07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 7, 2010

விடை பெறுக கிளியனூர் இஸ்மத் : பொறுப்பேற்க வருக ஜவஹர்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத், தான் ஏற்ற பொறுப்பினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பதுக்கும் மேலான மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் பல்வேறு தலைப்புகளில் - பல்வேறு அருமையான இடுகைகளைச் சுட்டிக்காட்டி - வாசகர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கடமையினை சரிவரச் செய்த கிளியனூர் இஸ்மத்தினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்வர் கே ஜி ஜவஹர். இவர் இதயம் பேத்துகிறது என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இவர் ஒரு இயந்திர இயல் பொறியாளர். ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார். சாவி மற்றும் குமுதத்தில் சிறு கதைகள் எழுதி இருக்கிறார். கிழக்குப் பதிப்பகத்தால் இவர் எழுதிய இரு புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

இசையில் ஈடுபாடு உடையவர். பாடல்கள் இயற்றவும், பாடவும் தெரிந்தவர். அருமை நண்பர் ஜவஹரை வருக ! வருக ! பொறுப்பேற்க வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். /r

நல்வாழ்த்துகள் கிளியனூர் இஸ்மத் /r

நல்வாழ்த்துகள் கே ஜி ஜவஹர் /r

நட்புடன் சீனா

3 comments: