என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2
➦➠ by:
வேடந்தாங்கல்-கருண்
நண்பர்களே..
இன்று நாம் பார்க்கப் போவது பதிவுலகில் என்னை அதிசயப் படுத்திய பதிவர்கள் பாகம் இரண்டு.
1. தமிழ் உதயம்
இவரது அனுபவம் என்ற தலைப்பில் வரும் பதிவுகள் அருமை. அதேபோல் வாழ்க்கை தலைப்பில் வரும் பதிவுகளும் கலக்கலாக இருக்கும்.
இவரின் பயணக் கட்டுரைகள் அருமையாக இருக்கும். அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது போலவே இருக்கும் இவரின் கட்டுரைகள்.
3. கந்தசாமி
இவரின் பல்சுவை பதிவுகள் கலக்கலாக இருக்கும். இவரின் பின்னூட்டம் உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.
4. செங்கோவி
இவரின் மன்மத லீலைகள் தொடர் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இந்தியாவில் தமிழ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விமர்சனம் எழுதுபவர்.
5. நாற்று
இவரின் கவிதைகள் வலிகள் நிறைந்ததாக யதார்த்தமாக இருக்கும். பல்சுவைப் பதிவுகள் கொடுப்பதில் வித்தகர்.
6. லக்ஷ்மியம்மா
இவர்களும் பல்சுவைப் பதிவுகளை தருபவர் . இவரின் மலரும் நினைவுகள் தொடர் அருமையாக இருக்கிறது.
7. சண்முகவேல்
இவர் சமீப காலமாக அரசியல் பதிவுகள் எழுது வருகிறார் . இவரின் பிலாகில் உளவியல் சம்பந்தமாக எழுதிவரும் தொடர் வித்தியாசமானவை.
8. அரசன்
இவரும் பல்சுவைப் பதிவுகள் தருபவர். இவர் எழுதும் கவிதைகள் யதார்த்த மானதாக இருக்கும்.
சாதாரணமானவன் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று சொல்பவர். ஒரு மூத்தக் குடிமகன்(ர்).
10. சிநேகிதி
இவர் சமையல் ராணி. இவரின் தளம் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊரும. எனக்கு விருது கொடுத்து கௌரவித்தவர்.
11. ஜீ...
இவரும் ஒரு பல்சுவைப்பதிவர். இவரின் ஆங்கிலப் பட விமர்சனம் நன்றாக எழுதுபவர்.
12. பாலா
"பன்னிக்கு பாட்டு சொல்லி கொடுக்க முயற்சி செய்யாதே!! உனக்கும் கஷ்டம் பன்னிக்கும் தொந்தரவு" என்பவர் . இவரின் கிரிகெட் தொடர் அருமை.
13. சிவக்குமார்
மெட்ராஸ் பவன்னா எல்லாருக்கும் தெரியும். இவரின் ஸ்பெஷல் மீல்ஸ் அருமை. மற்றும் சினிமா விமர்சனமும் எழுதி வருகிறார்.
14. டக்கால்டி
இவரின் பின்னூட்டம் என்னை உற்சாகப் படுத்தும். இவரும் ஒரு பல்சுவைப் பதிவர். தமிழ்படங்களின் விமர்சனமும் எழுதி வருகிறார்.
15. கடம்பவன பூங்கா
இவர் வலை உலகத்திற்கு புதியவர். கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள் போன்றவற்றை இப்பூங்காவில் எனக்கு தெரிந்த எழுத்துநடையில் பகிர்கிறேன் என்று இவரே சொல்கிறார்.
16. ஜீவன் சிவம்
ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம். வேறு என்ன சொல்ல. இதுவரை எதுவும் சொல்லிகொள்கிற அளவிற்கு சாதிக்கவில்லை பார்ப்போம் எதுவரையோ
என்று சொல்லும் கோயம்பத்தூர் காரர் இவர்.
17. ராஜா
என் ராஜபாட்டை - என் வழி தனி(குறுக்கு) வழி என்கிறார் இவர்.
18. மதுரன்
இவரும் புதியவர். இலங்கையில் இருப்பவர் . இவரின் பதிவுகளில் ஓர் சமூக அக்கறை தெரியும்.
19. தங்கம் பழனி
இவர் ஒரு பல்சுவைப் பதிவர். இவர் பல வித்தியாசமான தலைப்புகளில் எழுதுபவர்.
20. ஜலீலா கமல்
இவர் சமையல் பதிவுகள் போடுவதில் கில்லாடி.. படித்தவுடன் அந்த சமையலை செய்து பார்க்க வேண்டும் என தொன்றும் .
இந்த ஒரு வாரமாக எனக்கு அதரவு அளித்து ஊக்கப்படுத்தியதர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மீண்டும் ஒரு முறை எனக்கு இந்த வாய்ப்பு அளித்ததற்கு சீனா ஐய்யாவிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
18. மதுரன்
இவரும் புதியவர். இலங்கையில் இருப்பவர் . இவரின் பதிவுகளில் ஓர் சமூக அக்கறை தெரியும்.
19. தங்கம் பழனி
இவர் ஒரு பல்சுவைப் பதிவர். இவர் பல வித்தியாசமான தலைப்புகளில் எழுதுபவர்.
20. ஜலீலா கமல்
இவர் சமையல் பதிவுகள் போடுவதில் கில்லாடி.. படித்தவுடன் அந்த சமையலை செய்து பார்க்க வேண்டும் என தொன்றும் .
நண்பர்களே...!!!
மீண்டும் ஒரு முறை எனக்கு இந்த வாய்ப்பு அளித்ததற்கு சீனா ஐய்யாவிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
|
|
நன்றி வேடந்தாங்கல் கருன்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு. ஏனையோருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள், அருமையான பகிர்வுகள். கலக்கிட்ட மாம்ஸ்
ReplyDeleteஎன்னையும் மற்றும் பல பதிவர்களையும் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கருண்! தங்களின் ஒரு வார கடின உழைப்பிற்கு பதிவுலகம் சார்பாக வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு வாரமா கலக்கிட்டேய்யா சூப்பர் அறிமுகங்கள்...
ReplyDeleteஎல்லாருமே தெரிஞ்சவங்கதான் எல்லாருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteபாகம் இரண்டு அறிமுகங்கள் அருமை சகோ. உங்களில் ஒருவராக என்னையும், இந்த நாற்றையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் சகோ.
ReplyDeleteஏனைய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.
அறிமுகங்கள் அருமை நண்பா.. என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
ReplyDeleteரிமுகம் செய்யப்பட்ட பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteஒரு வாரம் சிறந்த ஆசிரிய பணி வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.கலக்கல் வாரம்,கருன்!
ReplyDeleteநன்றி கருன். வாத்யார் ஆசிரியப்பணியைச் சிறப்பாச் செய்யுறது அதிசயம் இல்லையே!
ReplyDeletenanri.....
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள், வலைச்சர பணியினை நிறைவாக நிறைவு செய்தமைக்கு ஆசிரியர் கருனுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி கருண் ... நல்ல அறிமுகங்கள் . எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கருன்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteமற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
சிறப்பான வலைசர ஆசிரியர் பணிக்கு பாராட்டுக்கள்.
நன்றி கருண்! ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteI can t belive this . . Thanks thanks thanks karun. . . This is very big complement for me . .
ReplyDeleteநன்றி கருன்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா..... என்னையும் அங்கீகரித்து அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நண்பரே. என்பொறுப்பு இன்னும் கூடுவது போல் உணர்கிறேன். தங்கள் கடமையை ஒருவாரமாக சிறப்பாய் செய்து அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDelete"என்னை அதிசயப்படவைத்த பதிவர்கள் - 2” என்ற தலைப்பில் தாங்கள் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளது, என்னையே அதிசயப்பட வைத்துள்ளது.
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களால் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியமைக்கு மிக்க நன்றி
ReplyDelete20 அறிமுகங்களும் அருமை,
வாழ்த்துகக்ள்
இந்த எளியோனை சபையோர் முன் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் பனி சிறக்கவும், புகழ் வளரவும் வாழ்த்துகிறேன்
ReplyDelete