07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 15, 2011

சரம் 1 – வணக்கமுங்க..

 

சுதந்திர தின வாழ்த்துக்களோட வணக்கத்தையும் சொல்லிக்கிறேங்க.. என்னையும் ஒரு ஆளா மதிச்சு வலைச்சரம் எழுத அழைத்த சீனா ஐயாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். (சந்தேகங்கள தெளிவுபடுத்திக்கிறேன் பேர்வழினு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னெடுத்துட்டேன்..).
எல்லாரும் நல்லா இருக்கீங்களா??? “நீ வலைச்சரம்ல எழுத ஆரம்பிச்சா நாங்க எப்டி நல்லாயிருப்போம்“னு கேக்குறீங்களா??? ஷ்ஷ் கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லப்படாது..
“மொக்கை போட்றதுக்குனே தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எங்கள கஷ்டப்படுத்திகிட்டு இருந்தது பத்தாதுனு இங்கயும் வந்துட்டியா“னு நீங்க கதர்றது எனக்கு கேக்குது. என்னங்க பண்றது??? இன்னும் ஆறு நாளைக்கு நா தொடுக்கப்போற சரங்களையெல்லாம் படிச்சு சகிச்சுக்கணும்னு விதி இருக்கும்போது, அத யாரால மாத்த முடியும்?
நண்பர்கள் சிலரோட வலைப்பக்கங்கள புரட்டிகிட்டிருந்தப்ப நாமளும் எழுதலாமேனு, போன வருஷம் ஒரு வலை ஆரம்பிச்சு முதல் பதிவ எழுதினேன்.
எல்லாம் நல்லாதான் போய்கிட்டிருந்துச்சு. திடீருனு ஒரு நாள் என் ப்ளாக்குக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க. அப்புறம் வேற வழியில்லாம பழைய பதிவுகளையெல்லாம் புதுப்பிச்சு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். (இம்சை குடுக்காம இருக்க்க்க்க முடியலைங்க..)
இந்திரானாலே பல்பு“ங்குற அளவுக்கு நா நிறைய பல்பு வாங்கியிருக்கேன். அதையெல்லாம் சேர்த்து பல்பு 1, பல்பு 2னு அடுக்கிகிட்டே போகலாம்.
கவிதைங்குற பேர்ல ஏதாவது கிறுக்கலாம்னு, சில கவிதைகளையும் எழுத முயற்சி பண்ணிருக்கேன்.
உலகத்துலயே ரொம்ப ஈசியான விசயம் அட்வைஸ் பண்றதுனு சொல்லுவாங்க. அந்த வகைல சில உபயோகமான(!!!!) டிப்ஸ் எல்லாம் குடுத்துருக்கேன். அதுல காதலிக்குப் பிடிச்ச மாதிரி நடக்க டிப்ஸும், பதிவுகளுக்கு ஓட்டு வாங்குறதெப்டி“ங்குற டிப்ஸும் நெறைய பேருக்கு உபயோகமா இருந்திருக்கும்னு நெனைக்கிறேன். (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்...).
அட இவ்ளோ ஏங்க.. பதிவர்களுக்கு பரிசு கூட குடுத்துருக்கேன்னா பாத்துக்கங்க.. (நோ நோ அழக் கூடாது.. கன்ட்ரோல் பண்ணிக்கங்க..)
என்னடா ரொம்ப மொக்கையாவே எழுதுறோமேனு ஜிந்திச்சு, சில சீரியஸ் பதிவுகளையும் எழுதணும்னு முடிவெடுத்து கிறுக்குனேன்.
இதுல வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்தியும், சரக்கடிக்கும் ஆண்கள் பத்தியும் எழுதினதோட நிக்காம (உக்காந்துகிட்டே தான்) முக்கியப் பிரச்சனையான பொசசிவ் பத்தியும் எழுதினேன்.
இதெல்லாத்தையும் விட பெரிய்ய்ய்ய காமெடி என்னானா, நா கதை எழுதவும் முயற்சி செஞ்சேன்.. (ஹைய்யோ.. ஹைய்ய்ய்ய்யோ..) இதுல பல பேர் காரி துப்புன மொக்கை கதையும்  உண்டு.. (வாட் எ காமெடி..). 
சரி சரி கடுப்பாகாதீங்க.. விட்டா மொக்கை போட்டுகிட்டே போவேன். இன்னைக்கு இது போதும்னு நெனைக்கிறேன். நாளைக்கு சில நண்பர்களோட வலையைப் பத்தி சரம் தொடுக்கலாம்.
இன்னைக்கு இந்த இம்சை போதும், நாளைக்கு அடுத்த இம்சைக்கு தயாராகுங்க....
கவுன்டவுன் ஸ்டார்ட்..
.
.

20 comments:

  1. வணக்குமுங்க

    வாழ்த்துகளுடன்
    நிகழ்காலத்தில் சிவா

    ReplyDelete
  2. ஸ்டார்ட் மூஜிக் இந்திரா.. இந்த வாரம் முழுக்க செம ரகளையாத்தான் இருக்கப்போவுது :-)))))

    வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ரகலையான ஆரம்பம்
    (லை கரைக்கட்டனு தெரியவில்லை டீச்சர் :)
    கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்கோங்க.
    வாழ்த்துக்கள் தொடரட்டும்
    உங்கள் பணி

    ReplyDelete
  4. ///////
    (சந்தேகங்கள தெளிவுபடுத்திக்கிறேன் பேர்வழினு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னெடுத்துட்டேன்..).
    //////////


    நீஙக கூடவா..
    நானும்தான்...

    ReplyDelete
  5. அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டிங்களா...


    நாளைக்கு சந்திப்போம்...

    வலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்கள்...

    மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இங்க மொத்தம் எத்தனை பல்பு வாங்குவதாக உத்தேசம்...

    100 வாட்சை...
    பிரிச்சி 15 வாட்ஸ் 40 வாட்ஸ் 60 வாட்ஸ் என பிரித்து மொத்தமாக வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்...


    ஆரம்பிச்சிட்டோம்ல...

    ReplyDelete
  7. குட் மோர்னிங் டீச்சர் ..

    ReplyDelete
  8. கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் இந்திரா

    என்னாதிது ஆரம்பமே அதகளமா இருக்கு...கலக்குங்க கலக்குங்க,

    ReplyDelete
  10. இதுவரை நான் உங்க பதிவுகளை படிச்சதில்லை. இதுதால் முதலாவதாக படிக்கிறேன்.” உங்க நேர்மை என்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு” ரொம்ப அழகா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஒளிமயமான வாரத்திற்கு வாழ்த்துக்கள் (யாருப்பா அது "பல்பு பல்ப்"ங்கறது...).

    ReplyDelete
  12. வலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பதிவில் 13 லிங்க்குடன் ஒருபதிவு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
    சூப்பர்...ஒரே பதிவுல உங்க கூட ஆரம்பத்துல இருந்து பயணம் செஞ்சமாதிரி இருந்தது.......

    ReplyDelete
  13. வாழ்த்துகள். இந்த வாரம் உங்கள் வாரம்...

    ReplyDelete
  14. ஆரம்பமே அசத்தலா இருக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் இந்திரா.. கலக்குங்க.. ஆல் தி பெஸ்ட்

    ReplyDelete
  16. வலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. // நிகழ்காலத்தில்... //

    //அமைதிச்சாரல் //

    //siva //

    //# கவிதை வீதி # சௌந்தர்//

    //Jaleela Kamal //

    //கே. ஆர்.விஜயன் //


    வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete
  18. //கலாநேசன் //

    //ராமலக்ஷ்மி //

    //கார்த்திகவிதை //

    //வெங்கட் நாகராஜ் //

    //ஆமினா //

    //கவிதை காதலன் //

    //சே.குமார் //


    வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete
  19. வாழ்த்துக்களுடன். கலக்குங்க.னாங்கல்லாம் இருக்கும்போது என்ன?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது