07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 1, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்


2
ஸ்ரீராமஜயம்

வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்

வலைச்சரத்தில் என் முதல் திருநாள்

01.06.2015
 
^திருச்சி காவிரிப்பாலம் இன்று^
^திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் இன்று^  
^திருச்சி காவிரியில் முழு அளவு நீர் ஓடும்போது^
^திருச்சியில் எங்கள் வீட்டு வாசல்^ 
{ ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு - 1965}


^அதே இடம் இன்று 2015^
{ மாட்டு வண்டிகள் காணாமல்போய்
பல மாடிக்கட்டடங்கள் எழும்பியுள்ளன }



அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

 

”ஏப்ரில் மேயிலே .... பசுமையே இல்லே .... காய்ஞ்சு போச்சுடா .... !





  • இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்த, மிகவும் அர்த்தம் பொதிந்த மேற்படி பாடலை தங்களில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இதுவரை கேட்காதவர்கள் உடனடியாகக் கேட்டு மகிழவும். இதோ இணைப்பு: www.youtube.com/watch?v=rfFLEYxRA1Y 
  • அதேபோல கடந்த 23.03.2015 க்குப்பிறகு, ஏப்ரில், மே யிலே வலைச்சர ஆசிரியர் யாருமே நியமிக்கப்படாமலும், பதிவர்களில் யாரும் தானே முன்வந்து வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலும், நம் நந்தவனமாகத் திகழ்ந்துவந்த வலைச்சரமும் கடந்த 10 வாரங்களாகக் காய்ஞ்சு போச்சு என்று சொன்னால், அது மிகையாகாது.
  • என்னை இன்று 01.06.2015 முதல் வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர நிர்வாகக் குழுவினர்களுக்கும் முதற்கண் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். 

  • இதற்கு ஓர் தூண்டுதலாக அமைந்தது என் அன்புக்குரிய இனிய நண்பர் திருச்சி, திருமழபாடி, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் ஆதங்கப்பதிவு. தலைப்பு: ’வலைச்சரம் - ஒரு வேண்டுகோள்’ இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html 

    அவரின் இந்தப்பதிவுக்கும், அதில் எனக்கோர் அன்பான வேண்டுகோள் வைத்துப் பின்னூட்டம் அளித்திருந்த திருமதி. ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்களுக்கும், திருமதி. ஆதி வெங்கட் முன்மொழிந்ததை வழிமொழிந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொண்டு, என் வலைச்சர ஆசிரியர் பணியினை ஆரம்பிக்கிறேன். 


     எனக்கு வலைச்சர ஆசிரியர் பணியில் இன்று ’முதல்நாள்’. 
    அதனால் எனக்குள் என் மனதினில் 
    ஓர் இனம்புரியாத ஆவலுடன் கூடிய திக்..திக் ! :)

    முதல்நாள் பயந்துகொண்டே பள்ளிக்குச்செல்லும் சிறுவனாய்
    ’வலைச்சர ஆசிரியர்’ என்ற பெயரில் 
    உங்கள் முன் இன்று நான் ’ஓர் பொடியனாய்’ நிற்கின்றேன்.


     


    இன்று நான் என்னைப்பற்றி முதலில் சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஓர் சம்பிரதாயம் ... அதாவது வழக்கம். 


    என்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. நான் மிகச் ’சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் நினைப்பவன்.’  


    2005 முதல் 2010 வரை, தமிழ்நாட்டின் பிரபல வார / மாத பத்திரிகை இதழ்களில் பெரும்பாலும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தவன், நான். 


    என் எழுத்துலக மானசீக குருநாதர்:- 

    என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையினில் பணியாற்றிய, பதிவர் ரிஷபன் திரு. R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்தான் என் எழுத்துலக மானசீக குருநாதர்  என்று கூறிக்கொள்வதில் பெருமிதமாக உணர்கிறேன். அன்றுமுதல் என்னை மேலும் மேலும் எழுத வைக்க மிகவும் தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர், இவரே

     

    2009ம் ஆண்டு என் பணி ஓய்வுக்குப்பின், நம் ரிஷபன் அவர்கள் எனக்கு ஓர் புதிய வலைத்தளம் துவக்கிக்கொடுத்தார். ஆனால் நான் அதில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஒரேயொரு சோதனைப்பதிவு தவிர, வேறு ஏதும் எழுதவே இல்லை.  ஏனெனில் எனக்கு அப்போதெல்லாம், கணினியில் தமிழில் டைப் அடிப்பதே தடவலாக இருந்து வந்தது. எப்படி டைப் அடிப்பது அதை எப்படிப் பதிவாக வெளியிடுவது என்பதெல்லாம் ஒன்றுமே எனக்குப் புரியாமல் இருந்துவந்தது. 

    இந்த என் கஷ்டமான ஆரம்பகால அனுபவங்களைப்பற்றியே என் ஐம்பதாவது பதிவினில் நகைச்சுவையுடன் கூறியுள்ளேன். அதற்கான தலைப்பு: ‘ஐம்பதாவது பிரஸவம்’ - உப தலைப்புகள் [1] ‘மை டியர் ப்ளாக்கி’ [2] குட்டிக்குழந்தை ‘தாலி’ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html


    கணினியில் தமிழில் நேரிடையாக டைப் அடிக்க நன்கு பழகியபிறகு 02.01.2011 முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக என் வலைத்தளத்தினில் பதிவுகள் கொடுத்துள்ளேன். சமீபத்தில் 31.03.2015 அன்று வெற்றிகரமான என் 750வது பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 

    51 மாதங்களுக்குள் 750 பதிவுகள் கொடுத்துள்ளதை ஏதோ என்னால் முடிந்ததோர் மிகப்பெரிய சாதனையாகவே நான் நினைத்து மகிழ்கிறேன். சராசரியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம், நான் இதுவரை பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளேன் என்பதை நினைக்க எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

     

    நான் தொடர்ச்சியாக இதுபோல பதிவுகள் கொடுக்க, மிகவும் தூண்டுகோலாக அமைந்தது, வாசகர்களாகிய தங்களில் பலரும் அவ்வப்போது கொடுத்து வந்த மிகத்தரமான, ஏராளமான, தாராளமான பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே. 

    இவ்வாறு தரமான பின்னூட்டங்கள் கொடுத்தவர்களை சிறப்பித்து நன்றி கூறும் வகையில் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பினில் நான் இந்த 2015 மார்ச் மாதத்தில் மட்டும் 15 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/1.html

     

    வலைச்சர ஆசிரியர்களாக இருந்துள்ள பலர் கடந்த நான்கு ஆண்டுகளில் என்னையும் என் வலைப்பதிவுகளையும் சுமார் 115 தடவைக்குமேல் பாராட்டி, புகழ்ந்து எழுதியுள்ளார்கள் என்பதை நான் என் அடுத்த சாதனையாக நினைத்து மகிழ்கிறேன். 

    அதைப்பற்றியும்கூட, அந்த ஒவ்வொரு வலைச்சர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘என் வீட்டுத்தோட்டத்தில்....’ என்ற தலைப்பினில் 2015 ஜனவரி மாதம் 16 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/1-of-16-1.html

     

    இதுவரை நம் அன்புக்குரிய பதிவர்களில் சிலரை (இதுவரை மொத்தம் 39 நபர்கள்) நான் நேரில் சந்தித்துள்ளேன். அதைப்பற்றியும்கூட ‘சந்தித்த வேளையில்’ என்ற தலைப்பிலும் ’சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற தலைப்பிலும் 6+7=13 பதிவுகள் 2015 பிப்ரவரி மாதம், நிறைய படங்களுடன் வெளியிட்டுள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html



    நான் பதிவிடத்துவங்கிய முதல் ஆண்டான 2011ம் ஆண்டிலேயே 07.11.2011 முதல் 13.11.2011 வரை ஒரு வாரம் என்னை தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக ஆக்கி கெளரவித்திருந்தார்கள். 

    அந்த ஒரே வாரத்தில் தினமும் 4 பதிவுகள் வீதம், மொத்தம் 28 பதிவுகள் கொடுத்து அந்த வார TOP 20 LIST இல் தமிழ்மணத்தில் ’முதலிடம்’  வகித்திருந்தேன்.

    இதுவரை பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்மண நட்சத்திரப் பதிவர்களிலேயே, ஒரே வாரத்தில் இவ்வளவு அதிக பதிவுகள் கொடுத்துள்ளது, ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையே என்று பலரும் சொல்லிப்பாராட்டியிருந்தார்கள். 

    இதைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு ’HAPPY இன்றுமுதல் HAPPY' என்ற என் பதிவினைப் பாருங்கள். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html


    வல்லமை, மூன்றாம் கோணம், நிலாச்சாரல் 

    போன்ற மின் இதழ்களில் என் படைப்புகள் 

    இதுவரை ஏராளமாக வெளிவந்துள்ளன.


     

    'நிலாச்சாரல்' மின் இதழில் நான் ‘பவழம்’ 

    என்ற தலைப்பினில் எழுதிய சிறுகதை 

    அந்த மாத [MARCH 2007] வெளியீடுகள் அனைத்திலும் 

    மிகச்சிறந்த படைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    பரிசும் அளிக்கப்பட்டது.


    என் மேற்படி சிறுகதைக்கான இணைப்பு: ப வ ழ ம் 



     

    ’வல்லமை’ மின் இதழில் 06.01.2014 அன்று என்னை 

    அந்த வாரத்தின் 

    வல்லமையாளராக அறிவித்திருந்தார்கள்.





     

    ’வல்லமை’ தீபாவளிச் சிறப்பிதழ் 2011 இல்

    ‘மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற என் குறுநாவல் 

    வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருந்தது.



    2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் அதே 2014ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரை, தொடர்ச்சியாக தொய்வேதும் இல்லாமல் 40 வாரங்களுக்கு, என் வலைத்தளத்தினில் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’கள் மிகப்புதுமையான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய நபர்களான 255 பேர்களுக்கும் மேலான பலருக்கும் உடனுக்குடன் ரொக்கப்பரிசுகள் அளிக்கப்பட்டன. 

    இதுவும் ஓர் சரித்திர சாதனை என்றும், இதுபோல ஓர் மெகாப் போட்டியை வெற்றிகரமாக (போட்டிக்கான தேதிகளை எக்காரணங்களுக்காகவும் ஒத்திப்போடாமல், ஒருமுறையேனும்கூட வாய்தா ஏதும் வாங்காமல்) வெகு அழகாகத் திட்டமிட்டு சொன்ன தேதிகளில் சொன்னபடி இதுவரை யாரும் நடத்தியது இல்லை எனவும், இனி இதுபோல யாரும் நடத்தப்போவதும் இல்லை எனவும், பலரும் பாராட்டியிருந்தனர். 

    இந்தப்போட்டிகளில் பரிசினைப்பெற்ற பதிவர்களை அவர்களின் புகைப்படத்துடன் காண இதோ இந்த இரண்டு இணைப்புகளைப் போய் பாருங்கள்.



     

    இப்போதும்கூட என் வலைத்தளத்தினில் மிகச்சுலபமான போட்டியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள இறுதி நாள்: 31.12.2015 ..... அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பரிசினை அள்ளலாம். போட்டிபற்றிய மற்ற விபரங்களுக்கு இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

     


    இதுவரை நான் மூன்று சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளேன். இதுவரை எழுத்துலகில் நான் பல பரிசுகளும், விருதுகளும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றுள்ளேன். அவற்றில் சிலவற்றை என் சில பதிவுகளில் அவ்வப்போது படங்களாகக் காட்டியுள்ளேன். உதாரணமாக இதோ ஓருசில இணைப்புகள்:




    நான் தமிழில் எழுதிய பல சிறுகதைகள் கன்னடத்திலும்,  ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

     

    நான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டுள்ள சிறுகதைகளும், இதர ஆக்கங்களும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவைகளாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த வலைச்சரத்தில் தினமும் அவ்வப்போது கொஞ்சமாக குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  


    பதிவின் நீளம் கருதி என் சுயபுராணங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு விடைபெறுகிறேன். நாளை முதல் தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலரை  மட்டும் அடையாளம் காட்டிட விரும்புகிறேன். 

     


    ‘வலைச்சர ஆசிரியர்’ என்ற என் பதவிக்காலம் தொடர்ச்சியாக அடுத்த 35 நாட்களுக்கு (தொடர்ச்சியாக அடுத்த ஐந்து வாரங்களுக்கு) நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    தொடர்ந்து அனைத்துப் பதிவர்களும் வலைச்சரப்பக்கம், தினமும் வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களைப் பின்னூட்டங்களாக பதிவுசெய்து, ஊக்கமும், உற்சாகம் அளிக்க வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


     





    டும் டும் .... டும் டும் .... 


    டும் டும் .... டும் டும் .....





    இந்தப்பதிவினில் ஓர் மிகச்சுலபான புதிய போட்டிக்கான 


    அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


    போட்டிக்கான இறுதி நாள்: 31.12.2015


    இப்போதே ஆர்வத்துடன் கலந்துகொண்டு முயற்சித்தால்

    வெற்றிபெறுவது மிகவும் எளிதாகும். 

    துள்ளி வாருங்கள் 
    புள்ளி மான்களாக ! 




     




    அள்ளிச்செல்லுங்கள் 
    பரிசுத் தொகையினை!!





    மீண்டும் நாளை சந்திப்போம் !



    என்றும் அன்புடன் தங்கள்
     
    [வை. கோபாலகிருஷ்ணன்]

     

    145 comments:

    1. வணக்கம் ஐயா

      அசத்தலான அறிமுகம்.

      இத்தனை சாதனைகளை படிக்கும் எங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்து இருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது.

      வரும் வாரங்களிலும் தாங்கள் கலக்கப் போகிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

      வாழ்த்துக்கள் ஐயா.


      ReplyDelete
      Replies
      1. @R.Umayal Gayathri

        முதல்நாள் முதல் திருநாள் விழாவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

        என் கடந்தகால கடும் உழைப்புக்களைப் பற்றிய தங்களின் யூகத்திற்கும் .... வரும் நாட்களில் கலக்கப்போகிறேன் என்பதைத் தெள்ளத்தெளிவாகவே எதிர்பார்ப்பதாகச் சொல்லி வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    2. Replies
      1. R.Umayal Gayathri Mon Jun 01, 12:51:00 AM
        தம 2//

        நம் வலைச்சரத்திற்காக வாக்கு [VOTE] அளித்துள்ளதற்கு மிக்க நன்றி.

        Delete
    3. வலைச்சரம் உற்சாகக் களை கட்டி விட்டது ஐயா...!!!

      ReplyDelete
      Replies
      1. R.Umayal Gayathri Mon Jun 01, 12:52:00 AM

        //வலைச்சரம் உற்சாகக் களை கட்டி விட்டது ஐயா...!!!//

        அப்படியா !!!!! மிக்க மகிழ்ச்சி. என் சுய அறிமுகப் பதிவினைவிட உங்களின் முதல் வருகையால்தான் வலைச்சரம் உற்சாகக் களை கட்டியிருக்கும் என நான் யூகிக்கிறேன். :)) நன்றி.

        Delete
    4. அப்பப்பா விவரங்களும் தொகுப்புகளும் போட்டியென தங்கள் வழமைப் பாணியில் ஆசிரியப் பணி தொடங்கியுள்ளது.
      சிறப்புடன் அமைய இறையருள் கிடைக்கட்டும்.
      எனது இனிய வாழ்த்தையும் கூறுகிறேன்.
      Vetha.Langathilakam.

      ReplyDelete
      Replies
      1. kovaikkavi Mon Jun 01, 01:33:00 AM

        //அப்பப்பா விவரங்களும் தொகுப்புகளும் போட்டியென தங்கள் வழமைப் பாணியில் ஆசிரியப் பணி தொடங்கியுள்ளது.
        சிறப்புடன் அமைய இறையருள் கிடைக்கட்டும்.
        எனது இனிய வாழ்த்தையும் கூறுகிறேன்.
        Vetha.Langathilakam.//

        தங்களின் வருகைக்கும் இறையருளை வேண்டி இனிய வாழ்த்துகளைக் கூறியதற்கும் என் நன்றிகள்.

        Delete
    5. அட்டகாசமான சுய அறிமுகம். நான்தான் முதல் பின்னூட்டக்காரனாய் இருப்பேன் என்று நினைத்தால் எனக்கு முன்பே இரண்டு பெண்மணிகள் பின்னூட்டம் இட்டு விட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டுவாசிகளாக இருக்கக்கூடும்.

      நல்ல விவரங்கள். பிரமாதமான சுய அறிமுகம். வலைச்சர வரலாற்றிலேயே 35 நாட்கள் தொடர்ந்து ஆசாரியராகப் பணி புரியப் போவது நீங்கள்தான். உங்கள் ஆசிரியப்பணி வரலாறு படைக்கும். என்னுடைய அட்வான்ஸ் பாராட்டுகள்.

      ReplyDelete
      Replies
      1. பழனி. கந்தசாமி Mon Jun 01, 03:48:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //அட்டகாசமான சுய அறிமுகம்.//

        மிக்க மகிழ்ச்சி.

        //நான்தான் முதல் பின்னூட்டக்காரனாய் இருப்பேன் என்று நினைத்தால் எனக்கு முன்பே இரண்டு பெண்மணிகள் பின்னூட்டம் இட்டு விட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டுவாசிகளாக இருக்கக்கூடும்.//

        ஆமாம். இதுவரை என் பெரும்பாலான பதிவுகளுக்கு, கோவையில் வசிக்கும் ஒருவரிடமிருந்தே முதல் பின்னூட்டம் வருவது வழக்கம். :)

        தங்களின் யூகம் சரியே. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வாழ்பவர்களே தான்.

        //நல்ல விவரங்கள். பிரமாதமான சுய அறிமுகம்.//

        மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.

        //வலைச்சர வரலாற்றிலேயே 35 நாட்கள் தொடர்ந்து வலைச்சர ஆசிரியராகப் பணி புரியப் போவது நீங்கள்தான். உங்கள் ஆசிரியப்பணி வரலாறு படைக்கும்.//

        இவ்வாறு ஒரு வரலாற்றுச் சாதனை படைக்க மட்டுமே, இந்த சோதனையை நான் துணிந்து ஏற்றுக்கொண்டுள்ளேன்.

        //என்னுடைய அட்வான்ஸ் பாராட்டுகள்.//

        மிக்க நன்றி, ஐயா.

        Delete
    6. முதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

      ReplyDelete
      Replies
      1. பழனி. கந்தசாமி Mon Jun 01, 03:51:00 AM

        //முதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.//

        பொதுவாக நான் தமிழ்மண VOTE and RANK பற்றியெல்லாம் என் வலைத்தள பதிவுகளுக்கு எதிர்பார்ப்பது இல்லை. கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு திரட்டிகளிலும் என் வலைப்பதிவுகளை நான் இணைப்பதும் இல்லை.

        இருப்பினும் வலைச்சரம் என்பது என் சொந்த வலைத்தளம் அல்ல.

        என் வலைச்சர ஆசிரியர் பணிகாலத்தில் உங்கள் ஒவ்வொருவரின் மதிப்பு வாய்ந்த [VOTES] வாக்குக்களினால் RANK இல் ஒரு பெருமை நம் வலைச்சரத்திற்குக் கிடைக்குமானால் எனக்கும் அதில் மிக்க மகிழ்ச்சியே.

        என் யூகப்படி தற்சமயம் ஐந்தாம் இடத்தில் உள்ள தங்களின் வலைத்தளமே வெகு விரைவில் முதலிடம் பிடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பது என் நம்பிக்கை. தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

        Delete
      2. As on 04.06.2015 ..... Tamilmanam Rank shows as 68 ..... :)

        ஒருவேளை தங்கள் வாக்கு அப்படியே பலிச்சுடுமோ ! வருகை தரும் அனைவரும் வாக்களித்தால் அல்லவோ அது பலிக்கக்கூடும். சரி, பார்ப்போம்.

        என்னதான் நடக்கும்..... நடக்கட்டுமே. :)

        Delete
    7. என்னுடைய அனுமானம் சரிதான். உமையாள் காயத்திரி எகிப்திலும் கோவைக்கவி நெதர்லாந்திலும் இருக்கிறார்கள். நம் ஊரில் இரவு 12 மணி என்றால் அவர்களுக்கு மாலைப் பொழுதாக இருக்கும். பதிவைப் பார்த்து பின்னூட்டம் போட்டு விட்டார்கள்.

      ReplyDelete
      Replies
      1. பழனி. கந்தசாமி Mon Jun 01, 03:55:00 AM

        //என்னுடைய அனுமானம் சரிதான். உமையாள் காயத்திரி எகிப்திலும் கோவைக்கவி நெதர்லாந்திலும் இருக்கிறார்கள். நம் ஊரில் இரவு 12 மணி என்றால் அவர்களுக்கு மாலைப் பொழுதாக இருக்கும். பதிவைப் பார்த்து பின்னூட்டம் போட்டு விட்டார்கள்.//

        தங்களின் ஆராய்ச்சி + கண்டுபிடிப்புகளுக்கு நன்றி. :) யார் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தால் நமக்கு என்ன? எல்லோரும் எங்காவது செளக்யமாகவும் சந்தோஷமாகவும் மன நிம்மதிகளோடும் இருந்தால் சரிதான். அதுவே என்றும் என் பிரார்த்தனை.

        ’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ :)

        Delete
    8. தெரிந்த விவரங்கள்தான் என்றாலும் சுய விவரங்களை மறுபடி படித்ததில் எனக்கு இதுவரை தெரியாத தகவல் ஒன்று தெரிந்தது. உங்கள் கதைகள் வேற்று மொழிகளில் வெளிவந்திருக்கும் தகவல்.தான் அது. உற்சாகத் தொடக்கம். அடித்து தூள் கிளப்புங்கள்! :))))

      ReplyDelete
      Replies
      1. ஸ்ரீராம். Mon Jun 01, 04:52:00 AM
        //தெரிந்த விவரங்கள்தான் என்றாலும் சுய விவரங்களை மறுபடி படித்ததில் எனக்கு இதுவரை தெரியாத தகவல் ஒன்று தெரிந்தது. உங்கள் கதைகள் வேற்று மொழிகளில் வெளிவந்திருக்கும் தகவல்.தான் அது. உற்சாகத் தொடக்கம். அடித்து தூள் கிளப்புங்கள்! :))))//

        வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

        எதிர்பாராத ஒரு V V I P அவர்களின் திடீர் வருகையால் தங்களுக்கு பதில் அளிக்க சற்றே காலதாமதம் ஆகி விட்டது. மன்னிக்கணும். அவரைப்பார்த்த மகிழ்ச்சியில் எனக்குக் கையும் ஓடலை ... காலும் ஓடலை. :) ஒருவேலையுமே ஓடலை.

        இதுபோன்ற சந்தோஷமான தருணங்களில் என் வழக்கப்படி, பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் உடைத்துவிட்டு, ஹனுமார் நெஞ்சினில் ஒரு பொட்டலம் [Sample Packet] வெண்ணெயும் சார்த்திவிட்டு வரணும் என நினைத்துள்ளேன்.

        நாளை மறுநாள் என் தாயார் ஸ்ரார்த்தம் வருகிறது. வீடே இரண்டு நாட்களுக்கு கல்யாண வீடுபோல அமர்க்களப்படும். நானும் படு பிஸியாகிவிடுவேன். அதனால் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க சற்றே தாமதம் ஆகலாம்.

        புதன் இரவு முதல் நான் கொஞ்சம் நார்மலுக்கு வந்துவிடுவேன். சற்றே தாமதம் ஆனாலும் எப்படியும் எல்லோருடைய பின்னூட்டங்களுக்கும் எப்படியாவது பதில் அளித்துவிடத்தான் நினைத்துள்ளேன். பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது. :)

        எனக்குத்தெரிந்து இதுவரை என் மூன்று சிறுகதைகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

        தங்களால் ஹிந்தியை சரளமாகப் படித்து புரிந்து கொள்ளவும் முடியும் என்றால் தெரிவிக்கவும். அவ்வாறு வெளியாகியுள்ள பத்திரிகைகளின் பிரதியினை நான் PDF COPY யாக தங்களுக்கு மெயிலில் உடனே அனுப்பி வைக்க முடியும்.

        அதுபோல என் நெடுங்கதையான ‘உடம்பெல்லாம் உப்புச்சீடை’ உள்பட மேலும் சில கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு கன்னட பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

        இவைபற்றிய சிறுகுறிப்புகளை, என் பதிவுகளில், அந்தந்தக்கதையின் இறுதியில் கொடுத்துள்ளேன். தாங்கள் கவனிக்கவில்லையோ என்னவோ! உதாரணமாக ஒருசில இணைப்புகள் இதோ:

        http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html

        http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html

        http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
        இதற்கான தகவல் பின்னூட்டப்பெட்டியில் உள்ளது.

        http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
        இதற்கான தகவல் பின்னூட்டப்பெட்டியில் உள்ளது.

        தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

        பிரியமுள்ள கோபு




        Delete
    9. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜெயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரம் தொடக்கம் ஒரே அமர்க்களம். எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

      உங்களைப் பற்றிய விவரங்களை மீண்டும் உங்களின் எழுத்துக்களினாலேயே அறிந்து கொள்ளும் போது அலுப்பு ஏதும் இல்லை; சுவாரஸ்யமாகவே உள்ளது.

      என்னைப் பற்றியும் மற்றும் சகோதரிகள் ஆதி வெங்கட், தேனம்மை லஷ்மணன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

      மீண்டும் வருவேன்.

      த.ம. 5

      ReplyDelete
      Replies
      1. தி.தமிழ் இளங்கோ Mon Jun 01, 05:42:00 AM

        //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//

        வாங்கோ, வணக்கம்.

        //பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரம் தொடக்கம் ஒரே அமர்க்களம். எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.//

        மிக்க மகிழ்ச்சி.

        //உங்களைப் பற்றிய விவரங்களை மீண்டும் உங்களின் எழுத்துக்களினாலேயே அறிந்து கொள்ளும் போது அலுப்பு ஏதும் இல்லை; சுவாரஸ்யமாகவே உள்ளது. //

        மிகவும் சந்தோஷம். நீங்க சுவாரஸ்யமாகவே சொல்லிட்டீங்கோ. எனக்குத்தான் என்னைப்பற்றி எழுத சற்றே அலுப்பாக, அதாவது நம் அதிரா பாஷையில் ’ஷை’யாக இருந்தது. :)

        //என்னைப் பற்றியும் மற்றும் சகோதரிகள் ஆதி வெங்கட், தேனம்மை லஷ்மணன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.//

        இதற்கெல்லாம் மூலகாரணமே நீங்க மூவரும் தானே ! இன்று என்னவோ எனக்கு மிகுந்த சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. :)

        //மீண்டும் வருவேன்.//

        ஆஹா, இது உங்கள் இல்லம். தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். :)))))

        அன்புடன் VGK

        Delete
    10. பாட்டுடன் அசத்தலான அறிமுகம் ஐயா... ஒவ்வொரு பதிவின் இணைப்பு கொடுத்தாலும், அவை ஒவ்வொன்றும் தொடர் பிரமாண்டம்...! வாழ்த்துகள் ஐயா...

      ReplyDelete
      Replies
      1. திண்டுக்கல் தனபாலன் Mon Jun 01, 06:10:00 AM

        வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

        //பாட்டுடன் அசத்தலான அறிமுகம் ஐயா...//

        மிக்க மகிழ்ச்சி.

        //ஒவ்வொரு பதிவின் இணைப்பு கொடுத்தாலும், அவை ஒவ்வொன்றும் தொடர் பிரமாண்டம்...!//

        பிரும்மாண்டம் ..... அதுவே என் பலமாகவும் பலகீனமாகவும் உள்ளது. நான் என்ன செய்ய? :)

        //வாழ்த்துகள் ஐயா...//

        மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தினமும் வாங்கோ.

        Delete
    11. வாழ்த்துகள் சார். வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது என்றாலும் இனிமையான பலரை அறிந்து கொள்லும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்...முதல் நாள் அறிமுகம் கலக்கல்..சார்...தொடருங்கள்

      ReplyDelete
      Replies
      1. Geetha M Mon Jun 01, 06:28:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //வாழ்த்துகள் சார். வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது என்றாலும் இனிமையான பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்...முதல் நாள் அறிமுகம் கலக்கல்..சார்...தொடருங்கள்//

        மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள். முடியுமானால் தினமும் வருகை தாருங்கள்.

        Delete
    12. துவக்கமே களைகட்டிவிட்டது
      சாதாரணமானவன் என வாமனனாய் உங்களை
      அறிமுகம் செய்து கொண்டாலும்
      வலையுலகில் உங்கள் விஸ்வரூபம்
      அறிந்தவர்களுக்குத் தெரியும்
      அறியாதவர்கள் இந்த அறிமுகம் மூலம்
      நிச்சயம் அறிந்து கொள்வார்கள்
      தொடர்ந்து வருகிறோம்
      தொடர நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete
      Replies
      1. Ramani S Mon Jun 01, 06:37:00 AM

        வாங்கோ My Dear Mr. Ramani Sir. வணக்கம்.

        //துவக்கமே களைகட்டிவிட்டது// :)

        மிக்க மகிழ்ச்சி.

        //சாதாரணமானவன் என வாமனனாய் உங்களை அறிமுகம் செய்து கொண்டாலும் வலையுலகில் உங்கள் விஸ்வரூபம்
        அறிந்தவர்களுக்குத் தெரியும். அறியாதவர்கள் இந்த அறிமுகம் மூலம் நிச்சயம் அறிந்து கொள்வார்கள்//

        :) தங்கள் வாயிலாக இதைக்கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

        //தொடர்ந்து வருகிறோம். தொடர நல்வாழ்த்துக்கள்//

        மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

        என்றும் அன்புடன் தங்கள்
        VGK

        Delete
    13. தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு
      வலைச்சர ஆசிரியர் பணி
      கின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கும்
      தங்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்
      தொடருங்கள் ஐயா
      தொடர்கிறேன்
      தம +1

      ReplyDelete
      Replies
      1. கரந்தை ஜெயக்குமார் Mon Jun 01, 06:49:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு வலைச்சர ஆசிரியர் பணி
        கின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கும் தங்களுக்கு வாழ்த்தும் வணக்கமும். தொடருங்கள் ஐயா. தொடர்கிறேன்//

        அடடா, கின்னஸ் சாதனை என்று ஏதேதொ சொல்கிறீர்களே !

        தங்களின் அன்பான இன்றைய வருகைக்கும், நாளை முதல் தொடர் வருகை தரப்போவதாகச் சொல்லியுள்ளதற்கும் மிக்க நன்றி.

        Delete
    14. ஐந்து வாரங்களா? அருமை ஐயா.....

      ReplyDelete
      Replies
      1. கார்த்திக் சரவணன் Mon Jun 01, 07:31:00 AM

        //ஐந்து வாரங்களா? அருமை ஐயா.....//

        ஆம், ஐந்தே ஐந்து வாரங்கள் மட்டுமே. அதற்கு மேலும் என்றால் ..... எழுதும் எனக்கும், வாசிக்கும் அனைவருக்குமே அலுத்துப்போய்விடக்கூடும் :) அதனால் 5 வாரங்கள் மட்டுமே.

        தங்களின் வருகைக்கு நன்றிகள்.

        Delete
    15. ஆஹா..! பிரமித்துப் போனேன் ஐயா! வலைப்பதிவில் இப்படியெல்லாம் செய்யமுடியுமா..? எத்தனை அனிமேசன் சித்திரங்கள்..! வலைப்பதிவை படிக்கும்போதே ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் உணர்கிறேன்.
      தாங்கள் இவ்வளவு பெரிய சாதனையாளர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். வாழ்த்த வயதில்லை. பணிகிறேன்.! என் வலைதளத்தில் தாங்கள் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். நானும் தொடர்கிறேன்.
      முதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் அய்யா!
      த ம 8

      ReplyDelete
      Replies
      1. S.P. Senthil Kumar Mon Jun 01, 08:01:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //ஆஹா..! பிரமித்துப் போனேன் ஐயா! வலைப்பதிவில் இப்படியெல்லாம் செய்யமுடியுமா..? எத்தனை அனிமேசன் சித்திரங்கள்..! வலைப்பதிவை படிக்கும்போதே ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் உணர்கிறேன்.//

        மிக்க மகிழ்ச்சி. நான் பதிவிட ஆரம்பித்த 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை முதல் ஆறு மாதங்களுக்கு எனக்கு பதிவினில் படங்களை எப்படி இணைப்பது என்றே தெரியாது.

        அந்த என் ஆரம்ப கால பதிவுகளில் எல்லாம் ஒரு படம் கூட இருக்காது. பிறகுதான் நானும் கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.

        அனிமேஷன் படங்களைப் பார்ப்பது என்றால் நானும் ஒரு சின்னக்குழந்தைபோல ஆகி, மிகவும் சந்தோஷம் கொள்வேன்.

        பிறகு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கவும், சேமித்து வைத்துக்கொள்ளவும், இணைக்கவும் கற்றுக்கொண்டேன்.

        இவற்றிற்கெல்லாம், எனக்கு ஓர் முன்னோடியாக வேறொரு பதிவர் இருக்கிறார். என் எல்லாப்புகழும் அவருக்கு மட்டுமே சொந்தமாகும் ! :)

        //தாங்கள் இவ்வளவு பெரிய சாதனையாளர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.//

        அதெல்லாம் ஒன்றுமே இல்லை. கற்றது கைமண் அளவு ... கல்லாதது உலகளவு மைனஸ் கைமண் அளவு :)

        அதுபோல இதெல்லாம் ஒரு சாதனை என்றோ, நான் ஒரு சாதனையாளர் என்றோ எப்போதுமே நினைப்பது இல்லை. நாம் சாதிக்க ...... நமக்கு ‘வானமே எல்லை’ ..... இவையெல்லாம் ஏதோ சின்னச்சின்ன முயற்சிகள். வெற்றிகள். அவ்வளவுதான்.

        //வாழ்த்த வயதில்லை. பணிகிறேன்.! என் வலைதளத்தில் தாங்கள் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். நானும் தொடர்கிறேன்.//

        மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
        முதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் அய்யா!

        Delete
      2. //முதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் ஐயா!//

        தினமும் வருகை தாருங்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

        Delete
    16. அன்பின் அண்ணா அவர்களுக்கு நல்வரவு!..

      பிரமிக்க வைக்கும் சாதனைகள் தங்களுடையது!..
      இனிவரும் ஐந்து வாரங்களுக்கும் அமுத மழைதான்!..

      என்றென்றும் வாழ்க நலம்!..

      ReplyDelete
      Replies
      1. துரை செல்வராஜூ Mon Jun 01, 08:09:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //அன்பின் அண்ணா அவர்களுக்கு நல்வரவு!..
        பிரமிக்க வைக்கும் சாதனைகள் தங்களுடையது!..
        இனிவரும் ஐந்து வாரங்களுக்கும் அமுத மழைதான்!..//

        :) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

        //என்றென்றும் வாழ்க நலம்!..//

        சந்தோஷம். :)

        Delete
    17. வலைச்சரம் வாசலிலே!
      வண்ணத் தமிழ் வரைந்தீரே!
      எண்ணமெல்லாம் சிறக்கட்டும்
      தினம் அது ஜொலிக்கட்டும்!
      மனம் போல் மாண்பினை பெறுகவே!

      வாழ்த்துவதற்கு வயதில்லை!
      வணங்கி மகிழ்கின்றேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.com

      ReplyDelete
      Replies
      1. yathavan nambi Mon Jun 01, 08:23:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //வலைச்சரம் வாசலிலே!
        வண்ணத் தமிழ் வரைந்தீரே!
        எண்ணமெல்லாம் சிறக்கட்டும்
        தினம் அது ஜொலிக்கட்டும்!
        மனம் போல் மாண்பினை பெறுகவே!

        வாழ்த்துவதற்கு வயதில்லை!
        வணங்கி மகிழ்கின்றேன்!
        நன்றி!
        நட்புடன்,
        புதுவை வேலு
        www.kuzhalinnisai.blogspot.com//

        ஆஹா, கவிதையிலேயே வாழ்த்துப்பா வெகு அருமை. மிக்க மகிழ்ச்சி + நன்றி, நண்பரே. வாழ்க !

        Delete
    18. வலைச்சரம் மணக்க ஆரம்பித்து விட்டது..வண்ணப் பூக்கோலம்.. அழகழகாய் இனி ஜொலிக்கும்..
      நல்வாழ்த்துகள்

      ReplyDelete
      Replies
      1. ரிஷபன் Mon Jun 01, 08:57:00 AM

        வாங்கோ சார், வணக்கம் சார்.

        //வலைச்சரம் மணக்க ஆரம்பித்து விட்டது..வண்ணப் பூக்கோலம்.. அழகழகாய் இனி ஜொலிக்கும்.. நல்வாழ்த்துகள்//

        வண்ணப்பூக்கோலமாய் மணக்கும் + ஜொலிக்கும் தங்களின் நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        பிரியமுள்ள
        வீ...............ஜீ

        Delete
    19. தெரிந்த விவரங்கள் தான் என்றாலும் படிக்க வெகு சுவாரஸ்யம்.தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மோதிரக்கையால் அறிமுகமாகும் வலைத்தள நன்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
      உங்கள் பானியில் வரப்போகும் வலைச்சரப்பதிவுகளைப்படிக்க ஆவல்.
      ' அரட்டை ' அடிக்க தினம், முடிந்த வரை ஆஜராகி விடுவேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் .
      வாழ்த்துக்கள் கோபு சார்.

      ReplyDelete
      Replies
      1. rajalakshmi paramasivam Mon Jun 01, 09:10:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //தெரிந்த விவரங்கள் தான் என்றாலும் படிக்க வெகு சுவாரஸ்யம்.//

        சுவாரஸ்யம் மிக்க பின்னூட்டமாக ஆரம்பித்துள்ளீர்கள். :)

        //தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.//

        பெரும்பாலான பதிவர்கள் நமக்குத்தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஏதோவொரு அடிப்படையில்தான், நான் அடையாளம் காட்ட விரும்பும் பதிவர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அது என்ன அடிப்படை என்பது பற்றி எனது 35வது பதிவினில் விளக்கம் கொடுத்து குறிப்பிடுவதாக உள்ளேன்.

        //மோதிரக்கையால் அறிமுகமாகும் வலைத்தள நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

        :) மொத்தம் 220 மோதிரங்கள் எனக்குத்தேவைப்படும் போலத் தோன்றுகிறது. :) என்னால் அடையாளம் காட்டப்படும் ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு மோதிரம் வீதம் கொடுக்கத்தான் என் மனதுக்குள் ஆசையாகவும் உள்ளது.

        ’நினைப்பதெல்லாம் ........... நடந்துவிட்டால் ...................’
        எனப் பாட்டுத்தான் பாட வேண்டும் .... இந்த ஏழை எளிய சாதாரணமானவனான நான். :)

        //உங்கள் பாணியில் வரப்போகும் வலைச்சரப் பதிவுகளைப் படிக்க ஆவல். //

        மிகவும் சந்தோஷம். ஒவ்வொன்றையும் யார் சிரத்தையாகப் படிக்கப்போகிறார்கள் என நினைத்திருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கி விட்டது தங்களின் இந்தப்பின்னூட்டம். :)

        //’ அரட்டை ' அடிக்க தினமும், முடிந்த வரை ஆஜராகி விடுவேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.//

        அதுதான் என் முக்கியத் தேவையும் ஆகும். வாங்கோ ....... தினமும் நன்றாகவே நாம் அரட்டை அடிப்போம் :)

        //வாழ்த்துக்கள் கோபு சார்.//

        தங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆறுதலான, ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

        என்றும் அன்புடன் தங்கள்
        கோபு

        Delete
    20. மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.

      சாதனைகள் படைப்பதெல்லாம் தங்களுக்கு சாதாரணமானது தானே!

      வரலாறு படைக்கும் 35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு
      வாழ்த்துகள்..!!

      ReplyDelete
      Replies
      1. இராஜராஜேஸ்வரி Mon Jun 01, 09:18:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        நெடுநாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் .. ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.

        தங்களை நான் நினைக்காத நாளோ, தங்களுக்காக நான் மனதார பிரார்த்தனைகள் செய்யாத நாளோ கிடையாது.

        தங்களின் இந்த நீண்ட இடைவெளி என்னை மிக மிக பாதித்து விட்டது. மனதளவில் மிகவும் சோர்ந்து போய்விட்டேன்.

        //மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.//

        தங்களின் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்குகு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        //சாதனைகள் படைப்பதெல்லாம் தங்களுக்கு சாதாரணமானது தானே!//

        இருக்கலாம். இருப்பினும் இதை நான் ஓர் சவலாக எடுத்துக்கொண்டு செய்வதன், பின்னனியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. போகப்போக தங்களுக்கே தெரியவரும்.

        //வரலாறு படைக்கும் 35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு
        வாழ்த்துகள்..!!//

        35 வார வலைச்சர ஆசிரியர் பணியினை, நம் பதிவர்களில் தங்கள் ஒருவரால் மட்டுமே செய்ய இயலும்.

        நான் ஏற்றுக்கொண்டுள்ளது வெறும் 35 நாட்கள் மட்டுமே எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :)

        தங்களின் தங்கமான வருகை, எனக்கு ஏதோ மிகப்பெரிய தங்கப்புதையலே கிடைத்ததுபோல இன்று பெருமகிழ்ச்சியளிக்கிறது.

        மிக்க நன்றி, மேடம். உடல்நிலை இடம் கொடுக்குமானால், தயவுசெய்து எனக்காகவாவது தினமும் வலைச்சரப்பக்கம் வருகை தாருங்கள் என அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

        Delete
    21. ஐயா, வலைச்சரம் உங்கள் கைவசம் சரம்சரமாக பதிவுகளை அள்ளிக் கொட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!! வாழ்த்துக்கள்!!

      ReplyDelete
      Replies
      1. middleclassmadhavi Mon Jun 01, 09:24:00 AM

        வாங்கோ MCM Madam, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ? நாம் பதிவினில் பேசியே ரொம்ப நாள் ஆச்சு !

        //ஐயா, வலைச்சரம் உங்கள் கைவசம். சரம்சரமாக பதிவுகளை அள்ளிக் கொட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!!
        வாழ்த்துக்கள்!!//

        தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் சரம்சரமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    22. சுய அறிமுகம் அனைத்தும் அபாரம். சிறு பையன் போல் ஆகி விட்டீர்களா நீங்களே இப்படி சொன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம் ம்..ம். தங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் கருத்துக்கள் இட முடியாமல் திரும்பிவிடுவேன். இங்கு நிச்சயம் தொடர்வேன். தங்கள் பணியை சிறப்பாக ஆற்ற என் வாழ்த்துக்கள் சகோ! தொடர்கிறேன்.

      ReplyDelete
      Replies
      1. Iniya Mon Jun 01, 09:27:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //சுய அறிமுகம் அனைத்தும் அபாரம்.//

        மிக்க மகிழ்ச்சி.

        //சிறு பையன் போல் ஆகி விட்டீர்களா? நீங்களே இப்படி சொன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம் ம்..ம்.//

        தாங்கள் ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருந்துள்ளீர்கள். எனக்கு இது ஓர் புது அனுபவம் அல்லவா ! :) அதனால் நான் ஒரு பொடிப்பையனாக என்னை நினைத்துக்கொண்டுள்ளேன்.

        //தங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் கருத்துக்கள் இட முடியாமல் திரும்பிவிடுவேன்.//

        கருத்துக்கள் இட முடியாமல்? ஏன் அப்படி? ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ? :)

        //இங்கு நிச்சயம் தொடர்வேன். தங்கள் பணியை சிறப்பாக ஆற்ற என் வாழ்த்துக்கள் சகோ! தொடர்கிறேன்.//

        மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தொடர்ந்து வாங்கோ.

        Delete
      2. கருத்துக்கள் இட முடியாமல்? ஏன் அப்படி? ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ? :)

        ஆமாம் அது தான் உண்மை.

        Delete
      3. Iniya Mon Jun 01, 11:43:00 PM

        **கருத்துக்கள் இட முடியாமல்? ஏன் அப்படி? ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ? :)**

        //ஆமாம் அது தான் உண்மை.//

        பதிவினைப்படித்து முடித்ததும், பிறரின் பின்னூட்ட எண்ணிக்கைகளையெல்லாம் பார்த்து வியக்காமல், மலைக்காமல், Control + End .... Buttons களை சேர்த்து அமுக்கிடுங்கோ.

        பின்னூட்டப்பெட்டி மிகச்சுலபமாகத் தங்களுக்குக் கிடைத்துவிடும். :)

        Delete
    23. 35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இனி வலைச்சரம் களைகட்டிவிடும்.பாராட்டுக்கள். மொத்தத்தில் சொல்லப்போனால் நீங்கள் ஒரு நூலகம் சார். தொடர்ந்து அசத்துங்க. நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.

      ReplyDelete
      Replies
      1. டைப்பிங் பிழை 35 நாட்கள் தானே !

        Delete
      2. Asiya Omar Mon Jun 01, 09:28:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //35 நாட்கள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இனி வலைச்சரம் களைகட்டிவிடும். பாராட்டுக்கள். //

        மிக்க மகிழ்ச்சி.

        //மொத்தத்தில் சொல்லப்போனால் நீங்கள் ஒரு நூலகம் சார். தொடர்ந்து அசத்துங்க. நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.//

        தங்களின் அன்பான வருகைக்கும் நூலகக் கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். நேரம் கிடைக்கும்போது வாங்கோ.

        Delete
    24. இங்கு காலை 7.50. கணினியை ஓட விட்டு வலைச்சரத்தைத் திறந்து பார்த்தால் எனக்கு முன்பேயே நிறைய நட்புள்ள‌ங்கள் இங்கு வந்து விட்டார்கள்! அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியதிற்கான அடையாளம் இது!
      வலைச்சர ஆசிரியராக பதவியில் அமர்ந்ததற்கு உற்சாக வரவேற்புடனும் இனிய வாழ்த்துக்களுடனும் மானசீகமாக உங்களுக்கு பொன்னாடை போர்த்துகிறேன்! ஆரம்பமே அசத்தல்! இனிதாய் தொடருங்கள்!

      ReplyDelete
      Replies
      1. மனோ சாமிநாதன் Mon Jun 01, 09:29:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //இங்கு காலை 7.50. கணினியை ஓட விட்டு வலைச்சரத்தைத் திறந்து பார்த்தால் எனக்கு முன்பேயே நிறைய நட்புள்ள‌ங்கள் இங்கு வந்து விட்டார்கள்! அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியதிற்கான அடையாளம் இது! //

        ஆமாம் மேடம், எனக்கும் ஒரே ஆச்சர்யமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவரும் என் மீது இப்படிக் கடலளவு பிரியம் வைத்துள்ளார்களே ! :) சற்றே எனக்கு பயமாகவும் உள்ளது :)

        //வலைச்சர ஆசிரியராக பதவியில் அமர்ந்ததற்கு உற்சாக வரவேற்புடனும் இனிய வாழ்த்துக்களுடனும் மானசீகமாக உங்களுக்கு பொன்னாடை போர்த்துகிறேன்!//

        மிக்க நன்றி. மிகவும் சந்தோஷம். தன்யனானேன். துபாய்த் தங்கத்தில் செய்த நிஜமான பொன்னாடையாக இருக்குமோ என நினைத்தேன். :) பிறகுதான் ’மானசீகமாக’ என்ற வார்த்தையையே நான் படித்தேன். :) எனினும் நன்றிகள்.

        //ஆரம்பமே அசத்தல்! இனிதாய் தொடருங்கள்!//

        தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    25. முதல் நாள் பதிவே இவ்வளவு அமர்க்களமாக இருக்கே. இனி வரும் நாட்கள் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்க போகுது. இதற்கு முன்பு வலைச்சர ஆசிரியர் பதவி வகெத்தவங்களுக்கு ஒரு வாரம் தான் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த வலைப்பதிவின் பீஷ்ம பிதாமகர் இல்லியா ஸோ உங்களுக்டு 5--வாரங்கள் என்று பொறுப்பு கொடுத்திருக்காங்க. உங்களுக்கு இதெல்லாம் தூசு மாதிரி.. சும்மா ஊதி தள்ளிடுவீங்க. அதிகப்படியான உழைப்பு தேவைப்படும் நீங்க தான் வேலை பண்ண தயங்கவே மாட்டீங்களே. சும்மா இருப்பது தானே உங்களால முடியாத விஷயம் அறிமுக பதிவே இவ்வளவு ரசனை யுடன் கொடுத்த நீங்ந வரும் நாட்களில் அதகளம் பண்ணப் போரீங்க. எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான.

      ReplyDelete
      Replies
      1. பூந்தளிர் Mon Jun 01, 09:39:00 AM

        வாங்கோ பூந்தளிர் ! :) வணக்கம்மா !

        //முதல் நாள் பதிவே இவ்வளவு அமர்க்களமாக இருக்கே.//

        மிகவும் சந்தோஷம். முதல் நாள் என்பதால் அது எப்போதுமே மிகவும் அமர்க்களமாகத்தான் இருக்கும். :)

        //இனி வரும் நாட்கள் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்க போகுது.//

        உங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் என்றால் எனக்குத் ஒருவேளை திண்டாட்டமா இருக்குமோ என்னவோ ! :)

        //இதற்கு முன்பு வலைச்சர ஆசிரியர் பதவி வகித்தவங்களுக்கு ஒரு வாரம் தான் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த வலைப்பதிவின் பீஷ்ம பிதாமகர் இல்லியா ஸோ உங்களுக்கு 5 வாரங்கள் என்று பொறுப்பு கொடுத்திருக்காங்க.//

        அவங்க எங்க எனக்குப் பொறுப்பு கொடுத்தாங்க? நானே எடுத்துக்கிட்டேனாக்கும்.:) எனக்கு ஒருவாரமெல்லாம் பத்தவே பத்தாதாக்கும் !! :) தினமும் குறைந்த எண்ணிக்கையில் பதிவர்களை நிறைவாக அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான் நூற்றுக்கு ஒருத்தராவது, அவர்களின் ஏதாவது ஒரு பதிவையாவது போய்ப்படிக்க வாய்ப்பாக அது அமையும். வசவசவென்று தினமும் ஏராளமான பதிவர்களை அடையாளம் காட்டிச் சிறப்பிக்கலாம்தான். ஆனால் அதனால் ஒரு பயனுமே இருக்காது. யாரும் எதையும் கண்டுக்கவே மாட்டாங்கோ !

        //உங்களுக்கு இதெல்லாம் தூசு மாதிரி.. சும்மா ஊதி தள்ளிடுவீங்க.//

        அது என்ன மகுடியா? சும்மா ஊதித் தள்ளிவிடுவதற்கு ?

        //அதிகப்படியான உழைப்பு தேவைப்படும். நீங்க தான் வேலை பண்ண தயங்கவே மாட்டீங்களே. சும்மா இருப்பது தானே உங்களால முடியாத விஷயம்.//

        ஆஹா, என்னைப்பற்றி எனக்கே தெரியாத விஷயமெல்லாம் என் அன்புக்குரிய பூந்தளிருக்குத் தெரிந்துள்ளதே என நினைத்து வியந்து போய் உள்ளேன். :)

        //அறிமுக பதிவே இவ்வளவு ரசனையுடன் கொடுத்த நீங்க வரும் நாட்களில் அதகளம் பண்ணப் போறீங்க. எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்//

        உங்களின் கும்மிக்கும். கோலாட்டங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிம்மா. மிக்க நன்றிம்மா. தினமும் வலைச்சரப்பக்கம் கொஞ்சம் வந்து எட்டிப் பாருங்கோ. எட்டிப்பார்த்துட்டு ஓடிடாதீங்கோ. ஏதாவது கொஞ்சம் கருத்தும் சொல்லிட்டுப்போங்கோ.

        ஆமாம், நேற்று முழுவதும் என் பதிவுகள் பக்கம் உங்களைப் பார்க்கவே முடியலையே! என்ன ஆச்சு? ஏதாவது படம் பார்க்கப்போய்ட்டீங்களோ? என்ன சினிமா பார்த்தீங்கோ?

        தங்களின் அன்பான வருகைக்கும் மிக நீண்ண்ண்ண்ட பின்னூட்டக்க்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    26. 50 ஆண்டுகட்கு முன்பு நாம் இருந்த திருச்சி ஆண்டார் தெரு இடத்தை
      நினைவில் வைத்து ஒரு நிழல் படத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு என்னையும் ஒரு 50 வருடத்துக்கு முன்னே கொண்டு போய் விட்டீர்கள்.



      இது நம் வீதியில் எந்த இடம் ?

      அது இருக்கட்டும்.

      டும் டும் டும்.

      அழகு.

      ஜல். ஜல் ஜல்.

      ஒரு வார பின்னூட்டமே ஆயிரத்தை தாண்டி விடும் என நினைக்கிறேன். ஐந்து வாரங்களில் ஐயாயிரமா அதற்கும் மேலாகவும் இருக்கலாம்.

      வாழ்த்துக்கள்.

      சுப்பு தாத்தா.

      ReplyDelete
      Replies
      1. sury Siva Mon Jun 01, 09:40:00 AM

        வாங்கோ, நமஸ்காரம்.

        //50 ஆண்டுகட்கு முன்பு நாம் இருந்த திருச்சி ஆண்டார் தெரு இடத்தை நினைவில் வைத்து ஒரு நிழல் படத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு என்னையும் ஒரு 50 வருடத்துக்கு முன்னே கொண்டு போய் விட்டீர்கள்.//

        :) நம்மால் மறக்க முடியுமா அந்த வாழ்க்கையை! மறக்க மனம் கூடுதில்லையே!! http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

        //இது நம் வீதியில் எந்த இடம் ?//

        தங்கள் உறவினர் வக்கீல் சிவசுப்ரமணிய ஐயர் என்பவர் குடியிருந்தாரே, அந்த வீட்டிலிருந்து ஒருபத்தடி கிழக்கே வந்தால் இந்த இடம் வந்துவிடும். அந்தக்காலத்தில் ஆயுர்வேதிக் டாக்டர் V.R. சுப்ரமணிய சாஸ்திரி என்று இருந்தாரே, பிறகு அவர் காலமானபின் அவர் மகன் V.S. பஞ்சநத சர்மா என்பவரும் ஆயுர்வேதிக் டாக்டராக பிராக்டிஸ் செய்தாரே, அந்த வீட்டின் வாசல் தான் இந்த மாடுகள் + மாட்டு வண்டிகள் நிற்கும் இடம். அந்த ஒருஜோடி மாடுகளுக்குப் பின்னால் சற்றே உற்றுப்பாருங்கோ. ஒரு கோபுரம் தெரிகிறதா? அதுவே நம் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயத்தின் கிழக்குக் கோபுரம். மற்றொரு மேற்கு வாசல் கோபுரம் நந்திகோயில் தெருவினில் இருக்கும்.

        கடைசியாகக் காட்டியுள்ள என் படத்தில் கிழக்கு மற்றும் மேற்கு இரு கோபுரங்களையும் ஒருசேரப் பாருங்கோ, தெரியும். அந்தப்படம் என் வீட்டு ஜன்னலிலிருந்தே எடுக்கப்பட்டது.

        //அது இருக்கட்டும். டும் டும் டும். அழகு. ஜல். ஜல் ஜல். //

        சலங்கைகட்டிய அந்தக்கால இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல உள்ளது, தங்களின் ஜல் ஜல் ஜல் :)

        //ஒரு வார பின்னூட்டமே ஆயிரத்தை தாண்டி விடும் என நினைக்கிறேன். ஐந்து வாரங்களில் ஐயாயிரமா அதற்கும் மேலாகவும் இருக்கலாம்.//

        இன்று முதல்நாள் உள்ள சுறுசுறுப்பும் பேரெழுச்சியும் அப்படியே தொடரும் என்று நாம் சொல்ல முடியாது.

        நாளடைவில் சிலர் எழுச்சிகுன்றி வழுவட்டையாகி விடுவார்கள். எழுச்சி, பேரெழுச்சி, வழுவட்டை போன்றவைகளைப்பற்றிய முழு விபரங்கள் அறிய இதோ என் முழுநீள நகைச்சுவைப்பதிவு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

        //வாழ்த்துக்கள். சுப்பு தாத்தா.//

        தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

        Delete
    27. Arputiam thagalin oru sela padivu matum padithu irukan. varum naatkalil anithum padithu vidukeran aya. 5thu vaaramum thagalin kaivanam serakatum. pinuatagal padipathum thani suvai thaan. valai ualga nanbar kootam arumai. hajh4dg

      ReplyDelete
      Replies
      1. My Mobile Studios Mon Jun 01, 09:50:00 AM

        Arputiam thagalin oru sela padivu matum padithu irukan. varum naatkalil anithum padithu vidukeran aya. 5thu vaaramum thagalin kaivanam serakatum. pinuatagal padipathum thani suvai thaan. valai ualga nanbar kootam arumai. hajh4dg

        பதிவினை மட்டுமல்லாது வலையுலக நண்பர்களின் பின்னூட்டங்களையும் படித்து ரசிக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.

        Delete
    28. asathalaana suya arimugam sir. en vendukolaiyum etru kondathukku mikka nandri sir.

      ReplyDelete
      Replies
      1. ADHI VENKAT Mon Jun 01, 09:54:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //asathalaana suya arimugam sir. en vendukolaiyum etru kondathukku mikka nandri sir. அசத்தலான சுய அறிமுகம் சார். என் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி, சார்//

        தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள், மேடம்.

        Delete
    29. நல்வரவு, வாழ்த்துக்கள்.

      அன்றய, இன்றய திருச்சி புகைப்படம் செம.....

      ReplyDelete
      Replies
      1. யாஸிர் அசனப்பா. Mon Jun 01, 10:08:00 AM
        நல்வரவு, வாழ்த்துக்கள். அன்றைய, இன்றைய திருச்சி புகைப்படம் செம.....//

        ’செம’யான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

        Delete
    30. என்னுடைய முதல் கமெண்ட் காணவில்லையே..

      வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். விஜிகே சார் உங்கள் சாதனைகளைப் பார்த்து பிரமித்தேன்.

      தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

      வலைப்பூக்களில் போட்டி அறிவித்து அதை சிறப்புற வழங்கியது தாங்கள்தான் என நினைக்கிறேன்.

      வலைச்சரத்திலும் வகை வகையான படைப்புகள் வெளியிட வாழ்த்துகிறேன். :)

      ReplyDelete
      Replies
      1. Thenammai Lakshmanan Mon Jun 01, 11:07:00 AM

        வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

        //என்னுடைய முதல் கமெண்ட் காணவில்லையே..//

        அச்சச்சோ ! :( .... காக்கா ஊஷ் ஆயிடுச்சோ என்னவோ ! :)

        //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். விஜிகே சார் உங்கள் சாதனைகளைப் பார்த்து பிரமித்தேன்.//

        நான் அடிக்கடி அதைவிட பிரமித்துப்போய் பெருமூச்சு விட்டு வருகிறேன், சாதனை நாயகி அவர்களின் சாதனைகளைப் பார்த்து. உங்கள் வலைப்பக்கம் நான் வரும்போதெல்லாம் இவர்கள் ’சாதிக்கப்பிறந்தவர்கள்’ என நினைத்துக்கொள்வது உண்டு. உங்களின் சாதனைகளுக்கு முன்னால் என்னோடதெல்லாம் ’சு-ம்-மா’ :)

        //தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.//

        தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

        //வலைப்பூக்களில் போட்டி அறிவித்து அதை சிறப்புற வழங்கியது தாங்கள்தான் என நினைக்கிறேன்.// :)

        //வலைச்சரத்திலும் வகை வகையான படைப்புகள் வெளியிட வாழ்த்துகிறேன். :)//

        தங்களின் அன்பான வருகைக்கும் தேன் போன்ற இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

        Delete
    31. நடகட்டும் தங்கள் பயணம்! வெற்றிகரமாக! வாழ்த்துகள்!

      ReplyDelete
      Replies
      1. புலவர் இராமாநுசம் Mon Jun 01, 11:18:00 AM

        வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

        //நடக்கட்டும் தங்கள் பயணம்! வெற்றிகரமாக! வாழ்த்துகள்!//

        தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

        Delete
    32. தொய்ந்துபோயிருக்கும் வலைச்சரத்தை தூக்கிநிறுத்தும் முன்முயற்சியாக தாங்கள் தொடர்ச்சியாக ஐந்துவாரங்கள் ஆசிரியப்பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார். தங்களுடைய கடின உழைப்பும் நேரமேலாண்மையும் திட்டமிடலும் செய்நேர்த்தியும் யாவரும் அறிந்த ஒன்றே. தங்களுடைய பதிவுகள் பலவும் கட்டியங்கூறும் தகவல் அது. ஒவ்வொரு பதிவையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் தொகுத்துவைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. பதிவுகளுக்கான பின்னூட்டங்களைக் கூட மிக அழகாகத் தொகுத்து பின்னூட்டமிட்டவர்களையும் ஊக்குவிக்கும் தங்களுடைய மனப்பாங்கு மிகுந்த பாராட்டுதற்குரியது. இவ்வலைச்சர ஆசிரியர் பொறுப்பையும் செவ்வனே திறம்பட நடத்தி தங்கள் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மணிவைரம் மிளிர என் இனிய வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. கீத மஞ்சரி Mon Jun 01, 11:20:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //தொய்ந்துபோயிருக்கும் வலைச்சரத்தை தூக்கிநிறுத்தும் முன்முயற்சியாக தாங்கள் தொடர்ச்சியாக ஐந்துவாரங்கள் ஆசிரியப்பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார். //

        தங்களின் இந்த மனமார்ந்த வாழ்த்துகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

        //தங்களுடைய கடின உழைப்பும் நேரமேலாண்மையும் திட்டமிடலும் செய்நேர்த்தியும் யாவரும் அறிந்த ஒன்றே. தங்களுடைய பதிவுகள் பலவும் கட்டியங்கூறும் தகவல் அது. ஒவ்வொரு பதிவையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் தொகுத்துவைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. பதிவுகளுக்கான பின்னூட்டங்களைக் கூட மிக அழகாகத் தொகுத்து பின்னூட்டமிட்டவர்களையும் ஊக்குவிக்கும் தங்களுடைய மனப்பாங்கு மிகுந்த பாராட்டுதற்குரியது.//

        தங்களின் ஆழமான புரிதலும், அவ்வாறு புரிந்துகொண்டதை அழகுற எடுத்துரைப்பதும் தங்களுக்கே உரிய தனிக்கலையாக அமைந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி.

        //இவ்வலைச்சர ஆசிரியர் பொறுப்பையும் செவ்வனே திறம்பட நடத்தி தங்கள் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மணிவைரம் மிளிர என் இனிய வாழ்த்துகள்.//

        தங்களின் அன்பான வருகைக்கும் அழகான (சாணை தீட்டிய கூர்மையான கத்தி போன்ற) கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தங்களின் தனித்திறமைக்கு என் பாராட்டுகள், மேடம்.

        பிரியமுள்ள கோபு

        Delete
    33. கோபு அண்ணா

      ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போல் ஆசிரியர் இல்லாமல் களை இழந்த வலைச்சரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வந்திருக்கும் கோபு அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.


      புகைப்படங்கள் அருமை. இப்படி புகைப்படங்கள் இட உங்கள் வலைத் தளத்தில் எங்களுக்கு ஒரு வகுப்பு எடுக்கலாமே. இல்லைன்னா இதையெல்லாம் உங்க வலைத் தளத்தில இருந்து எப்படி சுடறதுன்னாவது சொல்லிக் கொடுங்கள்.

      நீங்கள் ஆசிரியர் ஆனது என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு கொண்டாட்டம் தான். விருந்தினர் இன்றி வாடும் என் வலைத் தளத்துக்கும் ஓரிரு விருந்தாளிகளாவது வருவார்கள் அல்லவா உங்கள் கருணையாலே.

      வலைத்தள புதுமைப் பித்தன் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி



      ReplyDelete
      Replies
      1. Jayanthi Jaya Mon Jun 01, 11:22:00 AM
        //கோபு அண்ணா//

        வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

        //‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போல் ஆசிரியர் இல்லாமல் களை இழந்த வலைச்சரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வந்திருக்கும் கோபு அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.//

        அடாடா .... என்னவெல்லாமோ இப்படிச் சொல்றேளே!

        வள்ளலார் எங்கே .... நான் எங்கே ? மிகைப்படுத்திய ஒப்பீடாக உள்ளதே.

        சரி, சரி, என் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்கிறேன். நம் அதிரடி அதிரா பாஷையில் எனக்கு ஒரே ’ஷை’ யாக இருக்குது, ஜெயா. :)

        மனமார்ந்த ஆசிகள். வாழ்த்துகளுக்கு நன்றி.

        //புகைப்படங்கள் அருமை. இப்படி புகைப்படங்கள் இட உங்கள் வலைத் தளத்தில் எங்களுக்கு ஒரு வகுப்பு எடுக்கலாமே. இல்லைன்னா இதையெல்லாம் உங்க வலைத் தளத்தில இருந்து எப்படி சுடறதுன்னாவது சொல்லிக் கொடுங்கள். //

        நான் சொல்லிக்கொடுப்பதைவிட, நீங்களே என்னிடமிருந்து உரிமையுடன் ஸ்வாதீனமாகச் சுட்டுக்கொள்வது தான் உங்களுக்கு ஈஸியாக இருக்கும். அதற்கும், அதாவது எப்படிச் சுடுவது என்பதற்கும், நான்தான் வகுப்பு ஏதாவது எடுக்கணுமா? :)

        //நீங்கள் ஆசிரியர் ஆனது என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு கொண்டாட்டம் தான். விருந்தினர் இன்றி வாடும் என் வலைத் தளத்துக்கும் ஓரிரு விருந்தாளிகளாவது வருவார்கள் அல்லவா உங்கள் கருணையாலே. //

        ஓரிரு விருந்தாளிகள் வந்தாலும் வரலாம். ஆனால் நிச்சயமாக வருவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கெல்லாம் பல டெக்னிக் இருக்கு. அப்புறமா சொல்லித்தரேன். :)

        //வலைத்தள புதுமைப் பித்தன் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே
        அன்புடன் ஜெயந்தி ரமணி//

        கடைசியில் உங்க அண்ணாவைப் பித்தனாகவே ஆக்கிட்டீங்கோ. சபாஷ் ஜெயா. தினமும் வாங்கோ, ப்ளீஸ்.

        பிரியமுள்ள கோபு அண்ணா

        Delete
    34. தங்களைப் பற்றிய அறிமுகம் மூலமாக தாங்கள் அதிக சாதனைகளைத் தாங்கள் தொடர்ந்து படைத்து வருவதை உணர்த்துகிறது. எழுதும் பொருண்மை என்ற நிலையிலாகட்டும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலாகட்டும், இளையவர் முதுல் முதியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பாணியாகட்டும், போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளை நடத்தும் மனத்திடமாகட்டும், நண்பர்களை அரவணைத்து அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதாகட்டும் அனைத்திலும் தாங்கள் முதன்மையிலே உள்ளதை நான் கண்டுவருகிறேன். எழுத்தாளர் ரிஷபனை நான் அறிவேன். நாளை சந்திப்போம்.
      நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
      http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

      ReplyDelete
      Replies
      1. Dr B Jambulingam Mon Jun 01, 11:34:00 AM

        வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

        //தங்களைப் பற்றிய அறிமுகம் மூலமாக தாங்கள் அதிக சாதனைகளைத் தாங்கள் தொடர்ந்து படைத்து வருவதை உணர்த்துகிறது. எழுதும் பொருண்மை என்ற நிலையிலாகட்டும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலாகட்டும், இளையவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பாணியாகட்டும், போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளை நடத்தும் மனத்திடமாகட்டும், நண்பர்களை அரவணைத்து அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதாகட்டும் அனைத்திலும் தாங்கள் முதன்மையிலே உள்ளதை நான் கண்டுவருகிறேன்.//

        மிக்க மகிழ்ச்சி.

        //எழுத்தாளர் ரிஷபனை நான் அறிவேன்.//

        மிகவும் சந்தோஷம்.

        //நாளை சந்திப்போம்.//

        வலைச்சரத்தில் தானே ? தாரளமாக சந்திப்போம். :)

        //நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
        http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html//

        ஆகட்டும். முயற்சிக்கிறேன்.

        தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

        Delete
      2. //வலைச்சரத்தில் தானே ? தாரளமாக சந்திப்போம். :)//

        அவசரத்தில் எழுத்துப்பிழையாகி விட்டது.

        தாரளமாக = தா ரா ள மா க

        Delete
    35. Congratulations! Best wishes!

      ReplyDelete
      Replies
      1. Chitra Mon Jun 01, 11:50:00 AM

        வாங்கோ சித்ரா, வணக்கம்.

        //Congratulations! Best wishes!//

        மிக்க நன்றி.

        பிரியமுள்ள கோபு மாமா

        Delete
    36. அன்றும் இன்றும் மலைக்கோட்டை வியக்கவைக்கின்றது.எழுத சலைக்காத தங்களுக்கு இவ்விடம் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல.....

      இங்கும் போட்டி பரிசா????

      உங்கள் திறனிற்கும் உழைப்பிற்கும் அளவு இல்லை !!!சாதனைகள் .

      நீங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும் எழுத்து உலகம் விடாது உங்களை .....

      ReplyDelete
      Replies
      1. thirumathi bs sridhar Mon Jun 01, 12:10:00 PM

        வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா? ஏது இவ்வளவு தூரம் அதிசயமா வந்திருக்கீங்க! ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளிக்குதே !

        //அன்றும் இன்றும் மலைக்கோட்டை வியக்க வைக்கின்றது. //

        மிக்க மகிழ்ச்சி. :) இன்றைய மலைக்கோட்டையை நாம் இருவருமே பார்த்துள்ளோம். அன்றைய மலைக்கோட்டையை இதுபோன்ற படங்களில் மட்டும்தான் நம்மால் பார்க்க முடியும்.

        //எழுத சளைக்காத தங்களுக்கு இவ்விடம் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல..... //

        ஓஹோ ! இதுவேறையா ?

        //இங்கும் போட்டி பரிசா????//

        இங்கு ஒன்றும் கிடையாது. அங்கு நம் பக்கம் மட்டுமே. இங்கு ஒரு சின்ன விளம்பரம் மட்டுமே. :)

        //உங்கள் திறனுக்கும் உழைப்பிற்கும் அளவு இல்லை !!! சாதனைகள்.//

        அது சரி, சாதனையா, வேதனையா என போகப்போகத்தான் புரியும் போலிருக்கு. :)

        //நீங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும் எழுத்து உலகம் விடாது உங்களை //

        ’விடாது ... கருப்பு’ போலவா?

        ஆச்சியின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    37. வாருங்கள் ஆசிரியரே, அமர்க்களம் போங்க, அதுவும் திருச்சியின் பழய புதிய புகைப்டங்கள் அனைத்தும் அருமை.
      மாட்டு வண்டிபோயி இன்று மாடி வீடுகள்,,,,
      திக்திக் புகைப்படம் சூப்பர்,
      முதல்வகுப்புபையன்?,,,,,,,
      தங்களின் சிறுகதைகளைப் படித்தவள் என்ற நோக்கில், அதில் சமுதாய விழிப்புணர்வு, காதல், சோகம், படிப்பினை இப்படி இன்னும் ஏராளம்.
      தங்கள் முதல் பதிவுலகம் எப்படியோ, அப்படியே நானும் இன்று, டைப் அடிக்க, பதிவுபோட, மாற்றம் செய்ய இப்படி நிறைய தெரியாமல், ஆனால் முடியும் எனும் நம்பிக்கையுடன்,
      750 பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனை, அதுவும் குறிபிட்ட ஆண்டுகளில் தொடர்பதிவுகள் ,,,,,,,,,,,,, வாழ்த்துகள் சொன்னால் தப்பில்லை, வயதில்லை என்றாலும் வணங்குகிறேன்.
      அப்புறம் போட்டி,,,,,,,,,,,,,,
      தாங்கள் தினமும் நடத்தும் திருவிழாவில் முதல் ஆளாய் முடியாவிட்டாலும் கடைசி ஆளாகவாவது வந்துவிடுவேன்.
      விழாச்சிறக்க வணங்கி விடைப்பெறுகிறேன்.
      நன்றி
      வணக்கம்.

      ReplyDelete
      Replies
      1. mageswari balachandran Mon Jun 01, 12:16:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //வாருங்கள் ஆசிரியரே,//

        வந்தேன் :)

        //அமர்க்களம் போங்க, அதுவும் திருச்சியின் பழைய புதிய புகைப்படங்கள் அனைத்தும் அருமை.//

        சந்தோஷம். :)

        //மாட்டு வண்டிபோயி இன்று மாடி வீடுகள்....
        திக்திக் புகைப்படம் சூப்பர்,
        முதல்வகுப்புபையன்?.....//

        :))))) மிக்க மகிழ்ச்சி. சூப்பர் !

        //தங்களின் சிறுகதைகளைப் படித்தவள் என்ற நோக்கில், அதில் சமுதாய விழிப்புணர்வு, காதல், சோகம், படிப்பினை இப்படி இன்னும் ஏராளம்.//

        அப்படியா, மிகவும் சந்தோஷம்.

        //தங்கள் முதல் பதிவுலகம் எப்படியோ, அப்படியே நானும் இன்று, டைப் அடிக்க, பதிவுபோட, மாற்றம் செய்ய இப்படி நிறைய தெரியாமல், ஆனால் முடியும் என்னும் நம்பிக்கையுடன்,//

        நம்பிக்கை இருந்தாலே போதும். அது தும்பிக்கை போல பலமளிக்கும்.

        //750 பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனை, அதுவும் குறிப்பிட்ட ஆண்டுகளில் தொடர்பதிவுகள் .... வாழ்த்துகள் //

        மிக்க மகிழ்ச்சி.

        //சொன்னால் தப்பில்லை, வயதில்லை என்றாலும் வணங்குகிறேன். அப்புறம் போட்டி............. //

        வாழ்த்துகள். ஆசிகள். அப்புறம் என்று இல்லாமல் போட்டியில் மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வரிசையாக, தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டுக்கொண்டே வாங்கோ. தினமும் சராசரியாக 4 பதிவுகள் என எடுத்துக்கொண்டால் மிகச்சுலபமாக முடித்துவிடலாம்.

        //தாங்கள் தினமும் நடத்தும் திருவிழாவில் முதல் ஆளாய் முடியாவிட்டாலும் கடைசி ஆளாகவாவது வந்துவிடுவேன்.
        விழாச்சிறக்க வணங்கி விடைப்பெறுகிறேன்.//

        எல்லோரும் எப்படி முதல் ஆளாக வரமுடியும்? கடைசியிலிருந்து பார்த்தால் நீங்கதானே முதலில் இருப்பீர்கள். :) எனவே முதலிலோ, இடையிலோ, கடைசியிலோ எங்கு வேண்டுமானாலும் வாங்கோ. சந்தோஷமே. :) நன்றிகள்.
        நன்றி
        வணக்கம்.

        Delete
    38. அய்யா வணக்கம். புகைப்படங்களுடனும் அனிமேஷன் படங்களுடனும் கலக்குகிறீர்கள்! தங்கள் ஆற்றலும் அனுபவமும் வலைச்சர அறிமுக வழி நல்ல படைப்பாளிகளை வளர்க்கட்டும். வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. Muthu Nilavan Mon Jun 01, 12:54:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //ஐயா வணக்கம். புகைப்படங்களுடனும் அனிமேஷன் படங்களுடனும் கலக்குகிறீர்கள்! தங்கள் ஆற்றலும் அனுபவமும் வலைச்சர அறிமுக வழி நல்ல படைப்பாளிகளை வளர்க்கட்டும். வாழ்த்துகள்.//

        தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

        Delete
    39. திருச்சியின் பழைய புதிய படங்கள் மிக அருமை சார். ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு. கரண்ட் இப்போது தான் வந்தது. கணினியை திறந்து பார்த்தால் கமெண்ட்ஸ் நிறைய பேர் கொடுத்து விட்டார்கள். நான் தான் கடைசியோ என்று நினைக்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் !!

      ReplyDelete
      Replies
      1. Saratha J Mon Jun 01, 01:24:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //திருச்சியின் பழைய புதிய படங்கள் மிக அருமை சார்.//

        சந்தோஷம்.

        //ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு//

        மிக்க மகிழ்ச்சி.

        //கரண்ட் இப்போது தான் வந்தது. கணினியை திறந்து பார்த்தால் கமெண்ட்ஸ் நிறைய பேர் கொடுத்து விட்டார்கள். நான் தான் கடைசியோ என்று நினைக்க தோன்றுகிறது.//

        அதனால் என்ன? பரவாயில்லை. முதலில் ஒருவர் இருந்தால் கடைசியில் ஒருவர் இருக்கத்தானே வேண்டும். நீங்கள் இன்று இப்போதே நடுவில் தான் உள்ளீர்கள். இனிமேலும் சிலர் வரக்கூடும். அதனால் கவலை வேண்டாம்.

        //மீண்டும் வாழ்த்துக்கள் !!//

        தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

        Delete
    40. ஒவ்வொரு அறிமுகத்திலும், ஒரு புதிய கோணத்தில் உங்களைப் பார்க்கின்றேன். வாழ்த்துகள்!

      ReplyDelete
      Replies
      1. kg gouthaman Mon Jun 01, 01:35:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //ஒவ்வொரு அறிமுகத்திலும், ஒரு புதிய கோணத்தில் உங்களைப் பார்க்கின்றேன். வாழ்த்துகள்!//

        மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

        புதிய கோணங்களில் தானே !

        கோணல்மாணலாக இல்லையே :) அதுவரை சந்தோஷமே.

        தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள், சார்.

        Delete
    41. அமர்க்களமான சுய அறிமுகம் ..பழைய திருச்சிக்கும் இப்போதுள்ள திருச்சிக்கும்தான் எத்தனை வித்தியாசம் ...
      மை ஆல் டைம் favorite உங்க கதைகளில் //உடம்பெல்லாம் உப்புசீடை //
      அசத்துங்கள் 5 வாரங்களும் ..

      ReplyDelete
      Replies
      1. Angelin Mon Jun 01, 02:22:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //அமர்க்களமான சுய அறிமுகம் ..பழைய திருச்சிக்கும் இப்போதுள்ள திருச்சிக்கும்தான் எத்தனை வித்தியாசம் ...
        மை ஆல் டைம் favorite உங்க கதைகளில் //உடம்பெல்லாம் உப்புசீடை // அசத்துங்கள் 5 வாரங்களும் ..//

        தங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    42. வாங்க வைகோ சார்.சாதாரணச்சரம் அல்ல,ஒரு நிலைமாலையே தொடுக்க வந்திருக்கும் உங்களைப் பிரமிப்போடு பார்க்கிறேன்..மிக சுவாரஸ்யமான 35 நாள் பயணத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.

      ReplyDelete
      Replies
      1. சென்னை பித்தன் Mon Jun 01, 02:56:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //வாங்க வைகோ சார். சாதாரணச்சரம் அல்ல, ஒரு நிலைமாலையே தொடுக்க வந்திருக்கும் உங்களைப் பிரமிப்போடு பார்க்கிறேன்.. மிக சுவாரஸ்யமான 35 நாள் பயணத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.//

        தங்களின் அன்பான வருகைக்கும் நிலைமாலை போன்ற அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 35 நாட்கள் சொகுசுப் பயணத்தில் தாங்களும் கலந்துகொள்ளப்போவதாகச் சொல்வதே நான் செய்த பாக்யமாகக் கருதுகிறேன்.

        அன்புடன் VGK

        Delete
    43. தங்கள் சாதனைகளின் பட்டியல் இங்கும் தொடருகிறது!.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு!... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!...

      ReplyDelete
      Replies
      1. பார்வதி இராமச்சந்திரன். Mon Jun 01, 04:06:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //தங்கள் சாதனைகளின் பட்டியல் இங்கும் தொடருகிறது!.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு!... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!...//

        தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    44. முதலில் போட்ட பின்னூட்டம் வரல.மறுபடியும் பின்னூட்டம் போடுறேன். படங்களும் பதிவும் ரொம்ப நல்லா வந்திருக்கு.

      ReplyDelete
    45. தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்?

      ReplyDelete
      Replies
      1. sreevadsan Mon Jun 01, 04:30:00 PM

        //தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்?//

        தமிழ் மணத்தில் ஏற்கனவே தங்கள் பதிவினை இணைத்து PASSWORD வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் வோட் அளிக்க முடியும்.

        அவ்வாறு PASSWORD வாங்கியிருந்தால் இந்தப்பதிவின் கடைசியில் ”ங் தமிழ்மணம்” என்ற எழுத்துக்களின் அருகே கட்டைவிரலை உயர்த்திப்பிடித்து ஒரு சின்னம் தெரிகிறது அல்லவா, அதைத்தாங்கள் க்ளிக் செய்தால் தங்களின் PASSWORD தரும்படி கேட்கும். அதில் தங்களின் PASSWORD ஐ சரியாக டைப் செய்து எண்டர் பித்தானை அமுக்கினால், தங்கள் வோட் சேர்த்துக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தங்களுக்கு வரும்.

        இதைப்பற்றிய மேலும் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் தயவுசெய்து என்னிடம் கேட்காமல், பிறரிடம் கேட்டு அறிந்துகொள்ளவும்.

        Delete
    46. 70 எம் எம் சினிமா பாத்ததுபோல் இருக்கிறது வாழ்த்துகள்
      தொடர்கிறேன்.

      ReplyDelete
      Replies
      1. KILLERGEE Devakottai Mon Jun 01, 05:36:00 PM

        70 எம் எம் சினிமா பாத்ததுபோல் இருக்கிறது வாழ்த்துகள்
        தொடர்கிறேன்.//

        மிக்க நன்றி.

        Delete
    47. வலைச்சர வரலாற்றில், சுயஅறிமுகம் ஆகும், முதல் நாளிலேயே இவ்வளவு பின்னூட்டங்கள் பெற்ற வலைப்பதிவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்றைய உங்கள் பதிவையும், வந்த பின்னூட்டங்களையும், உடனுக்குடன் நீங்கள் அளிக்கும் மறுமொழிகளையும் நானும் உடனுக்குடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்று படித்தேன். இன்னும் பின்னூட்டங்கள் வரலாம். காரணம் உங்களது ”வாசகர் வட்டம்” பெரியது.

      முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் தமது பின்னூட்டத்தில் சொன்ன,
      // முதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.//

      வார்த்தைகளை அப்படியே வழிமொழிகின்றேன். உங்களுக்கு இந்த ஓட்டு, ரேங்க் ஆகியவற்றில் ஆர்வம் இல்லையென்றாலும், வலைச்சர வாசகர்களாகிய எங்களுக்கு உண்டு.

      தங்களது பதிவுகளின் இடையிடையே சொல்லப்படும் சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு, கூடவே தமிழிலும் அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும்.

      சகோதரி ஆசிரியை M.கீதா அவர்கள் தமது பின்னூட்டத்தில் சொன்னது போல, ” வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது ‘ என்பது உண்மைதான். இருந்தாலும் அனுமன் சஞ்சீவி மலையை அனாசியமாக தூக்கியதைப் போன்று, அவன் அருளால் நீங்கள வலைச்சரம் பணியை சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.

      மூத்த வலைப்பதிவர்களின் கருத்துரைகளோடு பல புதியவர்களையும் உங்கள் கருத்துரைப் பெட்டியில் காண முடிகிறது. மீண்டும் நாளை வருகிறேன். நன்றி.

      ReplyDelete
      Replies
      1. என் அன்புக்குரிய திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களே,

        வாருங்கள். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் மிக நீண்ண்ண்ண்ட கருத்துக்கள் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன.

        //மூத்த வலைப்பதிவர்களின் கருத்துரைகளோடு பல புதியவர்களையும் உங்கள் கருத்துரைப் பெட்டியில் காண முடிகிறது.//

        ஆம் ... இதைக்காண எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது!

        //மீண்டும் நாளை வருகிறேன். நன்றி.//

        தினமும் கட்டாயமாக வாருங்கள். நாளை செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மறுநாள் புதன்கிழமை மதியம்வரை, நான் கொஞ்சம் என் சொந்த குடும்ப வேலைகளில் மூழ்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளன. அதனால் நாளை செவ்வாய்க்கிழமை தாமதமாக வந்துசேரும் பலரின் கருத்துக்களுக்கும், நாளை மறுநாள் புதன்கிழமை மாலையில்தான் என்னால் பதில் அளிக்க இயலும். அதன்பிறகு அன்றாடம் பதில் அளிப்பதில் பிரச்சனை ஒன்றும் இருக்காது என நம்புகிறேன்.

        02.06.2015 - 3 PM to 03.06.2015 - 3 PM, I will be away from my Computer Systems. This is just for the information of all concerned. - vgk

        Delete
    48. பதிவுலக ஜாம்பவானுக்கு வணக்கம் ...! நீண்ட காலத்திற்கு பின் தங்களை வலைசர ஆசிரியராக சந்திப்பதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
      Replies
      1. Radha Rani Mon Jun 01, 07:44:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //பதிவுலக ஜாம்பவானுக்கு வணக்கம் ...!//

        அடடா, கடைசியில் என்னை ஜாம்பவான் என்ற கரடியாக்கி விட்டீர்களே ! :)

        //நீண்ட காலத்திற்கு பின் தங்களை வலைசர ஆசிரியராக சந்திப்பதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.//

        தங்களைப் பதிவுகளில் நான் பார்த்தும், மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் தங்களைப்போன்ற பல பதிவர்களையும் நான் அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்வேன்.

        மகிழ்ச்சியுடன் கூடிய தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க! முடிந்தால் தினமும் வாங்கோ, ப்ளீஸ்.

        Delete
    49. பாலத்தைத் தொட்டுக்கொண்டு ஓடிய காவிரியைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. இன்று அதெல்லாம் பழைய கதையாகி காவிரியே வறண்டு விட்டது.
      வறண்ட காவிரியைக் காட்டி நந்தவனமாய்த் திகழ்ந்த வலைச்சரத்தைப் பற்றிச் சொன்னது மிகவும் சிறப்பு.
      நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க காரணமான திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் முன் மொழிந்து தூண்டிவிட்ட மற்றவர்களுக்கும் நன்றி.
      முதல் நாள் பள்ளி செல்லும் பொடியன் படம் சூப்பர்!
      உங்களைப் பற்றிய அறிமுகம் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒன்று தான். மனசுக்குள் மத்தாப்பூ ஏற்கெனவே படித்தது. பவழம் சிறுகதை வாசிக்க வேண்டும். கன்னடத்தில் வெளிவந்தது பற்றித் தெரியும். ஹிந்தியில் வந்தது தெரியாது. புது தகவல். பாராட்டுக்கள்!
      வழக்கம் போல அருமையான படங்களுடன் அறிமுகத்தை வெளியிட்டு அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் கோபு சார்!

      ReplyDelete
    50. Replies
      1. @Kalayarassy G

        வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான பல கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

        என்றும் நன்றியுடன் கோபு

        Delete
    51. யாரங்கே?!!! அமைச்சரை இங்கு உடனடியாக வரச் சொல்லுங்கள்!

      மன்னா! வணக்கம்!

      வாருங்கள் அமைச்சரே! யாரிந்த வைகோ?! கோ நானிருக்க?

      மன்னா இந்த வை"கோ" தன்னைச் சாதாரணமானவர் என்று சொல்லிக் கொண்டு பல படைப்புகளைப் படைத்து சாதனை புரிந்தவர்! வை ராஜா வை! என்றும் சொல்லலாம்!

      அதனால் தான் வை"கோ" என்கின்றார்களோ மக்கள்! அவரது பெயரைச் சுருக்கி...ம்ம்ம்ம் நன்றாகவே பொருந்துகின்றது!

      மன்னா! அது மட்டுமல்ல அவரது சாதனைகள் பல அவரது வலைத்தளத்தில் தெரிந்து கொண்டிருந்தாலும், இன்று ஒரு புதியதாய் ஒன்று அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது படைப்புகள் வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றதாம்..பாருங்கள் இதோ எனது கணினியில். வலைச்சர ஆசிரியராக 35 நாட்கள் பொறுப்பாம்....முதல் நாளே அட்டகாசமாக, வலைச்சரத்தைத் தனது எழுத்துப் பூக்களாலும், ஒளிமயமான வண்ணப் படங்களாலும், வண்ணமயாமாக்கி விழாக் கோலம் பூண வைத்துவிட்டார்!

      ஆஹா ! அப்படியா! பார்க்கின்றேன் அமைச்சரே! அருமை! எப்படி இத்தனை நாள் அறியாமல் விட்டிருந்தாலும்.....அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள்! இப்படிப்பட்ட சகலாவல்ல, புலமைவாய்ந்த அறிஞர் ஒருவர்தான் நம் கொற்றவைக்குத் தேவை. அதுதான் நாட்டிற்கும் நல்லது! எனவே அவரை உடனே அழைத்து வந்து நமது ராஜ்ஜியத்தின் ஆஸ்தான அறிஞர் ஆக்கிவிடுவோம்.

      மன்னா அவர் அடுத்த 35 நாட்களுக்கு ரொம்ப பிசி!

      அமைச்சரே வர வர தாங்கள் இந்தக் கணினியை உபயோகிக்கத் தொடங்கியதிலிருந்து ஆங்கிலம் கலந்து பேசத் தொடங்கி இருக்கின்றீர்கள்! சரி அது போகட்டும்...எப்படியாவது 35 நாட்கள் முடிந்ததும்...அவரை அடுத்த நாளே குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து இந்த அரசவை தர்பாரில் அமர்த்தி விடுங்கள்! தெனாலி ராமன், பீர்பால் எல்லோரும் அலங்கரித்தது போல .....

      ஆகட்டும் மன்னா! அவரை வாழ்த்திவிடுவோமா!

      ஆம்! நிச்சயமாக! வாழ்த்துவோம்!

      ----------------------------

      அட்டகாசமான அறிமுகம் சார்! வலைச்சரம் பூத்துக் குலுங்கத் தொடங்கி, வண்ணங்களுடன் ஒளிமயமாகிவிட்டது! பார்க்கவே குளிர்ச்சியாக உள்ளது!

      கலக்குங்கள்! சார்! தினமும்! வாழ்த்துகள்! தொடர்கின்றோம்!

      ReplyDelete
      Replies
      1. @Thulasidharan V Thillaiakathu

        வாங்கோ, வணக்கம்.

        //எப்படியாவது 35 நாட்கள் முடிந்ததும்...அவரை அடுத்த நாளே குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து இந்த அரசவை தர்பாரில் அமர்த்தி விடுங்கள்! தெனாலி ராமன், பீர்பால் எல்லோரும் அலங்கரித்தது போல .....//

        ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எனக்குள்ள ஏற்படவுள்ள அடுத்த ஆபத்தா? :) அரசவை உரையாடல் மிக அருமை. மிக்க நன்றி.

        //அட்டகாசமான அறிமுகம் சார்! வலைச்சரம் பூத்துக் குலுங்கத் தொடங்கி, வண்ணங்களுடன் ஒளிமயமாகிவிட்டது! பார்க்கவே குளிர்ச்சியாக உள்ளது!

        கலக்குங்கள்! சார்! தினமும்! வாழ்த்துகள்! தொடர்கின்றோம்! //

        மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. தினமும் வருகை தாருங்கள்.

        Delete
    52. அட்டகாசமான ஆரம்பம்! தெரிந்த விஷயங்கள் என்றாலும் மீண்டும் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.

      தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு வலைச்சரத்தில் திருவிழாக்கோலம் தான்...... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

      ReplyDelete
      Replies
      1. வெங்கட் நாகராஜ் Mon Jun 01, 08:47:00 PM

        வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

        //அட்டகாசமான ஆரம்பம்! தெரிந்த விஷயங்கள் என்றாலும் மீண்டும் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.

        தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு வலைச்சரத்தில் திருவிழாக்கோலம் தான்...... பாராட்டுகளும் வாழ்த்துகளும். //

        மிக்க மகிழ்ச்சி. இதெற்கெல்லாம் மூல காரணம் தங்களின் இல்லத்தரசி அவர்களின் தூண்டுகோல் + வேண்டுகோள் மட்டுமே. :)

        தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        Delete
    53. அடடே!
      நான் வருவதற்குள் 100 கருத்துரைகள் வந்துவிட்டனவா?!!!
      *தாங்கள் இபோது வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கான காரணம்,
      *தாங்கள் எழுதிய பதிவுகள்,
      *தாங்கள் பத்திரிகைகளில் எழுதிய கதைகள்,
      *செய்த பணி,
      *வலைப்பதிவு ஆரம்பித்த விதம்,
      *அதில் வெளியிட்ட பதிவுகள்,
      *புதுமைப் போட்டி,
      *அதன் முடிவுகள்,
      *தரமான விமர்சனங்கள்,
      *பரிசு பெற்றோர் பற்றிய விவரங்கள்
      - என அனைத்து இணைப்புகளையும்
      படங்களுடன் கொடுத்து அசத்திவிட்டீர்கள் முதல் நாளிலேயே!

      தொடர்வோம் - இறை நாட்டம்!

      ReplyDelete
      Replies
      1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் Mon Jun 01, 08:55:00 PM

        வாருங்கள் நண்பரே, வணக்கம்.

        //அடடே! நான் வருவதற்குள் 100 கருத்துரைகள் வந்துவிட்டனவா?!!!//

        தாங்கள் வருவதற்கு 100 கருத்துரைகள் வந்துவிட்டன எனச் சொல்லமுடியாது. 107 கருத்துரைகள் வந்தபிறகே 108வதாகத் தாங்கள் வந்துள்ளீர்கள் என்பதே உண்மை.

        தங்களுடையது மிகச்சிறப்பான எண்ணான : 108
        100ஐ விட மிகச்சிறப்பானது 108 எனச் சொல்லிக்கொள்கிறேன். அதற்கு (108க்கு) அஷ்டோத்திரம் என்ற சிறப்புப்பெயரும் உள்ளது. :)

        வரிசையாக ஏதேதோ அடுக்கி எழுதி என்னைப் புகழ்ந்து பாராட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. இறை நாட்டம் சாதகமாக இருந்து தினமும் தொடர்ந்து வருகை தாருங்கள்.

        - அன்புடன் VGK

        Delete
    54. 51 மாதங்களில் 750 பதிவுகளா!!!!

      ஆகா.. அற்புதம்.

      ReplyDelete
      Replies
      1. வெட்டிப்பேச்சு Mon Jun 01, 09:27:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //51 மாதங்களில் 750 பதிவுகளா!!!! ஆகா.. அற்புதம்.//

        தங்களின் அற்புதமான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. :)

        Delete
    55. தங்கள் தனியாள் அறிமுகம்
      எனக்கு நல்லதோர் வழிகாட்டல்
      திருச்சிப் படங்கள் என்னை ஈர்க்கிறது
      வலைச்சரத்தில் - தங்களுக்கு
      நெடுநாள் ஆசிரியப் பொறுப்பு
      பலருக்குப் பயன்தரும் அறிமுகங்களை
      அள்ளித் தருவீர்களென நம்புகிறேன்.

      ReplyDelete
      Replies
      1. Yarlpavanan Kasirajalingam Tue Jun 02, 01:57:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //தங்கள் தனியாள் அறிமுகம் எனக்கு நல்லதோர் வழிகாட்டல்
        திருச்சிப் படங்கள் என்னை ஈர்க்கிறது. வலைச்சரத்தில் - தங்களுக்கு நெடுநாள் ஆசிரியப் பொறுப்பு பலருக்குப் பயன்தரும் அறிமுகங்களை அள்ளித் தருவீர்களென நம்புகிறேன்.//

        தங்களின் அன்பான வருகைக்கும், நம்பிக்கையுடனான அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        என்னால் முடிந்தவரை, என்னால் உணரப்பட்டவரை ஓரளவு படிக்க சுவாரஸ்யமாக எழுதுபவர்களை அடையாளம் காட்டிட நினைத்துள்ளேன். இருப்பினும் பல தரமான எழுத்தாளர்களும் இதில் என்னால் அடையாளம் காட்டப்படாமல் விடுபட்டுப் போகலாம். சில மிகச் சாதாரண எழுத்தாளர்களும்கூட இடம் பெற்று விடலாம். என்னால் அடையாளம் காட்டப்பட உள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதுபற்றி இந்த என் வலைச்சரத் தொடரின் இறுதிப்பகுதியில் 05.07.2015 அன்று நான் சில விஷயங்களை எடுத்துச்சொல்ல உள்ளேன்.

        தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சார்.

        Delete
    56. அறிமுகமே அமர்க்களம்! மலைக்கோட்டை அழகு! அன்றும் இன்றும் எனத் துவங்கி அழகாகவும், கோர்வையாகவும், தொய்வில்லாமலும், என்றும் இளமையாகவும் படைப்புகளைத் தருவதில் என்றும் வ்ல்லவர் நம் கோபு சார் அவர்கள்! தொடரட்டும் உங்கள் படைப்புகள்! மலைக்கவைத்த வலைச்சர ஆசிரியர் எனும் பாராட்டைத் தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள்! மகிழ்ச்சி! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. Seshadri e.s. Tue Jun 02, 06:59:00 AM

        அன்புள்ள திரு. சேஷாத்ரி, வாங்கோ, வணக்கம்.

        //அறிமுகமே அமர்க்களம்! மலைக்கோட்டை அழகு! அன்றும் இன்றும் எனத் துவங்கி அழகாகவும், கோர்வையாகவும், தொய்வில்லாமலும், என்றும் இளமையாகவும் படைப்புகளைத் தருவதில் என்றும் வ்ல்லவர் நம் கோபு சார் அவர்கள்! தொடரட்டும் உங்கள் படைப்புகள்! மலைக்கவைத்த வலைச்சர ஆசிரியர் எனும் பாராட்டைத் தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள்! மகிழ்ச்சி! நன்றி!//

        தற்சமயம் தங்களுக்குள்ள பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு இடையேயும் இங்கு அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

        Delete
    57. அன்புள்ள அய்யா,

      தங்களைப் பற்றி பல அரிய தகவல்கள் அறிந்து கொண்டோம். வாழ்த்துகள். சிறு விபத்து. ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்.

      நன்றி.

      ReplyDelete
      Replies
      1. manavai james Tue Jun 02, 08:41:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //அன்புள்ள ஐயா, தங்களைப் பற்றி பல அரிய தகவல்கள் அறிந்து கொண்டோம். வாழ்த்துகள்.//

        தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

        //சிறு விபத்து. ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்.//

        அடடா, கேட்கவே வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள். அதிகமாக ஸ்ட்ரெயின் செய்துகொள்ள வேண்டாம்.

        நன்றியுடன் VGK

        Delete
    58. அட்டகாசமான அறிமுகம் அண்ணா....

      வலைச்சரம் அசத்தலாக கலக்கலாக இருக்கப்போகிறது இன்னும் சில நாட்களுக்கு... ஆரம்பமே படு ஜோர் அண்ணா...

      அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான பிரமிப்பை ஏற்படுத்தும்படி எழுதும் உங்கள் எழுத்துகளை தினமும் வந்து பார்க்கிறேன் அண்ணா..

      மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

      த.ம16

      ReplyDelete
      Replies
      1. Manjubashini Sampathkumar Tue Jun 02, 10:31:00 AM

        வாங்கோ மஞ்சூஊஊஊஊஊஊ, வணக்கம்மா !

        //அட்டகாசமான அறிமுகம் அண்ணா.... வலைச்சரம் அசத்தலாக கலக்கலாக இருக்கப்போகிறது இன்னும் சில நாட்களுக்கு... ஆரம்பமே படு ஜோர் அண்ணா...//

        மிகவும் சந்தோஷம் மஞ்சு :)

        //அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான பிரமிப்பை ஏற்படுத்தும்படி எழுதும் உங்கள் எழுத்துகளை தினமும் வந்து பார்க்கிறேன் அண்ணா..//

        ஆஹா, இதைக்கேட்கவே எனக்கு
        ’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ :)

        //மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...//

        மிக்க மகிழ்ச்சி + சந்தோஷம் .... மஞ்சு.

        Delete
    59. எப்பவும் லேட்டா வருவதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது... மன்னித்து பொருத்தருள்க அண்ணா.... எப்படியும் என்னை நீங்க திட்டமாட்டீங்க என்ற நம்பிக்கையுடன்... :)

      ReplyDelete
      Replies
      1. Manjubashini Sampathkumar Tue Jun 02, 10:32:00 AM

        //எப்பவும் லேட்டா வருவதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது... //

        அதனால் பரவாயில்லை மஞ்சு.

        //மன்னித்து பொருத்தருள்க அண்ணா.... //

        முடியவே முடியாது. :)

        //எப்படியும் என்னை நீங்க திட்டமாட்டீங்க என்ற நம்பிக்கையுடன்... :)//

        திட்டுவேன் ..... குட்டுவேன் .....
        திட்டினால் என் வாய் வலிக்குமே.......
        குட்டினால் என் கை வலிக்குமே ........
        என்று யோசிக்கிறேன். :)

        OK Bye for now Manju !

        Delete
    60. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று ஐந்து வாரங்கள் எங்களையெல்லாம் தங்களுடைய எழுத்தாற்றலால் கட்டிப்போட இருக்கின்ற உங்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறேன். தங்களின் பிரவேசம் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

      ReplyDelete
      Replies
      1. வே.நடனசபாபதி Tue Jun 02, 11:26:00 AM

        வாங்கோ சார். வணக்கம்.

        //வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று ஐந்து வாரங்கள் எங்களையெல்லாம் தங்களுடைய எழுத்தாற்றலால் கட்டிப்போட இருக்கின்ற உங்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறேன். தங்களின் பிரவேசம் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.//

        தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துககளும் எனக்கு புதிய ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளன. தினமும் வருகை தாருங்கள். என்றாவது ஒருநாள் தங்களைப் பற்றிய இனிய செய்திகளும் என் இந்த வலைச்சரத்தொடரினில் இடம்பெறலாம். :)

        அன்புடன் VGK

        Delete
    61. உங்கள் கதைகள் வேற்றூ மொழியில் வந்திருப்பதை ஏற்கெனவே எனக்குச் சுட்டி அனுப்பி உள்ளீர்கள். ஆகையால் எனக்கு ஆச்சரியமாக இல்லை. மற்றபடி அனைத்து விபரங்களையும் ஒன்று விடாமல் தொகுத்து அளித்து வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. Geetha Sambasivam Tue Jun 02, 02:36:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //உங்கள் கதைகள் வேற்று மொழியில் வந்திருப்பதை ஏற்கெனவே எனக்குச் சுட்டி அனுப்பி உள்ளீர்கள். ஆகையால் எனக்கு ஆச்சரியமாக இல்லை.//

        தங்கள் தனித்திறமைகளுக்கும், தனித்தன்மைகளுக்கும், ஏதாவது தங்களுக்கு ஆச்சர்யம் அளித்தால் தான் அது எனக்கும் ஆச்சர்யமாக இருக்கும். :)

        //மற்றபடி அனைத்து விபரங்களையும் ஒன்று விடாமல் தொகுத்து அளித்து வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.//

        தங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        செளகர்யப்பட்டால் தினமும் வலைச்சரப்பக்கம் வாங்கோ. என்றாவது ஒருநாள் தங்களைப்பற்றிய இனிய செய்திகளும் இந்த என் வலைச்சரத் தொடரினில் இடம்பெறலாம் அல்லவா :)

        அன்புடன் கோபு

        Delete
    62. ஆஹா ஆஹா அசத்தலான, பிரமாண்டமான மிக பிரமாண்டமான ஆரம்பம்.
      நான் உங்கள் விசிறி என்ன்று சொல்லிகொள்வதில் பெருமை படுகிறேன்.
      நீங்கள் மேலே சொல்லிஇருக்கும் எல்லா பதிவுகளையும்
      படித்திருக்கிறேன்.
      என் தமிழ் அச்சு தடுமர்றதால் நிறைய பின்னுட்டம் தராமல் மனதுக்குல்லையே பாராட்டி இர்ருக்கேறேன்.
      அதுவும் பதிவுகளுக்கு நீங்கள்கொடுக்கும் படங்கள் அசத்தல்.
      மிக ரசித்து இருக்கிறேன்.
      மீண்டும் இங்கே ரசிக்க போகிறேன்.
      வருக வருக என்று முகமன் கூறி வரவேற்கிறேன்.
      அன்பின்
      விஜயலட்சுமி

      ReplyDelete
      Replies
      1. viji Tue Jun 02, 03:34:00 PM

        வாங்கோ விஜி, வணக்கம்மா.

        //ஆஹா ஆஹா அசத்தலான, ப்ரும்மாண்டமான மிக ப்ருமாண்டமான ஆரம்பம்.//

        மிக்க மகிழ்ச்சிம்மா.

        //நான் உங்கள் விசிறி என்று சொல்லிகொள்வதில் பெருமைபடுகிறேன்.//

        மின்தடை நேரங்களிலெல்லாம் (என் அன்புக்குரிய சிலர் பாராமுகமாக இருந்த நேரங்களிலெல்லாம்) விஜி என்ற விசிறியும் தான் எனக்கு மிகுந்த ஆறுதல் அளித்துள்ளது. அத்தகைய ஆறுதல் அளித்துள்ள விஜி என்ற விசிறியை என்னால் எப்படி மறக்க முடியும்? :)

        //நீங்கள் மேலே சொல்லி இருக்கும் எல்லா பதிவுகளையும்
        படித்திருக்கிறேன்.//

        தெரியும். மிகவும் சந்தோஷம்மா.

        //என் தமிழ் அச்சு தடுமாற்றத்தால் நிறைய பின்னுட்டம் தராமல் மனதுக்குள்ளேயே பாராட்டி இருக்கிறேன்.//

        தங்களின் மின்னஞ்சல்கள் மூலம் இதையும் நான் நன்கு அறிவேன்.

        //அதுவும் பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் படங்கள் அசத்தல்.
        மிக ரசித்து இருக்கிறேன்.//

        மிக்க மகிழ்ச்சி.

        //மீண்டும் இங்கே ரசிக்க போகிறேன்.// :)

        மிக்க நன்றிம்மா.

        //வருக வருக என்று முகமன் கூறி வரவேற்கிறேன்.
        அன்பின் விஜயலட்சுமி//

        Very Glad for your very kind WELCOME to me !

        நீங்களும் தினமும் இங்கு வாங்கோ, விஜி.

        பிரியமுள்ள கோபு

        Delete
    63. தங்களைப்பற்றி இன்று அறிந்தவை இன்னும் சில. பணிதொடர வாழ்த்துக்கள்.

      ReplyDelete
      Replies
      1. தனிமரம் Tue Jun 02, 05:26:00 PM

        //தங்களைப்பற்றி இன்று அறிந்தவை இன்னும் சில. பணிதொடர வாழ்த்துக்கள்.//

        தங்களின் தியாகமும் நேசமும் மிகுந்த கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Mr. தியாகராஜா சிவநேசன் அவர்களே :)

        Delete
    64. அன்புடையீர், தங்கள் ஒருநாள் படைப்பைப் படித்து, பின்னூட்டங்களைப் படித்து, தாங்கள் இணைத்துள்ள படங்களை ரசித்து, இடையிடையே கொடுத்துள்ள இணைப்புகளில் போய்த் தங்களின் பழைய வரைவுகளைப் படித்து, அவற்றின் சிறப்பில் மயங்கி, அங்கு இணைத்துள்ள படங்களைப் பார்த்து மயங்கி, மீண்டும் பழையபடி இங்கே வந்து சேர வேண்டுமென்றால்...அதற்கே ஒரு வருடம் ஆகும்போல் இருக்கிறதே! இந்த லட்சணத்தில் ஒருநாள் விடாமல் நீங்கள் எழுதப்போவதைப் படிக்கவேண்டுமென்றால் எங்களுக்கு எனர்ஜி வேண்டாமா தலைவரே? ....தங்களின் எனர்ஜியின் ரகசியத்தைச் சொல்லிவிடுங்களேன், பிளீஸ்..!

      ReplyDelete
      Replies
      1. Chellappa Yagyaswamy Tue Jun 02, 05:40:00 PM

        வாங்கோ சார், வணக்கம், சார்.

        //அன்புடையீர், தங்கள் ஒருநாள் படைப்பைப் படித்து, பின்னூட்டங்களைப் படித்து, தாங்கள் இணைத்துள்ள படங்களை ரசித்து, இடையிடையே கொடுத்துள்ள இணைப்புகளில் போய்த் தங்களின் பழைய வரைவுகளைப் படித்து, அவற்றின் சிறப்பில் மயங்கி, அங்கு இணைத்துள்ள படங்களைப் பார்த்து மயங்கி, மீண்டும் பழையபடி இங்கே வந்து சேர வேண்டுமென்றால்...அதற்கே ஒரு வருடம் ஆகும்போல் இருக்கிறதே!//

        ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

        //இந்த லட்சணத்தில் ஒருநாள் விடாமல் நீங்கள் எழுதப்போவதைப் படிக்கவேண்டுமென்றால் எங்களுக்கு எனர்ஜி வேண்டாமா தலைவரே? ....தங்களின் எனர்ஜியின் ரகசியத்தைச் சொல்லிவிடுங்களேன், பிளீஸ்..!//

        அருமையான கேள்வி. மிகவும் ரஸித்தேன். பதில் எழுத சற்றே யோசித்தேன். இதோ வெளிப்படையாகவே கீழே எழுதியும் விட்டேன்.

        >>>>>

        Delete
      2. VGK to Mr. Chellappa Yagyaswamy Sir [2]

        இதோ அந்தத் தங்கமலை இரகசியம்:

        1) நம் பதிவுக்கு ஒருத்தர் புதிதாக வருகை தந்து கருத்தளித்துள்ளார் / வோட் அளித்துள்ளார் என்பதற்காக உடனடியாக தலைதெறிக்க அவர் பதிவுப்பக்கம் ஓடி நாமும் கருத்தளித்தல் / வோட் அளித்தல் கூடவே கூடாது.

        2) சிலர் தன் பதிவுகள் பக்கம் வருமாறு அதற்கான இணைப்புகளையும் கொடுத்து, பின்னூட்டம் மூலமாகவோ, வேறு எங்கெங்கோ கஷ்டப்பட்டு திருடிய/திரட்டிய மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, நாம் கணினியில் மிகவும் பிஸியாக இருக்கும்போது குறுக்கே சாட் மூலமாக வந்தோ, வெற்றிலை பாக்கு வைத்து அவர்கள் பதிவுப்பக்கம் வருமாறு அழைத்துத் தொந்தரவு கொடுப்பார்கள். இத்தகைய வெட்டிப் பொழுதுபோக்குப் பதிவர்களையெல்லாம், தயவுதாட்சிண்யமே இல்லாமல், ஒட்டுமொத்தமாக நாம் நிராகரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

        3) நமக்குத்தான், நம் அனுபவத்தில் யார் யார் தரமான எழுத்துக்களாக எழுதுகிறார்கள் என்பதுதான் ஓரளவுக்குத் தெரிந்துவிடுமே ! தெரியாதவர்கள் வலைச்சர அறிமுகங்கள் மூலமும் ஓரளவுக்கு மட்டும் தெரிந்துகொள்ளலாமே !!

        4) பொதுவாக தரமான எழுத்தாளர்கள் இதுபோல விளம்பரம் கொடுத்து + தொந்தரவுகள் கொடுத்து பிறரை தம் பக்கம் இழுக்க ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். அவர்கள் கவரிமான் போன்றவர்கள். :) நாம் தான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் பதிவுக்குப்போய் ஆர்வமாகப் படிக்க வேண்டும். :)

        5) பதிவு எழுதுபவர் + பதிவினைப் படிப்பவர் என்கிற ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி இருக்கக்கூடும். அதனால் வாசிக்க விரும்புபவர்கள்தான், அவரவர்களின் டேஸ்ட்க்குத் தகுந்தாற்போல எழுதுபவர்களை முதலில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களைத் தனியே பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். பல பதிவுகளையும் போய் படித்து அவர்களின் (எழுத்தாளர்களின் + எழுத்துக்களின்) தரத்தினை முதலில் எடை போட்டுக்கொள்ள வேண்டும். அதில் தனக்குப்பிடித்த ஒரு 5 அல்லது 10 பதிவர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவர்களின் பதிவுகளை மட்டும் படிப்பது, பாராட்டுவது, கருத்தளித்து உற்சாகப்படுத்துவது என்ற வழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

        6) அவ்வாறு நம் ரசனைக்குத் தகுந்தாற்போல நாம் பயணிக்க வேண்டிய பாதையை (நாம் செல்ல வேண்டிய பதிவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டு) SHORT CUT ஆக ஆக்கிக்கொண்டுவிட்டால் மிகவும் நன்மையளிக்கும். நம் மனதுக்கும் ஓர் ஆத்ம திருப்தியாக இருக்கும்.

        >>>>>

        Delete
      3. VGK to Mr. Chellappa Yagyaswamy Sir [3]

        என்னைப்பொறுத்தவரை, ஒருசில குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் எனக்குள் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவர்களின் பதிவுக்கு மட்டும் அவ்வப்போது போவதை என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதற்கே எனக்கு நேரம் போதாமல் உள்ளது. இதில் வேறுபல பதிவர்களுக்கு என் மீது கொஞ்சம் வருத்தமும் உண்டு.

        ஒருபதிவினை முழுவதும் படிக்காமல் பின்னூட்டமிடும் வழக்கமும் என்னிடம் கிடையாது. நான் படித்து முடித்து, எனக்கு அது பிடித்தும் இருந்தால் மட்டுமே, ஏதோ எனக்குத்தோன்றும் சில கருத்துக்களை, சற்றே வித்யாசமான முறையில், எழுதிவிட்டு வருவதுண்டு.

        பதிவைப் பார்க்காமலேயே, படிக்காமலேயே, பதிவுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ கடனுக்கு எழுதிவிட்டுப் போவோரின் வருகைகளோ, கருத்துக்களோ எனக்கு சுத்தமாகப் பிடிப்பது இல்லை. இதுபற்றிய என் ஆட்சேபணைகளை சிலரிடம் நேரிலும் / மின்னஞ்சல் மூலமும் / என் பின்னூட்ட பதில்கள் மூலமும்கூட ஜாடைமாடையாகத் தெரிவிக்கவும் நான் தவறுவதே இல்லை. இது சிலருக்குப் புரியும். பலருக்குப்புரியாது. அவர்களை நாம் என்ன செய்ய முடியும் ... சொல்லுங்கோ.

        நான் சென்ற ஆண்டு என் வலைத்தளத்தினில் நடத்திய ’சிறுகதை விமர்சனப் போட்டி’களின் அடிப்படை நோக்கமே இதுதான். அதாவது பிறரின் பதிவினை முழுமையாக மனதில் வாங்கிக்கொண்டு ஆர்வமாகப் படிக்க வேண்டும். மனதுக்குப் பிடித்திருந்தால் பதிவினைப்பற்றி பாராட்டியோ அல்லது திட்டியோ கூட கருத்தளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருத்து ஏதும் அளிக்காமல் சும்மாவேகூட போய் விடலாம். அதில் தவறொன்றும் இல்லை. பதிவினைப்படிக்காமலேயே ஏனோ தானோ என ஏதாவது எழுதிவிட்டுப்போவது மாபெரும் தவறல்லவா? அவ்வாறு செய்வதில் யாருக்கு என்ன லாபம் .... சொல்லுங்கோ.

        ஏதோ தாங்கள் என்னிடம் //”தங்களின் எனர்ஜியின் ரகசியத்தைச் சொல்லிவிடுங்களேன், பிளீஸ்..!”// எனக்கேட்டுக்கொண்டதால் மட்டுமே, என்னுடைய அனுபவத்தினை நான் அப்படியே மனம் திறந்து இங்கு கொட்டி விட்டேன். எதையும் இரகசியமாக நான் என்னிடம் வைத்துக்கொள்ளவே இல்லை.

        மொத்தத்தில், நம் ரசனைக்குத் தகுந்தவாறு எழுதும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டும் நாம் தொடர்ச்சியாகச் சென்று, அவர்களின் பதிவுகளை முழுவதுமாக மனதில் வாங்கி ரசித்துப் படித்துவிட்டு, நம் கருத்துக்களை பின்னூட்டங்களாகப் பதிவு செய்ய வேண்டும். அப்படி நாம் செய்வோமேயானால் நம் எனெர்ஜி நம்மிடம் அதிகமாகும். இதுவே அந்தத் தங்கமலை இரகசியமாகும்.

        [என்னிடம் தாங்கள் கேட்டதால் நானும் இங்கு அந்த இரகசியத்தை பகிரங்கமாகவே இங்கு சொல்லும்படியானது. தயவுசெய்து சம்பந்தப்பட்ட வேறு யாரும் என் மீது கோபம் கொள்ள வேண்டாம்]

        நான் எழுதியுள்ள பதில் தங்களுக்காகவோ என தவறாக எடுத்துக்கொள்ளாதீங்கோ. தாங்கள் சூப்பரான எழுத்தாளர் என்பது எனக்கும் தெரியும். தங்களின் அன்பான வருகைக்கும், என்னை மனம் திறந்து பேச வைத்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். :)

        அன்புடன் VGK

        Delete
      4. அனைத்து பதிவர்களுக்குமே பயன்தரவல்ல அருமையான கருத்துக்களைக் கூறியமைக்கு மிகுந்த நன்றி. இவற்றில் பெரும்பான்மையானவற்றை செயல்படுத்த முயலுவேன். மீண்டும் நன்றி!

        Delete
      5. @Chellappa Yagyaswamy

        தங்களின் மீண்டும் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி, சார்.

        அன்புடன் VGK

        Delete
    65. வாத்யாரே! வணக்கம்! ஆரம்பமே அசத்தலான திருச்சி மலைக்கோட்டை! அதிலும் உங்களின் வீட்டுடைய பழைய புகைப்படம்! ஆஹா! மீண்டும் இதுபோல ஒரு இடத்தில் சிலகாலம் வசிக்கமுடியாதா என்ற ஏக்கத்தையே எனக்கு ஏற்படுத்திவிட்டது! BHEL TOWNSHIPல் B3-320-F ல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் எனது தாத்தா பாட்டியுடன் வாழ்ந்ந்தது அப்பொழுது திருச்சி மலைக்கோட்டை வந்த நாட்கள் எல்லாமே நிழற்படமாக என் நினைவில்! வாழ்த்துக்கள் வாத்யாரே! மிகவும் நன்றி! என்றும் உங்கள் எம்ஜிஆர்

      ReplyDelete
      Replies
      1. RAVIJI RAVI Wed Jun 03, 04:34:00 PM

        வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.

        //வாத்யாரே! வணக்கம்! ஆரம்பமே அசத்தலான திருச்சி மலைக்கோட்டை! அதிலும் உங்களின் வீட்டுடைய பழைய புகைப்படம்! ஆஹா! மீண்டும் இதுபோல ஒரு இடத்தில் சிலகாலம் வசிக்கமுடியாதா என்ற ஏக்கத்தையே எனக்கு ஏற்படுத்திவிட்டது! BHEL TOWNSHIPல் B3-320-F ல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் எனது தாத்தா பாட்டியுடன் வாழ்ந்தது அப்பொழுது திருச்சி மலைக்கோட்டை வந்த நாட்கள் எல்லாமே நிழற்படமாக என் நினைவில்! வாழ்த்துக்கள் வாத்யாரே! மிகவும் நன்றி! என்றும் உங்கள் எம்ஜிஆர்//

        ஆஹா ..... நீங்களும் 10 வருடம் BHEL இல் இருந்தீங்களா ? ஆச்சர்யமாக உள்ளது. நான் C2/577 இல் 1981-1982 ஆக இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அதன் பின் A2/304 & A2/304F இல் 18 வருடங்கள் இருந்தேன். அந்த வீடே ராசியாகவும் செளகர்யமாகவும் இருந்ததால் Type III Type IV கிடைத்தும் அங்கெல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. 2001இல் BHEL Township லிருந்து வெளியேறி, திருச்சி டவுன் சொந்த வீட்டுக்கே குடிவந்துவிட்டேன். 2001-2009 இங்கிருந்து ஒரு 9 ஆண்டுகள், வரை BHEL க்கு தினமும் தினமும் பஸ்ஸில் போய் வந்துகொண்டிருந்தேன்.

        OK வாத்யாரே, அதெல்லாம் பழங்கதைகள். Bye for Now.

        அன்புடன் - vgk

        Delete
    66. உங்கள் திறமைகளை எல்லாம் திரும்பவும் மனக்கண் முன்னும், வியந்து போகும்படியும் அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வலைப்பூ ஆசிரியர் பிரம்மோத்ஸவம் மாதிறி களை கட்டிவிட்டது. ஆர்த்தோ,ஐ டாக்டர் என்று மாறிமாறி அலைந்ததில் உடனே பின்னூட்டங்கள் போட முடியவில்லை. பின்னூட்டங்கள் அளிக்க முடிகிறதோ ,இல்லையோ என்றக் கவலை.யும் கூட. உத்ஸவ மூர்த்தி வீதி வலம், தொடர்ந்து பாராட்டுகளும், மலைபோலக் குவியத் தொடங்கியீருக்கும். இன்னும் மேன்மேலும் பதிவர் உலகை ஈர்க்கப் போகிறீர்கள். ஆசியும்,அன்பும்,பாராட்டுகளும்

      ReplyDelete
      Replies
      1. Kamatchi Thu Jun 04, 12:42:00 PM

        வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

        //உங்கள் திறமைகளை எல்லாம் திரும்பவும் மனக்கண் முன்னும், வியந்து போகும்படியும் அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.//

        மிகவும் சந்தோஷம், எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மட்டுமே காரணமாகும்.

        //வலைப்பூ ஆசிரியர் பிரம்மோத்ஸவம் மாதிரி களை கட்டிவிட்டது.//

        :) மிக்க மகிழ்ச்சி மாமி :)

        //ஆர்த்தோ, ஐ டாக்டர் என்று மாறிமாறி அலைந்ததில் உடனே பின்னூட்டங்கள் போட முடியவில்லை. பின்னூட்டங்கள் அளிக்க முடிகிறதோ, இல்லையோ என்றக் கவலையும் கூட. உத்ஸவ மூர்த்தி வீதி வலம், தொடர்ந்து பாராட்டுகளும், மலைபோலக் குவியத் தொடங்கியிருக்கும். இன்னும் மேன்மேலும் பதிவர் உலகை ஈர்க்கப் போகிறீர்கள். //

        அதனால் பரவாயில்லை மாமி. தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கோ, அதுவே போதும்.

        வரும் 26.06.2015 வெள்ளிக்கிழமையன்று தங்களின் வலைத்தளத்தினை அடையாளம் காட்டி சிறப்பிக்கலாம் என நினைத்துள்ளேன். செளகர்யப்பட்டால் அன்று மட்டுமாவது வந்து பாருங்கோ. தங்கள் பதிவுகளின் பின்னூட்டப்பெட்டி மூலமாக இதற்கான சில தகவல்களும், என் நண்பர்கள் சிலர் மூலம் தங்களுக்கு ஓர் நினைவூட்டலாக வந்துசேரும்.

        //ஆசியும், அன்பும், பாராட்டுகளும்//

        தங்களின் அன்பான வருகைக்கும், ஆசிகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        நமஸ்காரங்களுடன் .....
        பிரியமுள்ள கோபு

        Delete
    67. இந்த 35 நாட்களும் வைரமாய்
      ஜொலிக்க வாழ்த்துக்கள் !

      ReplyDelete
      Replies
      1. G Perumal Chettiar Thu Jun 04, 07:07:00 PM

        வாங்கோ, நலமா ? வணக்கம்.

        //இந்த 35 நாட்களும் வைரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள் !//

        தங்களின் அன்பான வருகைக்கு முதலில் என் நன்றிகள். 35 நாட்களும் வைரமாய் ஜொலிக்க வாழ்த்தியுள்ளீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதற்காக மீண்டும் என் நன்றிகள்.

        முடிந்தால் வலைச்சரப்பக்கம் தினமும் வருகை தாருங்கள். என்றாவது ஒரு நாள் தங்கள் தளமும் என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.

        தங்களின் அன்பான வருகைக்கும் வைரமாய் ஜொலிக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        அன்புடன் VGK

        Delete
    68. மிகவும் அசத்தலான அறிமுகம்! தங்களின் சுயவிவரங்கள் கண்டு மலைத்துப் போனேன்! இத்தனை பெருமை வாய்ந்த ஒருவருடன் நட்பு பாராட்ட வலையுலகம் வாய்ப்பு வழங்கியிருப்பதை நினைத்து மகிழ்வும் பெருமையும் அடைகின்றேன்! தங்களின் சிறப்பான இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! தொடருங்கள் தொடர்கின்றேன்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. ‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:14:00 PM

        வாங்கோ, வணக்கம்.

        //மிகவும் அசத்தலான அறிமுகம்! தங்களின் சுயவிவரங்கள் கண்டு மலைத்துப் போனேன்! இத்தனை பெருமை வாய்ந்த ஒருவருடன் நட்பு பாராட்ட வலையுலகம் வாய்ப்பு வழங்கியிருப்பதை நினைத்து மகிழ்வும் பெருமையும் அடைகின்றேன்! தங்களின் சிறப்பான இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! தொடருங்கள் தொடர்கின்றேன்! நன்றி!//

        தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

        Delete

    தமிழ் மணத்தில் - தற்பொழுது