ஏழிசை எழுகவே!!!
வலைப் பூ அன்பர்களே!
வலைச்சரத்தின் ஜாக்பாட் ரேசில் இந்த வெந்தயக் குதிரை மற்ற பந்தயக் குதிரைகளோடு ஓடி வந்த ஓட்டம் ஆறு சுற்றை தாண்டி விட்டது. இருப்பது இன்னும் ஏழாவது சுற்று மட்டுமே! ஏழாவது சுற்றில் சுறுசுறுப்பாய் ஓடி இந்த வெந்தயக் குதிரை நல்ல பந்தயக் குதிரை ஆகுமா? அல்லது வெந்தயக் குதிரையாகவே வெறுங்கையோடு போகுமா?
நண்பர்களே! நாளை ஏழாவது சுற்றில் பின்னூட்டக் கரகோஷம் பிறக்கட்டும்! சிறக்கட்டும்! வெற்றிக் கோட்டை தொடுவதற்கு அது உதவட்டும். நன்றி!
வலைச்சரம் "ஆறாம் நாளின்" அற்புதமான பதிவாளர்கள் யார்? இதோ! இவர்கள்தான் :-
இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?
யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகளளை தொடர்ந்து இந்த பதிவு ஒரு வரலாற்று பதிவாகவே நாம் கொள்ளலாம்.
தடம்மாற்றிய பண்டிகை!
மணவை ஜேம்ஸ் - ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் இடம் பெற்றுள்ளது இந்தக் சிறுகதை! பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர், நட்புக்கு நல்லவர், மணவையை சேர்ந்த பன்முக படைப்பாளி இவர்!
சரித்திரம்படைத்த விவசாயி
கூட்டாஞ்சோறு என்னும் வலைப் பூவை நடத்தி வரும் S.P.செந்தில் குமார் அவர்களது, "சரித்திரம் படைத்த விவசாயி" பதிவானது, இளைய தலைமுறையினர் விவசாயத்தில் இருந்து தடம் புரண்டு சென்று விடாமல் சாதிப்பதற்கு நிச்சயம் துணை செய்யும். மிகவும் நல்லதொரு வேளாண்மை சார்ந்ததொரு பதிவு.
தொலைவில்இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து
தனி மரம் - தொட்டணைத் தூறும் மணற்க்கேணி போல், தொய்வில்லாமல் தொடர்கின்றார் தனது வாழ்த்துக் கவிதையின் மோனையிலும், எதுகையிலும் வீணை இசை இசைப்பது போல்! தொ வின் தோற்றம் தொ வில் (ஆம் ஆத்மி) முடியும்.
கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?
கவியாழி கண்ணதாசன் - கருத்தாழமிக்க கவிதை! உணருவோர் உணர்ந்தே! திருந்துவார் திருந்துதல் வேண்டும்!
பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்!
ரஞ்சனி நாராயணன் (முன்னணி மூத்த வலைப் பூ பதிவாளர் !இது குழந்தைகளின் தேர்வு காலம்:பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்! உணருவோர் உணர்ந்தே ! திருந்துவார் திருந்துதல் வேண்டும்! தமிழகத்தில் 10வது வகுப்பு பொதுத் தேர்வு நடை பெற்றுவரும் சூழலில் இவரது இந்தபதிவு மாணவ மாணவியர் வெற்றிக்கு வழி வகுக்கும் ஆனால் இதை செயல் படுத்த வேண்டியவர்கள் பெற்றோர்களே!
தோட்டக் கலை
பிரியசகி - என் வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு வகையான பதிவுகளை பழுதில்லாது தந்து வரும் இவரின் மற்றுமொரு வித பரிமாணம் "தோட்டக் கலை" வாருங்கள்! என் வீட்டுத் தோட்டத்தில் ஊரெல்லாம் கேட்டுப் பார் என்று இவர் பாடுவதை இல்லை இல்லை செடி நடுவதை!
முருகா! இவையொன்றாக நான் பிறந்திருந்தால்!!!
கமலா ஹரிஹரன் - மனதின் ஆசைகளை மகேசனின் மகனிடம் முறையிடுகின்றார் கவிதை வடிவில். காண வாருங்கள் ஆறுமுகனிடம் முறையிடல் கவிதையை!
குடும்ப விளக்கு
பரிவை சே.குமார் - குடும்ப விளக்கு சிறகை விரிக்கும் சிந்தனை இவரிடம் எப்பொழுதும் உண்டு! விறகை விற்றாலும் சந்தனம் வாசத்தோடு தருவதில் வல்லவர் இவரது இந்த சிறுகதைக்கு அப்போது நான் இட்ட பின்னூட்டம் இது குடும்ப விளக்கின் (ஸ்)"திரி" பற்றி எரிகிறது மனதில்.
வாராக்கடன்களும்... சாமானியர்களும்...
King Raj - மனதை தொட்டதொரு பதிவு இது என்று சொன்னால் அது மிகையன்று, மிக நன்று!
இந்திய சட்டம்
விருத்தாலத்தான் - சமீப காலமாக மிக நல்ல பதிவுகளை தந்து வரும் இவரின் இந்திய சட்டம் தொடர்பான விளக்கம் அறியாமையை அழித்தொழிக்கின்றது
ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்
வை.கோபாலகிருஷ்ணன் ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்... வலைப் பூ உலகின் வைகோ என்றழைக்கப் படும் இவரைப் பற்றி சொல்வதற்கு சொற்கள் இல்லை! ஆனால்? கேட்பதற்கு செவிகள் இருக்கின்றன ஏராளம்! தாராளம் பார்ப்போமே அதில் கொஞ்சம்! "பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே" தொடர்ச்சியை இவரது பதிவில் காண்க:-
நன்றி! நண்பர்களே!
நாளை நல்ல பல பதிவாளார்களின் பதிவோடு வருகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
|
|
நமது நட்"பூ"க்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅளப்பரிய காரியத்தை அழகுற செய்துவிட்டு அமைதியாக நிற்கிறீர்களே நண்பரே!
ReplyDeleteநீர் (நீங்கள்) இல்லாவிடில் வலைச்சரத்தில் இந்த பூ பூத்திருக்காது.
நீர் இட்ட கைகளுக்கு இந்த பூவின் வாசம் நிறைந்த நன்றிகள்!
நட்புடன்,
புதுவை வேலு
படத்தை இணைப்பதற்குள் மின்வெட்டு...
Deleteநன்றி...
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவணக்கம். என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது வலைத்தளத்தை... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பெருமைப் படுத்தியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் எனது சிறுகதையைத் தேர்வுசெய்த தேர்வுக் குழுவினருக்கும் மற்றும் போட்டி நடத்திய நிர்வாகக் குழுவினருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.விஜு அய்யா அவர்கள், வலையுலகை எனக்கு அறிமுகப்படுத்தி மேலும் என்னை வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உதவியதற்கும் என்றென்றும் நன்றிகள்.
அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற ஒரு சம்பவம். வரலாற்றிலேயே மிகப் புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் . எல்லா வித்தைகளையும் அறிந்த அந்தக் குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்தக் குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர், சூரியனை நோக்கி குதிரையைத் திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது. கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.
மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது. ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்குக் கிடைத்தது.
அலெக்ஸாண்டரைப் போலவே ‘ஏழிசை எழுகவே’ என்று தங்களின் பந்தயக் குதிரை அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பல அற்புதமான பதிவாளர்களோடு என்னையும் சேர்த்து இன்றைக்கு அறிமுகப்படுத்திப் பெருமைபடுத்தியதற்கு மிக்க நன்றி.
த.ம. 2.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வணக்கம்!
Deleteமணவை ஜேம்ஸ் அவர்களே!
தங்களின் மிக நீளமான கருத்து பின்னூட்டம் ஒரு பதிவிற்குரிய தரத்தை பெற்று இருந்தது என்பதே உண்மை!
மிகவும் ஆழ்ந்து உள்வாங்கி கொண்டு ரசித்தேன். தங்களை போன்ற பல நண்பர்களின் நல்லாசியுடன் எடுத்த பணியை சிறப்புற முடிப்பேன் என எண்ணுகிறேன்.
அற்புதமான பல் வகை திறமை பொருந்திய தங்களோடு இன்னும் பல சிறப்பு பதிவாளர்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்வுறுகின்றேன்.
அலெக்ஸாண்டரைப் போலவே ‘ஏழிசை எழுகவே’ பந்தயக் குதிரை வெல்க!
என்ற நல்லாசிக்கு நன்றி நண்பரே!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
குழுவினருக்கு வணக்கம் .நான் ஆரம்பநாட்களில் 21.12.2012 அன்று எழுதியதை இப்போது வெளிக்கொணர்ந்து பாராட்டியமைக்கு நன்றி.இந்நிகழ்வு இன்னும் என்னை எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை...உங்களின் ஆழ்ந்த விசாலமான தேடல் கண்டு மகிழ்ந்தேன்.நன்றி
ReplyDeleteவணக்கம் அய்யா
Deleteஆரம்ப நாட்களில் 21.12.2012 எழுதிய "கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?" கவிதையை கண்டதும் ஒவ்வொருவருடைய மனமும் பேசுவதை பாடமாக்கி பகிரந்தது போல் உள்ளது. ஆரம்பக் காலங்களிலேயே அசத்தி இருக்கிறீர்கள் அசத்தல் கவிதை மூலம்.இனிய பின்னூட்டம் இன்பம் இயைந்தது! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் அய்யா!
ReplyDeleteவலைப்பூவுக்கு புதியவனான என்னை தங்களது வலைச்சரத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, எனக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் நன்றி. இந்த அங்கீகாரம் மேலும் மேலும் என்னை எழுத தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
மீண்டும் கோடி நன்றிகள்!
அன்புடன்
எஸ்.பி.செந்தில்குமார்
த ம 5
நண்பரே!
Deleteமேலும், மேலும், சிறப்புற எழுதுக!
உலகம் உம்மை உற்று நோக்கும் காலம் உமது எழுத்தே ஆகும்.
தொடருங்கள் ! நானும், தொடர்கின்றேன் உமது பதிவினை தவறாது.
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இன்றைய அறிமுக அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 6
ஆறு சுற்று சுற்றி வந்தேன்
Deleteதமிழ் மணம் 6 ஐ (killarji )சுற்றி நின்றேன்
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நட்பூக்கள் இதிலும் விரிந்துள்ளார்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் ஆசானே!
Deleteவளமான வருகை வசந்தத்தை கொண்டு வந்து சேர்த்தது.
வாழ்த்தினை வடித்த உள்ளத்திற்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ஏழிசையாய் இசைப்பயனாய்!.. - என்பது ஆன்றோர் வாக்கு..
ReplyDeleteஏழிசை எழுகவே!.. எனும் தொகுப்பு சிறப்புடையது..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வழங்கிய அருள்மிகு அய்யாவுக்கு
Deleteஅன்புடன் கலந்த நன்றி!
வருக! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான சிலருடன் என்னையும் இன்று தாங்கள் அறிமுகம் செய்து அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கு என் நன்றிகள்.
இது என் 113வது வலைச்சர அறிமுகம் என்பதை மகிழ்வுடன் என்னிடம் உள்ள பொக்கிஷமான பொன்னேடுகளில் குறித்து சேமித்துக்கொண்டுள்ளேன்.
எனக்குத் தகவல் அளித்து என்னை இங்கு வரவழைத்துள்ளதற்கு மீண்டும் என் நன்றிகள்.
பொக்கிஷப் பெட்டகத்தினுள் நானும் ஒரு சிறு நெல்மணியாய்!
Deleteநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ஆறு படை வீடுகளையா ஆறு சுற்று சுற்றினீர்கள் !!
ReplyDeleteவெற்றி வேல் கையில் கொண்டு
புரவி மேல் பவனி வந்த
புதுவை வேலுக்கு
கந்த வேல்
எந்த நாளும் வெற்றி பெறுவார்
என்பதிலும் ஐயம் உண்டோ ??
சுப்பு தாத்தா.
www.youtube.com/watch?v=-dJetJWEok4
ஆறு படை வீடுகளையா ஆறு சுற்று சுற்றினீர்கள் !!
ReplyDeleteவெற்றி வேல் கையில் கொண்டு
புரவி மேல் பவனி வந்த
புதுவை வேலுக்கு
கந்த வேல்
எந்த நாளும் வெற்றி
பெற அருள் புரிவார்
என்பதிலும் ஐயம் உண்டோ ??
சுப்பு தாத்தா.
www.youtube.com/watch?v=-dJetJWEok4
புதுவை வேலுக்கு
Deleteகந்த வேல்
எந்த நாளும் வெற்றி
பெற அருள் புரிவார்
என்பதிலும் ஐயம் உண்டோ?
ஐயம் என்பது இல்லை திருசுப்பு தாத்தா அவர்களே!
கனக சுப்பு ரத்தினம்(புரட்சிக் கவி.பாரதிதாசன்) பிறந்த ஊரில் பிறந்ததினால்
அச்சம் என்னும் ஐயம் இல்லை!
ஐ /ஜ வாக்கி, ஒற்றைச் சுழி கொம்பு மட்டுமே சேர்க்க தேவைப்பட்டது." ஜெ" வடிவில்,
"ஐ" யம் இப்போது ஜெயம் ஆகி விட்டது!
காரணம் YOU TUBE பாடி சிறப்பு சேர்த்து விட்டீர்கள்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி ! நன்றி !! தங்கள் சேவைக்கு தொடரட்டும் நட்பூக்கள் மேலும் மலரட்டும்
ReplyDeleteசேவை தொடர வாழ்த்தியமைக்கு
Deleteநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉடல் நிலை காரணமாக வரயியலவில்லை. சகோ. என்னையும் நீங்கள் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. அதை ரூபன் சகோவும் நீங்களும் வந்து தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் மனமார்ந்த நன்றி உங்கள் இருவருக்கும். அனைத்து பகிர்வையும் காண்கிறேன் சகோ.
தம 8
மன்னிக்கவும் த ம 9
Deleteதமிழ் மணம் வாக்கு
Deleteபுகழ் மணக்கம்
வாக்கினை தந்தமைக்கு வணங்கிறேன்.
நன்றி!
புதுவை வேலு
தங்களது உடல் நிலையை கவனமாக பேணுங்கள் சகோதரி!
Delete"ஆரோக்கியமே அனைத்திற்கும் ஆதாரப் புருஷன்"
நலம் பெறுக! பலத்துடன் பதிவுகளைத் தருக!
ஜெய் சாய்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான அறிமுகங்களை அளித்துள்ளீர்கள். இனிமேல் தான் ஒவ்வொன்றாகப் போய் வாசிக்க வேண்டும். வலைச்சரப் பணியை மிகவும் சுவையாகவும் திறமையாகவும் ஆற்றிவரும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! த.ம. 11
ReplyDeleteமனமாரந்த பாராட்டுக்கு உள்ளார்ந்த நன்றிகள்!
Deleteபறவைகளோடு பழகிய உள்ளம் பறந்து வந்து,
சிறந்த கருத்தை அழகுற தந்தமைக்கு புகழ் நன்றி!
பதிவுகளை படித்து இன்புறுங்கள்.
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
நட்புடன் புதுவை வேலு அவர்களினமூலம் அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவாழ்த்துகள் வளம் சேர்க்கும்
Deleteநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅற்புதமான தொகுப்பை தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் வளம் சேர்க்கும்
Deleteநன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பதிவர்களின் தொகுப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஓயாத பணிகளுக்கிடையேயும் வருகை தந்து நற்கருத்து பின்னுட்டம் தந்த தளீர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி!
தொடருங்கள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
விருத்தாலத்தான் என்பது நான் அல்ல என்னைப்போல உள்ள அனைத்து அடித்தட்டுமக்களுக்கும் சொந்தமான தளம். எனக்கு வெற்றி தோல்வி முக்கியம் இல்லை அனைவரும் சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் என்னை உங்களில் ஒருவனாக இனைத்ததில் நன்றி.
ReplyDeleteநன்றி அனைவருக்கும்
வணக்கம் நண்பர் செந்தில் குமார் அவர்களே!
Deleteதங்களது பதிவு வெகு சிறப்பு வாய்ந்தது!
சட்டம் படிக்காத சாமனியருக்கும் புரியும் முறையில்
சட்ட பின்புலத்தை, வழக்கு எண்களை
சொல்லி வருவது வரவேற்புக்குரியது.
விருத்தாலத்தான் விருப்பத்துக்கு உரியவன்
.
நன்றி தொடருங்கள்!
நண்பரே குழலின்னிசையை!
www.kuzhalinnisai.blogspot.com
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் சகோதரரே.!
ReplyDeleteஇப்போதுதான் இணையம் பக்கம் வந்தேன்.. வந்தவுடன் மகிழ்ச்சி செய்தியை கண்டு சந்தோசக்கடலில் மூழ்கினேன். நன்றி சகோ..
தங்களின் வலைச்சரப் பயணத்தில் சிறந்த பதிவர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தி, என் எழுத்துக்களையும் சிறப்பித்து, என்வலைத் தளம் வந்து அதை என்னிடம் பகிர்ந்து கொண்ட பாங்கும் கண்டு அகமகிழ்ந்தேன். என்னை அவன் மேல் எழுதிய பதிவு மூலமாய், வலைச்சரத்தில் ஏற்றி மகிழும், என்னப்பன் முருகனின் பாதமும் இடைவிடாது பணிகிறேன். அவனோடு என்னையும் வலைச்சரத்தில் வாசமிகு மலர்களோடு ஒரு மலராய் தொடுத்த தங்களுக்கும், என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
.
தாங்கள் புரவியில் பவனித்து வெற்றி வாகைச்சூடி,வலம் வந்து சிறப்பான ஆசிரிய பணியில் தலை சிறக்க கந்தனை தொழுது வேண்டிக்கொள்கிறேன்..
தங்களால் அறிமுகபடுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும், கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும், என் பணிவான வணக்கத்துடன் ௬டிய நன்றிகள்...
என் தளம் வந்து வாழ்த்துரைத்த சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு, தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்...
நன்றி நிறைந்த நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
தாங்கள் புரவியில் பவனித்து வெற்றி வாகைச்சூடி,
Deleteவலம் வந்து சிறப்பான ஆசிரிய பணியில் தலை சிறக்க
கந்தனை தொழுது வேண்டிக்கொள்கிறேன்.
தங்களது வேண்டுதல் பலித்தது சகோதரி!
இதோ வேலவனை வேண்டி திருசுப்பு தாத்தா
எனது பாடலை அவரது காந்தக் குரலில்
பாடிய பாடலை (YOU TUBE) யூ டுபில் காணுங்கள்:
www.youtube.com/watch?v=-dJetJWEok4
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
Maathotam, elam, apple, manam kavartha padivu vaalthukal.
ReplyDeleteவணக்கம்!
Deleteவாருங்கள் "அலைபேசி அரங்க நாயகரே"!
தங்களது வருகை சிறக்கட்டும்.
பின்னூட்டக் கருத்து கற்கண்டு போல் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வேலைப்பளுவின் காரணமாக வலைச்சரத்துக்கு தொடர் வருகையில் தடையாகிவிட்டது.
ReplyDeleteஇன்று காலையே உங்கள் அழைப்பு பார்த்தேன்...
நேரமின்மையால் சற்று அல்ல... நிறைய மணித்துளிகள் தாமதம்...
தொடரும் வலைச்சர அறிமுகத்தில் இன்று தங்கள் மூலமாக மீண்டும் புதியவனாய் உணர்கிறேன்...
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் மற்ற இடுகைகளையும் வாசிக்கிறேன் நன்றி ஐயா...
நன்றி! பரிவை சே.குமார் அவர்களே!
Deleteநல்ல பதிவாளரான தங்களை இனம் காட்டிய செயலுக்காக பெருமை அடைகின்றேன்.
தொடருங்கள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே,
ReplyDeleteவெந்தயம், வெந்தயம் என்கிறீர்களே... சில சூழ்நிலைகளில் பந்தயக் குதிரைகளுக்கு கூட வைத்தியம் செய்ய இந்த வெந்தயம் வேண்டுமே !?
இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி
சாமானியன்
சாமானியரே
Deleteவைத்திய விளக்கம் அருமை!
வயிற்று போக்குக்கு வெந்தியம்
கொலஸ்ட்ராலையும் குறைக்கும்!
இது கொலஸ்ட்ரால் இல்லாத வெந்தயக் குதிரை
வைத்திய விளக்கம் வாழ்த்தோடு சிறக்கும்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
"தங்களது
ReplyDeleteதகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!" என
எனது பதிவையும்
அறிமுகம் செய்த தங்கள் செயலை
பாராட்டுவதோடு
நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
அறிமுக செயலை பாராட்டி வாழ்த்தியமைக்கு
Deleteசீரிய சிறப்புத்தமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மன்னிக்கவும்.தாமதமாக எனது நன்றியினை தெரிவிப்பதற்கு.
ReplyDeleteஎன்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
தாமதம் இல்லை சகோதரி தமிழ் மணம் வாக்கோடு வந்தமைக்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துகள்.
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பணி !செம்மையுடன் செய்தீர்!
ReplyDeleteநன்றி புலவர் அய்யா!
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
பல முத்துக்களிடையே என்னையும் அறிமுகம் செய்ததுக்கு நன்றிகள் .
ReplyDeleteமுத்துக்கு முத்தாக வந்த நல் முத்து அல்லவா? தனிமரம்!
Deleteவாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
இன்று என்னுடன் அறிமுகமான என் நட்புக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteநட்பு(பூ)க்கு நறும் பூ தரும் வாசமிகு வாழ்த்து சேரட்டும்!
Deleteநட்புடன்,
புதுவை வேலு