07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 25, 2011

போட்டோசாப் கத்துக்கலாம் வாங்க..

வரைகலை மென்பொருள்களில் அருமையானதும்,எளிமையான மென்பொருள்களில் அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் உலகஅளவில் முதன்மையானது. ஒவ்வொரு கனிணியிலும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளில் டிசைன் செய்வதற்கு அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டால் யாரும் டிசைன் செய்யலாம்.கற்பனைத்திறன் இருந்தால்போதும்.அதை நமக்கு எளிமையாகவும்,அருமையாகவும் சொல்லித்தரும் தளங்களை இன்று பார்க்கலாம்.

இதில் டிசைன் செய்த சில நகைக்கவைக்கும் படங்களை பார்த்துவிடலாம்.



கேக்கறவன் முட்டாளா இருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுமாம்-ன்ற பழமொழி கேட்டிருப்பிங்க...இங்க யானை பைக் ஓட்டுது பாத்திங்கில்ல...



 இந்தமாதிரி பூனையை புலி ஆக்கலாம்.கற்பனைக்கு வானமே எல்லை.


உங்க மௌஸையும் எதுக்கும் சோதனை பண்ணிடுங்க..கடிச்சி வச்சிரப்போவுது.ஹி.ஹி..

தமிழில் போட்டோசாப் பாடம் என்ற இந்த தளத்தில் எளிமையான முறையில் சொல்லித்தருவது போல வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.வெறுமனே டூல்களின் பயன்களை சொன்னால் கற்றுக்கொள்பவர்களுக்கு புரியாது என்று ஒவ்வொ படிநிலையையும் படங்களுடன் விளக்கும் இவருடைய பாடங்களை பார்த்தால் நீங்கள் இந்த மென்பொருளை கற்றுக்கொள்வது உறுதி.பிளாக் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் யாராவது நம்மை பின்தொடர்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு(நான் என்ன சொல்லல) மத்தியில்(அதுக்கு நீ முதல்ல உருப்படியா ஏதாவது எழுதணும்) இவர் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் 835 பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார் என்றால் இந்த தளத்தின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள். 61 பாடங்கள் போட்டோசாப்பில் முடித்துள்ள திரு.கான் அவர்கள் அடுத்ததாக கோரல்ட்ரா பற்றிய பாடங்களை ஆரம்பிக்க இருக்கிறார் என்பது வரைகலை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

வேலன் என்பவருடைய இந்த தளத்திலும் எளிமையான போட்டோசாப் பாடங்கள் நிறைய இருக்கிறது.சுவாரஸ்யமான சிறிய அளவுள்ள மென்பொருள்களையும்,குழந்தைகளுக்கு பயன்படும் மென்பொருள்களையும் தருவது இந்த தளத்தின் சிறப்பு.

எஸ்.கே அவர்களுடைய மனம்+ தளத்தில் அடோபி நிறுவனத்தின் போட்டோசாப் மட்டுமன்றி பிளாஸ்,பையர் வொர்க்ஸ் சம்பந்தமான பதிவுகளும்,மனோதத்துவம் படித்திருப்பதால் அது சம்பந்தமான பதிவுகளும் சுவாரஸ்யமான வகையில் தொகுத்துள்ளார்.

அனிமேசன் துறையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் கருப்பு பெட்டி என்ற இந்த தளத்தில் அதைப்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.உலகப்படங்களையும்,இந்தியபடங்களையும் அனிமேசன் பார்வையில் விமர்சனங்களும் உண்டு இந்த தளத்தில்.

தோழமை என்ற இந்த தளத்திலும் சுவாரஸ்யமான போட்டோசாப் பாடங்களும்,நம் பிளாக்கை அழகுபடுத்தும் சில கோடிங்குகளும்,வித்தியாசமான மென்பொருள்களும் கிடைக்கபெறுகிறது.

பொன்மலர் என்பவருடைய இந்த தளத்தில் தொழி்ல்நுட்பம்,மென்பொருள்கள் பற்றி விளக்கமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.பாஸ்போர்ட் போட்டோவைப் பற்றிய இந்த பதிவு நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ப்ரியமுடன் வசந்த் அவர்களின் கற்பனை போட்டோசாப்பில் புகுந்து விளையாடியிருப்பார்.ரசிக்கத்தக்க வகையில் போட்டோசாப்பை பயன்படுத்தியிருப்பார்.இவருடைய தளத்தில் போட்டோசாப்பை கற்றுத்தரவில்லை.ரசிக்கவைக்கிறார்.

மீண்டும் நாளை தொழில்நுட்ப பதிவுகளுடன் சந்திப்போம்.




13 comments:

  1. அறிமுகத்துக்கு மிக்க நன்றி தேவா சந்தோஷமா இருக்கு. வலைச்சரத்தில் நிறைய என்னுடைய பிற பதிவுகள் அறிமுகபடுத்தப்பட்டிருந்தாலும், என்னோட கிரியேட்டிவிட்டி பதிவு முதல் முறையா வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது அதற்கு மிக்க நன்றி தேவா :)

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு..
    நன்றி..

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு நண்பரே...

    ReplyDelete
  4. அனவைருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. எலலோரும் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயம் தான்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. இன்றை பதிவில் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    அன்புடன்,
    பொன்மலர்

    ReplyDelete
  8. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  9. அன்பின் தேவா - அனைத்துப் பதிவுகளூமே தொழில் நுட்பப் பதிவுகள் - கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு பயன் படும். கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும். நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நன்றி ! நண்பர் தேவா........

    சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வலைச்சரம் பதிவுகளை ஒன்று திரட்டும் மெகா திரட்டியில் உங்கள் பதிவுகள் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.எனது வாழ்த்துக்கள்!

    நீண்ட காலமாக நானும் இணையத்தில் தமிழில் போட்டோசாப் பாடங்களை தேடிவந்தேன். தேடும் வரை தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு இணணய தளமும் முழுமையாக போட்டோசாப் பற்றிய தெளிவான விளக்கத்துடன் எனக்கு கிடைக்கவில்லை. என் தேடுதலின் முடிவு நானே தமிழில் போட்டோசாப் பாடம் என ஒரு தளத்தை ஆரம்பிக்க என்னை வைத்துவிட்டது.

    ஆரம்பித்த சில மாதங்களுக்கு பிறகுதான் "சுதந்திர இலவச மென்பொருள்" தளம் எனக்கு அறிமுகம் ஆனது. நண்பர் மென்பொருள் "பிரபு" மூலம் என் தளம் அனைவரின் ஆதரவையும் பெற்றது. அவர் தளத்தின் தர வரிசையில் நானும் இடம்பெற்றேன்.

    தொழில் நுட்ப தளங்களின் தர வரிசையில் இடம் பெற்ற பிறகுதான் தமிழில் பிளாக் மூலம் மற்ற நண்பர்களும் போட்டோசாப் பாடங்கள் கற்று தருகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். அதில் நண்பர் "வேலன்" வலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய தளத்தில் இடம்பெற்ற போட்டோசாப் பாடங்களை முன் மாதிரியாக வைத்து போட்டோசாப்பில் அவர் சொல்லி கொடுக்காத விசயங்கள் என்னென்ன என்று பார்த்து அதனை நான் என் தளத்தில் பாடமாக இடம் பெற வைத்தேன். மிக்க நன்றி "வேலன்".

    இப்பொழுது நண்பர் சேலம் தேவா குறிப்பிட்டதுபோல பல நண்பர்கள் தமிழில் போட்டோசாப் பாடங்களை சொல்லிக்கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    என் தளத்தில் தொடர்ந்து வந்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் சேலம் தேவா, சபீர், கபிரியேல் வேதநாயகம், மபாஸ், அசோக், மச்சவல்லவன், பொய்யாமொழி, தமிழ்த்தோடம் நண்பர் யூஜின் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி!

    தொடந்து என் தளம் சிறப்பு பெற எனக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் என்றும் தேவை.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  12. @ ப்ரியமுடன் வசந்த்
    உண்மையிலேயே உங்கள் கிரியேட்டிவிட்டி பாராட்டதக்கது.

    மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

    கான் அவர்கள் பதிவை விட பெரியதாக பின்னூட்டம் இட்டு விட்டீர்கள்.நன்றி உங்களுக்குதான்... :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது