வலைச்சரம் - ஏழாம் நாள் - ஞாயிறு
➦➠ by:
பா.ராஜாராம்
சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்
1. சேரல்
வெளியில் நனையும் மழை
மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்
மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்
முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை
வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை
இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்
***
(மழை, தேநீர், தேநீர் மழை, உள்ளும் வெளியும். வாவ், சேரல்!)
***
2. kartin
வட்டங்கள்
ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
நீரில் அமிழ்கிறது கல்
நிலவைத் தழும்பச் செய்கிறது
முதல் வட்டம்
அலைக்கழிக்கின்றன
அடுத்தடுத்த வட்டங்கள்
தாலாட்டிப் போகின்றன
தொடர்பவை
தழுவித் துயில்கிறது
முடிவிலொன்று
நான் அடுத்த கல்லுக்கு
ஆயத்தமாகும் முன்
நீ வந்து விடுகிறாய்..
நிலா நகர்ந்து விடுகிறது
ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
மீண்டும் தொடங்குகின்றன
வட்டங்கள்
***
(ஜலதரங்கம் பாஸ்!)
***
3. இளங்கோ கிருஷ்ணன்
ஒரு இரவல் காதல் கதை
இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு
பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்
இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்
இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்
இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்
***
(அப்பா! புரட்டி அடிக்கிறீங்களே, இளங்கோ!)
***
4. சுந்தர்ஜி
எல்லா இடங்களிலும்
ஒருவனால்
பேச முடிவதில்லை.
பேச நினைக்கும்
இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடைசெய்யப்பட்டோ
பேசமுடியாது போகிறது.
பேச ஆசைகொள்ளும்
நள்ளிரவில்-
நூலக அலமாரிகள் இடையே-
ஒரு கலவிக்குப் பின்னே-
சாவு வீட்டில்-
ஏதோ ஒரு ஆசிரமத்தில்-
பேசமுடியாது போகிறது.
யாருமற்ற தனிமையில்
புற்களைப் பிடுங்கியபடி
பதட்டத்தாலோ
வசீகரத்தாலோ
மறதியாலோ
பேசமுடியாது போகிறது.
ஒரு தோல்விக்குப் பின்னே-
காரணமற்ற கோபத்தால்-
நியாயமற்ற பொய்களால்-
பல நேரங்களில்
பேச முடிவதில்லை.
எல்லாம் அமையும்போது
பேச எதுவுமில்லாது
போய்விடுகிறது.
***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***
5. கமலேஷ்
மெய்பொருள் காண்பதறிவு......
கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....
***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***
6. ஆறுமுகம் முருகேசன்
அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!
***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***
7. சு. சிவக்குமார்
முதற் குறிப்பேட்டிலிருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...
***
உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்
***
பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.
***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***
ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.
பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.
இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)
எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?
சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...
உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...
ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***
5. கமலேஷ்
மெய்பொருள் காண்பதறிவு......
கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....
***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***
6. ஆறுமுகம் முருகேசன்
அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!
***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***
7. சு. சிவக்குமார்
முதற் குறிப்பேட்டிலிருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...
***
உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்
***
பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.
***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***
ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.
பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.
இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)
எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?
சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...
உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...
ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
***
|
|
சிறப்பான அறிமுகங்கள். மிகச் சிறப்பான வாரம்.
ReplyDeleteவாழ்த்துகள் பா.ரா அண்ணே!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
என்ன அற்புதமான கவிதைகள்... இன்றைய அறிமுகங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
ReplyDeleteஅழ வைத்து விட்டீர்கள் பா.ரா.
ReplyDeleteஉயிர் உறிஞ்சும் கவிதை படைப்பாளிகளின் வழி.
நீர் வட்டம், நாய்க்குட்டி ரத்தம், இசைக்குறிப்பு குருவிகள், பேசமுடியா பொழுதுகள், பழங்களற்ற கொடிமரம்,
மழை கணங்கள்.....
என் கவிதை திறமையின் மீது என்னக்கு தீரா கோபத்தை உண்டாக்கியது இப்பதிவு.
என்ன செய்ய எல்லாம் நிறைந்ததாய்த்தான் இருக்கிறது இவ்வுலகம்.
அன்புடன் கபிலன்.
Excellent!! :))
ReplyDeleteமுதல் மரியாதை படத்தின் பாடல்களை கேசட்டில் கேட்டவர்களுக்கு தெரியும்....
ReplyDeleteபாரதிராஜவின் கனத்த குரல் சொல்வது போல....
"தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்துக்குள் நடந்தது " போல ஒரு திருப்தியை கொடுத்து இருக்கிறது சித்தப்பா..கடந்த வாரம்....
உங்கள விடவே மனசு இல்ல...ம்ம்ம் என்ன பண்றது சித்தப்பு...கருவேல் நிழலுக்கு வந்து பாத்துக்கிறேன்....!
அசத்தலனா வாரம் சித்தப்பு....! புதிய அனுபவத்துக்கு கூட்டிச் சென்றதற்கு உங்களுக்க்கும் வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாவிற்கும் நன்றிகள்!
தகப்பனின் சுண்டுவிரல் பிடித்துச்செல்லும் குழந்தையின் மன நிலையில் இருக்கிறோம். அருமையா இருந்திச்சு இந்த வாரம்.
ReplyDeleteஇந்த ஏழுநாளும் கவிதைகளுக்குள் வலைச்சரத்தை மூழ்க வைத்து முத்துக்களை தெளித்துவிட்டிருக்கிறீர்கள்... அருமையான அறிமுகங்கள்... படிக்கப்படிக்க ஆனந்தமாக இருந்தது இந்தவாரம்... இன்றைய நாளும்...
ReplyDeleteநன்றிகள் பா.ரா. அய்யா...
மனம் நிறைவான வாரம் சித்தப்பு.
ReplyDeleteகருவேழல நிழல் அழைக்கிறது.
விருந்தும் மருந்தும் மூனுநாளைக்குதான்
சீக்கிரம்மா நம்ம வீட்டுக்கு வாங்க கருவேல மரம் கருகிடப்போகுது .
அத்தனை அறிமுகங்களுமே அருமையான அற்புதங்கள்.அண்ணா அழகான வாரம் முடிந்துபோனது அவசரமாய்.சரி இனி கருவேல நிழலோடு தொடர்வோம்தானே
ReplyDeleteஉங்க அன்போட.
நல்ல பல அறிமுகங்கள் பா.ரா அண்ணா. ஒரு வாரம் போனதே தெரியவில்லை.
ReplyDeleteஒரு வாரம் ஒடினதே தெரியல மாம்ஸ். எல்லாம் நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteகபிலன் சொன்னதை சிறிது மாற்றி சொல்கிறேன். எனது கவிதை புரியும் திறனைக் குறித்து எனக்கு என் மீது ரொம்பவே கோபம். தொடர்ந்து உங்கள் கருவேலநிழல் இந்தவாரம் வலைச்சரம் வாசித்திருந்தாலும் இதுவரை பின்னுட்டம் இட்டதில்லை. .இப்படி எழுதுகிற மனிதரை மட்டுமில்லை எல்லோரையும் உறவு முறை சொல்லி அழைக்கும் அந்த பண்பையும் மனதார பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள்
ReplyDeleteமுடிஞ்சே முடிஞ்சிருச்சா இந்தவாரம்
ReplyDeleteம்ம் இது நல்ல ஆரம்பம் பா.ரா
புதிய வரிசையில் இன்னும் விடுபட்டவர்கள் அடுத்த பந்தியில் சரியா ?
:)
very intresting மக்கா,
ReplyDeleteவலைச்சரம் வந்ததில், புதிதாக அக்கா கிடைச்சாங்க எனக்கு.
// பா. ராஜாராம் தம்பி தங்கள் வரவு நல்வரவு ஆகுக . இதுவரைக்கும் உங்களின் எல்லா இடுகைகளையும் வாசித்திருந்தாலும் , நான் பின்னுட்டம் இட்டதில்லை. உங்களின் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும். இப்போது ஏன் வந்தேன் என்றால். நீங்கள் அம்மா சித்தி அத்தை அக்கா தங்கை உறவுகளை விட்டு விட்டிர்களே . ஏன் என்று கேட்கத் தான் . என்றாலும் இந்த வாரம் வலைச்சரத்திற்கு மிகவும் இனிய வாரமாக இருக்கும் என்னும் திருப்தியில் உங்கள் சகோதரி//
இப்படி ஒரு பின்னூட்டம் வந்தது(மெயிலில் பார்த்ததுதான்). அட, என வியந்து தளம் வந்தேன். தளத்தில் இல்லை. அது டிராப் ஆகி, கீழ் உள்ள பின்னூட்டம் இருந்தது.
//பதிவர்களை உறவு முறை சொல்லி அழைக்கும் உங்கள் பழக்கம் ரொம்ப அழகு. இந்த வாரம் தங்களுடையது . காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் தம்பி//
உடன் பின்னூட்டம் க்ளிக் பண்ணி தளம் போனால், தளத்தில் இவர்கள் கை பற்ற இயலவில்லை.
"அட, என்னக்கா நீங்க?" என்று என் அடுத்த வேலைகளுக்குள் நுழைந்து விட்டேன். அப்புறம் அக்காவை காணோம். ஆனால், ரொம்ப பிடிச்சிருந்தது, ஈரம் ததும்பும் அக்குரல்.
வேலைகள், மற்றும் தினம் ஒரு பதிவிற்கான ஆயத்தங்களில், யாரையும் தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. ஆனால், இந்த முதல் பின்னூட்டமும், "தம்பி வருந்துவானோ?" என அதை எடுத்து வேறொரு பின்னூட்டமும் மனசில் நின்று போனது.
கடைசி நாளான இன்று மீண்டும் அக்காவின் இந்த பின்னூட்டம்...
//கபிலன் சொன்னதை சிறிது மாற்றி சொல்கிறேன். எனது கவிதை புரியும் திறனைக் குறித்து எனக்கு என் மீது ரொம்பவே கோபம். தொடர்ந்து உங்கள் கருவேலநிழல் இந்தவாரம் வலைச்சரம் வாசித்திருந்தாலும் இதுவரை பின்னுட்டம் இட்டதில்லை. .இப்படி எழுதுகிற மனிதரை மட்டுமில்லை எல்லோரையும் உறவு முறை சொல்லி அழைக்கும் அந்த பண்பையும் மனதார பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள்//
பார்த்ததும், ரொம்ப சந்தோசமாயிருச்சு...
"அக்கா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. யாரோ நான். என் எழுத்து வாசித்து என்னை தம்பி என அழைக்க தோணுது பாருங்க, பேச நினைத்ததை வருத்தப் படுவேனோ என மறைக்க தோணுது பாருங்க.. இதுதான் அக்கா கவிதை. மற்ற கவிதை எல்லாம் பயிற்சியில் வந்துரும். சரியா?"
இது என் மின் முகவரி அக்கா, rajaram.b.krishnan@gmail.com
தம்பி கை பற்றனும் என தோணும் போது ஒரு கடிதம் எழுதுங்க.
இந்த என் அக்காவை உங்களிடம் காட்டாமல் போனால்,
"அட, என்ன மக்கா நான் தம்பி?"
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைசர ஆசிரியராய் சிறப்பாய் செயல்பட்ட ராஜா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசேரல் கவிதை அருமை
ReplyDeleteநிலவைத் தழும்பச் செய்கிறது
ReplyDeleteமுதல் வட்டம்
அலைக்கழிக்கின்றன
அடுத்தடுத்த வட்டங்கள்
excellent!!!
இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
ReplyDeleteகூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்
சொல்ல வார்த்தையில்லை
பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது.
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள். பல சமயங்களில் தடுமாற வைத்து விட்டீர்கள்.
செந்தில் உங்களை வரவேற்கின்றேன்.
நி்றைவான வாரம்.
ReplyDeleteநன்றி சகோ.
சொன்ன எல்லா கவிதையும் சூப்பரு
ReplyDeleteஅண்ணா ஒரு வாரம் இவ்வளவு சிறுசா? சீக்கிரம் முடிஞ்சிடுச்சி
சிறப்பான அறிமுகங்கள்.. வாழ்த்துகள் :)
ReplyDeleteஎன்பெயரையும் அடுத்த வலைச்சரத்தில் உங்கள் கையால் எழுத வைக்க வேணும்
ReplyDeleteமுயற்ச்சிக்கிறேன் பங்கு
விஜய்
மழை கொட்டித் தீர்த்தான பின் ஒரு மரம் தன் கிளையசைத்துச் சிலிர்க்க வைப்பதாக இருந்தது உங்களின் தேர்வும் எழுதின கவிகளின் மொழியும்.
ReplyDeleteஆனாலும் எல்லாம் முடியட்டும் என்று ஒரு வாரம் காத்திருந்த எனக்கு என் பெயரும் அதில் இருந்தது ஒரு கூச்சத்தையும் திகைப்பையும் கண்களில் கசிவையும் பரிசளித்தது.
என் உயரம் எனக்குத் தெரியும் பா.ரா. என்னையும் விட நன்றாக எழுதுபவர்களுக்கும், பரந்து விரிந்த உங்கள் தேர்வின் நிழலில் எதேச்சையாகப் படாது போய்விட்ட என்னை விடத் தகுதி படைத்த கலைஞர்களுக்கும் வழி விட்டு இத்தனை நாளும் இருந்தது போலவே உங்கள் பக்கத்தில் திண்ணையில் அமர்ந்து கொள்கிறேனே பா.ரா.
நேரமும் காலமும் கருத்தில் கொண்டு குறுகிப் போன இந்த ஒரு வாரம் அடுத்த முறை ஒரு விஸ்தாரமான கச்சேரியாகவும் இந்த முறை தேர்வுறாத கவிஞர்கள் பலரும் உள்நுழையும் வாசலாகவும் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
இப்போது எளிதாகி இருக்கிறது எனது மூச்சு.
நன்றி பா.ரா.
அன்பிற்கினிய பா.ரா.
ReplyDeleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி! வலைச்சரத்தில் உங்கள் வாரம் முடிந்தது கொஞ்சம் வருத்தம் தருவதுதான் என்றாலும் ஒரு வாரம் ஓய்வு கொண்டிருந்த கருவேல நிழல் மீண்டும் நீளும் என்பதில் மகிழ்ச்சி!
-ப்ரியமுடன்
சேரல்
மிகச் சிறப்பான வாரம் அண்ணா இது.
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.
..!!
ReplyDeleteமாமா,ஆனந்த கண்ணீர்..
:-)
அன்பின் பாரா... இந்தக்கவிதைகள் பூராவும் ஒரே திசையில் தீர்க்கமாகப்பயனிக்கிறது.
ReplyDeleteஅப்படியே அள்ளிக்கொண்டுபோகும் மொழியில் நனையலாம் சுகமாகவும்,நினவுகளோடும். எல்லோருக்கும் அன்பு. உங்களுக்கு ...அதிக அன்பு.
நல்லா பாருங்கப்பா...
ReplyDeleteலீவ் முடிஞ்சி இந்தியால இருந்து சவுதி கிளம்பறப்ப வீட்ல உள்ள ஒவ்வொருவர் வாழ்த்துக்களின் இடையிலும் நிகழுமே ஒரு கொடுமையான அமைதி - அது இங்கயும் உலாவுது பாருங்க - நீங்க சிரிச்சிகிட்டே போயிட்டு வரேன்னு சொன்னாலும்...
சரி போயிட்டு வாங்க...
பெரியவங்க விளையாட்ல இந்த சின்ன பையனையும் சேர்த்துகிட்டதுக்கு நன்றிப்பா..
ReplyDeleteanbin paa.raa-vukku..browsing center-il irunthu intha pinnutthai eluthukiren.enve intha asowkariyathai porupeerkalaga..
ReplyDeletemunpellan Air-tel-il vilambarathil cila captionkaloodu cila kaattchikal varum..express..negociate..ovaru clipingkum varumpothu erpress captionku kallaraiyin mun poongothuduan mahzil nanaintha vannam ninurupavarin padathaipola en negilvai solla varthaikal illai....
natpudan...
Sivaaa..
அருமையான வாரம் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல பகிர்வு சித்தப்ஸ்... இவ்வளவு நேரம் கிடைக்குதா?
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
ReplyDeleteவாங்க, வாங்க கே.ஆர்.பி. செந்தில்!
கலக்குங்க.. வாழ்த்துகள்!
பட்சக்கென்று பதியும் அறிமுகங்களும் நினைவுத் தழும்புகளுடன் நிறைவான வாரம். வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteசிறப்பான படைப்புகள். கவிதைகள் மீதும் கவிஞர்கள் மீதும் உங்களுக்குள்ள அக்கறை தெரிகிறது. ஒரு வாரம் போனதே தெரியல. நல்ல பகிர்வுகள். நன்றி பா.ரா
ReplyDeleteபா.ரா.,
ReplyDeleteஅதற்குள்ளாகவா விருந்தோம்பல் முடிந்தது..ஒரு வாரம் உறவின் வீட்டில் சொந்த பந்தங்களுடன் அளவலாவியதில் நாட்கள் நகர்ந்தது தெரியவில்லை பா.ரா.
அயல்தேச உழல்விலும் உழைப்பிலும் நேரம் ஒதுக்கி., அன்னப்பறவை போல எங்களுக்கு பிரித்தெடுத்துக்கொடுத்த கவிதைகள் அத்தனையும் அற்புதம்.
நிபந்தனையற்ற அன்புடனும் வாஞ்சையுடனும் நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்களோ அதனின் பல மடங்கு திரும்ப பெறுவது உவகையாக இருக்கிறது பா.ரா..பின்னூட்டங்களில்...
இளங்கோ கிருஷ்ணன்., சுந்தர்ஜி கவிதைகள் கிளப்பிச்செல்லும் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை பா.ரா...
ஒரு வாரமென்பது உங்களுக்கு போதாதுதான்...அடுத்த விருந்தோம்பலுக்கு இந்த வீடு தயாராகட்டும்.
சீனா அய்யாவுக்கு மனமார்ந்த நன்றிகளும்.
@ சிவக்குமார்
ReplyDelete//உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்//
நிழலோடு நானும் தான் :)
@ ஆறுமுகம் முருகேசன்
ப்பா... கடைசி வரிகளில்
உயிர் வந்தது
@ கமலேஷ்
பாவம் அந்தப் பறவை :(
@ சுந்தர்ஜி
ஹ்ம்ம் நிஜம்!
@ இளங்கோ
யாருக்காகவோ நிரம்பி வழிகிற அன்பு புரிகிறது
@ Kartin
அருமை.
@ சேரல்
நல்லா இருக்கு இந்த மழை கவிதை தேநீரோடு சுவைக்க :)
எல்லாக் கவிதைகளும் மிக மிக அருமை. ஒரு சேர வாசிக்க கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
a pleasant surprise sir..
ReplyDeleteஅழகான வாரமாக்கியிருக்கிறீர்கள்!!
நன்றியும்..அத்தனை பேருக்கும் வாழ்த்துக்களும்!!