07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 9, 2011

வாங்க ஊர் சுத்துவோம்

பயணம் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் மூன்று வருடங்களுக்கொரு முறை இடம் மாறியாக வேண்டும் என்பது எவ்வளவு நல்ல விஷயம். யோசித்துப் பாருங்கள் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன பணிமாற்றத்தில்.

புது இடம்,புது வேலை, புது மனிதர்கள், நாம் நினைத்தாலும் போக முடியாத சில இடங்களுக்குக் கூடப் பணியின் காரணமாகச் செல்ல வேண்டி வரும். இந்த அனுபவங்கள் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும்.

I need a break, எனக்கு ஒரு change வேணும் என்று சொல்லாதவர்கள் யார்?

நினைவு தெரிந்த நாளில் இருந்தே எனக்குப் பயணத்தின் மீது அதீத ஆவல் இருந்திருக்கிறது. நடந்தும் ஓடியும் சுவாமிமலை, பட்டீஸ்வரம் கோவில்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டே விளையாட்டாகத் திருவலஞ்சுழி கோவிலுக்குப் போனது நினைவிலுள்ளது. சைக்கிள் நன்றாக ஓட்ட ஆரம்பித்ததும் சொல்லவே வேண்டாம், அருகிலிருக்கும் எல்லா இடங்களுக்கும் சைக்கிளிலேயே போய்வந்துவிட்டேன்.

நிற்க, இனி மனங்கவர் பயணம் பற்றிய பதிவுகள் பற்றி.

பயணக் கட்டுரை என்றால் உடன் நினைவுக்கு வருவது துளசிதளம்தான். ஒரு விவரமும் விட்டுப் போகாமல் பதிவு செய்துவிடுவார் துளசி மேடம்(துளசியின் கண்களிலிருந்து எதுவுமே தப்புவதில்லை - எழுத்தாளர் இரா. முருகன்). வெறும் விவரங்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களை எடுத்து எல்லாவற்றையும் பதிவில் ஏற்றிவிடும் அசாத்தியப் பொறுமை உண்டு. பயணக் கட்டுரைகள் எழுத நினைக்கும் அனைவரும் இவருடைய பதிவுகளை ஒன்றுக்கு இருமுறை படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஒரு சாம்பிளுக்கு இந்தப் பதிவைப் பாருங்கள்! எழுத்தாளர் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இவருடைய நியூசிலாந்து புத்தகத்தையும் பரிந்துரை செய்கிறேன்। Henry Blofeld என்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இருக்கிறார் (இப்போது வர்ணனை செய்வதில்லை). தான் பார்ப்பதை அப்படியே நேயர்களுக்கு வழங்கும் கலை கைவரப் பெற்றவர் அவர். எனக்குத் துளசி மேடத்தின் பயணக் கட்டுரைகள் படிக்கும்போது அந்த வர்ணனையாளர்தான் நினைவுக்கு வருவார்.

ராஜராஜேஸ்வரி மேடத்தின் பயணம் பற்றிய பதிவுகள், அவற்றில் வெளியாகும் படங்கள் சுவாரஸ்யம். சக்குளத்தம்மன் கோவில் பற்றிய இந்தப் பதிவு ஒரு பானைக்கு ஒரு சோறு.

கோவைக்கு அருகிலுள்ள பரளிக்காடு என்ற மலைக்கிராமம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அது குறித்த பதிவு இதோ. வெறும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமல்லாமல் சுற்றுலா செல்ல இருப்பவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

புதிதாக எழுத ஆரம்பித்தவர் என்பதே தோன்றாத வகையில் தங்குதடையில்லாமல் ராம்வி எழுதுகிறார். மைசூர் சுற்றுலா குறித்த இவருடைய பதிவுகளைப் படித்ததும் எனக்கு மீண்டும் அவ்விடங்களுக்குச் சென்றுவர வேண்டுமென்று தோன்றியது.

ஷங்கரின் இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பயந்துவிடாதீர்கள். பகீரென்று இருப்பதோடல்லாமல் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் மேடம் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை. இவருடைய கோவில், சுற்றுலா பற்றிய பதிவுகளை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். குடுமியான் மலை பற்றிய இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதில் படங்களாக உள்ள சிற்பங்களை நேரில் பார்ப்பதற்காகவே ஒருமுறை குடுமியான்மலை போகவேண்டும்.
*
எங்கே பையும் கையுமாகப் புறப்பட்டுவிட்டீர்கள்? ஓ பயணமா, வாழ்த்துகள்!
*
இதுவரை படித்திராவிடில் சிட்டி-ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி, தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாள்கள், பரணீதரனின் பயணக் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் படித்துப் பாருங்கள். நன்றி. எனக்குப் பிடித்திருந்தன.

நான் இன்னமும் படித்து முடிக்காத ஆனால் நல்ல புத்தகங்கள் என்று பரிந்துரைக்கப்ப்ட்டதால் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள்: வீரேந்திர குமாரின் வெள்ளிப்பனி மலையின் மீது, ஏ கே செட்டியாரின் பயணக் கட்டுரைகள், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்திற்கு அப்பால்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

16 comments:

 1. மனம் நிறைந்த நன்றி கோபி.

  மோதிரக் கை குட்டுதான்!

  ஊர்'சுற்றும்' மக்களை மறக்காமப் 'பிடிச்சு'ப்போட்டுட்டீங்களே:-))))

  ReplyDelete
 2. இன்றைய அறிமுகங்கள் நல்லதொரு பயணங்களாக அமைந்ததில் மகிழ்ச்சியே!

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சக்குளத்தம்மன் கோவில் பற்றிய பதிவைக் குறிப்பிட்டு எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரை, இன்றைய அறிமுகத்தில், தாங்களும் அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அனைத்து அறிமுகங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 3. இன்றைய பகிர்வுகளும் வித்தியாசமாய்..அருமை.

  ReplyDelete
 4. பகிர்வுகள் அருமை.

  அப்புறம்.. நாங்களும் கூட பயண கட்டுரை எழுதுவோம் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்

  ReplyDelete
 5. நன்றி கோபி என் பதிவுகளை பற்றிய அறிமுகத்திற்கு.

  அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மனம் நிறைந்த நன்றிகள் பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதமாக
  பதமான அறிமுகத்துக்கு..நன்றி..நன்றி!

  ReplyDelete
 7. நல்ல பயண அனுபவங்களை(அறிமுகங்களை)பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. வருடா வருடம்பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த லின்க்கள் மிகவு்ம் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 9. அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. கோபி நல்ல தலைப்பு இன்று. புதிய அறிமுகப் பதிவர்களுக்கும் உமக்கும் வாழ்த்துகள் சகோதரா. எனது வலலயில் மூன்று பயணக் கட்டுரை எமுதியுள்ளேன்,http://kovaikkavi.wordpress.com/ விரும்பியவர்கள் படிக்கலாம் என்பதை இங்கு கூறுகிறேன். உமது மிகுதிப்பயணம் சிறக்க வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 11. உங்கள் வலைச்சர பயணம் பயனுள்ளதாய் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. பயணக்கட்டுரைகள் பற்றிய பதிவுகள் சிறப்பு. காட்சிப் பதிவுகள் உள்ள மணிராஜ் வலைப்பூ நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு மிக நேர்த்தியாக கொண்டு சென்றுவிடும்.

  ReplyDelete
 13. நல் அறிமுகங்கள் தந்த வலைச்சரப் பயணம்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 14. @துளசி கோபால், மிக்க நன்றி

  \\மோதிரக் கை குட்டுதான்\\ ஆஹா:-)) நான் அவ்ளோ வொர்த் இல்லை

  @ஷங்கர், மிக்க நன்றி

  @வை. கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி

  @ஆசியா உமர், மிக்க நன்றி

  @மோகன் குமார், மிக்க நன்றி

  பயணக் கட்டுரை மட்டுமா, சினிமா விமர்சனம், சட்டம், எழுத்தாளர் சந்திப்புன்னு பட்டையக் கிளப்புறீங்களே! மைண்ட்ல வெச்சிருக்கேன். அப்புறமா யூஸ் பண்ணிக்கிறேன்:-)

  @ராம்வி, மிக்க நன்றி

  @ராஜராஜேஸ்வரி, மிக்க நன்றி

  @கோகுல், மிக்க நன்றி

  @ஜலீலா கமால், மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல யாருக்கேனும் ஒருவருக்குப் பயன்பட்டாலும் போதும், இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவே.

  @மகேந்திரன், மிக்க நன்றி

  @கவிதை, மிக்க நன்றி. உங்கள் பயணக் கட்டுரைகள் சில வாசித்தேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

  @தமிழ்வாசி, மிக்க நன்றி

  @மிடில் கிளாஸ் மாதவி, மிக்க நன்றி

  @சாகம்பரி, மிக்க நன்றி. நீங்கள் சொல்வது உண்மையே. ராஜராஜேஸ்வரி மேடத்திற்கு அசாத்தியப் பொறுமைதான்.

  @ராஜி மேடம், மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது