07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 14, 2015

இனிதான இரண்டாம் நாள்!!!



குருநாதர்

வெல், 
நேற்றைய என் அறிமுகத்திலேயே என்னைப் பற்றி நீங்கள் புாிந்து கொண்டிருப்பீா்கள். ஒன்றுமே இல்லை; ஒன்றுமே இல்லை என்று சொல்லியே மிக நீளமான அறிமுகத்தைக் கொடுத்து விட்டேன். இதெற்கெல்லாம் காரணம் நான் இல்லை என் குருநாதா் தான். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது யாரையும் தொியாது, எதுவும் புாியாது. அப்போதைய நாட்களில் சிவகாசிக்காராின் வலைப்பதிவுகளுக்குத் தீவிர அடிமை என்பதால், அவாிடம் என்னுடைய முதல் சிறுகதையை எழுதி முடித்துக் காட்டினேன்.
முக்கியக் குறிப்பு
 அதற்கு முன்வரை, அவருக்கும் எனக்கும் இணையத்தில் கூட பழக்கமில்லை. நான் அவாின் வாசகன் என்பதே அப்போது தான் அவருக்குத் தொியும். என் முதல் சிறுகதையைப் பற்றிய அவருடைய பாராட்டு மேலும் என்னை எழுத தூண்டியது. எது எழுதலாம், எப்படி எழுதலாம் என்று ஒவ்வொரு முறையும் அவரை நச்சாித்தாலும் ஜாலியாக பதில் சொல்வாா். தமிழ்மணம், இன்ட்லி என்று திரட்டிகளில் இணைய வைத்தது முதற்கெல்லாம் என் குரு நாதா் சிவகாசிக்காரா் திரு. ராம்குமாா் தான் காரணம் அவருடைய சிஷ்யனாக இருப்பதாலோ என்னவோ, பல சமயங்களில் என்னுடைய பதிவுகளும் மிக நீளமாகிக் கொண்டு போய் விடுகின்றன. ஆனால் 1 கிலோமீட்டா் நீளமிருந்தாலும் சிவகாசிக்காராின் பதிவுகள் பட்டாசாய் இருக்கும். அவாின் சிறுகதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும் என்றாலும் ஒரு சின்ன சாம்பிள்களை மட்டும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.


மறக்காமல் இவாின் அனல் தெறிக்கும் கட்டுரைகளை படித்துவிட்டு போங்கள். எந்த கட்டுரை என்று கேட்காதீா்கள். எல்லா கட்டுரைகளும் லிட்டில்பாய் அணுகுண்டைப்போல் வெடித்துத் தெறிக்கும்.

அறிவியல்

அடுத்து வரும் பதிவா் ஒரு மிக முக்கிய அறிமுகம் என்றே சொல்லலாம். உங்களில் பலருக்கு வானத்தைப் பாா்க்கும் போதெல்லாம் வானத்திற்கு அப்பால் என்ன இருக்கும்? நம்முடைய பூமி எவ்வளவு அதிசயமானது? நம்மைப் போன்ற உயிாினங்கள் எல்லாம் வேற்றுக் கிரகத்திலிருக்குமா? நம் பூமியின் வருங்காலம் என்ன? நிலவிற்கு சென்று வந்தால் எப்படி இருக்கும்? சூாியன் வெடித்தால் என்ன ஆகும்? போன்ற பல கேள்விகளும் ஆசையும் கண்டிப்பாக தோன்றியிருக்கலாம். ஆனால் அதற்கான விடையைத் தொிந்து கொள்ளவேண்டுமெனில் ஆங்கிலத்தளங்களை நாட வேண்டும். அங்கோ அறிவியல் பெயா்களைக் கொண்டு குவாண்டம் தியாி, ரிலேட்டிவிட்டி தியாி, தி சூப்பா் நோவா எஃபெக்ட் என்றுபடுத்தி எடுத்து விடுவாா்கள். ஒன்றும் புாியாமல் நாமாக கற்பனை செய்திருந்த விஷயமும் மறந்து போய் தெறித்து வருவோம். நம்முள் இன்னமும் பலா் E = Mc2 ன் மீனிங் என்னவென்றே தொியாமல் ஐன்ஸ்டனின் சாா்புக் கோட்பாடு என்று மக்கப் அடித்து வருகிறோம். அவற்றைப் பற்றியெல்லாம் தமிழில் எழுத ஆள் இல்லையா என்று தமிழ்வலைப் பதிவு உலகம் ஏங்கி தவித்த போது வந்தவா்தான் ஸ்ரீ சரவனா. இவாின் பாிமாணம் தளம், தமிழில் ஒரு மிகச் சிறந்த அறிவியல் தளம் எனலாம். இங்கே எழுதப்படும் கட்டுரைகள் எல்லாம் காா்ல்சேகன், மிச்சியோகாஹீ, ஐன்ஸ்டைன், நீயூட்டன், கிப்தொ்மன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற மிக முக்கிய வானவியலாளா்களின் புத்தகங்களை முழுக்க முழுக்க படித்து விட்டு, இன்றைய டெக்னாலஜி வரையில் அப்டூடேட் ஆக இருக்கும் ஒரு அறிவியலறிஞரால் எழுதப்படுகிறது. ஆமாம், ஸ்ரீசரவணா ஒரு வருங்கால இயற்பியலாா் என் உறுதியாக சொல்லக்கூடிய அளவில் ஏகப்பட்ட அறிவியல் சாா்ந்த மேட்டா்களை, சிறுகுழந்தைகளுக்கும் புாியும்படி அழகாக எழுதியுள்ளாா். 

வேற்றுலக நாகரீகங்கள் போன்ற கட்டுரைகளைத் தமிழில் இதுவரை இவரைப்போல் தெளிவாக யாரும் எழுதவில்லை. இன்னும் இவருடைய பதிவுகள் சரிவர கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பதே ஒரு மிகப்பெரிய வருத்தம். தமிழர்கள் அறிவியலில் ‘திணையளவு போதா சிறுபுல் நீர்’ வம்சாவழியினைச் சார்ந்தவர்கள் என நினைத்தேன். இவர் சூரியக் குடும்பத்தைப்பற்றியும், வேற்றுலக நாகரீகங்களைப் பற்றியும் மின்புத்தகம், எளிய தமிழில் வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.



இலக்கியம்

இப்போதைய அறிமுகம் பற்றி சொன்னால் உங்களில் பலருக்கு தூக்கம் வந்துவிடலாம். ஏனென்றால் இலக்கியம் சார்ந்த அறிமுகம் இவர் . உலகில் உள்ள ஒவ்வொரு மொழிகளையும் ஒவ்வொரு விதமாக அழைப்பனராம். ஆங்கிலத்தை வணிகமொழி, சமஸ்கிருதத்தை இதிகாசமொழி,  ப்ரெஞ்சை காதல்மொழி என்பதுபோல் தமிழை பக்திமொழி என்பார்களாம். காரணம், பன்னிருவரும், அறுபத்து மூவரும் செய்து கொடுத்த பிரபந்தங்களும் திருமுறைகளும் தான். கிட்டத்தட்ட தமிழ்இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத , மிக முக்கியமான இடம் இவ்விரண்டிற்கும் உள்ளன . இலக்கியங்களை பொறுத்தவரை இக்கால ஆட்கள் கூறுவது புரியாத தமிழில் எழுதியுள்ளார்கள் எனும் நொன்டிசாக்கு. தன்தேவைக்கு புரியாத அயல வன்மொழிகற்கும் நம்மால், நம் தாய்மொழியில் இளமைக்கால வனப்பினைகற்றுக் கொள்வது ஏதோகல்லாடம் கற்பது போன்ற தொருமனப் பிரமையை நம்முள் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. இன்னமும் நம் ஆட்களில் 90 சதவீதம் பேருக்கு 10-ற்குமேல் திருக்குறள்தெரியாது. சரி, உல கஇலக்கியங்களில் பழமையானதும் மிகச் சிறப்பானதுமான நம் இலக்கியங்களை விட்டுவிட்டு இலியத், கலேவலா போன்ற வெளிநாட்டு இலக்கியங்கள் தான் சிறந்த இலக்கியம் என்று உதார்விட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய வாதிகளுக்கு மத்தியில் வாழ்கின்ற நாம் மட்டும் என்ன செய்துவிட முடியும். குறுந்தொகையின் காதல் பாடல்களுக்கும் உவமைகளுக்கும் இணையாக எந்த வோர்ட்ஸ்வொர்த்தாலும்பாடமுடியாது; கலிங்கத்துப்பரணியின் போர்க்களபாடல்களுக்கு இணையாக எந்த ஷெல்லியாலும் பாடல் இயற்றிவிட முடியாது. சரி சங் கஇலக்கியங்களிலிருந்து பக்தி இலக்கியங்களுக்கு வரலாம். தமிழில் பக்தி இலக்கியங்கள் என்பது இந்துக்களுக்கு மட்டுமென்றுயார் சொன்னது என்று புரியவில்லை. இது தமிழர்கள் கொண்டாட வேண்டிய மாபெரும் இலக்கியங்கள் .உலகியல் உண்மைகள், அறிவியல், தத்துவம், தருப்பம், வாதம், விவேகம், வாழ்க்கை, அறிவு, மனஅமைதி என எக்கச்சக்கமான விஷயங்களின் புதையல் தான் திவ்யபிரபந்தமும், திருமுறைகளும். இவற்றில் சைவர்களின் வேதம் என்றழைக்கப்படும் திருமுறைகளைப்பற்றி, திருமுறைத்துளிகள் எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் வித்யா. இந்தத்திருமுறைகளில் எதைப்படிக்கவில்லையெனினும் பரவாயில்லை; சமயக்குரவர்கள் நால்வரின் தேவாரம், திருவாசகம் மற்றும் திருக்கோவையும், திருமூலரின் திருமந்திரம் மற்றும் திருமாளிகைத் தேவரின் திருப்பல்லாண்டையுமாவது ஒருமுறை படித்துப் பாருங்கள் . மாணிக்கவாசகரைப் போன்றதொரு மாமேதையை நான் உலகில் பார்த்ததில்லை என்று போப்பையர் கூறியது ஏனென்று புரியும். படிக்க முடியாதவர்கள் இவரின் வலைப்பூவை நோட்டமிடுங்கள். எளிய முறையில் திருமுறையிலுள்ள சிறந்த பாடல்களை விளக்குகிறார் .


அச்சச்சோ!திருமுறைகள் என்றதும் சில பாடல்களை எழுதியே ஆக வேண்டும் என்று உள்ளம் துடிப்பதால் இரண்டே இரண்டு பாடல்களை மட்டும் போட்டு விடுகிறேன். ஒரு முறை படித்துப் பாருங்கள். கண்டிப்பாய்பிடிக்கும்.

போற்றிஎன்பார்அமரர்புனிதன்அடி
போற்றிஎன்பார்அசுரர்புனிதன்அடி
போற்றிஎன்பார்மனிதர்புனிதன்அடி
போற்றஎன்அன்புள்பொலியவைத்தேனே.
                                                 -    திருமூலர்.

முத்தணிகொங்கைகள்ஆடஆட
மொய்குழல்வண்டினம்ஆடஆடச்
சித்தஞ்சிவனோடுஆடஆடச்
செங்கயற்கண்பனிஆடஆடப்
பித்தெம்பிராணொடும்ஆடஆடப்
பிறவிபிறரொடும்ஆடஆட
அத்தன்கருணையொடாடஆட
ஆடப்பொற்சுண்ணம்இடித்தும்நாமே !
                                                             -    மாணிக்கவாசகர் .


குறும்படம்+ சிறுகதை

விசும்பு எனும் தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ANNOGEN பாலகிருஷ்ணன், பதிவுலகிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. சினிமா விமர்சனம், சிறுகதைகள் மட்டுமின்றி குறும்பட விமர்சனத்திலும் கலக்கிக் கொண்டிருப்பவர். பெரும்பாலும் இலங்கை சார்ந்த அற்புதமான குறும்படங்களைப் பற்றி தெரிவிப்பார். சினிமா விமர்சனங்களிலும் வித்தியாச வித்தியாசமான படங்களை அறிமுகப்படுத்துவார். இதுமட்டுமில்லாமல் அவ்வப்போது புத்தக விமர்சனத்தையும் இவரின் தளத்தில் காணலாம். திரைமணத்தில் குறும்பட பிரிவில் எப்போதும் இவருடைய பதிவுகள் இருப்பதை நீங்கள் காணலாம். இவரின் பதிவுகளில் சில .


சினிமா

இதில் அறிமுகப்படுத்தப் போகும் பதிவரை பெரும்பாலும் அனைவரும் அறிந்த ப்ராடக்ட் தான். நல்லவனுக்கு நல்லவர்; அதிரடிக்காரன் முத்துசிவாதான் அது. நான் விரும்பி ரசித்து சிரித்து படிக்கும் ஒரு சினிமா விமர்சகர் என்றால் அதில் முதலிடம் தலைவருக்குத் தான். அவரிடம் பிடித்தது, தான் சொல்வது தவறென்றாலும் அம்முடிவில் எப்போதும் உறுதியாகவே இருப்பார். தாத்தாவாக இருந்தாலும் சரி, தாதாவாக இருந்தாலும் சரி; செமகலாய் கலாய்ப்பார். பதிவுகளை, இவர் சீரியஸாக எழுதிபார்த்ததேயில்லை. இது அறியாதவர்களுக்கானது என்பதாலும், நான் ரசித்துப் படிக்கும் விமர்சகர். இவரின் கல்லூரிப் பதிவுகள் எல்லாம் சரவெடிப்பதிவுகள். திரைவிமர்சனங்களில் செமஓட்டு ஓட்டியிருப்பார். இவரின் பதிவுகளில் சில .











25 comments:

  1. வணக்கம் ஆசிரியரே,
    எமக்கு இது எல்லாம் புதிது,
    எல்லா தளமும் செல்ல வேண்டும்,
    தங்கள் அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தங்கள் பணித் தொடரட்டும்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா

      Delete
  2. பரிமாணம் புதிய தளம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ! வலைச்சித்தர் செல்லாத ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

      Delete
  3. வணக்கம் வலைச்சரம் ஆசிரியரே!
    பணி சிறப்பாக உள்ளது. நல்ல அறிமுகங்களை அடையாளப் படுத்தி அவர்களது பதிவை நோக்கி வாசகர்களை கொண்டு செல்ல வைத்துள்ளீர்கள் தங்களது தன்னிகரற்ற எழுத்தின் மூலம். பாராட்டுக்கள்!
    இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் குழலின்னிசையின் நல்வாழ்த்துகள்!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. அறிவியல், இலக்கியம், குறும்படம் மற்றும் சினிமா விமர்சனத் தளங்களாக நீ அறிமுகப்படுத்திய யாவரும் எனக்குப் புதியவர்களே. அனைவருக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள். இந்தவிதமாக வாரம் முழுவதும் ஆரவாரம் செய்ய உனக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளும் நல்லாசிகளும். (ரெண்டு வரில சொல்ற வெசயத்தக் கூட இருவது வரில நீ சொல்ற காரணம் இதுவா இருக்கும்னு மைல்டா ஒரு டவுட்டு இருந்துச்சு. இப்ப க்ளியராய்டுச்சு.. ஹி... ஹி... ஹி..)

    ReplyDelete
    Replies
    1. நன்றி குருநாதரே . எல்லாம் தங்களிடம் குடித்த ஞானப்பால்

      Delete

  5. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவ்வளவு விரிவாக யாரும் இதுவரை பதிவர்களை அறிமுகப்படுத்தியதில்லை என எண்ணுகிறேன். அருமையான தொடக்கம். வாழ்த்துக்கள் மெக்னேஷ் திரு முருகன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே

      Delete
  6. எலே.. தம்பி.....
    அறிமுகங்களுக்கு விளக்கம் குருவின் ஆசியால் தானே? செம....
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் குருநாதர்களின் துணை !! தங்களையும் சேர்த்து தாங்ணா

      Delete
  7. அருமையான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள். ராம்குமார் மற்றும் அதிரடிக்காரன் சிவா தளங்கள் தெரிந்தவை. மற்ற தளங்கள் எனக்குப் புதிது. நன்றி.

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்! மிகச்சிறப்பாக ஓர் பதிவரை அவரின் பதிவுகளை விரிவாக எடுத்துரைத்த விதம் சிறப்பு! இப்படித்தான் நானும் எழுதவேண்டும் என்று நினைத்தேன்! ஆனால் வேறுமாதிரி நிறைய பதிவர்களை தொகுத்துவிட்டேன். விசும்பு தளம் என் தொகுப்பில் இருந்தும் விடுபட்டுவிட்டது. அறிவியல் தகவல்கள் எழுதும் நண்பரின் தளம் சென்றதில்லை! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள் அண்ணா ! தாங்கள் எரே நாளிலே எண்ணற்ற பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்தி ,வலைச்சரத்தில் ஒரு பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளீர்கள் அண்ணா ! நானோ தங்களின் முன் சிறுமடு

      Delete
  11. பன்னோக்கிலான அறிமுகங்கள் நன்று. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  12. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!- வித்யா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது