வலைச்சர சனி - சினிமாவும், இசையும்
➦➠ by:
கே.ஆர்.பி.செந்தில்
அரசியலின் முதல் படி
சினிமா
கனவுலக நாயகர்களிடம்
ஆட்சியைக் கொடுத்தால்
கூத்தாடித்தான் போகும்
வாழ்க்கை..
நேற்றைய பதிவிற்க்கான உங்கள் அமோக ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
தமிழில் பிரபல இயக்குனர் அல்லது நடிகர் நடித்த படம் என்றால் அந்த வாரம் முழுதும் அதைப்பற்றியே நிறைய பதிவுகள் வரும்.. இவ்வளவு பிரசித்தம் பெற்றதை நான் சொல்லாவிட்டால் எப்படி?..
நான் சொல்லப் போகிற அனைவரும் நீங்கள் தொடர்ந்து படிப்பவர்களே.. ஒரு சிலர் அதிலும் முக்கியமாக இசை விமர்சகர் ஷாஜி பற்றி நிறைய பேருக்கு தெரியாது..
கேபிள் சங்கர் வலையுலகில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.. பன்முகம் கொண்ட சினிமாக்காரன்.. இவரின் சினிமா வியாபாரம் சினிமா துறைக்கான கையேடு..
மிகப் பிரசித்தி பெற்றது மீண்டும் ஒரு காதல் கதை.. இவர் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்திப் படங்களைப் பற்றி அதிகம் விமர்சிப்பவர்..தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்த்தவர்..
ஜாக்கி சேகர், ஜாக்கி ஜானின் மேல் உள்ள தீவிர காதலால் பெயரை இப்படி வைத்துக் கொண்டாலும் வலைப்பூவின் தலைப்பு "பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" நான் மிகவும் ரசித்த நாவலான பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவலின் தலைப்பு.. சமுதாய கோபத்துடன் தான் ரசித்த படங்களை மட்டும் எழுதும் உலக சினிமா ரசிகன்..
உண்மைத்தமிழன் சமுதாயக் கருத்துகளுடன், தமிழ் சினிமாக்களை மட்டும் எழுதும் "சங்கத்"தமிழன்.. ஆனால் படிக்கதான் பொறுமை அவசியம் வேண்டும்..
வண்ணத்து பூச்சியார் சூர்யா, உலக சினிமாவை தீவிரமாக அலசுபவர்.. ஏனோ சமீபமாக அதிகம் எழுதுவது இல்லை..
ஹாலிவுட் பாலா இவரும் உலக சினிமா விமர்சகர்தான்.. ஆனால் மிகவும் சுவாரஸ்யமான இவரது விமர்சனங்கள் மிக எளிமையானவை..
நீ கேளேன் என மொக்கை படங்களையும் மொழி மாற்று படங்களையும் கூட விட்டுவைக்காமல் பிட்டு பிட்டு வைப்பவர்கள்.. தியேட்டர் கமெண்ட்ஸ் போடுவார்கள்.. சிரிப்பு விமர்சகர்கள் ஜெட்லி ..
இயக்குனர் சார்லசின் வலைபக்கமான வார்த்தைகள் சினிமாவை பற்றிய அலசல் மட்டுமல்லாது தன்னை பாதித்த படங்களை பற்றிய விமர்சனங்களையும் எழுதுபவர்..
உலக சினிமாக்களை பற்றிய மிக விரிவான பார்வை கொண்டவர் கீதப்பிரியன்.. சினிமாக்காரர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வலைப்பக்கம்..
கருந்தேள் கண்ணாயிரம் இவரும் விரிவான பார்வையுடன் கூடிய உலக சினிமா ரசிகன்.. சுவாரஸ்யமான தகவல்களுடன் சொல்பவர்..
இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகம் செய்ய இயலவில்லை ..
இசையுலகில் விமர்சகர் என்றாலே சுப்புடுதான் ஆனால் உலக இசைக்கூறுகள் அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்திருக்கும் இசை விமர்சகர் ஷாஜியின் வலைப்பக்கத்தை அவசியம் பாருங்கள்..
இசை ராஜா இளையராஜாவுக்காகவே ஒரு வலைப்பக்கம்.. ராஜா ரசிகர்கள் அனைவருக்காகவும்..
மீண்டும் நாளை சந்திக்கிறேன்..
|
|
முன்னணி பதிவர்களின் தொகுப்பு சிறப்பு செந்தில் சார்
ReplyDeleteமுன்னணி பதிவர்களின் தொகுப்பு சிறப்பு செந்தில் சார்//
ReplyDeleteரிப்பிட்டு :-).
wநன்றி தலைவரே..
ReplyDeleteமுன்னணி பதிவர்களின் தொகுப்பு சிறப்பு.
ReplyDeleteVazhththukkal.
அறிமுகம் அருமை...இன்னும் ஒருசிலர் இருக்கிறார்கள் நண்பரே...
ReplyDeleteமிக அருமை செந்தில்!
ReplyDelete//முன்னணி பதிவர்களின் தொகுப்பு சிறப்பு செந்தில் சார்//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
என்னையும் ரவுடி லிஸ்ட்ல சேர்த்து...என்னையும் சிலாகித்தமைக்கு என் நன்றிகள்..
ReplyDeleteஓ....சினிமா பக்கமா செந்தில்....ஓரிருவர் தவிர...எனக்கு நிறைய பேர் புதுசுதான்....
ReplyDeleteமிக்க நன்றி செந்தில்..அறிமுகத்திற்கு....பார்க்கிறேன்...! செந்தில் புகைப்பட தேர்வு ஒவ்வொரு நாளும் அருமை... நம்ம மண்ணின் மனத்தோடு.........
வாழ்த்துக்கள் செந்தில்!
அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் செந்தில்!
துவக்கக் கவிதையில் முதலிரண்டு வரிகளுக்கும் மீதிக் கவிதைக்குமிடையே அழகிய முரண். ரசித்தேன். அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteமிக அருமை செந்தில்
ReplyDelete//
ReplyDeleteஅரசியலின் முதல் படி
சினிமா
கனவுலக நாயகர்களிடம்
ஆட்சியைக் கொடுத்தால்
கூத்தாடித்தான் போகும்
வாழ்க்கை..///
இருங்க உங்களை விஜய் கிட்ட சொல்றேன்.
//ஒரு சிலர் அதிலும் முக்கியமாக இசை விமர்சகர் ஷாஜி பற்றி நிறைய பேருக்கு தெரியாது..//
நம்ம ரெண்டு பேருக்கும் தெரியுமே அண்ணா. ஒரு கோப்பை தேநீர் மறக்க முடிமா?
போட்டோ எல்லாம் என்கிருந்துயா எடுக்குறீங்க...
அருமை செந்தில்!
ReplyDeleteஅன்பின் செந்தில்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - திரைத்துறையினைப் பற்றி எழுதும் பதிவர்கள் - ம்ம்ம்ம்ம்
ஆசிரியப் பொறுப்பு நன்கு செயல்படுகிறது
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
அருமை செந்தில்.
ReplyDeleteஒவ்வொரு நாளும் கட்டுரை, கவிதை, சமையல், சினிமான்னு ஒவ்வொன்றை எடுத்து அறிமுகம் செய்த விதம் நன்றாக இருந்தது.
ReplyDeleteமுன்னணி பதிவர்களின் தொகுப்பு சிறப்பு செந்தில்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நன்றி
ReplyDeletemmmm
ReplyDeleteஇரண்டு நாட்கள் வெளியூர் பயணம். அதற்குள் உங்களுக்கு ஆசிரியர் பொறுப்பு கடைசி நாளுக்கு வந்து விட்டதா?
ReplyDeleteசங்கர் சமுதாயக் கருத்துக்களையும் நிறைய எழுத வேண்டும். சேகர் எளிமையான வட்டாரவழக்கு நாவல் போல.
கார்த்திக், கருந்தேள், ஏன் ஹாலிவுட் பாலாவை விட்டு விட்டீர்கள்?
கேபிள், ஜாக்கி மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.
ReplyDeleteஹாலிவுட் பாலா, கருந்தேள் - படிக்கும் வழக்கம் உண்டு. மற்றவர்கள் புதியவர்கள்.
கேபிள், ஜாக்கி மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.
ReplyDeleteஹாலிவுட் பாலா, கருந்தேள் - படிக்கும் வழக்கம் உண்டு. மற்றவர்கள் புதியவர்கள்.
கேபிள், ஜாக்கி மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.
ReplyDeleteஹாலிவுட் பாலா, கருந்தேள் - படிக்கும் வழக்கம் உண்டு. மற்றவர்கள் புதியவர்கள்.
ஹாலிவுட் இருக்கிறார். சரிதான்..................
ReplyDeleteஅனைவரின் அறிமுகமும் சிறப்பு. நண்பர் ஜெய்யும் ஹாலிவுட் சினிமாக்களை சிறப்பாக விமர்சனம் செய்கிறார்
ReplyDeleteநன்றி அண்ணே
ReplyDelete