07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 4, 2011

நலம் மிக்க நான்காம் நாள்



இன்று ஒரு சிறு தகவல் மட்டும்   

தில்லானா மோகனாம்பாள் கதை முதலில்
ஆனந்த விகடனில் தொடராக வந்ததும் அதை
எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு என்பதும்
அப்போது ஆனந்தவிகடனின் பொறுப்பில் இருந்தவர்
அமரர் வாசன் என்பதுவும் உங்கள் எல்லோருக்கும் தெரியும்

தில்லானா மோகனாம்பாள் கதையில் அதிக ஈடுபாடு கொண்ட
ஏ.பி. நாகராஜன் அவர்கள் வாசன் அவர்கள் பொறுப்பில்
கதைக்கான உரிமை இருந்ததால் அவரை அணுகி
தில்லானா மோகனாம்ப்பாள் கதையை தான் திரைப்படமாக
எடுக்க விரும்புவதாகவும் அதற்குரிய உரிமைக்கான தொகையை
தரவும்  தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்
.
அமரர் வாசன் அவர்கள் தனக்கும் அதைத்
திரைப்படமாக எடுக்கிற எண்ணம் இருப்பதாகச் சொல்ல
ஏ.பீ. நாகராஜன் அவர்கள் சரியெனத் திரும்பிவிடுகிறார்
தன்னைவிட வாசன் அவர்கள்அனைத்து விதத்திலும் படத்தை
மிகச் சிறப்பாக எடுக்கக் கூடியவர் என்ற கருத்து
ஏ.பி.என் அவர்களுக்கு இருந்தது

சில நாட்களில் ஏ.பி.என் அவர்களின் ஒரு திரைப் படத்தை
பார்க்க நேர்ந்த வாசன் அவர்கள் ஏ.பி.என் அவர்களால்
இக்கதையை மிகச் சிறப்பாக படமாக்க முடியும் என்கிற
எண்ணம் வர உடனடியாக ஏ.பி.என் அவர்களுக்கு தகவல் கொடுத்து
படத்திற்க்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறார். ஏ.பி. என் அவர்களும் உரிமைக்கான பணத்தைக்
கொடுத்து விட்டு சட்டப்படி உரிமையைப் பெற்றுக்கொண்டு
வீடு திரும்புகிறார்.

அப்போது கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்
உடல் நிலைமை சரியில்லாமல் மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
சட்டப்படி கதைக்கான உரிமையைத தான் பெற்றுவிட்டாலும் கூட
கதையை எழுதியவரின்ஆசி பெறாது படத்தைத் துவக்குவது
சரியில்லை என்றுமுடிவு செய்து மறு நாள்
அவருக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு
சுப்பு அவர்களை பார்க்க மருத்துவமனை செல்கிறார்

மருத்துவமனையில் சுப்பு அவர்களின் சேமங்களை
விசாரித்துவிட்டு கதை சம்பந்தமாக அமரர் வாசன் அவர்களும்
தானும் செய்து கொண்டுள்ள உரிமை மாற்று சம்பந்தமான
விவரங்களை முழுமையாகச் சொல்லி
"சட்டப்படி எங்களுக்குள் உரிமை மாற்றிக்கொண்டது
சரிதான் என்றாலும் எழுதிய தங்களுக்கும்
சன்மானம் தந்து ஆசி பெற வந்துள்ளேன்" எனத் தெரிவிக்கிறார்

திரு.சுப்பு அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளாது
அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு
தன் அருகில் இருந்த சிறு பெட்டியைத் திறந்து காண்பிக்கிறார்
அதில் நேற்று ஏ.பி.என் அவர்கள் கதை உரிமைக்காக கொடுத்த
மொத்தத் தொகையும் கட்டு பிரிக்கப் படாமல் அப்படியே இருந்ததாம்

இந்த நிகழ்வின் மூலம் யாரை உயர்ந்தவர் எனச் சொல்வீர்கள்
தான் திறமையானவராக இருந்தும் இன்னொருவரின் திறமை மீது
நம்பிக்கை ஏற்பட்டவுடன் அழைத்து உரிமையை
கொடுத்ததோடு அல்லாமல்தான் பணத்தில் சிறிதளவும்
எடுத்துக் கொள்ளாது முழுத்தொகையையும்
உடனே மூல ஆசிரியருக்கே கொடுத்தனுப்பிய
அமரர் வாசன் அவர்களையா?

சட்டப்படிதான் உரிமையை வாங்கிவிட்டோமே
எழுதியவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லையே என
எண்ணி இருக்காமல் எழுதியவருக்கும் மரியாதை செய்து
ஆசி பெறவேண்டும் என்று எண்ணிய ஏ.பி.என் அவர்களையா?

கதையின் பிரம்மா தான் தானே என எண்ணி
ஏ.பி.என் அவர்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொள்ள எண்ணாது
ஆசி வழ்ங்கிய திருவாளர் சுப்பு அவர்களையா?

இல்லை எல்லோருமே உயர்ந்தவர்களாக இருக்க
காரணமாக இருந்த அந்தக் காலச் சூழலா ?

சரி அது இருக்கட்டும்
இந்தப் படம் குறித்த ஒரு சிறு கேள்வி

தில்லான மோகனாம்பாள் படம் அப்போது பெரிய வெற்றிப் படம்
என்பது எல்லோருக்கும் தெரியும்
பட வெளியீட்டுக்குப் பின் கதையை எழுதியவர் என்கிற முறையில்
சுப்பு அவர்களிடம் அவர்கள் எழுதியதைப்போல
படத்தில் எந்த கதாபாத்திரம் மிகச் சரியாக சித்தரிக்கப் பட்டிருந்தது
அதில் நடித்த நடிகர் யார் எனக் கேட்டார்கள்
அதற்கு சுப்பு அவர்கள் ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும்
நடிகர் பெயரையும் சொன்னார் அது யாராக இருக்கும்?

( நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது இப் படத்தில்
நடித்துள்ளவர்கள் எல்லோரும் நடிப்புலக ஜாம்பவான்கள்
(உ.ம்)நடிகர் திலகம் , நாட்டியப் பேரொளி,நாகேஷ்,மனோரமா
பாலையா ஏ.வி.எம் ராஜன்,பாலாஜி இன்னும் பெரிய பட்டியல் உள்ளது )

விடையை நாளைக்குள் சொன்னால் போதும்

இப்போது பதிவர்கள் அறிமுகம்

கோவில்களை கட்டிய மன்னர்களின் அரண்மனையெல்லாம்
இடிந்து மண்ணாகிப் போக கோவில்கள் மட்டும்
பொலிவுடன் திகழக் காரணம் கோவில்கள்
 மக்கள் பொறுப்புக்கு வந்ததால்தான் எனச் சொல்வார்கள்

அதை போலவே இந்தியாவில் சமூக அமைப்போ
கலாச்சரமோ பண்பாடோ அழிவில்லாமல் இருப்பதற்கும்
பன்மடங்கு செழித்தோங்கி இருப்பதற்கும்
முழு முதற்காரணம் பெண்கள்தான் என்றால் மிகையல்ல

பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள எத்துறையும்
நிச்சயம் அதீத வளர்ச்சியே பெரும் என்பதில் அதிக நம்பிக்கை
கொண்டவன் நான்.
இது நமது பதிவுலகத்திற்கும் பொருந்தும்

அந்த வகையில் பதிவுலகைத் தங்கள் சிறந்த படைப்புகளால்
கலக்கிவரும் பெண் பதிவர்கள் சிலரை இன்று
அறிமுகம் செய்கிறேன்


 தேனம்மை லெட்சுமணன்http://honeylaksh.blogspot.com/
வார மாத இதழ்களில் அதிகம் எழுதுபவராக இருந்தாலும்
பதிவுலகத்தையும் மற்றொரு கண்ணாகப  பாவித்து
எழுதிவரும் இவர் பதிவுலக எழுத்தாளர்களுக்கு
வழிகாட்டியாகவும் உள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி என்கிற
இவருடைய பதிவு அனைவரும்
அவசியம் படிக்கவேண்டிய பதிவு

2.ஸாதிகாhttp://shadiqah.blogspot.com/
2009 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வரும் இவர் இதுவரை
120க்கு மேல்பதிவுகள் கொடுத்து 123
பின்தொடருபவர்களைப் பெற்றுள்ளார்
சுமார் 421000 க்கு மேல் இவருடைய பதிவின் பக்கங்கள்
பார்க்கப் பட்டுள்ளன என்பது மலைப்பூட்டும் செய்தி
இவர் பதிவு அனைவரையும் கவரும் பல்சுவைப் பதிவு


3.விடிவெள்ளி   http://sempakam.blogspot.com/
2010 முதல் எழுதத் துவங்கி இதுவரை 35 பதிவுகளே
 கொடுத்திருந்தாலும் 85 க்கு மேற்பட்ட
பின்தொடர்பவர்களைப் பெற்றிருப்பதே
இவரின் எழுத்தின் வீரியத்திற்கான அத்தாட்சி.
கண்டிப்பாக பதிவர்கள் அனைவரும் இவரின்
"இருண்டு கிடக்கும் வாழ்வில்ஒளியேற்ற வாரீர் "
என்ற் பதிவினைக்  காண வேண்டும்


4.ப்ரியா   http://enmanadhilirundhu.blogspot.com/
கவிதை கதை ஓவியம் என அனைத்து துறைகளிலும்
விற்பன்னராகத் திகழும் இவரது பதிவு மிகவும்
ரசிக்கத் தக்க ஒரு  பல்சுவைப் பதிவு.
குறிப்பாக இவரது" அதிசயத்துடன் கூடிய சித்திரமவள்-பெண் "
என்ற ஓவியப் பதிவைப் பார்வையிட்டால் அசந்தே போவீர்கள்


இவரின் பதிவின் முகப்பு மட்டும் அல்ல
இவரது கவிதைகளும் கூட உங்களை சில நேரம்
மெய் மறக்கச் செய்துவிடும்
உணர்வுகளும் வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று
பின்னிப் பினைந்துஇவரது கவிதைகளில் காட்டும் ஜாலம்
நாமெல்லாம்கவிதை எழுதவேண்டுமா என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்
வண்ண மயமான கவிதை பூங்கா இவரது பதிவு


6.சாகம்பரி  http://mahizhampoosaram.blogspot.com/
கவிதை.சுய முன்னேற்றக் கட்டுரைகள்.,வாழ்வியல் குறித்த
சிந்தனைகள் எனஅனைத்து அம்சங்களையும்
ஒருங்கே கொண்ட அழகிய பயனுள்ள பதிவு இது
இவருடைய" மகளின் மகளான அன்னை" என்கிற பதிவை
நான் அவ்வ்ப்போது மீண்டும் மீண்டும் படித்து
பிரமித்துப்போவேன் அத்தனை தரமான பதிவு அது
நீங்களும் ஒருமுறை படித்துப் பாருங்கள்
இவரின் எழுத்து வலிமை புரியும்

7.மஞ்சுபாஷிணி   http://manjusampath.blogspot.com/
மிகச் சமீபத்தில்தான் இவர் பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
உண்மையில் நான் அசந்துதான் போனேன்.கதம்ப உணர்வுகள் என்கிற
இவரது வலைத்தளத்தின் பெயருக்கு ஏற்றார்ப்போல பலவகை
உணர்சிகளை சித்தரித்துப்போகும் இவரது ஒவ்வொரு படைப்பும்
உங்களை ஆச்சரியப்படுத்தும்.ஜுன் மாதத்திற்கு நாட்கள் 30 என்றால்
அந்த மாதத்தில் மட்டும் தரமான 36 பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளார்
குறிப்பாக இவரின் " மரணத்தின் நிழல்" என்கிற கதையைப் படித்தால்
இவரின் எழுத்துத் திறன் எளிதில் புலனாகும்


8.சந்திரகௌரி   http://kowsy2010.blogspot.com/
தள்ளி இருந்தால்தான் பாசத்தின் அருமை புரியும் என்பார்கள்
பாசத்தின் அருமை மட்டுமல்ல தமிழின் அருமை என்றும்
சேர்த்துக் கொள்ளலாம்.நம்மிடம் இல்லாத தமிழ் ஆர்வமும்
உச்சரிக்கும் அழகும் வெளி நாட்டில் உள்ள இவரிடம்   கண்டு
 நான் வியந்து போயிருக்கிறேன்
இவரது " என்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு
சம்பவங்கள் " என்கிற பதிவில் இவரின் மொழி நடையையும்
உச்சரிப்பின் அழகையும் கண்டும் கேட்டும் பாருங்களேன்
பின் இவர் பதிவை தவறவே விடமாட்டீர்கள்


9.அம்பாளடியாள்   http://rupika-rupika.blogspot.com/
2010 இல் பதிவைத் துவக்கியுள்ள இவர்2011 இல் மட்டும்
இதுவரை 153 பதிவுகள் கொடுத்து அசத்துகிறார்
கவிதை,வாழ்வியல் கட்டுரைகள்,பக்திப் பாடல்கள்
நகைச்சுவைப் பதிவுகள் என நவரசங்களையும்
உள்ளடக்கிய நவரசப் பதிவு இவருடையது
"எனது மனதில் எழுந்த முதல் பாடல் " என்கிற
அவர் குரலில் ஒலிக்கின்ற அழகான பாடலைக் கேளுங்கள்
அவரின் பன்முகத் திறமையில் அசந்து போவீர்கள்


10.இந்திரா    http://chellakirukkalgal.blogspot.com/
படிக்காதீங்க என பதிவின் பெயரை வைத்திருக்கிறார்
என்பதற்காக படிக்காமல் போயிராதீங்க
பல நல்லவிஷயங்கள் தெரியாமல் போய்விடும்
ரொம்ப ஜாலியாகத்தான் எழுதுவார் என நினைத்தும்
அசட்டையாகவும் படிக்கத் துவங்காதீங்க
பல சீரியசான பதிவுகளும் நிறைய உள்ளே இருக்கு
இவரது பதிவுகளில் படித்ததில்
பாதித்தது
பிடித்தது
புரியாது
நொந்தது
இவைகளை ஒருமுறை படித்துப் பாருங்களேன்


நாளை மீ ண்டும் சந்திப்போம் .......

61 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    தில்லானா மோகனம்பாள் படம் குறித்து, நீங்கள் பகிர்ந்த விஷயங்கள் ஆச்சர்யப்படுத்தின.
    சமீபத்தில் தான் தொலைகாட்சியில் அந்த படத்தை பார்த்தேன். நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விக்கு எனது அனுமான பதில்: மனோரமா. Guess work தான்.
    கதாசிரியருக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் பாராட்டப்பட வேண்டியது. சுட்ட பழத்துக்கு, சாரி படத்துக்கு, இப்பொழுது மூல கதை எங்கே இருந்து வந்தது என்று கூட சொல்வதில்லையே.

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் தங்களால் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.அறிமுகபடுத்திய எனைய வலைப்பூதாரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்.

    தி. மோ பற்றி பதிவில் சொல்லப்பட்டுள்ள தகவல் நெகிழ்வூட்டுகிறது. நாகேஷைச் சொல்லியிருப்பார் என்பது என் யூகம். இதில் நாம் கதையை எழுதியவரின் பார்வையில் பார்க்காமல் நாம் படம் பார்த்த உணர்வில் கெஸ் செய்கிறோம் என்பதும் உரைக்கிறது!

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. தி.மோ பற்றிய அறியாத தகவல். அறிமுகங்கள் நல்ல தேர்வு ரமணி சார்!

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    கேள்விக்கு பதில்: மனோரமா

    ReplyDelete
  7. தில்லானா மோகனாம்பாள் விகடனில் வந்தபோது கதை பக்கங்களை எடுத்து சேர்த்து வைத்து ஒரு இரண்டு வால்யூம் புத்தகங்களாக பைண்ட் செய்து வைத்திருந்தேன்.
    எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்/நடிகர்கள்:
    சிவாஜி, பத்மினி பற்றி சொல்ல வேண்டியதில்லை.
    ஜில்ஜில் ரமாமணியக மனோரமா
    சவுடால் வைத்தியாக நாகேஷ்
    முத்துராக்கு-பாலையா. தவில் வாசிக்கும்போது அவர் காட்டும் முகபாவம் அருமை.
    ஏ வி எம் ராஜன் -பெயர் நினைவில்லை. நாதஸ் பக்கவாத்தியம் எப்படி வாசிக்கணும் என்று கச்சேரிகளில் பார்த்து வந்தது போல அருமையாக செய்தார்.
    பாத்திரங்களுக்கு எற்ற நடிகர் தேர்வு.

    ReplyDelete
  8. முத்தான அறிமுகங்கள்..

    'நடிகர் நாகேஷ் அவர்களும், அவரோட கதாபாத்திரமும்'ங்கறது என்னுடைய அனுமானம்,

    எவ்வளவு பிழை இருக்கோ அதுக்கு தகுந்தாப்ல,பரிசுத்தொகையில் கழிச்சுக்கிட்டு கொடுத்தாப்போதும் :-))

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி ரமணி சார். ஆறு பதிவுகளாக வெளியிடப்பட்ட அம்மாவிற்கும் பெண்ணிற்கும் இடையேயான அழகான கால நிலை மாற்றங்களை விளக்கும், அந்த தொடர் பலரது பாராட்டுதல்களைப் பெற்றது. மீண்டும் நன்றி சார்.

    அறிமுகமாகி இருக்கும் மற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நடிகர் நாகேஷ் அவர்களும், அவரோட கதாபாத்திரமும்'???

    அற்முகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நிறைவான அறிமுகங்கள். தில்லானா மோகனாம்பாள் படம் குறித்த பகிர்வு - திரை உலகில் அன்று இருந்த நேர்மை - இன்று இல்லாததை எடுத்து காட்டுகிறது.

    ReplyDelete
  12. வணக்கம் ரமணி அண்ணா,
    தில்லானா மோகனாம்பாள் படம் பற்றிய விடயங்கள்...புதிதாக இருந்தது எனக்கு.

    இன்றைய அறிமுகங்களும் வழமை போல அசத்தல்.

    ReplyDelete
  13. இன்றைய வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரமணி சார்.
    இதர அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  16. மறுபடியும் ஒரு சுவாரஸ்யமான பதிவு!

    அதையும் ‌விட‌ சுவார‌ஸ்ய‌மான‌ புதிர்!

    ந‌டிக‌ர் தில‌க‌த்தைத் த‌விர‌ வேறு யாராக‌ இருக்க‌ முடியும்!

    ReplyDelete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. விடை :எனக்கு பிடித்த பாலையா அல்லது நாகேஷ்

    ReplyDelete
  19. தில்லானா - எவர்கிரீன் படம் அது. எனக்குப் பிடிச்சது, ஜில்லூதான். விடையைத் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.

    அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. //எந்த கதாபாத்திரம் மிகச் சரியாக சித்தரிக்கப் பட்டிருந்தது
    அதில் நடித்த நடிகர் யார்//

    என்னைப்பொருத்தவரை அனைவருமே அந்தப் படத்தில் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள் என்றாலும்,”சவடால் வைத்தியாக நடித்த நாகேஷின் கதாபாத்திரமே மிகச் சரியாக சித்தரிக்கப்பட்டிருந்தது” என்பேன்.

    இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள பெண் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ரமணி சாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. ரமணி சார்!! எனது எழுத்தாற்றலை ஊக்கப்படுத்திய உங்கள் எழுத்திற்கும்,வலைச்சரத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
    ஏனைய அறிமுக பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. சூப்பர் அறிமுகங்கள். சிலரை தவிர ஏனையோர் புது பதிவர்கள்.

    ReplyDelete
  23. Chitra //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. ஸாதிகா //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. ஸ்ரீராம்.//

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. Rathnavel //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. மோகன்ஜி //.

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. கலாநேசன் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. சகாதேவன் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. அமைதிச்சாரல் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. சாகம்பரி //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  33. தமிழ் உதயம் //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. நிரூபன் //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. இந்திரா //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. தமிழ்வாசி - Prakash //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. சே.குமார்//

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. மனோ சாமிநாதன்//

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  39. ரியாஸ் அஹமது //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  40. ஹுஸைனம்மா //

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  41. vidivelli//

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  42. vanathy

    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  43. வை.கோ சார்
    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  44. முதலில் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    நல்ல அறிமுகங்கள். ஒவ்வொருவராய் படிக்க வேண்டும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  45. அப்பப்பா தில்லானா மோகனாம்பாள் படம் பலமுறை பார்த்தும் இன்னும் இன்னும் பார்க்க தூண்டியதற்கு காரணம் நடனத்தில் கொண்ட ஈடுபாடு மட்டுமே.. ஆனால் அந்த படம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்த இத்தனை விஷயங்களையும் இப்ப தான் அறிய முடிந்தது ரமணி சார் உங்க இந்த பதிவின் மூலமாக...

    நிறைய வித்தியாசங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கும் அன்றைய காலக்கட்டத்திற்கும்...

    அப்ப மனுஷாளுக்கு மரியாதை அவர்களின் எழுத்துகளுக்கு மரியாதை உணர்வுகளுக்கு மரியாதைன்னு இருந்தது... மனுஷனை மனுஷன் மதித்த காலம் அது...

    ஆனா இப்ப :(

    மிக அருமையா சிறப்பா எழுதி இருக்கீங்க ரமணி சார்.

    வலைச்சரத்துல உங்களால அறிமுகம் கிடைத்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்....

    அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  46. சிறப்பான வலைப்பூக்கள்.நல்ல அறிமுகங்கள்.
    சிறப்பான படத்திற்குப் பின்னணியில் உயர்ந்த மனிதர்களின் உள்ளங்கள்.நலம் மிக்க நான்காம் நாள் பதிவு அருமை.

    ReplyDelete
  47. இன்றைய வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரமணி சார்.
    அனைவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  48. வெங்கட் நாகராஜ்//

    தங்கள் வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  49. மஞ்சுபாஷிணி//

    தங்கள் வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  50. Murugeswari Rajavel //


    தங்கள் வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  51. Priya //.


    தங்கள் வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  52. //இன்னொருவரின் திறமை மீது
    நம்பிக்கை ஏற்பட்டவுடன் அழைத்து உரிமையை
    கொடுத்ததோடு அல்லாமல்தான் பணத்தில் சிறிதளவும்
    எடுத்துக் கொள்ளாது முழுத்தொகையையும்
    உடனே மூல ஆசிரியருக்கே கொடுத்தனுப்பிய
    அமரர் வாசன் அவர்களையா?

    சட்டப்படிதான் உரிமையை வாங்கிவிட்டோமே
    எழுதியவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லையே என
    எண்ணி இருக்காமல் எழுதியவருக்கும் மரியாதை செய்து
    ஆசி பெறவேண்டும் என்று எண்ணிய ஏ.பி.என் அவர்களையா?

    கதையின் பிரம்மா தான் தானே என எண்ணி
    ஏ.பி.என் அவர்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொள்ள எண்ணாது
    ஆசி வழ்ங்கிய திருவாளர் சுப்பு அவர்களையா?

    இல்லை எல்லோருமே உயர்ந்தவர்களாக இருக்க
    காரணமாக இருந்த அந்தக் காலச் சூழலா ?//

    சூப்பர்ண்ணா..இப்படியெல்லாம் நல்ல உள்ளங்களும் நேர்மையான மனசாட்சியும் உள்ள மனிதர்களும் இருந்தார்கள் என உங்கள் பதிவை படித்த போது மனம் சந்தோசத்தில் லயித்தது.... அந்த காலச்சூழலும் ஒரு சங்க காலத்திற்கு இணையான ஒரு பொற்காலம் தான்... ஆனால் தற்பொழுது கலிகாலம் என்பதில் சிறிதலவும் ஐயமில்லை... அப்படியே இந்த காலத்தில் அது போல தற்கால மூன்று பேரை கற்பனை செய்து பார்த்தால் ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருப்பார்கள் என நினைக்கிறேன்.... அருமையான ஒரு ஃபிலாஷ்பேக்கை நல்ல நடையில் அசத்தியுள்ளீர்கள் நன்றி.....யாரை சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடியலை சகோ....

    ReplyDelete
  53. மிக்க நன்றி ரமணி.. மிக அருமையாக அறிமுகப்படுத்தியமைக்கு. தாமதமான என்னுடைய பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

    உங்க பதிவர் சக்தி அற்புதம்..:)

    ReplyDelete
  54. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்த பாங்கிற்கு மிக்கநன்றி. நீங்கள் அறிமுகம் செய்திருந்த தளங்களுக்கு மெல்லமெல்ல நகர்ந்து பார்க்கின்றேன். ரமணிசார் நுகர்ந்தவை தரமில்லாமல் இருக்குமா? நுகர்ந்தவற்றின் தரத்தை அறிமுகம் செய்திருக்கின்ற பாங்கும் சிறப்பே.

    ReplyDelete
  55. தேனம்மை லெக்ஷ்மணன்//

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. சந்திரகௌரி//

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. மாய உலகம் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த விரிவான
    மனம் திறந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. வணக்கம் ஐயா.இன்றுதான் எனது சுற்றுலாப் பயணத்தை
    நிறைவு செய்துகொண்டு என் வலைத்தளத்தினுள் நுழைந்தேன்.
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது தாங்கள் என்னை வலைத்தளத்தில்
    அறிமுகம் செய்திருப்பதனைப் பார்க்குபோது.மிக்க நன்றி ஐயா .எல்லாப்புகழும்
    இறைவனுக்கே .தங்களின் ஆசிபெற்ற என் மனம் தலைவணங்குகிறது.
    தங்களை வாழ்த்துகின்றது நீங்கள் என்றென்றும் நீடூழி வாழவேண்டும்............

    ReplyDelete
  59. அம்பாளடியாள் //


    தங்கள் வரவுக்கும்
    விரிவான வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  60. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான அறிமுகங்கள்
    கூடவே தேனக்கா, ஸாதிகா அக்காவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  61. Jaleela Kamal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது