07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 23, 2010

நிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)

நேற்றைய 4 வது நாளில் சட்டம் தன் கடமைமையச் செய்து விடும் என்று சொல்லியிருந்தது இத்தனை சீக்கிரம் பலிக்கக்கூடும் என்று கனவிலும் கூட யோசிக்கவில்லை. உண்மைகள் என்பது நிர்வாணம் போன்றது தான். சவுக்கு என்ற தளத்தை தொடர்ந்து வாசிக்கும் போது மனதில் பயத்துடன் ஆச்சரியமும் தந்தது. முந்தைய அரசாங்கத்துடன் போராடிய நக்கீரன் போல இப்போது எவரும் இல்லை. இப்போது சவுக்கு தளத்தில் எழுதி வந்த சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைப்பற்றி முழுமையாக எழுதுவதற்கு இந்த தளம் சரியானது அல்ல. கலைஞர் குறித்து அதிகமாக எழுதி வரும் கிருஷ்ணகுமார் அவர் புரிந்துணர்வை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன். இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு. இடையில் புகுந்து லாவணியை மற்றவர்கள் தொடங்கி விடக்கூடாது என்பதற்காக வலைதளத்தைக் இங்கு என்னால் குறிப்பிடமுடியவில்லை. இதன் நோக்கத்தை அவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் உண்மையான பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். செய்வாரா? இதை தான் நான் தொடக்கத்தில் கலைஞரை புரிந்து கொண்ட வகையில் நான் எழுதிய அய்யாவுக்கு அடி வாங்கும் தமிழன் எழுதுவது?

இடுகையில் எழுதத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எது குறித்தும் கவலைப்படாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதன் முழுமையான அர்த்தமாய் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டுருப்பவர். இவர் வாழும் நாட்டில், பழகும் மனிதர்களுடன் முக்கால்வாசி நேரம் ஆங்கிலத் தில் தான் உரையாட வேண்டும். ஆனால் எழுதும் சிந்தனைகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு ருப்பாரோ என்று யோசிக்கத் தோன்றும். வாழ்த்துகள் செந்தில்.
அறியாத பல தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதுடன் தமிழ் ஆசிரியர் போலவே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சாதித்துக் கொண்டுருக்கும் மணிவாசகம்,
இவரை மறுபடியும் யாராவது கோபப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய இந்த தலைப்பு நாலைந்து நாட்கள் மனதிற்குள் திடும் திடுமென்று அடிக்க வைத்தது. கலாச்சாரம் போன்ற கருமாந்திரங்களை விட முடியாமல் சுமந்து கொண்டுருக்கும் மனம் இந்த தலைப்பில் வந்த வார்த் தைகள் அத்தனையும் நிதர்சனமாய் உரைக்க வைத்தது.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே.................................................... ..



பெண்குழந்தைகளின் முற்போக்குத்தனமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பல முறை தவிப்பதுண்டு. இவர் கொடுத்த சவுக்கடியை பார்த்து விட்டு உண்மையும் இது தானே என்று வீட்டில் படித்து விட்டு வக்காலத்து வாங்கினது தான் இவரின் வெற்றி? இது புலம் பெயர்ந்தவர்களுக்கு உண்டான வலி மட்டுமல்ல. இங்கும் இப்படித்தான் ஆகி விடும் போலிருக்கு???????
ரௌத்திரம் பழகிக் கொண்டுருப்பவர் கண்டதுண்டமாய் ஆக்கிவிட்டார்.
மாலன் சிவசங்கரி தலைமையில் அக்னி என்ற அமைப்பின் சார்பாக சென்னை யில் ஒரு விழா நடந்தது. கலைஞர்(சங்கத்தமிழ்)குமரி அனந்தன்(இடைக்காலத் தமிழ்) வலம்புரி ஜான் (தற்காலிகத்தமிழ்) என்று ஒவ்வொரு வரும் ஒரு மணி நேரம் பேசினார்கள். மயங்கிய அந்த பேச்சுக்குப் பிறகு பாலாசி எழுதிய இந்த தலைப்பு கிறங்க வைத்தது.

இராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் என்று படித்து இருப்போம். முழு விபரங்கள் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அற்புதமான படங்களுடன் எளிமை யான விளக்கத்தையும் தந்துள்ளார். வரலாற்றுத் தகவல்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சுவராஸ்யம் தரக்கூடிய பல விசயங்களும் உண்டு.

இவர் திரைப்பட இயக்குநர். தமிழ் தட்டெழுத்து சிரமத்தை அவரின் ஓய்வற்ற உழைப்பைப் பற்றி பலமுறை பேசியுள்ளார். ஆனால் நிரந்தரமாய வலை உலகத்தில் எழுதுவதை நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவர் கொடுக்கும் ஓரு பின்னோட்டம் என்பது ஓன்பது இடுகைகள் எழுத உத்வேகம் கொடுக்கும். புத்தாண்டு என்பதை இவர் பார்வையில் படித்துப் பாருங்கள். ரொம்பவே வருத்தப்படுகின்றேன் ஷண்முகப்பிரியன் அவர்களே.................

திருப்பூரில் இருந்து எழுதிக் கொண்டுருப்பவர்களுக்கு முக்கிய பாலமாக இருக்கும் வெயிலான் ரமேஷ் போல வலைதளத்தில் தொழில் நுட்ப பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் திரு. வடிவேல் அவர்களின் மற்றொருமொரு முக்கிய மகத்தான சேவை தெரிந்த தெரியாத முக்கியமான தலைப்புகளை. தளங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வது. வாழ்த்துகள் வடிவேல். நீங்கள் Google Buzz ல் பயணம் செய்தால் போதும்?

சில சமயம் இவர் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாக (A) போய்விடும். ஆனா இவர் இப்படி எழுதும் போது எந்த Q வும் வந்து நிற்காது. அப்புறம் Y ன்னு வந்து நிற்பாங்க?

இன்றைய மனிதன் பெற்ற பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா? பயன்படுத்து, தூக்கி எறி? எளிமையான ஆங்கிலத்தை பொறுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்.

2002 முதல் அலுவலக பணியின் காரணமாக சராசரியாக தினந்தோறும் 12 மணி நேரம் கணினியுடன் வாழ வேண்டிய வாழ்க்கை. இப்போது தொழில் வாழ்க்கையில் மடிக்கணினி வந்து கக்கூஸ், குளியல் தவிர கட்டிய பொஞ்சாதி போலவே உடன் இருந்தாலும் வலைதளம் என்பதை தொழில் சார்பாக பார்த்து பழகியவனுக்கு 2009 மே மாதத்தில் தான் தமிழ் வலைஉலகம் அறிமுகமானது. தொடக்கத்தில் நண்பர் கொடுத்த எச்சரிக்கையும் மீறி முதல் இரண்டு மாதங்கள் கண் வலிக்க பார்த்து பார்த்து தேடிய போது இதன் உண்மையான ரூபம் புரிந்தது. நான் உணர்ந்தவற்றை இவரும் புரிந்துள்ளார்.

30 comments:

  1. மிக்க நன்றி அண்ணே.... இந்த வாரம் அருமையான அறிமுகங்கள்... அனைத்தும் புதியவை என்னக்கு...
    இன்னைக்கு பல நெத்தியடி.... மீண்டும் ஒரு நன்றி...

    ReplyDelete
  2. //
    தமிழ் ஆசிரியர் போலவே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சாதித்துக் கொண்டுருக்கும் மணிவாசகம்,
    //
    சரியா சொன்னீங்க.........

    ReplyDelete
  3. அன்பின் ஜோதிஜி

    அருமை அருமை - அறிமுகங்கள் அருமை - ஓவ்வொருவரும் - அவரது படைப்புகளும் நன்கு அறிமுகப் படுத்தப் பட்டிருக்கின்றன

    நல்வாழ்த்துகள் ஜோதிஜி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. ஜோதிஜி

    கட்டுலே சைஸ் லேபில் மாறுன மாதிரி இருக்கு.
    அவசரத்துலே ஒண்ணா சேத்து கட்டிட்ட மாதிரி இருக்கு.

    பழமைபேசிய பத்தி எழுதிட்டு,உடனே
    பிரியா அக்காவை பத்தி எழுதுனத சொல்றேன்.

    பரவாயில்லே,பைனல் இன்ஸ்பெக்சனுக்கு அப்புறம் பொட்டி போடும்போது பாத்துக்கலாம்.

    அடடா உங்களுக்கு இன்னிக்கி வெடிநைட்டு மாதிரி இருக்கு.


    இஃகி!இஃகி!அஃகா

    ReplyDelete
  5. இதுவரை வந்த அஞ்சு இடுகைகளையும் வரிசைப்படுத்தினால் இன்றைய இடுகைதான் முதலிடத்துக்கு வருது.

    இது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  6. சவுக்கு தளம் நேர்மையான தளம்... அரங்கேறும் கைதுகள் மன்னராட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறது.. இந்த அரசுக்கு என் கண்டனங்கள்...

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு முறை அழகாக சொல்லப்பட்ட அறிமுகங்கள். தெரிந்தவர்களை உங்கள் எழுத்துக்களில் வாசிப்பதே ஒரு சுகமான அனுபவம்.

    ReplyDelete
  8. நான் தொடர்ந்து படிக்கும் முகங்களாயினும் தங்கள் பார்வை மேலும் இவர்களின் மேல் கொண்ட மதிப்பை உயர்த்துவதாகவுள்ளது
    .

    ReplyDelete
  9. மறுபடியும் ஒரு கலக்கலான தொகுப்பு குறிப்பாக செந்தில்வேலன் மற்றும் பழமைபேசி உட்பட.

    //முந்தைய அரசாங்கத்துடன் போராடிய நக்கீரன் போல இப்போது எவரும் இல்லை.//

    நல்லவேளை நக்கீரன் இப்போதும் அதே போல் இருக்கிறது என்று நீங்கள் சொல்லவில்லை. :)

    ReplyDelete
  10. ஜோதிஜி.. ஒவ்வொரு நாளும் அறிமுகம் அருமை. விவசாயம் முதல் பல துறைகளைப் பற்றியும் உங்கள் அறிமுகம் நன்று. அதில் எனக்கு இடமளித்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  11. சென்ற ஆட்சி காலத்தில் நக்கீரன் கோபால் மிக நல்லவராக, அநீதிக்கு எதிராக போராடியது போலவும் - இப்போது தான் ஆளுங்கட்சி பிரச்சார பீரங்கியாக மாறியது போல் என்கிற மாதிரியான எண்ணத்தை பலர் கொண்டுள்ளார்கள். அது தவறு. அன்று மிரட்டி காரியம் சாதித்தார். இன்று வாலாட்டி காரியம் சாதிக்கிறார். அவ்வளவே. ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் சவுக்கு கோபால் குறித்து சொன்னதை படித்திருப்பீர்கள் தானே.

    ReplyDelete
  12. ராஜ ராஜ சோழனைப்பற்றிய பதிவு அருமை. படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

    சவுக்கு கைது ?. அந்த தளத்திற்கு சென்று அதைப் பற்றி படிக்க வேண்டும்.

    ReplyDelete
  13. அறிமுகங்களும் அறிமுகப்படுத்தி இருக்கும் விதமும், கலக்கல்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. இன்னுமொரு குரல் - http://bit.ly/9AKLh3

    ReplyDelete
  15. நன்றி பிரபாகரன் வினோ......

    வழிபோக்கனின் கிறுக்கல்கள்
    நல்ல அறிமுகம்........ கணனியை கனவுக்கன்னியாய் பாவிக்கும் சராசரி தகவல் தொழில்நுட்ப இளைஞன்..


    பழமைபேசிய பத்தி எழுதிட்டு,உடனே
    பிரியா அக்காவை பத்தி எழுதுனத சொல்றேன்

    ஏன் இன்றைக்கு இப்படி ஓளிச்சுக்கிட்டு.

    ப்ரியாவை நமக்கு பிடிக்கவில்லை என்றால் நம்மிடம் ஏதோ ஒரு தப்பு உள்ளது என்று அர்த்தம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
    வெளிப்படையான கருத்துக்கள் சில சமயம் வெறியை உருவாக்கும் அல்லது நம்முடைய வெட்டித்தனத்தை சுட்டிக்காட்டும்...........

    நன்றி சீனா

    ReplyDelete
  16. ஆசிரியயை கொடுத்த ஆசியே போதும்........

    இனிமேல் மொத்த வலைதள உலகமும் எளிதாக பிரபலமாகிவிடும் செந்தில். சவுக்கு என்று தெரியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் இன்னும் பத்து நாட்களுக்குள் உலகம் முழுக்க தெரிந்து விடும்.

    நன்று குரூஜீ

    நல்லவேளை நக்கீரன் இப்போதும் அதே போல் இருக்கிறது என்று நீங்கள் சொல்லவில்லை. :

    அன்று மிரட்டி காரியம் சாதித்தார். இன்று வாலாட்டி காரியம் சாதிக்கிறார்

    கண்ணன் ரமேஷ் இது குறித்து இல்லத்தில் உரையாடுவோம்........ இன்னும் தேடல் இது குறித்து இருக்கிறது?

    ReplyDelete
  17. http://blog.balabharathi.net/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/

    ReplyDelete
  18. நன்றி ரமேஷ் நேற்று தான் தல அவர்களுடன் பாலபாரதி பற்றி பேசினேன். மேலே உள்ள இணைப்பை விருப்புவர்கள் வெட்டி ஒட்டி பார்க்கவும் படிக்கவும்

    ReplyDelete
  19. செந்திலுக்கும் குணாவுக்கு நன்றி

    சித்ரா உங்கள் ஊக்க வார்த்தைகள் மற்றும் வருகைக்கு நன்றி......

    பின்னோக்கி உங்கள் வாசிப்பு அனுபவம் நான் தெரிந்ததே......

    ReplyDelete
  20. எழுத்து எல்லாமே அனுபவம், அல்லது ஆசை, கற்பனையின் அடிப்படையில் தான் என்கிறபோது, தலித் இலக்கியம் என்பது மட்டும் தனித்த அனுபவமாகிப் போனதெப்படி?

    பெயரென்ன என்பதைச் சொல்லாமலேயே நீங்கள் சுட்டியிருக்கும் பதிவுக்கும் அந்த அறிமுக வார்த்தைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையே?

    ReplyDelete
  21. எழுத்து என்பது கற்பனையினால் வருவது உண்மை என்றாலும் பாதிப்படைந்தவர்கள் படைக்கும் படைப்பிறக்கும் பார்த்தவர்கள் உருவாக்கும் புரிதலுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.

    சுட்டப்பட்ட தளம் என்பது குறியீடு. எங்களை எதிர்த்தால் என்னைப் பற்றி எழுதினால் என்ன ஆவாய்? இது தொடக்கம். இதுவே தொடருமா எதிர்காலத்தில்?

    இவர் சரியான வாரிசு என்பவர்களும், இவர் சாதித்தார் என்றாவர்களுக்கும் புரியும்?

    குறையில்லாத மனிதன் இல்லை.
    குறையுடன் நிறைகளையும் படைத்தால் கஷ்டப்பட்டு அடித்த அந்த கைவிரல்களுக்காவது புண்ணியம் சேரட்டும்.

    ReplyDelete
  22. அறிந்திருந்தாலும் நீங்கள் அவர்களின் ஆளுமை பற்றிச் சொல்லும்போது இன்னும் அவர்களின் பதிவுகளை வாசிக்கத் தூண்டுகிறது.
    நன்றி ஜோதிஜி.

    ReplyDelete
  23. மீ த சைலண்ட் ஃபார் டுடே!!

    வாழ்க டமிள்

    ReplyDelete
  24. சண்முகப்ரியன் சார்.. எழுதாம இருக்கறது நிச்சயம் பெரிய வருத்தம்தான்.

    ஆனா.. ரொம்ப பிஸியா இருக்காருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  25. இது கொஞ்சம் கூட நாயமில்ல தல

    ReplyDelete
  26. ஓ... ரொம்ப நன்றி ஜோதிஜி..!.. ரொம்ப சந்தோஷம்..

    ReplyDelete
  27. ||கட்டுலே சைஸ் லேபில் மாறுன மாதிரி இருக்கு.
    அவசரத்துலே ஒண்ணா சேத்து கட்டிட்ட மாதிரி இருக்கு.

    பழமைபேசிய பத்தி எழுதிட்டு,உடனே
    பிரியா அக்காவை பத்தி எழுதுனத சொல்றேன்.||

    தப்பா சொன்ன மாதிரித் தெரியல... வேற வேற category ன்னு சொல்ல வர்றாங்கன்னு நினைக்கறேன்...

    ReplyDelete
  28. வாங்க ப்ரியா

    சில விசயங்களை நாம் கடந்து போக வேண்டும்.

    சில விசயங்கள் நம்மை கடக்க வைத்து விடும்..........

    உலகில் எல்லோருமே cat.தான்.

    செத்தா பொணம்.

    ReplyDelete
  29. பழமை பேசி அவர்களின் பதிவுகளை அதிகம் படிப்பவன்.
    அவர் தமிழ் ஆசிரியர்தான். இன்னொரு வலை உலக வாத்தியார் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது