07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 24, 2010

வலைச்சரம் - ஏழாம் நாள் பணி-பின்னூட்டமிடுபவர் சேவை

ஆசிரியப் பணியின் கடைசி நாள்.நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த/அறிமுகமான பதிவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல ஆசை.ஆனால் கொடுக்கப்பட்ட நாட்களோ எழு..சுய தம்பட்டம் நீங்கலாக ஆறு
நாட்களில்...எவ்வளவு பதிவர்களைப் பற்றி சொல்ல முடியும்.ஒரு பாடலின் வரிகள் தான் ஞாபகம் வந்தது.'கங்கை நீரும் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது"

இனி வரும் ஆசிரியப் பணி மேற்கொள்வோர் அவர்களை அறிமுகப் படுத்துவர்..இல்லையேல் மறு சுழற்சியில் சீனா சார் என்னை மீண்டும் அழைக்க மாட்டாரா..என்ன..

இன்று

மனித மனம் பாராட்டை எதிர்ப்பார்க்கும் ஒன்று.அதேபோல நம் எழுத்துக்களை ஒருவர் பாராட்டுவாரானால்..அதுவே அவர் மேலும் மேலும் எழுத வைக்கும் டானிக்காக ஆகும்.(சில சமயங்களில் இவர் எழுதுவதை விட்டுவிட மாட்டாரா..என்ற எண்ணத்தில் பாராட்டுவாரும் உண்டு..அது எழுதுபவர்களுக்கு புரிவதில்லை)

நாம் இடும் இடுகைகளை படித்து..(படிக்காமல்) பின்னூட்டம் இடும்போது..சில சமயங்களில் பதிவைவிட பின்னூட்டங்கள் நன்றாய் அமைந்துவிடும்.பின்னூட்டங்கள் இட்டு பதிவர்களை ஊக்குவிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி.

சில மாதங்களுக்கு முன் வரை..பின்னூட்டம் இடுவதில் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தவர்கள் மங்களூர் சிவா,ராப் ஆகியோர்.இவர்கள் பதிவுகளும்..குறிப்பாக ராப் பின் பதிவுகளைப் பார்த்து நான் வியந்தது உண்டு.இவர்கள் அனைத்துப் பதிவுகளையும் எப்படி படிக்கிறார்கள் என்று எண்ணியது உண்டு.அடுத்து..சொல்லப்பட வேண்டியவர் கோவி..புதிய பதிவர் என்றால்..தொடர்ந்து அவருக்கு பின்னூட்டம் போடுவார்..பதிவருக்கு தன் எழுத்தின் மீது நம்பிக்கை வரும் வரையில். அடுத்து மணிகண்டன்..திறமை மிக்கவர்.வலைப்பதிவும் எழுதுவது உண்டு.மனதில் தோன்றுவதை..பதிவர் யாராயிருந்தாலும் பளீச் என பின்னூட்டம் இடுபவர் .

பிரபாகர்.ஸ்டார்ஜன்,அக்பர்,பீர்,நவாஸுதீன்,சின்ன அம்மிணி,ராகவன் நைஜிரியா,பாலாசி அத்திரி,நட்புடன் ஜமால்,நசரேயன்,அண்ணாமலையான்,சங்கர்,நாஞ்சில் பிரதாப்,பின்னோக்கி,பிரிய முடன் வசந்த்,சின்ன அம்மிணி,பலா பட்டறை ஆகியோர் இடுகைகள் இடுவதுடன்..பல பதிவர்கள் வலைப்பூவிற்கு சென்று பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.(சில பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்..அது என் தவறே!அதற்காக எனக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தி விடாதீர்கள்)

இவர் பெயரைச் சொல்ல வில்லை யெனில் பதிவு முற்றுப் பெறாது.வானம்பாடிகள்..இவரால் எப்படி அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட முடிகிறது..இயற்கை இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தானே கொடுத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை..கூடியவரை பின்னூட்டம்..குறைந்தது டெம்ப்ளேட் பின்னூட்டமாவது இட்டு வருகிறேன்.யார் எனக்கு பின்னூட்டம் இட்டாலும் ..அதற்காக அவர்கள் மெனக்கட்டதற்காக தனியாகவே ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்கிறேன்.இதைப் பற்றிக் கூட ..தன்னை ஒரு பிரபல பதிவர் என எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர்..கிண்டலடித்ததுண்டு.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிக கோஷ்டிகள் உள்ள இடம் இணையதளம்..இதைச் சார்ந்தவர்கள் தங்கள் மக்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவர்.மற்றவர்களுக்கு பின்னூட்டம் இட்டால்..அது தங்கள் பிரபலத்தைக் குறைத்துவிடும் என எண்ணுகிறார்களோ என்னவோ..

கடைசியாக..எனக்கு வலைச்சரத்தில் எழுத சந்தர்ப்பம் அளித்த சீனா சாருக்கு என் நன்றி.

நன்றி..வணக்கம்

16 comments:

  1. அருமை..:) கண்டிப்பாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு என் நன்றிகளும்.. ஒரு மோசமான பதிவு நம் நேரத்தை வீணடிப்பதுடன் நம்மை நம்பி வந்த வாசகரின் நேரத்தையும் வீணடிக்கிறதே..

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  2. இந்த ஒருவாரப்பணியில் உங்கள் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள் நிறைய.

    எங்களைப் போன்றோருக்கு உங்களின் அன்பும் ஆசியும் என்றும் தேவை...

    பிரபாகர்.

    ReplyDelete
  3. மிக்க நன்றிங்க.

    எழுதாத என்னையும் பின்னூட்டம் என்ற பெயரில் இங்கே இடம் பெற செய்து விட்டீர்கள்.

    ReplyDelete
  4. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிக கோஷ்டிகள் உள்ள இடம் இணையதளம்..இதைச் சார்ந்தவர்கள் தங்கள் மக்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவர்.மற்றவர்களுக்கு பின்னூட்டம் இட்டால்..அது தங்கள் பிரபலத்தைக் குறைத்துவிடும் என எண்ணுகிறார்களோ என்னவோ..


    சரியாச் சொன்னீங்க....

    ReplyDelete
  5. உங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஏழாம்நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் உங்கள் எழுத்து சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  8. //தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிக கோஷ்டிகள் உள்ள இடம் இணையதளம்.//

    ;;)))

    ReplyDelete
  9. //தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிக கோஷ்டிகள் உள்ள இடம் இணையதளம்..இதைச் சார்ந்தவர்கள் தங்கள் மக்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவர்//

    இந்த இடத்தில் உங்கள் குசும்பு பளிச்சிடுகிறது ஐயா

    ReplyDelete
  10. அருமையான சேவை ஐயா.

    பின்னூட்டமிடும் செயல் போற்றத்தக்கது.

    ReplyDelete
  11. நீங்க சொன்ன லிஸ்ட்ல ஒரு 95% பேர் எனக்கு பின்னூட்டமிட்டதில்லை :(

    நிறைவா முடிச்சியிருக்கீங்க நன்றி!

    ReplyDelete
  12. நிறைய உண்மைகளை பேசியுள்ளீர்கள்?

    ReplyDelete
  13. //மனித மனம் பாராட்டை எதிர்ப்பார்க்கும் ஒன்று. அதே போல நம் எழுத்துக்களை ஒருவர் பாராட்டுபவாரானால்..அதுவே அவர் மேலும், மேலும் எழுதவைக்கும் டானிக்காக ஆகும்.//

    //பின்னூட்டம் இட்டு பதிவர்களை ஊக்குவிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி//

    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
    பாராட்டு தான் என்னை எழுத தூண்டியது.

    நன்றி.

    ReplyDelete
  14. அன்பின் டீவிஆர்

    நல்லதொரு அறிமுகம் - மறுமொழி போடுபவர்களைப் பற்றிய அறிமுகம்

    நான் ஒரு காலத்தில் அதிக மறுமொழி இட்டவன் எனப் பெயர் பெற்றதுண்டு - பின்னூட்டப் பிதாமகன் என என்னை அன்புடன் அழைத்தவர்களும் உண்டு. பிறகி சில காலம் இணையத்தில் குறிப்பாக வலைப்பூக்களில் வருகையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    தற்பொழுது மறுபடியும் மறுமொழிகள் இடுகிறேன்.

    நல்வாழ்த்துகள் டிவிஆர்

    ReplyDelete
  15. நன்றியும் சிறப்பான நிறைவுக்கு பாராட்டும் டி.வி.ஆர்.

    ReplyDelete
  16. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது