07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 10, 2010

கலவை ஒன்று

அருமை நண்பர் சூரியனின் வலைவாசல் அருண், ஜீவன் பென்னி பெயர்காரணம் என்னவென்று சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.  அது என் நண்பனுடையப் புனைப்பெயர்.  தமிழின் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவன். அவன் நினைவாகவே இந்தப் பெயர்.

எங்கப் பாட்டிக்கிட்ட கதை சொல்லச்சொல்லி ரொம்ப வற்புறுத்துவோம்.  ஆனா அவ்வளோ லேசுல சொல்லமாட்டாங்க.  நாங்க கட்டாயப்படுத்திக் கேக்கக்கேக்க கொஞ்சமா இறங்கி வருவாங்க கதையும் சொல்லுவாங்க.  சத்தியவான் சாவித்ரி கதையத்தவிற வேற எந்தக்கதையும் சொல்லமாட்டாங்க. ஆனா அவங்க சொல்லுற தொனியில, ஒவ்வொரு முறையும் அது ஏதோ அன்னைக்குத்தான் புதுசா கேக்குற மாதிரி அப்புடி ஒரு லாவகம் இருக்கும்.  பன்முகத்தன்மைக் கொண்ட எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் விந்தைமனிதனோட பேயெல்லாம் செத்துப்போச்சு பதிவுல அவங்க தாத்தா சொன்ன கதைய சொல்லிவிட்டு கடைசியா ஒரு பன்ச் வச்சிருக்காரு பாருங்க, நீங்களும் ஒரு தடவ போய் படிச்சிட்டு வந்திடுங்க.


தனிமையில் உட்கார்ந்து கொண்டு நமக்கு நாமே பேசிக்கொள்வது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது மிகுதியானவர்களுக்கு இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.  ஆனா அதுல ஒரு திருப்தி இருக்கும் இல்லைத் திருப்தி கிடைக்கும்.  இங்க இவங்களோட கவிதைகளும் அதைத்தான் செய்கின்றது.   தனிமையையும், இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையும்,  சந்தோசத்தையும், வெறுமையையும் என்று தன் என்ன ஓட்டங்களையும் சமூதாயத்தின் மேல் உள்ள கோபங்களையும் தன் கவிதைகள் வாயிலாக முன்வைக்கின்றார்.   பொருத்தமான புகைப்படங்களும், அர்த்தங்களுடன் கவிதையோடு நம்மை பயணிக்க வைக்கின்றன.




அழியாச் சுடர்கள் இந்தப் வலைப்பூவைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும்.  ஆனால் என் கண்ணில் பட்டது இரண்டு வாரங்களுக்கு முன்புதான்.  எனக்குப் பிடித்த எழுதாளர்களில் ஒருவரான சி.சு. செல்லப்பா அவர்களைப்பற்றி கூகுளாண்டரிடம் தேடிக்கொண்டிருந்த போது என்னோட சேர்ந்து கொண்டது இந்தத்தளம்.  தமிழின் இலக்கிய உலகின் முக்கியமான அனைத்து எழுத்தார்களின் எழுத்துக்களும் இங்க படிக்கக்கிடைக்கின்றது.  இலக்கிய பிரியர்களுக்கு முக்கியமாக எனக்குப் பிடித்த தளங்களின் வரிசையில் அதிக முன்னுரிமை இதற்கே.




மர்மயோகி  இவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன்.    சினிமா, அரசியல் இது இரண்டின் மீதும் மிக வெளிப்படையான விமர்சனங்களை மிக கடுமையான சொல்லடல்களில் வெளிப்படுத்துபவர்.  இவருடைய இந்தப் பதிவு என்ன சொல்ல நீங்களே படிச்சுப் பாருங்க,  நல்லவங்களுக்கு காலமில்ல.


அகிலன் இவர் அகி மியுசிக் நிறுவனர்.  இசைஞானியின் பாடல்களின் விநியோக உரிமை இவரிடமே உள்ளது.  அகி மியூசிக் உருவாக்கம் மற்றும் இளையராஜா அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் நான் பார்த்த இளையராஜா என்ற தலைப்பில் மிகுந்த முனைப்புடன் அழகாக தொகுத்து எழுதியுள்ளார்.   இசைத்தொடர்பான கட்டுரைகளும்,  அநத தொழிலில் தன் அனுபவங்களும் என்று இசைப்பிரியர்களுக்கான ஒரு தளம் இது.


நண்பர்களே மீண்டும் நாளை சந்திப்போம்..............

சமீர் அகமது.மு

20 comments:

  1. நல்ல அறிமுகங்களுடன் நல்ல தொடக்கம்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  3. அறிமுகப்படுத்தி இருக்கும் விதம் நல்லா இருக்குங்க....

    ReplyDelete
  4. சமீர்..@ இதுதான்ட தம்பி ....இதான்.. உனக்குள்ள இருக்குற ஆக்ரோசமான புரிதலும் அறிவும் இப்போ எரிமலையா சீறிப்பாயுது..

    அறிமுகங்களை தெரிவு செய்யும் வேகத்தில் தெரிகிறது உனது பார்வைகளின் விசாலம்.....!

    சுடர் மிகும் அறிவுகள் வெளிப்பட்டே தீரும்....! சீனா ஐயாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு உனக்கும் வாழ்த்துக்கள் தம்பி....! அடிச்சி தூள் கிளப்பு....!

    கலவை...அதிரடி....!!!!!!!

    ReplyDelete
  5. ஹாய் சமீர்,

    சாரி......... வலைச்சர ஆசிரியரே.... :-)))

    ரத்தினச் சுருக்கமாய், அழகான அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள்.. தொடருங்க..

    ReplyDelete
  6. //அருமை நண்பர் சூரியனின் வலைவாசல் சூர்யா//

    தல, என் பேரு அருண். சூர்யா இல்லை.

    மர்மயோகி, விந்தைமனிதன் தவிர மற்றவர்கள் எனக்கு புதுசு... படிச்சிடறேன்

    ReplyDelete
  7. அருண் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. இன்னிக்கு கலவை நல்லா இருக்கு ..!!

    ReplyDelete
  9. இந்த கலவை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. Machan Arumayana varthaigal, nee college time la books books nu alyum bothu yenna da idhu subject related books thedave neram illa, aana ivan yenna da na Literature adhum Tamil ilakiya books thedi thiruirane nu pesuvom namma pasanga. ippathanda oun kitta irukira anda aravam epadi patta arrvam nu enaku theriyudhu.

    Really i fell shame about me.
    carry on da.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் உங்களுக்கும் ... அறிமுகங்களுக்கும் ...

    ReplyDelete
  12. முதலில் ஜீவன்பென்னிக்கு வணக்கங்கள் :)
    அகிலன் தவிர மற்றவர்கள் பரிச்சியம்...
    நீங்கள் அறிமுகப்படுத்துகிற பாங்கு மிகவும் அழகு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. அழியாச்சுடர்கள் அறிமுகத்துக்கு நன்றி சமீர்
    - "அழியாச்சுடர்கள்" ராம்

    ReplyDelete
  14. @சமீர்

    ரொம்ப அழகா எளிமையா விளக்கி இருக்கிங்க சமீர்... நன்றி! என் மாப்ள ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ஏதோ சொல்லி இருக்காரு.. இருங்க என்னானு கேட்டு வரேன்... :))

    ReplyDelete
  15. @ தேவா

    //அறிவும் இப்போ எரிமலையா சீறிப்பாயுது..//

    என்னாது எரிமலை சீறிப்பாயுதா?? அது என்ன பல்சர் பைக்கா?? மாப்பு மலை எல்லாம் பாயாது. அது அங்கையேதான் இருக்கும்..

    //சுடர் மிகும் அறிவுகள் வெளிப்பட்டே தீரும்....!//

    பாத்து மாப்பு சுடர் அதிகமாகி சுட்டுட போகுது.

    //கலவை...அதிரடி....!!!!!!!//

    வர வர சன் டி.வி. நீ ரொம்ப பாக்கர மாப்பு... :))

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது