07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஓட்ட வட நாராயணன். Show all posts
Showing posts with label ஓட்ட வட நாராயணன். Show all posts

Sunday, May 1, 2011

வானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு!! 

வணக்கம் நண்பர்களே! 

வலையுலகில் நண்பர்கள், நட்பு வட்டம் மிக முக்கியம்! எனது நண்பர்கள் வட்டம் பரந்து விரிந்தது!  அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாவதும் எமது இந்த வட்டம்தான்!! வலைப்பூக்களில் நாம் எழுதுகின்ற விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு போதுமே எம்மை அளவிட முடியாது! 

அதனால் எமது நண்பர்கள் குழாமில் இருந்து முக்கிய நண்பர்கள் சிலரது, இதுவரை வெளிவராத தகவல்களை வெளியிடுகிறேன்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!! 


01. சி. பி .செந்தில்குமார்! 



தமிழ் வலைப் பதிவர்களில் நம்பர் ஒன் பதிவர்! இனிய நண்பர்! யாருடனும் சண்டை சச்சரவுக்கு போகமாட்டார்! மஹேந்திரா அண்ட் மஹேந்திரா பைனான்ஸ் கம்பெனியில், கலெக்சன் பகுதியில் டீம் லீடராக வேலை பார்க்கிறார்!  இவர் ஒரு செஸ் சாம்பியன்! 

இன்றைய தேதியில் அலெக்சா ரேட்டிங் - 45,161   



02. பன்னிக்குட்டி ராமசாமி! 




வலையுலகின் கலகலப்பு கதாநாயகன்! இவர் கமென்ட் போட வந்தாலே , ஏரியா கலகலப்பாகி விடும்! இவர் ஒரு விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்! சவுதியில் ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைந்த, மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹெட் ஆப் த டிபார்ட் மென்ட் ஆக பணி புரிகிறார்! பதவிநிலை - துணைப் பேராசிரியர்! 
ப்ளாக் நண்பர்களுடன் ஈகோ பார்க்கமாட்டார்! அன்பாகப் பழகுவார்! இவருடைய போட்டோவும் , இன்னும் பல தகவல்களும் என்வசம் இருக்கிறது! அவற்றை வெளியிட வேண்டாம் என்று அன்பாக சொல்லியுள்ளார்! 



வலையுலகில் எனது குருநாதர் மதிசுதாதான்!  வலையுலகம் பற்றிய சூட்சுமங்களை எனக்கு சொல்லித்தந்தவர்! பிரபலமாவதற்கு வழி ஏற்படுத்தி தந்தவர்! மிகச்சிறந்ததொரு கிரிக்கெட் வீரன்! சகலதுறை ஆட்டக்காரர்! சாதாரணமாக வலதுபக்கம் பத்து அடியும், இடது பக்கம் எட்டு அடியும் பாய்ந்து பந்து பிடிப்பதில் வல்லவர்! 

இன்னொரு ஆச்சரியமான தகவல் - மதிசுதா ஒரு தனியார் மருத்துவர் ஆவார்! 




நண்பர் விக்கி உலகம் - விக்கி அவர்கள் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஆவார்! இந்திய ராணுவத்தில் இவர் கடமையாற்றினார்! கார்கில் யுத்தத்தில் பங்கெடுத்து காயமடைந்தவர்! இவரது சிறுமூளைக்கு அருகில் குண்டுகள் பாய்ந்ததில், ஏழு மாதங்கள் வரை சுயநினைவற்று, கோமா நிலையில் இருந்தார்! அந்தக் குண்டுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை! முன்பு சரளமாக இந்தி பேசக்கூடிய இவர், இப்போது அந்த ஆற்றலை இழந்திருக்கிறார்! தேசப்பற்று மிக்க பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார்! 





நண்பர் நாஞ்சில் மனோ அவர்களும் எமது அணியில் முக்கியமானவர்! எப்போதும் நகைச்சுவையாக பதிவுகள் போட்டும், பின்னூட்டத்தில் செல்லமாக சண்டை போட்டும் எம்மையெல்லாம் கலகலப்பாகி விடுவார்! எமது காமெடி கும்மிக்குள் மனோ நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்! பின்னர் எல்லாமே ரணகளம்தான்! 

இப்படி கலகலப்பான மனோவின் தனிப்பட்ட வாழ்க்கை?   அவ்வளவு சோகம் நிறைந்தது! இவர் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார்! காதலை குடும்பத்தார் ஏற்க மறுத்தனர்! வாக்குவாதங்கள் தொடர்ந்தன! விளைவு - அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்! அந்தத் துயரத்தில் இருந்து மீண்டுவர மனோவுக்கு நீண்டகாலம் எடுத்தது! இந்த வலையுலகம் அவரை கலகலப்பாக வைத்திருக்கிறது! சோகங்களை மறக்க வைத்திருக்கிறது! 

நண்பா - நாம் இருக்கிறோம்! பார்த்துக் கொள்வோம்!! 





கோமாளி செல்வா இன்னுமொரு காமெடி புயல்! மொக்கைகளின் அரசன்! மாஸ் மீடியாவில் டிப்ளோமா முடித்தவர்! வானொலி அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது இவரது கனவு! அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்! விரைவில் காற்றலையில் இவரது குரல் ஒலிக்கும்! வாழ்த்துக்கள்!! 






நண்பர் சதீஸ்குமார் வலையுலகில் துணிச்சல்மிக்க ஒருவர்! எதிர்வுகூறல்கள் பலவற்றிற்கு சொந்தக்காரர்! இவர் ஒரு ஆற்றல் மிக்க ஜோதிடர்! ஜோதிட ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் கணிப்புக்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்! எமது வட்டத்தின் மூத்த உறுப்பினர் இவர்தான்!! 




நண்பர் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் , ஒரு உணவு பரிசோதகர்! இவரது வலைப்பூவில் உள்ள அத்தனை விஷயங்களும் பயன்மிக்கவை! தொழில்ரீதியாக உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மிக இயல்பாக எம்முடன் பழகுவார்! இவர் தனது வேலை - இன்டர்வியூவுக்காக தனது எழுபது வயது தந்தையுடன் செங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த போது, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார்! இதனால் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன! இவர பத்து கிலோமீற்றர் தூரம் தனது தந்தையுடன் நடந்து சென்றே அந்த வேலையினைப் பெற்றுக்கொண்டார்! இது தனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்!!





நிரூபன்! வலையுலகில் சுனாமி! மிகக்குறுகியகாலத்தில் இவ்வளவு உச்சிக்கு வந்தவர் இவராக மட்டுமே இருக்கமுடியும்! நண்பர்களின் பதிவுகளைப் படித்து கமென்ட் போடுவதில் கில்லாடி! யாருமே தொடத் துணியாத பல விஷயங்களை தனது ப்ளாக் இல் எழுதிவருகிறார்! டாய்லெட்டில் இருந்து ராக்கெட் வரை அத்தனை துறைகளிலும் ஈடுபாடு! தீவிரமான தேடல் மிக்கவர்! மிகவும் பிரகாசமான எதிர்காலம் நிரூபனுக்கு இருக்கிறது! 

அதிபுத்திசாலியை இலங்கை பேச்சு வழக்கில், " மண்டைக் காய் " என்று அழைப்பார்கள்! மண்டைக் காய் என்று பேர் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை! என்னைப் பொறுத்தவரை வலையுலகில் நிரூபன் ஒரு " மண்டைக் காய் " 





ஹேமாவுக்கு என்று சில சிறப்பியல்புகள் உள்ளன! பெண்பதிவர்களுக்குள் மிகவும் துணிச்சல் மிக்கவராக இவரையே சொல்வேன்! ( யாரும் கோபிக்க மாட்டீர்களே ) இவர் எழுதும் கவிதைகளாகட்டும், இதர படைப்புகளாகட்டும் அத்தனையும் ஆழமான அர்த்தம் கொண்டவை!   துணிச்சல் மிக்கவை! பெண்ணியம் சார்ந்த சில பல கட்டுக்களை உடைத்தெறிந்திருக்கிறார் ஹேமா! 

இந்தத் துணிச்சல்காரிக்கு எனது வாழ்த்துக்கள்!! 


சரி நண்பர்களே! இவ்வளவு சொல்கிறேனே, என்னைப் பற்றி ஏதாவது சொல்லவா? வேண்டாமா? சொல்லலாம்! நிறையவே இருக்கிறது சொல்வதற்கு!! ஆனால் பாதுகாப்பு பிரச்சனை முன்னால் உள்ளது! இது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனை தானே! 

வாழ்க்கையில் மறக்கமுடியாத பல சம்பவங்களில் ஒன்றைச் சொல்கிறேன்! - ஐ நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள்  உரையாட வாய்ப்பு  கிடைத்தது! உரையாடினேன்!! ( நம்புங்கள்! இது காமெடி அல்ல )! 

சரி நண்பர்களே! இப்போது விடைபெறுகிறேன்! நாளைமுதல் மாத்தியோசியில் சந்திக்கலாம்! இந்த வாய்ப்பினை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு, எனது இதயபூர்வமான நன்றிகள்!! 

            
            வாழ்லைச்ம்!!!


.  ( நண்பர்களே! வேலைப் பளு காரணமாக மிகவும் அவசரமாக எழுதப்பட்ட பதிவு! தவறுகள் இருப்பின் உடன் சுட்டிக்காட்டவும் ) 


 நண்பர்களின் பெயரினைக் கிளிக் பண்ணுவதன் மூலம், அவர்களின் வலைகளுக்கு நீங்கள் செல்ல முடியும்.
மேலும் வாசிக்க...

Friday, April 29, 2011

கிளிக்கூட்டம் போல் எங்கள் கூட்டமே! இது ஆனந்தப் பூந்தோட்டம், அன்பின் ஆலயம் 

ண்பர்களே! கடந்த நான்கு நாட்களில் கணிசமான அளவு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன்! இதோ இன்று, எனது உறவுகளை, தோழர், தோழிகளை, நட்பு வட்டத்தை உங்கள் முன்னால் கொண்டுவருகிறேன்! இவர்களில் பெரும்பாலாவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான்!


வர்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால், மாத்தியோசியும் இல்லை, ஓ. வ. நாராயணனும் இல்லை!!! 


னவே எனது சக பதிவர்கள் பற்றி தனித்தனியே சொல்லாமல், அவர்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவின் லிங்க் ஐயும், இவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் வலைப்பூக்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதையும் தொகுத்து தருகிறேன்!! 
 






01. ஹைக்கூ அதிர்வுகள் - ஆனந்தி... ( மதுரைக்காரி! " என் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்...." என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார் ) 


எனக்கு பிடித்த பதிவு - நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ? 


02. ரேவா  கவிதைகள் - ரேவா.... ( நாடக உலகில் நடிக்க பிறந்த பலரில் நானும் ஒரு ஜீவனே.... நல்ல நட்பும் என் உலகமே )


எனக்குப் பிடித்த பதிவு -  இந்த மனுஷன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே! 


03. பாலாவின்  பக்கங்கள் - பாலா -  ( கற்றதும் பெற்றதும் உணர்ந்ததும் )


எனக்கு பிடித்த பதிவு -  புதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்!


04. மாணவன் -  ( பேசுவோம் பேசுவோமென்று நான் பேசாமல் விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கனங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... )







05. பட்டாபட்டி - ( கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ வரலாம்.)


எனக்குப் பிடித்த பதிவு - சொன்னாங்கோ 

06. டகால்டி  - 

எனக்குப் பிடித்த பதிவு - ஒரு ஜாலி கற்பனை  

07. கொஞ்சம் வெட்டி   பேச்சு - சித்ரா 

( பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be. ) 

எனக்குப் பிடித்த பதிவு - மண்வீடுகளும் பின்னே அமெரிக்காவும்  

08. ஐ ஆம் சீரியஸ் - தம்பி கூர்மதியன் (  நான் எழுதுவதெல்லாம் படு சீரியஸா இருக்கும். அதுக்குன்னு என்ன ஹாஸ்பிடலுக்கு போனு யாராவது சொன்னீங்க பிச்சீபுடுவன் பிச்சி!! )

எனக்குப் பிடித்த பதிவு - என் பெயருக்கான புராணம்  

09.  உஜிலாதேவி - யோகி ஸ்ரீ ராமானந்த குரு ( எழுத்து எனது சுவாசம் அறிவுத்தேடல் என் வாழ்க்கை கற்றவழி நிற்பதே என் யாகம் ) 

எனக்குப் பிடித்த பதிவு - தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை

10. CHEERS WITH JANA - ( நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். ) 

எனக்குப் பிடித்த பதிவு - அறிவிப்பாளராக இருவர்!  


11. -தமிழ்வாசி  - பிரகாஷ் ( தற்சமயம் மதுரைவாசி..... )


எனக்குப் பிடித்த பதிவு - blog ல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா?  

12. வேடந்தாங்கல் - கருன் ( இது பல்சுவை பதிவுகளின் சரணாலயம்... ) 

எனக்குப் பிடித்த பதிவு - மனம் எனும் சாக்கடை  

13. சூரியனின் வலைவாசல் - அருண் பிரசாத்  ( விகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை. ) 

 எனக்குப் பிடித்த பதிவு - தமிழ் படங்களை கண்டு பிடியுங்கள்!  

 14. இந்திராவின் கிறுக்கல்கள் - ( பெருசா சொல்லிக்கிறதுக்கு எதுவும் இல்லங்க.. ) 

  எனக்குப் பிடித்த பதிவு - மரண வலிதரும் உன் மௌனம்

15. கூதற்காற்று - ர.மதுரன் ( நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்துபோக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்றுபோக மறுக்கும் "நான்"உட‌னும் ) 


16. அரசர்குளத்தான் - ரஹீம் கசாலி - 



 இன்னும் நிறைய ண்பர்கள்! நாளை.....!!!



 .
மேலும் வாசிக்க...

Thursday, April 28, 2011

கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு!








டாக்டர் வசீகரன்: I would like call my friend, my brother, my son chitty babu to come on the stage!


Chitty: Hi good morning everybody! 


டாக்டர் வசீகரன் : ஜென்டில்மேன்! இவன் ஒராள் நூறு பேருக்கு சமம்! நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு! இவனுக்கு எல்லாக் கலைகளும் தெரியும்! உலகின் எல்லா மொழிகளும் தெரியும்!! நீங்க சிட்டிகிட்ட ஏதாச்சும் கேட்கிறதா இருந்தா கேட்கலாம்! 

ஒருவர் : சிம்பிளா கேட்கிறேன்! புதுசா ப்ளாக் எழுத வந்திருக்கிறவங்க எத்தினை பேரு இருக்காங்க?


சிட்டி :  anbuflash  அப்டீன்னு ஒரு ப்ளாக் ஒருத்தர் தொடங்கியிருக்காரு! உலகத்தமிழ் வானொலிகள் பலதோட லிங்க் போட்டிருக்காரு! இந்த மாசம் தான் ப்ளாக் தொடக்கி இருக்காரு!! 


மிழ் திருடன்  னு ஒருத்தர்! போனமாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! பத்தொன்பது பதிவு போட்டிருக்காரு! கவிதை, கட்டுரை, ஜோக்குன்னு கலந்து கட்டி எழுதுறாரு! 

காதல்ரோஜா  னு ஒரு ப்ளாக் கு!   ஒரே ஒரு பதிவு மட்டும் தான் போட்டிருக்காரு! பெப்ரவரி மாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! ப்ளாக் ல நிறைய டிசைன் பண்ணி அசத்தி இருக்காரு!! 


றுமுகம் கிருபாகரன்னு ஒருத்தர், " வெட்டி வெச்ச வெங்காயம் "  னு ஒரு ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் ஆறு பதிவு போட்டிருக்கார்! ' கோட்டி ' பட விமர்சனப் பதிவு செம ஹிட் ஆகியிருக்கு! 


கிறுக்கன்னு ஒருத்தர் அதே பேரிலேயே ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் பத்து பதிவு போட்டிருக்கார்! அதுல ஒன்னு ஹிட் ஆகியிருக்கு! இயற்கை மருத்துவம் பத்தி நிறைய சொல்லியிருக்காரு! 

நிஷாந்தன்னு ஒருத்தர், இசையருவி அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! முழுக்க முழுக்க சினிமாப்பாடல்களை வீடியோவாகவும், எழுத்திலையும் போட்டிருக்காரு! இன்னிக்கு ஏப்ரல் இருபத்தி எட்டு! இந்த மாசத்துல மட்டும் எண்பது போஸ்ட் போட்டிருக்காரு!  அதுல ஆறு போஸ்ட்ட இன்ட்லியில சேர்த்திருக்காரு

 செந்தமிழ் செல்வி னு ஒரு தோழி மலர்வனம்  னு ஒரு ப்ளாக் வச்சிருக்காங்க, 45  பேர் பாலோ பண்ணுறாங்க! இதுவரைக்கும் முப்பத்தெட்டு பதிவு போட்டிருக்காங்க! ப்ளாக் க ரொம்ப அழகா வச்சிருக்காங்க! 

ணிகண்டன் னு ஒருத்தர்! ஜோதிடர் னு நெனைக்கிறேன்! முத்து சிதறல்கள அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! இதுவரைக்கும் 12  போஸ்ட் போட்டிருக்கார்!  எல்லாமே ஜோதிடம் பத்திதான்! நேத்திக்கு கூட " நினைவில் கொள்ளவேண்டிய ஜோதிட விதிகள் " அப்டீன்னு ஒரு போஸ்டு போட்டிருக்காரு!!  

செந்தில்குமார் னு ஒருத்தர் கடல் மீன் அப்டீன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் இருபத்தியெட்டு போஸ்ட் போட்டிருக்காரு! இவரை ஏழுபேர் பின்தொடர்ராங்க! இன்ட்லி ல ஒரு போஸ்ட் பிரபலமாகியிருக்கு! 

த்னவேல் னு ஒருத்தர் " ஸ்ரீ வில்லிப் புத்தூரில் இருந்து ரத்னா வேல் நடராஜன்  " அப்டீங்கற பேர்ல ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் மொத்தம் மூணு போஸ்ட் போட்டிருக்காரு! லேட்டஸ்டா பட்டாசு பத்தி வெளிவந்த ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு!! 

 துவாரகன் அப்டீன்னு ஒரு சுட்டிப் பையன்!  சரியில்ல அப்டீன்னு ஒரு ப்ளாக்  வச்சிருக்காரு!  இதுவரைக்கும் பதினோரு பதிவு போட்டிருக்காரு! அதுல அஞ்சு ஹிட்! இருபத்தொன்பது பேர் பாலோ பண்றாங்க! பேர்தான் சரியில்ல! பதிவுகள் நல்லா இருக்கும்!!  

கூட்டத்தில் ஒருவர் : போதும் சிட்டி! விட்டா சொல்லிக்கிட்டே போவீங்க போல! மிச்சத்த நாளைக்கு சொல்லுங்க!! 

சிட்டி : ஓகே டாட்!!  





. குறிப்பு : நண்பர் சி பி செந்தில்குமார் அவர்களின் கருத்துக்கமைவாக, நண்பர் சரியில்ல அவர்களது அறிமுகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!! நன்றி நண்பரே!! 



மேலும் வாசிக்க...

Wednesday, April 27, 2011

முத்தமிழ் கவியே வருக! முக்கனிச் சுவையும் தருக!!



ரணத்தின் பயம்தன்னை மறந்திடு என்றொரு 
ரணம் சொட்டும் கவிவடித்தான் சித்தன்!
எங்கே நீ வாழ்ந்தாலும் சாவோன்றே முடிவென்று 
செம்மண் தூரிகையில் எழுதுகிறான் ஜித்தன்!


குடிகாரக் கணவன்மேல் கொண்டுவிட்ட பாசம்தனை,
முடியாத துயரத்தில் மூண்டெழுந்த கவிதைதனை 
பேரின்பா  வலைப்பூவில்  கண்டேன்! - கூரம்பாய்
ஓரம்போய் ஒருக்களித்து நின்றேன்!!

ளுக்கொரு சாமி வச்சு, அது அதுக்கு கோவில் வச்சு
பாழ் பட்டு போனதொரு கூட்டம் - அந்தப்  பாவிகளை
மாற்றிநல்ல பகுத்தறிவை ஊட்டிவிட
எழுதி வைத்தான்  இப்பதிவன் காட்டம்!!



பூப்பறித்து ஒரு சிறுமி, புரிகின்ற குறும்புகளை
காப்பியமாய் வடித்திடுதல் போலே - இங்கே
கதிர் என்பார் ஆக்கிட்ட கவி விருந்தை 
எதிர்கொண்டு படித்திடுக பரவசமாய் நன்றே!

காதலுக்கு நிறமுண்டாம்! காதல் செய்து பார்க்கட்டாம!!
ஆதலினால் காதல் செய்து,  அந்த நிறம் கண்டிடுக!
எண்ணி எண்ணி பார்க்கையிலே இனிக்குமிந்த கவியதனை
கண்மணியாள் வடித்திட்டாள் காதல் நிறம் உரைத்திட்டாள்!



ள்வீட்டு ஏழ்மையினை, உழன்று செல்லும் வாழ்வுதனை
சொல்கொண்டு வடித்துள்ளார் முத்து - இதை 
பலபேரும் படிக்கட்டும், பலமாக ரசிக்கட்டும்
எல்லோர்க்கும் இது நல்ல சொத்து!!


வாழ்க்கையின் பாதையிலே தான்விட்ட தவறுகளை
கோர்வையாய் சொல்லுகிறாள் வாணி! - இதைக்
காத்திருந்து படித்திடவே காலம் கூடி வந்தது போல்
ஆர்த்தெழுந்து சென்றிடுவீர் அங்கு!


பெண்விடுதி ஒன்றினிலே அரங்கேறும் கொடுமைகளை
கண்ணோரம் நீர் கொண்டு பார்த்து - அதை
கவிதையிலே வடித்திட்டார் சத்யா!
இது கவர்ன்மேண்டும் சேர்ந்து செய்யும் சதியா?


சைக் கண்ணாளன் , அருமை மணாளன் 
போய் விட்டான் பெண்ணிவளைப் பிரிந்து, - அவள் 
ஓசைப் படாமல், ஒருத்தருக்கும் சொல்லாமல் 
தேம்பித்தான் அழுகின்றாள் திரிந்து! 
இக்கதையை கவிதையிலே வடித்திட்டார் பிரஷா
அக்கவிதை படிக்கையிலே இருந்திடுமே Fresh  ஆ? 

செல்லமாய் சிணுங்கியவள் வெல்லமாய் சுவை தந்தவள் 
கள்ளமாய் எங்கோ சென்றாள்! - இவன் கண்களில் வெள்ளமாய் 
கழிக்கிறான் பொழுதையே கனவிலும் அவள் முகம் கண்டு! 
நல்லதாய் இக்கதை - கவிதையில் வந்தது 
பனித்துளி சங்கரால்  இன்று!! 


காதலியாள் தந்திட்ட கலையாத நினைவுகளை 
அசைபோடும் ஓர் மனது இன்று - அதை 
கண்டுகொள்ள வந்திடுங்க கவிதைவீதி சௌந்தரிடம்
அவர்போடும் கணக்குகளும் நன்று!! 





மேலும் வாசிக்க...

Tuesday, April 26, 2011

....வயரூட்டி.. உயிரூட்டி.... ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி.... ஆறாம் அறிவை அரைத்தூற்றி.......ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி....!!

ணக்கம் நண்பர்களே! இன்று இரண்டாம் நாள்! இன்று நான் அறிமுகப்படுத்தும் பதிவர்கள் / பதிவுகள் பற்றி தனித்தனியே அறிமுகப்படுத்த விரும்பவில்லை! அனைவருக்கும் பொதுவான அறிமுகத்தை கீழே தருகிறேன்!  

வலையுலக விஞ்ஞானிகள்! 



" ஒரு விஞ்ஞானி வாழ்நாளில், தனது  மூளையின் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் " என்று எங்கோ படித்த ஞாபகம்! ஒரு விஞ்ஞானியே அவ்வளவு தான் எனும் போது, நாமெல்லாம் எங்கே மூளையை முழுசாக பயன்படுத்தப் போகிறோம்? 

னக்கு மூளையை உச்சமாக பயன்படுத்துபவர்களை மிகவும் பிடிக்கும்! மூளையை கசக்கி பிழிந்து, அப்படி இப்படியெல்லாம் மாத்தி மாத்தி யோசித்து, புதுசு புதுசா ஏதாவது சொல்பவர்களை  அவ்வளவு பிடிக்கும்! இவர்கள்தான் நல்ல கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள்! நல்ல நல்ல கிரியேட்டிவிட்டியால்தான் உலகமே கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது! 

மது வலையுலகிலும் இப்படியான மூளையை கசக்கிப் பிழிபவர்கள் இருக்கிறார்கள்! இவர்களை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்! அப்படியான சில வலையுலக விஞ்ஞானிகள் சிலரது ஐடியாக்களை படித்து மகிழுங்கள்!! 

 


பெண்களிடம் ஆண்கள் நல்ல  பெயர் வாங்க ஐடியாக்கள் ! 
பதிவர் : டிலீப்

வியுடன் பேசுவது எப்படி?  
பதிவர் : சில நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

10  ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி?   
பதிவர் : தேசாந்திரி பழமை விரும்பி

காதலியிடம் நல்ல பேர் எடுப்பது எப்படி? 
பதிவர் : அன்புராஜா 

திரைவிமர்சனம் எழுதுவது எப்படி? 
பதிவர் : பாலா 

லைப்பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்? 
பதிவர் : ஐந்து நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

திவர்கள் சிந்தனை 
பதிவர் : அனன்யா மகாதேவன் 

நெத்தியடி பதிவு 
பதிவர் : விசா 

திவர்களைப் பற்றி படம் எடுத்தால்....! 
பதிவர்: நசரேயன் 

ளிதாக பதிவு எழுத சில ஐடியாக்கள் 
பதிவர் : ரகுநாதன் 
  
ற்கொலை செய்வதற்கான ஐடியாக்கள் 
பதிவர் : மஸ்தான் ஒலி



பிரபல பதிவராவது எப்படி ? - சில ஐடியாக்கள்! 
பதிவர் : அதிரடிக்காரன் 

ம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? 
பதிவர்: யோகானந்தன் கணேஷன் 

ப்படியெல்லாம் கவிதை  எழுதுறாய்ங்கப்பா 
பதிவர் : கும்மாச்சி 

10,000  ஹிட்ஸ் வர்ற மாதிரி எனக்கும் பதிவு எழுத தெரியும்! 
பதிவர் : வெங்கட் சரண் 

கைரேகை பார்ப்பது எப்படி? 
பதிவர் : பெசொவி 


குறிப்பு : இந்தப் பட்டியலில் சில பிரபல பதிவர்களும் வந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்களுக்கு வேறொரு, விஷயம் வைத்திருக்கிறேன்! 




ண்பர்களே! மீண்டும் நாளை ந்திப்போம்


.  

மேலும் வாசிக்க...

Monday, April 25, 2011

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?



ஹாய் நண்பர்களே! 
நான்தான் உங்கள் ஓட்ட வட நாராயணன்! ' மாத்தி மாத்தி யோசிச்சு ' கடைசியில் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்! எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த, சீனா ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!! 

அதோ பை  சொல்லிவிட்டு போய்க்கிட்டு இருக்காங்களே ஆனந்தி! அவங்களுக்கும் நன்றி!!

நண்பர்களே! இன்னிக்கு முதலாவது நாள்! வலைச்சர விதிகளின் படி, இன்னிக்கு நான் என்னை அறிமுகப்படுத்தணும்! ஆனா, நான் மாத்தியோசிச்சு, ஐயாகிட்ட பர்மிசன் வாங்கியிருக்கேன்! - என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!

சரி, வாங்க பதிவுக்குள்ள போவோம்! 

ஆச்சரியம், வியப்பு இவையெல்லாம் அழகான உணர்வுகள்! ஆச்சரியப்படுவதும் இன்பம், ஆச்சரியப்படுத்துவதும் இன்பம்!! - இந்தவாரம்முழுக்க என்னை வியக்கவைத்த, ஆச்சரியப்பட வைத்த பதிவுகளை வலைச்சரம் சுமந்து வரும்!!  

குறிப்பு : எல்லாப் பதிவுகளுக்கும் சினிமாப்பாடல்களில் இருந்தே தலைப்புக்களை எடுத்திருக்கேன்! - வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்!! 



இதோ ஆச்சரியங்கள் - ஆரம்பம்!!! 

தலைப்பு : பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்! 
பதிவர் : தர்மா


*** கணிதத்திலுள்ள அளவுகளுக்கான தமிழ் பெயர்கள் தந்து அசத்தியிருக்கிறார்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!!


தலைப்பு : மாயத் தோற்றங்கள் ( கவனம் ) 
பதிவர் : கவினன்


*** " கண்ணால் காண்பதும் பொய்...."  என்று சொல்வது போல, உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாத அளவுக்கு அதிசய புகைப்படங்களை அள்ளித் தந்திருக்கிறார்! 


தலைப்பு : ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்!


*** இங்கும் அழகிய போட்டோக்கள் கொட்டிக்கிடக்கின்றன! கண்டு ரசியுங்கள்! 


தலைப்பு : பாரிஸ் ஒரு இனிய நகரம் 
பதிவர் : மணி


*** கலைநகரம் பாரீசில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்! குறிப்பாக நெப்போலியன் அரண்மனை, ஒபேரா அரங்கம் உங்களை மயக்கிவிடும்!!


தலைப்பு : காதலித்துப் பார் 
பதிவர் : அனாமிகா துவாரகன் 


*** வைரமுத்துவின் ' காதலித்துப் பார் ' ஐ உல்டாவாக்கி, கம்பியூட்டர் வார்த்தைகள் சேர்த்து ரசிக்க வைக்கிறார்! மின்னஞ்சலில் வந்த கவிதை என்று பதிவர் குறிப்பிட்டுள்ளார்! 



தலைப்பு : எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 
பதிவர் : கூல் கார்த்தி 

*** இச்சுட்டியில் கிடைக்கும் படங்கள் உங்களை கண்டிப்பாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்! அருமையான கிரியேட்டிவிட்டி! 


தலைப்பு : நாய்ப்பறவை
பதிவர் : கமர்தீன் 

*** நாய் தெரியும், பறவை தெரியும்! அதென்ன நாய்ப்பறவை? ஹி...... ஹி......ஹி...... கிளிக் பண்ணுங்க! ஆச்சரியம் காத்திருக்கிறது!! 


தலைப்பு : ரோம் பயணக்கட்டுரை 
பதிவர் : சித்திரன் 
சுட்டி

*** பெருமைமிக்க இத்தாலியின் ரோம் நகருக்கு சென்று வந்த அனுபவங்களை எழுத்தில் வடித்து, எம்மையெல்லாம் ரோமுக்கே அழைத்துச் செல்கிறார் பதிவர்! வாருங்களேன் ரோமுக்குப் போய் வருவோம்! 

தலைப்பு : காணக்கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்!! 
பதிவர் :  அபுல் பசார் 


*** இங்கும் ஓவியப் படையல்தான்! அழகிய ஓவியங்களின் அணிவகுப்பு!! உண்மையில் காணக்கண் கோடி வேண்டும்தான்!!

தலைப்பு : விசித்திர விலங்கினங்கள்  
பதிவர் : DR .சாரதி


*** விசித்திரமான விலங்குகளைக் காட்டும் வீடியோக்களைப் போட்டுள்ளார்! ஒவ்வொன்றுக்கும் சுவையான தலைப்புக்கள் கொடுத்திருப்பது ஹைலைட்! அந்த குடை பிடிக்கும்  பறவை டாப் கிளாஸ்!!


தலைப்பு : எக்ஸ்கியூஸ் மீ ஒரு கப் காப்பி சாப்பிடலாமா? 
பதிவர்: யுவகிருஷ்ணா 


*** அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மலை முகடு பற்றி, அவ்வளவு சுவாரசியமாக இவர்தரும் குறிப்புக்கள் வியக்க வைக்கின்றன!! 


தலைப்பு : இன்றைய இளைஞனின் டாப் 10  கனவுகள் 
பதிவர் : வசந்த் 

*** தேவையான புகைப்படங்களோடு, இன்றைய இளைஞர்களின் கனவுகளை, பட்டியல் போட்டு, வியக்க வைத்திருக்கிறார்!! ஒன்பதாவதாக அவர் சொல்லியிருக்கும் கனவு, அவ்வ்வ்வ்!!



தலைப்பு : ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் பிச்சைக்காரன் 
பதிவர்; சந்துரு
சுட்டி 

*** விஷயம் என்ன என்பதை தலைப்பே சொல்லிவிட்டது! படிச்சுப் பாருங்க! ' கலிகாலம்டா சாமீ ' என்பீர்கள்!  

தலைப்பு : வலையுலகில் நானும் ஒரு ரெடிதாங்க.... நம்புங்க!
பதிவர்: ஜல்லி 


*** அருமையான ஒரு காமெடி பதிவர்! இப்பவெல்லாம் எழுதுவதில்லை போல! தன்னைத் தானே பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்! இவரோட ப்ளாக் க படிக்காம சும்மா பார்த்துக்கிட்டு இருந்தாலே சிரிப்பு தன்னால வரும்!! 

தலைப்பு : பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவு! 
பதிவர்  : ஸ்ரீ  


*** நம்ம கிட்ட ஒட்டு வாங்கி ஜெயிச்சு பார்லிமென்ட் போனவுங்க என்ன பண்ணுறாங்க, எவ்வளவு சம்பாதிக்கிறாங்க? அறிஞ்சுக்கணுமா! கிளிக் பண்ணுங்க!! 



தலைப்பு : பறவைகள் - விந்தைகள்! 
பதிவர் : கே.கே.லோகநாதன் 


*** சில பறவைகள் பற்றி சுவையான தகவல்கள் சொல்கிறார்! வியப்பாத்தான் இருக்கு!!



தலைப்பு : மிகவும் விஷமுள்ள பாம்புகளும் விஷமற்றவைகளும்! 
பதிவர் : பெயரைக் காணவில்லை  


*** ஐயோஓஒ ஓ....... பார்க்கவே பயமா இருக்கு! இவ்வளவு கொடிய பாம்புகளை, பெரிய சைஸ் போட்டோவா போட்டிருக்காரு! வித் வீடியோ!!


தலைப்பு : இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்யவேண்டும்? 
பதிவர் : பத்மஹரி


*** இந்தியாவை வல்லரசாக்கணும் னா என்ன பண்ணனும் னு ஐடியா தந்து, யோசிக்கவைக்கிறார்!! அருமையா எழுதியிருக்காரு!!


தலைப்பு : ஜாலி கம்பியூட்டர் - ராசிபலன் 
பதிவர் : நீச்சல்காரன் 
சுட்டி

*** மிக மிக ரசிச்சு படிச்ச ஒரு பதிவு இது! சோதிடத்த புதுவிதமா, கம்பியூட்டரிசம் கலந்து சொல்லியிருக்கார்! கண்டிப்பா உங்களுக்குப்புடிக்கும்க!!

தலைப்பு : இவை இந்தியாவில் மட்டுமே சாத்தியம் 
பதிவர் : அரைக்கிறுக்கன் 
சுட்டி 

*** எவை? என்கிறீர்களா? அங்க போய் பாருங்க! மனுஷன் கொலையா கொன்னுருக்கார்! பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நம்ம இந்தியா இப்படி இருக்கே  னு  உங்களுக்கு கொஞ்சம் கோபமும் வரலாம்!!

அப்புறம், பதிவர் அரைக்கிறுக்கன், ப்ளாக் டைட்டிலுக்கு கீழ ஒரு வாக்கியம் போட்டிருக்காரு! நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்! அது உங்களையும் சிரிக்க வைக்கும்!!

தலைப்பு : முன்னணி நாயகர்களின் நகைச்சுவை  அனிமேசன்கள்! 
பதிவர் : குகன் 
சுட்டி

*** உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, இந்த சுட்டியை கிளிக்கி, வரும் வீடியோக்களைக் காட்டுங்கள்! உங்கள் செல்வங்களின் முகங்களில் புன்னகை + உங்களுக்கும்தான்!!   


சரி நண்பர்களே! மீண்டும் நாளை சந்திப்போமா? 



  
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது