07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 2, 2011

வந்தாள் அப்பாவியே...:)))

"ஹலோ... ஹலோ.... மைக் டெஸ்டிங்... A B C D"

"உனக்கு ஆங்கிலத்துல தெரிஞ்சதே அந்த நாலு எழுத்து தான்னு எங்களுக்கு தெரியும்... எதுக்கு இப்ப பந்தா பண்ற"

"சத்தம் மட்டும் வருது ஆளக்காணோம்... ஹலோ யார் பேசறது?"

"நீதான்டா பேசற"

"ஐயையோ... அவனா நீ... ஆஹா.... இங்கயும் வந்துட்டானா.... அவ்வவ்வ்வ்வ்"

"நான் இங்கயும் வருவேன்... அங்கயும் வருவேன்... நான் என்ன உன்னை மாதிரி துபாய்ல..."

அவசரமாய் இடைமறித்து "சரி சரி... இப்ப அதை பத்தி என்ன.... நீ வந்த வேலைய சொல்லு"

"யாரோ அப்பாவி தங்கமணினு ஒரு பொண்ணு இன்னிக்கி இங்க வர போகுதாம்... நம்மள மாதிரி குண்டக்க மண்டக்க பேசுதுன்னு சொன்னாங்க... அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"அடி ஆத்தி... இன்னொரு குண்டக்க மண்டக்கவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே... அந்த பொண்ண பத்தி கொஞ்சம் சொல்லு... நானும் கொஞ்சம் சுதாரிச்சுக்கறேன்..."

"உனக்கு எதுக்கு நான் சொல்லணும்"

"என்னப்பா இப்படி சொல்லிட்ட... நாம என்ன அப்படியா பழகினோம்..."

"எப்படி பழகினோம்? அது சரி, யார் நீ?"

"ஆஹா... எல்லாம் ப்ளான் பண்ணித்தான் பண்றாய்ங்க...ஊஊஊஊ...."

"சரி ஊளை இடாத... தொலஞ்சு போ... அந்த அப்பாவியை பத்தி சொல்றேன் கேளு"

"சொல்லு சொல்லு..." என ஆர்வமாகிறார்

"அந்த பொண்ணுக்கு இட்லி மாமினு ஒரு பட்ட பேரு இருக்கு தெரியுமா?"

"ஏன்... அம்புட்டு நல்லா இட்லி செய்யுமா?"

"நீ திங்கரதுலையே இரு.... இது வேற... அப்பாவி இட்லி சுடறதுக்குபட்ட கஷ்டத்த படிச்சா கல் இட்லியும் கரைஞ்சு போகும்...ச்சே... கல் மனசும் கரைஞ்சு போகும்னு சொல்ல வந்தேன்..."

"அப்படியா.. அடடா... ஒரே சோக கதை தானா... சிரிப்பா கிரிப்பா ஒண்ணுமில்லையா?"

"ஏன் இல்லாம... நம்மள பத்தி கூட அப்பாவி எழுதி இருக்காங்களே..."

"அடியாத்தி... சொல்லவேயில்ல... என்னை பத்தி நல்லவிதமா சொல்லி இருக்கா"

"நீயே போய் பாரு இந்த முட்டை ஆம்லேட் தத்துவத்த...சும்மா படிச்சாலே அதிருதில்ல... அதுமட்டுமில்ல 'தங்கமணி ரங்கமணி' னு ரெண்டு கேரக்டர்களை உருவாக்கி ஒரே காமடி தர்பார் தான் போ"

"அது யாரு தங்கமணி ரங்கமணி"

"தங்கமணினா மனைவி ரங்கமணினா கணவர்னு பொதுவா இங்க சொல்றாங்க... இந்த ரங்கமணிகள் க.மு Vs க.பி பதிவு படிச்சா இன்னைக்கி பூரா சிரிக்கலாம்"

"அதென்ன க.மு Vs க.பி... புதுசா எதுனா காப்பி பொடி பேரா"

"இல்ல மூக்கு பொடி பேரு.... போடாங்......................"

"இங்க பாரு, திட்டறதுன்னா சத்தமா திட்டு... இப்படி வாய்க்குள்ளையே பேசிக்கறது நல்லால்ல... அவ்வ்வ்வவ்"

"சரி சரி அழுவாத... அப்புறம் எனக்கு எங்க ஆத்தா ஞாபகம் வந்துடும்... அதுவும் அப்பாவியோட இந்த அம்மா கவிதைய படிச்சா இப்பவே அம்மாவை பாக்கணும்னு தோணும்"

"ஓஹோ...அப்புறம்"

"அப்புறம் விழுப்புரம்... நான் என்ன கதையா சொல்றேன்... ஆனா இந்த அப்பாவி தங்கமணி நெறைய கதை சொல்லி இருக்காங்க... நச்சுனு ஒரு கதை வேணுமா இதோ 'என்னை போல் ஒருவன்'.... கணவன் மனைவியின் அன்பை கூறும் 'பிரசவ வைராக்கியம்'னு ஒரு கதை, ஒரு குட்டி பொண்ணோட அம்மாவுக்கான ஏக்கம் கூறும் 'ஆசை ஆசை இப்பொழுது'னு ஒரு கதை... இப்படி சொல்லிட்டே போலாம்"

"ஆஹா... இவ்ளோ இருக்கா.. எல்லாம் சின்னகதயாத்தான் இருக்கும் போலியே... தொடர்கதை எல்லாம் இல்லியா"

"நல்லா கேட்ட போ... சன் டிவில சீரியல் எழுத கூப்பிடராங்கன்னு கூட ஒரு வதந்தி இருக்கு... இப்ப 'ஜில்லுனு ஒரு காதல்' ஒரு தொடர் கதை ஓடிட்டு இருக்கு... கொஞ்ச நாள் முன்னாடி தம்பி சௌந்தர் கூட இந்த கதைய பத்தி வலைச்சரத்துல சொல்லி இருந்தாரே... இதுக்கு முன்னாடி 'பிரியமானவளே'னு ஒண்ணு... தான் எழுதினதுல தனக்கு பிடிச்சது இதான்னு அப்பாவி ஒரு பேட்டில சொல்லி இருக்காங்க"

"காதல் கதை மட்டும் தான் எழுதுமா இந்த புள்ள"

"அப்படின்னு இல்ல... 'அதே கண்கள்'னு ஒரு திரில்லர் மாதிரி ஒண்ணு ஆரம்பிச்சு அப்புறம் எக்கசக்க யு டர்ன் எடுத்து அதுவும் லவ் ஸ்டோரியா போய் முடிஞ்ச கதைகளும் உண்டு"

"ஓஹோ... யாரு பெத்த புள்ளையோ... பேர் சொல்றாப்ல வளந்து நிக்குது போல"

"நீ பேருன்னு சொன்னதும் 'நான் பத்திரகாளியா'னு அப்பாவி அவங்களுக்கு பேரு வெச்ச புராணம் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது... பேரை பாத்து ஒண்ணும் பயந்துடாதே"

"யாரப்பாத்து பயம்னு சொன்ன... நானெல்லாம் சந்திரமுகிகிட்டையே டென் ரூபிக்கு சில்லற கேட்டவனாக்கும்... ஹ்ம்ம்கும்...."

"உன் சில்லறை புத்திய நிரூபிக்கற பாத்தியா... ஆனா நம்ம அப்பாவி இந்த சில்லறை மேட்டர் எல்லாம் கூட அலசி காய போட்டு இருக்கு இந்த பதிவுல"

"ஓஹோ... அப்ப டெல்லி வரைக்கும் போகும்னு சொல்லு"

"என்னது டெல்லியா... அது மட்டும் அப்பாவிக்கு ஒத்தே வராது... ஹிந்தி சுட்டு போட்டாலும் வராது... அந்த காமடிய 'உபர்வாலா கியா ஹே' ஒரு பதிவுல சொல்லி இருக்கு பாரேன்... ஒரே சிரிப்பு"

"அது சரி... இந்த பொண்ணுக்கு எங்கன ஊரு... எங்க மதுர பக்கமா"

"அப்பாவிக்கு சொந்த ஊரு நம்ம சரளா ஊரு"

"இங்க பாரு... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்... சரளா என்னோட ஜோடி... அதென்ன நம்ம சரளா... உன் ஜோடிய நான் கேட்டனா... இல்ல கேட்டனா... இது நல்லால்ல ஜென்டில்மேன்"

"போடாங்........."

"ஒகே....ஒகே... அப்பாவி கோயம்புத்தூர்ல தான் இருக்காகளா...அடுத்த வாரம் பொள்ளாச்சி பக்கம் ஒரு சூட்டிங் இருக்கு... அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்"

"இரு இரு... அப்பாவிக்கு சொந்த ஊரு தான் கோயமுத்தூரு... இப்ப குப்ப கொட்டிட்டு இருக்கறது கனடால"

"அந்த பொண்ணும் குப்ப தான் கொட்டுதா... நம்ம ஜாதி...ஹா ஹா ஹா"

"ஏய் லூசு... ஒரு பேச்சுக்கு குப்பனு சொன்னேன்... ஏதோ மன்னார் அண்ட் மன்னார் கம்பேனில மண்ட காயற வேலையாம்"

"ஓஹோ... அது சரி... ப்ளாக்ல மட்டும் தான் எழுதுதா... பத்திரிக்க கித்திரிக்க ஒண்ணுமில்லையா"

"என்ன அப்படி கேட்டுட்ட... 'என் பௌர்ணமி' அப்புறம் 'என்னுடன் ஒரு நாள்' இந்த ரெண்டு கவிதையும் விகடன்ல கூட வந்திருக்குனா பாரேன்"

"அது ஏதோ தெரியாத்தனமா வந்துடுச்சு விடுங்க பாஸ்" என ஒரு குரல் கேட்க

"யாருப்பா அது... யாரா இருந்தாலும் முன்னுக்கு வந்து பேசணும்... இப்படி ராத்திரி நேரத்துல சும்மா சும்மா சவுண்ட் விட்டு பீதிய கிளப்ப கூடாது...ஆமா சொல்லிட்டேன்... அவ்வ்வ்வவ்வ்வ்"

"நான் தாங்க மைண்ட்வாய்ஸ்" என என்ட்ரி ஆகிறது அப்பாவிக்கான சனிதிசை

"அடடே... உங்கள பத்தி நெறைய கேள்விப்பட்டு இருக்கேன்... கமல் சாருக்கு ஒரு 'அவள் ஒரு தொடர்கதை' ஜூனியர் மாதிரி நீங்க அப்பாவி ப்ளாக்ல ஒன்றி போன ஒரு பாத்திரம் இல்லையா... வாங்க வாங்க"

"Yes yes... Glad to meet you Mr. Parthiban... I heard a lot about you... what a pleasure what a pleasure?"

"என்னது உங்களுக்கு பிரசர் சாஸ்தி ஆய்ருச்சா...நல்ல டாக்டரை பாக்க வேண்டியது தானே" என வைகை புயல் கிளம்ப

"ha ha ha ... that was funny... real funny... ha ha ha"

"இங்க பாருங்க... சும்மா பன்னி கின்னினு திட்டற வேலை எல்லாம் வேண்டாம்... நான் அழுதுருவேன்" என டென்ஷன் ஆகிறார் வைகை புயல்

பார்த்திபன் : "ஏன்யா மானத்த வாங்கற... அது பன்னி இல்ல... funny ... சிரிப்பாணியா பேசறனு சொல்றாரு நம்ம மைண்ட்வாய்ஸ்"

வடிவேல் : "அப்ப சிரிப்பாணினே சொல்ல வேண்டியது தானே... சின்ன புள்ளத்தனமா பேசிகிட்டு.... ராஸ்கல்ஸ்...."

மைண்ட்வாய்ஸ் : "நானும் உங்கள மாதிரி நல்ல தமிழ் தாங்க பேசிட்டு இருந்தேன்... இந்த அப்பாவியோட என்னைக்கி சேந்தனோ...ஹ்ம்ம்... எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்..."

பார்த்திபன் : "என்ன மைண்ட்வாய்ஸ் இப்படி சொல்றீங்க... அந்த பொண்ணு ரெம்ப அப்பாவின்னு...."

மைண்ட்வாய்ஸ் : "அது அப்பாவியே அப்பாவிய பத்தி சொல்லிக்கறதுங்க... நிஜத்துல உலக மகா அலப்பறை... நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா ரெண்டு வாரம் முன்னாடி 'ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க்ஆ போச்சே' னு ஒரு போஸ்ட் வந்தது... அத படிங்க... உங்க முடிவ மாத்திப்பீங்க"

பார்த்திபன்: "நிஜமாவா?"

மைண்ட்வாய்ஸ்: "ஆமாம் சார்... நீங்களே சொல்லுங்க... ட்ரெயின் பிளாட்பார்ம்ல ஒட்டு கேக்கறதை எல்லாம் ஒரு போஸ்ட் தேத்தற கொடுமைய என்ன சொல்றது...அது கூட பரவா இல்லிங்க... கேவலம் ஒரு சோனி நாய் அப்பாவியோட பிஞ்ச கட் ஷூவை பாத்து தொரத்தினதை எல்லாம் போஸ்ட் போட்டு... ஹ்ம்ம்" விசும்புகிறது

"சரி சரி... அழுவாதீங்க... எனக்கும் அழுவ அழுவையா வருது..." என சமாதானம் சொல்கிறார்கள் இருவரும்

அதே நேரம், அங்கு வந்த சேர்ந்த அப்பாவி, மைண்ட்வாய்ஸ் நிற்பதை பார்த்ததும் டென்ஷன் ஆகிறார்

"ஐயையோ... இதெங்க இங்க வந்தது... பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாத்த கதை தான்..." என மனதிற்குள் நினைத்து கொண்டவர் அடுத்த நிமிடம் சுதாரித்து கொள்கிறார்

"வணக்கம் பார்த்திபன் சார்... வணக்கம் வடிவேலு சார்... மைண்ட்வாய்ஸ் இப்ப தான் வந்தீங்களா?" என அப்பாவி ஏக மரியாதையுடன் கேட்க

"நல்ல புள்ளயாத்தானே தெரியுது... இந்த மைண்ட்வாய்ஸ் ஏன் அப்படி சொல்லிச்சு"னு பார்த்திபனும் வடிவேலுவும் கேள்வியாய் மைண்ட்வாய்ஸை பார்க்க

"வெயிட் அண்ட் சி..." என ஜாடை காட்டுது மைண்ட்வாய்ஸ்

அப்பாவி அந்த சங்கேத பாஷையை புரிந்தவராய் "மைண்ட்வாய்ஸ், கொஞ்சம் அப்படி வரீங்களா... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என சிரித்து கொண்டே கேட்க

மைண்ட்வாய்ஸ்'ன் முகம் வெளிறி போகிறது "அது... நான்... எ... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நீங்க தனியா பேசுங்க... நான் போயிட்டு அப்பறமா... வரவே இல்ல" என மாயமாய் மறைகிறது

அதை கண்ட மற்ற இருவரும் கூட பயந்து எழுந்து ஓட தயாராய் நிற்க "நீங்க உக்காருங்க... introduction ரீல் ஓட்டி முடிச்சப்புறம் போலாம் சரியா" என்ற அப்பாவி பணிவாய் மிரட்ட, பவ்யமாய் அமர்கின்றனர் இருவரும்...

அப்பாவி ஏதோ வணக்கம் சொல்லணுமாம்... சொல்லிட்டு போகட்டும்...காசா பணமா....

வணக்கம் வந்தனம் நமஸ்கார் நமஸ்தே குட்மார்னிங் .... அப்புறம் இத்தாலியன்ல என்னமோ வருமே... சரி விடுங்க மறந்து போச்சு... என் பெயர் அப்பாவி தங்கமணி'ங்க

ஐந்து அல்லது ஆறு முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளேன்... அதை மிக்க மகிழ்ச்சியாய் டயரி மில்க் சாக்லேட் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடி இருக்கிறேன்... இன்று மற்றவர்களை நான் அறிமுகம் செய்யும் வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு முதல் நன்றி

முதல் பதிவு என்னை பத்தி சொல்லிக்கலாம்னு சொல்லி இருந்தாங்க... என்னை பத்தி நானே சொன்னா நல்லா இருக்காதுங்க... எனக்கு விளம்பரம் புடிக்காது யு சி... :)))

நான் பேசினா பேசிட்டே இருப்பேன்... அவ்ளோ வெள்ளந்தி மனசு... அதான் அப்பாவினு பேர்லயே இருக்கே... (ஹி ஹி), அதனால் இதோடு எனது இன்றைய உரையை முடித்து கொள்கிறேன்...

மற்ற அறிமுகங்கள் எல்லாம் இனி வரும் நாளில் பார்ப்போம்... நன்றி... வணக்கம்... :))

51 comments:

  1. வாங்க வாங்க வருகைக்காய் ஆவலோடு இருக்கோம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  2. அறிமுகம் கலகலப்பாய். தலைப்பு கலக்கலாய். வாழ்த்துக்கள் புவனா:)!

    ReplyDelete
  3. அடப்பாவி.. 19 லிங்க்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. ஸ்ஸ்சப்பா.....ஆரம்பமே கண்ணைக்கட்டுதே ! நம்பளை எங்கேயும் போகவிடாமா இங்கேயே இன்னைக்கு சுத்த விட்டுட்டாளே! அடேங்கப்பா அப்பாவி...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் புவனா!!

    ReplyDelete
  6. கலக்குறதுக்கு அப்பாவிக்கு சொல்லியா தரோனும்...கலக்குங்க.. கலக்குங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வித்யாசமான திங்கிங்.. வாழ்த்துக்கள்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  8. எங்கே இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே, நம்ப மைண்ட் வாய்ஸ காணுமேன்னு பார்த்தேன்! கலக்கறீங்க அப்பாவி!

    ReplyDelete
  9. என்ன இந்த போஸ்ட் ஒரு வாரம் படிக்கனுமா.... வாங்க வாங்க வந்து கலக்குங்க அப்பாவி..!!

    ReplyDelete
  10. சி.பி.செந்தில்குமார் said...
    அடப்பாவி.. 19 லிங்க்கா? ////

    அடப்பாவி இல்லைங்க அப்பாவி எங்க சொல்லுங்க அப்பாவி.....

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வாங்க ஆசிரியர் அப்பாவி ;-)))) !!!

    ReplyDelete
  13. ஆரம்பத்திலேயே இவ்வளவு லிங்க் கொடுக்குறாங்களே. இப்பவே கண்ணகட்டுது.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அப்பாவி.

    ReplyDelete
  15. இதுதான் இருக்கதுலயே ‘சின்னப்பதிவு’ன்னு அங்க உறுதியாச் சொன்னதால நம்ம்ம்ம்ம்பி வந்தேன்... அப்பாவி ஆஸ் யூஷுவல், ‘அடப்பாவி’ன்னு திட்ட வச்சுட்டீங்க!! :-)))))

    ReplyDelete
  16. ஆஹா... ஆரம்பமே அசத்தலா இருக்கு! கலக்குங்க...

    ReplyDelete
  17. ஆரம்பமே அணலா இருக்கே, ஹ்ம்ம்ம்ம் இன்னும் 6 நாள் இருக்கே, என்ன பண்றது பொறுத்து தான் ஆகனும். lol

    //அடப்பாவி.. 19 லிங்க்கா? //

    ரிப்பீட்டு.

    கொஞ்சம் சின்னதா எழுதுனா எல்லாரும் தொடர்ந்து 6 நாளும் படிப்பாங்க, இது என்னுடைய தாழ்மையான கடுமையான பணிவான வேண்டுகோள்

    ReplyDelete
  18. வருக வருக என வரவேற்கிறோம்...

    இந்த வாரம் முழுவதும் கலக்கல் தான்.

    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சகோ..

    இதனை லிங்கயும் ஒருமாதத்திற்கு வெட்சி ஓட்டலாம் ல

    ReplyDelete
  20. அடப்பாவீ... ஆரம்பமே செம அலப்பறையா இருக்கே :-))))

    கலக்குங்க.. வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  21. ஆரம்பமே அசத்தல் அலப்பறையா இருக்கே... தொடரட்டும்... நல்ல அறிமுகம் அ.த.

    ReplyDelete
  22. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள், தொடருங்கள்

    ReplyDelete
  23. அறிமுகம் போஸ்ட் எழுதச் சொன்னா...

    ஈஸ்ட்மென் கலர்ல நடோடி மன்னன் படம் போட்டு இருக்கீங்க...5 மணி நேரம் ஓடுது...!

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  24. முதல் பதிவு என்னை பத்தி சொல்லிக்கலாம்னு சொல்லி இருந்தாங்க... என்னை பத்தி நானே சொன்னா நல்லா இருக்காதுங்க... எனக்கு விளம்பரம் புடிக்காது யு சி... :)))
    "முடியாது பாக்க மாட்டேன்" போனாபோரது படிக்கிறேன்
    அடி ஆத்தி இவிக புராணமே இம்புட்டு பெரிசா எழுதினா அடுத்த ஆறு நாளும் என்னவாகுமோ நினைச்சா இப்பவே கண்ணே இருட்டிக்கிட்டு வருதே,தல கிர்ருங்கிது அப்பா அண்ணனே அப்படியே பூப்போல தாங்கி பிடிங்கப்பா................
    முழுமையும் சிறப்பாக வர வாழ்த்துக்கள் அப்பாவி

    ReplyDelete
  25. யம்மா...டீ.. எம்பூட்டு லிங்க்கு ?
    வாழ்த்துக்கள் அக்கா !!

    ReplyDelete
  26. பதிவு ரொம்ப சின்னதுங்க , இன்னும் நாலு பக்கம் சேர்த்த நல்ல இருக்குமே

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் கலக்குங்கோ

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் புவனா. கலக்குங்க.

    ReplyDelete
  30. புவனி, நம்ம டீல் படி இங்கே வந்து பின்னூட்டம் போட்டாச்சு. அனுப்ப வேண்டியதை அனுப்பவும்!
    :-))))))))))

    ReplyDelete
  31. கலக்குங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. இவ்வளவு லிங்க்கா ஆஹா

    ReplyDelete
  33. வாழ்த்துகள் டீச்சர்..

    லேட்டா வந்தா முட்டி போட/பென்ச்சுல ஏறி நிக்க சொல்லக் கூடாது :))

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் அப்பாவி.

    ReplyDelete
  36. கலக்குங்க...வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. ஆரம்பத்திலேயே நல்லா கலக்கிட்டீங்க!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. ஆரம்பத்திலேயே நல்லா கலக்கிட்டீங்க!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. @ ♔ம.தி.சுதா♔- நன்றிங்க


    @ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மி'க்கா...:)


    @ சி.பி.செந்தில்குமார் - ஹி ஹி.. .ஏதோ என்னால ஆனது...:))


    @ asiya omar - ஹா ஹா... இங்கயே சுத்துனதுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்..:)))


    @ S.Menaga - நன்றிங்க மேனகா..:)


    @ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...எல்லாம் பெரியவர்கள் ஆசீர்வாதம்...:))


    @ Jawahar - நன்றிங்க


    @ middleclassmadhavi - அதானே... மைண்ட்வாய்ஸ் விட்டுடுமா என்ன... ஹா ஹ ... நன்றிங்க


    @ சௌந்தர் - நக்கலு? வெயிட் வெயிட்... பேசிக்கறேன்...ஹா ஹா..:)... அதானே எவ்ளோ ஈஸி அப்பாவினு சொல்றது... நன்றி பிரதர்...:))


    @ அனாமிகா - தேங்க்ஸ் அனாமி...:))


    @ RVS - ஆசிரியர்னு கேட்டாலே தேன் வந்து பாயுது காதில்... பிடிச்ச profession ஆச்சே..நன்றிங்க...:)))


    @ sulthanonline - ஆரம்பத்துலையே குடுத்துடணும்... மறுபடி வருவீங்களானு கேரண்டீ இல்ல பாருங்க...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க


    @ ஹுஸைனம்மா - அக்கோய், நான் சின்னதுனு சொன்னது என் ப்ளாக்ல இதை பத்தி போட்ட அறிவிப்பை.. நீங்க தப்பா புரிஞ்சுட்டு டென்ஷன் ஆய்ட்டீங்க... ஹி ஹி ஹி... (இப்படி தான் சமாளிக்கணும் அப்பாவி...:)


    @ நெல்லி. மூர்த்தி - நன்றிங்க மூர்த்தி


    @ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - நன்றிங்க பிரதர்... அடுத்த போஸ்ட்ல இருந்து சின்னது செய்துடறேன்... கொஞ்சம் ஓவரா தான் போய்டுச்சு... ஒரு flow ல எழுதிட்டு அப்புறம் கத்திரி போட மனசு வரலை... பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க...:))


    @ நிரூபன் - நன்றிங்க


    @ FARHAN - அதுவும் நல்ல ஐடியா தான்... நன்றிங்க..:)


    @ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - தேங்க்ஸ்'ங்க வாழ்த்துக்கு


    @ hajasreen - நன்றி


    @ அமைதிச்சாரல் - ஹி ஹி... நாம(!) எல்லாம் அலப்பறை பண்ணலைனா தானே அக்கா நியூஸ்... ஹா ஹா...நன்றிங்க..;))


    @ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்...:)

    ReplyDelete
  40. @ கந்தசாமி. - நன்றிங்க


    @ dheva - ஹி ஹி ஹி... என்னங்க செய்ய... வள வளனு பேசியே வளந்துட்டோம்... கொஞ்சம் கம்மி பண்ணிக்கறேன் அடுத்த போஸ்ட்ல...நன்றிங்க வாழ்த்துக்கு...:)


    @ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா... நன்றிங்க TRC அங்கிள்...:)


    @ பிரதீபா - தேங்க்ஸ் தீபா..:))


    @ Jaleela Kamal - இன்னும் நாலு பக்கமா... நாலு பேர் இல்ல இல்ல நாப்பது பேர் சேந்து பொது மாத்து மாத்திருவாங்க அக்கோய்... அதுக்கு தான் பிளான் பண்றீங்களோ...ஹா ஹா..:)


    @ Rathnavel - நன்றிங்க


    @ sakthi - ரெம்ப நன்றிங்க சக்தி... கோவை மண்ணில் இருந்து வந்த வாழ்த்தில் ஒரே குஷி ஆய்ட்டேன்...:))


    @ கோவை2தில்லி - தேங்க்ஸ்'ங்க ஆதி...:)


    @ திவா - திவாண்ணா, நீங்க தான் டீல் படி நடந்துட்டு இருக்கீங்க... ஸ்பெஷல் பார்சல் அனுப்பிடறேன்...:)))


    @ r.v.saravanan - நன்றிங்க சரவணன்


    @ சுசி - ஐ டீச்சரா... ஜாலி... ஹி ஹி... பெஞ்ச்ல நிக்க சொல்ல மாட்டேன்... கூரைல தான் நிக்க சொல்லுவேன்... நாம எப்பவும் வித்தியாசமா யோசிப்போமில்லையா சுசி...:)


    @ நா.மணிவண்ணன் - ரெம்ப நன்றிங்க


    @ Vasagan - ஆஹா... பேரவைல இருந்தும் வாழ்த்தா... நன்றி நன்றி...:)


    @ ஸ்ரீராம். - நன்றிங்க...:)


    @ viswam - ரெம்ப நன்றிங்க

    @ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்'ங்க சுகந்தி..:)

    ReplyDelete
  41. சூப்பர்.. செம செம இன்ட்ரோ.. 'அலட்டாமல் அலப்பறை செய்வது எப்படி?? பாகம் ஒண்ணு'ன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.. ஹா ஹா ஹா..

    ReplyDelete
  42. தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. @ வல்லிசிம்ஹன் - நன்றிங்க வல்லிம்மா..:)

    @ VELAN - தேங்க்ஸ்

    @ கீறிப்புள்ள!! - ஹா ஹா... நல்ல தலைப்பு... மிஸ் பண்ணிட்டனே... :)))

    @ மாதேவி - ரெம்ப நன்றிங்க

    ReplyDelete
  44. வலை சரத்துல காலடி எடுத்து வைத்ததர்க்கு எனது வாழ்த்துக்கள்.

    சுயபுராணம் இருக்கும்னு எதிர் பார்த்தேன் ஆனால்.............. :-(
    blogger முழுவதும் இருக்கும்னு எதிர் பாக்கல......
    இப்பவே கண்ண கட்டுதே......... :-)

    சரி, சரி, நம்ம அப்பாவி தானே, கண்ண மூடி எல்லா பதிவையும் படிக்கவேண்டியது தான்.

    ReplyDelete
  45. @ Sri Seethalakshmi - ஹா ஹா... நன்றி சீதா உங்கள் ஆதரவுக்கு...:)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது