சதிலீலாவதி...:))
➦➠ by:
அப்பாவி தங்கமணி
டொக் டொக் டொக்...
"காலங்காத்தால யாரது...." என்றவாறே கதவை திறக்க
"இங்க அப்பாவின்னு..."
"நான் தாங்க... நீங்க யாருன்னு...?"
"அம்மணி... நானு சக்திவேல்னு... டாக்டர்... என்ற ஊரு கோயமுத்தூரு..."
"அடடே... வாங்க சார் வாங்க... எங்க எவ்ளோ தூரம்"
"உன்ற கோட சண்ட போடோனோமுன்னு தான் அம்மணி வந்தேன்... நீ செஞ்ச காரியத்தால பழனி திருப்பதிக்கு போயிருச்சு... நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா அம்மணி"
"ஐயையோ.... நான் என்ன சார் செஞ்சேன்... ஆனா பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்..."
"உன்ற நக்கலெல்லாம் என்ற கிட்ட வேண்டாம்... நானு எக்க சக்க கோவத்துல இருக்கறனாமா" என சக்திவேல் கௌண்டர் பொங்கி எழ
"சார்... ப்ளீஸ் எனக்கு ஒண்ணும் புரியல... கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க..."
"என்னத்த சொல்றது... இப்படி மூணு மாசம் முழுகாம இருக்கற சமயத்துல என்ற பொண்டாட்டி... இப்படி... " என பீலிங்'ல் டாக்டர் மெளனமாக
"ஏன் சார்... உங்கூர்ல அவ்ளோ தண்ணி பிரச்சனையா?"
"இங்க பார் அம்மணி... என்ற பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு... உன்னால நடந்த பிரச்சனைய நீ தான் தீக்கோணும் சொல்லி போட்டனாமா"
"ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... என்ன பிரச்சனைனு மொதல்ல சொல்லுங்க சார்..."
"நீ சும்மா இருக்காம ரங்கமணி க.மு க.பினு ஏதோ கெரகத்த எழுதினயாமே..."
"சார் அது..."
"நான் பேசி முடிக்கற வரைல இனி நீ வாய திறக்க கூடாது ஆமா சொல்லி போட்டேன்"
"...."
"அது என்ன ஆச்சுன்னா"
"...."
"பேசிட்டு இருக்கரனல்ல... உம் சொல்லு... நான் என்ன செவத்த பாத்தா பேசறேன்..."
"நீங்க தானே நீங்க பேசி முடிக்கற வரை வாய திறக்காதேனு..."
"உன்ற ஊட்டுகாரர கொஞ்சம் கூப்புடு அம்மணி... அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல"
"மொதல்ல விசயத்த சொல்லுங்க சார்..."
"என்னத்த சொல்றது... அதான் கண்டதையும் எழுதி என்ர பழனி மனச கலைச்சு போட்டயல்ல... மாமோய் மாமோய்னு என்ர காலையே சுத்தி சுத்தி வந்த என்ர பழனி இப்ப கோவிச்சுக்கிட்டு திருப்பதில போய் உக்காந்துட்டு... இந்த பாவம் உன்னைய சும்மா உடும்னா நெனக்கற..."
"இங்க பாருங்க சார்... நான் ஏதோ எதார்த்தாம எழுதினத..."
"என்னத்த புண்ணாக்கு எதார்த்தம்... இப்படிதான் அந்த அருணு ஊட்டு பிரச்சனைய தீக்க போயி ஒருக்கா பழனி கோவிச்சுட்டு கோயமுத்தூர் போச்சு...இப்ப... "
"இந்த வாட்டி லொகேஷன் மாத்திட்டாங்க போல இருக்கே" என அப்பாவி வழக்கமான தன் மொக்கையை தொடங்க
"வாய்ல நல்லா வந்துருமாமா... நான் என்ன சூட்டிங் போறது பத்தியா பேசிட்டு இருக்கறன்... நேர நெலம புரியாம... அதெல்லா எனக்கு தெரியாது... என்ர பழனி மனசு மாறுற மாதிரி நல்லதா ஒரு கடுதாசி எழுதி குடு... நடுநடுல பொன்மானே தேனேனு போட்டுக்கோ..."
"அய்யோ... திடீர்னு கேட்டா நான் எப்படி...?" என அப்பாவி ஜெர்க் ஆகிறார்
"பொறகு இதுகென்ன கோர்ட் ஆர்டர் வாங்கிட்டா வருவாக... இன்னைக்கே இப்பவே எழுதோணும்..."
"இங்க பாருங்க சார்... நான் சில பேரோட அட்ரஸ் தரேன்... அவங்க அட்டகாசமா எழுதுவாங்க..."
"அப்ப நீ எழுதறதெல்லாம் சொந்த சரக்கில்லையா?"
"அது வேற சார்... " என அப்பாவி அவசரமாய் சமாளிக்கறார்
"என்ன கெரகமோ... ஏதோ விலாசம் தரேனியே... குடு... வெரசா போய் பாத்து வாங்கிட்டு ட்ரெயின் புடிக்கோணும் திருப்பதிக்கு..."
"பழனினு சொன்னீங்க...."
"அது என்ர ஊட்டுக்காரி பேரு... "
"அப்ப திருப்பதி..."
"விலாசமே வேண்டாம் போ..."
"இருங்க இருங்க... அட்ரஸ் சொல்றேன் குறிச்சுக்கோங்க....
இவருக்கு கோயமுத்தூரு தான்'ங்க... பேரு ஆனந்த்'னு... நல்லா பாட்டு படிப்பாரு... இந்த அட்ரஸ்ல போய் பாருங்க
அம்மாவுக்கே தாலாட்டு பாடுறாங்க நம்ம கவிநயா
அப்புறம் இவரு பேரு சிவசங்கர்னு... இந்த விலாசத்துல பாருங்க
இன்னொரு காதல் கவிதை சுசியோட கைவண்ணத்தில்
இவரு பேர் கோபி... தங்கமணிக்கு ஐஸ் வெக்கறது எப்படின்னு இங்க போய் பாருங்க
தோழி பிரஷாவோட இந்த கவிதை இவள்-அவன்-அவள் என விரிகிறது
தேவாவின் கவிதைகள் கொஞ்சம் ஆத்மார்த்த ரகம்.. இங்க போனீங்கன்னா கிடைக்கும்
வாசலில் கவிக்கோலமிடும் கௌசல்யாவின் வரிகள் இதோ
முனியாண்டி அவர்களோட கவிதைகளின் சிறப்பு , மண்மணம் சேர்க்கும் வரிகள்... இங்க பாருங்க
அமைதிச்சாரலின் 'தொல்லை'காட்சி பற்றிய இந்த கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
இவர் ஜெகன்னாதன்... கலக்கலா எழுதிட்டு இருக்கார் இங்க
'குடந்தயூர்' சரவணன் எழுதிய "மழை நிறுத்திய" கவிதை கிளாசிக்
பிரியம் சுமந்த சொற்கள் கொண்டு சக்தி வடித்த கவி இங்கு
சித்தார்த்தன் கனவு பற்றி சொல்றார் கமலேஷ்
ஹைக்கூல அசத்தறாரு பிரவீன்குமார் இங்க
கவிதை கரு உருவாவது பற்றி பத்மா அவர்கள் எழுதிய விதம் கவிதையே தான்
ப்ரியமானவள பத்தி ப்ரியமுடன் வசந்த் என்ன சொல்றாருன்னு கேளுங்களேன்
எல்லாமான தனக்கானவரை பற்றிய ப்ரியாவின் இந்த கவிதை நிச்சயம் இன்னொருமுறை படிக்க சொல்லும்
அழகிய வார்த்தைகளை கோர்த்து மாலை படைக்கும் சிவகுமாரனின் அருள்மாலை இங்க
"நல்லா எழுதரவக இத்தன பேரு இருக்காகன்னு தெரியாம உன்ரகிட்ட வந்து நேரத்த விரயம் பண்ணிபோட்டனே...ச்சே... " என சக்திவேல் டாக்டர் பீல் பண்ணி, அப்பாவிக்கு பல்பு குடுத்துட்டு எஸ்கேப் ஆய்ட்டார்...
அப்பாவி : அவ்வவ்வ்வ்வ்......:((((
|
|
அறிமுகங்களைப்போலவே [ஏன் அதையும் விட ஜோராகவே] உள்ளது, நீங்க அறிமுகம் செய்யும் முன் சொல்லும் நகைச்சுவையான கதை.
ReplyDelete//"ஐயையோ.... நான் என்ன சார் செஞ்சேன்... ஆனா பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்..."//
//"ஏன் சார்... உங்கூர்ல அவ்ளோ தண்ணி பிரச்சனையா?"//
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
//அப்பாவி : அவ்வவ்வ்வ்வ்......:((((//
ReplyDeleteI like it =)
//பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்..."//
ReplyDeleteசூப்பரோ சூப்பர்.
டாப் டக்கர்...உங்கள் வழக்கமான டச்சுடன் அறிமுகங்கள்...பாதிக்கு பாதி புதுசு..!
ReplyDeleteஹ ஹ ஹா... வலைச்சரத்திலேயே வாய் விட்டு சிரிக்க வைக்கிற பதிவுகள் உங்களுதுதேன் போலவே...
ReplyDeleteஎன்ன இருந்தாலும், ‘தோலு உரிச்சி உப்புக்கண்டம் போட்டிருவேன்னு’ கவுண்டரு அடிக்கடி சொல்றாதை விட்டுட்டீயளே.. ஹெ ஹெ ஹெ...
பதிவர்கள் அறிமுகம் மாதிரியே தெரியலை. செம ஜாலியா இருந்தது பதிவு. அறிமுகத்துக்கு நன்றி தங்கமணி
ReplyDeleteஹா ஹா.. நல்ல அறிமுகங்கள் அப்பாவி! :))
ReplyDeleteநல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.
ReplyDeletesuper starting, appavi!
ReplyDeleteசக்திவேல் கௌண்டர் கிட்டயும் பல்பூ.. வாங்கியாசாங்க?? ;-))
ReplyDeleteஅனைத்து அறிமுகமும் சூப்பர்.. :)
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஇதுவும் நல்லாதேன் இருக்கு. அம்மணி...
ReplyDeleteஅப்பாவி அம்மணி ...வெளாசி தள்ளீட்டிங்க.. டாக்டர இப்படி மெரள வச்சுட்டு.. நல்ல அறிமுகங்கள கொடுத்திட்டிங்க...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்து அறிமுகமும் சூப்பர்.
ReplyDeleteஅறிமுகத்தில் எனது தளத்தினையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி தங்கமணி.
அட இந்த கெரகத்த பாருடா! நல்லா அறிமுகம் பண்றாங்களே இந்த அம்மணி! நல்லாத்தேன் இருக்கு!
ReplyDelete//அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல//
ReplyDeleteஇதத்தான் நானும் சொல்லிகிட்டிருக்கேன். ;-))))
கமல் என்றாலே குழப்பும்வாதி என்றுதான் அர்த்தம். அவரையே ஒருவழி பண்ணிட்டீங்க, அப்ப நீங்க இனி ‘ஒலகநாயகி’தான்!! (ஒலக்கைநாயகி இல்லை) ;-))))
செம ஜாலி பதிவு எனது அறிமுகத்துக்கு நன்றி தங்கமணி
ReplyDeleteஒலக நாயகனையே குழப்பிய அடப்பாவியக்கா வாழ்க..
ReplyDeleteஒருவேளை மைண்ட்வாய்சே ஒலக நாயகன் வேஷத்துல வந்துருக்குமோ
:-))))
அறிமுகப்படுத்தியதுக்கு நன்றிப்பா :-)
இன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி! மிகவும் வித்தியாசமாக காமெடி கலந்து, ரசிக்கும் படியாய் உங்கள் பதிவுகளை இட்டு வருகிறீர்கள்! வாழ்த்துக்கள் மீண்டும்!!
ReplyDelete21...
ReplyDelete22
ReplyDeleteஅப்பாவி தங்கமணி வாழ்க
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
வாழ்க வாழ்க அப்பாவி தொண்டு
24...
ReplyDelete25...HEY VADAI ENAKKEY..
ReplyDeleteஹைய்யோ!!!!!!!!!!!! கலக்கல்!!!!
ReplyDeleteவயித்துவலி மருந்து ஏதும் இருக்குதுங்களா?
சிரிச்சேன் சிரிச்சேன் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்:-)))))
ஹாஹா சதீலீலாவதின்னதும் மே சிரிப்பு வந்துடுச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள்
தாங்க...முடியலை. நகைச்சுவையா அசத்தல் அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை.
ReplyDeleteவட்டார தமிழ்நடையில்,தடையின்றி பயணிக்கும்
ReplyDeleteகிட்டாத தமிழ் பிரயோகம் .
நகைச்சுவை நிரம்ப ததும்பும் இது ஒரு
வகைச்சுவை பதிவு.
வாழ்த்துக்கள் தோழி
கோயமுத்தூர் பாஷையில் கலக்கிட்டீங்க அம்மணி. அமெரிக்கா... போனாலும் மறக்காம இருக்கறத்துகுப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாரே வா எனக்கும் அறிமுகமா !!!!
ReplyDeleteநன்னீஸ் சகோதரி
நம்ம வட்டார மொழி ல அசத்திட்டீங்க அப்பாவி
ReplyDelete\உன்ற ஊட்டுகாரர கொஞ்சம் கூப்புடு அம்மணி... அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல\
ReplyDeleteI like it =)
உண்மையை ஒத்து கொண்ட அப்பாவி வாழ்க
enga paasaila solanum naa elakir elakiri...
ReplyDeleteரொம்ப நன்றிங்கோ டீச்சர்.. ரெண்டு நாள் மட்டம் போட்டு வந்தாலும் என்னய க்ளாஸ்ல சேர்த்துக்கிட்டத்துக்கு :)
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க VGK ...:)
ReplyDelete@ அனாமிகா - I'm glad you liked it...:))
@ கலாநேசன் - நன்றிங்க
@ அன்னு - தேங்க்ஸ் அன்னு... "தோல உரிச்சு போடுவேன்"னு சொல்றது சரத்குமார் ஆச்சுங்களே (சேரன் பாண்டியன்ல)... இவரு சக்திவேல் கௌண்டர் நல்லவருங்க... அப்படியெல்லாம் மிரட்ட மாட்டாருங்க...:))
@ சிவகுமாரன் - நன்றிங்க சிவகுமாரன் ..:)
@ Balaji saravana - நன்றிங்க பாலாஜி..:)
@ Porkodi (பொற்கொடி) - வேணாம்...நான் அழுதுருவேன்... அவ்வவ்வவ்வ்வ்வ்....:))
@ vanathy - தேங்க்ஸ்'ங்க வானதி...:)
@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா... நன்றிங்க...:)
@ எல் கே - தேங்க்ஸ் கார்த்திக்
@ asiya omar - தேங்க்ஸ்'ங்க ஆசியா..:)
@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)
@ தோழி பிரஷா( Tholi Pirasha) - தேங்க்ஸ் தோழி...:)
@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... அதே ஸ்டைல்ல கேக்க நல்லா இருக்குங்க... நன்றிங்கோ...:))
@ ஹுஸைனம்மா - ஹா ஹா... சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன? ஒலக்கை நாயகி தான் சொல்ல வந்தீங்கன்னு தெரியுதுங்க அக்கோய்...;))
@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்
@ அமைதிச்சாரல் - ஹா ஹா... மைண்ட்வாய்ஸ் தான் அந்த வேஷத்துல வந்ததோனு எனக்கும் சந்தேகம் தானுங்க.. விசாரணை கமிட்டி அமைத்து இருக்கிறோம்...:)))
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - நன்றிங்க...
@ siva - இங்கயுமா வடை... ஹா ஹா... தேங்க்ஸ்'ங்க சிவா...:)
@ துளசி கோபால் - ஹா ஹா... நன்றிங்க துளசிம்மா...:))
@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா'க்கா...:)
@ புதுகைத் தென்றல் - நன்றிங்க..:)
@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)
@ A.R.RAJAGOPALAN - நன்றிங்க சார்...
@ இராஜராஜேஸ்வரி - எங்க போனாலும் நம்மூரு பாஷைய எப்படி மறக்கறது சொல்லுங்க... நன்றிங்க..:))
@ sakthi - உங்களுக்கு அறிமுகம்னு சொல்ல முடியுமா அதுவும் நானு.. குறிப்பிட்டேன்னு வேணா சொல்லலாம்...தேங்க்ஸ்'ங்க சக்தி...:)
@ Vasagan - ஹா ஹா... அதானே நீங்க எப்பவும் அவருக்கு தானே சப்போர்ட்...:))
@ hajasreen - ஆஹா...என்ன சொல்றீங்கன்னு புரியலியே... திட்டறீங்களோ...ஹா ஹா...:)))
@ தெய்வசுகந்தி - :))
@ சுசி - ஹா ஹா... சுசி சின்சியர் ஸ்டுடென்ட் ஆச்சே... அதான் மட்டம் போட்டாலும் சேத்துகிட்டோம்... :))
அப்பாவியோரியல் டச்!!!!!!!!!!!!!!
ReplyDelete@ கீதா சாம்பசிவம் - Thanks Maami..:))
ReplyDeletenandri thangamani .....romba santhoshama irukku
ReplyDelete@ பத்மா - Thanks Padma'kka..:)
ReplyDeleteஅழகான அறிமுகங்கள் சுவாரஸ்யமாக செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி :)
ReplyDelete//அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல// :) :)) :)))
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை!!
நன்றி