வானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு!!
வானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு!!
➦➠ by:
ஓட்ட வட நாராயணன்
வணக்கம் நண்பர்களே!
வலையுலகில் நண்பர்கள், நட்பு வட்டம் மிக முக்கியம்! எனது நண்பர்கள் வட்டம் பரந்து விரிந்தது! அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாவதும் எமது இந்த வட்டம்தான்!! வலைப்பூக்களில் நாம் எழுதுகின்ற விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு போதுமே எம்மை அளவிட முடியாது!
அதனால் எமது நண்பர்கள் குழாமில் இருந்து முக்கிய நண்பர்கள் சிலரது, இதுவரை வெளிவராத தகவல்களை வெளியிடுகிறேன்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!!
01. சி. பி .செந்தில்குமார்!
தமிழ் வலைப் பதிவர்களில் நம்பர் ஒன் பதிவர்! இனிய நண்பர்! யாருடனும் சண்டை சச்சரவுக்கு போகமாட்டார்! மஹேந்திரா அண்ட் மஹேந்திரா பைனான்ஸ் கம்பெனியில், கலெக்சன் பகுதியில் டீம் லீடராக வேலை பார்க்கிறார்! இவர் ஒரு செஸ் சாம்பியன்!
இன்றைய தேதியில் அலெக்சா ரேட்டிங் - 45,161
02. பன்னிக்குட்டி ராமசாமி!
வலையுலகில் நண்பர்கள், நட்பு வட்டம் மிக முக்கியம்! எனது நண்பர்கள் வட்டம் பரந்து விரிந்தது! அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாவதும் எமது இந்த வட்டம்தான்!! வலைப்பூக்களில் நாம் எழுதுகின்ற விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு போதுமே எம்மை அளவிட முடியாது!
அதனால் எமது நண்பர்கள் குழாமில் இருந்து முக்கிய நண்பர்கள் சிலரது, இதுவரை வெளிவராத தகவல்களை வெளியிடுகிறேன்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!!
01. சி. பி .செந்தில்குமார்!
தமிழ் வலைப் பதிவர்களில் நம்பர் ஒன் பதிவர்! இனிய நண்பர்! யாருடனும் சண்டை சச்சரவுக்கு போகமாட்டார்! மஹேந்திரா அண்ட் மஹேந்திரா பைனான்ஸ் கம்பெனியில், கலெக்சன் பகுதியில் டீம் லீடராக வேலை பார்க்கிறார்! இவர் ஒரு செஸ் சாம்பியன்!
இன்றைய தேதியில் அலெக்சா ரேட்டிங் - 45,161
02. பன்னிக்குட்டி ராமசாமி!
வலையுலகின் கலகலப்பு கதாநாயகன்! இவர் கமென்ட் போட வந்தாலே , ஏரியா கலகலப்பாகி விடும்! இவர் ஒரு விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்! சவுதியில் ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைந்த, மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹெட் ஆப் த டிபார்ட் மென்ட் ஆக பணி புரிகிறார்! பதவிநிலை - துணைப் பேராசிரியர்!
ப்ளாக் நண்பர்களுடன் ஈகோ பார்க்கமாட்டார்! அன்பாகப் பழகுவார்! இவருடைய போட்டோவும் , இன்னும் பல தகவல்களும் என்வசம் இருக்கிறது! அவற்றை வெளியிட வேண்டாம் என்று அன்பாக சொல்லியுள்ளார்!
வலையுலகில் எனது குருநாதர் மதிசுதாதான்! வலையுலகம் பற்றிய சூட்சுமங்களை எனக்கு சொல்லித்தந்தவர்! பிரபலமாவதற்கு வழி ஏற்படுத்தி தந்தவர்! மிகச்சிறந்ததொரு கிரிக்கெட் வீரன்! சகலதுறை ஆட்டக்காரர்! சாதாரணமாக வலதுபக்கம் பத்து அடியும், இடது பக்கம் எட்டு அடியும் பாய்ந்து பந்து பிடிப்பதில் வல்லவர்!
இன்னொரு ஆச்சரியமான தகவல் - மதிசுதா ஒரு தனியார் மருத்துவர் ஆவார்!
நண்பர் விக்கி உலகம் - விக்கி அவர்கள் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஆவார்! இந்திய ராணுவத்தில் இவர் கடமையாற்றினார்! கார்கில் யுத்தத்தில் பங்கெடுத்து காயமடைந்தவர்! இவரது சிறுமூளைக்கு அருகில் குண்டுகள் பாய்ந்ததில், ஏழு மாதங்கள் வரை சுயநினைவற்று, கோமா நிலையில் இருந்தார்! அந்தக் குண்டுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை! முன்பு சரளமாக இந்தி பேசக்கூடிய இவர், இப்போது அந்த ஆற்றலை இழந்திருக்கிறார்! தேசப்பற்று மிக்க பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார்!
நண்பர் நாஞ்சில் மனோ அவர்களும் எமது அணியில் முக்கியமானவர்! எப்போதும் நகைச்சுவையாக பதிவுகள் போட்டும், பின்னூட்டத்தில் செல்லமாக சண்டை போட்டும் எம்மையெல்லாம் கலகலப்பாகி விடுவார்! எமது காமெடி கும்மிக்குள் மனோ நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்! பின்னர் எல்லாமே ரணகளம்தான்!
இப்படி கலகலப்பான மனோவின் தனிப்பட்ட வாழ்க்கை? அவ்வளவு சோகம் நிறைந்தது! இவர் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார்! காதலை குடும்பத்தார் ஏற்க மறுத்தனர்! வாக்குவாதங்கள் தொடர்ந்தன! விளைவு - அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்! அந்தத் துயரத்தில் இருந்து மீண்டுவர மனோவுக்கு நீண்டகாலம் எடுத்தது! இந்த வலையுலகம் அவரை கலகலப்பாக வைத்திருக்கிறது! சோகங்களை மறக்க வைத்திருக்கிறது!
நண்பா - நாம் இருக்கிறோம்! பார்த்துக் கொள்வோம்!!
கோமாளி செல்வா இன்னுமொரு காமெடி புயல்! மொக்கைகளின் அரசன்! மாஸ் மீடியாவில் டிப்ளோமா முடித்தவர்! வானொலி அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது இவரது கனவு! அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்! விரைவில் காற்றலையில் இவரது குரல் ஒலிக்கும்! வாழ்த்துக்கள்!!
நண்பர் சதீஸ்குமார் வலையுலகில் துணிச்சல்மிக்க ஒருவர்! எதிர்வுகூறல்கள் பலவற்றிற்கு சொந்தக்காரர்! இவர் ஒரு ஆற்றல் மிக்க ஜோதிடர்! ஜோதிட ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் கணிப்புக்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்! எமது வட்டத்தின் மூத்த உறுப்பினர் இவர்தான்!!
நண்பர் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் , ஒரு உணவு பரிசோதகர்! இவரது வலைப்பூவில் உள்ள அத்தனை விஷயங்களும் பயன்மிக்கவை! தொழில்ரீதியாக உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மிக இயல்பாக எம்முடன் பழகுவார்! இவர் தனது வேலை - இன்டர்வியூவுக்காக தனது எழுபது வயது தந்தையுடன் செங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த போது, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார்! இதனால் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன! இவர பத்து கிலோமீற்றர் தூரம் தனது தந்தையுடன் நடந்து சென்றே அந்த வேலையினைப் பெற்றுக்கொண்டார்! இது தனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்!!
நிரூபன்! வலையுலகில் சுனாமி! மிகக்குறுகியகாலத்தில் இவ்வளவு உச்சிக்கு வந்தவர் இவராக மட்டுமே இருக்கமுடியும்! நண்பர்களின் பதிவுகளைப் படித்து கமென்ட் போடுவதில் கில்லாடி! யாருமே தொடத் துணியாத பல விஷயங்களை தனது ப்ளாக் இல் எழுதிவருகிறார்! டாய்லெட்டில் இருந்து ராக்கெட் வரை அத்தனை துறைகளிலும் ஈடுபாடு! தீவிரமான தேடல் மிக்கவர்! மிகவும் பிரகாசமான எதிர்காலம் நிரூபனுக்கு இருக்கிறது!
அதிபுத்திசாலியை இலங்கை பேச்சு வழக்கில், " மண்டைக் காய் " என்று அழைப்பார்கள்! மண்டைக் காய் என்று பேர் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை! என்னைப் பொறுத்தவரை வலையுலகில் நிரூபன் ஒரு " மண்டைக் காய் "
ஹேமாவுக்கு என்று சில சிறப்பியல்புகள் உள்ளன! பெண்பதிவர்களுக்குள் மிகவும் துணிச்சல் மிக்கவராக இவரையே சொல்வேன்! ( யாரும் கோபிக்க மாட்டீர்களே ) இவர் எழுதும் கவிதைகளாகட்டும், இதர படைப்புகளாகட்டும் அத்தனையும் ஆழமான அர்த்தம் கொண்டவை! துணிச்சல் மிக்கவை! பெண்ணியம் சார்ந்த சில பல கட்டுக்களை உடைத்தெறிந்திருக்கிறார் ஹேமா!
இந்தத் துணிச்சல்காரிக்கு எனது வாழ்த்துக்கள்!!
சரி நண்பர்களே! இவ்வளவு சொல்கிறேனே, என்னைப் பற்றி ஏதாவது சொல்லவா? வேண்டாமா? சொல்லலாம்! நிறையவே இருக்கிறது சொல்வதற்கு!! ஆனால் பாதுகாப்பு பிரச்சனை முன்னால் உள்ளது! இது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனை தானே!
வாழ்க்கையில் மறக்கமுடியாத பல சம்பவங்களில் ஒன்றைச் சொல்கிறேன்! - ஐ நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! உரையாடினேன்!! ( நம்புங்கள்! இது காமெடி அல்ல )!
சரி நண்பர்களே! இப்போது விடைபெறுகிறேன்! நாளைமுதல் மாத்தியோசியில் சந்திக்கலாம்! இந்த வாய்ப்பினை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு, எனது இதயபூர்வமான நன்றிகள்!!
வாழ்க வலைச்சரம்!!!
. ( நண்பர்களே! வேலைப் பளு காரணமாக மிகவும் அவசரமாக எழுதப்பட்ட பதிவு! தவறுகள் இருப்பின் உடன் சுட்டிக்காட்டவும் )
.
நண்பர்களின் பெயரினைக் கிளிக் பண்ணுவதன் மூலம், அவர்களின் வலைகளுக்கு நீங்கள் செல்ல முடியும்.
|
|
பதிவர்கள் பற்றி தெரியாத தனிப்பட்ட தகவல்கள் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி !
ReplyDeleteவடை இன்றைக்கு எனக்கு தான் !!
அறிமுகத்துக்கு நன்றி நண்பா.. சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபல புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. சக நண்பன் மனோ.. ஜாலி டைப் என நினைச்சேன்.. ராம்சாமி டாக்டரா? விக்கி தக்காளி எக்ஸ் மிலிட்ரி மேனா?இந்த தகவல்கள் எல்லாம் தெரியாம இத்தனை நாளா கலாய்ச்ச்ட்டனே.. இனி மரியாதை கொடுத்து பழகறேன்.
ReplyDeleteஇந்தப்பதிவு வலைச்சரத்தின் மைல் கல் பதிவாக இருக்கும்.
ReplyDeleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteபதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை ஆச்சர்யமாக இருக்கு...
ReplyDeleteவிக்கி உலகம் கார்கில் போரில் காயமடைந்தவரா....!!!!!
ReplyDeleteஒரு ராயல் சல்யூட் சோல்ஜர்.....
எல்லாமே சர்ப்ரைஸ் மேட்டராத்தான் இருக்கு......
ReplyDelete//////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபல புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. சக நண்பன் மனோ.. ஜாலி டைப் என நினைச்சேன்.. ராம்சாமி டாக்டரா? விக்கி தக்காளி எக்ஸ் மிலிட்ரி மேனா?இந்த தகவல்கள் எல்லாம் தெரியாம இத்தனை நாளா கலாய்ச்ச்ட்டனே.. இனி மரியாதை கொடுத்து பழகறேன்./////
மரியாதைன்னா கேப்டன் நடிச்ச படம்தானே? அத நாங்க வெச்சி என்னத்த பண்றது?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னது சிபி செஸ் சாம்பியனா? இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவுமில்லியே?
ReplyDeleteநம்ம தக்காளி மிலிட்டரியா? ஆத்தாடி இது தெரியாம நான் வேற எடக்குமடக்கா பேசிப்புட்டேனே?
ReplyDeleteநண்பர் மனோவின் கலகலப்பிற்கு ஒரு சிறுதுளியேனும் உதவி இருப்பதில் மகிழ்ச்சி!
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்த ஓட்டவட நாராயணனுக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteஅல்மோஸ்ட் எல்லா தகவல்களுமே எனக்கு பயங்கர ஆச்சர்யமா தான் இருந்தது....ரொம்ப வித்யாசமான தொகுப்பு ரஜீவன்...ஒரு வாரம் நல்லாவே யோசிச்சு பண்ணினீங்க...உங்களை பற்றிய தகவல் ரொம்ப ரொம்ப ஆச்சர்யம்...ம்ம்...கலக்குங்க எல்லாரும்...
ReplyDeleteசகோ மனோ!!அந்த கவிதையை நானும் உங்க ப்லொக்கில் முன்னாடி படிச்சிருக்கேன்..:((
விக்கி உலகம்க்கு என் salute ..
சி.பி.எஸ் சார்..ம்ம்...பிளேயர் ஆ...ம்ம்...கலக்குங்க...
கோமாளி செல்வா..உங்களுக்கு வாழ்த்துக்கள்...
ஹேம்ஸ்...!!ரஜீவன் அப்படியே உண்மையை சொல்லிருக்கார்...உங்களோட சில கவிதைகளை பார்த்து நானும் ரஜீவன் மாதிரியே தான் நினைச்சு வியந்து இருக்கிறேன்..
ப.கு.ராமசாமி பற்றிய தகவல் ரொம்ப இனிமையான அதிர்ச்சி...ஆனால் ரொம்ப சுவாரஸ்யம் கூட..வாழ்த்துக்கள் ப.கு.ராம்...
food ராஜலிங்கம் அண்ணாவை பற்றி தெரியாத தகவல்...வாழ்த்துக்கள் அண்ணா...
நிருபன்,சதீஷ்,மதி சுதா க்கும் என் வாழ்த்துக்கள்...
எல்லா ஜாம்பவான்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநண்பா எனக்கு சின்ன வருத்தம் உண்டு!......நான் ஒரு சிறியேன் என்னை நீர் பெரியோனாக காட்டியது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.....வாழ்வின் பயனே மற்றவருக்கு முடிந்த உதவிகள் செய்வதே........நான் எழுதும் பல பதிவுகள் அடுத்தவரை சந்தோஷப்படுத்தவே............எல்லா நண்பர்களும் சுகம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்......வாழ்த்துக்கள்!
ReplyDelete//இவர் ஒரு செஸ் சாம்பியன்! //
ReplyDeleteஅப்ப ஒரு கை பார்க்க வேண்டியது தான்.. இதனால சொல்ல வேண்டியது என்னன்னா.. நானும் செஸ் சாம்பியன் தான்.. பாப்போமா.?
//பதவிநிலை - துணைப் பேராசிரியர்!//
ReplyDeleteகுட் மார்னிங் ஆபிஸர்.. இதுக்கெல்லாம் மரியாதை குடுப்பேன்னு நினைக்க வேண்டாம்.. வழக்கம்போல தான் இருப்பேன்.. ஏதாவது எதிர்பார்த்தா பிச்சிபுடுவன் பிச்சி..
//மதிசுதா ஒரு தனியார் மருத்துவர் ஆவார்! //
ReplyDeleteஇவரை பத்தி தெரிந்த மேட்டரு தான்.. நிரூபனுக்கு இருக்கிற அந்த பிரச்சனையை இவருகிட்ட டீல் பண்ணலாம்..
//அந்தக் குண்டுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை! //
ReplyDeleteஅதெல்லாம் நினைவுகள் தானே.. இதிலென்ன இருக்கு.. வீரனுக்கான அறிகுறி.. இதுக்காக உங்களை பெரிய மனுசனாலாம் பாக்கல.. வழக்கம் போல குஜால் தான்..
//நண்பா - நாம் இருக்கிறோம்! பார்த்துக் கொள்வோம்!! //
ReplyDeleteஅட மனோ தாத்தா.!!! லவ் ஆ.? நான் இருக்கேன்.. சிரிக்க வைக்க.. ஹி ஹி.. ஜிரிங்க பாஸ்..
//வானொலி அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது இவரது கனவு!//
ReplyDeleteஇதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது பாஸ்.. எனி அதர்.?
//எமது வட்டத்தின் மூத்த உறுப்பினர் இவர்தான்!! //
ReplyDeleteமூத்த உறுப்பினர்னா எப்படி.? ஒரு 90 வயசு ஆகுமா.?
//இது தனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்!!//
ReplyDeleteசெம மேட்டரா இருக்கே!!
//இந்தத் துணிச்சல்காரிக்கு எனது வாழ்த்துக்கள்!! //
ReplyDeleteதெரிந்த மேட்டரு தான்.. நமக்கு தெரியாததா.. நீங்க கலங்குங்க..
//ன் ஐந்து நிமிடங்கள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! உரையாடினேன்!!//
ReplyDeleteஎன்னாத்த உரையாடினீங்க.. அத சொல்லுங்க.. இங்க சொல்ல விருப்பமில்லாண்டடி ஒரு மெயில போடுறது..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஆச்சரியமான சில தகவல்கள் ...
ReplyDelete////சரி நண்பர்களே! இவ்வளவு சொல்கிறேனே, என்னைப் பற்றி ஏதாவது சொல்லவா? வேண்டாமா? சொல்லலாம்! நிறையவே இருக்கிறது சொல்வதற்கு!! ஆனால் பாதுகாப்பு பிரச்சனை முன்னால் உள்ளது! இது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனை தானே! //// ஹிஹிஹி ஏதோ செய்திரிக்கிரீங்க போல
ReplyDelete/////வாழ்க்கையில் மறக்கமுடியாத பல சம்பவங்களில் ஒன்றைச் சொல்கிறேன்! - ஐ நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! உரையாடினேன்!! ( நம்புங்கள்! இது காமெடி அல்ல )!///// அப்படியா!!!!! நான் நம்பிட்டன்...)))
ReplyDeleteநண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆச்சரியமான தகவல்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteமோகன் குமார் said...
ReplyDeleteபதிவர்கள் பற்றி தெரியாத தனிப்பட்ட தகவல்கள் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி !
வடை இன்றைக்கு எனக்கு தான் !!//
நண்பா, கைவசம் இன்னும் நிறைய விடயங்களை, தனிப்பட்ட மேட்டருகள் இருக்கு, ஆனால்
எல்லாவற்றையும் பப்ளிக் பண்ண முடியாதே
ஹி...ஹி..
சந்தேகமே இல்லை, வடை இன்று உங்களுக்கு தான், ஆனால் பூஜைக்குரிய காணிக்கையை செலுத்தாமல் வடை கேட்கலாமா?
அவ்...................
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி நண்பா.. சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றிகள் நண்பா.
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்//
உங்களுக்கும் நன்றிகள் நண்பா.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபல புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. சக நண்பன் மனோ.. ஜாலி டைப் என நினைச்சேன்.. ராம்சாமி டாக்டரா? விக்கி தக்காளி எக்ஸ் மிலிட்ரி மேனா?இந்த தகவல்கள் எல்லாம் தெரியாம இத்தனை நாளா கலாய்ச்ச்ட்டனே.. இனி மரியாதை கொடுத்து பழகறேன்.//
என்ன இப்புடிச் சொல்லிட்டீங்க சகோ,
நம்ம நண்பர்கள் இவ்ளோ உயர் பதவியில் இருந்தாலும் ஈகோ பார்க்காது பழகும் நல்லவர்கள்..
தெரியலை..ஹி..ஹி...
அதனால் எங்க கிட்ட எல்லாம் மரியாதை எதிர்பார்க்க மாட்டாங்க
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஇந்தப்பதிவு வலைச்சரத்தின் மைல் கல் பதிவாக இருக்கும்.//
ஏன் கின்னஸ் புத்தகத்திற்கு சிபாரிசு செய்யும் பதிவாகவும் இருக்காதா?
அவ்.........
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி.....//
என்ன இன்னைக்கு வடை பஜ்ஜி, மோதக்கத்தை காணோம் மனோ.
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவிக்கி உலகம் கார்கில் போரில் காயமடைந்தவரா....!!!!!
ஒரு ராயல் சல்யூட் சோல்ஜர்....//
என்ன சல்யூட் என்று சொல்லி..
உட்கார்ந்திருந்து சொல்றீங்க.
எந்திருங்க மனோ.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎல்லாமே சர்ப்ரைஸ் மேட்டராத்தான் இருக்கு......//
அடி ஆத்தி, நெசமாவா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////சி.பி.செந்தில்குமார் said...
பல புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. சக நண்பன் மனோ.. ஜாலி டைப் என நினைச்சேன்.. ராம்சாமி டாக்டரா? விக்கி தக்காளி எக்ஸ் மிலிட்ரி மேனா?இந்த தகவல்கள் எல்லாம் தெரியாம இத்தனை நாளா கலாய்ச்ச்ட்டனே.. இனி மரியாதை கொடுத்து பழகறேன்./////
மரியாதைன்னா கேப்டன் நடிச்ச படம்தானே? அத நாங்க வெச்சி என்னத்த பண்றது?//
டீவிடீ பிளேயரில் போட்டு பார்த்து, பாப்கோன் வாங்கி உண்டு மகிழலாமே;-))
asiya omar said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றிகள் அசியா.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது சிபி செஸ் சாம்பியனா? இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவுமில்லியே?//
இருந்தாலும் நம்மாலை நிரூபிக்க முடியாதே பன்னி.
அவங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட தான் கேட்கனும்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநம்ம தக்காளி மிலிட்டரியா? ஆத்தாடி இது தெரியாம நான் வேற எடக்குமடக்கா பேசிப்புட்டேனே?//
அவ்., அவர் கையில மாட்டினீங்க. மாட்டர் ஓவர் தான்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்த ஓட்டவட நாராயணனுக்கு பாராட்டுக்கள்!//
நன்றிகள் பன்னி, வாழ்த்துக்கள் மட்டும் தான் தருவீங்களா.
அப்போ பரிசுகள் ஏதும் இல்லையா.
ஆனந்தி.. said...
ReplyDeleteஅல்மோஸ்ட் எல்லா தகவல்களுமே எனக்கு பயங்கர ஆச்சர்யமா தான் இருந்தது....ரொம்ப வித்யாசமான தொகுப்பு ரஜீவன்...ஒரு வாரம் நல்லாவே யோசிச்சு பண்ணினீங்க...உங்களை பற்றிய தகவல் ரொம்ப ரொம்ப ஆச்சர்யம்...ம்ம்...கலக்குங்க எல்லாரும்...//
என் பதிவில் உள்ள பதிவர் அறிமுகங்களை விட, தங்களின் மிக..............................................நீளமான பின்னூட்டங்கள், பதிவினை வென்று விடும் போல இருக்கின்றது.
உங்களது பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள். ஏதோ, நம்மலாளை முடிஞ்ச ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொண்ட சந்தோசம்.
வாசகர்கள், நண்பர்களின் ஊக்குவிப்பும், ஆதரவும் தான் இதற்கெல்லாம் காரணம்.
தொடர்ந்தும் வலைச் சரத்தில் வலம் வர இருக்கும் அனைவருக்கும் எம் ஆதரவை வழங்குவோம் நண்பர்களே
ஆனந்தி.. said...///
ReplyDeleteஉங்களின் மிக நீண்ட பின்னூட்டத்திற்கும். வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள்.
! சிவகுமார் ! said...
ReplyDeleteஎல்லா ஜாம்பவான்களுக்கும் வாழ்த்துகள்!//
நன்றிகள் சகோ.
விக்கி உலகம் said...
ReplyDeleteநண்பா எனக்கு சின்ன வருத்தம் உண்டு!......நான் ஒரு சிறியேன் என்னை நீர் பெரியோனாக காட்டியது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.....வாழ்வின் பயனே மற்றவருக்கு முடிந்த உதவிகள் செய்வதே........நான் எழுதும் பல பதிவுகள் அடுத்தவரை சந்தோஷப்படுத்தவே............எல்லா நண்பர்களும் சுகம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்......வாழ்த்துக்கள்!//
என்ன ஒரு அபையடக்கம், ஆனாலும் நண்பா, வயசில் என்னை விட நீங்கள் தானே...
அவ்............
தம்பி கூர்மதியன் said...
ReplyDelete//ன் ஐந்து நிமிடங்கள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! உரையாடினேன்!!//
என்னாத்த உரையாடினீங்க.. அத சொல்லுங்க.. இங்க சொல்ல விருப்பமில்லாண்டடி ஒரு மெயில போடுறது..//
உங்களின் விமர்சனத்திற்கும், கொசுறு தகவலுக்கும் நன்றிகள் சகோ.
காலம் நேரம் கை கூடி வரும் போது சொல்லுறேன் நண்பா.
shanmugavel said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்//
நன்றிகள் சகோ.
கந்தசாமி. said...
ReplyDeleteஆச்சரியமான சில தகவல்கள் ...//
நன்றிகள் நண்பா.
கந்தசாமி. said...
ReplyDelete////சரி நண்பர்களே! இவ்வளவு சொல்கிறேனே, என்னைப் பற்றி ஏதாவது சொல்லவா? வேண்டாமா? சொல்லலாம்! நிறையவே இருக்கிறது சொல்வதற்கு!! ஆனால் பாதுகாப்பு பிரச்சனை முன்னால் உள்ளது! //
இது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனை தானே! //// ஹிஹிஹி ஏதோ செய்திரிக்கிரீங்க போல//
எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதைத் தவிருங்க சகோ. பாதுகாப்பு பிரச்சினை என்பது பல விடயங்களை உள்ளடக்கி வரும், அவற்றை இங்கே தனித் தனியாக விளக்க முடியாது நண்பா.
கந்தசாமி. said...
ReplyDeleteநண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்//
நன்றிகள் சகோ.
Rathnavel said...
ReplyDeleteஆச்சரியமான தகவல்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றிகள் ஐயா.
கலாநேசன் said...
ReplyDeleteபதிவர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி...//
நன்றி மட்டும் தான் சொல்லுவீங்களா, வேறை ஏதாச்சும் சொல்ல மாட்டீங்களா?
நன்றிகள் நண்பா.
இந்த வாரம் முழுவதும் என்னோடு தோளோடு தோள் நின்று பயணித்த நண்பர்கள் அனைவருக்கும், எனக்குப் பல வழிகளிலும் உதவிய பல அன்பு உள்ளங்களுக்கும்,
ReplyDeleteஎன் வலைச் சர வாராத்தினை ‘அட இதையும் படிக்கணுமா’ எனும் கொலை வெறியோடு படித்த அனைத்து உள்ளங்களுக்கும்;-)))))))))
மற்றும் அனைத்து வலை உலக வாசகர்கள், நண்பர்கள், பதிவர்கள், ரசிகர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்!
தொடர்ந்தும் தமிழோடு, தமிழால் தமிழ் கூறும் உலகில் இணைந்திருப்போம் நண்பர்களே!
பதிவர்கள் பற்றிய கலக்கலான, சுவாரசியமான விடயங்கள்,
ReplyDeleteநிஜமாவே மாத்தி தான் யோசித்திருக்கிறீங்க.
நன்றி சகோ.
நண்பா நான் ரொம்ப லேட் ... இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteநிஜமாகவே புதுமையான தகவல்கள்..
இவ்வளவு விசயங்களை தெரிந்த நீங்கள் உண்மையில் பெரியமனிதர் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் தனிப்பட்டமுறையில் உங்களுக்கு நான் வரைந்த மின் அஞ்சலுக்கு பதில் கிடைக்கவில்லை என்று ஒரு நிமிடம் கோபித்துக் கொண்டதற்கு இப்ப புரிகிறது உங்கள் நிலை!
ReplyDeletesila matter i know...
ReplyDeletepala matter i dont know...
pannikutti meiyaalume daakutaraa?
பிந்திய வருகைக்கு மன்னிக்கணும் ரஜீ... நீங்கள் வலையுலகில் வென்றதற்கு நீங்கள் தான் காரணம்... உங்கள் எழுத்துக்கள்... முயற்சி எல்லாம் மிகவும் பிரமிக்கத் தக்கது எல்லாம் உங்களுக்குத் தான்...
ReplyDeleteநண்பர்களிடம் இத்தனை செய்தி இருக்கிறதா உண்மையில் தெரியாமல் போச்சே... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் பணியை சிறப்பாக செய்திர்கள் ஆனால் என்னால் தான் உடனே வர முடியல வாழ்த்துக்கள் ரஜீ...
ReplyDelete