பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)
➦➠ by:
ஜோதிஜி
எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு வலைதளத்தை தொடங்கி விடுகிறீர்கள். சில தலைப்புகள் பரவலாக வாசிக்கவும் செய்ய அடுத்து என்ன தோன்றும். எப்படி மற்றவர்களைப் போல நாமும் பிரபலம் ஆவது என்று நகரத் தொடங்கி கண்டதையும் எழுத நினைத்தால் என்ன ஆகும்? சில சமயம் சட்டம் தன் கடமையைத் செய்து விடக்கூடும். இது போல் வாய்ப்பு இருக்கிறதா? என்று யோசிப்பதை விட எழுதும் போது எல்லாவிசயங்களையும் கவனத்தில் கொண்டு எழுதினால் சிறப்பு.
வலைதளத்தில் எழுதுபவர்கள் சங்கம் என்று ஒவ்வொரு முறையும் கிளம்பும் போது உருவாகும் நிகழ்வுகள் ஏதோ ஒரு இடுகைக்குத் தான் உதவியாய் இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்களுக்கு கண்ணாவின் உழைப்பு தெரியும்? நீங்கள் இந்த ஒரு தளத்தில் நுழைந்தாலே போதும். தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தான் உங்களுடையது. அந்த அளவிற்கு ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து அசாத்தியமான பணியை உருவாக்கி சாதித்து காட்டியுள்ளார். .
தமிழ்நாட்டில் இந்தியாவில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர்கள் வலை தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார்கள் என்பது இவர் சொல்லும் கணக்கைப் பாருங்கள். மதிப்புக்கு உரியவர் எனக்கு தெரிவித்த கணக்கை விட கண் மண் தெரியாமல் தோழர்களின் தமிழ் ஆர்வம் மேலேறிக் கொண்டுருக்கிறது. ஏதோ ஒரு வழியில் கூகுள் இன்று தமிழால் மிதந்து கொண்டுருப்பதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. இதில் இவர் சேர்கக மறந்த திருப்பூர்.
இந்தியாவில் உள்ள அரசியல் வியாதிகளுக்கு இந்தியா என்பது விவசாய நாடு என்பதே ஏறக்குறைய மறந்து விட்டது. வலைதளத்திலும் விவசாயம் குறித்து எழுதுபவரும் மிகக் குறைவு. இந்த தளத்தைப் பாருங்கள். வீட்டுக்காவது உதவும்.
இவர் சீயான் விக்ரம் கந்தசாமி அல்ல. கோயமுத்தூர் கந்தசாமி. வயது 75. மற்றொரு சிறப்பு ஓய்வு பெற்ற ஆசிரியரும் விஞ்ஞானியும் கூட. இவர் பார்வையில் வலைதள உலகம் எப்படி இருக்கிறது தெரியுமா?
" தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப் பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன். 75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது ! "
நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பார்கள். அறுபது வயது என்றால் நம்முடைய உடம்பே நமக்கு எதிரியாய் தெரியும். ஆனால் இவரின் வலை தளத்தில் உள்ளே நுழைந்து மொத்த தலைப்புகளையும் பாருங்கள்.
நக்கல்,நையாண்டி, கலகல என்று எதற்கும் பஞ்சம் இல்லை. முடிந்த வரைக் கும் கிராமம் முதல், குடும்பம் வரைக்கும் அத்தனை தலைப்புகளிலும் சும்மா புகுந்து விளையாடியுள்ளார். அத்துடன் வயது என்பது ஒரு குறையே அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். எத்தனை அறிவுரை சொன்ன போதும் அவரையும் பிரபல்யம் என்ற பலாப்பழம் ஆட்டிப்படைக்க ஆளைவிட்டால் போதும் என்று ஜகா வாங்கிவிட்டார்.
பிரபல்ய தல பாலாவுக்கு இதை சமர்பிக்கின்றேன்.
பிரபல்ய தல பாலாவுக்கு இதை சமர்பிக்கின்றேன்.
|
|
அன்பின் ஜோதிஜி
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை - அத்தனையும் அருமை. வாசிப்பவர்கள் சென்று பார்த்து மகிழட்டும்.
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா
வணக்கமுங்க..வித்தியாசமான அறிமுகங்கள்.. ங்க.
ReplyDeleteஅருமையான அறிமுகம். அதிலும் வேளாண்மை பற்றிய அறிமுகம் மனம் கவர்ந்தது.
ReplyDeleteநீங்கள் மிகபெரிய வாசிப்பாளராக உள்ளீர்கள். வியக்கவைகிறது உங்கள் வாசிப்பு.
தமிழ்தளங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் தளம் அருமை. ஏற்கனவே கண்டு உள்ளேன். அருமை. :-)
அருமையான அறிமுகம். அதிலும் வேளாண்மை பற்றிய அறிமுகம் மனம் கவர்ந்தது.
ReplyDeleteநீங்கள் மிகபெரிய வாசிப்பாளராக உள்ளீர்கள். வியக்கவைகிறது உங்கள் வாசிப்பு.
தமிழ்தளங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் தளம் அருமை. ஏற்கனவே கண்டு உள்ளேன். அருமை. :-)
ஒவ்வொரு நாளும் கலக்கறீங்க. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் வலைப்பதிவின் நட்சத்திரங்கள். அருமை.. அருமை..
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி,ஜோதிஜி,நாளும் அன்பில் தொடர்வோம்.
ReplyDeletearumai nandri
ReplyDelete//நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி//
ReplyDeleteபாராட்டுதலுக்கான வார்த்தை..
நாற்பது வயதுக்கு மேலாவது நமக்கு நன்றி உணர்வு குணமாக மாறவேண்டும்.:))
இந்த ஒரு வார வலைச்சர பணிக்காக ஒரு மாதமாவது உழைத்திருக்க வேண்டும் என்பதை உங்கள் மெனக்கெடல் சொல்கிறது. ஒவ்வொரு அறிமுகங்களும் போற்றத்தக்க அறிமுகங்கள்.
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம்..!!
ReplyDeleteவியப்பூட்டும் அறிமுகங்கள்
ReplyDeleteநன்றிங்க
சூப்பர்!!!!!
ReplyDeleteஎங்கூரு பெங்குவின்களின் ஆட்டம்:-)))))
ஆமாம். இந்தத் தல எந்தத் தல?
பாலபாரதியா?
(தலை விவரத்தில் நான் பிந்தங்கியிருக்கேன்)
நன்றி சீனா
ReplyDeleteதாராபுரத்தான் ஐயாவுக்கு வணக்கம்.
கார்த்திக்
தேடலைத் தொடர்வோம்
குருஜி நீங்க கவனிச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும். வண்டியை கிளப்பியாச்சா?
ஆசிரியர் எல்கே வருக வணக்கம்.
சிவா நான் முயற்சிக்க வேண்டும் இனிமேலாவது. நன்றி.
ரமேஷ் தொடர் வருகைக்கு நன்றி. இல்லை நண்பர்கள் பலரின் ஒத்துழைப்பே இதற்கு காரணம்.
ஜெய்லானி மற்றும் சுடுதண்ணி சிஷ்யருக்கும் நன்றி.
ஆமாம். இந்தத் தல எந்தத் தல?
ReplyDeleteபோச்சு. எல்லாமே போச்சு. ராத்திரி வந்து உங்களை பாடு படுத்தப்போறாரு எங்கள் தலைவன் மன்னாதி மன்னன் மனிதர் குல வேந்தன் ஹாலிவுட் பாலா?
தல நீங்க கோவிச்சுக்காதீங்க. இவங்களுக்கெல்லாம் உங்க அருமை பெருமையெல்லாம் தெரியாது?
ரொமப அருமையான நான்காம் தின அறிமுகங்கள்,கலக்குங்கோ
ReplyDeleteபாலா ஏன் இரவு வரனும்,இன்னும் 2மணி நேரத்தில் கூட வருவார்.
ReplyDeleteபாலாவுக்கு ஏன் பென்குவின் காணொளி?இதில் என்ன உள்குத்து,இதை வனமையாய் கண்டித்த்து வெளிநடப்பும் செய்கிறேன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை...
ReplyDeleteகண்ணாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது... இன்றுதான் காண்கிறேன்... மிக்க நன்றி..
ReplyDeleteமற்ற தளங்களுக்கும் சென்று ஒவ்வொன்றாக பார்க்கிறேன். நல்ல அறிமுகங்கள் உங்கள்மூலம் வாய்க்கப்பெற்றது...
விவசாயம் பற்றிய பதிவு பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகப்படுத்தி இருக்கும் விதமும் நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!
ReplyDeleteஅன்பார்ந்த ஜோதிகணேசன்,
ReplyDeleteஏற்கனவே எனது பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல பொறுமையான வாசிப்பு, அருமையான கணிப்பு ஆகியவற்றினால் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திவருகிறீர்கள், நன்றி, அதில் ஒருவரான 75 வயது இளைஞர் (திரு கந்தசாமி), குறுகிய காலத்தில் பல உயரங்களை எட்டிப்பிடித்துள்ள (அனுபவத்தில்) முதியவர் (40 வயது ?)(பத்ரி) ஆகியோரின் பதிவுகள் வியப்பு மேலிடவைக்கிறது. பெரியவரின் மறுமொழிகளில் ஜாலியான இளமைத் துள்ளல். அவரின் வலைப்பதிவு இலக்கணங்கள், எதிர்பார்ப்புகள், யதார்த்தங்கள் அனைவருக்கும் பொதுவானது.ஓரிரு வருடங்களுக்கு முன்னாலேயே இந்த (மாய) வலைக்குள் நுழையாமல் இருந்துவிட்டோமே என்கிற ஏக்கம் எழுகிறது. இன்றைய மாணவர்கள் கல்வியைத் தவிர இதர புத்தகங்களே தொடாமல் முட்டாள் பெட்டியான தொ(ல்)லைகாட்சி பெட்டிக்குள் முடங்கியிருப்பதை வலை தளங்கள் மாற்ற வேண்டும். மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. திரு பத்ரி அவர்கள் எழுத்தாளர் அவரது ஒரு பதிவில் சொல்வது போல் அச்சிட்ட புத்தகங்களிலிருந்து மின்பதிவு புத்தகங்கள் நோக்கி சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறியே - சித்திரகுப்தன்
ஒவ்வொரு நாளும் புது,புது தகவல்கள் தருகிறீர்கள். அத்தனையும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி.
நட்புடன்
அபுல்.
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅறிமுகப் படுத்தி இருக்கும் விதமும் அறீமுகங்களும் அருமை ஜோதிஜி..
ReplyDeleteரொம்ப நல்ல பகிர்வு மற்றும் அறிமுகங்கள்..
ReplyDeleteதேனம்மை வேலுஜி,அபுல்பஸார், கண்ணகி, பின்னோக்கி வருக
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.
கார்த்திக் தலய பத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்களே ராத்திரி வருவாரா?
பாலாசி உங்கள் தேடலுக்கு உதவிய வகையில் சந்தோஷமாக உள்ளது.
தோழரே பத்ரி பதிவும் கந்தசாமி ஐயா பதிவும் உங்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி.
பத்ரி பற்றி மேலும் ஒரு குறிப்பு. கல்லூரி வரைக்கும் அவர் தொடக்கத்தில் பணிபுரிந்து அலுவலகம் வரைக்கும் பெரும்பாலும் ஆங்கிலமே பிரதானமாக இருந்து இருக்க வேண்டும். அவர் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் எப்படி?
புது புது அறிமுகங்கள் ஜோதிஜி...அதிசயித்துக்கொண்டே போகிறீர்கள்.
ReplyDeleteசீனா ஐயாவிடம் சொல்லி தொடர்ந்து அடுத்த வாரமும் வலைச்சரத்தில் பயணியுங்கள்.4 நாள் போய்விட்டதே என்று ஆதங்கமாய் இருக்கிறது!
சித்ரா உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.
ReplyDeleteமறுபடியும் அ(றி)ரியமுகங்கள் அருமை.
ReplyDeleteஅத்தனையும் சொந்த தயாரிப்பு.
எதுவும் காதர் பேட்டையில் பொறுக்கி
எடுத்து வரப்பட்டவை அல்ல.
பெருசு
ReplyDeleteபோட்டு தாக்கியாச்சு போயாச்சு?????????????????
எங்கியும் போல
ReplyDeleteஇன்னிக்கு வெடிநைட்டு
அங்கங்கே காத்தாடிக்கிட்டுருக்கு நீங்க வேற வாடி நைட்டுக்குங்றீங்க.........
ReplyDeleteபோயம்பாளையம் பிரிவுக்கு வந்தீங்ன்னா தெரிஞ்சு போகும்
ReplyDeleteபாலத்தில் இருந்து ஆரம்பிக்குது............ அப்புறம் மேட்டுல வந்து நின்னுக்கிட்டு மேட்டுவாய தடவிக்கிட்டு தான் நிக்கனும்................
ReplyDelete//ஆமாம். இந்தத் தல எந்தத் தல?
ReplyDeleteபாலபாரதியா? ///
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
கபாலி எட்றா வண்டிய!!! இன்னிக்கு என் கீபோர்டு ரத்தம் பார்க்காம விடாதுலே!
மொதல்ல பாலபாரதி யாருன்னு கண்டுபுடிச்சி அவரை பொலி போட்டுட்டுத்தான் மறுவேலை.
இந்த தமிழ் வலி ‘உலகத்தில்’ எப்பேர் பட்ட ‘பிரபலப் பதிவர்’ நானு. என்னை இப்படி சொல்லிட்டீங்களே!!!
ReplyDeleteஇது வெளிநாட்டுச் சதி!!
ஏனுங்கோ......... தல கொஞ்சம் பொறுமை..............
ReplyDeleteபாலபாரதிங்றவரு இன்றைக்கு உள்ள பல பேர்களை வளர்த்து விட்டவரு...............
http://blog.balabharathi.net/
இது சரிதானா வெயிலான்?
//கார்த்திக் தலய பத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்களே ராத்திரி வருவாரா?//
ReplyDeleteய்ய்யாரப் பார்த்து என்ன சொல்லிட்டீங்க?! எனக்கு மானம்,வெக்கம் எல்லாம் இருக்குன்னு!! ச்சே!! :( :(
==
இந்த வாரம் வலைச்சரத்துக்கு ரொம்ப மோசமான நேரம். எவ்ளோ அருமையான பதிவர்களை நீங்க அறிமுகம் பண்ணினாலும்.. என் அழிச்சாட்டியம் நிக்கறதில்லை.
மீதி மூணு நாள் நான் கம்முன்னு இருக்கப் போறேன் பாருங்க!!
மூச்ச்ச்!!! :)
தல... எப்படி இவ்ளோ பேரை கண்டுபுடிச்சி படிக்கறீங்க?? இதுக்கு எப்படி நேரம் கிடைக்குது??
ReplyDeleteஇப்பல்லாம்.. என்னோட மொக்கை கமெண்ட்ஸை கூட டைப் பண்ண நேரம் கிடைக்கறதில்லை. நீங்க... தெய்வம்!!
//பாலபாரதிங்றவரு இன்றைக்கு உள்ள பல பேர்களை வளர்த்து விட்டவரு...............
ReplyDelete//
என் கமெண்ட்ஸை எல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு பதில் போடுறீங்களே தெய்வமே!!!
எனக்கு பாலபாரதியை தெரியும் தல!
அட நீங்க வேற
ReplyDeleteஐயா கேட்ட போதே இதுக்கான வேலை ஆரம்பிச்சு இன்னமும் பள்ளிக்கூட பரிட்சை மாதிரி மனசு தடதடன்னு அடிக்கிற சத்தம் உங்களுக்கு கேட்குதா?
ஏழெட்டு பேரு எனக்காக உழைச்சுருக்காங்க. நான் சும்மா டம்மி.......
தேர்ந்தெடுத்தது தான் என்னோட வேலை...
உங்ககிட்டேயிருந்தே பாராட்டு வாங்கீட்டேன்.
ஹையா.............
நல்லது தல.
ReplyDeleteஇதுல என்ன சீரியஸ்............
பின்னோட்டம்ங்ற பலரும் மின் அஞ்சல் வாயிலாக படிச்சுக்கிட்டு ருக்காங்கன்னு சமீபத்தில தான புரிஞ்சுட்டுக்கிட்டேன். அதுவும் ஷங்கர் கொடுத்த ரணகளம் நீங்க கொடுத்த பதில் இங்குள்ள வாழ்க்கையை கொஞ்சம் எளிமையாக்குது.
திருப்பூர் வாழ்க்கை எப்போதுமே சீரியஸ். எழுதிய பல தலைப்புகளும் அப்படித்தான் போய் விட்டது.
ஈழ ரகஸ்ய ஒப்பந்தங்கள் பழைய தலைப்பு தமிழிஷ்ல் இணைக்காம இருந்தத பார்த்து இன்றைக்கு இணைத்து விட்டேன். வந்து மக்கள் ரணகளபடுத்தி விட்டாங்க.
யாருக்கோ ஒரு தேடல் இருக்கு. இதுனால இந்த எழுத்து பொழப்பு ஓடுது.
உங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்.
அன்பு நண்பரே,
ReplyDeleteவேளாண் செய்திகள் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
நண்பரே.... எல்லாம் நல்ல அறிமுகங்கள். நீங்கள் அறிமுகப்ப்டுத்தும் விதமு அருமை.
ReplyDeleteஅன்புள்ள ஜோதிஜி,
ReplyDeleteநான் 15 நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டு நேற்றுத்தான் ஊர் திரும்பினேன். இப்போதுதான் கம்ப்யூட்டரைத் திறக்கிறேன். பார்த்தால் இன்ப அதிர்ச்சி.
நீங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்.
நான் ஏதோ பொழுது போவதற்காக எழுதும் என் எழுத்துக்களையும் என்னையும் இவ்வளவு தூரம் ஏற்றி வைத்ததற்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை?
வெறும் நன்றி என்ற வார்த்தை என் முழு உணர்வுகளையும் பிரதிபலிக்கப் போதாது. என்றாலும் உலக நடைமுறையின்படி "நன்றிகள் பல" என்று கூறுகிறேன்.
விரைவில் சந்திப்போம்.