வரலாற்றுப் பதிவுகள் - சில துளி
➦➠ by:
காயத்ரி தேவி
எல்லோருக்கும் வணக்கம்...
ரம்மியமான காலைப் பொழுதுல, உங்கள எல்லாம் சந்திக்குறதுல ஒரு சந்தோசம் இருக்கு.
அதுவும் இன்னிக்கி ஞாயிற்றுக் கிழமை. வழக்கமான சுறுசுறுப்பு இல்லாம பொறுமையா நிதானமா ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு சோம்பலோடயே விடியுற நாள்.... ஆனா, நான் சீக்கிரம் எழுந்ததுக்கு ஒரு காரணம் உண்டு... தூங்கி எழுந்த உடனே நீங்க நல்ல நல்ல வலைத்தளமா தேடி படிக்க வேணாமா?
சரி, சரி வாங்க, நேரடியா நாம இப்போ அறிமுகத்துக்கு போய்டலாம்....
முக்கியமா நாம இன்னிக்கி ஒரு வலைதளத்த பாக்கப் போறோம்.
வரலாற்றில் தென்மாவட்டங்களோட போராட்டங்களையும், அந்தக்காலக் கட்டத்தில் மக்களோட வாழ்க்கைநிலையையும் அப்படியே படம்பிடித்துக்காட்டும் பதிவுகளை இந்த வலைதளத்தில் பார்க்க முடியும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பலவிசயங்களைப் புள்ளி விபரங்களோடு முன்னெடுத்துவைக்கும் சோஷியல் ஆக்டிவிஸ்ட் கே.எஸ். இராதாகிருஷ்ணன். இவர் தன்னோட வலைதளமான கே.எஸ்.ஆர் பிளாக்- ல் தமிழிலே பெரும்பாலான பதிவுகளை தரவுகளோடு எழுதிட்டு வர்ரார்..
முக்கியமா நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய பதிவுன்னா மதுரையின் அந்தகாலத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் மருதம் சூழ்ந்த மாமதுரை
எத்தனையோ அற்புதங்கள், மனத்திற்கேற்ற ரம்யமான அமைதி, புதிய உலகம், அரிய காட்சிகள் , கானுயிரிகள், துயரத்தையும் ரணத்தையும் போக்கும் மாமருந்தான மேற்குத் தொடர்ச்சி மலை- சிலகுறிப்புகள் :
காலங்காலமாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தரவுகளோட விளக்கும் விவசாயிகள் போராட்டம் :
எட்டப்பர்ன்னாலே காட்டிக்கொடுத்தவர்ன்னு நினைச்சுட்டு இருக்கும் போது எட்டப்ப ஜமீன்களின் வரலாற்றையும் சமூகத்துக்கு செஞ்ச நற்பணிகளையும் சொல்லும் : குறையொன்றுமில்லை எட்டப்பா :
இலக்கியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் படைப்பாளிகளை அறிமுகம் செய்திருக்கும் :மூன்று உலகப்புகழ் பெற்ற பெண் படைப்பாளிகள்.
இப்படி இவரோட வலைத்தளத்துல கொட்டிக்கிடக்குற பயனுள்ள பதிவுகள் ஏராளம் ஏராளம்... கண்டிப்பா பொறுமையா எல்லாரும் படிக்க வேண்டிய வலைத்தளம் இது...
அடுத்ததா நாம பாக்கப் போற வலைத்தளம் கார்த்திக் புகழேந்தி காற்றில் எழுதியவன்... சமீபத்துல “வற்றாநதி” சிறுகதை தொகுப்பை வெளியிட்ட கார்த்திக் புகழேந்தியோடது இந்த வலைத்தளம்.
சிறுகதை ஆர்வத்தில் பேனாவின் சிறகு விரித்து... கணிப்பொறி காகிதத்தில் கற்பனைச் சருகுகளை துளிர்த்து எழுதத்துவங்கியுள்ள இவருக்கு வாசிப்பு பட்டியலில் ஆயிரம் பேர் லட்சியமெல்லாம் கிடையாது... அவர் கதைக்கு அவரே முதல் ரசிகனாய் இருக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மேலோங்கியவனாய் இருக்கிறார்.
குற்றாலத்துக்கு குளிக்க போற மனுஷன் அப்படியே ரசிச்சுட்டு வர வேண்டியது தானே... தான் ரசிச்சத சொல்லி நம்மள எல்லாம் ஐயோ நாம இப்படி அனுபவிக்கலயேன்னு கடுப்பு ஏத்துறார் பாருங்க... குற்றாலமும் கனவுப் ப்ரியனும் படிச்சுட்டு கண்டிப்பா ரசிக்காமலோ சிரிக்காமலோ முக்கியமா பொறாமப் படாமலோ இருக்க முடியாது.
நாகர்கோவிலில் இருந்து சினிமாவில் சாதிக்கனும்ன்னு கிளம்பிப் போன ஒரு பெரிய வணிகக் குடும்பத்தின் மகனுக்கு சென்னையில் கிடைத்த அனுபவங்களையும், அவருக்கு நேர்த துயரத்தையும் சிறுகதையா எழுதி இருக்கு பதிவு இது - லைட்ஸ் ஆஃப்
சென்னையோட ஆவணப்பதிப்பு இந்த பதிவு. சென்னையின் வரலாற்றை புகைப்படங்களோட விளக்குற ஒரு குட்டி தகவல் களஞ்சியம் இதுல இருக்கு. சென்னை வாசிகளும், சென்னை விரும்பிகளும் இந்த சென்னை 375 பதிவ கண்டிப்பா படிச்சு சென்னையோட முழு வரலாற்ற தெரிஞ்சுக்கலாம்...
மொத்தமே தன் ப்ளாக்ல 25 போஸ்ட் தான் போட்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி இன்னும் அதிகமான பதிவுகள குடுக்கணும்ன்னு கேட்டுப்போம். இன்னுமொரு முக்கியமான விஷயம், அவர் எழுதின வற்றாநதி புத்தகத்துல இடம்பெற்ற கதைகள்ல சில இந்த வலைதளத்துல இருக்கு. நீங்களே சாம்பிள் படிச்சுக்கலாம்...
நான் மறுபடியும் மதியம் உங்கள சந்திக்குறேன். இதுவரைக்குமான என்னோட இந்த வலைச்சர பயணத்துக்கு இதுவரைக்கும் தொடர்ந்து ஆதரவு குடுத்தவங்களுக்கு நன்றி சொல்ல வேணாமா?
எப்பவுமே நன்றி நவில்தல் நன்று இல்லையா?
அதனால, கண்டிப்பா வர்றேன்.
.
|
|
Neayeru thodakathil sirapana pakerivuku vaalthukal.
ReplyDeleteவாழ்த்து சொன்னா மட்டும் போதாது, எல்லா பக்கமும் போய் படிக்கணும்
Deleteகுற்றால பதிவு அசர வைத்தது...
ReplyDeleteஇருவருக்குமே வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா.... எல்லா லிங்க்கும் போய் பாருங்க
Deleteஅழகான வாரமாய் கொண்டு சென்ற தங்களுக்கும், இன்றைய அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete-கில்லர்ஜி-
அப்புறம் 6 நாளைக்கு முன்னாலே திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 3
காலை வணக்கம்
Deleteஜி
ஆகா....ஆகா....உங்களின் அட்டகாசம் அதிகந்தான்....ஜி கலக்கல்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த வாரம் முழுக்க தினமும் வந்து கமன்ட் போட்ட உங்களுக்கும் எங்களோட நன்றிகள்
Deleteவிடுங்க அண்ணா, நாளைல இருந்து எப்படி இப்படி கூப்ட முடியும்?
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சரஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்க பாராட்டுக்கு தேங்க்ஸ் அண்ணா
Deleteவரலாற்று சிறப்புடன் தொகுப்பினை வழங்கிய தங்களுக்கும்,
ReplyDeleteஇன்றைய அறிமுக தளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றி
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்திற்கு இன்றுதான் முதல் முறையாக வருகிறேன். அற்புதமான வலைப்பக்கத்தை காயத்ரி தேவி அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். மதுரை குறித்த செய்திகள் வியப்பாக இருந்தது. நன்றி சகோதரி!
ReplyDeleteதங்கள் அறிமுகப் பதிவுக்கு நன்றி!, தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி சார், உங்க வருகைக்கு
Deleteபுதிய தளங்கள் அறிமுகம் ஆயின! நன்றி!
ReplyDelete