07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 4, 2015

குறிப்புகள் இல்லாத புத்தகங்களை எழுதுகிறேன்.

வணக்கம்!

     நல்லபடியாக சுற்றுப்பயணம் முடிந்து நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தாயிற்று. கோயில்களைப் பற்றியே எழுதி போரடிக்கிறேனோ என்னவோ யாரும் திட்டவில்லை இதுவரைக்கும். நேற்றைக்கு மூவர் கோயில் என்ற வழிகாட்டியைப் பார்த்ததோடு முடித்திருந்தேன்.



கொடும்பாளூர் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது மூவர்கோயில். மூன்று கோயிலும் மண்டபங்களும் அமைந்திருந்த கோயிலை பூதிவிக்கிரம கேசரி என்ற மன்னனின் இரண்டு மனைவிகளான கற்றளி பிராட்டியும், வரகுணநங்கையும் கட்டி இருக்கிறார்கள். பராந்தகன் சுந்தர சோழனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.  இந்த மூவர் கோயிலில் மிச்சமிருப்பது இரண்டு மட்டுமே. மற்ற முதல் விமானமும் கருவறையும் திருச்சுற்றமும் மண்டபங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

கோயிலின் சிலைகள் ஒவ்வொன்றும் அத்தனை கலை நேர்த்தி.  அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் என்று பார்க்கப் பார்க்க மெய்சிலிர்க்கும். மூவர் கோயிலிலிருந்து கொஞ்சம் தள்ளி அமைந்துள்ளது ஐவர் கோயில். முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்ட கோயிலில் அனாதையாக நந்தி மட்டும் வீற்றிருக்கிறது. உள்ளூர்காரரிடம் கேட்டதற்கு மாலிக் கபூர் படையெடுப்பில் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று காரணம் சொன்னார்கள்.  

கொடும்பாளூரில் அறிமுகமான சிவில் சப்ளை ஆய்வாளர் திரு. மணிமாறன் என்பவரும் என்னோடு இணைந்துகொள்ள பக்கத்தில் தான் குடுமியான் மலை நிச்சயம் அங்கே நீங்கள் பார்க்கவேண்டுமென அழைத்துப் போனார். சென்னையை நோக்கிச் செல்லும் பயணத்தில் திருச்சி வரைக்கும் முன்னேறிச்சென்றவன் அப்படியே பின்னோக்கி, கொடும்பாளூர் புதுக்கோட்டை சாலையில் சுமா 30கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குடுமியான் மலைக்கு  வந்து சேர்ந்தேன்.

இந்த சிவாலயத்தில் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் குடுமி போன்ற குமிழ் உள்ளது. இப்போ குடுமியான் மலைக்குப் பெயர்காரணம் ஒன்றும் நான் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. கோயில் உள்ளே நுழைந்ததும் கருப்பட்டி முட்டாயை கடவாயில் வைத்துக் கடித்தது போல அப்படியே கரைந்து போனேன். எத்தனைச் சிற்பங்கள். எவ்வளவு அழகிய தூண்கள். தொல்லியல் துறை சார்பாக பணியிலிருக்கும் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட நண்பர் கோயில் முழுக்கச் சுற்றிக் காட்டினார்.

பதினேழு வருடங்களாக பணியிலிருக்கும் அவரே கண்டிருக்காத யாழியின் வாயில் நிற்கும் மனித உருவத்தை நான் சுட்டிக் காட்டினதும் மனிதருக்கு அவ்வளவு சந்தோசம். குடுமியான் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கல்வெட்டுகளை திறந்து காண்பித்தார். மலையைக் குடைந்து குடைவரையிலே எழுப்பப்பட்ட சிவலிங்கமும் நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாய் நிற்கிறது. ஆயிரங்கால் மண்டபம். ஒற்றைப்பாறைப் பலகையில் அமைக்கப்பட்ட தளம். அங்கே நடக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்து வைபவங்கள். பால் நிறத்தில் தண்ணீர் சுரந்துகொண்டே இருக்கும் கிணறு. 106 ஏக்கரில் அமைந்த கோயில் அரண்டுவிட்டேன்.

எல்லாவற்றையும் தாண்டி அந்த சிற்பங்கள் தான் குடுமியான் மலையை விட்டு நகரச் செய்யவில்லை. கார்ட் ரீடரை ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டதால் புகைப்படங்கள் இணைக்க முடியவில்லை.  நீண்ட உரையாடல்கள் கடந்து நானும் திரு மணிமாறன் அவர்களும், தொல்லியல் பணியாளருமாக அடுத்து புதுக்கோட்டைக்குக் கிளம்பிப் போனோம்.
திருக்கோகர்ணத்தில் மலையைக் குடைந்து அமைந்துள்ள (Rock Cut Cave Temple) கோகர்ணேஸ்வரர் பிரஹதாம்பாள் கோவிலை அடைந்தோம்.  புதுக்கோட்டை சமஸ்தானத்து மன்னர்களின் குலதெய்வம் என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில் விமானம் காணச் செல்லுமிடத்தில் உள்ள கல்வெட்டு கோடு போட்டு எழுதப்பட்டதைக் கண்டேன்.

இப்ப்டியாக புதுக்கோட்டையிலிருந்து திருவாரூர் நண்பர் ஜெகன் வீட்டில் தங்கி அங்கிருந்து நேற்றைக்கு மதியம் புறப்பட்டு கும்பகோணம், மயிலாடுதுறை,  வைத்தீஸ்வரன்கோயில் சிதம்பரம், கடலூர், புதுச்சேரி வழியாக சென்னை வந்தடையும் வழியில் இன்னும் நிறைய கோயில்களைக் கண்டடைய முடிந்தது.  பக்தி என்பதையெல்லாம் தாண்டி  இந்த கோயில்கள் அத்தனையும் நம் வரலாற்றுப் பெட்டகங்கள் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுக்கு உணர்த்திக் கொள்கிறேன்.

கூடவே பயணித்தது போல பின்னூட்டம் எழுதியிருந்தீர்கள். ஆக உங்களுக்கும் களைப்பு இருக்கலாம். கதைசொல்லி இதழுக்கான வேலைகள் தலைக்கு மேல் கிடக்கிறது. அதை ஒவ்வொன்றாக கீழிறக்கி வைக்க வேண்டும் இனிதான். மக்கள் டி.வியில் மொழிவது அறம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறார்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மனிதனைத் தீவுகளாக்கிக் கொண்டிருக்கின்றன என்ற தலைப்பில் பேசச் சென்றுகொண்டிருக்கிறேன்.  நாளையோடு என் தொந்தரவு தங்களுக்குத் தீர்ந்து போய்விடும்.  நிறைய பதில் எழுத வேண்டி இருக்கிறது உங்களுக்கெல்லாம்.  போய்த் தொலை என்று திட்டாமல் விட்டால் சரி ஹாஹா..

                                                                         ******

இன்றைக்கு வலைச் சரத்தில் நெஞ்சுக்கு நெருக்கமான அண்ணன் ஈரோடு கதிர் அவர்களுடைய வலை தளத்தைப் பற்றி எழுத நினைத்து வைத்திருந்தேன்.
 கசியும் மௌனம்   எனக்கு அறிமுகமானது சோற்றுக்கடை ஒன்று பற்றிய பதிவில் இருந்துதான்.  ஈரோடு கதிர் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் மௌனங்கள் பழுத்த இலைகள் காற்றிலசைந்து உதிர்வது போலும், துளித்த இலைகளின் தனித்த பச்சயம் போலும் ஈரமும் மூப்பும் மிகுந்த பதிவுகள் இந்த தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

இன்னின்ன பதிவுகளை வாசியுங்கள் என்று பட்டியல் போடுவதை ஒரு மென்மையான வன்முறையாகவே பார்க்கிறேன். ஒரு புத்தகத்தைப் படிக்கக் கொடுத்துவிட்டு அதில் நான் கோடு போட்டு வைத்திருக்கும் பகுதிகளை மிகச் சரியாக வாசி என்பது போலானது அது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தியல்பு இருக்கலாம். ஆக இப்படிச் சொல்லும் என் கருத்துகூட உங்களில் யார்க்கும் உடன்பாடில்லாமல் கூட போகலாம். அயன்மீர் சற்று சமாளித்துக் கொள்ளுங்கள்.

கசியும் மௌனத்தில்  குழந்தைகளுக்கான உலகின் மிரட்டல்களைத் துகிலுரிப்பதை அவ்வப்போது காண்கிறேன். ஈரோடு கதிர் அண்ணன் குழந்தைகளின் உலகின் பால் பெரிய அன்பு காப்பவர் என்பதை எனக்கு அம்மாதிரியான பதிவுகள் உணர்த்திப் போகும்.

                                                                         ******
வலைதளப் பதிவர்களில் செல்லப் பெயர் வைத்து அழைக்கப்படும் ஸ்பை என்கிற ஸ்பைடர்மேன் என்கிற ஸ்கூல்பையன் அவர்களது வலை பற்றி இன்றைக்கு எழுதலாமா நாளைக்கு எழுதலாமா என்று நிறைய யோசித்து இப்போதே தொடர்ந்துவிட்டேன்.

நல்லார் ஒருவர் உளரேல் என்ற பதிவில் தொடங்கியது இவரது வலைதளத்தின் அறிமுகம். அன்றைக்கு இரவு கொஞ்சம் உறக்கம் போதாமை. விடிய விடிய வாசித்துக் கொண்டிருந்தேன். வெள்ளந்தித்தனமும் வேடிக்கைப் பேச்சும் கொஞ்சம் மனித்தன்மையின் ஈரங்களும் மிகுந்த பக்கங்களில்  நிறைய எழுதி இருந்தார். வோடபோன் நெட்வொர்க் ஆசாமிகள் யூ-ட்யூப் தளம் எப்படி லோட் ஆகும் என்று அதன் விற்பனை பிரதிநிதி மொளகாய் அரைத்ததை எல்லாம் அவ்வளவு பகடியாக எழுதி இருந்தார். நான்சி கதை , பத்துகேள்வி சீரியஸ் பதில் இப்படி நிறைய நிறைய வாசித்துப் பிடித்தவை.

இரண்டாம் தடவை கோவை ஆவியைச் சென்னையில் சந்தித்த தினத்தில் திரு ஸ்பை அண்ணன் அறிமுகம். ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சிந்தனைகளோடே பேசிக்கொண்டிருந்தார். ஆவி இல்லாத இடத்தில் அரசன் எப்படி இருப்பார். விக்கிரமாதித்யன் வேதாளம் போல இருவரும் ஒன்றாகவே வந்திருந்தார்கள் அன்று(ம்).  இதில் யார் வேதாளம் யார் விக்கிரமாதித்யன் என்பதை ஆய்வு செய்வதெல்லாம் உங்கள் பொறுப்பு.

ஆகவே மக்களே .... ஸ்கூல் பையன் அண்ணன் பதிவுகளுக்கு விசிறி, மிக்ஸி, கிரைண்டராக இருப்பதில் அடியேன் பெருமிதம் கொள்கிறேன். அவர் சொல்லச் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டேன் நன்றி வணக்கம்.

எல்லோருக்கும் நன்கு தெரிந்த வலைப்பதிவர்களைப் பற்றி எழுதுவதால் நீங்கள் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும் நான் பாஸ் மார்க் மட்டுமே வாங்கி பள்ளிக்கூடம் முடித்தவன்.  பர்ஸ்ட் மார்க்குக்காகத் தயார்படுத்தி இராவும் பகலும் தூக்கமில்லாமல் மெலிந்து போக முடியாததால் அம்மையப்பரைச் சுற்றியே பழம் வாங்கி விடுகிறேன்.

- நாளை விடைபெறும் பதிவுடன் சந்திக்கலாம். நன்றியும் ப்ரியங்களுமுடன்
கார்த்திக் புகழேந்தி.


     










18 comments:

  1. தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
    எச்சத்தாற் காணப்படும்

    வள்ளுவன் சொல் நம் கருத்தினுள், உயிரினுள்
    உறைந்திருத்தல் போல்,

    ஒரு பதிவை வாசித்து முடித்தபின் அது ஏற்படுத்தும்
    உணர்வுகள் ஒரு படைப்பாளிக்கு மிகவும் இன்றி அமையாதது ஆகும்.

    அவ்வுணர்வுகள் ஆக்க வழி நிற்கையில், படைப்பாளியும்
    படிப்போர் மனதில் நிற்கிறார்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  2. கோயில் வரலாறுகளைப் பேசி... அழகாய் அறிமுகம்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நமது நண்பர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. இன்று தான் அனைத்து பதிவுகளையும் படிக்க நேர்ந்தது தல ... எதார்த்தம் நிரம்பிய எழுத்துக்கள் ... பழமையோடு கோவில்களை பற்றியும் பேசியது மனதுக்கு நெருக்கமாய் இருந்தது ... வாழ்த்துக்கள் ///

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நன்றி நன்றி... உங்க தளத்தை இனிமேல் தான் பார்க்கவே போறேன்.

      Delete
  5. இதில் யார் வேதாளம் யார் விக்கிரமாதித்யன் // இந்த குழப்பம் தான் எங்களுக்கும் பாஸ் ... ஹா ஹா ///

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா எல்லாம் அந்த முருங்கைமரத்திற்கே வெளிச்சம்.

      Delete
  6. ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேனே. இப்போது காணாமல் போய் விட்டதே

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்த அழிக்குற அதிகாரம் ஆசிரியருக்கு கிடையாது, வழங்க மாட்டாங்க. உங்களோட பின்னூட்டம் போஸ்ட் ஆகாம இருந்துருக்கும்

      Delete
    2. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...

      Delete
  7. கொடும்பாளூர் சென்றுள்ளேன். அருமையான கோயில். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  8. இன்னும் ஒரு நாள் இருக்கு. என்னை காப்பாத்திடுங்க தெய்வமே....


    மத்தப்படி எழுதுற விசயத்துல நீங்க அசத்திடுவீங்க. அசத்திட்டீங்க இந்த ஆறு நாளும்

    ReplyDelete
    Replies
    1. வாக்கு குடுத்தா காப்பாத்தாம விட மாட்டோம். என்ன ஒன்னு எழுத்தனுக்கே உரிய டெட்லைன் சோம்பேறித்தனம் அப்பப்போ வெளிப்பட்டுடும். அதை நான் ஒன்னும் செய்ய முடியாது மெனுஃபாக்சரிங் டிஃபெக்ட்.

      Delete
  9. வலையுலக பிரபல பதிவர்களின் பதிவுகளை அடையாளம் காட்டியதோடு கோவில்களின் வரலாற்றினையும் சுவைபட சொன்ன விதம் அருமை!

    ReplyDelete
  10. /பின்னூட்டத்தை அழிக்கிற அதிகாரம் ஆசிரியருக்குக் கிடையாது./ தனக்குப் பதில் மறுமொழி எழுத இன்னொருவரை அனுமதிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா.?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. சரி சார் அறியாப் பையன் தெரியாமல் பண்ணிட்டேன்.

      Delete
  11. அருமை! விவரணம்! அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது