07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சமீர் அகமது. Show all posts
Showing posts with label சமீர் அகமது. Show all posts

Sunday, November 14, 2010

நன்றிகளுடன்-விடைபெறுகின்றேன்

புறத்திலிருந்து பார்க்கும் பொழுது சுலபமாகத்தெரியக்கூடிய ஒன்று உள் சென்று பார்க்கும் பொழுதே அதன் பின் உள்ள உழைப்புத்தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பே அதன் பின் உள்ள உழைப்பினை உணர முடிந்தது.  நிறைய புதிய, பழைய பதிவுகளையும் பதிவர்களையும் அறிந்து தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு எனக்கு பெரிதும் உதவியது.

இந்த ஒரு வார காலம் தொடர்ந்து வந்து பின்னூட்ட மிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும்,  மற்றும் வலைச்சரக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Saturday, November 13, 2010

கலவை நான்கு

 வணக்கம் வழக்கம் போல நேரா அறிமுகத்து போகலாம் வாங்க.


சேர சோழ பாண்டியர்களைப்பற்றி தெரியும்,  களப்பிறர்களைப் பற்றித்தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.  அதனால் பதிவர் ஹரிபாண்டி எழுதியிருக்கின்ற இந்தப் பதிவ படிங்க.  மேலும் வரலாறு சம்பந்தமான நிறைய தகவல்கன் இருக்கின்றது....! 


அமைதியான இரவுகளில் அழகான நினைவுகளுடன் பயணிக்க அழைக்கு வினோ ஒரு உணர்வு பூர்வமான கவிஞர். படம் பிடிப்பது போல தன் உணர்வுகளை டக் டக் என்று எடுத்து வார்த்தைகளுக்குள் நிறைத்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட். ஒவ்வொரு வார்தையும் சேந்து வரிகளாய் நாம்முள் சென்று அது கொடுக்கும் சுகமே அலாதியானதுதான்...நிலவின் மடிக்குப் போய்த்தான் பாருங்களேன்.....!

சிலருடைய அனுபவங்களும்,  அவர்களுடைய வாழ்க்கையும் நிறைய பேருக்கு பாடமாவும்,  முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தியாவும் இருக்கும்.  நம் பதிவுலகில் மிகுந்த தன்னம்பிக்கை மிக்க இவரும், இவருடைய மனம் + எனக்கும், உங்களுக்கும் உந்து சக்திதாங்க.

திருக்குறள் தமிழ் பொதுமறை முழுவதுமாக, தமிழ் அறிஞர்களின் உரையுடம் இங்கு பதிவேற்றியுள்ளார்கள்.  தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கு இது
ஒரு பொக்கிஷம்.

குழந்தைநலம் வலைப்பூவில் மருத்துவர் ராஜ் மோகன் குழந்தைகள் நலம் தொடர்பான மருத்துவ ரீதியான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விரிவான படங்களுடன் விளக்கமாக எழுதிவருகின்றார்.  நீங்களும் பார்க்கலாம். 

நாளை சந்திப்போம்........
அன்புடன்
சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

Friday, November 12, 2010

கலவை மூன்று

  வணக்கம் நண்பர்களே, வாருங்கள் அறிமுகத்திற்குள் போகலாம்.

தமிழர்கள் உலகமெங்கும் விரவியிருக்கிறார்கள் அதுவும் அந்தமானிலிருந்து எழுதும் இந்த நண்பரின் வலைப்பூ...ஏராளமான செய்திகளை கொடுக்கிறது. எதேச்சையாக வலைப்பூவினில் வழுக்கி விழுந்த நான் வெளி வர வெகுநேரமானது.....
வேண்டுமானல் நீங்கள் உள் நுழைந்து பாருங்களேன்!

சில படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை வலைப்பக்கத்தை சுட்டி காட்டினாலே போதும் உள்ளே இருக்கும் படைப்பே உங்களிடம் பேசி அறிமுகம் செய்யும். அப்படி ஒரு சிறப்பான படைப்புகளுக்கு சொந்தக்காரர்தான் ராஜா சந்திர சேகர். நீங்கள் வேண்டுமானால் வலைப்பூவை திறங்களே....இவரின் கவிதைகள் உங்களிடம் பேசும்.


தமிழனாக இந்தியனாகஎன்ற தலைப்பில் தான் ஊர் சுற்றிய அனுபவங்களை பதிவாக்கி நம்மையும் அவரோடு பயணிக்க வைக்கின்றார். இந்தப் பதிவை தொடராக எழுதத்தொடங்கியிருக்கின்றார். முதல் பாகம் மட்டுமே வந்துள்ளது. நீங்களும் இதை தொடரலாம்.

ß α √ ½ ¼ a² Σ ♂ ♀ ♫ ♪ Æ  இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா அப்போ இங்க வாங்க இத க்ளிக் பண்ணுங்க.

 

கேன்சர் ஒரு கொடுமையான நோய்.   இங்க அதோட ஒருத்தங்க எந்த அளவுக்கு போராடியிருக்காங்கன்னு படிச்சப்பா மனசு கனத்துப்போச்சு.  கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவில் இப்போது யாரும் எழுதுவது இல்லை.  ஆனால் அவருடைய வாழ்க்கை ஒரு ஆவணமாக அவர்களாலேயே பதிவு செய்யப்பட்டு நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  அவங்களுக்கு ஒரு சல்யூட். அவங்க மன உறுதிக்கும் ஒரு சல்யூட்.


சமீர் அகமது.மு


மேலும் வாசிக்க...

Thursday, November 11, 2010

கலவை இரண்டு

பின்னூட்டங்களின் மூலம் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

நிறங்கள் எத்தனையோ
குணங்களும் அத்தனை.

 கலவையின் போது சதவீதத்தின் அடிப்படையில் நிறங்கள் சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட வேறு வேறு நிறங்களையும் குணங்களையும் பெறுவது போலவே நம் பதிவர்களும் அவர்களின் பதிவுகளும்.  மலைத்துத்தான் போகின்றேன் . வாருங்கள் இன்றைய அறிமுகங்களுக்குச் செல்வோம்.

அகல்விளக்கு பெயரைப்போலவே அவரது எழுத்துக்களும் வாசகனுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியவை.  வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். வசனக் கோவில் என்ற சிறுகதையில், அமானுஷ்ய சம்பவங்களின் மூலம் நம்மை பயமுறுத்துகிறார்.  இவரது கவிதைகளும்,  கட்டுரைகளும் அழகாகவும் அருமையாவும் இருக்கின்றது.

சிங்கக்குட்டி. கலவையான தளம். கதவைத்திறங்கள் கண்டிப்பாக காற்று வரும் இந்தப் பதிவில் "எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது."  அது என்னன்ன தெரிஞ்சுக்க அந்தப் பதிவ படிங்க மற்றும் பழைய கதை புதிய பார்வை   இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.


வீரபாண்டியன் இந்திய ஆட்சிப் பணித்துறை இவர் அதிகமா எழுதுவது இல்லையென்றாலும் எழுதிய பதிவுகள் அனைத்தும் நல்லாயிருக்குங்க.  ஐஏஎஸ் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றவுடன் தனக்கிருந்த மன நிலையை அழகான வார்த்தைகளால் விவரிச்சிருக்கார்.



ப்ரியமுடன் ரமேஷ் பேருக்கு முன்னாடியே ப்ரியத்த வச்சிருக்கார்.  சிறுகதைகள், திரைப்படங்களுக்கான விமர்சங்கள் மற்றும் கவிதைகள் என்று படிப்பதற்கு நிறைய இருக்கின்றது.  கண்ணீர் துள்ளல்   இந்தப் பதிவ நான் ரெகமண்ட் செய்கின்றேன்.

curesure4u இது  ஆயுர்வேத மருத்துவத்தளம். ஒருவரே வெவ்வேறு மருத்துவ தலைப்புகளில் நான்கு தளங்களில் எழுதுகின்றார்.  மூலிகைகள் மற்றும் அதன் புகைப்படங்கள் என்று அறியனவற்றை தொகுத்து அளித்துள்ளார்.  தன் வேலைப்பளுவிற்கு இடையிலும் தொடர்ந்து இடுக்கைக்கள் எழுதுகின்றார்.  இது அனைவருக்கு தேவையான பயனுள்ள ஒரு தளம்


அலுவலகப்பணியின் காரணமாக காலையில் பதிவிட முடியவில்லை நண்பர்களே. மீண்டும் நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, November 10, 2010

கலவை ஒன்று

அருமை நண்பர் சூரியனின் வலைவாசல் அருண், ஜீவன் பென்னி பெயர்காரணம் என்னவென்று சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.  அது என் நண்பனுடையப் புனைப்பெயர்.  தமிழின் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவன். அவன் நினைவாகவே இந்தப் பெயர்.

எங்கப் பாட்டிக்கிட்ட கதை சொல்லச்சொல்லி ரொம்ப வற்புறுத்துவோம்.  ஆனா அவ்வளோ லேசுல சொல்லமாட்டாங்க.  நாங்க கட்டாயப்படுத்திக் கேக்கக்கேக்க கொஞ்சமா இறங்கி வருவாங்க கதையும் சொல்லுவாங்க.  சத்தியவான் சாவித்ரி கதையத்தவிற வேற எந்தக்கதையும் சொல்லமாட்டாங்க. ஆனா அவங்க சொல்லுற தொனியில, ஒவ்வொரு முறையும் அது ஏதோ அன்னைக்குத்தான் புதுசா கேக்குற மாதிரி அப்புடி ஒரு லாவகம் இருக்கும்.  பன்முகத்தன்மைக் கொண்ட எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் விந்தைமனிதனோட பேயெல்லாம் செத்துப்போச்சு பதிவுல அவங்க தாத்தா சொன்ன கதைய சொல்லிவிட்டு கடைசியா ஒரு பன்ச் வச்சிருக்காரு பாருங்க, நீங்களும் ஒரு தடவ போய் படிச்சிட்டு வந்திடுங்க.


தனிமையில் உட்கார்ந்து கொண்டு நமக்கு நாமே பேசிக்கொள்வது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது மிகுதியானவர்களுக்கு இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.  ஆனா அதுல ஒரு திருப்தி இருக்கும் இல்லைத் திருப்தி கிடைக்கும்.  இங்க இவங்களோட கவிதைகளும் அதைத்தான் செய்கின்றது.   தனிமையையும், இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையும்,  சந்தோசத்தையும், வெறுமையையும் என்று தன் என்ன ஓட்டங்களையும் சமூதாயத்தின் மேல் உள்ள கோபங்களையும் தன் கவிதைகள் வாயிலாக முன்வைக்கின்றார்.   பொருத்தமான புகைப்படங்களும், அர்த்தங்களுடன் கவிதையோடு நம்மை பயணிக்க வைக்கின்றன.




அழியாச் சுடர்கள் இந்தப் வலைப்பூவைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும்.  ஆனால் என் கண்ணில் பட்டது இரண்டு வாரங்களுக்கு முன்புதான்.  எனக்குப் பிடித்த எழுதாளர்களில் ஒருவரான சி.சு. செல்லப்பா அவர்களைப்பற்றி கூகுளாண்டரிடம் தேடிக்கொண்டிருந்த போது என்னோட சேர்ந்து கொண்டது இந்தத்தளம்.  தமிழின் இலக்கிய உலகின் முக்கியமான அனைத்து எழுத்தார்களின் எழுத்துக்களும் இங்க படிக்கக்கிடைக்கின்றது.  இலக்கிய பிரியர்களுக்கு முக்கியமாக எனக்குப் பிடித்த தளங்களின் வரிசையில் அதிக முன்னுரிமை இதற்கே.




மர்மயோகி  இவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன்.    சினிமா, அரசியல் இது இரண்டின் மீதும் மிக வெளிப்படையான விமர்சனங்களை மிக கடுமையான சொல்லடல்களில் வெளிப்படுத்துபவர்.  இவருடைய இந்தப் பதிவு என்ன சொல்ல நீங்களே படிச்சுப் பாருங்க,  நல்லவங்களுக்கு காலமில்ல.


அகிலன் இவர் அகி மியுசிக் நிறுவனர்.  இசைஞானியின் பாடல்களின் விநியோக உரிமை இவரிடமே உள்ளது.  அகி மியூசிக் உருவாக்கம் மற்றும் இளையராஜா அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் நான் பார்த்த இளையராஜா என்ற தலைப்பில் மிகுந்த முனைப்புடன் அழகாக தொகுத்து எழுதியுள்ளார்.   இசைத்தொடர்பான கட்டுரைகளும்,  அநத தொழிலில் தன் அனுபவங்களும் என்று இசைப்பிரியர்களுக்கான ஒரு தளம் இது.


நண்பர்களே மீண்டும் நாளை சந்திப்போம்..............

சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

Tuesday, November 9, 2010

சுயம்

இந்த வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயாவுக்கும், வரப்போகின்ற நாட்களில் ஆதரவு தரப்போகும் என் பதிவுலக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அறிமுகத்துக்குள் செல்கிறேன்.


என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.  அறிமுகத்தை சீனா ஐயாவே செய்து விட்ட படியால் நேராக (என் பதிவின்)அறிமுகங்களுக்கு செல்கின்றேன்.



என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்த வேளையில் முதலில்  என்னிடமிருந்த புகைப்படங்களைப் பதிவாக்கி முதல் அடியினை எடுத்து வைத்தேன்.  ரொம்ப சுலபமான வழி இதுவாகத்தான் இருக்கக்கூடும்.  புகைப்படங்கள் சிறப்பானவையோ இல்லையோ ஆனால் இந்தப்பதிவு மனதுக்கு நெருக்கமானது.


நெருக்கு நேராக பேசிக்கொள்ளும் போது ஒருவருக்கொருவர் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய இக்காலத்தில் என் நண்பர் ஒருவர் அலைபேசியில் ஒன்று சொல்லப்போக நான் ஒன்று செய்யப்போக என்று இந்தப்பதிவும் எனக்குப் பிடித்தமான ஒன்று.


அங்காடித்தெருவின் பாதிப்பில் எழுதப்பட்ட அனுபவப் பதிவு.  கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என்று நிறைய பேர் சொல்வார்கள்.   எனக்கு அதனுடைய அர்த்தம் நான் இங்கு வேலைப்பார்த்த போதுதான் தெரிந்தது. 


ஓட்டு போடுறது மிக முக்கியமான ஜனநாயகக் கடமை.  பதினெட்டு வயசு பூர்த்தியாகி முதன் முதலா ஓட்டு போடப்போகின்ற ஒருவனோட மனநிலையை கதையாக்கி பார்த்த என்னோட கன்னி முயற்சி  இந்த சிறுகதை.


இப்புடியே போய்க்கிட்டிருந்த பதிவுலகத்துல தீடீர்னு புயலடிச்சது மாதிரி நானும் கவிதை எழுத ஆரம்பித்தது ஒரு விபத்துதான்.  கவிதைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் படிக்கும்போது கிடைக்கும் நிறைவைவிட, நாமே எழுதிப் பார்க்கும் போதும், அதை மற்றவர்கள் பாரட்டும் போதும் கிடைக்கும் உணர்வு  அருமையானது.  மகிழ்ச்சி என்கின்ற தலைப்பில் நான் எழுதிய இந்த கவிதை எனக்குப் பிடித்தமான ஒன்று.

சுயாபுராணம் இத்தோடு முற்றும்.

நாளை முதல் பல நல்ல பதிவுகளையும், புதிய பதிவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்ய எண்ணம் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது