07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 7, 2011

நிறைவான ஏழாம் நாள்



தேவன் தாம் சிருஷ்டித்து உண்டு பண்ணின தன்னுடைய 
கிரியைகளைஎல்லாம்  முடித்த பின்புஅதிலே 
ஓய்ந்திருந்த படியால் தேவன்  ஏழாம் நாளை
ஆசி ர்வதித்து அதைப பரிசுத்தமாக்கினார் என
வேதாகமம் சொல்லும்   

அதைப்போல நமக்கான கடைமைகளை முடித்து நிமிரும்
நாள் கூட நமக்கு நிறைவான நாள்தானே
அந்த வகையில் இன்று நான்
வலைச்சர ஆசிரியர் பணியை முடித்து
நிறைவான மனத்தோடு உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன்

சக்கரவர்த்தித் திருமகன் படத்தில் வரும் பாடல் போல
பல்லாயிரக் கணக்கான சிறந்த பதிவர்கள் இருக்கும்
வலைத்தளத்தில் ஒருவாரத்தில் அனைவரையும்
அறிமுகப் படுத்த நினைப்பதுவும்
"யானையைப் பிடித்து ஒரு
பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவன் " செயல் போலத்தான்
 என நினைக்கிறேன்

நமது வீட்டு நிகழ்ச்சியின் போது பரிசுப் பொருட்களைவிட
நபர்கள் அதிகமாகிப் போகையில் நமக்கு மிகவும் 
வேண்டியவர்களுக்கு பிறகு கொடுத்துக் கொள்ளலாம் 
என முடிவு எடுத்தலைப் போல
புதிய பதிவர்கள்/பெண்பதிவர்கள்/ பிரபல பதிவர்களென
வரிசைப் படுத்தி வருகையில் எனக்கு மனத் தளவில்
மிகவும் நெருக்கமானவர்களின் தரமான பதிவினை
அறிமுகம் செய்யாது தவிர்க்க வேண்டி வந்தது.
தவிர்த்தும் இருக்கிறேன்
அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும்

அன்றாடப் பணிகள் /அவசரப் பணிகள்/ மின்சாரத் தடை
நெட் லொல்லு அத்தனையும் தாண்டித்தான் இந்த வாரம்
முழுவதும் வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடர வேண்டி
இருந்தது.எனவே பதிவில் தவறுகள் இருக்கும் பொறுத்தருள்க.

பிற பதிவர்களின் பதிவுகளோடு என் பதிவை ஒப்பிடுகையில்
பதிவின் எண்ணிக்கையில்/ தரத்தில்/
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் என எதனுடனும்
என் பதிவு பின் தங்கித்தான் இருக்கும்
ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் எனக்கும்
ஆசிரியர் பொறுப்பை வழங்கி கௌரவம் செய்த
சீனா ஐயா அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் எனது
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து உங்கள் அனைவரிடம்
இருந்து விடை பெறுகிறேன்.மீண்டும் சந்திப்போம்


             -----------@@@@@@@@@@@__________

நேற்றைய புதிருக்கான விளக்கம்
தனது அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரத்தில் முடியாது என்ற
வார்த்தையை அகராதில் இருந்தே எடுக்கவேண்டும் எனச்
சொன்னவர் நெப்போலியன்.
பின் நாளில் அவர் தோல்வியுற்று எல்பா தனிமைச்  சிறையில்
அடைக்கப் பட்ட பின்பு அவரால் எதுவுமே முடியாது போகிறது
அப்போது அவரை சந்தித்தவர்
 "இப்போது உங்களால்எதுவும் முடியாதே .இப்போது
முடியாது என்கிற வார்த்தை தேவையாகத் தானே 
இருக்கிறது "என்கிறார்

அப்போது நெப்போலியன் முடியாது என்கிற வார்த்தையை
உபயோகிக்காமல் முடியாது என்பதை இப்படிச் சொல்கிறார்
"எல்பா சிறைக்கு வருவதற்கு முன்னால் என்னால்
எல்லாம் முடியும் " என்கிற பொருளுடைய அந்த வாக்கியத்தை
நமது "விகடகவி" போல பின்னிருந்து படித்தாலும்
அதைப் போலவே வரும்

               _________@@@@@@@@@@_________

என் மன நிலையைச் சொல்லும் 
என் ஒரு சிறு கவிதையுட னும்
வாழ்த்துக்களுடனும் ..............


தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

தொடர்ந்து சந்திப்போம் ...........

41 comments:

  1. வலைச்சர ஆசிரியர் பணியை நல்லமுறையில் திருப்திகரமாக பதிவுகளையும் , அறிமுகங்களையும் அழகாக வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே

    ReplyDelete
  2. தேவன் ஏழாம் நாளை ஆசிர்வதித்து பரிசுத்தமாக்கியது என்று சொன்னீர்கள்.. வலைச்சரத்தில் தாங்களும் இடம்பெற்று நிறைவுபெரும் இந்த ஏழாம் நாளில் அந்த தேவனுடைய ஆசிர்வாதம் தங்களை எப்பொழுதும் சூழ்ந்திருக்கட்டும்....

    ReplyDelete
  3. //புத்தம்புது நாளாக புதியதொரு வாய்ப்பாக எப்போதும் கொள்வதால் வெற்றிக்கு தடையேதும்கண்டதில்லை தொடர்ந்து சந்திப்போம் ........... //

    அழகான வீருநடையுடன் கூடிய வெற்றிக்கான கவிதை.. அருமை சகோதரரே...தொடர்ந்து சந்திப்போம்.

    ReplyDelete
  4. அருமையான
    நிறைவான பணி
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மாய உலகம் .//.


    தங்கள்
    மேலான வரவுக்கும்
    மனம் திறந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. Rathnavel //


    தங்கள்
    மேலான வரவுக்கும்
    மனம் திறந்த வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்து முடித்திருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சிகரங்களை....
    சாதனையாகக் கொள்ளாமல்
    மறுசிகரம் காட்டுகின்ற
    குறியீடாகக் கொள்வதால்
    கிரீடங்களில் நாட்டமோ
    சரிவுகளில் பதற்றமோ
    வந்ததில்லை எப்போதும்.//

    தொடர்ந்து வெற்றி பெற தூண்டும் வரிகள்.

    சிறப்பான பணி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வெங்கட் நாகராஜ் //.


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. கோகுல் //


    தங்கள் மேலான வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மிக சிறப்பான அறிமுகங்கள் ..
    சுவாரஸ்யமான தகவல்கள்
    வலைசரத்தில் ஒரு அசத்தல் வாரம் இது
    நன்றி நன்றி

    ReplyDelete
  12. மேற்கொண்ட பணியை சிறப்பாய் முடித்துள்ளீர்கள். முத்தாய்ப்பாய் உங்களின் கவிதை மனசை இன்னமும் வருடிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  13. வலைச்சர ஆசிரியராய் அருமையான பணியாற்றிய ரமணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    நன்றி

    ReplyDelete
  15. மோகன்ஜி//


    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    நன்றி

    ReplyDelete
  16. 'பரிவை' சே.குமார்//


    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    நன்றி

    ReplyDelete
  17. அருமையான நிறைவான பணி
    மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  18. வலைச்சர ஆசிரியர் பணி மிகவும் பொறுப்புடைய ஒன்று என்று நாங்களும் உணரும் வகையில் அழகாக கையாண்டு ஒரு நிறைவான வாரத்தை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் ஒவ்வொரு வலைப்பூவையும் திறந்து பார்த்து மீளா வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  19. நிறைவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    வெற்றிக்கு தடையேதும்
    கண்டதில்லை எப்போதும்.

    ReplyDelete
  20. வலைச்சரம் அருமையான நிறைவு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ண//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  22. VENKAT //



    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  23. இராஜராஜேஸ்வரி //.
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  24. தமிழ்வாசி - Prakash//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  25. உங்கள் அறிமுகப்பணிக்கு வாழ்த்துக்கள்..


    சிகரங்களை....
    சாதனையாகக் கொள்ளாமல்
    மறுசிகரம் காட்டுகின்ற
    குறியீடாகக் கொள்வதால்
    கிரீடங்களில் நாட்டமோ
    சரிவுகளில் பதற்றமோ
    வந்ததில்லை எப்போதும்.

    .
    உண்மையிலேயே நல்ல கவிதை.....
    மனதை தொட்டு நிற்கிறது
    வரிகள் அனைத்தும்...

    ReplyDelete
  26. vidivelli //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  27. கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்தது மட்டுமல்லாது தான் படித்து பயனுற்ற ரசித்த மகிழ்ந்த பதிவர்களையும் அவர்களின் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தி அழகிய கவிதை ஒன்றில் கூட செய்ய நினைப்பவை சிறப்பாக செய்வது மட்டுமல்லாது அதில் இறுமாப்பு கொள்ளாமல் தன்னடக்கத்தில் அமிழவும் கத்துக்கொடுத்திருக்கீங்க ரமணி சார்....

    நல்லவை எல்லாம் எங்களுக்கு கொடுத்தீர் படித்து பயனுற....

    நன்றிகளெல்லாம் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.. இடைவிடாத எத்தனையோ பிரச்சனைகளுக்கும் இடையில் நெட் சொதப்பல், கரெண்ட் கட் உடல் உபாதை இப்படி எல்லாவற்றையும் ஒரு பக்கம் தள்ளிவெச்சிட்டு மிக அருமையாக மனநிறைவாக ஏழாம் நாள் பகிர்வை தந்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்....

    ReplyDelete
  28. அருமையான கவிதை விடைபெறுதலின் சிறப்பான முத்தாய்ப்பு. நிறைவான வாழ்த்துக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  29. அருமையான வாரத்தை எங்களுக்கு வழங்கியதுக்கு நன்றிகள்.. கவிதையுடன் முடித்தது ஜூப்பரு :-)

    ReplyDelete
  30. எப்போதும் போலவே
    தப்பேதும் இல்லாமல்
    இப்போதும் பாடினீர்
    ஒப்பேதும் இல்லாரமணி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. மஞ்சுபாஷிணி //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மனப் பூர்வமான நன்றி

    ReplyDelete
  32. சாகம்பரி //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மனப் பூர்வமான நன்றி

    ReplyDelete
  33. அமைதிச்சாரல்//.

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மனப் பூர்வமான நன்றி

    ReplyDelete
  34. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனம் கனிந்த வாழ்த்துக்கும்
    மனப் பூர்வமான நன்றி

    ReplyDelete
  35. சிறப்பாகச் செய்து முடித்த பணி
    சிறந்து விளங்கியது. உங்கள் மனநிறைவு
    உங்கள் கவிதையில் தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  36. தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. G.M Balasubramaniam //



    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. சிறப்பான அறிமுகங்கள் நிறைவான பணி செய்துள்ளீர்கள். பாராட்டு மற்றும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. சிறப்பான பணி.அருமையாய்ச் செய்துள்ளீர்கள்.வழக்கமாய் உங்கள் கவிதை சிறப்பாக இருக்கும்.நிறைவு நாளில் தந்துள்ள கவிதை வெகு சிறப்பு.

    ReplyDelete
  40. நிறைவான பணி வாழ்த்துகள்.

    ReplyDelete
  41. நல்ல பல அறிமுகங்கள் செய்து நன்றாகவே ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறீர்கள். கவிதை பிரமாதம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது