வலைச்சர ஞாயிறு - தொழில் நுட்பம் மற்றும் வலைத்தளங்கள்
➦➠ by:
கே.ஆர்.பி.செந்தில்
விடை பெறும்போது
சற்றே நின்று
மீண்டும் தொடர்கிற
பேச்சென நான்
மீண்டும் வருவேன்
இவ்வலைச்சரத்தில்
பின்னூட்டங்களாய்...
இந்த ஆறு நாட்களும் எனக்கு மிகுந்த ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
நிறைய பதிவர்களை என்னால் அறிமுகம் செய்ய இயலவில்லை.. மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் கூடுமானவரை புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன்.
தொழில் நுட்பம் பற்றி வலையுலகில் அதிகம் சைபர் சிம்மனும், வேலனும் சொல்லிவருகிறார்கள். மேலும் நிறைய நண்பர்கள் அடிக்கடி சொல்லிவருகிறார்கள்.
சுதந்திர இலவச மென்பொருள் எனும் வலைப்பக்கம் ஏராள தகவல்களோடு நாற்பது இணையதளங்களின் இணைப்புகளும், கொடுத்து இருக்கிறார்கள்.மிகவும் உபயோகமான வலைப்பக்கம்..
தமிழ் தோட்டம் எனும் வலைப்பக்கம் தமிழ் எழுத்துருக்களின் தரவிறக்கிகொள்ளும் இணைய இணைப்புகளோடு, தமிழில் உள்ள சில வலைபக்கங்களையும் தொகுத்து உள்ளது.
மேலும் சில புதிய பதிவர்கள்..
விந்தை மனிதன் ராஜாராமின் விரகதாபம் எத்தனை உருக்கமானது..
எண்திசை சாமிதுரை கோவணத்தை பறிகொடுத்தவர்களின் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்..
தனிக்காட்டு ராஜாவின் பதிவுகள் அடங்க மறுக்கும் அத்து மீறல் ..
இணையதளங்கள் :
சிக்கிமுக்கி சமூக கலை இலக்கிய இதழ் கடந்த ஒன்பது மாதங்களாக வந்து கொண்டிருக்கும் இணையதளம். கதை, கட்டுரை ,கவிதை நேர்காணல் என அனைத்தும் எழுதலாம். உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..
தடாகம் வலைத்தளம் இதில் பன்முக பதிவுகளோடு உலக சினிமாவை பற்றியும் பேசலாம். இதற்கும் உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..
நட்பு வலைத்தளம் தமிழ் சமூகத்தின் இணைய முகம் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது.. இதற்கும் உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..
தமிழ்குறிஞ்சி இணையத்தளம் இதுவும் ஒரு பன்முக தளம். உங்கள் படைப்புகளை உடனுக்குடன் வெளியிட இது ஒரு நல்ல இணைய தளம்.
இந்த வாரம் முழுதும் எனக்கு மிகவும் திருப்தியான வாரமாக அமைந்திருக்கிறது.. நான் நிறைய பதிவர்களை அவர்களின் பதிவுகள் அனைத்தையும் முடிந்தவரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
இந்த வாய்ப்பினை வழங்கிய சீனா ஐயாவிற்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ..
நன்றி ... வணக்கம் ....
|
|
மிக நேர்த்தியான வாரமாக அமைத்திருந்தீர்கள். அழகான பகுப்புகள்.
ReplyDeleteஅழகான அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
ஒருவாரத்தையும் சிறப்பான நடையில் கொண்டுபோனீங்க. பின்னூட்டம்போடலைனாலும், வந்து படிச்சிட்டு இருந்தேன்.
ReplyDeleteஇந்த வாரம் வித்தியாசமா புதுபுது பதிவர்களின் அறிமுகம் அருமையாக இருந்தது செந்தில் . மொத்ததில சூப்பர் ...வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநிறைய புதிய பதிவர்களின் மனதைத் தொட்டிருப்பிர்கள். அவர்களின் சார்பில் தங்களுக்கு என் நன்றி .
ReplyDeleteதிருப்தியான வாரம் பாஸ்
ReplyDeleteநிறைவுடன் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இங்கும் எப்பவும் உங்கள் தளத்திலும் சந்திப்போம்
அன்பின் செந்தில்
ReplyDeleteஅழகான அருமையான வாரம் - நல்ல அறிமுகங்கள் - தொகுத்த விதம் நன்று
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
பல புதிய அறிமுகங்கள் கிடைக்கப்பெற்றேன். பயனுள்ள வாரம். நன்றியும் வாழ்த்துக்களும்.......
ReplyDeleteதிருப்தியான வாரம்..
ReplyDelete...வாழ்த்துக்கள் ...
அழகான பகுப்புகள்.
ReplyDeleteஅழகான அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
ReplyDeletevaalthukkal krps
ReplyDeleteஅன்பின் செந்தில் சார்....
ReplyDeleteஆரவாரமில்லாமல்......சட சடவென கொட்டும் மழை போல.....
விஷயங்களை கொட்டி...புதியவர்கள் எங்களுக்கு ஊகத்தை தந்திருக்கிறீர்கள்...
வெட்டி அரட்டைகளை தவித்து பயனுள்ள விஷயங்களை எழுத முயற்சிக்கிறோம்....
அனைத்து புதிய பதிவர்கள் சார்பாக...உங்களுக்கும் வலைச்சர குழுவிற்கும்...சீனா சாருக்கும்
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
அன்புடன் கபிலன்...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் செந்தில் அண்ணே..
ReplyDeleteஅண்ணே இப்படி புசுக்குன்னு கிளம்பிட்டீங்க. இந்த வலைச்சரமே உங்களை நம்பித்தான இருக்கு
ReplyDeleteஎன்ன ஒரு வாரம் தானா,சீனா ஐயா இன்னும் ஒரு வாரம் அண்ணனே இருக்கலாமே :)
ReplyDeleteதிருப்திதான் இருந்தாலும் ஒரு ஆசை :)
அருமையான வாரம்
ReplyDeleteபதிவர்களோடு இணைய தளங்களையும் அறிமுகம் செய்திருப்பது நன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள் செந்தில்.
செந்தில் அண்ணனுக்கு வாய்ப்பு கொடுத்த
ReplyDeleteசீனா அய்யா அவர்களுக்கு நன்றி...
//தனிக்காட்டு ராஜாவின் பதிவுகள் அடங்க மறுக்கும் அத்து மீறல் ..//
ReplyDeleteநன்றி தல......
வாழ்த்துக்கள்.நீங்கள் எழுதும் விதம் அருமை.
ReplyDeleteபொறுப்பான வாரம் உங்களுடையதாய் இருந்தது செந்தில்.இன்னும் இன்னும் தொடருங்கள் உங்கள் தளத்தில்.வாழ்த்துகள் நண்பரே.
ReplyDelete