07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 1, 2007

வணக்கம்....

வலைப்பூ ஆசிரியர் இருந்த காலகட்டத்தில் தமிழ்மணம் போல் பதிவுகளை ஓரிடத்தில் திரட்டும் வசதி இருந்திருக்கவில்லை. ஆக, அந்தந்த நாட்களில் வெளியான பதிவுகளில் பிடித்தவற்றைப் பட்டியலிட, நல்லவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட, என்று வலைப்பூ ஆசிரியர் மிக மிகத் தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. மற்றவர்கள் பதிவுகளுக்கு வெளிச்சம் தருவதோடல்லாமல், வலைப்பூ ஆசிரியராக இருப்பவரின் பதிவுகளுக்கும் இதன்மூலம் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்திருந்தது என்று நினைக்கிறேன்.

பதிவர்களை வெளிச்சத்தில் நிறுத்த இன்றைய நட்சத்திர பெட்டியும், ஒரு வாரத்தில் வந்திருக்கும் நல்ல இடுகைகளின் மேல் ஒளி பாய்ச்ச பூங்கா போன்ற வலை சஞ்சிகைகளும், அன்றைன்றைக்கு இடப்படும் இடுகைகளைப் பரிந்துரைக்க கில்லி போன்ற மனிதத் திரட்டிகளும் வந்த பின்னர், வலைப்பூ ஆசிரியர் போன்ற ஒரு செயல்பாடு தேவை தானா என்பது தான் சிந்தாநதியிடம் நான் கேட்டிருந்த கேள்வி.

வலைப்பூ ஆசிரியர் போல வெவ்வேறு பதிவுகளுக்கு விமர்சனமும், வெளிச்சமும் தரும் பதிவுகளோ, இடுகைகளோ இப்போது இல்லை என்பதை சிந்தாநதி விளக்கியபின்னரும், இந்த வலைச்சர ஆசிரியராக, என்ன செய்யப் போகிறேன் என்பதில் ஒரு தெளிவு இல்லை என்பது தான் உண்மை.



பொதுவில்,

  • நான் படித்த, படிக்கும் பதிவுகள்,
  • துறை சார் இடுகைகள்
  • சேமிக்க வேண்டிய நல்ல இடுகை என்று நான் நினைப்பவை,
  • ஏன், முரண்படவும் விவாதிக்கவும் வேண்டிய இடுகைகளைக் கூட இங்கே சேமிக்க எண்ணம்.

வலைப்பூக்கள் வாசிக்க ஆரம்பித்த இந்த ஒரு வருடத்தில் என் கவனத்தைக் கவர்ந்த, எனக்குப் பிடித்தமான, நான் இன்னும் நினைவில் வைத்திருக்கும் எல்லா இடுகைகளையும் இங்கே சேமித்துவிட எண்ணம்.

கூடியவரை சூரியனுக்கு விளக்கடிப்பது போல், ஏற்கனவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் இடுகைகளை/ பதிவர்களை இங்கே பட்டியலிடாமல் இருக்க முயல்கிறேன்.

புது முயற்சிக்கு சிந்தாநதிக்கு என் வாழ்த்துக்களுடன், இந்த வார இடுகைகளைப் பற்றி அடுத்த பதிவில்...

8 comments:

  1. நன்றி பொன்ஸ்

    இது பதிவர்களை வெளிச்சப் படுத்த அல்ல...மாறாக தவற விடக்கூடாத இடுகைகளை ஆவணப் படுத்தும் ஒரு முயற்சியாகவும்...புதிய வலைப்பதிவர்களை ஊக்கப் படுத்தவும் இதைப் பயன்படுத்துவோம்...

    ReplyDelete
  2. நல்ல முயற்சி. இதை பெட்டகம், delicious, yahoo my web போன்ற இடங்களிலும் செய்தால் பல வகையில் அதை தேடிப் படிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. சிந்தாநதி! பொன்ஸ்! பாராட்டுக்கள்.
    சயந்தன் உண்மையிலேயே மிகத்திறமை வாய்ந்த இளைஞன். அவரை ஊக்குவித்து நாமும் உயர் பெறலாம் என்பது திண்ணம்.
    நன்றி.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. சிந்தாநதி! பொன்ஸ்! பாராட்டுக்கள்.
    சயந்தன் உண்மையிலேயே மிகத்திறமை வாய்ந்த இளைஞன். அவரை ஊக்குவித்து நாமும் உயர் பெறலாம் என்பது திண்ணம்.
    நன்றி.

    ReplyDelete
  5. முயற்சி நல்ல படியா நிறைவேறணும் பொன்ஸ்.
    வழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வலைப்பூ வலைச்சரம் போன்றவற்றின் சரித்திரங்களைச் சரமாரியாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

    பல விஷயங்களை நன்கு உணர முடிகிறது.

    நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது