பா. ராகவன் அவர்களுக்கு (ஜோதிஜி வலைச்சரம் முதல் நாள்)
➦➠ by:
ஜோதிஜி
இந்த வலை உலகம் எனக்கு அறிமுகமானதும், எழுதத் தொடங்கியும் ஒரு வருடம் முடிந்துள்ளது. வேர்ட் ப்ரஸ் ல் தொடங்கிய பயணம் நல்ல நண்பர்களால் இப்போது இடுகை வாயிலாக எழுதிக் கொண்டுருக்கின்றேன். 210 தலைப்புகள். எல்லாத் துறை சார்ந்த அத்தனை விசயங்களையும் முடிந்த வரைக்கும் முயற்சித்துள்ளேன். எழுதும் இந்த தலைப்பு வரைக்கும் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் உரையாடும் நண்பர்கள் வாயிலாக நான் எழுதும் எழுத்தின் பலவீனங்களை உணர்ந்தபடி மாறுதல் செய்தபடியே இருக்கின்றேன். இன்னும் நிறைய மாறுதல்களை உருவாக்க வேண்டும்.
வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கோவையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் முதன் முதலாக செப்டம்பர் 11 2009 அன்று தேவியர் இல்லத்தை அறிமுகம் செய்த போது அந்த அதிகாலை வேளையில் தொடர்ச்சியாக என்னுடைய தளத்திற்கு வந்து கொண்டுருந்தவர்களைப் பார்த்து தான் வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனது.
என்னுடன் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் பின்னோக்கி, கீதப்ப்ரியன் (கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்). இப்போது மூவருமே ஒரே வட்டத்தில் இருக்கின்றோம்.
செந்தில் என்று நான்கு திசைகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளேன். நான்கு பிரம்மாக்களுக்கும் இந்த வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கும் நன்றி.
ஆகஸ்ட் 30 2009 அன்று தான் ஒரு தொடர் போல் வேர்ட்ப்ரஸ் மூலம் இந்திய சுதந்திரத்தைப் பற்றி எழுதியது நான் புரிந்து கொண்ட சின்னச் சின்ன குறிப்பு கள். அதற்கு முன்னால் வலைதளத்தில் தொடர் போல் எவரும் பகிர்ந்து உள்ளார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது அதிக தளங்கள் தொடர்களாக எழுதிக் கொண்டுருக்கிறார்கள்.
1992 முதல் திருப்பூர் வாழ்க்கையில் இப்போது ஆய்த்த ஆடை ஏற்றுமதி யாளராகவும் தொழில் சார்ந்த பணிகளுக்கிடையே இந்த எழுத்துப்பணியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தில் பயணித்த மாநிலங்கள், நாடுகள், வாசித்த புத்தகங்கள், பார்த்த சமூகம் மூலம் பெற்ற அனுபவங்கள் எழுத உதவியாய் இருந்தது.
அமெரிக்காவைப் பற்றி திருப்பூரில் நான் பார்த்த கேட்ட பாதித்த பல விசயங் களின் காரணமாக அந்த நாட்டைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இடைவிடாத தேடல் இருந்து கொண்டேயிருந்தது. ஆறாவது படிக்கும் காலத்தில் ஆரம்பித்த வாசிப்பு அனுபவம் திருப்பூருக்குள் வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நின்று விட்டது. பத்திரிக்கைகள், வார இதழ்களின் வாசிப்பு மட்டுமே மிச்சமாய் ஒட்டியிருந்தது. புத்தக வாசிப்பு மீண்டும் ஒரு அழகான ராட்ச ஆளுமை மூலம் தொடர்ந்தது. அன்று முதல் நடிகர் அர்ஜுன் ரசனையாய் காதலித்து பாடிய அழகான ராட்சஸியான மனிஷா கொய்ரா லாவைப் போலவே நானும் அவரின் எழுத்துக்களை இன்று வரை விரும்பி வாசித்து கற்றுக் கொண்டுருக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக புத்தகக்கடையில் பார்த்த அந்த டாலர் தேசம் என்ற கனமான புத்தகத்தை சராசரி வாசகன் யோசிக்கும் விலைகொடுத்து வாங்கி வந்தேன். அடுத்த இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் பா.ராகவன் உருவாக்கிய மாயமும், வசீகரமும், வார்த்தைகளின் ஆளுமையும் நம்பகத்தன்மையும் என்னை கிறங்கடித்து மதி மயக்கியது.
தொடர்ந்து அவரின் பல புத்தகங்களை வாங்கி வந்து படிக்க படிக்க பலவற்றை யும் உணர்ந்து கொண்டேன். முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை தாண்டி வந்த பாதையில் இறுதியில் வந்து நின்ற பாலகுமாரன், சுஜாதா மூலம் உணராத " நம்மாலும் எழுத முடியும் " என்ற நம்பிக்கை என்பது பா. ராகவன் புத்தகங்கள் தான் கொடுத்தது.
2008 இறுதியில் ஏற்பட்ட தொழில் வாழ்க்கை சூறாவளி பல பாடங்களை கற்றுக் கொடுக்க என்னை மீட்டெடுக்க வேண்டும் என்று எழுதிப் பார்க்கலாம் என்று எழுதத் தொடங்கினேன். எழுதிய, எழுதிக்கொண்டுருக்கும், எழுதப்போகும் அத்தனை எழுத்துக்களையும் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
பல முறை மின் அஞ்சல் வாயிலாகவும், சமீபத்தில் கலைஞர் கோவையில் நடத்திய பொருட்காட்சிக்கு வந்து இருந்த போதும் தொலைபேசியில் பேச முடிந்தது. தலையில் கீரிடம் எதையும் சுமக்காத பா.ராகவன் அவர்கள் இன்றும் பலரையும் நேரிடையாக மறைமுகமாக வளர்த்துக் கொண்டுருக்கிறார்.
" திருப்பூரில் வலைதளத்தில் எழுதிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களை யும் சந்திக்க ஆசை " என்று அவர் விடுத்த அழைப்பைக் கூட ஏற்றுச் சென்று அவரை சந்திக்க முடியவில்லை. தொழில் நகரம் மொத்த வாழ்க்கையையும் தன்னுடைய பிடிமானத்தில் தான் வைத்துள்ளது. இந்த வலைச்சர ஆசிரியப் பணியின் முதல் நாளில் திரு. பாரா அவர்களுக்கு என்னுடைய குரு வணக்கம்.
வாழ்வில் தோன்றும் பல நெருக்கடிகள் தான் நம்மை நமக்கே அறிமுகம் செய்கிறது. ஆனால் உன்னிடம் இந்த திறமை உள்ளது என்று எனக்கு அடை யாளம் காட்டியது பா.ராகவன் எழுதிய பல புத்தகங்களே. வணிக நோக்கம் தேவையில்லாமல் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் பாரா வின் வலைதளம் இது.
இதுவரையிலும் இந்த வலைசரத்தில் ஆசிரியர்களாக வந்தவர்கள் வலை தளத்தில் எழுதிக் கொண்டுருப்பவர்களை அறிமுகம் செய்தனர். நான் வாசிக்கும் அத்தனை பேர்களும் என்னை வளர்த்த பலரும் இதில் ஆசிரியர் களாக வந்து உள்ளனர். என்னுடைய இந்த ஒரு வார பணியில் நான் பார்த்த, என்னை பாதித்த தளங்களை முழுமையான அந்த தளம் குறித்து விமர்சனப் பார்வையின் மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
சொந்த விஷயங்களைப் பற்றி சுவையாக எழுதக் கற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்ட நகர்வாக சமூகம் குறித்து சிந்திக்கத் தொடங்கி னால் மட்டுமே அவர்களின் தனிப்பட்ட திறமையை பலரும் உணர முடியும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டை போல் ஒரு கால கட்டத்தில் எழுதிக் கொண்டுருப்பவர்களுக்கு அலுப்பு வந்துவிடக்கூடும்.
இதில் தெரிந்த, தெரியாத தளங்கள் என்பது முக்கியமல்ல. மொத்த தளம் குறித்தோ, குறிப்பிட்ட தலைப்பு குறித்தோ என்னுடைய விமர்சனம் உங்களுக்கு புதிய கோணத்தை உருவாக்கலாம். நீங்கள் சொல்லும் கருத்துக் கள் அடுத்து ஆசிரியர் பொறுப்பில் வருவர்களுக்கும், சீனா அவர்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கும் உறுதுணையாய் இருக்கட்டும். வருகை தந்த உங்களுக்கு நன்றி.
|
|
அறிமுகமே நல்லா இருக்குங்க. தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteதங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட விதம் அருமை
ReplyDeleteபா.ராகவன் - என்னையும் மிகவும் பாதித்த எழுத்தாளர்
தொடருங்கள் :)
வணக்கம் ஜோதிஜி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ஜோதிஜி.! தொடரட்டும் பயணம்.
ReplyDelete@@@ இராமசாமி கண்ணண்--// அறிமுகமே நல்லா இருக்குங்க. தொடர்ந்து கலக்குங்க.//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே! அருமையான தொடக்கம்! பயணம் தொடரட்டும்!
ReplyDeleteவணக்கமும் வாழ்த்துகளும்!!!
ReplyDeleteஅன்பின் ஜோதிஜி
ReplyDeleteகுரு வணக்கத்துடன் துவங்கிய வாரம் நல்ல முறையில் பயனிக்க நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கண்ணன் உங்கள் முதல் அக்கறைக்கு நன்றி.
ReplyDeleteயோகேஷ நீங்கள் சுடுதண்ணியின் ஜுனியர் என்று அறிமுகம் செய்து இருந்தீர்கள் சரிதானே? வருகைக்கு நன்றி.
இராஜராஜன் வந்தனம்.
நன்றி ஜோதிகிருஷ்ணன்.
அணைவருக்கும் அவார்டு அள்ளிக்கொடுத்து கலக்கிக் கொண்டுருக்கும் ஜெய்லானி வாங்க.
நன்றி நண்டு.
மணிவாசகம், கார்த்திக் உங்கள் வருகைக்கு நன்றி.
நல்ல முறையில் என்ற நம்பிக்கை இருக்கிறது சீனா அவர்களே. நன்றி.
//தலையில் கீரிடம் எதையும் சுமக்காத பா.ராகவன்//
ReplyDeleteஉண்மைதாங்க. அருமையான ஆரம்பம். வாழ்த்துகள்.
:)
ஜோதிஜி நல்வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல அறிமுகம்... பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துகள் ஜோதிஜி!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வருக ஜோதிஜி.,
ReplyDeleteகுருவணக்கம் என்பது உயர்வைத்தரக்கூடிய விசயம்.,
செவ்வனே செய்து துவங்கி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.,
தங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட விதம் அருமை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் அண்ணே..
ReplyDeleteதேர்ந்த மொழி நடையுடன் அசத்தல் அறிமுகம்..
வலைச்சரத்தை இன்னோர் தளத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சி..
உங்களை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன்...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteகேபிள் சங்கர்
வணக்கமும் நன்றியும்
ReplyDeleteகோவி கண்ணன்
ரவிச்சந்திரன்
ஷங்கள் நான் உணர்ந்த வார்த்தையை வழிமொழிந்தமைக்கு நன்றி.
சிவா உங்களால் வளர்ந்தவன் நான். நன்றி உங்களுக்கு.
நன்றி சே.குமார்.
கேபிள் சங்கரும் அவரின் சிஷ்யருமான செந்திலுக்கும், ஆதரவுக்கும் நன்றி.
ReplyDeleteவாழ்த்தக்கள் ஜோதிஜீ..
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteஅடிச்சுத் தூள் கிளப்பப்போறீங்கன்னு ஆரம்பமே சொல்லுது!!!!!
இனிய பாராட்டுகள்.
வாழ்த்துக்கள் ஆசிரியர் பொறுப்பிற்கு.
ReplyDeleteவலைச்சரத்தின் அறிமுகத்தில், பலர் என் வலைத்தளத்தைப் பார்வையிட்டனர். இதன் வீச்சு அதிகம்.
டாலர் தேசம் - படிக்க விரும்பும் ஒரு புத்தகம். விரைவில் வாங்கிப் படித்து விடுவேன்.
மாயவலையில் விழுந்து பிரம்மித்திருக்கிறேன். பா.ரா .. பா.ரா தான்.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட விதம் அருமை ஜோதிஜி,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியாயும் பெருமையாயும் உள்ளது.மேலும் அருமையான உங்கள் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.பாரா நல்ல எழுத்தாளர்.உங்களுக்கும் சீனா ஐயாவுக்கும் நன்றி
நல்ல ஆரம்பம்.. தொடரட்டும் ஜோதிஜி..
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி. உங்கள் அனுபவங்களை எங்களோடு வலைச்சரத்தில் பகிருங்கள
ReplyDeleteநாஞ்சில் பிரதாப் உடலும் உள்ளமும் நலமா?
ReplyDeleteதுளசிகோபால், பின்னோக்கி ரமேஷ, கண்ணகி, கீதப்பிரியன் கார்த்திகேயனுக்கு நன்றியும வணக்கமும்.
தேனம்மை சகோ தமிழ்உதயம் ரமேஷ் வருகைக்கு நன்றி.
வாழ்த்துக்கள் திரு ஜோதிஜி அவர்களே... இன்னும் பல மைல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று இறைவனை கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் அருமை
ReplyDeleteதேர்விற்கு செல்லும் முதல் நாள் வரை ஒரு லேசான பதற்றம் என்பது இருக்கும், ஆனால் முதல் தாள் எழுதியவுடன் ஒரு தெம்பு வருவதுடன்- தொடர்ந்த தாள்கள் விறுவிறுவென நகர்ந்துவிடும். அது போல் துவக்கத்தாள் அருமை. தொடர்ந்து அனைவரின் பாராட்டுக்களை பெறும் வகையில் உங்கள் ஆசிரியர் பணி தொடர வாழ்த்துக்கள். எழுத்தாளர் பணி என்பது ஒவ்வொரு முறை எழுதும் போதும் ஒரு பிரசவத்திற்கு சமமானதுதான். முழுமைபெற்று கையிலெடுத்து கொஞ்சும் சுகம் இதிலும் உண்டு - சித்திரகுப்தன்
ReplyDeleteநான் தனிமடல் அனுப்புகிறேன், நல்ல தொகுப்பு !!!
ReplyDeleteஎனது வரவேற்புகளும்!
ReplyDeleteதங்களுக்கு!
நன்றிகள்!
வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள்...
This comment has been removed by the author.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி....! உங்களின் அறிமுகங்களைக்காக காத்திருக்கிறேன்.....!
ReplyDeleteகுருவணக்கத்தில் நெகிழ்ச்சியடையச் செய்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள்!
//" திருப்பூரில் வலைதளத்தில் எழுதிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களை யும் சந்திக்க ஆசை " என்று அவர் விடுத்த அழைப்பைக் கூட ஏற்றுச் சென்று அவரை சந்திக்க முடியவில்லை. //
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி, நான் திருப்பூர்தான். :-)). முடியும்போது சொல்லுங்கள் அவசியம் சந்திப்போம்
ஆரம்பமே நல்ல அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி.
தமிழ் உதயன் புரிந்துணர்வுடன் தொடரரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
ReplyDeleteஅன்பரசன் உங்கள் கருத்துரைக்கு நன்றி.
சித்ரகுப்தன் எப்போதும் போலவே யோசிக்க வைத்த பதில். நன்றி.
அண்ணாமலையான், செந்தழல் ரவி இருவருக்கும் நன்றி.
சுவாமிநாதன் எதிர்பார்த்தேன். உங்கள் வாக்கு பலித்துள்ளது.
தேவா உங்கள் வருகை மகிழ்ச்சியடையவைக்கிறது.
முரளிகுமார் அந்த வரி நான் எழுதக் காரணமே நீங்கள் தானே. நீங்கள் ரமேடஷ இடம் சொல்ல அவர் அனுப்பிய மின் அஞ்சல் மூலமாக பாராவை தொடர்பு கொண்டேன். உங்கள் புகைப்படங்களுக்கு நான் ரசிகன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி முரளி.
நன்றி அபுல்பசர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கணேசன் ! உங்கள் சமூக அக்கறைக்குரிய உழைப்பு இன்னும் பரந்துபட்டவர்களிடம் செல்லட்டும் !!
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!தொடரட்டும்!
ReplyDeleteமுதல் பாராவிலிருந்து வலைச்சரம் தொடங்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்படி அவரைப் பத்தி பாரா பாராவா எழுதினா பா.ராவுக்குப் பிடிக்காது :)
// கலைஞர் கோவையில் நடத்திய பொருட்காட்சி //
:))
// " நம்மாலும் எழுத முடியும் " என்ற நம்பிக்கை என்பது பா. ராகவன் புத்தகங்கள் தான் கொடுத்தது//
ReplyDeleteஅவ்ளோ மோசமா எழுதுவாரா தல?? ;)
///வாழ்த்துக்கள் கணேசன் //
ReplyDeleteகண்டுபுடிச்சிட்டேன்.. கண்டுபுடிச்சேன்!!
வாழ்த்துகள்!! :)
வலைச்சரத்தில் உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி.
ReplyDeleteவலைச்சரப் பணி சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள் :)
நல்ல 40'S Combed நூலை yarn dyeing
ReplyDeleteசெஞ்சாச்சு.
அடுத்தது என்ன,auto striper ஓட்டி
அழகா தெச்சு அடுக்குங்க.
வாழ்த்துக்கள் ஜோதிஜி.
வினவு
ReplyDeleteநன்றி தோழரே.........
பாலா நீங்க எங்க வரப்போறீங்கன்னு நெனைச்சேன். ரொம்ப நேரமா உங்க லந்த தாங்க முடியாமா சிரிச்சுக்கிட்டுருக்கேன்.........
கண்டுபிடிச்சதை பத்திரமா வச்சுருங்க. மறுபடியும் உங்க இடத்தில வந்து வாங்கிக்கிறேன்.
ராஜ நடராஜன் நன்றி.
வெயிலான் என்ன கவிராயர் மாதிரி சிரிக்க வச்சுட்டீங்க..... பயந்தபடியே தான் மின் அஞ்சலில் உங்கள் விமர்சனத்தை பார்த்து இதை எழுதுகின்றேன்.
முதல் நாள் முதலுக்கு மோசமில்லையின் நினைக்கின்றேன். பாரா வைப்பற்றி என் பார்வையில் விமர்சனம் என்பதே தேவையில்லை.
கற்றதும் பெற்றதும் ஞாபகப்படுத்தி பார்த்தேன். அவ்வளவு தான்?
உண்மையிலே அது பொருட்காட்சி தானே ரமேஷ்? அதிஷா சொன்னமாதிரி புள்ளைங்க மறுபடியும் எப்ப விடுமுறை கிடைக்கும்னனு கேட்கிறாங்க?
தமிழ்....
கண்டம் விட்டு தாண்டினாலும் விசா இல்லாமல் வந்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க...... தினமும் வருவீங்க தானே? உங்க சிஷ்யர் ரெண்டாவது இடத்ல இருக்கிறத பாத்தீங்களா?
ஜில்தண்ணி. பெயரே நல்லாயிருக்குது பார்த்தீங்களா?
பெருசு
ReplyDeleteமுதன் முதலாக திகைக்க வைத்த விமர்சனம்.
அடேங்கப்பா அற்புதம்.திருப்பூர்ல இருந்தீங்களா?
// முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி, நான் திருப்பூர்தான். :-)). முடியும்போது சொல்லுங்கள் அவசியம் சந்திப்போம் //
முரளிஜீ,
ஜோதிஜி, பா.ரா வையே சந்திக்க நேரமில்லைன்னு சொல்லியிருக்கார். நாமெல்லாம் இன்னும் வளரணும் பாஸு! :)
//ஜோதிஜி, பா.ரா வையே///
ReplyDeleteஅதென்ன.. பா.ரா வை”யே”???
பா.ரா‘வே’ எழுதும் போது, நாம எழுதறதுக்கு என்னன்னுதான் ஜோதிஜி’யே’ எழுத வந்ததா.. பதிவில் சொல்லியிருக்காரு.
ஒருவேளை அதனால இருக்குமோ?? ;)
பத்த வச்சமா இல்லையா??
@ஹாலிபாலி
ReplyDeleteஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பிக்கற நெனப்புல ஏன்யா நாமக்கல் முட்ட மந்திரம் வெக்கறீங்க? :))
//பாலா நீங்க எங்க வரப்போறீங்கன்னு நெனைச்சேன்//
ReplyDeleteஇப்ப.. ஏன்யா.. இவன் வந்தான்னு நினைக்கறீங்கதானே?? :)
இதுக்குத்தான் அடக்கி வாசிக்கிறேன்!!
எச்சூச்மீ... இங்க கும்மி அலவ்டா?? எதுக்கும் ஸேஃபா கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணிக்கறேன்.
//ஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பிக்கற நெனப்புல ஏன்யா நாமக்கல் முட்ட மந்திரம் வெக்கறீங்க? :)//
ReplyDeleteஇப்பத்தானே>. கும்மி அலவ்டான்னு கேட்டு ஆன்ஸருக்கு வெய்ட்டிங்ல இருக்கேன். இப்ப வாயை கிளறினா.. எதும் பதில் சொல்ல முடியாதுன்னு தைரியமா?
பாவம் வலைச்சரம்!! நான் நெஜமாவே தள்ளிப் பார்க்.
ரமேஷ் என்னை விட்டுடுங்ககககக...
ReplyDeleteஅழுதுறுவேன்ன்ன்.......
அண்ணா பாலா ஷங்கர் கண்டுபிடிச்சுட்டுட்டாரே........
நாமக்கல் பெற்ற தவப்புதல்வன் பாலா வாழ்க வாழ்க வாழ்க
அகில உலக பாலா நலம் விரும்பிகள்
(இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?)
நன்றி ஷங்கர் இவர்க்கிட்டேயிருந்து காப்பாற்றியதற்கு
அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல?
ReplyDelete//அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல//
ReplyDeleteகல்யாணம் பண்ணுற வரைக்கும் அப்படி தெரியலீங்க. ;)
தமிழ் சுமாராதான் படிப்பாங்கன்னு ஒரு தைரியத்தில்தான் இப்படியெல்லாம் எழுத முடியுது.
அதனால என்ன? பேசமா பறைஞ்சுட வேண்டியது தானே(?)
ReplyDeleteநீங்க கத்துகிட்டீங்களா தல?
//நீங்க கத்துகிட்டீங்களா தல?//
ReplyDeleteபிட்டு பிட்டா சின்னதா இருக்கும்போதே கத்துகிட்டிருப்பாருங்க :)
ஷங்கர் சிரிச்ச சிரிப்புல குழந்தைங்க வந்து எட்டிப் பார்க்கிறாங்க.......
ReplyDelete//நீங்க கத்துகிட்டீங்களா தல//
ReplyDeleteமாமனார்-மாமியாருக்கு 100-150 பக்கத்துக்கு லெட்டரே அந்த மொழியில் எழுதியிருக்கேன்.
(பாஸ்ட் டென்ஸ்ல வாக்கியம் இருக்கு பாருங்க!! அதெல்லாம்... அவங்கள இன்ஸ்பயர் பண்ணுறதுக்காக கத்துகிட்டதுங்க.
கல்யாணம் பண்ணுன பின்னாடி அதெல்லாம் எதுக்குன்னு... தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்கிறேன்) :)
========
//பிட்டு பிட்டா சின்னதா இருக்கும்போதே //
கொக்கோகம்-னு எழுதும்போதே தெரியும்வே!! இப்படி எதுனா பேசுவீர்ன்னு!! உம்மையெல்லாம்..... :))
கலைஞர் கடிதம் போல எதிர்காலத்ல பாலாவின் காதல் கடிதங்கள் அப்படின்னு ஒரு இடுகைபோடலாம் போலிருக்கே............
ReplyDeleteதலைநிமிர்ந்த தமிழன் இல்ல.
தமிழ் மொழி காத்த மாவீரன் பாலா வாழ்க.
@ஜோதிஜி..
ReplyDeleteவிடுங்க அவர் இப்படி நம்மள கோத்து விட்டுட்டு வண்டிய எடுத்துகிட்டு பறந்துடுவாரு. வலைச்சரம் வேண்டாம், அக்கரைச்சீமைல அவருக்கு ஒரு சவால் விட்டிருக்கேன். தைரியமிருந்தால் பதிவு போடட்டும் அன்னிக்கு வெச்சிக்கலாம் கச்சேரிய! :))
இது என்ன ஷங்கர் புதுக்கதையா இருக்கு.
ReplyDeleteமாவீரன்ங்ற பட்டம் இப்பத்தான் கொடுத்தேன்.
தல ஷங்கர் கேட்டத முடிச்சுருங்க.
இல்லைன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்
அவுரு கெடக்கராருங்க!! நான் எப்படிப் பட்டவன்னு இனிமே நான் சொல்லித்தான் தெரியனுமா?? அதான் ஏரியா முழுக்க ஸ்மெல் வருதே!! :)
ReplyDelete==
இந்த ப்லாகை நடத்துறவங்க.. நொந்து நூலாகறதுகுள்ள.. இந்த பதிவில் வெளிநடப்பு செய்து... உங்கள் வயிற்றில் ஆவின் வார்த்து....
அடுத்தப் பதிவில் ஆஜர் ஆவேன் என்று சொல்லி பால்டாயரும் வார்க்கிறேன்.
நன்றி.. வணக்கம்!!!
ஆரம்பமே அசத்தல்தான்.
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவிலே ஒவ்வொரு இடுகையாக படிப்பவர்களில் நானும் ஒருவன். பல விடயங்களை தேடல்களோடு பகிர்ந்து கொள்கின்றீர்கள். குறிப்பாக இலங்கை பற்றி நீங்கள் எழுதுகின்ற விடயங்கள் அருமை. பல விடயங்களை இலங்கையில் இருக்கும் நானே உங்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
இன்று இலங்கை பற்றி சில உண்மைகளை வெளியிட முடியாத அல்லது குறிப்பிட்ட ஒரு சிலர் சார்ந்து எழுதவேண்டும் என்ற நிலை இருந்தபோதும் உண்மைகளை உண்மையாக ஆராய்ந்து எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தொடர்ந்தும் உங்கள் பனி தொடரட்டும்.
நீங்கள் இலங்கை பற்றி எழுதிய விடயங்களை ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.
எனக்குத் தெரிலயே...ஜோதிஜி...
ReplyDeleteஇவ்ளோ பிந்தி வந்திருக்கேனே.
நேத்து ஞாயித்துக்கிழமை
லீவுன்னு இருந்திட்டேன் !
இந்த வாரம் இலக்கிய வாரம்ன்னு வச்சுக்கலாம்.இல்லாட்டி உலக அலசல் வாரமா !நிறைய இன்னும் தெரிஞ்சுக்கலாம்.எழுதுங்க வருவேன்.வாழ்த்துகள் ஜோதிஜி.
பா.ராகவன் அவர்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.
அறிமுகமாகியதுக்கு நன்றியும்.
//பா.ராகவன் அவர்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.//
ReplyDeleteஹா.. ஹா. ஹா..., இதை மட்டும்.. ‘பிரபல பதிவர்கள்’ படிச்சா......
காலை வணக்கம் தல?
ReplyDeleteஇன்னைக்கு ராத்திரி வச்சுக்கலாம்?
பாலா டாட்டா பைபைன்னு சொல்லிட்டு மறுபடியும் உள்ளே வந்தா என்ன அர்த்தம்?
வாங்க ஹேமா பா ராகவன் எழுதிய பிரபாகரன் வாழ்வும் மரணமும் தான் இலங்கை குறித்த தேடலின் முதல் புத்தகம். அதில் விடுபட்டுள்ள விஷயங்களைத் தேடி அலைந்த போது உருவான பயண்ம் இன்று சந்ரு வந்து சொல்லும் அக்கறையான கருத்து வரைக்கும் நிற்கிறது.
சந்ரு உங்களுக்கு மிக்க நன்றி.
ஓப்பனிங்லயே பின்றீங்களே
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜி..!
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பயணம்
நான் எழுதிய காலத்தில் ஒரு சில பத்திரிகைகள் எப்போதாவது ஒன்றை - அதுவும் வெட்டியும் கொத்தியும் பிரசுரிக்கும்! கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பதிவெழுதத் தொடங்கிய காலத்தில் இருந்தவற்றில் பெரும்பாலானவற்றைப் பதிவுசெய்ய நேரம் இருந்தது! இப்போது நேரம் கிடைப்பது அரிது! எழுதவே கிடைப்பதில்லை! இருந்தாலும் ஏதோ நேரம் கிடைக்கும் போது எழுத ஆசை!
ReplyDeleteஇலங்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதுவதில் உங்களுக்கு நிகர் ஒருவருமே இல்லை! எழுதுங்கள்! நிறைய விடயங்கள் தெரிவிக்க வேண்டும்! எழுதுவதிலும் பார்க்க நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவது சுலபம் போல இப்போது இருக்கிறது!
வாழ்த்துக்கள்!
திருப்பூர் மணி உங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteதங்க முகுந்தன் உங்கள் புரிந்துணர்வுக்கு வாழ்த்துகள்.