தொழில்துறை சார்ந்த நுட்பமாக பதிவுகள் தமிழ் வலையுலகில் அதிகம் இல்லை என்பது உண்மை. அறிவியல், கணிணி போன்ற துறைகள் சார்ந்த வலைப்பூக்கள் சில இருந்தாலும் அவை தொடர்ந்து செயல்படுவதில்லை. அதற்கு அவர்களின் வேலைப்பளு ஒரு காரணியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் துறை சார்ந்த பதிவுகளை தொடர்ந்த இட வேண்டும்.
பள்ளி ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர், தமிழ் வலைப்பூக்கள் சிலவற்றிலிருக்கும் தொழிற்நுட்ப தகவல்களையெல்லாம் சேகரித்து...
மேலும் வாசிக்க...
வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள். உண்மையில் இன்று மிகப்பிரம்மிப்பாக உணர்கிறேன். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டது. 2009 ஆகஸ்டு மாதத்தில் அகல்விளக்கு என்ற பெயரில் ஒரு வலைப்பூ-வினைத் தொடங்கினேன். எத்தனையெத்தனை நண்பர்கள், வாசகர்கள், முகமறிந்த, அறியாத நலவிரும்பிகள், தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் அன்பு உள்ளங்கள்... அனைத்திற்கும் காரணம் இந்த தமிழ் வலைப்பூ உலகம்தானே. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தமிழ் வலையுலகில்...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே ! இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபு கிருஷ்ணா , தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் கவிதை, ஆல்ரவுண்டர்ஸ், காணாமல் போனவர்கள், ட்விட்டர்-பிளாகர், புதுமுகங்கள், சமுதாய சிற்பிகள் என பல்வேறு தலைப்புகளில், பல பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்திருக்கிறார்....
மேலும் வாசிக்க...

இந்தச் சமுதாயம் என்பது நம்மால் ஆனது. ஆனால் நாம் அதற்கு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். சுயநலம் மட்டும் உள்ள சமுதாயம் என்றும் உயராது. நல்லவேளை நாம் அப்படி ஒரு சமுதாயத்தில் இல்லை. இந்த வலைச் சமுதாயத்தில் நான் பார்த்த, பழகும் ,மதிக்கும், வணங்கும் நல்ல உள்ளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இவர்கள்...
மேலும் வாசிக்க...
தினம் தினம் எத்தனையோ புதுமுகங்கள் பதிவுலகத்தில் . ஒவ்வொரும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் எல்லோருக்கும் புதுமுகம், சிலர் எனக்கு புதுமுகம்.
முதலில் சகோ அருண் பிரபு. இப்போது "ராணா" படத்தில் உதவி இயக்குனராய் இருக்கிறார். அதிகமாக எழுதவில்லை இருந்தாலும் அனைத்தும் அருமை. இவர் எழுதிய ஏழாவது அறிவு புத்தகம் பற்றிய பதிவு மிக மிக அருமை. அத்தோடு கத்துக் குட்டி ...
மேலும் வாசிக்க...
கடந்த பதிவுகளில் எல்லாம் புதிய, பழைய பதிவர்களை பற்றி சொன்னேன். இந்த பதிவு முற்றிலும் புதியவர்கள் பற்றி. இவர்கள் எல்லோரும் எனக்கு ட்விட்டர் தளத்தில் அறிமுகம் ஆனவர்கள். வெறும் 140 வார்த்தைகளில் அணு உலை முதல் அண்ணா ஹாசரே வரை பேசுபவர்கள், இப்போ பதிவுலகம் பக்கம்.
முதலில் அட போட வைக்கும் இவன் பிகிலு யுகேந்தர் குமார். இவரது இறப்பிலும் வகுப்பு பாகுபாடா ? கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது, நானறிந்த காமராஜர் எல்லோரும்...
மேலும் வாசிக்க...

தமிழில் வலைப்பூக்கள் பல ஆயிரம்,நாம் தொடர்வது கூட நிறைய இருக்கும். ஆனால் சிலர் வலைப்பூவில் மட்டும் எப்போடா போஸ்ட் வரும் என்று ரஜினி பட ரீலிஸ் மாதிரி காத்திருந்து,அவர் போட்ட உடன் ஓடிப்போய் அவசர அவசரமாய் படிப்போம். ஆனால் திடீர் என்று அவர்கள் பதிவுலகம் பக்கம் வராமல் நம்மை ஏமாற்றி விடுவார்கள். நாமும் சில நாளில் மறந்து விடுவோம். அத்தகைய சிலர்...
மேலும் வாசிக்க...

சிலரை நாம் இவர் இந்தப் பதிவு மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்து இருப்போம். ஆனால் பார்த்தால் திடீர் என்று வேறு ஒரு புதிய வகை பதிவுகளை தந்து என்னால் எதுவும் முடியும் என்று எல்லாவற்றிலும் பட்டையை கிளப்புவார்கள் . அப்படிப்பட்ட பதிவர்கள் பற்றிய, அவர்களின் அதிகமாக அறியப்படாத முகம் பற்றிய பார்வைதான் இன்று.
முதலில் நாம் போவது...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே நீங்கள் படித்துக் கொண்டு இருப்பது உங்கள் வலைச்சரம்.தொகுத்து வழங்குவது உங்கள் பிரபு. என்றுமே கவிதை என்பது நம் மனதுக்கு நெருக்கமானது. கவிதைப் பந்தலில் இளைப்பாறி குளிர்ச்சியாய் கவிதை படித்திடும் நேரம் இது.
முதலில் நீங்க விஜயம் செய்வது எங்க ஊர் முசிறிக்கு, காவிரிக் கரையில் கணினியில் கவிதை குளிக்கும் விஜய் அண்ணாவின் பயணம் என்ற கவிதை இன்னும் மனதில் நிற்கிறது ஒவ்வொரு பயணத்திலும். யதார்த்தக்...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே,சகோதரிகளே, அண்ணன்களே,(தம்பிகளே சொல்ல மாட்டோம் ஏன்னா நாங்கதான் எப்பவும் யங்) இங்க எழுதி, அங்க எழுதி கடைசியா வலைச்சரத்துலயும் எழுத வந்துட்டேன். இனி என் வலை வரலாற்றை பிரிச்சு பாக்கலாம்.
முதல்ல 2009 இல் கவிதை வலைப்பூ ஒன்றை தொடங்கி எழுத ஆரம்பித்தேன், கவிதைனா என்னன்னு தெரிஞ்சது, ஆனா வலைப்பூனா என்னனு புரியல அப்போ....
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே ! இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோ ராம்வி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகளில் அறிமுகப் படுத்திய இடுகைகளோ ஏறத்தாழ 77. பெற்ற மறுமொழிகளோ 240. இவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் பெங்களூரில் வசிக்கும் இளைஞர் கிருஷ்ண பிரபு. இவர்...
மேலும் வாசிக்க...

வணக்கம்.
அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும்,சிறிதளவு,இரும்பு,சிலிக்கன் நிக்கில்,கந்தகம்,அக்ஸிஜன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது, இது காந்த ஆற்றல் மிகுந்த...
மேலும் வாசிக்க...

வணக்கம்.
சூரிய குடும்பத்தின் ஆறாவது கிரகமும் இரண்டாவது பெரிய கிரகமுமாகிய சனி கிரகத்தின் பெயரால், சனிக்கிழமை வழங்கப்படுகிறது. பூமியைவிட சுமார் 9 மடங்கு பெரியதாக உள்ள சனி கிரகம் சுரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 30 ஆண்டுகளாகும். ஆனால் அது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் பத்தரை மணி...
மேலும் வாசிக்க...

வணக்கம்.
வெள்ளிக்கிழமை நம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளியின் (வீனஸ்) பெயரால் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி கிரகம் தன்னைதானே சுற்றிக்கொள்ள எடுக்கும் கால அளவு 243 நாட்களாகும்.அது சூரியனை ஒரு முறைசுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவும் ஏறக்குறைய தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் கால அளவே ஆகும்.(225 நாட்கள்).வெள்ளியை பற்றி முக்கியமான...
மேலும் வாசிக்க...

வணக்கம்.
வியாழக்கிழமை சூரிய குடும்பத்தின், ஐந்தாவது கிரகமாகிய வியாழனைக் குறிக்கிறது. ஜுப்பிடர் எனப்படும் வியாழன் சூரியனை சுற்றி வரும் கிரகங்களிலேயே மிகப்பெரியதும் ஆகும்.இது புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற பாறைக்கிரகங்கள் மாதிரி அல்லாமல் முழுவதும் வாயுக்களினால் ஆன கிரகமாகும்.இதன் உட் பகுதியில் சிறிதளவு உலோகக்கலவை இருந்தாலும் மேற்பரப்பு...
மேலும் வாசிக்க...

வணக்கம்..
புதன்கிழமை நம் சூரிய குடும்பத்தின் முதல் கிரகமும், மிகச்சிறியதுமான புதன் கிரகத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. புதன், சூரியனைச் சுற்றிவரும் வட்டப்பாதை மிகச் சிறியது, எனவே இது சூரியனை ஒரு முறை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 88...
மேலும் வாசிக்க...