07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 26, 2015

சாமானியனிடம் ஆசிரியர் பொறுப்பை தந்து மகிழ்வோடு விடை பெறுகிறார் மெக்னேஷ் திருமுருகன்.


வலைச்சரம் நண்பர்களே! நல்வணக்கம்!

இன்றுடன் இரண்டு வாரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும்  "விமர்சன உலகம்" வலைப் பூ பதிவர் மெக்னேஷ் திருமுருகன் அவர்கள் மிகவும் திறம்பட, பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட  சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும்  சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.
அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!
மெக்னேஷ் திருமுருகன் உங்களிடமிருந்து,

145- க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,
 64 - தமிழ் மணம் வாக்குகளையும்,
1870- க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தமது, வலைச்சர வாரத்தை  மிகவும் சிறப்பாக வழங்கிய  நண்பர் மெக்னேஷ் திருமுருகன் அவர்களை நன்றி பாராட்டி,  வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' பெரு மகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....   "சாமானியனின் கிறுக்கல்கள்! " வலைப்பூவில் சாமானியன் சாம் என்ற புனைப் பெயரில் எழுதிவரும்  நமது நண்பர் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.


இவர்,  பூம்பொழில் நகராம் 'புதுவை' பிரதேசத்தைச் சார்ந்த, காரைக்கால் நகரில் பிறந்து வளர்ந்து,  தற்பொழுது பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து வருகிறார்
கண்ணின் கண்மணிகளாக இரு பிள்ளைகள் இவருக்குண்டு!

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார்.

வசிகர எழுத்தினால், வலைப்பூவில் இவரால் வரையப் பெறும் கோலங்கள் யாவும், வாசகர் மனதை விட்டு அகலாத 'அழியாதக் கோலம்' என்றே சொல்லலாம்.

கிறுக்கல்கள் என்று இவரால் சொல்லப்படும் எழுத்துக்கள் எல்லாம் வாசகர்களின் அன்பின் பெருக்கல்களாக அழகு சேர்க்கின்றன!

மிக இளவயதில், முத்தாரம், கல்கண்டு, சூப்பர் நியூஸ் போன்ற இதழ்களுக்கு துணுக்குகள், சிறு கட்டுரைகள்  எல்லாம் எழுதிய எழுத்தாளராகவும் திகழ்ந்துளார்.

வாழ்க்கையின் எந்த சூழலிலும் மனிதநேயத்தை மறக்காமல் வாழ முயற்சித்துக்கொண்டிருக்கும்  நன்னெறி மிக்கவர்.

பிரான்ஸ் தேசத்தில் "ACLI" (Association culturelle pour le continuum de langues Indiennes) சங்கத்தின் இளநிலை செயலாளராக இருந்து மக்கள் நலப் பணியை செய்து வருகிறார்

மேலும், கண்ணில் கண்ட எந்த  நல்ல நூலையும் வாசித்துவிடும் புத்தகப் பிரியர். மதம், இனம், மொழி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக நல்ல மனிதர்.

இவரது ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும், நமது நினைவுகளை மீட்டெடுக்கும் மீள் சக்தி அல்லது மின்காந்த சக்தி இவரது எழுத்தில் உண்டு என்பதை பதிவை  படித்தவர்கள் நன்கறிவர்.

எனது குழலின்னிசை  வலைப் பூ இவரது மூச்சுக் காற்று பட்டுத்தான் முதன்முதலில் இதழ் விரித்து மலர்ந்து  இன்னமும் மணம் வீசி வருகிறது.

தமிழ்ப் பணி செய்வதில் தனி ஆர்வமிக்கவர்.

இப்படி எண்ணற்ற தகுதிகளை உடைய  இந்த பதிவரை
 "சாமானியன்" அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக  "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் மெக்னேஷ் திருமுருகன்...

நல்வாழ்த்துக்கள் சாமானியன்...


நட்புடன்,
புதுவை வேலு

26 comments:

  1. Replies
    1. வலைச்சரத்துக்கு சிறப்பு சேர்த்த மெக்னேஷ் திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதுடன் என் அறிமுகத்துக்கான நன்றியினையும் தெரிவித்துகொள்கிறேன்...

      வேலு அவர்களே...
      டெம்ப்போவை எக்கச்சகமாக கூட்டிவிட்டீர்கள்...

      பளு பயமுறுத்துகிறது !

      நன்றியுடன்
      சாமானியன்

      Delete
  2. வலைச்சரம் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி விடைபெற்று செல்லும் நண்பர் மெக்னேஷ் திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
    வரும் வாரம் ஆசிரியராக பொறுப்பேற்க வரும் சாமானியன் சாம் அவர்களை வரவேற்று மகிழ்கின்றேன். வருக வலைச்சரத்திற்கு சிறப்பினை பெற்றுத் தருக!
    நன்றி!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்துக்கு சிறப்பு சேர்த்த மெக்னேஷ் திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதுடன் என் அறிமுகத்துக்கான நன்றியினையும் தெரிவித்துகொள்கிறேன்...

      வேலு அவர்களே...
      டெம்ப்போவை எக்கச்சகமாக கூட்டிவிட்டீர்கள்...

      பளு பயமுறுத்துகிறது !

      நன்றியுடன்
      சாமானியன்

      Delete
  3. Replies
    1. வணக்கம் கில்லர்ஜி அவர்களே!
      'கருத்து களஞ்சிய காள மேகத்தை' காண, வாழ்த்த ஓடோடி முதலில் வந்தமைக்கு
      மனதின் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. நன்றி நண்பர்ஜீ !

      நீங்கள் இந்தியாவிலிருந்தாலும், இந்த வாரம் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் ப்ளீஸ் !

      சாமானியன்

      Delete
  4. வாங்க வாங்க... உங்களைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்...!(?)

    அசத்துங்க... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வார்த்தைச் சித்தரே!
      தங்களது எதிர்பார்ப்பு நியாயமானதுதான். வலைச்சரம் ஆசிரியர் பிரம்பு எடுத்து அடிப்பவர் அல்ல! நரம்பு புடைக்கும் வகையில், நல்ல பதிவுகளை பாடமாக்கித் தருவார் என்று தங்களைப் போல், நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. என்னா... எதிர்பார்த்துக்கிடிருந்தீங்களா ?... எதுக்கு ?... பிடிச்சி உள்ள வைக்கவா ?!

      நன்றி வலைசித்தர் அவர்களே !

      Delete
    3. பயந்து விட்டீர்களா...? ஹா... ஹா... தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்...

      Delete
  5. "சாமானியனின் கிறுக்கல்கள்" இணைப்பும், உங்களது 'குழலின்னிசை வலைப் பூ' இணைப்பும் சரி செய்யவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  6. வணக்கம்,
    வா
    வாருங்கள், வரவு சிறக்கட்டும்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சாமானியன் அவர்களது வருகை சிறக்க
      வாழ்த்த வந்தமைக்கு வலைச்சரத்தின் நன்றி சகோதரி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. நன்றி சகோதரி.

      நீங்கள் எல்லோரும் தான் சிறப்பிக்க வேண்டும்

      நன்றி
      சாமானியன்

      Delete
  7. Replies
    1. தலை நகரத்தார் தரும் வாழ்த்து தலையானது!
      நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. நன்றி நண்பரே....

      சாமானியன்

      Delete
  8. இரு அன்பர்களுக்கும் வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      சாமானியன்

      Delete
  9. அன்பு உள்ளங்களை வாழ்த்தியமைக்கு
    நன்றி நண்பரே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. ஆசிரியப்பணியை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். பணியேற்கும் சாமானியன் சாம் அவர்களுக்கு இனிய வரவேற்பு.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்தினை இனிதுவந்து அளிக்க வந்த, முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. வரவேற்புக்கு நன்றி அய்யா...

      Delete
  11. //20 - 07 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்//

    இதில் தேதி 27-07-2015 என்றிருக்கவேண்டும்.
    அடுத்த முறை சரிசெய்துகொள்ளுங்கள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது