07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 23, 2011

அசத்தும் ஆல்ரவுண்டர்கள்

சிலரை நாம் இவர் இந்தப் பதிவு மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்து இருப்போம். ஆனால் பார்த்தால் திடீர் என்று வேறு ஒரு புதிய வகை பதிவுகளை தந்து என்னால் எதுவும் முடியும் என்று எல்லாவற்றிலும் பட்டையை கிளப்புவார்கள் . அப்படிப்பட்ட பதிவர்கள் பற்றிய, அவர்களின் அதிகமாக அறியப்படாத முகம் பற்றிய பார்வைதான் இன்று. முதலில் நாம் போவது எனக்கு பதிவுலகில் நெருங்கிய சொந்தம், அண்ணன் என்று நான் அன்புடன் அழைக்கும் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" . தொழில்நுட்ப பதிவர் ஆக இவரை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று உங்களுக்கு தெரியுமா? 11-ஆம் வகுப்பில் தான் எழுதிய முதல் கதைக்கே பரிசு பெற்றவர். நண்பன் பக்கம் என்ற வலைப்பூவில் தடயம் என்று ஒரு கதை எழுதி மீண்டும் ஆரம்பித்து உள்ளார் . இவருள் இருக்கும் டி.என்.ஏ-வை தூண்டி விட்டால் நமக்கு ஒரு சுஜாதா கிடைக்கலாம்.(கூப்பிடுங்கப்பா அந்த ஸ்ருதி ஹாஸன)


அடுத்தபடியாக எதிர்நீச்சல் போடும் நீச்சல்காரன் "அண்ணன்". தமிழின் சிறந்த தொழில்நுட்ப பதிவர் இவர்.இவரின் பதிவு திருட்டை தடுக்கும் பூட்டு அபாரம், இவர் கவிதையிலும் கலக்குவார். இவர் எழுதிய "லிமரைக்கூ" வகை "தசம் ரசம்"  தமிழில் ஒரு புது முயற்சி.இவர் எழுதிய ப்ளாக்கர்களும் கல்யாணமும் ஜாக்கிரதையும் முதல் பகுதி, இரண்டாம் பகுதி படித்தால் மனம் விட்டு சிரிக்கலாம்.


அடுத்து நம் "தமிழ்கிழம்" ஜெயசந்திரன். ஆங்கில வலைப்பூ மூலம் அறிமுகம் ஆன தமிழர், அருமையான தொழில்நுட்ப அறிவு உடையவர். தமிழ் பதிவுலகத்துக்கு முற்றிலும் புதியவர். என்னுடைய வலைப்பூவில் இவர் எழுதிய டெபிட்/கிரெடிட் கார்ட் இல்லாமல் டொமைன் வாங்கலாம் என்ற பதிவு மூலம் நிறைய பேருக்கு தெரியவந்தார். இவரின் ஐந்து நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் பதிவு அருமை. கவிதை முயற்சி ரொம்பவும் புதுமை.


அடுத்தது சகோ தங்கம் பழனி. மிக அருமையான முயற்சி கொண்டவர். மிகச் சிறந்த பதிவரும் கூட  மாவட்டங்களின் கதை என்று ஆரம்பித்தவர் இப்போது தொழில்நுட்பத்தில் வந்து நிற்கிறார் போட்டோஷாப் மூலம் எளிமையாக படங்களுக்கு பார்டர் அமைப்பது எப்படி? என்ற பதிவு அருமை.


அடுத்து நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன்  சமூகம் சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகம் எழுதிய இவர் இப்போது வந்திருப்பது எங்க ஏரியா.   மிக அருமையாக தொழில் நுட்பத்தை விளக்குகிறார் நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?, மெக்கானிகல் துறையினருக்கான தொடர் ஆகியவை அருமை.  இவர் போடும் விடுகதைகள் மிக அருமை ( விடைமட்டும் தெரியல) . அதை ஒரு தனி வலைப்பூவில் எழுதினால் மிக அருமையாக இருக்கும். செய்வீர்களா அண்ணா?


அடுத்து இயக்குனர் ஐ‌.எஸ்‌.ஆர். செல்வா அவர்கள்.செல்வா ஸ்பீகிங்கில்  கடலைப் பொறி முதல் கணிப்பொறி வரை அலசுபவர், மின்னல் கணிதம் என்ற வலைப்பூவில் மிக அருமையாக, வேகமான கணக்கு போடும் எளிய வழிகள் பற்றி சொல்லித் தருகிறார். குறிப்பாக 50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?,  அடுத்து பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள் பதிவு குடும்பத்துடன் படிக்க வேண்டியது.


அடுத்து அக்கா ஆமீனா, குட்டி சுவர்க்கமே நடத்தும் இவர் எழுதும் சமையல் எக்ஸ்பிரஸ் ரொம்ப ஸ்வீட் அண்ட் பாஸ்ட். இவர் செய்த சிக்கன் லேயர் பிரியாணி கம்ப்யூட்டரிலேயே மணத்தது, என்னை மாதிரி பேச்சுலர்க்கு சொல்லும் சிம்பிள் தேங்காய் சாதம் மிகவும் அருமை. ஆனா ஒரு நாள் கூட பார்சல் அனுப்ப மாட்டேங்குறாங்களே?


அடுத்து சகோ தோழி பிரஷா, இவரின் கவிதை வலைப்பூ ரோஜாக்கள் எல்லோருக்கும் தெரியும், தகவல் தொழில்நுட்ப செய்திகள் கூட சொல்வார் இவர். இவரது கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி ரொம்ப அருமை,  இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு எல்லோருக்கும் பயன்படும் ஒன்று.

Image From: http://www.allaboutfeettx.com/brands.html

தொகுத்தது

பலே பிரபு (எ) பிரபுகிருஷ்ணா 

48 comments:

 1. நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. // கடலைப் பொறி முதல் கணிப்பொறி வரை அலசுபவர் //

  இந்த வரிகள் பிரமாதம்...

  தொடர மேலும் சில பூக்கள் தந்தமைக்கு நன்றிகள்..

  (தலைப்பை பார்ததுமே பாஸித் நண்பர் தான் முதலில் நினைவுக்கு வந்தார்)

  எனக்கும் ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் சகோதரா...

  ReplyDelete
 3. ஆல்ரவுண்டர்களுக்கு வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 4. என்னையும் (வித்தியாசமாக) அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.!

  படித்ததும் ஆனந்தக் கண்ணீர்........!!!

  ReplyDelete
 5. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. பதிவுலகில் ஒவ்வொறுவரின் தனித்திறமை பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 7. நீச்சல்காரன்...
  தங்கம் பழனி...
  நம்ம தமிழ்வாசி பிரகாஷ்...
  தோழி பிரஷா...

  ஆகியோர் உண்மையில் பதிவுலகின் ஆல்ரவுண்டர்கள் தான்....

  அழகிய பதிவு...

  வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  ReplyDelete
 8. அருமையான பதிவர்களுக்கு அழகான முறையில் அறிமுகம்...

  அசத்திகொண்டிருக்கும் அத்தனை ஆல்ரவுண்டர்களுக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. ஆல் பாஸ் ரௌன்டர்கள்.....

  ReplyDelete
 10. பிரபுவா...;-))) ரைட் ட்டு...வாழ்த்துக்கள் பிரபு..;-))

  ReplyDelete
 11. //ஆனா ஒரு நாள் கூட பார்சல் அனுப்ப மாட்டேங்குறாங்களே?////

  வீட்டுக்கு வாங்க ஒடனே :-)


  அறிமுகப்படுத்திய விதம் அருமை.சகோ பாசித்தே வேலைக்கு போகாம ரூம்போட்டு அழுதார்ன்னா பாத்துக்கோங்களேன்.... :-)

  நன்றி என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு!

  அக்கா
  ஆமினா முஹம்மத்

  ReplyDelete
 12. அழகான அருமையான அசத்தலான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.

  அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
  vgk

  ReplyDelete
 13. என்னையும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் சேர்த்துவிட்டீர்களா? பல வாரங்களாக எழுதாமலேயே இருக்கிறேன். இதைப் பார்த்தவுடன் மீண்டும் எழுத ஆவல் பிறக்கிறது.

  தூண்டுதலுக்கு ஒரு சபாஷ்..

  ReplyDelete
 14. கலக்கல் அறிமுகங்கள், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 15. பிரபு, என்னையும் ஆள்ரவுண்டராக்கி குறிப்பிட்டதுக்கு நன்றி... தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொருவரும் சிறந்த பதிவர்கள். வாழ்த்துக்கள் பிரபு.


  நம்ம தளத்தில்:
  போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

  ReplyDelete
 16. ஆல் ரவுண்டர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களை அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அனைத்து
  அறிமுகங்களுக்கும்
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அறிமுகமான கலக்கல் அறிமுகங்கள்.வாழ்த்துகள் பிரபு !

  ReplyDelete
 19. தொகுத்தவிதம் நல்லாருக்கு பிரபு,
  தொடர்ந்து கலக்குங்க....
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 20. இனிமேலாவது சிறப்பாக எழுத முயலுகிறேன். அறிமுகம் செய்ததற்கு நன்றி

  ReplyDelete
 21. @ Rathnavel

  நன்றி ஐயா

  ReplyDelete
 22. @ Jayachandran

  நன்றி சகோ.

  ReplyDelete
 23. @ சேலம் தேவா said...

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 24. @ Abdul Basith said...

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 25. @ அமைதிச்சாரல்

  நன்றி சகோ

  ReplyDelete
 26. @ "என் ராஜபாட்டை"- ராஜா

  நன்றி சகோ

  ReplyDelete
 27. @ K.s.s.Rajh
  நன்றி சகோ

  ReplyDelete
 28. @ கவிதை வீதி... // சௌந்தர் //

  நன்றி சகோ

  ReplyDelete
 29. @ Kousalya

  நன்றி அக்கா

  ReplyDelete
 30. @ மகேந்திரன்

  நன்றிங்க

  ReplyDelete
 31. @ ஆனந்தி..

  நன்றி அக்கா

  ReplyDelete
 32. @ ஆமினா

  நன்றி அக்கா.

  //வீட்டுக்கு வாங்க ஒடனே :-)/

  வந்துடலாம் :-)

  //அறிமுகப்படுத்திய விதம் அருமை.சகோ பாசித்தே வேலைக்கு போகாம ரூம்போட்டு அழுதார்ன்னா பாத்துக்கோங்களேன்.... :-)/

  அவர் இல்லைனு சொல்லுறாரே???

  ReplyDelete
 33. @ வை.கோபாலகிருஷ்ணன்

  நன்றி ஐயா

  ReplyDelete
 34. @ r.selvakkumar

  நன்றி சார். நிச்சயம் நீங்கள் எழுத வேண்டும்.

  ReplyDelete
 35. @ MANO நாஞ்சில் மனோ

  நன்றி அண்ணா

  ReplyDelete
 36. @ தமிழ்வாசி பிரகாஷ்

  நன்றி அண்ணா

  ReplyDelete
 37. @ middleclassmadhavi

  நன்றி அக்கா

  ReplyDelete
 38. @ Lakshmi

  நன்றி அம்மா

  ReplyDelete
 39. @ இராஜராஜேஸ்வரி

  நன்றி சகோ.

  ReplyDelete
 40. @ ஹேமா

  நன்றி சகோ.

  ReplyDelete
 41. @ மாணவன்

  நன்றி அண்ணா

  ReplyDelete
 42. @ நீச்சல்காரன்

  நிச்சயமாக உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முந்தையதை விட சிறந்ததே

  ReplyDelete
 43. சரி.. நம்ம கடைக்கும் வந்து பாருங்க..
  http://mydreamonhome.blogspot.com

  ReplyDelete
 44. ஆல்ரவுண்டர்களை அறிமுகம் செய்த விதம் அருமை

  ReplyDelete
 45. @ FOOD

  நன்றி அப்பா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது