
மழை சூழ் மலை
கருங்கண் தாக்கலை
சங்க இலக்கிய அறிமுகம்
கதிர் கொண்டு வலை செல்லும் களவன்
முல்லைப்பாட்டு மன்னனின் மனம்
கதைகள்
ஆத்திசூடி கதைகள், ஏற்பது இகழ்ச்சி
இரண்டு கைகள் தட்டினால் தான்
கைவினை
காகித உருளைப் பூக்கள்
குரு தட்சிணை -அன்றும் இன்றும்
கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
நூலைப் பற்றி தினமணியில்.
சொந்தக் கதை போதும் என்று நினைக்கிறேன். நாளை வேறு சில வலைப்பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை நன்றி கூறி விடைபெறுவது,
- கிரேஸ் பிரதிபா
|
|
பின்னூட்டம் வருதா, வருதா? :)
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி ஐயா
Deleteஇனிய சுய அறிமுகம்.... வாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி சகோ
Deletevalzthugal amma.
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteaha!!! அறிமுகப்பதிவே கலை கட்டுதே!!!
ReplyDeleteகிரேஸ் டியர்!!! ப்ராக்!! பராக்!
நன்றி டியர் :)
Deleteவாழ்த்துக்கள்... கலக்குங்க...
ReplyDeleteநன்றி சகோ
Deleteகடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் தான் நீங்கள் வலைசரத்தைத் தொடுத்ததாய் நினைவு ,மீண்டும் அசத்த வாழ்த்துகள்:)
ReplyDeleteத ம 3
ஆமாம் சகோ, அதுவும் மார்ச் முதல் வாரம் தான்.. :))
Deleteநன்றி சகோ.
தங்கள் பணி இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்!..
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஆரம்பமேபள்ளிஆரம்பதில் இருந்து அசத்துங்க.............!!!!!!
ReplyDeleteநன்றி மாலதி
Deleteபின்னூட்டம் வருதா, வருதா? :)
ReplyDeleteஇயல்பிலேயே ரொம்ப நக்கல் பார்ட்டீயோ?
வாழ்த்துகள்
ஹாஹா சோதனை மறுமொழியை வித்தியாசமாய்க் கொடுக்கலாம் என்றுதான்.. :)
Deleteமத்தபடி நக்கல் எனக்கு கஷ்டம் சகோ.
நன்றி!
வருக, வருக அசத்தலான பதிவுகளைத் தருக, தருக.
ReplyDeleteகில்லர்ஜி.
நன்றி சகோ , நீங்கள் எல்லாம் வந்தாலே அசத்தலாகி விடுமே :)
Deleteஇனிய அறிமுகம் வாழ்த்துக்கள் கிரேஸ்
ReplyDeleteநன்றி உமையாள் காயத்ரி
Deleteவலைச்சர ஆசிரியைக்கு அன்பான வாழ்த்துகள்,அழகான அறிமுகம்..
ReplyDeleteநன்றி மேனகா
Deleteசுவையான அறிமுகம்! சகோதரி! தங்களின் அருமையான பதிவுகளுடன் வலைச்சரத்தைத் தொடுக்க வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோதரரே
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோ
Delete///சில வருடங்களுக்கு முன், கொடைக்கானலில். மழை பெய்த ஒரு காலை. அந்தச் சிறுமிக்கு மூன்று வயது. பள்ளிக்குச் செல்லும் முதல் நாள், ///
ReplyDeleteசில வருடங்களுக்கு முன் பள்ளிக்கு சென்று சில வருடங்களுக்கு முன் வேலைக்கு சென்று சில வருடங்களுக்கு முன் பதிவு போட்டு........என்னங்க ரஜினிகாந்த் படம் பார்ப்பது போல இருக்குதே...அவர்தான் நாலு மாட்டை வாங்குவார் வளர்ப்பார் அதன் பின் பெரிய பணக்காரார் ஆகிவிடுவார்... அது போல நீங்களும் சில வருடத்திலே எல்லாம முடிச்சிட்டீங்க போல இருக்கே.. ஹீஹீ ஆமாம் சில வருஷம் என்றால் மினிமம் எத்தனை வருஷமுங்க....
மதுரைத் தமிழன் ரொம்ப ஷார்ப்
Deleteஹாஹா இரண்டாம் பத்தியில் 'இன்னும் சில' என்று சொல்லியிருந்தேனே..
Deleteநானும் நாலு பதிவைப் போட்டு நட்பில் பணக்காரராகிவிட்டேனே சகோ :)
அந்தச் சிறுமி யாரென்று தெரிந்து விட்டதா? :) ஆஹா அது நீங்கதானே.... இந்த சின்ன வயசுலேயே டீச்சராகிட்டீங்க... வாழ்த்துக்கள்
ReplyDeleteகரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க, பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகளை! :)
Deleteநன்றி சகோ..
டீச்சரம்மா உங்க வகுப்பில் பாடம் படிக்க ஒரு எருமைமாடு வந்திருக்கு அது இப்படிதான் ராக்கிங்க் ப்ண்ணும் ஆனால் அதற்கு எல்லாம் கவலைப்படாமல் பாடம் எடுங்க
ReplyDeleteஇப்படிச் சொல்லிட்டீங்களே சகோ..
Deleteடீச்சர்னு வந்துட்டா கவலையெல்லாம் நோ நோ , ஒன்லி பாடம், கருமமே கண்ணாயினார் :))
அறிமுகம் அழகாயிருக்கிறது
ReplyDeleteதொடர வாழ்த்துகள்
நன்றி ஐயா
Deleteவருக வருக! தேன் தமிழை அள்ளித் தருக! சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.5
நன்றி ஐயா
Deleteவாங்க சகோதரி... சுய அறிமுகம் போலவே அசத்துங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteஅட கிரேஸ்... என்ன ஒரு அறிமுகம்... இது தான் 'மாஸ்' என்ட்ரி :)
ReplyDeleteநீங்க வேற ஸ்ரீனி.. :)
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteசகோதரி
வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள் இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
Deleteநன்றி
“சில“ வருடங்களுக்கு முன்னான உன் படம் (IM BACK) ரொம்ப அழகும்மா..(?)
ReplyDeleteபதிவையே ஒரு சிறுகதைபோல எழுதியது அருமை. (ஆனால் முதல் பத்தியிலேயே கண்டுபிடிச்சுட்மோம்ல?) நல்லநல்ல பதிவர்கள் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறேன் தம+1 இலக்கியத்தில் கலக்கு தங்கையே!
ஆஹா!! நன்றி அண்ணா.. :))
Deleteநீங்க கண்டுபிடிக்காமலா அண்ணா? நன்றி அண்ணா.
கண்டிப்பா அண்ணா, உங்கள் ஊக்கத்துடன்!
அபாரம்!!! தொடரவும்!!
ReplyDeleteநன்றி சகோ
Deleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
Vetha.Langathilakam
நன்றி சகோதரி
Deleteஅறிமுகம் நன்று! வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteசிறப்பான சுய அறிமுகம்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteபாரதி கண்ட புதுமைப் பெண்ணே.வருக,வருக.
ReplyDeleteவாழ்த்துக்கள்.கவிதைகள் அனைத்தும் அருமை.
:) மிக்க நன்றி அனிதா
Deleteஅறிமுக உரை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் கிரேஸ்.
நன்றியம்மா
Deleteஅறிமுகமே அருமைமா...வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி கீதா
Deleteaaga ena oru arimugam. molien suvai unghal eluthil arumai. vaalthukal.
ReplyDeleteநன்றி சகோ
Delete