07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 8, 2011

வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது ஒரு சுகானுபவம்

அனைவருக்கும் வணக்கம்.

எழுதுவது ஒரு சுகானுபவம். வாசிப்பது அதை விட அதிகம் சுகம் தருகிறது. வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது அதை விடவும் சுகம்.
*
உங்கள் எழுத்தின் தரம் மேலும் கூடவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

‘நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்’, ‘எழுத்தில் மெருகேறி இருக்கிறது’ என்றெல்லாம் மற்றவர்கள் உங்கள் எழுத்துகள் பற்றிப் பாராட்ட வேண்டும் என்று விருப்பமா?

உங்கள் கட்டுரைகளில் அதிகாரபூர்வமான தகவல்களை எடுத்தாள எண்ணமா?

கதை சொல்லும் பாணியில் புதுமை அல்லது முன்னேற்றம் வேண்டுமென்று எண்ணுகிறீர்களா?

ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. நல்ல எழுத்துகளைத் தேடிப்படிக்க வேண்டும், அவ்வளவே.

அவ்வளவே என்று சுலபமாகச் சொல்லிவிட்டேன். நடைமுறையில் அது அவ்வளவு எளிதில்லை. எது நல்ல எழுத்து என்று தேடுவது வைக்கோல் போரில் குண்டூசி தேடிய கதைதான்!

இங்கேதான் வாசிப்பனுபவம் பற்றி இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள் நமக்கு உதவுகின்றன. எவ்வாறு?

புத்தகம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை வாசிப்பவர் அதில் குறிப்பிடப்படும் புத்தகத்தை ஏற்கனவே வாசித்திருந்தால் அவர் வாசிப்பில் விட்டுப் போன விவரங்கள், நுணுக்கங்கள் பற்றி இப்போது அறிந்துகொண்டு மீண்டுமொருமுறை வாசிக்கலாம்.

பதிவரின் கருத்துகளோடு உடன்பட முடியாத பட்சத்தில் உரையாடல் வளர்ந்து நூலைப் பற்றிய புரிதல் மேலும் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகளிலும் முடியலாம் சிலவேளைகளில் (பலவேளைகளில் அப்படித்தான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை!)

ஒரு புத்தகம் குறித்துப் படிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது அந்தப் புத்தகம் பற்றி மேலும் அறிய வரும்போது ஒரு முடிவெடுக்க உதவுகிறது.

ஆக மொத்தம், புத்தகம் நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்க இந்தக் கட்டுரைகள் உதவுகின்றன.

சரி, புத்தகம் படித்தாகிவிட்டது அல்லது புத்தகம் பற்றிய புரிதல் அதிகமாகிவிட்டது. . அதனால் என்ன நன்மை? முதல் ஐந்து பத்திகளை மறுபடியும் படியுங்கள்!
*
இனி மனம் கவர் வாசிப்பனுவப் பதிவுகள் பற்றி:

நோபல் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நாவலாயிற்றே, புகழ்பெற்ற எழுத்தாளராயிற்றே என்றெல்லாம் தயங்காமல் தான் படித்து உள்வாங்கிக்கொண்டதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் சகோதரி ஆசியா உமர். கிழவனும் கடலும் நாவல் பற்றிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். எழுத்தாளர் பற்றிய அறிமுகம், நாவலின் களம், முக்கியமான கட்டங்கள், நாவல் சொல்லும் செய்தி, பின்குறிப்பு என்று நேர்த்தியான வரிசையில் அசத்தி இருக்கிறார்.

அநேகமாக நம்மில் பலர் இந்நாவலைப் படித்திருப்போம். (நடுக்கடலில்) உப்பும் எலுமிச்சையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர் பதிவில் குறிப்பிடும் இடத்தை நான் அவ்வளவாகக் கவனத்துடன் வாசிக்கவில்லை. இந்தப் பதிவு படித்ததும் அந்த வாக்கியம் சொல்லும் செய்தியின் முக்கியத்துவம் உரைக்கிறது. (எந்தச் சூழலிலும்) மனிதன் பெரிதினும் பெரிது கேட்கிறான்!

புத்தகக் கடலில் மூழ்கித் தினமும் முத்தெடுப்பவர் நம் நண்பர் பார்வையாளன். ஜெமோவின் கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்கள் பற்றிய இவருடைய பதிவுகளைப் படியுங்கள். சிலாகித்து எழுதி இருக்கிறார். கொற்றவை நாவல் பற்றிய பதிவில் அவர் ரசித்த சில இடங்கள் என்ற பத்தி டாப் கிளாஸ்.

கரமசாவ் சகோதரர்கள் நாவல் பற்றிய பதிவு எனக்குத் தெரிந்து இணையத்தில் இது ஒன்று மட்டுமே. வேறு பதிவுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி. ஆதித்த கரிகாலனின் திரை விமர்சனங்களும் தெரியுமா என்ற தலைப்பில் எழுதப்படும் விஷயங்களும் சுவாரஸ்யம்.

பெயர்தான் குட்டிப்பையா, ஆனால் எழுதும் விஷயங்கள் கனமானவை. சமீபத்தில் படித்தவை என்ற பதிவில் குறிப்பிடப்படும் நூல்களைப் பாருங்கள். எனக்கேயான அப்பா என்ற பதிவு நெகிழ்ச்சியின் உச்சம். ஆங், சொல்ல மறந்திட்டேன், இவருடைய எழுத்துகள் எனக்கு சமயத்தில் காதில் புகையை வரவைக்கும்!

He / she makes it look easy என்பார்கள் ஆங்கிலத்தில். வித்யா சந்திரசேகரன் எழுத்து அந்த வகை. எப்போது நாவலைப் படிக்க ஆரம்பிக்கிறார், எப்போது படித்து முடிக்கிறார் எதுவுமே தெரியாது. திடீரென்று பார்த்தால் பதிவு வந்துவிடும். கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை பற்றிய இந்தப் பதிவு நெகிழ்ச்சியின் உச்சம்.

லா.ச.ரா. அவருடைய துளசி சிறுகதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ‘துளசி’ சிறுகதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “...இந்தக் கதையில் வாசகன் தன் பாட்டியையோ, தாயாரையோ, அல்லது தன் பிள்ளையையோ, பேரனையோ, அல்லது தன்னையோ ஏதோ ஒரு இடத்தில் அல்ல பாராவில், அல்ல ஒரு சொல்லில் அல்ல – அதுவும் வேண்டாம், ஒரு சொல்லின் பதப்பிரிவில் அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் அதுவே என் இத்தனை நாள் எழுத்தின் தவப்பயனை அடைந்ததுதான். மனிதநேயம் அடிகோல்வதே இப்படித்தான்....” என்று சொல்வார். வித்யாவின் பதிவைப் படித்ததும் எனக்கு இதுதான் நினைவிற்கு வந்தது.

வாசிப்பனுபவம், திரை விமர்சனம், சிறுகதைகள் என்று இந்த வலைப்பூவிற்குள் அநேக விஷயங்கள். தாகம், தூர்வை நாவல்கள் பற்றிய பதிவுகளைப் பார்த்துவிடுங்கள். சிறந்த பத்து நாவல்கள் பட்டியலும் முக்கியமான பதிவு

புத்தகத்திற்கென்றே ஒரு தனி வலைப்பூ நடத்தும் இவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. சமகால பிரபல எழுத்தாளர் ஜெமோ இந்த வலைப்பூ குறித்து சிலாகித்து எழுதி இருக்கிறார்.

புத்தகம் குறித்த பதிவுகள் நிறைய வரும் இன்னொரு வலைப்பூ இது. ஆனால் சில மாதங்களாகப் புதிதாகப் பதிவுகள் எதுவுமில்லை.

நானும் புத்தகங்கள் குறித்துச் சில பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரமிருந்தால் தஞ்சை பிரகாஷ் கதைகள், பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். நன்றி.

முத்தாய்ப்பாக ஒரு விஷயம்। சில சமயங்களில் சில கதைகளை வேறு யாரேனும் எடுத்துச் சொன்னால் மட்டுமே புரிகிறது. திரு. விமலாதித்த மாமல்லன் அவர்களின் இந்தக் கட்டுரையைப் பாருங்கள். வாழ்நாளில் இதுபோல, இல்லை இல்லை, இதில் பாதி அளவுத் தரத்துடனும் புரிதலுடனும் ஒரேயொரு கட்டுரை எழுத முடிந்தாலும் போதும், என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

நாளை சந்திப்போம் நண்பர்களே.
*
குறிப்பு: இதுவரை படித்திராவிடில் ஜெமோவின் கண்ணீரைப் பின்தொடர்தல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், எஸ்ராவின் கதாவிலாசம் ஆகிய புத்தகங்கள் பற்றிய புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நன்றி.

24 comments:

  1. உண்மைதான். வாசிக்கப் புகுந்துவிட்டால் எழுதவே மறந்து விடுகிறது.

    தி.ஜா.ராவின் சிறுகதைத் தொகுப்பின் முதல் பகுதியில் இருக்கிறேன்.

    ஹைய்யோ...... என்ன ஒரு சொல்லாடல்!!!!!

    'ஒரு சிறுவனுக்கு வயசு எட்டு. அவன் வாய்க்கு வயசு இருவது'

    ReplyDelete
  2. ‘...அங்கே கிடைச்ச நண்பருக்கு நண்பரின் மகன் ஒரு ரெயில் பைத்தியம். ரயில் ஓட்டிக்கிட்டுப்போறதுதான் அவன் வாழ்க்கையின் லட்சியமா இருந்துச்சு. தப்பே சொல்ல முடியாது. பையனுக்கு வயசு வெறும் நாலுதான்...’

    துளசிகோபால், தன் நியூஸிலாந்து புத்தகத்தில்

    :-))

    ReplyDelete
  3. அழகான முன்னுரையுடன் அருமையான அறிமுகங்கள் கோபி, நன்றி.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ராம்வி

    ReplyDelete
  5. அழகான அறிமுகங்கள்...

    ReplyDelete
  6. சகோ,அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி,நிறைய வாசிக்கனும் என்ற ஊக்கமே,இந்த கோபி எப்படி இவ்வளவு வாசித்து விமர்சனம் எழுதுகிறார் என்ற ஆர்வத்தில் கிளம்பியது தான்..இந்த விமர்சனம் கூட ஒரு முயற்சி தான்.மீண்டும் நன்றி.
    அறிமுகங்கள் அனைவரையும் வாசிப்பதும் கூட ஒரு அனுபவம் தானே கோபி..

    ReplyDelete
  7. மிக மிக வித்தியாசமான நடையில் அறிமுகங்கள் . அடுத்து என்ன என்ற ஆவலுடன் தினமும் படித்து வருகிறேன் . நூல்களை படிக்க படிக்கதான் , இன்னும் படிக்க வேண்டியவை ஏராளம் என்பது புரிகிறது. மிக பயனுள்ள பணியை செய்கிறீர்கள் . நன்றி . நன்றி

    ReplyDelete
  8. நன்றி & வாழ்த்துகள் கோபி.

    ReplyDelete
  9. நிறைய அறிமுகங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. ''ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. நல்ல எழுத்துகளைத் தேடிப்படிக்க வேண்டும், அவ்வளவே...''
    மிகப் பெரிய விடயம் நீட்டமானது என்றால் நானே கொஞ்சம் தள்ளி வைப்பதுண்டு. நேரத்தினால். வித்தியாசமான அறிமுகங்கள் அனைவருக்கும், சகோதரன் கோபிக்கும் வாழ்த்துகள் .மேலும் தொடர வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  11. நல்ல மனசுன்ணே உங்களுக்கு.

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நிறைய அறிமுகங்கள்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தங்களின் முன்னுரையும், அறிமுகங்களும் அசத்தல் தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் தங்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்குமே.

    ReplyDelete
  15. விரிவான அறிமுகங்கள். நன்றி!

    ReplyDelete
  16. வாசிப்பானுவம் தொடர்பில் நல்ல அறிமுகங்கள். விடுபட்டவையினை சென்று படிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  18. @சிநேகிதி, மிக்க நன்றி

    @ஆசியா உமர், மிக்க நன்றி

    @பார்வையாளன், மிக்க நன்றி

    @வித்யா, மிக்க நன்றி

    @என் ராஜபாட்டை ராஜா, மிக்க நன்றி

    @கவிதை, மிக்க நன்றி

    @மரா,மிக்க நன்றி

    @ஜலீலா கமால், மிக்க நன்றி

    @சே. குமார், மிக்க நன்றி

    @வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி

    @நிஜாமுதீன், மிக்க நன்றி

    @சாகம்பரி, மிக்க நன்றி

    @அவர்கள் உண்மைகள், மிக்க நன்றி

    ReplyDelete
  19. புத்தகம் பேசுது.

    ReplyDelete
  20. @விச்சு, நீங்க சொல்றதை இந்தப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  21. கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க. படு பயங்கர இலக்கிய புக்குகளை எங்களுக்கு சிபாரிசு பண்றீங்க :)))

    ReplyDelete
  22. புத்தக விமர்சகர்களின் தொகுப்பு வித்தியாசமாக இருந்தது, தொடருங்கள்

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்களை செய்திருக்கிறீர்கள். நல்ல தேடல் இல்லாமல் இவைகள் சாத்தியமில்லை. பரிந்துரை செய்யப்பட்ட பக்கங்கள் புதிய அறிமுகமாகவும், தேடல்களுக்கு வழிவகுப்பதாகவும் உள்ளன. கூடவே என்னுடைய வலைப்பூ பக்கங்களை பரிந்துரைத்தது எண்ணி மகிழ்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  24. @மோகன் குமார்

    \\கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க\\

    அது பிழைப்பிற்காகக் கட்டும் வேஷம். அரைக்கை சட்டை, நாலு முழ வேட்டி இதுதான் நமக்குப் பிடித்த காஸ்ட்யூம். நான் நானாகவே இருக்கும் தருணங்கள்.

    \\படு பயங்கர இலக்கிய புக்குகளை எங்களுக்கு சிபாரிசு பண்றீங்க :)))\\

    முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான. இதையெல்லாம் பாத்துட்டு யாராவது படித்து அதைப் பற்றிப் பதிவெழுதினால் அந்தப் பதிவுகளைப் படித்து விடலாம் என்ற ஆசைதான். வேறென்ன:-)

    @சூர்யஜீவா, மிக்க நன்றி

    @அசோக்குமார், மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது