07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 29, 2015

இணையத்தில் தமிழ் !

" மிழ் இனி மெல்ல சாகும் " என்ற பயமொழி சற்றே மிகைபப்டுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் உலகின் மற்ற எந்த மொழிகளை விடவும் தமிழ் மொழியின் அழிவுக்கான ஆபத்து அதிகம்.

அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிடப்பட்ட மொழி தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஹிந்தியை தவிர்த்த இந்திய மொழிகள் அனைத்துமே எதிர்கொள்ளும் ஒன்றுதான் என்றாலும் " இந்திய தமிழர்களின் " தாய்மொழி மீதான அலட்சியம் அந்த அபாயத்தை இன்னும் அதிகமாக்குகிறது !
 இந்திய சுதிந்திரத்துக்குப் பிறகான மொழி இக்கட்டுகளிலிருந்து தமிழைக் காத்தது பெரியாரில் தொடங்கிய திராவிட எழுச்சி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் அந்தத் திராவிட இயக்கத்தின் கொள்கைகளும் காலப் போக்கில் நீர்த்து போய்விட்ட நிலை !

இத்தனை இக்கட்டுகளிலும் தமிழ் மொழி பற்றிய அறிவு மேலை நாடுகளில் பரவியதற்கும், தமிழ் மொழி இணையத்தில் இடம் பிடித்ததற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள்...

ரோப்பிய மற்றும் ஆஸ்த்திரேலிய பிரதேசங்களில் தமிழ் மொழியை அறியப்படுத்திய பெருமை புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களையே சாரும். அனைத்தையும் இழந்த கையறு நிலையிலும், தாய் மண்ணில் சிக்கிய ஆன்மாவை மீட்க முடியாமல் வெறும் உயிரை பிடித்துப் புலம் பெயர்ந்த போதிலும் எம்மொழி என்ற பெருமையுடன் செம்மொழி செழிக்கப் பாடுபடுபவர்கள் ஈழத்தமிழர்கள்.

ணையத்தில் துடிப்பாகத் திகழும், அதிகமான பயன்பாட்டாளர்களைக் கொண்ட மொழிகளில் தமிழ் முன்வரிசையில் திகழ்கிறது...

முகநூல், வலைதளம் தொடங்கிக் கைப்பேசிகளுக்கான மென்பொருள், கனிப்பொறி, மற்றும் இணையத் தொழில்நுட்பத்தில் புதிதாய் தோன்றும் எதிலும் தன்னை இலகுவாக இணைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற மொழியாகத் திகழ்கிறது மூத்த மொழியான தமிழ் !

புதிய தொழில்நுட்பத்தில் தமிழுக்கான இந்தப் பாதை சிலிக்கான் புரட்சி தொடங்கிய காலகட்டத்திலேயே போடப்பட்டுவிட்டது ! கணிப்பொறிகளுக்கான மென்பொருள் பணிக்காக அமெரிக்கா சென்ற தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்த பணி அது ! மொழி மீதான பற்றினால், தனிப்பட்ட முயற்சிகளினால் அவர்கள் உருவாக்க தொடங்கிய எழுத்துருக்கள், செயலிகள் போன்றவற்றின் பலனால் இணையத்தில் முன்னால் நிற்கிறது தமிழ் !

தமிழைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபடுவது பெரும்பாலும் சாதாரண மனிதர்கள்தான். திருவள்ளுவர் தொடங்கி ஒளவை வரை அறம் சார்ந்த விசயங்களையும், தன்னலமற்ற தொண்டினையும் போதித்த மொழி என்பதாலோ என்னவோ ஆளும் வர்க்கம் கண்டுக்கொள்ளாத மொழியாகவே தமிழ் வாழ்கிறது !


 கொஞ்சம் சிரித்துவிட்டு இன்றைய அறிமுகங்களைச் சந்திப்போம் !

தன்னைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதற்குத் தேவையான முதல் தகுதி சுயபகடி !

மூன்று நாட்களாக வலைச்சரத்துக்காகத் தொடர்ந்து தட்டச்சுச் செய்து பழகியதால் மேஜையின் மீது அமரும் போதெல்லாம் தட்டச்சு செய்வதுபோலவே விரல்கள் இயங்குகின்றன... காலையில் காபியில் விரல்களால் அடித்துக் கைகளைச் சுட்டுக்கொண்டேன் !...


இந்த வாரம் முழுவதும் கார்தான்... மெட்ரோ ரயிலோ, பஸ்ஸோ கூடாது என்றிருக்கிறேன்... என் விரல்கள் பிரெஞ்சு கனவாட்டிகளின் முதுகுகளில் தட்டச்சு செய்துவிட்டா
ல் ?!....

சர்தார்ஜி ஜோக்குகளை நான் பிறப்பதற்கு முன்பே பிரபலபடுத்திவிட்டார் குஷ்வந்த் சிங் !!!

ஒரு சர்தார்ஜி ஜோக்...

" இரு சர்தார்ஜிகள் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் ! "
" ..... "

என்ன ? ஜோக் அவ்வளவுதான் ! புரிந்ததா ?!....




சுறுசுறுப்புக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்பதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு அடையாளமாய் gmbwrites, பூவையின் எண்ணங்கள் என இரண்டு வலைப்பூக்களில் பதியும் ஜி எம் பி அய்யா அவர்கள்... உங்களின் ஆசி எங்கள் அனைவருக்கும் தேவை !

சோழ நாட்டின் பெளத்தம் ஆராய்ந்த, வயது, அனுபவம் தொடங்கி அறிவிலும் மூத்த முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் தளங்களின் சிறப்பை நான் சொல்லி அறியத்தேவையில்லை !

தே போலத் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் ! வரலாறே மறந்துவிட்ட வரலாறு படைத்தவர்களுக்கு இணையத்தில் நீங்கா இடம் பிடித்துத் தருபவர் !

முத்துச்சிதறல் என்ற பெயரானாலும் திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் தளம் கலைகளும் சிந்தனைகளுமாய்ச் சிதறிய முத்துக்களை ஒன்றாகச் சேர்த்து கோர்த்த நேர்த்தியான முத்தாரம் !

பிரான்சிலிருந்து தமிழ் பணியாற்றும் கி. பாரதிதாசன் அவர்கள்... தமிழ் இலக்கண இலக்கிய மின்வலை நடத்தும் வெண்பா கவி !

த்தனையோ நினைக்கிறது நெஞ்சம்... சொல்ல முடிந்ததோ கொஞ்சம் எனத் தான் பேச நினைப்பதையெல்லாம் தன் பதிவுகளில் பேசும் மூத்த பதிவர் சென்னை பித்தன் !

ங்கள்பிளாக் என்று ஸ்ரீராம் கூறினாலும் படிப்பவர்கள் நம்ம ஏரியா எனக் கொண்டாடும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரர் ! பாஸிட்டிவ் செய்தி தொடங்கிப் பஜ்ஜி சொஜ்ஜி வரை எதுவும் கிடைக்கும் தளம் !

டி. என். முரளிதரனின் மூங்கில் காற்று... மூங்கிலிலிருந்து வெளியேறும் காற்றின் இசையைப் போலவே இவரது எழுத்துக்களும் நம் மனம் நிறைப்பவை !

நான் ரசித்துப் படித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இந்த இணையத்தளம். வேறு எதையும் எதிர்பார்த்து அல்ல என்ற அறிவிப்பு மின்னும் மதுரை தமிழனின் அவர்கள் உண்மைகள் பதிவுகளைப் படித்தவர்களுக்கு அடுத்தப் பதிவு எப்போது என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் எழும் !

லைநகரிலிருந்து தமிழ் பரப்பும் நண்பர் வெங்கட் நாகராஜ்... சமூக நிகழ்வுகளைச் சுவைபடச் சொல்லும் இவரது வலைப்பூவின் படங்களும் அருமையானவை !
வெளிச்சக்கீற்றுகளில் மின்னுகிறது சுட்டிப்பெண் ரோஷினி வெங்கட்டின் வருங்கால திறமை !

மூகத்தின் வலிகள் அனைத்தையும் தன் எழுத்துச் சாட்டைக் கொண்டு சாடுபவர் வலிப்போக்கன். கடுமையான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது சமூகச் சீர்க்கேடு பற்றிய இவரது மனதின் வலி !

நிகழ்காலம் மறக்க தொடங்கிவிட்ட பெரியாரின் சிந்தனைத்துளிகளை இணையத்தில் சேமிக்கும் சகோதரி எழில் !

தேன்மதுரத்தமிழின் சங்க இலக்கியம் போற்றும் அதே வேளையில் நம் மூளையின் கதையையும் என்னைப் போன்ற சாமானிய மூளையில் ஏறும் அளவுக்கு எளிமையாய் விளக்கும் கிரேஸ் !

ன்னைப் போன்றே பூந்தளிர் படித்து வளர்ந்த என் தலைமுறை நண்பர்... தளிர்சுரேஷின் முதல் கதை கோகுலத்தில் வெளியான செய்தியை படித்த போது எனக்கு உண்டான " செல்ல பொறாமையை " சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை ! எண்ணங்களையெல்லாம் சிறந்த எழுத்தோவியமாக்குபவர் !

திணென் பருவத்தின் மறையாத என் நினைவுகளில் தங்கிவிட்ட மணவை முஸ்தபா, மணவை பொன்.மாணிக்கம் வரிசையில் இணையத்தில் மணவைக்குப் பெருமை சேர்க்கும் மணவை ஜேம்ஸ் ! தீதும் நன்றும் பிறர் தர வாரா என உரைக்கும் தமிழ் காதலர் !

" ந்தோஷமும் சோகமும் அல்லார்க்கும் எலவசம்பா! இத்த வேணுங்கறவ(ன்) இத்தயும் அத்த வேணுங்கறவ(ன்) அத்தயும் எட்த்துக்கோ நைனா. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்! " அப்டீன்னு ஷோக்கா டைட்டில் காட்டி... சமூக அவலங்கள சாடும் சைதை அஜீஸ் !

ல்லோரிடமும் உண்மையாக இருப்பவன் என்று கூறி, உண்மையானவன் தளம் நடத்தும் சொக்கன் சுப்ரமனியன் அவர்களின் தளம் உண்மையிலேயே அருமை !

டிப்பவரின் மனதில் நின்று இதமாய் வீசுபவை காவியக்கவி நடத்தும் இனியாவின் கவிச்சாரல்கள் !

மிழ் சமூகத்தின் கேடுகளைக் கண்கள் சிவக்க அகச்சிவப்புத்தமிழில் சாடும் தோழர் இ.பு.ஞானபிரகாசன்... பதிவுகளை மட்டுமல்லாது இவரது பின்னூட்டங்களையும் படித்து வியப்பவன் நான்

எஸ்.பி.செந்தில்குமாரின் பயணங்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மீகம், விவசாயம் என எல்லாம் கலந்த கூட்டாஞ்சோற்றைச் சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்க மாட்டார்கள் ! எழுத்தின் ருசிக்கு தொடுகையாய் புகைப்படங்களின் சுவை !!




சிந்திக்க..



" தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ! " என்பார்கள்... பழகிய ஒன்றிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல...

ஆங்கில வார்த்தையான HABIT...

H எழுத்தை விலக்கிவிட்டு பார்த்தால் A BIT மிச்சமிருக்கும்...

A எடுத்தாலும் ஒரு BIT இருக்கிறது !

I விலக்கிபார்த்தால் IT IS THERE !

ஆக, நல்லவற்றைப் பழகுவோம் !



தொடருவோம்...


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

61 comments:

  1. சிறகு விரித்து பறக்குது நண்பரே
    தங்களது இணையத்து தமிழ்
    அனுபவ ரீதியாக ஐரோப்பிய தேசத்தில் கண்ட உண்மையையை உரக்கச் சொன்னமைக்கு வாழ்த்துகள்!
    "ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய பிரதேசங்களில் தமிழ் மொழியை அறியப்படுத்திய பெருமை புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களையே சாரும். அனைத்தையும் இழந்த கையறு நிலையிலும், தாய் மண்ணில் சிக்கிய ஆன்மாவை மீட்க முடியாமல் வெறும் உயிரை பிடித்துப் புலம் பெயர்ந்த போதிலும் எம்மொழி என்ற பெருமையுடன் செம்மொழி செழிக்கப் பாடுபடுபவர்கள் ஈழத்தமிழர்கள்.
    இன்றையை பதிவாளர்களாக அடையாளம் காணப் பட்டவர்கள் அனைவரும்
    போற்றுதலுக்குரிய பெருந்தகையாளர்கள் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      சிட்டாக பறந்துவந்து சீரிய வாழ்த்துரைத்து, பக்கபலமாய் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி !

      Delete
  2. உங்களைப் போல உள்ளவர்கள் எல்லாம் என் பதிவையும் படிக்கிறீர்கள் என அறியும் போது மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறது அதைவிட அதையும் இப்படி இங்கே அறிமுகப்படுத்தும் போது இரட்டிப்பு சந்தோஷம்தான்.

    அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அது பற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி சாம்

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமில்லாத புதுமை ஒன்றும் எங்களிடம் இல்லை நண்பரே...

      தகவலை தெரிவிப்பது என கடமையல்லவா ?

      நன்றி நண்பரே !

      Delete
  3. தமிழ் மொழியை அழிக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவன் நான்!

    எங்களைச் சொல்லும்போது நீங்கள் செய்திருக்கும் சொல்லாடலை ரசித்தேன். மிக்க நன்றி.

    எங்களுடன் கூடவே சொல்லப் பட்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். ஒன்றிரண்டு பேர்களைத் தவிர மற்ற அனைவர் தளங்களுக்கும் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த சொல்லாடலுக்கு மிக பொருத்தமானவர்கள் நீங்கள் !

      நன்றி

      Delete
  4. வணக்கம்!

    அடியேன் வலையின் அறிமுகம், என்னுள்
    படித்தேன் சுவையைப் படைக்கும்! - வடிவாய்க்
    கணையெத்த சொல்லேந்திக் கன்னல் தமிழே
    இணையத்தை ஆளும் இனி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா

      Delete
  5. அண்ணா!
    சைதை அஜீஸ் தவிர மற்றவர்கள் அறிமுகமானவர்கள்! அதில் செல்ல நட்புக்களும், சகோகளும் உண்டு! அட! ரோஷினி குட்டி பாப்பாவை அறிமுகம் செய்திருகிறீர்கள்!! சூப்பர்! சிரிக்கவும், சிந்திக்கவும் கிடைத்த தகவல்கள் கொறிக்க அருமையான துணுக்குகள்:)வலைச்சரப்பணி சிறப்பாக தொடரட்டும் அண்ணா !

    ReplyDelete
    Replies
    1. கொறிக்க அருமையான துணுக்குகள்:)...

      ஆமாம் சகோ ! வலைச்சரம் வந்ததும் என் துணுக்கு மூட்டையும் திரும்ப கிடைத்துவிட்டது !

      நன்றி சகோ !

      Delete
  6. வலைச் சரத்தில் இந்த எளியேனையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்றவர்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் அய்யா

      நன்றி

      Delete
  7. வலைச்சரத்தில் எனது வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி, நன்றி. உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பல பதிவர்கள் அறிமுகமானவர்களே. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்றவர்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் அய்யா

      நன்றி

      Delete
  8. இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பூவையும் எங்கள் மகளின் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சாம்.....

    அறிமுகம் செய்யப்பட்ட மற்றா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... தொடருவோம் !

      Delete
  9. சாம்,

    வருண் சொன்னாப்பல நாலு மாசத்துக்கு ஒரு பதிவு எழுதும் உங்களை யாரோ போட்டுக் கொடுத்து இப்படி தினமும் எழுத வச்சுடாங்கன்னு தோணுது. ஸ்பைடர் மேன் பட tag line ஞாபகம் வருது. " With great power come great responsibilities."

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்...

      உண்மைதான் ! :-) அன்பு வற்புறுத்தலினால் மாட்டிகொண்டேன்...

      " With great power come great responsibilities."

      You too காரிகன் ?

      நான் வெறும் எறும்பு ! பாரம் தாங்க முடியல சாமி !

      ( Not Antman, just an ant ! நீங்கள் Antman tag line ஏதாவது இருந்தால் அதையும் போட்டுவிடாதீர்கள் !!! )

      நன்றி

      Delete
  10. எதற்கும் இரு கைகளை இணைத்து வைத்திருப்பது நல்லது... ஹா.... ஹா...

    அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பிரான்சில் இரு கைகளையும் இணைத்து வைத்திருந்தால் அதே கனவாட்டிகள் நம்மை முத்தமிட்டுவிடும் ஆபத்தும் உள்ளது ! ;-)

      நன்றி வலைசித்தரே !

      Delete
  11. வணக்கம் சகோ! சிறந்த அறிமுகங்கள் அனைவரும் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஒரு சிலரை தவிர மற்றவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். இவர்களுடன் என்னையும் அறிமுகம் செய்தமை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியே மிக்க நன்றிகள் சகோ. ஈழமக்கள் பற்றிய எண்ணங்கள் மிகச் சரியே அவர்களது அளப்பரிய செயல்களை உற்று நோக்கி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. இதனால் மிகவும் பெருமை யடைகிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது பொய்த்து போகட்டும். உலகெலாம் பரவிய தமிழ் தென்றலாய் வீசட்டும் பரந்து பட்டு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ !

      வார்த்தை அலங்காரங்களுடன் சொன்னாலும் அது யதார்த்தமான உண்மை ! உங்களின் வாழ்த்துக்கு நன்றி

      தொடருவோம் !

      Delete
  12. என்னை அறிமுகப்படுத்தியதற்கு உளமார்ந்த நன்றி சகோ.. மீண்டும் காலையில் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இங்கு அறிமுகமாகியுள்ளதில் மூன்று பேர் தவிர அனைவரும் நான் அறிந்த தொடரும் பதிவர்கள்..மகிழ்ச்சி சகோ. அனைவருக்கும் வாழ்த்துகள்.

      Delete
  13. இங்கே வர நேர்ம் ஒதுக்க முடியாமல் இருந்தாலும் உன் வேலையை மறந்து போனாயே என்பதாய் என்னை இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சாம். என் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி...

      சொந்த காரணங்களினால் என்னாலும் வலைதளங்களில் அதிகம் சஞ்சரிக்க முடிவதில்லைதான் ! எனது தகவல் கண்டதும் உடனடியாக வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி சகோ !

      Delete
  14. தமிழ் இனி என்று ஒரு குறும்படம் கூட நாங்கள் இணையத்தில் பார்த்திருக்கின்றோம்...ஆனால் தமிழ் இனியும் சாகாது...அது என்றும் வாழும்.

    அட நம்ம ஏரியா அப்படினு சொல்ல வைக்கும் அனைத்தும் நண்பர்களின் தளங்கள் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! ரோஷினிக் குட்டியின் தளமும் அடையாளப்படுத்தியமைக்கும் சேர்த்து! அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே...

      உங்களை போன்றவர்கள் அரணாக நிற்கும்போது தமிழுக்கு எந்த தீங்கு வதுவிடும் ?

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  15. என் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மூத்த பதிவர் தங்களை அறிமுகம் செய்ததில் எனக்கு பெருமை அய்யா

      நன்றி

      Delete
  16. என்னுடைய தள அறிமுகத்திற்கு நன்றி! அனைத்தும் நான் தொடரும் சிறந்த தளங்கள் என்பதில் மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! முன்னுரை சிறப்பு! என் முதல்கதை பூந்தளிரில் அல்ல கோகுலத்தில் வெளியானது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் நண்பரே...

      தவறை திருத்திவிட்டேன் ! தொடர்ந்து வாருங்கள்.

      நன்றி

      Delete
  17. வணக்கம்,
    இன்றைய அறிமுகமானவர்கள் பலர் பதிவுகள் படித்துள்ளேன், அனைவருக்கும் வாழ்த்துக்கள்,நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. தமிழ் இனி மெல்ல சாகும் என்று சொல்லப்பட்டது உண்மை தான்! ஆனால் தமிழின் சிறப்பை இங்கே பறையறிவித்துச் சொல்லும் உங்களைப்போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை தமிழ் இனிதே உயிர் வாழும்!
    இன்று என் வலைத்தளத்தையும் அடையாளம் காட்டி சிறப்பித்திருப்பதற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சிறு திருத்தம் அம்மா...

      உங்களை போன்ற மூத்தவர்களின் வழிகாட்டல் எங்களுக்கு இருக்கும்வரை தமிழுக்கு தீங்கில்லை !

      நன்றி அம்மா

      Delete
  20. அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்...

      தனிமரம் நண்பர்கள் சூழ்ந்த பெருமரம் !

      நன்றி

      Delete
  21. தங்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோதரரே

      Delete
  22. வலைச்சரத்தில்
    பிரபல பல பதிவர்களின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்திய வரிசையில் எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்வுடன் தங்களுக்கு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்லாம் எதற்கு தோழரே... நீங்களும் ஒரு பிரபலம் தான் !

      Delete
  23. இந்தப் பதிவுலகப் பெருமக்களின் பட்டியலில் அவ்வப்பொழுது கிறுக்கும் என்னையும் மதித்து அறிமுகப்படுத்திய சாமானியன் ஐயா! உங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் பாராட்டு என்னைப் பெருமைப்பட வைக்கிறது. அதற்கும் தனிப்பெரும் நன்றி! :-)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா...

      நிறைகுடம் ?... நீங்கள் கிறுக்குபவர் என்றால் நான் ?....

      உங்களின் சமூக அக்கறையை உணர்ந்து பெருமைபடுபவன் நான்.

      நன்றி

      Delete
  24. //அனைத்தையும் இழந்த கையறு நிலையிலும், தாய் மண்ணில் சிக்கிய ஆன்மாவை மீட்க முடியாமல் வெறும் உயிரை பிடித்துப் புலம் பெயர்ந்த போதிலும் எம்மொழி என்ற பெருமையுடன் செம்மொழி செழிக்கப் பாடுபடுபவர்கள் ஈழத்தமிழர்கள்// - நூற்றுக்கு நூறு உண்மை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா...

      பல சிரமங்களையும் தாண்டி ஈழத்தமிழர்கள் ஐரோப்பா முழுவதும் கட்டுப்பாட்டுடன் நடத்தும் தமிழ் கல்வி பள்ளிகள் ஆச்சரியம் ! அவர்களின் தளரா முயற்சியின் பலன் !

      நன்றி

      Delete
  25. ஏற்கனவே பின்னூட்டம் இட்டிருந்தேனே .
    இன்றைய அறிமுகங்கள் அனைவரும் சிறப்பாக எழுத் வருபவர்கள். அவர்களோடு என்னையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  26. அன்புள்ள அய்யா,

    ’இணையத்தில் தமிழ் !’ தமிழ் இனி மெல்ல வாழும் - அதற்குக் காரணம் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களுக்கும்... மிகுந்த பங்குண்டு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. தமிழ் வாழப் பாடுபடும் அந்தத் தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். நம் சொந்தங்கள் இன்முகத்துடன் வாழ என்று வழி பிறக்கும்?

    வலைச்சரத்தில் பல அன்புள்ளங்களை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்துகின்ற பொழுது... என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எங்கள் ஊர்க்காரான மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935) வின் வரலாற்றை திரு.எழில்முதல்வன் அவர்கள் எழுதியதைப் படித்து வியந்திருக்கிறேன். அப்துல்கலாம் போல படிக்கின்ற பொழுது கஷ்டப்பட்டு படித்தவர். அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய "இசுலாமும் சமய நல்லிணக்கமும் " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.

    எனது நெருங்கிய நண்பரான அண்ணன் மணவை பொன்.மாணிக்கம் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் கவிஞரும் இயக்குநருமானவரும் எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்து வருகின்றவர்.

    அன்னார்கள் பிறந்த ஊரில் நானும் வாழ்கிறேன்....!

    -மிக்க நன்றி.
    த.ம. 13



    ReplyDelete
    Replies
    1. அய்யா வருகைக்கு நன்றி...

      மணவை முஸ்த்தபாவை பற்றிய தகவல்கள் நான் அறியாதவை !...

      மனவை பொன் மாணிக்கம் அவர்கள் உங்கள் நண்பர் என்பதை அறிந்து பெருமை அடைகிறேன்...

      Delete
  27. இணையத்தில் தமிழ் வளர்க்க முக்கிய காரணமானவர்கள் ஈழச்சகோதரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தங்களின் தமிழன் என்று சொல்லடா; தமிழில் பேசடா’ என்னைக் கவர்ந்த பதிவு. இன்றைய அறிமுகங்களில் எங்கள் பிளாக் & முனைவர் ஜம்புலிங்கம் தளங்கள் இரண்டும் நான் தவறாமல் தொடர்பவை. அடிக்கடித் தொடராவிட்டாலும் மனோ சாமிநாதனும் இனியாவும் நன்கு தெரிந்தவர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே எனக்கு அறிமுகமானவர்கள் மட்டுமல்ல, தரமான எழுத்துக்கும் சொந்தக்காரர்கள். இவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி...

      வருகைக்கும், இதமான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல

      Delete
  28. பல பிரபல வலைபூக்களுக்கு நடுவே என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நண்பர் சாமானியன் சாம் அவர்களுக்கு நன்றி! என்னுடன் அறிமுகமான மற்ற பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    த ம 14

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  29. சுவையான அறிமுக உரையோடு தளங்களை அறிமுகப்படுத்திய விதம் மிக்க சிறப்பு. வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நிஜாம்...

      தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  30. அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்... இல்லே மெய்யாலுமே அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்?
    பத்தோடு பதினொண்ணா எழுதிக்கொண்டிருந்த என்னை பதினாறும் பெற்று சிறக்க பதினாறாவதாக அறிமுகப்படுத்திய உமக்கு என் நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. " பத்தோடு பதினொண்ணா எழுதிக்கொண்டிருந்த என்னை பதினாறும் பெற்று சிறக்க பதினாறாவதாக அறிமுகப்படுத்திய உமக்கு என் நன்றிகள் நண்பரே! "

      ... " இது நானே கண்டுகினாத சேதி... ஆங் ! மெய்யாலுமே அப்பாடகருதாம்பா ! "

      நன்றி

      Delete
  31. ஆயிரக்கணக்கான வருடங்களாய் சாகாத தமிழ் இனி மெல்ல சாகுமா என்ன!? உலகத்தின் மிகப் பழமையான ஆறு மொழிகளில் இன்னும் பேச்சு எழுத்து வடிவில் உயிருடன் இருக்கும் நம் தாய் மொழி உலகம் அழியும்போதுதான் அழியும். அதுவரை உங்களைப் போல என்னைப் போல யாராவது ஏதாவது எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள் . தமிழை காத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

    ReplyDelete
  32. வாருங்கள் சார்லஸ்...

    நீங்கள் சொல்வது நிஜம் ! ஒரு மொழி ஒரு நாளில் மறந்துவிடப்போவதில்லைதான்... ஆனால் அந்த மொழி பேசும் மக்களிடம் தம் மொழி சார்ந்த விழிப்புணர்வு குறையும்போது அந்த மொழியின் தனித்தனமையும் ஜீவனும் மறைந்துவிடக்கூடிய அபாயம் உண்டு... முக்கியமாக அதன் இஅல்க்கிய வளங்கள் !

    உதாரணமாக நம் பிள்ளைகளுக்கு " தமிங்கிலீஷை " தொடர்ந்து ஊக்குவித்தோமானால், கால ஓட்டத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒருவித கலப்படம் உருவாகவதற்கான வாய்ப்புகள் உண்டு !

    உதராணமாக கரீபியன் தீவு பகுதிகளில் மர்ட்டினீக் என்றொரு தீவு உண்டு. காலனியாதிக்கத்தில் தொடங்கி இன்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் நிரவாகத்தில் இயங்கும் தீவு மக்கள் " க்ரெயோல் " என்ற மொழியை பேசுகிறார்கள்... நான் மேலே குறிப்பிட்டதை போல அந்த தீவின் பூர்வீக மொழியுடன் பிரெஞ்சும் கலந்த கலைவை அது !

    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது