வீசிய வலையில் சிக்கிய வாசனைகள்.
➦➠ by:
அன்புடன் மலிக்கா
நேற்று உணர்வுகளுக்கு விருந்து.
இன்று உணவே விருந்து.
இன்று வலையில் சிக்கியது வளையோசைகளின் வாசனைகள்தான். அதென்ன! வளையோசையோடதான் வாசம் வருமா? வளையல்கள் இல்லாமலும் வரும், அப்படின்னு நீங்க கேட்கிறது புரிகிறது. என்ன இருந்தாலும் அதுக்கு ஒரு தனி ரசனைதான் இல்ல.
சரி சரி விசயத்துக்கு வருவோம். வலைவீச போனயிடத்தில் வசமாய் மாட்டினேன் வாசத்தில். பொய்தானே அதெப்படி படத்தில் வாசம் வரும் அப்படினெல்லாம் கேட்கக்கூடாது.
அடுப்பு ஊதாமல், புகை வராமல்,
புது புது ரகங்களை கண்கள் ரசிப்பதற்க்கும் அதைபார்த்து வாய் புசிப்பதற்க்கு கற்றுதரும் வித்தைகள் வலைகளின் வழியே உலாவருகிறது. அதனைக்கண்ட நம்ம வலையோ, வகை வகையாய் வகையறிய எதார்த்தமாக எட்டிப்பார்த்தால் வண்ண வண்ண பதார்த்தங்கள் வகைபடுத்தியிருக்க வலையை வகையாய் இழுத்து தன் வசமாக்கிக்கொண்டது. ருசிகளிலும் விதங்களிலும் நிறங்களிலும் வெவ்வேறாக இருந்தபோதும்.வெவ்வேறாக செய்தபோதும் அனைத்தும் ஒரே இடத்துக்கு போவதுதானே! அதனால் அவைகளே தங்களின் கைதிறன்களையும், வாசனைகளையும், ரசித்து ருசிப்பதையும் கண்முன்னே உங்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளார்கள் இனி உங்கள் விருப்பம்தான்.
வீசிய வலையில் வீசும் வாசனைகள் எப்படியிருக்குன்னு நீங்கதான் சொல்லனும். சொல்லாமல இருப்பீக, உயிர் உடல் இரண்டும் வாழ இது அவசியமல்லவா! அதனால் சொல்லுவீகன்னு நெனக்கிறேன்...
ஆத்தாடி இப்பவே மூக்கு திறக்குதே!வக வகயா கறியும் வச்சி
வாசமான குழம்பு வச்சிவீட்டு ஆள வளச்சிபோட்டு ராசாத்தி-உன்
வளையல் கைத்திறன காட்டிவிடு ராசாத்தி
அஞ்சுவக காயெடுத்து
அலுக்காம வேலபாத்துஅருமையாக சமச்சிவைய்யி ராசாத்தி
அது ஆரோக்கியம் தந்திடுமே ராசாத்தி
அவிச்ச முட்டை பொரிச்சி வச்சி
அவியல்கறி கூட வச்சிஅக்கரையா கொடுத்துவிட்டு ராசாத்தி-வீட்டு
அதிகாரத்தில் பங்குபோடு ராசாத்தி
நெய்மீனு குழம்புவச்சி
நெத்திலிமீனு வறுத்துவச்சிநித்த நித்தம் ஆக்கிப்போட்டு ராசாத்தி-நீ
நெனச்ச காரியத்த முடிச்சிவிடு ராசாத்தி
பச்ச காய்கறியில் கூட்டு வச்சி
பக்குவமா சமச்சி வச்சிபண்போடு பரிமாறிவிட்டு ராசாத்தி-நல்ல
பேர வாங்கி குவிச்சுவிடு ராசாத்தி
வெள்ளாட்டுக்கறி எலும்பு வாங்கி
வெட வெடன்னு சூப்பு வச்சிவாய்க்கு ருசியா கொடுத்துவிட்டு ராசாத்தி
வீட்டுச்சாவி கையில் கேளு ராசாத்தி
புது புதுசா பலகாரம் செஞ்சி
புதுவிதமா அலங்கரிச்சிபிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு ராசாத்தி
பாசத்திலும் பங்குபோடு ராசாத்தி
பசியோடு புசிக்கும்போது
பாவக்காயும் ருசிக்குமடி பக்குவமா சமைச்சிபோட்டா
பலவயிறு குளிருமடி ராசாத்தி
பல பாராட்டையும் வாங்கிக்கலாம் ராசாத்தி..
இன்னக்கி வலையில் சிக்கியது அம்புட்டுத்தான்
இனி நாளைக்கி என்ன சிக்குதுன்னு பார்ப்போம்.
நல்லா பசிக்கிறது போய் சாப்பிட்டுவிட்டு வாரேன்ன்ன்
|
|
அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்... போயி சமையல் குறிப்பு படிச்சு பார்த்துட்டு சமையல் கத்துக்க வேண்டியதுதான்... :)))
ReplyDeleteநன்றிங்க மேடம்...
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
வளையோசைகளின்...
ReplyDeleteவாசனைகளின் அறிமுகம் அற்புதம்...!
இதுல... நான்
பார்த்தவங்க
பாதிபேர்....!
மீதி...!
வலைல தானா வந்து விழுந்ததா... இல்ல...
வலைவீசி பிடிச்சீங்களா...!
அறிமுகபடுத்தியவருக்கும்...
அறிமுகமானவர்களுக்கும்...
வாழ்த்துக்கள்...!
This comment has been removed by the author.
ReplyDeleteகாஞ்சி முரளி said...
ReplyDeleteவளையோசைகளின்...
வாசனைகளின் அறிமுகம் அற்புதம்...!/
ஹை அப்படியா ரொம்ம்ம்ப சந்தோஷம்
//இதுல... நான்
பார்த்தவங்க
பாதிபேர்....!
மீதி...!
வலைல தானா வந்து விழுந்ததா... இல்ல...
வலைவீசி பிடிச்சீங்களா...!//
அத ஏன் கேட்குறீங்க வாசனை சிக்குமா சகோ.
நாமதான் தேடிபோகவேண்டியிருந்தது வலையும் களைத்து
வலைவீசிய வளைகைகளும் வலித்துவிட்டது ஸ்ஸ் அம்மாடியோ..
//அறிமுகபடுத்தியவருக்கும்...
அறிமுகமானவர்களுக்கும்...
வாழ்த்துக்கள்...!//
வாழ்த்துக்கும் கருத்துக்கு மிக்க நன்றி சகோ..
வாவ்! கவிதையுடன், சூப்பரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே.... வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும்
ReplyDeleteகாஞ்சி முரளி said...
Comment deleted
//
அப்படின்னு இருக்கே என்ன எழுதி அழிச்சீங்க சகோ..[விடுவோமா]
//Chitra said...
ReplyDeleteவாவ்! கவிதையுடன், சூப்பரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே.... வாழ்த்துக்கள்!//
எல்லாம் உங்களுக்காகத்தான் மேடமக்கா. வாழ்த்துக்களும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteமாணவன் said...
ReplyDeleteஅனைவருமே சிறப்பான அறிமுகங்கள்... போயி சமையல் குறிப்பு படிச்சு பார்த்துட்டு சமையல் கத்துக்க வேண்டியதுதான்... :)))
நன்றிங்க மேடம்...
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.//
வாங்க மாணவன். குறிபெடுத்துவச்சி செய்துபாருங்க நம்மளும் எப்பதான் இதெல்லாம் கற்றுக்கொள்வது தன் கையே தனக்குதவி என்பதுபோல்..ஹா ஹா.
மிக்க நன்றி மாணவன் வருகைக்கும் வாழ்த்துக்கும்..
சே.குமார் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.
மிக்க நன்றி சே.குமார் ..
இந்த..
ReplyDelete"நதிமூலம்...ரிஷிமூலம்.." இதையெல்லாம் அலசி...ஆராயக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க...!
அப்படீன்னா...!
நதி எங்கே பிறக்கிறதுன்னு.. அதாவது அதன் மூலத்தை... அறியமுடியாது... பார்க்கமுடியாது... பார்க்க முயற்சி செய்யக்கூடாது எனவும்....
ரிஷின்னா... காட்டிலேயே... வசித்து... அனைத்தையும் துறந்து (உறவுகள், உடை,உணர்ச்சி, பணம், புகழ், பெருமை, வசதி, இப்படி பூலோக வாழ்வியலை மறுத்து... மறந்து... வெறுத்து) தவம் செய்யும் முனிவர்கள் (நான் குறிப்பிடுவது.... இப்ப.. இந்தகாலாத்துல... இங்க உலவுற... சாமியார்ன்னு சொல்லி அலைந்து கொண்டிருப்பவங்களை அல்ல) எங்கிருந்து வந்தார்கள்... எப்படி வந்தார்கள்... எப்படி வாழ்கிறார்கள் என அறியவும்... ஆராயவும்... முயற்சி செய்யக்கூடாது எனவும்....
பெரியவங்க சொல்வார்கள்...!
அதுபோல...delete செய்த ///எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும்/// commentட பார்க்க முயலாதீங்க....!
உணர்வுகளுக்கு கொஞ்சம் விருந்தளித்துவிட்டு, இன்று விருந்தாக உணவா? வழக்கமாக கடைசி தினத்தில்தான் சமையல் பதிவுகள் அறிமுகத்துவர் இங்கு வருபவர்கள். ஆனா, நீங்க முதல்ல பசியாத்துனாதான் சொல்ற விஷயம் செவியைத் தாண்டி மூளைக்குப் போகும்னு புரிஞ்சு வச்சிருக்கீங்க.
ReplyDeleteஎதையும் வித்தியாசப் படுத்தும் போதுதான் அது கவனிக்கப் படுகிறது.
ReplyDeleteஅறிமுகங்களை போட்டோக்களுடன் அதகளப் படுத்தி விட்டீர்கள் வித்தியாசமாய்.
பின்னூட்டங்கள் சிலவும் டெம்ப்ளேட்டாக இல்லாமல் ரசிக்க வைக்கின்றன
நேற்றும் இன்றும்.
பசியா இருந்தேன் அருமையான
ReplyDeleteசமையல் குறிப்போடு அட்டகாசமான முகங்கள்,சமையல் குறிப்பு படிச்சு பார்த்துட்டு சமையல் கத்துக்க வேண்டியதுதான்
வாழ்த்துக்கள் கவிதாயனி
அட்டகாசம் போங்க. என்ன மணம் என்ன ருசி, அப்பப்பா அருமை
ReplyDeleteநல்ல தொகுப்பாளினிதான் நீங்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு பாராட்டுக்கள்.
//பெரியவங்க சொல்வார்கள்...!
ReplyDeleteஅதுபோல...delete செய்த ///எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும்/// commentட பார்க்க முயலாதீங்க....!//
ஆக நதிமூலம்...ரிஷிமூலம்.." இதையெல்லாம் அலசி...ஆராயக்கூடாதுன்னு சொல்லுறீங்க அப்புடிதானே. இருந்தாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சரி வேணாம் சொல்லவேணாம் விடுங்க சகோ..[எப்புடியும் அப்பால கேட்டுகலாம் மல்லி விடு விடு]
ஹுஸைனம்மா said...
ReplyDeleteஉணர்வுகளுக்கு கொஞ்சம் விருந்தளித்துவிட்டு, இன்று விருந்தாக உணவா? வழக்கமாக கடைசி தினத்தில்தான் சமையல் பதிவுகள் அறிமுகத்துவர் இங்கு வருபவர்கள். ஆனா, நீங்க முதல்ல பசியாத்துனாதான் சொல்ற விஷயம் செவியைத் தாண்டி மூளைக்குப் போகும்னு புரிஞ்சு வச்சிருக்கீங்க.//
வாங்க புரட்சியம்மா..
அதுவும் அப்படியா! கடைசியா வருவதை முன்னாலேயே போட்டுவிட்டேனா. ஆனாலும் நீங்க சொல்வதுபோல் பசியாத்திவிட்டு சொல்லுறதை சொன்னா, செவிவழியே கொஞ்சமாவது நாம சொல்வது சிந்தனைச்செல்லுக்கு போகுமுன்னு நம்ம மூளைக்கு தோணிவிட்டதுபோல அதான் முந்திக்கிச்சு முன்னறிவிபு செய்து..
தாங்களின் வருகைக்கும்
நுணுக்கமான கருத்துகும்
மிக்க நன்றி ஹுசைனம்மா..
அரபுத்தமிழன் said...
ReplyDeleteஎதையும் வித்தியாசப் படுத்தும் போதுதான் அது கவனிக்கப் படுகிறது.
அறிமுகங்களை போட்டோக்களுடன் அதகளப் படுத்தி விட்டீர்கள் வித்தியாசமாய்.
பின்னூட்டங்கள் சிலவும் டெம்ப்ளேட்டாக இல்லாமல் ரசிக்க வைக்கின்றன
நேற்றும் இன்றும்.//
வாங்க அரபுத்தமிழன்
தாங்களின் வருகைக்கும் வித்தியாசமான கருத்துக்களுக்கு
மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி அரபுத்தமிழன் ..
//S Maharajan said...
ReplyDeleteபசியா இருந்தேன் அருமையான
சமையல் குறிப்போடு அட்டகாசமான முகங்கள்,சமையல் குறிப்பு படிச்சு பார்த்துட்டு சமையல் கத்துக்க வேண்டியதுதான்
வாழ்த்துக்கள் கவிதாயனி.//
இப்பதானே திருமணம் முடிஞ்சியிருக்கு அதுக்குள்ள சமைக்க சொல்லுறாங்களா! மகா எல்லாம் கத்துகொள்ளனும்தான் எவ்வவாச்சிம் ஒருநாள் உதவுமுல்ல ஹா ஹா.
மிக்க நன்றி மகராஜன்..
teedummanam said...
ReplyDeleteஅட்டகாசம் போங்க. என்ன மணம் என்ன ருசி, அப்பப்பா அருமை
நல்ல தொகுப்பாளினிதான் நீங்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு பாராட்டுக்கள்.//
அப்ப உங்களுக்கும் படத்தில் உள்ளது மணக்குதா அப்ப நான் பொய் சொல்லல ஹி ஹி. வருகைகும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்கோ..
அட்டகாசமான அறிமுகம்,நேற்றைய உணர்வுகள் புதுசு,இன்று அனைவருமே எல்லோருக்கும் தெரிந்த பிரபலங்கள்.
ReplyDeleteஇனிய கவிதையுடன் அருமையாய் அறிமுகங்கள்.
ReplyDeleteசின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
”அருமையான அறிமுகங்கள்” என்ற கமெண்ட் இன்றிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறது.
ReplyDeleteஅன்புடன்
நிர்வாகியப்பன்.
கமலா. ஆகா என்ன ருசி. என் சமையல். தூயாவின் சமையல் என எல்லாம் எனக்கு இப்பதான் அறிமுகம் ஆகிறார்கள் நான் கொஞ்சம் சமையல் பிரியன். தேங்ஸ் மலிக்.
ReplyDeleteasiya omar said...
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகம்,நேற்றைய உணர்வுகள் புதுசு,இன்று அனைவருமே எல்லோருக்கும் தெரிந்த பிரபலங்கள்.//
வாங்க ஆசியாக்கா. அப்படியா எனக்கே இதில் சிலரை இதற்காக தேடும்போதுதான் தெரியும் க்கா தாங்களின் வருகைக்கும்
கருத்துகும் மிக்க நன்றி ஆசியாக்கா..
மாதேவி said...
ReplyDeleteஇனிய கவிதையுடன் அருமையாய் அறிமுகங்கள்.
சின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.//
வாங்க மாதேவி.
தாங்களின் வருகைக்கும்
அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி..
// Anonymous said...
ReplyDelete”அருமையான அறிமுகங்கள்” என்ற கமெண்ட் இன்றிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறது.
அன்புடன்
நிர்வாகியப்பன்.//
நிர்வாகியப்பன் அவர்களே
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்புறம் நீங்க சொல்வதுபோல்
இங்கு யாருமே
அருமையான அறிமுகங்கள். என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
தியகராஜன் said...
ReplyDeleteகமலா. ஆகா என்ன ருசி. என் சமையல். தூயாவின் சமையல் என எல்லாம் எனக்கு இப்பதான் அறிமுகம் ஆகிறார்கள் நான் கொஞ்சம் சமையல் பிரியன். தேங்ஸ் மலிக்.//
வாங்க தியாகராஜன். நீங்களுமா! அப்படியென்ன ஆச்சரியமுன்னு பார்க்கிறீங்களா எங்க ஆளும் நல்ல சமைக்கும் பிரியர் அதான்.
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.
மிக அருமையான வாசனைகள் மலிக்கா..))
ReplyDeleteகவிதையுடன் அறிமுகபடுத்தி அசத்தீட்டீங்க மலிக்கா...மிக்க நன்றிப்பா!!
ReplyDeleteருசியாய் பரிமாறினீர்கள் சமையல் வலைப்பதிவுகளை!
ReplyDeleteநடக்கட்டும்... கவிஞர் மலிக்கா!
.31...
இந்த இடுகைக்கு நான் கமென்ட் போடும்போது,
ReplyDeleteஅது எத்தனையாவது கமெண்டாக வருகிறது
என்பதைத்தான்... பின்வரும் இலக்கம்
குறிக்கிறது.
...32...
மலிக்கா நீங்க எல்லாத்திலும் அசத்தல்தான். உங்களிடம் இயல்பாகவே நகைச்சுவையும் அறிவிச்சுவையும் இருக்கனும் இல்லையின்ன எப்படி இப்படியெல்லாம் அசத்த முடியும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
என்னமா இங்கு போனேன் இங்கு வரசொல்லியிருக்கிறாய் உன்கவிதைகளை பார்க்காமல் 25 நாட்கள் என்னவோ போலிருந்தது.
ReplyDeleteஅசத்து அசத்து உனக்கு சொல்லிக்கொடுக்கவா வேண்டும். அந்தபொண்ணு ஃபாயிஜாவோட தளம் ஓப்பனாக நேரமெடுக்கிறதுமா.ஏன்?
நல்லபணி அதை நன்றாக செய்கிறாய் மனமார பாராட்டுகிறேன் .சீக்கிரம் நீரோடையில் ஒரு கவிதையை எழுதுமா..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
அறிமுகக் கவிதைகள் அருமை!! என் சமையலறையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க!!
ReplyDeleteசூப்பர் தொகுப்புகள் அருமையான கவிதைவரிகள் கவிதாயினியாச்சே அதனால்தான் கவியருவிகொட்டுது..
ReplyDeleteவாழ்த்துக்கள்
நான் ருசித்த சமையல் பக்கங்கள்தான் ....ஆனா கொழுகட்டை மட்டும் இன்னும் கிடைக்கலையே...அவ்வ்வ்வ்வ்
ReplyDeletewhy late..!
ReplyDeleteSame late.....!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteமிக அருமையான வாசனைகள் மலிக்கா..))//
வாங்கக்கா. வருகைக்கும் வாசனைகள் பிடித்தமைக்கும் மிக்க நன்றிக்கா..
//S.Menaga said...
ReplyDeleteகவிதையுடன் அறிமுகபடுத்தி அசத்தீட்டீங்க மலிக்கா...மிக்க நன்றிப்பா!!//
வாங்க மேனகா. எல்லாம் சமையல்ராணிகளை கவரத்தான். அதுசரி வீட்டுக்கு வராங்காட்டியும் விருந்து போடுவீங்கள்ள
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
NIZAMUDEEN said...
ReplyDeleteருசியாய் பரிமாறினீர்கள் சமையல் வலைப்பதிவுகளை!
நடக்கட்டும்... கவிஞர் மலிக்கா!
.31...//
வாங்கண்ணா
ரசித்து ருசிபார்த்தமைக்கு நன்றிகளண்ணா..
NIZAMUDEEN said...
ReplyDeleteஇந்த இடுகைக்கு நான் கமென்ட் போடும்போது,
அது எத்தனையாவது கமெண்டாக வருகிறது
என்பதைத்தான்... பின்வரும் இலக்கம்
குறிக்கிறது.
...32...//
ஓகோ அதுதானா இது. என்னாமா யோசிக்கிறாங்கப்பு சூப்பரண்ணா. நல்ல பழக்கம்தான். தொடருங்கள்..
மிக்க நன்றிண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..
கதிர் said...
ReplyDeleteமலிக்கா நீங்க எல்லாத்திலும் அசத்தல்தான். உங்களிடம் இயல்பாகவே நகைச்சுவையும் அறிவிச்சுவையும் இருக்கனும் இல்லையின்ன எப்படி இப்படியெல்லாம் அசத்த முடியும்.
வாழ்த்துக்கள்.//
வாங்க கதிர்.
இப்படி உசுப்பேத்தியே உசுப்பிவிடுங்க. ரொம்ப சந்தோஷமுங்க தாங்களின் வருகைக்கும் உசுப்பேற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்துவந்து உசுபேத்துங்க சுறுசுறுபாக எழுதலாமுல்ல அதேன் சொன்னேன்..
சிவகாமி said...
ReplyDeleteஎன்னமா இங்கு போனேன் இங்கு வரசொல்லியிருக்கிறாய் உன்கவிதைகளை பார்க்காமல் 25 நாட்கள் என்னவோ போலிருந்தது.
அசத்து அசத்து உனக்கு சொல்லிக்கொடுக்கவா வேண்டும். அந்தபொண்ணு ஃபாயிஜாவோட தளம் ஓப்பனாக நேரமெடுக்கிறதுமா.ஏன்?
நல்லபணி அதை நன்றாக செய்கிறாய் மனமார பாராட்டுகிறேன் .சீக்கிரம் நீரோடையில் ஒரு கவிதையை எழுதுமா..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//
வாங்கம்மா எப்படியிருக்கீங்க நலமா?
1 வார ஆசிரியர் பணிமா. அதான். அதுமுடிஞ்சதும் வந்துபோடுகிறேன் கவிதை. சந்தோஷமா உங்க அன்புக்கு..
எனக்குதான் அவங்களோடது திறக்க நேரமெடுக்கிறதுமா. ஏன்னுதெரியலை.
மனமார பாரட்டும் தாங்களைபோன்றவர்கள் கிடைத்ததில் மகிழ்கிறேன்மா. மிக்க நன்றிமா வருகைக்கும் அன்பான கருதிற்க்கும்.. மிக்க மக்ழிச்சிமா
தெய்வசுகந்தி said...
ReplyDeleteஅறிமுகக் கவிதைகள் அருமை!! என் சமையலறையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க!!//
வாங்க சுகந்தி
தாங்களின்
வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி..
நிஷா said...
ReplyDeleteசூப்பர் தொகுப்புகள் அருமையான கவிதைவரிகள் கவிதாயினியாச்சே அதனால்தான் கவியருவிகொட்டுது..
வாழ்த்துக்கள்//
வாங்க நிஷா. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி..
ஸ்ஸ் மெதுவா எங்கிட்ட சொல்லுங்க
அதுசரி யார் சொன்னது நான் கவிதாயினின்னு. சும்மா கிண்டல்பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் ஹி ஹி
ஜெய்லானி said...
ReplyDeleteநான் ருசித்த சமையல் பக்கங்கள்தான் ....ஆனா கொழுகட்டை மட்டும் இன்னும் கிடைக்கலையே...அவ்வ்வ்வ்வ்//
கொழுக்கட்டைதானே அது வேகுதாம் அண்ணாத்தே வெள்ளக்காக்கா வேறு ஊருக்கு போயிருக்காம் வந்ததும் அனுப்புவாங்க..
ஏஏஏஏஏஏஏஏன் இப்படி லேட்டு மாட்டுவண்டியிலா வந்தீக..
காஞ்சி முரளி said...
ReplyDeletewhy late..!
Same late.....!//
அவுக அப்படிதான் சகோ. கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாதான் இருக்காங்க..அதை அவங்க காதில் போட்டுவிட வேண்டாம் சரியா..
அக்கா...முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்...
ReplyDeleteகவிதையின் மூலமாக அழகாக அறிமுகபடுத்தி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...
உங்கள் திறன் மென்மேலும் அதிகரிக்க வாழ்த்துகள்...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கின்றிங்களோ...
நானும் எதாவது எழுத வேண்டும் என்றால் வரவே மாட்டேன் என்கிறது...
GEETHA ACHAL said...
ReplyDeleteஅக்கா...முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்...
கவிதையின் மூலமாக அழகாக அறிமுகபடுத்தி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...
உங்கள் திறன் மென்மேலும் அதிகரிக்க வாழ்த்துகள்...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கின்றிங்களோ...
வாங்க கீதா. எல்லாம் உங்களின் கைமணங்கதான் இப்படி கவிதயா கொட்டவச்சிடுச்சி கீத்து.யோசனையா அப்படின்னா எப்புடியிருக்கும்
:{{{{{{{{{.
ரொம்ப சந்தோஷம் கீதா
//நானும் எதாவது எழுத வேண்டும் என்றால் வரவே மாட்டேன் என்கிறது...//
இத நாங்க நம்பனும். எப்படியெல்ல்லாம் சமைத்து அசத்துறீங்க. இதென்ன ஜுஜிபி..
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா..
அத்தன...ராசாத்தி கவிதையும், வலைதள அறிமுகமும்....சூப்பர்.. :)
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள்..!